ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
sudhagaran
 

Admins Online

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Wed Feb 19, 2014 11:21 pm

First topic message reminder :


 பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்?

தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது.

இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.  பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே வரும் 3-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Sun Mar 30, 2014 10:04 pm

இந்தியாவின் நடவடிக்கையால் அதிர்ச்சி-வாசன்

சென்னை: சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் பிரசார சிடி வெளியீட்டு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், 'இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இருக்க வேண்டும்,' என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Mar 31, 2014 12:17 am

தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சி புரிந்த கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித மின்திட்டங்களும் வரவில்லை; ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

துயரத்தில் தள்ளும் மின்வெட்டு

‘‘நான் மின்சார பிரச்சினையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். மின்சாரத்தைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். விரைவில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழும். சில இடங்களில் மின் உற்பத்தி பிரச்சினையால், ஓரிரு நாட்கள் தமிழகத்தில் சில மணி நேரம் மின்வெட்டு இருந்தது. அந்த மின்வெட்டும் விரைந்து சரிசெய்யப்பட்டுள்ளது’’ என முதல்–அமைச்சர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தில் கூறி உள்ளார்.

தமிழகத்தில் கோடை வெயில் தனது உக்கிரத்தை காட்டத்தொடங்கி உள்ள வேளையில், மக்களை மேலும் துயரத்தில் மின்வெட்டு தள்ளிவரும் நிலையில், கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் வார்த்தைகளை சொல்லி வருகிறார் முதல்–அமைச்சர் ஜெயலலிதா.

தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

நான் மார்ச் 28 மற்றும் 30–ந் தேதிகளில் கோவை தொகுதிக்கு தேர்தல் வேலையாக சென்றிருந்தேன். அங்கு சுமார் நான்கு மணி நேரம் மின்வெட்டு இருந்தது. இந்த மின்வெட்டு சிறு, குறு தொழில்களைக் கூடுதலாக பாதிக்கிறது. கோவை மாநகரத்தில் மட்டுமல்ல, சென்னையைத் தவிர மாநிலம் முழுவதும் இதே நிலைமைதான்.

திருப்பூர், இந்தியாவிற்கு அதிகமான அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பகுதியாகும். மின்வெட்டால் அங்கும் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்படி உற்பத்தி பாதிப்பதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

மாணவர்களும் பாதிப்பு

மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்று வருகிறது. மின்வெட்டு அவர்களையும் பாதிக்கிறது. பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம் என்று எப்படி எதிர்பார்க்கிறார் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா?

2001–ம் ஆண்டு முதல் 2011–ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலங்களில், குறிப்பிட்டு சொல்லும்படியாக எந்த வித மின்திட்டங்களும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த பத்தாண்டு காலத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தலா ஐந்தாண்டுகள் ஆட்சியில் அமர்ந்திருந்தன.

ஒருவருக்கொருவர் சளைக்கவில்லை

தற்போது ஒருவரையொருவர் மாறி, மாறி குற்றம் சாட்டிக்கொண்டு இருவருமே தப்பித்துக்கொள்ளும் வழியைத் தேடுகிறார்கள். ஆனால் இல்லாத மின்சாரத்திற்கு மின்கட்டணத்தை ஏற்றுவதில் மட்டும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் இருந்தனர்.

தி.மு.க. தனது ஆட்சியின்போது ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்தியது. 2009–10ம் ஆண்டில் 954 கோடி ரூபாய்க்கு மின்கட்டணம் உயர்ந்தது. மின்வெட்டு இல்லாத மாநிலம் ஆக்குவோம் என்று ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., 2011–ம் ஆண்டில் 42 சதவிகிதம் அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்தியது. மின்வாரியத்தின் வருமானமும் 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தது.

பொருளாதார கொள்கைகளும் காரணம்

தனியார் நிறுவனங்களிடம் ஒரு யூனிட் மின்சாரத்தை 12 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி ஆட்சியாளர்கள் வாய் திறக்கவில்லை. மின்வாரியத்திற்கு நட்டம் என்றால், இந்த பணம் எந்த கல்லாவிற்கு செல்கிறது?

2011–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைத்த தோல்விக்கு மின்வெட்டு ஒரு முக்கியமான காரணமாகும். தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவோம் என்று வாக்குறுதி அளித்த அ.தி.மு.க. அரசு தற்போது மக்களைப் பார்த்து கவலைப்பட வேண்டாம் என்று கூறி வருகிறது.

தமிழக திராவிட கட்சிகள், இந்த அவல நிலைக்கு காரணம் என்பதோடு, மத்திய ஆட்சியாளர்களின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளும் கடைப்பிடிக்கும் பொருளாதார கொள்கைகளும் மின்னுற்பத்தியை கடுமையாக பாதித்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Mar 31, 2014 12:18 am

 பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ‘40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற தேர்தல் பணி ஆற்றுங்கள்’ தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்

40 தொகுதிகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற தேர்தல் பணி ஆற்றுங்கள் என்று தொண்டர்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா, தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:–

பாராளுமன்ற தேர்தல்

வருகின்ற 24–4–2014 அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கழக உடன்பிறப்புகளையும், வாக்காளப் பெருமக்களையும் சந்தித்து உரையாற்றி வரும் எனது இடையறாத பணிகளுக்கு இடையே, இந்த மடல் வழியாக ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரிடமும் என் உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1972–ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கிய நாளில் இருந்து இந்த இயக்கம் எத்தனையோ பாராளுமன்றத் தேர்தல்களை சந்தித்திருக்கிறது. நம் இயக்கத்தின் வரலாற்றில் முதல் முறையாக 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் கழகமே போட்டியிடும் வாய்ப்பினை இந்தத்தேர்தலில் தான் நாம் பெற்றிருக்கிறோம். எனவே, நமக்கு இந்தத்தேர்தல் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல்.

மக்கள் பணி

இப்போது லட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகள் உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் பதவிகளில் மக்கள் பணியாற்றி வருகின்றனர். கழகத்தின் எளிய தொண்டர்கள் இப்படி மக்கள் தொண்டாற்றும் உயர் பதவிகளை வகிக்கின்றனர் என்ற பெருமையையும், மகிழ்ச்சியையும் கழகம் பெற்றுள்ளது போல், பாராளுமன்ற மக்களவையிலும் இது நாள் வரை இருந்திடாத அளவு கழகத்தின் சார்பில் 40 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர் என்ற தேனினும் இனிய செய்தி எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் வண்ணம் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தங்கள் கடமையைச் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஆலமரம் போல் தழைத்து வளர்ந்திருக்கும் நம் கழகத்தின் ஆணிவேர், கிளைக்கழக அமைப்புகளும், தன்னலம் கருதாது உழைக்கின்ற என் உயிரினும் மேலான எனதருமைக்கழக உடன்பிறப்புகளும் தான் என்பதை நான் எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், தமிழர்களின் பெருமைகளை சீர்குலைக்கும் வண்ணமும், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்ற அரசு, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இந்த காங்கிரஸ் கட்சியுடன் 9 ஆண்டு காலம் ஒட்டி உறவாடிய கட்சி தி.மு.க. 2004–ல் இருந்து மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கூட்டணி அரசு நம் நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலுமாக சீர்குலைத்துவிட்டது. இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துவிட்டது. அனைத்துத் துறைகளிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது.

இவற்றின் காரணமாக, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, குஜராத்தில் இருந்து அசாம் வரை விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இந்திய நாட்டை காப்பாற்றவும், இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கவும், நடைபெற உள்ள பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் ஒரு கருவியாக நமக்கு வாய்த்திருக்கிறது. இந்தச் செய்தியை தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் கொண்டு செல்லுமாறு கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தெருமுனை கூட்டங்கள்

தமிழக வாக்காளப் பெருமக்களை நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சந்திக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரிடமும் கழக அரசின் சாதனைகளை; முன்னோடித்திட்டங்களை; வளர்ச்சித்திட்டங்களை; தொலைநோக்குத் திட்டங்களை எடுத்துக்கூற வேண்டும்.

வஞ்சக நெஞ்சத்தோடு காங்கிரசும், தன் குடும்ப சுயநலத்திற்காக தி.மு.க.வும் தமிழர்களுக்கு எதிராக இழைத்திட்ட பல்வேறு அநீதிகளையும், கொடுமைகளையும் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் உணரும் வகையில் திண்ணைப் பிரச்சாரங்கள், தெருமுனைக்கூட்டங்கள் போன்றவற்றோடு நேரடி சந்திப்புகள் வழியாகவும் நீங்கள் விளக்கிச் சொல்ல வேண்டும். நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, இளம் வாக்காளர்களை கவரவேண்டும். மொத்தத்தில், கழக உறுப்பினர் ஒவ்வொருவரும் ஒரு பிரச்சார பீரங்கியாக மாற வேண்டும்.

அரசியல் தொண்டு

வழக்கமான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதை போல, இந்த நேரடித்தொடர்பு பிரச்சாரமும் மும்முரமாக நடைபெற்றிட வேண்டும். அந்த அளவிற்கு நடமாடும் சுவரொட்டிகளாக, முழக்கம் எழுதப்பட்ட பதாகைகளாக, விளக்கம் கூறும் கையேடுகளாக மாறி, கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தேர்தல் முடிவடையும் வரை விழிப்புடன் களப்பணியாற்றிட வேண்டும் என்று, என் உயிரினும் மேலான எனதருமைக்கழக உடன்பிறப்புகளை மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

என்னைப் பொறுத்தமட்டில் பொதுவாழ்வும், அரசியல் தொண்டும் ஒரு பிரார்த்தனை. விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லாத தவம். பலகோடி மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் சுய அர்ப்பணிப்பு. எனதருமைக்கழக உடன்பிறப்புகள் அனைவரும் என் இதயத்தின் இந்த உணர்வுகளை புரிந்து கொண்டு தேர்தல் பணியாற்றிட வேண்டும் என்பது எனது ஆவல்.

எம்.ஜி.ஆர். கண்ட கனவு

உங்கள் அன்புச் சகோதரியான என்னுடைய இந்த அவாவினை மனத்தில் இறுத்தி நீங்கள் அனைவரும் பணியாற்றுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ‘‘நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே, இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே“ என்பது, நம் இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட கனவு. எனவே, 40 பாராளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் கழகத்தின் வேட்பாளராக, உங்கள் அன்புச் சகோதரியாகிய நானே போட்டியிடுவதாக நீங்கள் ஒவ்வொருவரும் நினைத்து தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும்.

40 தொகுதியிலும் வெற்றி

கழக வேட்பாளர்கள் அனைவரது வெற்றியிலும் நம் ஒவ்வொருவருக்கும் பங்கும் உண்டு; நாம் ஆற்ற வேண்டிய கடமையும் உண்டு. கழகத்தின் ஆரம்ப கால உறுப்பினர்கள் முதல் அண்மையில் இணைந்த உடன்பிறப்புகள் வரை, அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் வண்ணம், நீங்கள் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று அன்புக் கட்டளையிடுகிறேன்.

‘40 மக்களவைத் தொகுதிகளிலும் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்’ என்ற மகத்தான செய்தி வரும் வரை கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் அயராது பணியாற்றி, இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் புகழுக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தனது கடிதத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Mar 31, 2014 12:29 am

பாடகி அனிதா குப்புசாமி அதிமுக வேட்பாளர் பிஆர். செந்தில்நாதனை ஆதரித்து பிரசாரம்சிவகங்கை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிஆர். செந்தில்நாதனை ஆதரித்து பாடகி அனிதா குப்புசாமி சனிக்கிழமை வாக்குகள் சேகரித்துப் பிரசாரம் செய்தார்.

சிவகங்கை ஒன்றியத்தில் சக்கந்தி, முத்துப்பட்டி, பனையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங் களிலும், சிவகங்கை நகர் பகுதியிலும் அனிதா குப்புசாமி அதிமுகவுக்கு வாக்குகள் கேட்டுப் பிரசாரம் செய்தார். வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதன், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், நகரச் செயலர் எம். ஆனந்தன், சிவகங்கை நகர் மன்ற துணைத்தலைவர் சேகர், மகளிரணி நிர்வாகிகள் உள்பட பலர் உடன் சென்றிருந்தனர்.

பின்னர் சிவகங்கையில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திறந்துவைத்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Mar 31, 2014 4:52 pm

 தரக்குறைவாக பேசிய பறக்கும்படை போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி வைகோ சாலைமறியல்
விருதுநகர்  அருகே உள்ள பெரிய வெள்ளிக்குளத்தில் பறக்கும் படையை சேர்ந்த போலீசார் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விருதுநகர் தொகுதியில் போட்டி யிடும் வைகோ, அருப்புக் கோட்டைக்கு பிரசாரம் செய்ய வாகனத்தில் சென்றார். அவருடன் தொண்டர் களும் சென்றனர்.அங்கு நின்ற போலீசார்  வாகனத்தை சோதனை செய்ய வேண்டும் என்று கூறினர்.
மோதல்

இதையட்டி ம.தி.மு.க. தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.  அப்போது போலீசார் தரக் குறைவாக பேசியதாக ம.தி.மு.க.வினர் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த வைகோ பிரசார வேனில் இருந்து கீழே இறங்கி அருப்புக்கோட்டை ரோட்டில் மறியல் போராட் டம் நடத்தினார். அவருடன் ம.தி.மு.க. தொண்டர்களும் மறியலில் ஈடுபட்டனர்.

தரக்குறைவாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடு பட்டனர்.

தகவல் அறிந்ததும் சூலக்கரை இன்ஸ் பெக்டர் அன்புராஜன், ஆர்.டி.ஓ. உதயகுமார் ஆகியோர் விரைந்து சென்று வைகோ வுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 40 நிமிட நேரம் மறியல் போராட்டம் நடந்தது.

அதன் பின்பு வைகோ அங்கிருந்து பிரசாரம் செய்ய அருப்புக்கோட்டை சென்று விட்டார். ஆனால் ம.தி.மு.க. தொண்டர்கள் சாலையோரம் நின்று கொண்டு போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by ராஜா on Mon Mar 31, 2014 4:56 pm

@சிவா wrote: தரக்குறைவாக பேசிய பறக்கும்படை போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி வைகோ சாலைமறியல்.
இப்படி ஏதாவது பண்ணினால் தான் நம்மை மக்கள் ஞாபகம் வைதிருப்பார்கள்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Tue Apr 01, 2014 12:49 am

சிதம்பரம் பாமக புதிய வேட்பாளரால் அதிமுக, வி.சி. அதிர்ச்சி

சிதம்பரம் தொகுதியில் பாமக வேட்பாளராக மணிரத்னம் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அதிமுக-வும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

காங்கிரஸ் கட்சியில் தனக்கு சீட் கிடைக்காததாலும் தனக்குள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்கும் விதமாகவும் தொழிலதிபர் மணிரத்தினம் சனிக்கிழமை பாமக-வில் சேர்ந்தார்.

பாமக-வும் அவரை சிதம்பரம் தொகுதியில் நிறுத்த முடிவு செய்துள்ளது. சிதம்பரம் தொகுதியில் அதிமுக-வினரும் விடுதலைச் சிறுத்தைகளும் மட்டுமே தேர்தல் வேலைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் வேட்பாளர் வள்ளல் பெருமானும் பாமக-வினரும் சுணக்கமாகவே உள்ளனர். இந்நிலையில் மணிரத்தினத்தின் வரவு அதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

திருமாவளவனை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சிதம்பரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது அதிமுக. அவரும் சிதம்பரத்தில் வீடு எடுத்துத் தங்கி தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஏகப்பட்ட சிக்கல்கள் இருப்ப தால் காங்கிரஸ் வேட்பாளர் வள்ளல்பெருமானை அதிமுக- வும் விடுதலைச் சிறுத்தைகளும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

வெள்ளிக்கிழமை வரை இங்கு இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் தான் போட்டி என்ற நிலையே இருந்தது. ஆனால், மணிரத்தினம் பாமக-வில் இணைந்ததும் நிலைமை மாறிவிட்டது.

அதிமுக-வின் பண பலத்தை யும் சிறுத்தைகளின் சமுதாய பலத்தையும் சமாளிக்க முடியாமல் சுருண்டு கிடந்த பாமக வட்டாராம் இப்போது சுறுசுறுப்பாய் களத்துக்கு வந்திருக்கிறது. மணிரத்தினம் வரவால் தலித் ஓட்டுகள் யாருக்கு என்பதில் மாற்றம் ஏற்படும் எனத் தெரிகிறது.

வன்னியர் வாக்கு வங்கியை குறிவைத்து காடுவெட்டி குருவும் மணிரத்தினத்துக்காக களத்தில் இறங்குவார். செங் கோட்டையனின் தேர்தல் வியூகங் களை சமாளிக்கவும் திருமாவள வனை வீழ்த்தவும் மணிரத்தினத்தை பாமக களத்தில் இறக்கியிருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Tue Apr 01, 2014 10:51 pm

டாஸ்மாக் அம்மாவிடம் இருந்து விடுபடுங்கள்: பிரேமலதா விஜயகாந்த்

டாஸ்மாக் அம்மாவிடமிருந்து விடுபடவேண்டும் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

விழுப்புரம் அருகே கெடார் கிராமத்தில் விழுப்புரம் (தனி) தொகுதி வேட்பாளர் உமாசங்கரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு விஜயகாந்த் மனைவி பிரேமலதா பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:

நாளைய இந்தியாவைத் தீர்மானிக்கும் சக்தி இளை ஞர்களாகிய உங்களிடம் உள்ளது. பெரும் ஊழலில் உள்ள திமுக, அதிமுகவை அகற்றும் வலிமை உங்களிடம்தான் உள்ளது. உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத் தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள்.

ஏற்கனவே விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் இம்மாவட்ட விவசாயிகளுக்கு தானே புயலினால் பாதிப்பு ஏற் பட்டது.

இக்கூட்டணி விவசாயிகளின் கூட்டணி. எல்லா மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பை உருவாக்கும் கூட்டணி. கடந்த 3 ஆண்டுகளாக எந்தத் திட்டத்தையும் ஜெயலலிதா நிறைவேற்றவில்லை. அவரது ஒரே சாதனை டாஸ்மாக் விற் பனையை உயர்த்தியதுதான். டாஸ் மாக்கில் குடித்துவிட்டு அம்மா உணவகத்தில் சாப்பிடுகிறார்கள். அதிலும் தரமான உணவு இல்லை என்றார்.

அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் குடிபோதையில் பேசிய தாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்ட பிரேமலதா,”திருவிழாவில் ஆத்தா இறங்கிவிட்டாள் என்பார் கள். அதுபோல இப்போது உங்களிடம் டாஸ்மாக் அம்மா இறங்கிவிட்டார்.

இந்த அம்மாவிடம்இருந்து விடுபடுங்கள். அப்போதுதான் உங்களை உங்கள் உற்றார், உறவினர், சகோதரர்கள் மதிப் பார்கள். மனவேதனையுடன் சொல்கிறேன். நீங்கள் முதலில் இதிலிருந்து விடுபடுங்கள்” என்று பிரேமலதா பேசினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Tue Apr 01, 2014 10:52 pm

ஆம் ஆத்மி சுவரொட்டிகளில் மோடி படம்: தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்

ஆம் ஆத்மி சுவரொட்டிகளில் மோடி படம் இடம்பெற்றுள்ளதற்கு எதிராக, டெல்லி தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் படத்தை ஆம் ஆத்மி கட்சியின் சுவரொட்டிகளில் பயன்படுத்திய காரணத்திற்காக அக்கட்சியின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சஞ்சய் கவுல் தெரிவித்தார்.

மேலும், ஆட்டோக்களில் மோடியின் படத்தை ஆம் ஆத்மி கட்சி ஒட்டியுள்ளதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் டெல்லி போலீஸில் பாஜக புகார் அளித்துள்ளது.

"அந்தப் படங்கள் அவதூறாகவும், ரசனையற்றதாகவும் உள்ளன. வாக்காளர்களுக்கு எந்த வகையிலும் விழிப்புணர்வூட்டும் வகையில் அவை இல்லை.

எங்கள் கட்சியையும், அதன் தலைவரையும் விமர்சிப்பதால் இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல்" என்று அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ரேடியோ விளம்பரங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்புவதாக அரவிந்த் கேஜ்ரிவால் மீது பாஜகவின் சட்டப் பிரிவு, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

இது குறித்து பாஜக சட்டப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அனில் சோனி கூறும்போது, "ஜன்லோக்பால் சட்டம் டெல்லி சட்டசபையில் தாக்கல் செய்யப்படாத போது அதை நிறைவேற்றியதாக தகவலைப் பரப்புகிறார்கள். மேலும் ஆம் ஆத்மி கட்சியினர் நம்பிக்கை தீர்மானத்தை எடுத்து வராமல் தாமாகவே ஆட்சியிலிருந்து ராஜினாமாவும் செய்தனர்.

லோக்பாலின் நிலையை டெல்லியின் துணை நிலை ஆளுநர் ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டார். ஆம் ஆத்மி முதல்வரும் ஒருமனதாக ராஜினாமா செய்ய முடிவெடுத்ததைப் பற்றி எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லை. யாரிடமிருந்தும் கேஜ்ரிவாலுக்கு நெருக்கடி ஏற்படவில்லை. அவராகவே முடிவெடுத்துதான் தேசிய அரசியலிலும் களமிறங்கியுள்ளார்" என்றார் அனில் சோனி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Tue Apr 01, 2014 11:02 pm

காங்கிரஸ் 365 நாள்களும் முட்டாள்கள் தினத்தைக் கொண்டாடுகிறது: மோடி


தேர்தல் நேரத்தில், ஓட்டுக்காக ஏழை மக்களிடையே சென்று ஏழ்மைப் பாட்டு பாடுவதாக காங்கிரஸ் கட்சியை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார்.

மேலும், காங்கிரஸ் 365 நாளும் முட்டாள்கள் தினத்தை கொண்டாடுகிறது என்பது மக்களுக்குத் தெரியும் என்று அவர் குறிப்பிட்டார்.

உத்திரப் பிரதேசம் மாநிலம் பரேலியில், குஜராத் முதல்வரும், பா.ஜ.க பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொண்டபோது பேசியது:

"பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதுபோல, காங்கிரஸ் தேர்தல் நேரத்தில் 'ஏழை', 'ஏழை', 'ஏழை' என்ற மந்திரத்தைப் பாடுகிறது. அனால், ஏழை மக்கள் உணர்ந்துவிட்டனர். காங்கிரஸ் 365 நாளும் முட்டாள்கள் தினத்தை கொண்டாடுகிறது என்று அவர்களுக்கு தெரியும்.

ராகுல் ஏழைகளின் மீது அக்கறை உள்ளது போல பாவனை செய்து வருவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். செல்வந்தராக பிறந்த ராகுலுக்கு ஏழை என்றால் தெரியுமா அல்லது வறுமை என்றால் புரியுமா?

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது நாட்டில் ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் புறக்கணிக்கப்பட்டனர். விவசாயிகள் தற்கொலைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். ஏழை மக்களுக்கு சென்றடைய வேண்டிய தானியங்களை கிடங்குகளில் அடைத்து வைத்து பாழாக்கச் செய்தது காங்கிரஸ் அரசு. உச்ச நீதிமன்றம் அந்த தானியங்களை ஏழைகளுக்கு விநியோகிக்கும்படி கேட்டப்போது காங்கிரஸ் அரசு அதனை செய்யவில்லை.

காங்கிரஸ் கட்சி 2009 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறியது. ஆனால், அவர்கள் அதனை செய்யவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது விவசாயிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது" என்றார் மோடி.

பிரச்சாரத்தின் இறுதியில் மக்களிடம் மன்னிப்புக் கோரிய மோடி, "நான் டெல்லி விமான நிலையத்திலிருந்து 9.30 மணிக்கு கிளம்ப முற்பட்டபோது எனது ஹெலிகாப்டர் பறக்க அதிகாரிகள் தடை விதித்தனர். அவர்கள் உங்களை நான் வந்து சந்திக்க கூடாது என்று சதி செய்கின்றனர். கடும் வெயிலில் உங்களை வாட வைத்ததற்கு மன்னிப்பு கோருகிறேன்" என்று கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Tue Apr 01, 2014 11:42 pm

ராகுலை எதிர்த்து ஸ்மிரிதி இராணி, சோனியாவை எதிர்த்து வழக்கறிஞர் அஜய் அகர்வால் போட்டி

அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக-வைச் சேர்ந்த ஸ்மிரிதி இராணி போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்துள்ளது.

பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 7வது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் அவருக்கு போட்டியாக நடிகை ஸ்மிரிதி ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். அமேதியில் போட்டியிடுவதை பெருமையாகக் கருதுவதாக ஸ்மிரிதி இராணி கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் அமேதி தொகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்மிரிதி இராணி குற்றம் சாட்டினார்.

இதேபோல் ரேபரெலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை எதிர்த்து பாரதிய ஜனதா சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அஜய் அகர்வால் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வாரணாசியில் நரேந்திர மோடிக்கு எதிராக வலுவான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக-வின் சார்பில் உத்திர பிரதேசத்தின் பண்டா தொகுதியில் பைரோன் பிரசாத் மிஷ்ரா, தமிழகத்த்தில், வேலூரில் ஏ.சி.சண்முகமும் மற்றும் தஞ்சாவூர் தொகுதியில் கருப்பா எம்.முருகானந்தமும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Wed Apr 02, 2014 6:52 pm

தொய்வை சமாளிக்குமா அ.தி.மு.க.,?

முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத்தில் பெரும்பங்கு முடிந்துள்ள நிலையில், கள நிலவரம் வேகமாக மாறி வருவது, அ.தி.மு.க., வினரை கவலையடைய செய்துள்ளது.

கடந்த மாதம் 3ம் தேதி, காஞ்சிபுரத்தில், ஜெயலலிதா பிரசாரத்தை துவங்கும் போது, அ.தி.மு.க., வலுவான நிலையில் இருந்தது. அந்த கட்சி, பெரும்பாலான இடங்களில் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது என, அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அப்போது வெளியான கருத்து கணிப்புகளும், அ.தி.மு.க., 35 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெறும் என, தெரிவித்தன. முதல்வரின் பிரசார கூட்டங்களுக்கு, 2011ல் இருந்ததை போல் மக்களிடம் எழுச்சியோ, வருகையோ இல்லை என, தகவல்கள் வந்த வண்ணம் இருந்தாலும், இரண்டு வாரங்களுக்கு முன், பா.ஜ., கூட்டணி முடிவானது வரை, அ.தி.மு.க.,வின் நிலை, ஏறத்தாழ இப்படியே தான் இருந்தது.

அதற்கு பின்;

* யாருமே எதிர்பார்க்காத விதமாக, வலுவான அணியை பா.ஜ., அமைத்துவிட்டதால், மக்கள் மத்தியில், யாரை ஆதரிப்பது என்பது குறித்து குழப்பம் ஏற்பட்டது* விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவின் சூறாவளி பிரசாரம், கருணாநிதியின் பிரசார கூட்டம் உள்ளிட்டவை நடந்தன* பிரசாரம் செய்ய களத்தில் இறங்கிய அ.தி.மு.க., வேட்பாளர்கள் பலருக்கு, உள்ளூர் பிரச்னைகள் காரணமாக, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வர் ஜெயலலிதா என்ற, ஒரே ஒரு பிரசார நட்சத்திரத்தை நம்பித் தான், அ.தி.மு.க., களத்தில் உள்ளது. ஆனால், அவரது பிரசாரமும் கடந்த ஒரு மாதமாக நடந்து கொண்டு இருப்பதால், தற்போது, கடைசி கட்டங்களை எட்டி உள்ளது. கள நிலவரமும் சிக்கலாக இருக்க, பிரசாரத்தை வலுப்படுத்த, அ.தி.மு.க., தலைமை பல்வேறு முயற்சிகளை எடுக்க துவங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாகத் தான், கடந்த மாதம் 30ம் தேதி, அ.தி.மு.க., தொண்டர்களுக்கு, முதல்வர் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தின் முக்கிய அம்சங்கள்:

* அ.தி.மு.க., தொண்டர்கள், ஒவ்வொருவரும், பிரசார பீரங்கியாக மாற வேண்டும். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இளம் வாக்காளர்களை கவர வேண்டும்

* வாக்காளர்களை, ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரும் சந்திக்க வேண்டும். அ.தி.மு.க., அரசின் சாதனைகளை எடுத்துக்கூற வேண்டும்

* காங்கிரசும், தி.மு.க.,வும் தமிழர்களுக்கு எதிராக இழைத்திட்ட பல்வேறு அநீதிகளையும், கொடுமைகளையும், வாக்காளர் ஒவ்வொருவரும் உணரும் வகையில், திண்ணை பிரசாரம், தெரு முனை கூட்டம், நேரடி சந்திப்பு மூலம்விளக்க வேண்டும்


* இந்த நேரடி தொடர்பு பிரசாரம் முழுமையாக நடைபெற வேண்டும். அந்த அளவிற்கு, நடமாடும் சுவரொட்டிகளாக, முழக்கம் எழுதப்பட்ட பதாகைகளாக விளக்கம் கூறும் கையேடுகளாக மாறி, கட்சியினர் ஒவ்வொருவரும், தேர்தல் முடியும் வரை, விழிப்புடன் களப் பணியாற்ற வேண்டும். இவ்வாறு, அதில் எழுதப்பட்டு இருந்தது.

அதாவது, அந்த கடிதம் சொல்லாமல் சொல்லிய செய்தி 'நம் பிரசாரம் இன்னும் முழுமையாக மக்களிடையே போய் சேரவில்லை. இன்னமும் முயற்சி எடுக்க வேண்டும். இதை முதல்வர் மட்டும் செய்தால் போதாது' என்பது தான். தேர்தல் என்றால், தொண்டர்களே, உற்சாகமாக இருக்க வேண்டாமா, அப்படி இருங்கள் என, கூற கடிதம் தேவையா என்று, எண்ணுவதில் தவறில்லை. ஆனால், தற்போது, அ.தி.மு.க., சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளில் தொண்டர்களின் சோர்வும் ஒன்று. அதே போல்,

* ராமநாதபுரம் அன்வர் ராஜா, திருச்சி குமார், திருவள்ளூர் வேணுகோபால், கரூர் தம்பிதுரை தவிர, மற்ற எந்த வேட்பாளரையும் கட்சிக்காரர்களுக்கே தெரியவில்லை. வேட்பாளர்களுக்கும் கட்சிக்காரர்களை தெரியவில்லை
* அ.தி.மு.க., உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பெரும்பாலான இடங்களில் நல்ல பெயர் இல்லை என்பது, வேட்பாளர் பிரசார சுற்றுப்பயணங்களில் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து கண்கூடு. இதற்கு மேல், குடிநீர் பற்றாக்குறை, மின்வெட்டு பிரச்னைகளும் உள்ளன

* அ.தி.மு.க.,வில் இல்லாத புது விஷயமாக, தற்போது, ஆங்காங்கேபொறுப்பில் இருக்கும் பலரும், தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள், மாற்று கட்சிகளில் வேட்பாளர்களாக இருந்தால், அவர்களோடு ரகசியமாக கைகோர்க்கும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன இவையெல்லாம், அ.தி.மு.க., தலைமைக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. களத்தில் மற்ற கட்சிகளின் பிரசாரங்களும், எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு சோர்வாக இருந்தாலும், அ.தி.மு.க.,வின் பிரசாரம் மிகவும் சோர்வடைந்து உள்ளதாக தெரிகிறது. இதனால், தொண்டர்களை பிரசார பீரங்கிகளாக மாற்றுவதோடு, மகளிர் சுய உதவி குழுக்களை தி.மு.க., பாணியில் வளைக்கவும், மொத்தமாக ஓட்டுகளை வைத்திருக்கும் எந்த குழுவாக இருந்தாலும் அவற்றை வளைக்கவும், மாவட்ட செயலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் மட்டும் போதுமா, அல்லது, ஜெயலலிதா இன்னொரு சுற்று வந்து, சாட்டையை சுழற்றினால் தான், வேலை நடக்குமா என்பது, இன்னும் ஓரிரு வாரங்களில் தெரிய வரும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by தமிழ்நேசன்1981 on Wed Apr 02, 2014 9:26 pm

அதிமுகவின் வெற்றி சதவீதம் குறைந்து வருவது உண்மைதான்...பார்க்கலாம்..

தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3243
மதிப்பீடுகள் : 989

View user profile

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu Apr 03, 2014 1:49 am

வாரணாசியில் நரேந்திர மோடியை கண்டிப்பாக தோற்கடிப்பேன் அரவிந்த் கெஜ்ரிவால் சபதம்

வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கண்டிப்பாக தோற்கடிப்பேன் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சபதமிட்டுள்ளார். மேலும், பாரதீய ஜனதாவுடன் இணைய மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ராஜ்மோகன் காந்தியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். நான் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்றால் எளிதில் வெற்றி பெறக்கூடிய தொகுதியில் போட்டியிட்டிருப்பேன். என்னுடையை குறிக்கோள் மோடியை தோற்கடிப்பதே. அதனால் தான் நான் இந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறேன். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் தோற்கடிக்க வேண்டும். அதனால் தான் அமேதியில் குமார் விஸ்வாஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இவர்கள் இரண்டு பேர்களையும் தோற்கடிக்க வேண்டியதுள்ளது. அவர்கள் ஊழலையே நம்பிருக்கும் கட்சியின் தலைவர்கள் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும், கெஜ்ரிவால், பாரதீய ஜனதாவில் இணையலாம் என்ற தகவல்களை அவர் மறுத்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu Apr 03, 2014 1:50 am

காங்கிரஸ் தலைவர் நக்மாவிற்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கோரிக்கை

நடிகை நக்மா உத்தரபிரதேச மாநிலம் மீரட் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து அவர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவருடன் ஏராளமான தொண்டர்கள் செல்கிறார்கள். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் கூட்டம் கூடுகிறது.

சமீபத்தில் நக்மா அங்குள்ள ஹபூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹஜ்ராஜ் சர்மா உள்ளிட்ட நிர்வாகிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். பிரசாரத்தை முடித்த நக்மா, அப்பகுதியில் இருந்து புறப்பட தயாரானபோது மக்கள் கூட்டத்தை விலக்கி விட்டு அங்கு வந்த ஹஜ்ராஜ் சர்மா எம்.எல்.ஏ., திடீரென நக்மாவின் கன்னத்தில் முத்தமிட்டதாக கூறப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எம்.எல்.ஏ.வின் இந்த செயலை எதிர்பாராத நக்மா, அவரது கையை கோபமாக தட்டிவிட்டதுடன், உடனே காரில் ஏறி அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்துக்கு மகளிர் அமைப்புகள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. ஹஜ்ராஜ் எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவை வலியுறுத்தின. ஆனால் ஹஜ்ராஜ் சர்மா கூறும்போது ‘‘நான் கூட்டத்தில் இருந்து நக்மாவை பாதுகாக்கத்தான் முயன்றேன். மற்றபடி எதுவும் நடைபெறவில்லை’’ என்றார்.

இதனையடுத்து மீரட் நகரில் நடிகை நக்மா வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் சென்றனர். நக்மாவை அருகில் சென்று பார்ப்பதற்காக பல இடங்களில் கூட்டத்தினர் முண்டியடித்தனர். அப்போது கூட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தொண்டர் ஒருவர் நக்மாவிடம் சில்மிஷம் செய்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நக்மா, தொண்டரின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைவிட்டார். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், பிரசாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு நக்மா அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். இந்த சம்பவத் தினால் நக்மா அதிர்ச்சியுடன் காணப்பட்டார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்தால் நான் மீரட் பக்கமே வரமாட்டேன்’’ என்றார். இது தொடர்பாக நடிகை நக்மா காங்கிரசிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை நக்மாவிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நடிகை நக்மாவின் கூட்டத்திற்கும் அதிகமான கூட்டம் கூடுகிறது. எனவே சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கூடுதல் கவணம் செலத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu Apr 03, 2014 1:52 am

சிவசேனா கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் 3 பேர் கைது

சிவசேனா கட்சி தொண்டர்கள் 2 பேர் மீது தாக்குதல் நடத்திய தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடிவருகிறார்கள்.

சிவசேனா தொண்டர்கள்

தானே கல்வா அருகே உள்ள பாஸ்கர் நகரை சேர்ந்தவர்கள் பிரகாஷ் ராஜ்பர் மற்றும் ஆஷிக் ராஜ்பர். சிவசேனா கட்சி தொண்டர்கள். சம்பவத்தன்று கல்யாண் தொகுதியில் போட்டியிடும் சிவசேனா வேட்பாளர் ஸ்ரீகாந்த் ஷிண்டே வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இவர்கள் 2 பேரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள கோவில் அருகே சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் இவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

3 பேர் கைது

இதில் பிரகாஷ் ராஜ்பருக்கும், ஆஷிக் ராஜ்பருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்த சிவசேனா தொண்டர்களை மீட்டு சத்ரபதி சிவாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும், தப்பியோடிய நபர்களில் 3 பேரை கைது செய்தனர். விசாரணையில், அவர்களது பெயர் ராஜ்நாத் சிங், தீபக் ஷெர்தே மற்றும் பங்கஜ் பாண்டே என்றும், தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் என்றும் தெரியவந்தது. இதில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu Apr 03, 2014 1:55 am

திருவண்ணாமலை அதிமுக வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.37 லட்சம்

திருவண்ணாமலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வனரோஜா வேட்புமனு தாக்கலின் போது தனது பெயரிலும், தனது கணவர் பெயரிலும் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளார்.

இதில் வேட்பாளரிடம் ரொக்கம் மற்றும் நகை, கணவர் பெயரில் ரொக்கம் மற்றும் அசையா சொத்துக்கள் உள்பட மொத்தம் ரூ.37 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு:–

திருவண்ணாமலை அ.தி.மு.க. வேட்பாளர் வனரோஜாவிடம் கையிருப்பாக ரொக்கம் ரூ.3 லட்சம், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 30 பவுன் நகையும், அவரது கணவர் சண்முகத்திடம் ஒரு லட்சம் ரூபாயும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளரின் கணவர் சண்முகம் பெயரில் செங்கம் அருகே நீப்பத்துறையில் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6.42 ஏக்கர் விவசாய நிலமும், அதே பகுதியில் 2 ஆயிரத்து 400 சதுரடி நிலமும், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிக்ஸ் சிறுதொழில் நிறுவனமும் உள்ளது.

வேட்பாளரின் கணவர் பெயரில் செங்கம் துக்காப்பேட்டையில் 1987ம் ஆண்டு வாங்கப்பட்ட ஆயிரத்து 244 சதுரடியில் 21 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான வீடு மொத்தம் 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் வேட்பாளரின் கணவர் பெயரில் உள்ளன.

வேட்பாளர் வனரோஜா அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 1995ம் ஆண்டு எம்.ஏ.வும், அதே பல்கலைக்கழகத்தில் பி.எட், படித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu Apr 03, 2014 1:58 am

நரேந்திர மோடி உணர்வற்றவர்: சரத் பவார் தாக்கு

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உணர்வற்றவர் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவார் விமர்சித்துள்ளார்.

மோடிக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது; அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என அண்மையில் சரத் பவார் விமர்சித்திருந்தார். அவரது பேச்சு கிளப்பிய சர்ச்சை நீங்குவதற்குள் மீண்டும் மோடியை விமர்சித்துள்ளார் பவார்.

மத்தியப் பிரதேச மாநிலம் அலிபக் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சரத் பவார் இதனை தெரிவித்துள்ளார்.

"குஜராத் கலவரத்தில் காங்கிரஸ் எம்.பி. ஜாபர் அலி உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டபோது அங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள காந்திநகரில்தான் மோடி இருந்தார். ஆனால், ஜாபர் அலி வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லக் கூட்ட மோடி முற்படவில்லை. இப்படி உணர்வற்ற ஒரு தலைவர் பல்வேறு சாதிகளையும், மதங்களையும் சேர்ந்த மக்களை எப்படி பாதுகாப்பார்?" என்றார் சரத் பவார்.

மேலும், "தேர்தல் முடிவதற்கு முன்னரே பாஜக பிரதமர் வேட்பாளரை அறிவித்துள்ளது. இது முறையல்ல. தேர்தலுக்குப் பின்னர் தனிப் பெரும்பான்மை பெறும் கட்சியின் எம்.பி.க்கள் சேர்ந்தே பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வது மரபு" என்றார் அவர்.

சர்வாதிகாரம்:

பின்னர் பேசிய அம்மாநில முதல்வர் பிருதிவிராஜ் சிங் சவான், மோடி ஒரு சர்வாதிகாரியைப் போல் செயல்படுகிறார் என்றார்.

அவரது நடவடிக்கையால் கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் ஆகியோர் ஓரங்கட்டப்பட்டு விட்டதாகவும் கூறினார். ஜஸ்வந்த் சிங் கண்ணீர் சிந்தியது வருத்தமளிப்பதாக கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu Apr 03, 2014 2:02 am

ஒவ்வொருவரும் பிரசார பீரங்கியாகுங்கள்! தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்

அ.தி.மு.க., தொண்டர்கள், ஒவ்வொருவரும், பிரசார பீரங்கியாக மாற வேண்டும். நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, இளம் வாக்காளர்களை, கவர வேண்டும்' என, அ.தி.மு.க., தொண்டர்களுக்கு, முதல்வர், ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடித விவரம்:

இந்த மடல் வழியாக, ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட, கட்சி தொண்டர்களிடம், என் உள்ளத்து உணர்வுகளை, பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.அ.தி.மு.க., வரலாற்றில், முதன் முறையாக, 40 லோக்சபா தொகுதிகளிலும், நாமே போட்டியிடும் வாய்ப்பினை, இந்தத் தேர்தலில் பெற்றுள்ளோம். எனவே, இந்த தேர்தல், ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல்.எதிரொலிக்கும் வகையில் லட்சக்கணக்கான கட்சி தொண்டர் கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் பதவிகளில், மக்கள் பணியாற்றுகின்றனர். கட்சியில் எளிய தொண்டர்கள், இப்படி மக்கள் தொண்டாற்றும், உயர் பதவிகளை வகிக்கின்றனர் என்ற பெருமையை, கட்சி பெற்றுள்ளது.அதேபோல், இதுநாள் வரை இல்லாத அளவுக்கு, கட்சியில், 40 உறுப்பினர்கள் லோக்சபாவில் இடம் பெற்றுள்ளனர் என்ற செய்தியை, எதிரொலிக்கும் வகையில், கட்சியினர் அனைவரும், தங்கள் கடமையை செய்ய வேண்டும்.தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில், தமிழர்களின் பெருமைகளை சீர்குலைக்கும் வகையில், 10 ஆண்டுகளாக, மத்தி யில் ஆட்சி நடத்தியது காங்கிரஸ். அதனுடன், ஒன்பது ஆண்டுகள் உறவாடியது, தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அரசு, நம் நாட்டின் பொருளாதாரத்தை, முற்றிலும் சீர்குலைத்து விட்டது. இந்திய ரூபாயின் மதிப்பு, கடுமையாக சரிந்து விட்டது. அனைத்து துறைகளிலும், ஊழல் கொடிகட்டி பறக்கிறது.காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, குஜராத்தில் இருந்து அசாம் வரை, விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டை காப்பாற்ற வும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும், லோக்சபா தேர்தல், ஒரு கருவியாக, நமக்கு வாய்த்துள்ளது. இந்த செய்தியை, தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும், கட்சி தொண்டர்கள் கொண்டு செல்ல வேண்டும்.

உணரும் வகையில்:

வாக்காளர்களை, ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரும் சந்திக்க வேண்டும். அ.தி.மு.க., அரசின் சாதனைகள்; முன்னோடி திட்டங்கள்; வளர்ச்சி திட்டங்கள்; தொலைநோக்கு திட்டங்கள் போன்றவற்றை எடுத்துக் கூற வேண்டும்.வஞ்சக நெஞ்சத்தோடு காங்கிரசும், தன் குடும்ப சுயநலத்திற்காக, தி.மு.க.,வும், தமிழர்களுக்கு எதிராக இழைத்திட்ட, பல்வேறு அநீதிகளையும், கொடுமைகளையும், வாக்காளர்கள் ஒவ்வொருவரும் உணரும் வகையில், திண்ணை பிரசாரம், தெருமுனை கூட்டம், நேரடி சந்திப்பு மூலம் விளக்க வேண்டும்.நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, இளம் வாக்காளர்களை கவர வேண்டும். கட்சியினர் ஒவ்வொருவரும், ஒரு பிரசார பீரங்கியாக மாற வேண்டும்.

விழிப்புடன் களப்பணி

வழக்கமான தேர்தல் பிரசார நடவடிக்கை, தொடர்ந்து நடைபெறுவதை போல், இந்த நேரடித் தொடர்பு பிரசாரமும், முழுமையாக நடைபெற வேண்டும். அந்த அளவிற்கு, நடமாடும் சுவரொட்டிகளாக, முழக்கம் எழுதப்பட்ட பதாகைகளாக, விளக்கம் கூறும் கையேடுகளாக மாறி, கட்சியினர் ஒவ்வொருவரும், தேர்தல் முடியும் வரை, விழிப்புடன் களப்பணியாற்ற வேண்டும்.என்னை பொறுத்தவரை, பொது வாழ்வும், அரசியல் தொண்டும், ஒரு பிரார்த்தனை. விருப்பு வெறுப்புகளுக்கு, இடமில்லாத தவம். கட்சி தொண்டர்கள் அனைவரும், இந்த உணர்வுகளை புரிந்து கொண்டு, தேர்தல் பணியாற்ற வேண்டும். அனைத்து தொகுதிகளிலும், நானே போட்டியிடுவதாக நினைத்து, ஒவ்வொருவரும், தேர்தல் பணியாற்ற வேண்டும். அனைத்து தொகுதிகளிலும், பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்ற மகத்தான செய்தி வரும்வரை, கட்சியினர் ஒவ்வொருவரும் அயராது பணியாற்றி, எம்.ஜி.ஆர்., புகழுக்கு, மேலும் ஒரு மகுடம் சூட்ட வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu Apr 03, 2014 2:04 am

ஓட்டுப்பதிவுக்கு முன்பே முடிவுகள் தெரிந்து விட்ட தேர்தல்: மோடி


பக்சார்: இதுவரை நடந்த லோக்சபா தேர்தல்களில், ஓட்டுப்பதிவுக்கு முன்பே முடிவுகள் தெரிந்துவிட்ட தேர்தல் இது தான் என பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.

பீகார் மாநிலம் பக்சாரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்த தேர்தலில் ஒட்டு மொத்த இந்தியாவும் போராடுகிறது. ஓட்டுப்பதிவுக்கு முன்பாகவே முடிவுகள் தெரிந்து விட்ட முதல் தேர்தல் இது தான். இன்னும் ஏழு ஆண்டுகளில் நாட்டு மக்கள் ஒருவர் கூட சொந்த வீடு இல்லாமல் இருக்கக்கூடாது என்ற எனது குறிக்கோள் நிறைவேற மக்களின் ஆதரவு எனக்கு தேவை. அந்த வீட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம், கழிவறை வசதிகள் இருப்பதுடன், கல்வி மற்றும் சுகாதாரமும் அளிக்கப்படும்.

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இந்த நாட்டை சோனியா அரசு ஆட்சி செய்து வருகிறது. ஆனால் அந்த அரசு விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அம்மாக்கள், சகோதரிகள் இவர்களில் யாருடையாவது கனவுகளையாவது நிறைவேற்றியுள்ளதா? மக்கள் எவ்வளவு காலம் தான் பொறுத்திருப்பார்கள். இவ்வாறு மோடி பேசினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu Apr 03, 2014 2:05 am

300எம்.பி.,க்கள் பா.ஜ.,வுக்கு வேண்டும்: மோடி உருக்கமான வேண்டுகோள்

பரேலி : ''மத்தியில் ஸ்திரமான, வலுவான ஆட்சி அமைவதற்கு, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 300 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற, காஷ்மீர் முதல், கன்னியாகுமரி வரையுள்ள வாக்காளர்கள் நல்ல தீர்ப்பு தாருங்கள்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம், அனைத்து மாநிலங்களிலும் தீவிரம் அடைந்துள்ளது. நாடு முழுவதும், பா.ஜ., கூட்டணி தனி மெஜாரிட்டி பெறுவதற்காக, தீவிர பிரசாரம் செய்து வருகிறது.

புது அணுகுமுறை

இந்த கூட்டணியில் இருந்த கட்சிகள் சில, வெளியேறி சென்றாலும், தமிழகம், ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில், புது கட்சிகளை அரவணைத்து, பா.ஜ., முன்னோக்கி செல்கிறது. உ.பி., - பீகார், ஒடிசாவில், வேட்பாளர்கள் தேர்வில் புது அணுகுமுறையை கடைபிடித்து இருப்பதால், அதிக இடங்களை பெற்று விடலாம் என்ற நம்பிக்கை இந்த கூட்டணிக்கு ஏற்பட்டுள்ளது.உ.பி., மாநிலம், வாரணாசியில் மோடி போட்டியிடுவதால், இதனால் கிடைத்த பாப்புலாரிட்டியை வைத்து, 80 தொகுதிகளையுமே பிடித்துவிட வேண்டும் என, பா.ஜ., கனவு காண்கிறது. பீகாரில், 40 தொகுதிகளையும் கைப்பற்றி விட்டால், 300 எம்.பி.,க்களையும் தாண்டிவிடலாம் என, மனக்கணக்கு போட, பா.ஜ., துவங்கிவிட்டது.ஆட்சி அமைப்பதற்கு தேவையான, மந்திர எண்ணான, 272 இடங்களை பெறுவதில் மட்டுமே துவக்கத்தில் கவனம் செலுத்திய, பா.ஜ., பல மாநிலங்களில் வலுவான கூட்டணி மற்றும் மக்கள் செல்வாக்கு, கூட்டணி அமைப்பதில், எதிரணியான காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் போன்றவற்றை கணக்கில் கொண்டு, நிலையான ஆட்சி அமைக்க, 300 இடங்களை பெறுவது இலக்கு என்ற கோஷத்திற்கு சென்றுள்ளது.'பா.ஜ., ஆட்சிக்கு வருவதை தடுக்க, மீண்டும் ஸ்திரமற்ற ஆட்சி அமைவதையே காங்கிரஸ் விரும்புகிறது என்பதை கோடிட்டு காட்டி, இதிலிருந்து நாட்டை காப்பாற்ற, 300 இடங்களை, தே.ஜ., பெற ஓட்டு போடுங்கள்' என்ற பிரசாரத்தை துவக்கி உள்ளார்.இதை தான் நேற்று, உத்தர பிரதேசத்தின் பரேலி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பார்க்க முடிந்தது.

அந்த பொதுக்கூட்டத்தில், நரேந்திர மோடி பேசியதாவது:
காங்கிரஸ், மூன்றாவது அணி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள், 'மதச்சார்பற்ற சக்திகள்' என்ற பெயரில், மீண்டும் ஸ்திரமற்ற, வலுவற்ற ஆட்சியை கொண்டு வருவதற்காக, மக்களை திசை திருப்ப பார்க்கின்றன.பா.ஜ., தலைமையில் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காக, இப்போது எதிரும், புதிருமாக இருப்பவர்கள் ஒன்றிணைந்து, ஆட்சி அமைக்க முயல போகின்றனராம்.

உலகம் கேட்கும்:

பா.ஜ., கூட்டணியில் இருந்து, பல கட்சிகள் வெளியேறி உள்ளன. அதே நேரத்தில் நாடு முழுவதும், புதிய கட்சிகள் எங்களுடன் இணைந்துள்ளன. நாட்டில் வலுவான, ஸ்திரமான ஆட்சி அமைந்தால் தான், மக்களின் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியும்; நாட்டின் இமேஜையும், சர்வதேச அளவில் உயர்த்த முடியும்.காஷ்மீர் - கன்னியாகுமரி வரை உள்ள வாக்காளர்களை, நான் கேட்டு கொள்வதெல்லாம், பா.ஜ., கூட்டணிக்கு, 300க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களை தாருங்கள். இந்த பலத்துடன், புது பிரதமர் பதவியேற்றால், நாம் சொல்வதை உலகம் கேட்கும் படி செய்யலாம்.மக்களுக்கு நாங்கள் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.மத்தியில் ஸ்திரமற்ற ஆட்சி வருவதையே காங்கிரஸ் விரும்புகிறது. இது தான் தேச பக்தியா? யார் ஆட்சி அமைப்பது என்பதை விட, மத்தியில் ஸ்திரமான அரசாக இருக்க வேண்டும்.மோடி பிரதமராகிறாரா, பா.ஜ., ஆட்சி அமைக்கிறதா... என்பது முக்கியமல்ல. அமையும் அரசு ஸ்திரமாக இருப்பது தான் முக்கியம்.தேர்தல் வரும் போதெல்லாம், காங்கிரஸ் கட்சி, 'ஏழை, ஏழை' என்று மந்திரம் பாட துவங்கி விடுகிறது. இப்படி சொல்லியே, 365 நாட்களும், 'ஏப்ரல் பூல்' தினமாக்க பார்க்கிறது.

ஏழையாகவே இருப்பதா?

தேர்வுக்கு செல்லும் மாணவன், பிரார்த்தனை செய்யும் போது, தேர்வில் பாஸ் செய்ய வேண்டும் என வேண்டுவான். ஏழை நாடாக இந்தியாவை வைத்திருப்பதையே காங்கிரஸ் விரும்புகிறது.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி யில், ராணுவ வீரர்களும், விவசாயிகளும் மிகவும் பாதிக்கப்பட்டனர். நாட்டை பாதுகாக்கும் வீரர்களுக்கு, போதிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை.நம் இந்திய வீரரின் தலையை, பாகிஸ்தான் ராணுவம் துண்டித்தது. விவசாயிகள் தற்கொலைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம்.இவ்வாறு, மோடி பேசினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu Apr 03, 2014 2:06 am

"குடிக்கும் நீரையும் விற்பது தமிழக அரசு தான்': வேலூரில் ஸ்டாலின் ஆவேசம்

வேலூர்: ""இந்தியாவிலேயே, குடிக்கும் நீரை மக்களுக்கு விற்பனை செய்யும் அவலமான அரசு, தமிழக அரசு தான்,'' என, வேலூரில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.

வேலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., கூட்டணி வேட்பாளர் அப்துல்ரகுமானை ஆதரித்து, வேலூர் மண்டித் தெருவில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில், திறந்த வேனில் நின்றபடி, அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தில், ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி, தமிழ்நாட்டு மக்களுக்கு எத்தனையோ திட்டங்களை உருவாக்கி கொடுத்து உள்ளார். கடந்த, 2006ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை, முதல்வராக கருணாநிதி செய்த சாதனை போல யாரும் செய்யவில்லை.வேலூர் உள்பட பத்து நகராட்சிகளை, மாநகராட்சி ஆக்கினார். ஐந்து கோடியில் வேலூர் மாநகராட்சியில், புதியதாக சாலை போடப்பட்டது. ஒகேனக்கல், காவிரி குடிநீர் திட்டம் கொண்டு வந்தார். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில், குடிநீர் விற்கும் அவல நிலை தமிழகத்தில் உள்ளது.

குடிநீர் கம்பனிகள் தண்ணீர் பாட்டில் விற்பதில் தவறில்லை. ஆனால், ஒரு அரசு, தண்ணீர் விற்க கூடாது. தி.மு.க., ஆட்சியில், குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கி பாதுகாக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்கினோம். இந்தியாவில், எங்கும், எந்த அரசும் குடிநீர் விற்பனை செய்வது கிடையாது. <உலகத்திலேயே நடக்காத இந்த கொடுமை தமிழகத்தில் நடக்கிறது.கந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தொடராமல், ஜெயலலிதா முடக்கி விட்டார். தி.மு.க., ஆட்சியில், வேலூரில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வந்து, 60 சதவீதம் பணி முடிந்தது. ஆனால், ஜெ., ஆட்சிக்கு வந்த, மூன்று ஆண்டு ஆகியும், இந்த திட்டம் முடியவில்லை. கருணாநிதி கொண்டு வந்த திட்டத்தை முடித்தால், அவருக்கு நல்ல பெயர் வந்து விடுமே என்ற காழ்ப்புணர்சி தான், இதற்கு காரணம்.

வேலூர் மாநகராட்சியில், டெங்கு காய்ச்சலில், பத்து குழந்தை இறந்துள்ளது. கொலை, கொள்ளை, பலாத்காரம் சர்வ சாதாரணமாக நடக்கிறது. மூன்று ஆண்டுகளில், பத்துக்கும் மேற்பட்ட கொலை நடந்துள்ளது.பா.ஜ., மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த்ரெட்டி, பா.ஜ., மாநில செயலாளர் வெள்ளையப்பனை, மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் வெட்டிக் கொலை செய்தனர். பெண்கள் இரவில் தான் நடந்து செல்ல கஷ்டம். ஜெயலலிதா நாட்டு மக்களை போய் பார்ப்பதில்லை. ஆனால், காட்டில் போய் மிருகங்களை பார்த்து ரசிக்கிறார். அப்போது, அவர் மீது கோபம் கொண்ட ஐந்தறிவு உள்ள யானை, எட்டி உதைத்தது. ஆறறிவுள்ள நாம் என்ன செய்ய வேண்டும்.தொகுதி பிரச்சனைகளை பார்லியில் பேசி, அப்துல் ரகுமான் தீர்த்து வந்தார். இவரை மீண்டும், எம்.பி.,யாக்க வேண்டும், என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Sat Apr 05, 2014 5:51 am

கெஜ்ரிவால் மீது மீண்டும் தாக்குதல்: பிரசாரம் ரத்து

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் இன்று பிரசாரம் மேற்கொண்டபோது அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்கினார்.

தெற்கு டெல்லியில் வாகனத்தில் சென்று பிரசாரம் செய்த அவர், தனது ஆதரவாளர்களுடன் கைகுலுக்கிக்கொண்டிருந்தார். அப்போது, பின்னால் நின்றிருந்த ஒரு நபர் திடீரென அவரது முதுகில் குத்தினார். மீண்டும் அடிக்க முயன்ற அந்த நபரை, ஆம் ஆத்மி தொண்டர்கள் பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

பின்னர் தொண்டர்களிடையே பேசிய கெஜ்ரிவால், “பிரதமர் பதவியை பெறுவதற்காக சிலர் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளனர். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். வன்முறை கூடாது என்று நமது மதம் போதிக்கிறது. நாம் நமது கைகளை உயர்த்தினால், இந்த இயக்கம் அழிந்து விடும்” என்றார்.

இந்த தாக்குதலுக்கு பா.ஜனதா மீது குற்றம் சாட்டிய கெஜ்ரிவால், தனது தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் தனது பிரச்சார பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு திரும்பினார்.

இதேபோல் கடந்த மாதம் 28-ம் தேதி அரியானாவில் பிரசாரம் செய்தபோதும் கெஜ்ரிவால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Sat Apr 05, 2014 5:55 am

மோடியை பிரதமராக்கும் பிரசார வியூகம் தோல்வியில் முடியும்: அகிலேஷ் யாதவ்

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மக்களவைத் தொகுதி, பகோதரில் இன்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடிக் கட்சி தலைவரும், உத்தர பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவ் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “பா.ஜ.க. பிரசார வியூகங்களால் நரேந்திர மோடியை பிரதமராக்க முடியாது. நாங்கள் அதை தடுத்து நிறுத்துவதுடன், மூன்றாவது அணி அரசை உருவாக்குவோம்.

வகுப்புவாதத்தை திருப்புவது எளிதானது. ஆனால் அதை தடுத்து நிறுத்துவது மிகவும் கடினம். நாங்கள் தடுத்து நிறுத்துவோம். மேலும் குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை விட உத்தர பிரதேச மாநிலம் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. நீங்கள் மூன்றாவது அணிக்கு வாக்களித்தால் உத்தர பிரதேச வளர்ச்சியை நாங்கள் நாடு முழுவதும் விரிவுபடுத்துவோம்.

மேலும் முஸ்லிம் சமூக மாணவிகள் 10ம் வகுப்பிற்கு மேல் படிப்பை தொடர ரூ.30000 நிதி உதவியும், விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதியும் கடந்த இரண்டு வருடத்தில் செய்துள்ளோம்” என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

பெண்கள் ஆதரவு யாருக்கு?

Post by தமிழ்நேசன்1981 on Sat Apr 05, 2014 6:42 am

ஜூ.வி. எடுத்துவரும் ஸ்பெஷல் சர்வே வரிசையில் கடந்த வாரம் எடுக்கப்பட்டது 'பெண்கள் வாக்கு யாருக்கு?’ என்ற சர்வே.நாட்டில் சரி பாதியான பெண்கள், அரசியலின் தலைவிதியை அரசாங்கத்தின் நகர்வுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக எப்போதும் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் பெண்களின் மனவோட்டம் எந்தத் திசையில் இருக்கிறது என்பதை அறியத் திட்டமிட்டோம். அதற்கான கேள்விகளுடன் நமது நிருபர்களும் மாணவ நிருபர்களும் தமிழ்நாட்டின் முக்கியமான பகுதிகள் அனைத்துக்கும் சென்று 5 ஆயிரத்து 555 பெண்களைச் சந்தித்து சர்வே எடுத்தார்கள். இந்தப் பெண்கள் அனைவருக்கும் அரசியலைப் பற்றியும் நாட்டு நிலைமையைப் பற்றியும் அளவுக்கு அதிகமான வருத்தம் இருக்கிறது. அன்றாட வாழ்க்கைப் பிரச்னையே அவஸ்தைக்குரியதாக மாறிவருவதை அவர்களால் சமாளிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

நெல்லையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், ''விலைவாசியும் ஏறிடுச்சி. கரன்ட் பிரச்னையும் இருக்குது. நீங்க எந்தப் பிரச்னை இருக்குதுன்னு கேட்டு இருக்கீங்க. இதுல எல்லாமேதான் இருக்கு. எல்லாத்தையும் டிக் பண்ணிடவா?'' என்று விரக்தியில் விசாரித்தார்.

''ஒவ்வொரு தேர்தலின்போதும் ஓட்டுப்போட போகும்போது இந்தக் கட்சிக்கு ஓட்டுப்போடுன்னு வீட்டுல இருக்குற ஆம்பளைங்க சொல்லி விடுவாங்க. ஆனா, நான் எனக்கு புடிச்ச கட்சிக்குத்தான் ஓட்டுப்போடுவேன். இந்த தடவையும் அப்படித்தான்!'' - இது கோவை அம்மணியின் ஓப்பன் டாக். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தார்கள்.


ஆனால், உங்கள் ஓட்டு யாருக்கு என்ற கேள்விக்கு இவர்களில் பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு என்று சொல்லியிருக்கிறார்கள். பி.ஜே.பி. கூட்டணியைக்விட 10 சதவிகித அதிக வாக்குகளை அ.தி.மு.க. அள்ளுகிறது. பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியை டிக் செய்பவர்கள், வாக்களிப்பது அ.தி.மு.க. கூட்டணி என்று சொல்வது முரண்பாடாகத் தெரியலாம். அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கத் தயாராக இருப்பவர்களுக்குக்கூட ஜெயலலிதா பிரதமர் என்று சொல்வதை ஏற்க முடியவில்லையோ என்று சொல்லத் தோன்றுகிறது!
இதோ அந்த சர்வே முடிவுகள்...தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3243
மதிப்பீடுகள் : 989

View user profile

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum