ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 anikuttan

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 ayyasamy ram

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 ayyasamy ram

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 ayyasamy ram

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 ayyasamy ram

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ayyasamy ram

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 T.N.Balasubramanian

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 ayyasamy ram

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

கோழியும் மனிதனும்
 ayyasamy ram

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவ உறவு மேம்பட…
 Dr.S.Soundarapandian

ஆதித்த ஹிருதயம்
 பழ.முத்துராமலிங்கம்

கனடா போலீஸ்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
தமிழ்நேசன்1981
 
anikuttan
 

Admins Online

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Wed Feb 19, 2014 11:21 pm

First topic message reminder :


 பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்?

தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது.

இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.  பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே வரும் 3-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Mar 24, 2014 6:06 pm

அம்மா பிரதமர் ஆவாரு! நீங்க டி.வி-யில அதைப் பார்ப்பீங்க! - ராமராஜன் ரகளை ஜோசியம்!

கண்ணைப் பறிக்கும் கலர் சட்டை போட்டு திரையில் கதாநாயகனாகக் கலக்கிய ராமராஜன், இப்போது பிரசாரத்திலும் கலக்கிவருகிறார். தனது நையாண்டி பேச்சுகளால் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு புறப்பட்டுவிட்டார். ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அன்வர் ராஜாவுக்கு வாக்கு கேட்டுப் பிரசாரம் செய்ய வந்தார்.

அப்போது, ''இந்தத் தேர்தல்தான் தமிழகத்தைச் சேர்ந்த அம்மாவைப் பிரதமராக்க நடைபெறும் தேர்தல். அம்மா பிரதமரானால்தான், தமிழுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னாடியே துணிச்சலாக வேட்பாளர்களை அறிவித்துப் பிரசாரத்தையும் தொடங்கியவர் புரட்சித் தலைவி அம்மாதான். ஆனா பாருங்க, இன்ன தேதி வரை சில கட்சிகள் ஒண்ணு இங்கிட்டு போகுது... ஒண்ணு அங்கிட்டு போகுது. தி.மு.க-வில் ஸ்டாலின் எங்கள் கூட்டணி கதவு மூடியாச்சுனு சொன்னார். ஆனா, கொல்லைப் பக்கமா கதவைத் திறந்து வெச்சு வாங்க வாங்கனு கம்யூனிஸ்ட்ட கூப்பிடுறார்.

40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் அம்மாவை எதிர்த்துத் தனியாகச் சந்திக்க எந்தக் கட்சிக்கும் தைரியம் இல்லை. தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் இருக்கு. பெரிய கட்சி, சிறிய கட்சி, பக்கோடா கட்சி, துக்கடா கட்சிலாம் இருக்கு. ஆனா, எந்தக் கட்சிக்கும் ஒரு பெண் தலைவரா இருக்காங்களா? அ.தி.மு.க-வில் மட்டும் அம்மா தலைவராக இருக்காங்க.

வட நாட்டு தலைவர்களே அம்மா பிரதமர் ஆவாங்கனு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. பி.ஜே.பி-யைச் சேர்நத அத்வானி, 'வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வராது. பி.ஜே.பி-யும் ஆட்சிக்கு வராமல் போனால் ஒரு மாநில தலைவர்தான் ஆட்சிக்கு வருவார்’ என்று சொல்லி இருக்கார். அந்த மாநிலம் தமிழகம்தான் எனச் சொல்லாமல் சொல்லிவிட்டார். பத்திரிகையாளர் சோ சொல்றார்... 'மோடிக்குப் பிரதமர் பதவி கிடைக்கலைனா அந்தப் பதவி அம்மாவுக்குத்தான் கிடைக்கும்’னு.

இந்தியாவில் உயரிய பதவி இரண்டுதான். ஒண்ணு ஜனாதிபதி, அடுத்தது பிரதமர். நம்ம நாட்டைச் சேர்ந்த(?) வெங்கட்ராமன் ஜனாதிபதியா இருந்தார். அதுக்கு அப்புறம் நம்ம ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்தார். ஆனா, பிரதமர் பதவிக்கு நம்ம நாட்டைச் சேர்ந்த(?) யாரும் இருந்தது இல்ல. இப்ப அந்த வாய்ப்பு வந்திருக்கு.

கர்நாடகத்தைச் சேர்ந்த தேவகவுடா 23 எம்.பி-யை வெச்சு பிரதமர் ஆகும்போது 40 எம்.பி-யை வெச்சு அம்மா பிரதமராவதை எல்லாரும் டி.வி-யில பாக்கத்தான் போறீங்க. 99-ல் நான் நாடாளுமன்ற உறுப்பினரா இருந்தேன். அப்ப நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய் பேசிக்கிட்டு இருந்தார். இந்தி தெரியாத நானும் அவர் பேச்சைக் கேட்டுகிட்டு மண்டையை ஆட்டிக்கிட்டு இருந்தேன். அப்ப என் பின்னால் குறட்டைச் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். தேவகவுடா தூங்கிட்டு இருந்தார். இப்படி தூங்குறவரா நம்ம நாட்டு பிரதமரா இருந்தார்னு வேதனைப்பட்டேன். அப்படியானால் தூங்காமல் பணியாற்றிவரும் அம்மா ஏன் பிரதமர் ஆகக் கூடாது?

தமிழ்நாட்டில் காங்கிரஸ் நிலை பரிதாபமா இருக்கு. யாரும் போட்டிப் போடவே யோசிக்கிறாங்க. வாசன் சொல்றார்... 40 தொகுதியிலும் பிரசாரம் பண்ணுவேன். ஆனால் நான் நிக்க மாட்டேன்னு சொல்றார். காங்கிரஸ் தலைவர்கள் எல்லாருமே தேர்தல்ல நிக்க பயப்படறாங்க.

அம்மா அரிசி இலவசமா கொடுகறாங்க. கஷ்டப்பட்ட மக்களுக்கு ஆட்டையும் மாட்டையும் கொடுத்தாங்க. ஆடு குட்டி போடும்போது... அது காசு. பசு லிட்டர் கணக்கா பால் கறக்கும். அதுவும் காசு. பால் கறக்கலையா... 'செண்பகமே செண்பகமே’னு பாட்டு பாடுங்க. தன்னால பால் வரும்'' என்று பாடியும் காண்பித்தார்.

''அம்மா கையால லேப்டாப் வாங்குனவுங்க இந்தத் தேர்தல்ல முதல் முறையா கன்னி ஓட்டு போடப்போறாங்க. அவங்க மொத்த ஓட்டும் அம்மாவுக்குத்தான். அம்மா படிக்கும் பிள்ளைகளுக்கு மார்க் போடுறாங்க. ஆனா குஷ்புவும் நமீதாவும் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில உக்காந்து மார்க் போடுறாங்க.

ஒரு இட்லி ஒரு ரூபாய்க்குக் கொடுத்து ஏழைகள் வயிறு நிரம்பவைத்தவர் அம்மா. வேணும்னா நீங்களும் ஒரு ரூபாய்க்கு இட்லி போட வேண்டியதுதானே? தமிழகத்தில மின்சார பிரச்னைக்குக் காரணம் கருணாநிதி. அம்மா வந்துதான் அதைக் கொஞ்சம் கொஞ்சமா சரிசெஞ்சு இருக்காங்க. அம்மா செய்வாங்க. ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டபட்டவர்களை விடுவித்தது அம்மாவின் துணிச்சல். அப்படித் துணிச்சலானவங்க கையிலதான் பிரதமர் பதவி இருக்கணும்'' என்று பேசி முடித்தார்.

கலக்க ஆரம்பித்துவிட்டார் கலர் சட்டைக்காரர்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Mar 24, 2014 6:19 pm

விளக்கம் சொல்லியே அலுத்துப்போகும் ஆ.ராசா! - குளிர் தொகுதியில் உஷ்ண பிரசாரம்

தமிழகத்தின் மேற்கு மூலையில் அமைந்திருக்கும் நீலகிரி, இப்போது இந்திய அளவில் கவனிக்கப்படும் தொகுதியாக மாறியுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா இந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதுதான் அதற்குக் காரணம்!

 தி.மு.க. தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்தபோது, 'ஆ.ராசாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு’ என்பது தேசிய மீடியாக்களில் தலைப்புச் செய்தியானது. அந்த அளவுக்கு நாடே உற்றுநோக்கும் தொகுதியாக மாறியுள்ளது நீலகிரி. கடந்த 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரியில் போட்டியிட்ட ஆ.ராசா, தேர்தலில் வெற்றிபெற்று, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அடுத்த ஓராண்டில் '2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் விதிகளை மீறியதால் 1.76 லட்சம் கோடி ரூபாய் வருமான இழப்பை அரசுக்கு ஏற்படுத்தி, மிகப்பெரிய முறைகேட்டுக்கு ஆ.ராசா காரணமாக இருந்திருக்கிறார்’ என்று மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய... அமைச்சர் பதவியை இழந்தார்; சிறையிலும் அடைக்கப்பட்டார் ஆ.ராசா.

2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. படுதோல்வியைச் சந்தித்து, ஆட்சியை இழந்தது. அப்போது, 'தமிழகத்தில் தி.மு.க. தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் மிக முக்கியக் காரணம்'' என்று கட்சிக்காரர்களே சொன்னார்கள். 'தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்புக் கேட்டு கட்சித் தலைமைக்கு நெருக்கடித்தர மாட்டேன்’ என கூட்டங்கள்தோறும் முழங்கிய அவர்தான், விருப்ப மனுவைத் தாக்கல்செய்து, இப்போது வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

''மத்திய காங்கிரஸ் அரசு செய்த மிகப்பெரும் ஊழல் 2ஜி ஸ்பெக்ட்ரம். இந்த ஊழலில் ஆ.ராசா மீது சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல்செய்து, நீதிமன்ற விசாரணை நடந்துவருகிறது. ஆனால், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள ஆ.ராசாவை, நீலகிரி வேட்பாளராக கருணாநிதி அறிவித்துள்ளார். ஊழல் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட அனுமதி கொடுத்ததை எப்படி ஏற்க முடியும்?'' என ஆ.ராசாவை மையப்படுத்தி ஜெயலலிதா கேள்விகளை எழுப்புகிறார்.

''ஊழலின் உச்சத்தில் ஊட்டி உள்ளது. ஏனென்றால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒன்றரை ஆண்டு காலம் திகார் சிறையில் இருந்தவர்தான் உங்கள் தொகுதி எம்.பி. ஆ.ராசா. அவருக்கு தி.மு.க-வில் இதே நீலகிரி தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராசாவுக்கு வாக்களித்தீர்கள் என்றால், நீலகிரி தொகுதி மக்களும் ஊழலுக்குத் துணைபோகின்றனர் என்று கூறுவார்கள்'' என்கிறார் விஜயகாந்த்.

தலைவர்களின் பிரசாரத்தின்போது ஆ.ராசா மட்டுமல்லாமல், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் சேர்ந்தே கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறார். ராசாவுக்கு மீண்டும் போட்டியிட ஏன் வாய்ப்பு அளிக்கப்பட்டது என்பதற்கு பதில் சொல்ல வேண்டிய நெருக்கடி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது இதுவரை செய்ததையும், இனி செய்யப்போவதையும் சொல்லி வாக்கு கேட்க வேண்டிய ஆ.ராசாவுக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றியே நீண்ட நேரம் விளக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. 

''என்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை. இதனை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். எனக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. அதைவிட மக்கள் மன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. நீலகிரி தொகுதி வாக்காளர்கள் அதனை நிர்ணயிப்பார்கள். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் வருமானவரித் துறையினர் எனது சகோதரர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். இதில், ஒரு பைசாகூட கிடைக்கவில்லை. இதனை சி.பி.ஐ-யே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏதும் இல்லை என நிதித் துறை செயலர், நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இப்போது இந்த வழக்கில், தீர்ப்புக் கூறும் தருணம் வந்துள்ளது. ஜெயலலிதாவைப்போல நான் வாய்தா வாங்க மாட்டேன்'' என, ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் விளக்கம் கொடுத்துவருகிறார் ஆ.ராசா. மக்கள் இன்னும் ஸ்பெக்ட்ரம் ஊழலை மறந்து விடவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

''நீலகிரியைப் பொறுத்தவரை ஊழலுக்கும் உண்மைக்கும் நடைபெறும் யுத்தம் இது. கம்சனை வதம்செய்த கண்ணனைப்போல, ஸ்பெக்ட்ரம் ஊழல் கம்சனை அம்மா அழிப்பார்'' என அ.தி.மு.க-வினர் பிரசாரத்தைத் தீவிரப்படுத்த, ''ஸ்பெக்ட்ரம் ஊழல் எல்லாம் இப்போது எடுபடாது. அதுகுறித்து மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். ஆ.ராசாவை வரவேற்க திரளும் கூட்டமே அதற்கு சாட்சி'' என்கின்றனர் தி.மு.க-வினர்.

''ஆ.ராசாவுக்குக் கூடும் கூட்டங்கள் உண்மைதான். ஆனால் அத்தனை பேரும் 'ஸ்பெக்ட்ரம் ராசா வருகிறார்...’ என்று அடைமொழி சொல்லிக்கொண்டல்லவா கூடுகிறார்கள்?'' என்று எதிர்க்கட்சிகள் கிண்டலடிக்கின்றன.

விரைவில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்போகிறது. அதற்கு முன் ராசாவின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகிறது நீலகிரி மக்களின் தீர்ப்பு!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Mar 24, 2014 6:20 pm

ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் அமைச்சரே!
பாண்டி ஆட்டத்தில் விறுவிறு

புதுவையில் கத்திரி வெயில் இப்போதே கண்கட்ட ஆரம்பித்துவிட்டது. காரணம்... அங்கே அறிவிக்கப்பட்ட மூன்று வேட்பாளர்கள். மத்திய அமைச்சர் நாராயணசாமி, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், பா.ம.க. வேட்பாளர் ஆனந்தராமன்... மூவருக்குமான இடியாப்பச் சிக்கல்தான் அங்கே அனல் பறப்பதற்குக் காரணம். ஆனாலும், முதல்வர் ரங்கசாமிக்கும் - மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையேதான் 'பாண்டி’ ஆட்டம்.

 

கட்சித் தொடங்கி என்.ஆர். காங்கிரஸ் சந்திக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் என்பதால், புதுச்சேரியை அவ்வளவு எளிதில் நாராயணசாமிக்கு விட்டுக்கொடுக்க மாட்டார் ரங்கசாமி. இதில், மத்திய அமைச்சரின் நிலைதான் கொஞ்சம் கவலைக்கிடமாக உள்ளது. அமைச்சரின் ஆதரவாளர்களிடம் பேசினோம். ''தமிழகத்துல மூத்த காங்கிரஸ் தலைவர்களே தேர்தல்ல போட்டியிடாம ஒதுங்கும்போது, புதுச்சேரியில நாராயணசாமி தெம்பா களமிறங்குறாருன்னா சும்மா கிடையாது. தமிழகத்துல எப்படியும் காங்கிரஸ் ஒரு தொகுதிகூட தேறாதுன்னு ராகுலுக்குத் தெரியும். ஆனா, புதுச்சேரியில நிச்சயமா நாராயணசாமி ஜெயிச்சிடுவார்னு உறுதியா இருக்கார். நாராயணசாமி மீண்டும் எம்.பி. ஆயிட்டா தன்னுடைய செல்வாக்கை நிரூபிச்ச மாதிரியும் இருக்கும்; அதே சமயம் தென் இந்தியாவிலே ராகுல், சோனியா குடும்பத்தினரிடையே அதிக நெருக்கம் காட்டும் தலைவராகத் தன்னை உயர்த்திக்கவும் முடியும்னு நம்புறார்'' என்றனர்.

தினமும் விடியற்காலையில் எழுந்து தேர்தல் பிரசாரத்துக்கானப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறாராம் நாராயணசாமி. கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் அவர். இந்த முறை சில ஆயிரம் வாக்கு வித்தியாசங்களே வேட்பாளரை வெற்றியடைய வைக்கும் என்பதைப் புரிந்துகொண்டு நூறு, இருநூறு வாக்குகளைக் கொண்டுள்ள அமைப்பு மற்றும் நிறுவனங்களிடம் மடி ஏந்திவருகிறார். தன்னைச் சந்திக்க வருபவர்களுக்கு உடனடியாகப் பொன்னாடை போர்த்தி அவர்களை அகமகிழவைக்கிறார்.

என்.ஆர். காங்கிரஸ் கூடாரத்தில் ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்தபோது, ஆரம்பத்தில் கட்சி தொண்டர்களிடம் ஏகப்பட்ட அதிருப்தி இருந்தது. அதனைச் சரிசெய்து பிரசாரத்தைத் தொடங்கிவைத்த ரங்கசாமி இன்னும் களத்தில் இறங்காமல் மௌனமாக உள்ளார். ''ராதாகிருஷ்ணனுக்கு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் என அனைத்துக் கட்சிகளிலும் நண்பர்கள் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆளும் என்.ஆர். காங்கிரஸுக்கு நாராயணசாமி எவ்வளவு நெருக்கடி கொடுத்தார் என்பது மக்களுக்குத் தெரியும். காங்கிரஸ் தொகுதியான ஏனாம் பகுதியில் எங்களுக்குப் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்கும். இன்னும் சில தினங்களில் ரங்கசாமியும் பிரசாரத்தில் களமிறங்குவார். அதில், நாராயணசாமி புதுச்சேரி மாநிலத்துக்கு என்னென்ன கொடுமைகளை இழைத்தார் எனப் பட்டியல் போட்டுப் பேசுவார்'' என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.   

பி.ஜே.பி. கூட்டணியில் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடும் என அறிவித்தும் பா.ம.க. வேட்பாளர் அனந்தராமன் விலகாமல் விடாப்பிடியாகப் பிரசாரம் மேற்கொண்டுவருகிறார். செல்லும் இடமெல்லாம் 'புதுவையில் நிச்சயமாக பா.ம.க போட்டியிடும்’ என்று ரங்கசாமிக்குத் தலைவலி கொடுத்துவருகிறார். இதுகுறித்து சிலர், 'அனந்தராமனால நிச்சயமா ஜெயிக்க முடியாது. அது அவருக்கே தெரியும். இருந்தாலும், ஏனோ ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுக்க நினைக்கிறார்'' என்கின்றனர்.

காமெடி நாடகங்களைப் பார்க்க புதுவை மக்கள் தயாராகி வருகின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Tue Mar 25, 2014 12:32 am

சுபிட்சத்தில் சல்லாபிக்கும் 10 தொகுதிகள்!

தேர்தலால் பலதரப்பட்ட மக்களுக்கு குறுகிய கால சுபிட்சம் ஏற்படுவது, அனைவரும் அறிந்தது தான். ஆனால், இந்த விஷயத்தில், சில தொகுதிவாசிகள் மற்றவர்களை விட பாக்கியவான்கள். அந்த தொகுதிகளில், செல்வந்தர்கள் போட்டியிட்டு செலவழிப்பதால்; அடுத்த ஒரு மாதத்திற்கு எந்த வேலையும் பார்க்காமல், வருமானம் மட்டும் பார்க்கலாம் என்ற சவுகரியமான பருவநிலை, அந்த தொகுதிவாசிகளில் பலருக்கு கிடைத்துள்ளது.

அந்த வகையில், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், கரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி மற்றும் திருநெல்வேலி தொகுதிகளில் சுபிட்ச பருவம் தொடங்கிவிட்டதாக, உளவுத் துறை போலீசார், அரசுக்கு தகவல் அளித்து வருகின்றனர்.

மத்திய சென்னை: தி.மு.க., வேட்பாளராக தயாநிதி மாறன் அறிவிக்கப் பட்டதுமே, வரப் போகும் பணத்தை நினைத்து கட்சிக்காரர்கள் மட்டுமின்றி, மற்ற கட்சி வேட்பாளர்கள் சிலரும் உற்சாகமாக இருக்க; ஆளும் கட்சி தரப்பும் 'பட்ஜெட்'ஐ அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூர்: பெரும் தொழிலதிபர்களான ஜெகத்ரட்சகனும், கே.என்.ராமச்சந்திரனும் போட்டியிடுகின்றனர். இரு பெரு கார் மேகங்கள் மோதுகையில் கொட்டும் கனமழை போல, இங்கு சுபிட்சம் கொட்டுவதாக கூறப்படுகிறது. கணக்கில்லாத கட்டுகளால், பீடா கடைகளிலும் 1,000 ரூபாய் நோட்டுகள் சர்வசாதரணமாக புழங்குவதாக தெரிகிறது. இங்கு கொத்துக் கொத்தாக வாக்காளர்களை அள்ளுவதில் தான் கட்சிக்காரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

அரக்கோணம்: இளைஞர் காங்கிரஸ் பொது செயலர் நாசே ராஜேஷ் மற்றும் தி.மு.க., வேட்பாளர் என். ஆர்.இளங்கோவும் பணபலத்திற்கு சொந்தக்காரர்கள். எனவே, தொகுதியில் பணம் பஞ்சாய் பறக்கிறதாம்.

கரூர்: அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் தம்பிதுரை, அ.தி.மு.க.,வின் செல்வம் படைத்த வேட்பாளர்களில் முன்னிலையில் உள்ளவர். கட்சி சார்பிலேயே, அனைத்து வேட்பாளர்களின், பெரும்பாலான செலவுகள் ஏற்றுக்கொள்ளப் பட்டாலும், கரூர் வேட்பாளர் கட்சிக்காரர்களை சிறப்பாக கவனிப்பதாக கூறப்படுகிறது.

தஞ்சாவூர்: மத்திய அமைச்சராக இருந்த பழனிமாணிக்கத்தை ஓரம்கட்டி, தொகுதியை வாங்கியவர், தி.மு.க., வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு. அவர் அமைச்சராக இருந்தபோது, அவருக்கு நெருக்கமாக இருந்து, பலன் அடைந்தவர்கள் பலரும், அவருக்காக தொகுதிக்குள் களமிறங்கி கலக்கி வருவதாக கூறப்படுகிறது. தஞ்சாவூர் தொகுதியில், கடந்த சில நாட்களாகவே, பணப் புழக்கம் அதிகமாக இருப்பதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரம்பலூர்: இங்கு தான் மற்ற தொகுதிகளைவிட அதிகளவில் செல்வந்தர்கள் மோதுகின்றனர். அ.தி.மு.க., வேட்பாளர் மருதராஜா, ரியல் எஸ்டேட் அதிபர். தி.மு.க., வேட்பாளர் சீமானூர் பிரபு, மணல் குவாரி அதிபர். ஐ.ஜே.கே., வேட்பாளர் பச்சமுத்து, கல்வி நிறுவன அதிபர். மூன்று தரப்பினருக்கும் இடையே கடும் போட்டி உள்ளதால், ஓட்டு விலை ஏறிவிட்டதாக கூறப்படுகிறது. 3,000 ரூபாய் கொடுக்காவிட்டால், யாரும் முகம் கொடுத்து கூட பேசுவதில்லையாம்.

சிவகங்கை: மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதால், அங்கு திறக்கப்பட்ட எண்ணற்ற ஏ.டி.எம்.,களில் ஆயிரம் ரூபாய் கேட்டால் இரண்டாயிரம் ரூபாய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தொகுதி மக்கள் உள்ளனர். மற்ற தொகுதிகளில் இருக்கும் காங்கிரசார், சிவகங்கை தொகுதிக்கு வந்து தேர்தல் வேலை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். 'காங்கிரஸ் வேட்பாளர் ஜெயிக்க, எவ்வளவு தேவையானாலும் செய்வோம்' என, காங்கிசார் ஜபர்தஸ்தாக நடந்து கொள்ள, எதிர் தரப்பான தி.மு.க.,வும் துளியும் கவலை இல்லாமல் திரிகிறது. தி.மு.க., வேட்பாளர் சுப.துரைராஜ், மணல் கான்ட்ராக்டர் ஒருவரின் ஆசி பெற்றவர் என்பது, குறிப்பிடத்தக்கது.

விருதுநகர்: இந்த தொகுதியில், ஒரு வேட்பாளர் வெற்றி குறித்து படு சீரியசாக இருப்பதால், தனக்கு சென்னையில் இருந்த ஒரு சொத்தை, பிரபல ஜவுளி நிறுவனம் ஒன்றிடம் விற்று, அந்த காசை தேர்தலுக்காக செலவழித்து வருகிறார். விருதுநகர் தி.மு.க., வேட்பாளர் ரத்தினவேலுவுக்கு, முன்னாள் தி.மு.க., அமைச்சரும், விருதுநகர் மாவட்ட செயலருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் முழு ஆதரவு இருப்பதால், தொகுதியில் காற்று நுழையமுடியாத இடங்களை தவிர, மற்ற இடங்களை எல்லாம் ரத்தினவேலு, 'கவர்' செய்துவிட்டாராம்.

தேனி: காங்கிரஸ் வேட்பாளராக ஜே.எம்.ஆரூண் போட்டியிடுகிறார். இவருக்கு பணம் ஒரு பொருட்டல்ல. வாக்காளர்களையும், மாற்றுக் கட்சியினரையும் தன் 'கவனிப்பால்' உள்ளம் கவர்ந்து தான், ஏற்கனவே இரண்டு முறை லோக்சபாவுக்கு துண்டு போட்டார். அதே பாணியிலேயே இப்போதும் தேர்தலை சந்திக்கிறார்.

திருநெல்வேலி: தி.மு.க.,வில் பெரும்பாலும் பணக்காரர்களே வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். தேர்வுக்கான நேர்காணலில், திருநெல்வேலி தி.மு.க., வேட்பாளர் தேவதாச சுந்தரம், 'எத்தனை ஆனாலும் செலவு செய்வேன்' என, சொல்லவே தான், அவருக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. அவர் சீட் வாங்கியதற்கு, மாவட்ட நிர்வாகிகள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காரணம், அவரின் 'அன்பளிப்புக்கு' கட்டுப்பட்டு, அமைதியாக வந்ததை வாங்கி வைத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்த 10 தொகுதிகளிலும், வாக்காளர்களுக்கு 'ஜாக்பாட்' அடித்து இருந்தாலும், அனைவரும் நீலகிரி தொகுதியை சற்று பொறாமையோடு தான் பார்க்கின்றனர். காரணம், இங்கு, ஸ்பெக்ட்ரம் புகழ் ராஜா, தி.மு.க., சார்பாக போட்டியிடுகிறார். எண்ணற்ற பூஜ்ஜியங்கள் கொண்ட அந்த எண்ணுக்கு சொந்தக்காரர் என, கூறப்படுகிறது அல்லவா.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by Muthumohamed on Tue Mar 25, 2014 12:50 am

      
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu Mar 27, 2014 7:29 am

தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகள் பொதுமக்களை பாதிக்கிறதா?

'தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துகிறோம்' எனக் கூறி, தேர்தல் கமிஷன், புதுப் புது கட்டுப்பாடுகளை அறிவித்து, அதை செயல் படுத்தி வருகிறது. இவற்றில், சில கடுமையான கட்டுப்பாடுகள்; இந்தக் கட்டுப்பாடுகளால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக, பல தரப்பில் இருந்தும், கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால், சிறு வியாபாரிகள், சரியான ஆவணங்களின்றி, 10 ஆயிரம் ரூபாயைக் கூட எடுத்துச் செல்லக் கூடாது என்ற, கட்டுப்பாட்டால், மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். தேர்தல் கமிஷனின் இதுபோன்ற கட்டுப்பாடுகள் குறித்து, அரசியல் பிரபலங்கள் இருவர் நடத்திய, கருத்து மோதல்கள் இங்கே:

'வாக்காளர்களுக்கு நன்மை செய்கிறோம்; சுதந்திரமான தேர்தலை நடத்துகிறோம்' என்ற பெயரில், தேர்தல் கமிஷன் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அதிக அளவில் தீமைகளைத் தான் விளைவிக்கின்றன. தேர்தல், 30 நாளில் முடிந்துவிடும் என்ற நிலையில், தேர்தல் கமிஷன் கெடுபிடிகளை செய்தால் கூட பரவாயில்லை. மூன்று மாதங்களுக்கு தேர்தலை நடத்துகிறோம் என, தேர்தல் தேதி அறிவித்து, ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, நடத்தை விதிமுறைகளை அமல் செய்வது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் செயலாகும். தேர்தல், லோக்சபாவுக்கு நடக்கிறது. அதனால், மத்திய அரசில் உள்ளவர்கள், புதிய அறிவிப்புகளை வெளியிட உரிமையில்லை என, தடுப்பது நியாயம். தமிழகம் போன்ற மாநிலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல், ஆட்சியில் இருக்கும் அதிகாரம் உள்ளது. அதுபோன்ற அரசுகளின் செயல்பாட்டை முடக்குவது நியாயமா? என, தேர்தல் கமிஷனே சிந்திக்க வேண்டும். தேர்தல் கமிஷனுக்கு, தனிப்பட்ட பணியாளர்கள் இல்லை; பாதுகாப்புக்கான காவலர்களும் இல்லை. இவை அனைத்தையும், மாநில மற்றும் மத்திய அரசுகளிடமிருந்தே பெறுகின்றனர். தேர்தல் தேதி அறிவித்த பின், ஒரு ஊழியரையோ, அதிகாரியையோ இட மாற்றம் செய்வது என்றால் கூட, தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற வேண்டும். இதனால், அரசாங்கத்தையே, தேர்தல் கமிஷன் நடத்துவது போன்ற நிலை ஏற்படுகிறது. இதனால், சாதாரணப் பணிகளைக் கூட, ஒரு அரசால் நிறைவேற்ற முடிவதில்லை. அதேநேரத்தில், பணம் கொடுத்து வாக்காளர்களிடம் ஓட்டு பெறக் கூடாது; நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்கக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளை, தேர்தல் கமிஷன் தானாகவே பெரும்பாலும் எடுப்பதில்லை. ஒரு கட்சி, மற்றொரு கட்சி மீது, கொடுக்கும் புகாரைத் தொடர்ந்து தான், புதிய புதிய உத்தரவுகளை வெளியிடுகிறது.

ஆவடி குமார், தலைமை நிலைய பேச்சாளர், அ.தி.மு.க.,

தேர்தல் கமிஷனின் நடத்தை விதிகளால், அரசு முடங்கிவிட்டது; மக்கள் பணிகள் செய்ய முடியவில்லை என, அலறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. தேர்தல் நடத்தை விதிகள், அமலில் இருக்கும் காலத்தில், மக்களுக்குத் தேவையான, அத்தியாவசியப் பொருட்கள் செல்வது தடைபடப் போவதில்லை. இத்தனை காலம், ஆட்சியில் இருந்தவர்கள் செய்யாதது எதையும், இந்த கால கட்டத்தில், செய்துவிடப் போவதுமில்லை. எனவே, தேர்தல் ஆணையத்தின் விதிகளால், ஆட்சியில் இருப்பவர்கள் அலறத் தேவையில்லை. அரசு என்பது, நிலையாக இருப்பது. எம்.எல்.ஏ., - எம்.பி., போன்றவர்கள், வந்து செல்லக் கூடியவர்கள். அதேபோல், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கும், குறிப்பிட்ட ஆண்டுகளே பதவிக் காலம். ஆனால், அரசின் ஆயுள் நிரந்தரமானது. தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் இல்லாமலும் கூட, அரசாங்கம் இயங்கும். அப்போதும், மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் செயல்பட முடியவில்லை; அதனால், மக்கள் திட்டங்களை செய்ய முடியவில்லை என்ற ஒப்பாரி எல்லாம், ஆதாயத்தின் அடிப்படையிலானது. தேர்தல் கமிஷனின் நோக்கம், சுதந்திரமான தேர்தல். எந்த தூண்டுதலும் இல்லாமல், பிரதிநிதியை தேர்வு செய்ய வேண்டும்; கள்ள ஓட்டு போடுவதைத் தடுக்க வேண்டும்; தில்லுமுல்லு இல்லாத தேர்தல் நடத்த வேண்டும் என்பதே. காலத்தின் சூழலுக்கு ஏற்ப, புதிய விதிகளை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தேர்தல் கமிஷனின், புதிய விதிகள் அமலுக்கு வரும் போது, சில மீறல்கள் இருக்கலாம். தொடர்ந்து அமல் செய்யும்போது, அந்த மீறல்கள் சீர் செய்யப்படும். எனவே, தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடுகளை, குறை சொல்வதை விட, சுய கட்டுப்பாடுகளை வகுத்து, ஜனநாயக முறையில், அரசியல் கட்சிகள் தேர்தலை சந்தித்தால், அலற வேண்டிய அவசியம் இருக்காது.

கனகராஜ், மாநில குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu Mar 27, 2014 7:32 am

பிரசார கூட்டங்களுக்கு கூடும் மக்களிடம் எழுச்சி இருக்கிறதா?

தேர்தல் என்றால், மக்களை கவருவதற்கு பலவழிகளை அரசியல் கட்சிகள் கையாளுகின்றன. அந்த வகையில் எல்லோரும் அவசியம் பின்பற்றி வரும் முறை, வாக்காளர்களை நேரடியாக சென்று ஓட்டு சேகரிப்பது. தலைவர்கள் என்றால், வாகனங்கள் மூலம் பிரசாரம் செய்வது, ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் நடத்துவது. அந்த பிரசார கூட்டங்களுக்கு கூடும் மக்கள் எழுச்சியைக் கொண்டு, ஓரளவுக்கு எந்தக் கட்சிக்கு ஆதரவு இருக்கின்றது என்பதை கணிக்க முடியும். ஆனால், இந்த தேர்தலில், தலைவர்கள் கூட்டங்களுக்கு, மக்கள் ஓரளவுக்குக் கூடினாலும், மக்கள் மத்தியில் பெரிய எழுச்சி இல்லை. இது குறித்து, இரு பிரபலங்கள் நடத்திய கருத்து மோதல்கள் இங்கே:

லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்தை துவங்கிவிட்டனர். வேட்பாளர்கள் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரசாரங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தேர்தல், நெருங்கும்போது தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் குறைவாகவே தென்படுகிறது. இந்த மனப்போக்குக்கு, பணமும், அரசியல் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள முரண்பட்ட கூட்டணியும் தான்

காரணம். தமிழகத்தின் எதிர்க்கட்சியான தே.மு.தி.க., பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இக்கூட்டணியில், பா.ம.க., - ம.தி.மு.க., போன்ற கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இக்கட்சித் தலைவர்கள், ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொண்டதாக எந்த தகவலும் இல்லை.

அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் முரண்பட்டு உள்ளன. பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தலைவர்கள், தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளை தீர்ப்பதாகவும், புதிய திட்டங்களை செயல்படுத்து வோம் என்றும், இலவச திட்டங்கள் தொடரும் எனவு ம் கூறுகின்றனர். ஆனால், இதை காதுகொடுத்தக் கேட்கும் மன நிலையில் வாக்காளர்கள் இல்லை. ஆட்சிக்கு வந்தால், சம்பாதிக்கப் போகிறார்கள். ஏற்கனவே ஆட்சிக்கு வந்தவர்கள் சம்பாதித்து விட்டனர். இருவரும் சேர்ந்து, காசு கொடுத்தால், பிரசாரத்தைப் பார்க்கப் போவோம் என்ற முடிவில் உள்ளனர். அப்படிப் போனாலும், தலைவர்கள் சொல்வதை கேட்கிறார்களா என்பது சந்தேகமே.

பிரதான கட்சிகளின் தலைவர்கள் கூட்டங்களுக்கு, ஒரு நபருக்கு, 150 ரூபாய் பணம், பிரியாணி பொட்டலம், கூட்டத்துக்கு சென்று, வர வேன் வாடகை 2,500 ரூபாய் செலவிட்டால் தான், கூட்டம் சேர்க்க முடியும்.

இதுபோல ஒரு கூட்டம் நடத்த, குறைந்தது 5 கோடி ரூபாய் வேண்டும் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு தொகுதிக்கும் கூட்டம் நடத்த ஆகும் செலவை கணக்குப் போட்டால், பணம் இருப்பவர்கள் மட்டுமே, அரசியல் நடத்த முடியும் என்ற அவல நிலைக்கு ஆளாகியுள்ளோம். எழுச்சி தானாக வர வேண்டும். அது தான் சாதனை படைக்கும்.

நல்லசாமி, தலைவர், தமிழ்நாடு கள் இயக்கம்

தமிழ்நாட்டில் எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, தேசிய கட்சிகளும், திராவிட கட்சிகளும் மெகா கூட்டணிகள் அமைக்காமல் போட்டியிடுகின்றன. பலமுனைப் போட்டி, தேர்தல் களத்தை கலக்கி வருவகிது என்பது தான் உண்மை. வாக்காளர்கள் மத்தியில், ஒவ்வொரு கட்சியும் தனித்துச் சென்று, ஓட்டுக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதனால், அரசியல் கட்சிகள் தங்களிடம் வரட்டும் பார்க்கலாம் என்ற புன்சிரிப்புடன் வாக்காளர்கள் காத்திருக்கின்றனர். அவர்களின் மவுனம், தேர்தல் களத்தில் எழுச்சி இல்லாதது போல தோற்றம் அளிக்கலாம். ஆனால், ஒட்டுப் பதிவில் அது கடுமையாக எதிரொலிக்கும். அப்போது தான், வாக்காளர்களின் எழுச்சியை உணர முடியும். கடந்த தேர்தல்களின் போது, மாநிலத்தின் சில பகுதிகளுக்கு சென்று வந்து விட்டாலே, யாருக்கு ஆதரவு என்பதை ஓரளவு கணித்துவிட முடியும். இந்த கட்சி வெற்றி பெற்றுவிடும் என சொல்லி விடுவார்கள். ஆனால், இந்தத் தேர்தலில், வாக்காளர்கள் முன், பல வாய்ப்புகள் குவிந்துள்ளன. பல புதிய கட்சிகளும் களத்தில் உள்ளன. வழக்கமாக, வாக்காளர்களின் ஒரு பகுதியினர், ஓட்டப்போட்டு என்ன ஆகப்போகுது என்ற மன நிலையில் இருப்பார்கள். அவர்கள் மத்தியில் கூட, ஒட்டுப்போட வேண்டும் என்ற உந்துதல் இந்தத் தேர்தலில் தென்படுகிறது.. பணம் மட்டுமே, தேர்தல் அரசியலை வழி நடத்துகிறது என்ற வாதத்தை முழுமையாக ஏற்க முடியாது. மொத்த வாக்காளர்களில், சொற்ப சதவிகிதத்தினர் பணத்தை எதிர்பார்க்கலாம். அனைவரும் அப்படி இல்லை. பணம் பெற்றுக்கொண்டு ஓட்டுப் போடுகிறார்கள் என்றால், கடந்த சட்டசபை தேர்தலில் தலைகீழ் திருப்பம் தமிழகத்தில் ஏற்பட்டிருக்காது. காசு வாங்கிக் கொண்டு தங்கள் விருப்பப்படி ஒட்டுப் போட்டதால் தான், இந்த திருப்பம் சாத்தியமானது. எனவே, பணத்தைக் கொட்டி, அரசியல் கட்சிகள் ஓட்டு வாங்கும் அணுகுமுறை எடுபட வாய்ப்பில்லை. பெரிய கட்சிகள், இந்த அணுகுமுறையை பரிசீலிக்கும் நிலையும், இந்தத் தேர்தலில் ஏற்படலாம்.

சுப குணராஜன், அரசியல் விமர்சகர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu Mar 27, 2014 7:36 am

100 நாளில் 10 கோடி பேருக்கு வேலை - காங்கிரஸ்

'வறுமையை ஒழிப்போம்; வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்' என, இதுவரை, 15 லோக்சபா தேர்தல்களில் உறுதி அளித்துள்ள காங்கிரஸ், 16வது லோக்சபா தேர்தலுக்காக, நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், அது போன்ற, வழக்கமான அறிவிப்புகளையே வெளியிட்டுள்ளது. 'மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நூறு நாட்களுக்குள், 10 கோடி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். அனைவருக்கும், ஓய்வூதியம், வீடு, மருத்துவ வசதி, சமூக நீதி கிடைக்கச் செய்யப்படும்' என, காங்கிரஸ் உறுதியளித்துள்ளது.

நாடு முழுவதும், 543 லோக்சபா தொகுதிகளுக்கு, அடுத்த மாதம், 7ல் துவங்கி, மே மாதம், 12ம் தேதி வரை, ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, டில்லியில் உள்ள, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின், தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

15 அம்ச திட்டம்
அறிக்கையில், குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய அம்சங்களாவன:
தொழில் துறை மற்றும் சமூக நீதி ஆகிய இரண்டும், ஒரு நாணயத்தின், இரு பக்கங்கள். சமூக நீதியை புறக்கணித்து, தொழில் துறையை மட்டும் கவனிப்பதோ அல்லது தொழில் துறையை முடக்கி, சமூக நீதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதோ, எங்கள் நோக்கமாக இருக்காது; இரண்டுக்கும், சமமான முக்கியத்துவம் அளிக்கப்படும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, 15 அம்ச திட்டம் வரையறுக்கப்படும். அதன் படி, நடுத்தர வகுப்பைச் சேர்ந்த, 80 கோடி பேரின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த, உறுதி எடுக்கப்படும்.
*அடுத்த, மூன்று ஆண்டுகளுக்குள் தற்போதுள்ள, 3 சதவீத பொருளாதார வளர்ச்சியை, 8 சதவீதம் வரை, உயர்த்த, வழி ஏற்படுத்தப்படும்.
*மக்கள் தொகையில், மூன்றில், இரண்டு பங்கு மக்களுக்கு, அவர்களின் திறன்களை வளர்த்து, சுயதொழில் புரிவதற்கு ஏற்ற வகையில், பயிற்சிகள் வழங்கப்படும்.
*ஆட்சிக்கு வந்து, நூறு நாட்களுக்குள், இளைஞர்களுக்காகவே, 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.
*கட்டமைப்புத் துறையில் மட்டும், 60 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்.
*கடந்த ஆட்சிகளில், அனைவருக்கும் உணவு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைகள் வழங்கப்பட்டு விட்டன.
*அடுத்த ஆட்சியில், அனைவருக்கும் மருத்துவ வசதி, ஓய்வூதியம், வீடு, சமூக நீதி ஆகிய, நான்கு உரிமைகளும் கிடைக்க, வழி வகை செய்யப்படும்.
*இலங்கையில், கடந்த, 2009ல் நடந்த, உள்நாட்டு

போரின் போது நிகழ்ந்த, மனித உரிமை அத்துமீறல்கள் பற்றி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், நம்பகமானவிசாரணை நடத்த வேண்டும் என, வலியுறுத்தப்படும்.இவ்வாறு, அந்த அறிக்கையில், கூறப்பட்டுள்ளது.

'ரிப்போர்ட்' கார்டு:
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, காங்கிரஸ் தான், மத்தியில் ஆட்சியில் இருந்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும், 'வறுமையை ஒழிப்போம்' என, அக்கட்சி கூறி வந்துள்ள நிலையில், நாட்டிலிருந்து வறுமை இன்னும் விலகவே இல்லை.அது போல் தான், 2009 லோக்சபா தேர்தலின் போதும், பல அறிவிப்புகளை, காங்கிரஸ் வெளியிட்டது. அவற்றில், பல, இன்னும் அறிவிப்புகளாகத் தான் உள்ளன. குறிப்பாக, '100 நாட்களுக்கு ஒருமுறை, மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள், மதிப்பீடு செய்யப்படும்' என்பன போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், ஒருமுறை கூட, அமைச்சர்களின், 'ரிப்போர்ட் கார்டு' வெளியிடப்படவில்லை.

'அம்போ'வான 2009 வாக்குறுதி
கடந்த, 2009 தேர்தலில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த அம்சங்கள் -- அவற்றின் இப்போதைய நிலை:
*நாட்டு மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்வோம் - இது வரை கிடைத்தது போல் தெரியவில்லை
*நாட்டு மக்கள் அனைவருக்கும், அடையாள அட்டை வழங்கப்படும் - அரைகுறையாக நிற்கிறது, 'ஆதார்!'
*அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வோம் - பாக்., மற்றும் சீன அத்துமீறல்கள், மத்திய அரசால் கண்டுகொள்ளப்படுவதில்லை
*அனைவருக்கும் சுகாதார வசதி ஏற்படுத்தப்படும் - கிடைக்கவே இல்லை


*அனைவருக்கும் குறைந்த விலையில் கல்வி
- ஆண்டுக்கு ஆண்டு, கல்விக்கான செலவு, விலை அதிகரித்த வண்ணமாக உள்ளது
*நாடு முழுவதும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு - இன்னமும் எழுத்தில் தான் உள்ளது
*விவசாயிகள் முன்னேற்றத்திற்கு திட்டங்கள் - விவசாயிகள் பாடு, திண்டாட்டமாக மாறிவிட்டது; பல மாநிலங்களில், நூற்றுக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்
*கிராமங்களுக்கு, 'பிராட்பேண்ட்' வசதி ஏற்படுத்தப்படும் - கம்ப்யூட்டரே இன்னும் கிடைக்கவில்லை; அதற்குப் பிறகு தான், பிராட்பேண்ட் பற்றி யோசிக்கலாம்

*சிறுதொழில்கள் காக்கப்படும் - நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது
*பொருட்கள், சேவை வரி அமல்படுத்தப்படும் - இன்னமும் எழுத்தளவில் தான் உள்ளது
*அரசில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் - இன்னும் இல்லை
*நீதிமன்ற நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் - எந்த சிறப்பு ஏற்பாடுகளும் இல்லை
*மின் உற்பத்தி அதிகரிக்கப்படும் - அதற்கான மின்வழித்தடங்கள் இல்லை.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu Mar 27, 2014 7:38 am

ஜெயலலிதாவின் சொத்து பட்டியலை வெளியிட்ட கருணாநிதி

சென்னையில் இன்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா சொத்து பற்றிய விவரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

“தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு ஒரு ரூபாய்தான் சம்பளம் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகாத அவரது வழக்கறிஞருக்கு, அவரது ஒருநாள் சம்பளமான ரூ.65000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதை கேள்விப்படும் போது ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் எவ்வளவு என்று அனைவருமே தெரிந்து கொள்ள முடியும்.

அந்த வழக்கறிஞரே அம்மையாரின் உண்மையான சொத்துக்குவிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளார். அப்பட்டியலில் ஜெயலலிதாவின் சொத்துக்களாக வாலாஜாபாத்தில் 600 ஏக்கர், சிறுதாவூரில் 25 ஏக்கரில் பங்களா, நீலாங்கரையில் 2 ஏக்கர், கோடநாட்டில் 800 ஏக்கர், காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர், கன்னியாகுமரியை சுற்றியுள்ள பகுதிகளில் 1190 ஏக்கர் ஸ்ரீவைகுண்டத்தில் 200 ஏக்கர், மற்றும் ஹைதராபாத்தில் 200 ஏக்கரில் தோட்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஆனால் ஜெயலலிதாவோ தன்னை ஒன்றுமில்லாத ஏழை எனவும் பச்சைக்குழந்தை போலவும் தன்னை கருதி பிரச்சாரம் செய்து வருவகிறார்” என்று கருணாநிதி பேசினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu Mar 27, 2014 7:40 am

இலங்கை போர்க் குற்றங்கள் மீது விசாரணை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உறுதி

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இலங்கை போர்க் குற்றங்கள் மீது முழுமையான விசாரணை நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அக்கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்ற நிலையில், காங்கிரஸின் இந்த வாக்குறுதி முக்கியத்துவம் பெறுகிறது.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டனர்.

அதில், "விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவம் புரிந்த போர்க் குற்றங்கள் மீது மற்ற நாடுகளுடன் இணைந்து நேர்மையான, முழுமையான, விரைவான விசாரணை நடத்துவது உறுதி செய்யப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், "இலங்கை அரசுடன் இணைந்து தமிழ் பேசும் மக்களுக்கும், மற்ற சிறுபான்மையினருக்கும் சட்டரீதியாக சம உரிமை வழங்குவது உறுதி செய்யப்படும். தமிழர்கள் அதிகம் இருக்கும் வடக்கு மாகாணத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டு தன்னிச்சையான மாகாணங்களாக உருவாக முயற்சிகள் எடுக்கப்படும். இலங்கைத் தமிழர்கள் மற்றும் இதர சிறுபான்மையினர் தங்களது வாழ்வை முறையாக மறுசீரமைத்துக் கொள்ளத் தேவையான உதவிகளை காங்கிரஸ் கட்சி செய்யும்' என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் கட்சிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக, கடந்த இரண்டு வருடங்களாக ஐ.நா-வில் இலங்கைக்கு எதிராகவே மத்தியில் ஆளும் காங்கிரஸ் அணி வாக்களித்து வருகிறது.

இந்தத் தேர்தல் அறிக்கையும், தொடர்ந்து ராஜபக்சேவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.

வலுவான, ஆரோக்கியமான வெளியுறவுக் கொள்கைகளை அமல்படுத்தவதோடு, அண்டை நாடுகளுடன் நிலையான, அமைதியான, பரஸ்பரமான உறவை மேம்படுத்தவும் காங்கிரஸ் கட்சி உறுதி கொண்டுள்ளதாக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக சென்ற வருடம் மார்ச் மாதம் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu Mar 27, 2014 7:42 am

காங்கிரஸ் ஏற்படுத்திய சேதத்தை மீட்க 60 மாதங்களை தாருங்கள்: மோடி

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சிக்கு எதிரான மன நிலையை திரட்டும் முயற்சியாக பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஹிராநகர் பிரச்சாரத்தில் பேசியதாவது:-

கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ஏற்படுத்திய சேதத்தை மீட்க 60 மாதங்களை எனக்கு தாருங்கள்.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகள் கடந்த 60 ஆண்டுகளாக நாட்டை அழித்துவிட்டன. காங்கிரசால் ஏற்பட்ட அழிவிலிருந்தும், சேதத்திலிருந்தும் நாட்டை மீட்டு கொண்டு வர என்னால் முடியும். எனக்கு வாய்ப்பு தாருங்கள். இது பதவியில் அமர்வதற்கான நேரம் மட்டும் அல்ல நாட்டிற்கான பாதுகாவலராக மாற வேண்டிய நேரமாக நான் கருதுகிறேன்.

இந்த நாட்டிற்கு நல்ல பாதுகாவலர் தேவை. எனவே 60 மாதங்களை எனக்கு தாருங்கள். 60 ஆண்டுகளாக ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இப்போது 60 மாதங்களுக்கு இந்த நாட்டிற்கு சேவை செய்யும் சேவகனை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு ஆட்சியாளன் வேண்டுமா? சேவகன் வேண்டுமா? ஆட்சியாளர்களிடமிருந்து இந்த நாட்டை காப்பாற்றுங்கள்.

காஷ்மீர் மக்களிடம் வாஜ்பாய் நம்பிக்கையை ஏற்படுத்தினார். வாஜ்பாய்க்கு இன்னும் 5 ஆண்டுகளை அளித்திருந்தால் காஷ்மீரின் முகம் வேறு மாதிரி இருந்திருக்கும். அவர் முடிக்காத பணிகளை நாம் நிறைவேற்றுவோம். காஷ்மீரில் மனிதநேய கொடியை பறக்க விடுவோம்.

குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு எதிரி. நாம் இந்த நாட்டை அதிலிருந்து விடுவிக்க வேண்டும்.

மாற்றத்திற்கான அலைகள் காஷ்மீரில் வீசுகின்றன. ஜம்மு காஷ்மீர் மக்கள் பா.ஜ.க. வேட்பாளர்களை வெற்றியாளர்களாக டெல்லிக்கு அனுப்புவார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by ayyasamy ram on Thu Mar 27, 2014 8:18 am


-

நம்ம நாட்டு

அரசியல்வாதிகளின் பேச்சையெல்லாம்

நாம் இப்படித்தான் எடுத்து கொள்ளவேண்டும்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Fri Mar 28, 2014 9:16 am

வி.ஐ.பி. தொகுதி அந்தஸ்தை இழக்கிறது சிவகங்கை

1980-க்குப் பிறகு முதல்முறையாக ப.சிதம்பரம் இல்லாத தேர்தலை சந்திக்கிறது சிவகங்கை தேர்தல் களம். இதனால் 30 ஆண்டுகளாக தக்கவைத்திருந்த வி.ஐ.பி. தொகுதி என்ற அந்தஸ்தை இழக்கிறது சிவகங்கை சீமை.

சிவகங்கையில் தொடர்ந்து 8 முறை போட்டியிட்டு 7 முறை வெற்றிபெற்று 23 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அமைச்சராகவும் வலம் வந்தவர் ப.சிதம்பரம். 1984-ல் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தல் களத் துக்கு வந்த சிதம்பரம், திமுக வேட்பாளர் தா.கிருட்டிணனை தோற்கடித்து நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தவர், அடுத்த 10 மாதங்களில் பணியாளர் நலன் மற்றும் மக்கள் குறைதீர்ப்பு துறை அமைச்சரானார். அடுத்த சில மாதங்களில் உள்துறை இணை அமைச்சரானார்.

1989-ல் மீண்டும் அதே கூட்டணியில் போட்டியிட்டு தி.மு.க-வின் ஆ.கணேசனை வீழ்த்தி எம்.பி. ஆனார். 1991-ல் அதிமுக கூட்டணியில் திமுக-வின் காசிநாதனை வென்ற சிதம்பரத் துக்கு தனிப் பொறுப்புடன் கூடிய வர்த்தக அமைச்சர் பதவி தரப்பட்டது. ஆனால், இடை யில் ஃபேர் குரோத் ஊழல் சர்ச்சையில் சிக்கியதால் பதவி விலகியவர், ஒன்றரை வருடங்கள் கழித்து மீண்டும் வர்த்தக அமைச் சரானார்.

1996-ல் தமாகா - திமுக கூட்டணியில் போட்டியிட்டு காங்கிரஸின் கௌரிசங்கரை வீழ்த்தினார். அந்தத் தேர்தலில் சிதம்பரத்தின் வாக்கு வித்தியாசம் மட்டுமே 2,47,302 ஓட்டுகள். அப்போது ஐ.கே. குஜ்ரால் அமைச்சரவையில் இரண்டாண்டு காலம் நிதியமைச்சராக இருந்தார்.

1998-ல் மீண்டும் தமாகா - காங்கிரஸ் கூட்டணியில் போட்டி யிட்டு அதிமுக-வின் காளிமுத்துவை வீழ்த்தினார் சிதம்பரம். 1999-ல் தமாகா- விடுதலைச் சிறுத்தை கள் கூட்டணியில் போட்டியிட்டு காங்கிரஸின் சுதர்சன நாச்சியப் பனிடம் தோற்றார்.

அப்போது சிதம்பரத்துக்கு கிடைத்த ஓட்டுகள் சுமார் 1.26 லட்சம். இடையில், மூப்பனாருடன் முறைத்துக் கொண்டு 2001 சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை தொடங்கி, திமுக-வுடன் கூட்டணி வைத்தார் சிதம்பரம்.

அந்தத் தேர்தலில் அவரது கட்சிக்கு புரசைவாக்கம், காட்டு மன்னார் கோவில் தொகுதி களை ஒதுக்கியது திமுக. இரண்டி லுமே சிதம்பரம் கட்சி வேட்பாளர் களான புரசை ரங்கநாதன், வள்ளல் பெருமான் வெற்றி பெற்றனர். தொடர்ந்து தனது கட்சியை நடத்திவந்த சிதம்பரம், 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஓசைப்படாமல் தான் மட்டும் காங்கிரஸில் ஐக்கியமாகி கை சின்ன வேட்பாளரானார். அந்தத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நின்று அதிமுக வேட் பாளர் கருப்பையாவை வீழ்த்தி நிதியமைச்சராகவும் வந்தார்.

மூன்றரை ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்தவர், மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, நிதியை பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைத்துவிட்டு, உள்துறைக்கு அமைச்சரானார். 2009-ல் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் அதிமுக-வின் ராஜகண்ணப்பனிடம் போராடி 3,354 ஓட்டு வித்தியாசத்தில் தொகுதியை தக்கவைத்த சிதம்பரம், மீண்டும் நிதியமைச்சரானார்.

இந்தத் தேர்தலில் ப.சிதம்பரம் தனது தேர்தல் பயணத்தை நிறுத்திக் கொண்டு, ’’நானே நிற்பதாக நினைத்து கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்’’ என்று மகனுக்காக வாக்கு கேட்டு வருகிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Fri Mar 28, 2014 9:38 am

சென்னையை திமுக, அதிமுக சீரழித்து விட்டன: விஜயகாந்த் குற்றச்சாட்டு!

காஞ்சிபுரம்: சென்னையை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கழகங்களும் சீரழித்து விட்டன என விஜயகாந்த் கூறினார்.

மத்திய சென்னையில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அண்ணாநகரில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், ''சென்னை நகர் குப்பைகளும், கொசுக்களும் நிறைந்து காணப்படுகிறது. சென்னை நகர் முழுவதும் சுகாதார சீர்கேடுகள் நிலவுகிறது.

சிங்கார சென்னை, சீர்மிகு சென்னை எனக்கூறி 2 கழகங்களும் சென்னையை சீரழித்து விட்டன. ஆண்டாண்டு காலமாக சென்னை நகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை போக்குவதற்காக திட்டங்கள் எதுவும் இதுவரை கொண்டு வரவில்லை'' என்றார்.

காஞ்சிபுரம் பிரசாரம்

முன்னதாக, பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்துள்ள ம.தி.மு.க. சார்பில் காஞ்சிபுரத்தில் போட்டியிடும் வேட்பாளர் மல்லை சத்யாவை ஆதரித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ''காஞ்சிபுரத்தின் நீராதாரங்களை பெருக்க எவ்வளவோ வழிகள் இருக்கிறது. ஆனால், ஆண்ட, ஆளும் கட்சிகள் இதுவரை எதுவும் செய்யவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்களை துர்வார அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

அதேபோல், பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி நீர் ஆதாரங்களையும் பலப்படுத்தவில்லை. எனவே, தமிழகம் வளம் பெற நரேந்திர மோடி பிரதமராக வேண்டும். எனவே, பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்'' என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Fri Mar 28, 2014 11:43 am

”மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன்” காங்கிரஸ் வேட்பாளர் பேச்சால் சர்ச்சை


காங்கிரஸ் கட்சியின் சகாரான்பூர் தொகுதி வேட்பாளர், பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில், சகாரான்பூர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மஸூத் பேசிய ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், அவர், நரேந்திர மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நேற்று வெளியாகியுள்ள இந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது:- உத்தர பிரதேசம் ஒன்றும் குஜராத் அல்ல. குஜராத்தில் வெறும் 4 சதவீத மூஸ்லிம் மக்களே உள்ளனர். ஆனால் இங்கு 22 சதவீத முஸ்லீம் மக்கள் உள்ளனர். நான் நரேந்திர மோடிக்கு எதிராக போராட உள்ளேன். ஏனெனில் அவருக்கு பொருத்தமான பதிலடி கொடுப்பது எவ்வாறு என்று எனக்கு தெரியும். நாங்கள் அவரை துண்டு துண்டாக வெட்டுவோம் .இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த பேச்சு குறித்து அங்குள்ள செய்தித்தாள் ஒன்றிற்கு மசூத் அளித்த விளக்கத்தில், இது பழைய அறிக்கையாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும், இது போன்று சிலவற்றை நான் கூறியிருந்தால் ஜனாநாயக முறையில் மோடிக்கு கற்பிக்க வேண்டும் என்ற அர்த்ததில் தான் கூறியிருப்பேன் என்று தெரிவித்தாக செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மறுத்த அவர், குஜராத்தில் நடைபெற்ற குற்ற செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே நான் மனிப்பு கேட்க தயாராக இருப்பதக தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

ஓட்டுக்கு பணம் தருவது பற்றி தகவல் கொடுத்தால் பரிசு; வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல்

Post by soplangi on Fri Mar 28, 2014 12:45 pmவாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக கொண்டு செல்லப்படும் நபர்கள் மற்றும் பணம் குறித்து தகவல் தருபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து வருமானவரித்துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி, வருமானவரித்துறையின் புலனாய்வுதுறை இயக்குனர் ஜெனரல் டி.ஜெயசங்கர் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

கட்டுப்பாட்டு அறை

பாராளுமன்ற தேர்தல் உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்தப்படுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு வருமானவரித்துறை சில வழிமுறைகளை வகுத்து உதவி செய்து வருகிறது.

இதன் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓட்டு போடுவதற்காக வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணம் கொண்டு செல்லப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 19–ந்தேதி ரூ.51 லட்சமும், சென்னை விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் மதிப்பிலான தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து விமானநிலையங்கள், முக்கிய ரெயில் நிலையங்கள், ஹோட்டல், பண்ணை வீடுகள், ஹவாலா ஏஜென்சிகள், பண புரோக்கர்கள், கூரியரில் வரும் பணம், அடகுகடைகள் மற்றும் பல்வேறு சந்தேகப்படும் ஏஜென்சிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாரம் 7 நாளும் 24 மணிநேரம் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது.

தகவல் தரலாம்

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் வருமானவரித்துறை அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக பணம் கொண்டு செல்பவர்கள் குறித்து முறையாக தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவர்கள் பெயர், முகவரிகள் ரகசியமாக வைக்கப்படும். வருமானவரி சட்டத்தின் கீழ் தகவல் தருபவர்களுக்கு உரிய பரிசும் வழங்கப்படும்.

தகவல் தருபவர்கள் கட்டணம் இல்லாத தொலைபேசி எண் 1800 425 6669 என்ற எண்ணிலும், பேக்ஸ் எண் 044– 282 536 59 மற்றும் இ.மெயில் itcontrolroomchennai@gmail.com என்ற முகவரியிலும் தகவல் தரலாம்.

ஆவணங்கள் துணை

முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பொறுத்தவரை தேர்தல் நடத்தை விதிகளின்படியோ அல்லது வருமானவரி சட்டத்தின்படியோ நடவடிக்கை எடுக்கப்படும்.

வியாபாரிகள், தங்க விற்பனையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் விற்பனை ரசீது போன்ற தகுந்த ஆவணங்களின் துணையுடன் பணத்தை கொண்டு செல்வதில் எந்த தடங்கலும் இல்லை. கணக்கில் வராத பணத்தை பிடிக்கவே வருமானவரித்துறை ஈடுபட்டுள்ளது.

கடுமையான நடவடிக்கை

நடப்பாண்டுக்கான வருமானவரி படிவம் வரும் 31–ந்தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்காக வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் வங்கி மற்றும் வருமானவரித்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. வருமானவரி கட்டாதவர்களுக்கு இது கடைசி வாய்ப்பாகும். அதிக மதிப்புடைய பொருள்கள் வாங்குவது, அதிக பணம் சேமிப்பு கணக்கில் செலுத்துவது, ரூ.5 லட்சத்திற்கு மேல் தங்கம் வாங்குபவர்கள், ரூ.30 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்பவர்கள் குறித்து பதிவுதுறை மற்றும் வங்கியிலிருந்து வருமானவரித்துறைக்கு தகவல் வந்துவிடும்.

எனவே வரி செலுத்துபவர்கள் முறையாக வரி செலுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். தவறுபவர்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்ப உள்ளது. அதற்கு பிறகு நடவடிக்கை கடுமையாகவே இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

உடன் வருமானவரித்துறை மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

-- dinathanthi
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by positivekarthick on Fri Mar 28, 2014 1:55 pm

நாடு குட்டி சுவராகி ரொம்ப நாள் ஆகி விட்டது .படித்தவன் நாட்டை ஆளாமல் படிக்காத பக்கிகள் நாட்டை ஆண்டால் என்ன ஆகும் என்பதை இப்போது வரை பார்த்து விட்டோம் . தெரியாமல் தான் கேட்கிறேன் .நாமெல்லாம் ஆட்டு மந்தைகளாக இப்படியே தான் இருப்போமா இல்லை விழித்து கொள்வோமா ?என்றைக்கு நம் எல்லாம் சுயநலத்தை ஒழித்து நாட்டை நேசிக்கிறோமோ அன்றைக்கு தான் இந்தியா முன்னேறும் .அதுவரை .......................................
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Fri Mar 28, 2014 10:05 pm


ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு நூதனமாக பணம் பட்டுவாடா

தேர்தல் பிரசாரத்தின் போது, வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு, அரசியல் கட்சியினர், தேர்தல் கமிஷனின் கிடுக்கிப்பிடிக்கு பயந்து, நூதன முறையில், பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதை தடுக்க, தேர்தல் கமிஷன் சார்பில், சட்டசபை தொகுதிக்கு மூன்று பறக்கும் படை மற்றும் மூன்று கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். ஆனாலும், அதிகாரிகளால், அனைத்து பகுதிகளையும், கண்காணிக்க முடியாது என்பதால், பொதுமக்கள் யாரேனும் வாக்காளர்களுக்கு, பணம் அல்லது பரிசுப் பொருள் கொடுத்தால், அதை போட்டோ அல்லது வீடியோ எடுத்து, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இது, அரசியல் கட்சியினரிடம், கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாக தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளர்களை, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பர். ஆரத்தி தட்டில், வேட்பாளர் பணம் போடுவார். இதனால், ஆரத்தி எடுக்க, பெண்கள் இடையே, போட்டி உருவாகும்.

தற்போது, ஆரத்தி தட்டில், பணம் போட்டால், தேர்தல் விதி மீறலாகும். அதை யாரேனும் போட்டோ எடுத்து விடுவார்களோ என்ற பயத்தில், வேட்பாளர்கள் ஆரத்தி தட்டில், பணம் போடுவதில்லை. ஆனால், ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு, வேட்பாளர் அங்கிருந்து அகன்றதும், உடன் வரும் கட்சி நிர்வாகிகள், வேட்பாளருக்கு ஓட்டு போடக்கோரி அச்சிடப்பட்ட, துண்டுப்பிரசுரம் உள்ளே, பணம் வைத்து, பெண்களுக்கு வழங்குகின்றனர். பணம் கொடுக்காதவர்களிடம், சாதாரணமாக துண்டு பிரசுரத்தை வழங்குகின்றனர். ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு, துண்டு பிரசுரத்தை மடித்து, அவர்கள் கையில், திணித்துவிட்டு சமிக்ஞை காட்டி செல்கின்றனர். தேர்தல் கமிஷன், எத்தனை கிடுக்கிப்பிடி போட்டாலும், எங்களை தடுக்க முடியாது என, கூறுவது போல், அரசியல் கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். இதனால், வேட்பாளர்களுக்கு ஆரத்தி வரவேற்பு தொடர்கிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Fri Mar 28, 2014 10:30 pm

மோடியை ஆதரித்து வருபவர்கள் மீது சாணியை கரைத்து வீசுவோம் - சேலத்தில் முஸ்லிம்கள் கொந்தளிப்பு!

சேலத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா மசூதியின் வாசலில் தே.மு.தி.க வேட்பாளர் சுதீஷ் துண்டறிக்கைகளை கொடுத்து வாக்கு சேகரித்தார். அப்போது பள்ளிவாசலில் தொழுகையை முடித்து வந்த பெறும் திரளான இஸ்லாமியர்கள் ‘எங்கள் இனத்தை கொத்து கொத்தாக குஜராத்தில் கொன்று குவித்தது பா.ஜ.க கட்சி மோடி. அவரை ஆதரித்து நீங்கள் இங்கேயே பிரச்சாரம் செய்யலாமா?’ என்று கொந்தளித்தனர்.

இந்நிலையில் அங்கே தி.மு.க வேட்பாளர் உமாராணி செல்வராஜூம் வாக்கு சேகரிக்க வந்த நிலையில் தி.மு.க வினர் தங்களை தாக்கி விட்டதாக பேச ஆரம்பித்தனர் தே.மு.தி.க.வினர். இந்த தகவலால் இருதரப்பும் மோதிக்கொண்டனர். காவல்துறை தலையிட்டும் பிரச்சனை அடங்கவில்லை. அதன் பின்னும் இஸ்லாமியர்கள் தே.மு.தி.க விற்கு எதிராக கோசமிட அங்கிருந்து வாக்கு சேகரிக்காமலேயே கிளம்பினார் சுதீஷ்.

நாம் அங்கே திரண்டு இருந்த இஸ்லாமியர்களிடம் பேசினோம். த.மு.மு.க வை சேர்ந்த இப்ராகிம் கூறும்போது , ‘எங்கள் இஸ்லாமிய இனத்தை குஜராத்தில் கொன்று குவித்த கட்சி பா.ஜ.க மோடி. அந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்துகொண்டு எந்த தைரியத்தில் இங்கு பள்ளிவாசல் முன்பு வந்து ‘மோடியை பிரதமராக்குங்கள்’ என்று வாக்கு கேட்கலாம்? இனியும் இவ்வாறு பள்ளிவாசல் முன்பு வந்து அவர்கள் வாக்கு கேட்டால் சாணியை கரைத்து மூஞ்சில் ஊற்றுவோம்’ என்றார் ஆக்ரோஷமாய்.

காவல்துறையோ ‘தே.மு.தி.க –தி.மு.க இரண்டு கட்சிகளுக்குமே இங்கு பள்ளிவாசல் முன்பு வந்து வாக்கு சேகரிக்க அனுமதி தரவில்லை.மீறி வந்துள்ளனர்’ என்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Sun Mar 30, 2014 1:09 am

பா.ஜ.க.வில் இருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கம்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான பார்மரில் போட்டியிட விரும்பிய பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்குக்கு, வாய்ப்பளிக்க கட்சியின் தலைமை மறுத்து விட்டது. மாறாக, சமீபத்தில் காங்கிரசில் இருந்து அந்த கட்சிக்கு தாவிய கர்னல் சோனாராம் சவுத்ரிக்கு டிக்கெட் வழங்கப்பட்டது.

தலைமையின் இந்த நடவடிக்கை கட்சியின் மூத்த தலைவர் அத்வானியின் தீவிர ஆதரவாளர் என கருதப்படுகிற ஜஸ்வந்த் சிங்குக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை எதிர்த்து பார்மர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக ஜஸ்வந்த் சிங் அறிவித்தார்.

இதனையடுத்து, கடந்த திங்கட்கிழமை தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்ற அவர், பூர்த்தி செய்யப்பட்ட தனது வேட்பு மனுவினை பார்மர் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.

அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்திய பா.ஜ.க.தலைமை, தலைவர் ராஜ்நாத் சிங்கின் முடிவையடுத்து, அடுத்த 6 ஆண்டுகளுக்கு ஜஸ்வந்த் சிங்கை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதே போல், கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய வகையில், பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து ராஜஸ்தானின் சிகார் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி சுபாஷ் ம்ஹாரியாவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக பா.ஜ.க. தலைமை அறிவித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Sun Mar 30, 2014 1:09 am

மோடி பிரதமரானால் இனக்கலவரம் உருவாகும்: மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று ஒரு கூட்டத்தில் பேசுகையில் "மக்களவை தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெற்றி பெற்றால் குஜராத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தை போன்று இந்தியா முழுவதும் கலவரம் வெடிக்கும்" என்று தெரிவித்தார்.

"மத்தியில் மோடி ஆட்சி செய்தால் இனக்கலவரத்தின் தூண்டுகோலாக அமையும். நாட்டில் மதக்கலவரங்களும் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களும் நடைபெற வாய்ப்பு அதிகம். எனவே மக்கள் அனைவரும் வரும் தேர்தலில் மோடியை வெற்றி பெற விடக்கூடாது" என்றும் மாயாவதி கேட்டுக்கொண்டார்.

கறுப்பு பணம் பற்றி பேசிய மாயாவதி, ஆட்சிக்கு வந்தால் கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வருவதாக கூறிவரும் பா.ஜ.க., ஆறு ஆண்டு காலத்தில் இது குறித்து அக்கட்சி நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் கேள்வியெழுப்பினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Sun Mar 30, 2014 1:11 am

வாரணாசியில் மோடிக்கு எதிராக உள்ளூர் வேட்பாளர்: காங்கிரஸ்

லோக் சபா தேர்தலில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். மோடிக்கு எதிராக மூத்த தலைவர்கள் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி நரேந்திர மோடிக்கு எதிராக வலிமைமிக்க உள்ளூர் வேட்பாளர்களை போட்டியிட முடிவு செய்துள்ளது. அதன்படி ராஜேஷ் மிஸ்ரா மற்றும் அஜய் ராஜா ஆகிய இரண்டு உள்ளூர் போட்டியாளர்கள் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

முன்னதாக நரேந்திர மோடி போட்டியிடும் இரண்டாவது தொகுதியான வதோதராவில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் மதுசூதனன் மிஸ்திரி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Sun Mar 30, 2014 1:13 am


'விவசாயிகளை கொல்வோம்' என்பதுதான் காங்கிரஸின் கொள்கை: மோடி கடும் தாக்கு!

பக்பத்: நாட்டின் முதுகெலும்பான ராணுவத்திற்கும், விவசாயத்திற்கும் மத்திய காங்கிரஸ் அரசு எந்த நன்மையும் செய்யவில்லை என்றும், "ராணுவ வீரர்களை கொல்வோம்...விவசாயிகளை கொல்வோம் ( மார் ஜவான் மார் கிஸான்) " என்பதில்தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதேபோல் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேசம், பக்பத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ''1957ஆம் அண்டு இந்தியாவில் நடந்த முதல் போராட்டம் ஆங்கிலேயே ஆட்சிக்கு முற்று புள்ளி வைப்பதற்காக நடத்தப்பட்டது. அது முதல் இந்திய சுதந்திர போராட்டம் ஆகும். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய மக்கள் நடத்திய போராட்டம் தான் சுயராஜ் போராட்டம். இந்த சுயராஜ் போராட்டத்தை தற்போது காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து மக்கள் நடத்தி வருகிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சியில், நாட்டின் முதுகெலும்புகளான ராணுவத்திற்கும், விவசாயத்திற்கும் எந்த ஒரு நன்மையும் செய்யப்படவில்லை. இந்த ஆட்சியில் விவசாயிகள் தற்கொலைதான் அதிகமாக நடந்து உள்ளது.

அதேபோல், நமது எல்லையில் பல ராணுவ வீரர்களை நாம் இழந்துள்ளோம். இந்திய ராணுவ வீரர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் நமது வீரர்கள் இன்றுவரை சண்டை போட்டு வருகிறார்கள். இதற்கு பாகிஸ்தான் ராணுவம்தான் காரணம்.

மறைந்த நம் தலைவர் லால் பகதூர் சாஸ்திரி " ராணுவ வீரர்களை போற்றுவோம்...விவசாயிகளை போற்றுவோம்( ஜெய் ஜவான் ஜெய் கிஸான்)" என்றார். ஆனால் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசோ, "ராணுவ வீரர்களை கொல்வோம்...விவசாயிகளை கொல்வோம் ( மார் ஜவான் மார் கிஸான்) " என்ற கொள்கையை கொண்டுள்ளது.

எனவே, தற்போது காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக சுயராஜ் போராட்டத்தை மக்கள் நடத்தி வருகின்றனர். 2014 பா.ஜ.க. ஆண்டு. இந்த ஆண்டில் மத்திய ஆட்சியில் தாமரை சின்னம் தான் ஆட்சி அமைக்கும்'' என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Sun Mar 30, 2014 10:00 pm

அழிந்தனர் துதிபாடிகள்: ஜஸ்வந்த் கடும் விரக்தி

ஜெய்சல்மார் : ''மிகச் சிறந்தவர்கள் என, தனிநபர் துதி பாடப்பட்டவர்கள் பலரும், காணாமல் போய் விட்டனர்; அவர்கள் நினைவிடங்கள் மட்டுமே உள்ளன,'' என, பா.ஜ.,விலிருந்து நீக்கப்பட்ட, ஜஸ்வந்த் சிங், விரக்தியுடன் கூறியுள்ளார்.

பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர், ஜஸ்வந்த் சிங், லோக்சபா தேர்தலில், ராஜஸ்தான் மாநிலம், பார்மர் தொகுதியில் போட்டியிட விரும்பினார். பா.ஜ., மேலிடம், அவருக்கு, 'சீட்' கொடுக்காததால், சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் அவர், பா.ஜ.,விலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மாரில், அவர் அளித்த பேட்டி:எந்த ஒரு கட்சியிலும், தனிப்பட்ட ஒருவருக்கு முக்கியத்துவம் அளிப்பது சரியான நடைமுறை அல்ல. அதுவும், பா.ஜ., போன்ற கட்சிக்கு, இது அழகல்ல. பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் எடுக்கும் தவறான முடிவுகள், கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். பல நாடுகளில், குறிப்பிட்ட ஒரு தரப்பினரால், 'மிகச் சிறந்தவர்கள்' என, யாரையாவது ஒருவரை துாக்கி பிடித்து துதி பாடுவர். அப்படிப்பட்டவர்கள் காணாமல் போய் விட்டனர். அவர்களின் நினைவிடங்கள் தான், உலகம் முழுவதும் நிறைந்து காணப்படுகின்றன. இதை, நான் கூறவில்லை. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு அறிஞர் கூறியுள்ளார்.பா,ஜ.,வில் மூத்த தலைவர்கள் ஓரம்கட்டப்படுகின்றனர். இது, கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக, வீழ்ச்சிப் பாதைக்கு தான் கொண்டு செல்லும்.இவ்வாறு, அவர் கூறினார்.

பார்மர் தொகுதி அமைந்துள்ள ராஜஸ்தான் மாநிலத்தில், 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன; அடுத்த மாதம், 17 மற்றும் 24ல் தேர்தல் நடக்கிறது. ஜஸ்வந்த் சுயேட்சையாக போட்டியிடும் பார்மர் தொகுதிக்கு, அடுத்த மாதம் 1ல், தேர்தல் நடக்க உள்ளது. இங்கு, ஜஸ்வந்தை எதிர்த்து, பா.ஜ., சார்பில், சோனா ராம் நிறுத்தப்பட்டுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Sun Mar 30, 2014 10:02 pm

உங்கள் தாயார் மீது நம்பிக்கையில்லையா? ராகுலுக்கு மோடி கேள்வி

பிஜாபூர் : குஜராத் மாநிலம் வளர்ச்சியில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது என்ற காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையிலான ராஜிவ் அறக்கட்டளை கூறியுள்ளதில் ராகுலுக்கு நம்பிக்கையில்லையா என பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொதுக்கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், பா.ஜ., என்ற பலூன், குஜராத் வளர்ச்சி என்ற பலூன் வெடித்து சிதறும் என கூறியிருந்தார். இதற்கு பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார். கர்நாடக மாநிலம் பிஜாபூரில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு மோடி பேசினார்.

இந்த பேரணியில் மோடி பேசியதாவது : குஜராத் வளர்ச்சி என்பது பலூன் போன்றது என ராகுல் கருதினால், உங்கள் தாயார் மீது உங்களுக்கு நம்பிக்கையில்லையா என கேள்வி கேட்க விரும்புகிறேன். குஜராத் வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ளது என சோனியா தலைமையிலான ராஜிவ் அறக்கட்டளை அறிவித்துள்ளது. பலூன் பற்றி சோனியா பேசுவாரா? பலூன் பற்றிய அறிக்கையை சோனியா வெளியிடுவாரா? குஜராத் மக்கள் காங்கிரஸ் தலைவர்களையும், அவர்களின் பொய்யான வாக்குறுதிகள் அடங்கிய பலூனையும் கடந்த மூன்று சட்டசபை தேர்தல்களில் நிராகரித்துள்ளனர் என கூறினார்.

ராகுல் குஜராத்தை பற்றியே பேசுகிறார். தற்போது நடைபெறும் தேர்தல் குஜராத் அரசை தேர்ந்தெடுக்க நடக்கிறதா? குஜராத் முதல்வரை தேர்வு செய்ய நடைபெறுகிறதா? என கேள்வி எழுப்பிய மோடி, தற்போது நடைபெறும் தேர்தல் பிரதமரை தேர்வு செய்ய நடைபெறுகிறது. டில்லியில் மத்திய அரசை அமைக்கதேர்தல் நடைபெறுகிறது. எனவே மத்திய ஆட்சி பற்றி விவாதம் நடத்தப்பட வேண்டும். கடந்த 10 ஆண்டில் என்ன சாதனை செய்தீர்கள் என்பதை காங்கிரஸ் விளக்க வேண்டும் என கூறினார்.

ராகுலும், உங்கள் கட்சி தலைவர்கள் மற்றும் உங்கள் கட்சியை முதல்வர்கள் 18 பேரும், கடந்த 2002ம் ஆண்டு வந்தீர்கள். நிறைய பொய்கள் அடங்கிய பலூனை பறக்க விட்டீர்கள். ஆனால் மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த 2007 மற்றும் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதமும் இதே தான் நடந்தது. உங்கள் பொய்களை மக்கள் நம்பவில்லை. குஜராத் மக்கள் வளர்ச்சியை நம்புகிறார்கள். இதனால் அவர்கள் பா.ஜ.,வை தேர்வு செய்துள்ளனர் என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புகளை விட, வாஜ்பாய் ஆட்சியில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் இரட்டைஇலக்கத்தில் தொகுதிகளை பெற முடியாது. ஒரு சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றியே பெறாது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மக்களிடம் ஒரே மாதிரியான எண்ணம் உள்ளது என கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum