ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Go down

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Wed Feb 19, 2014 11:21 pm

First topic message reminder :


 பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்?

தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது.

இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.  பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே வரும் 3-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Apr 28, 2014 3:55 am

தமிழக பாஜக தலைவர்கள் வதோரா, வாரணாசி, அமேதி பயணம்

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி மற்றும் வதோதரா தொகுதிகளில் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தமிழக பாஜக தலைவர்கள் செல்கிறார்கள்.

கோவை பா.ஜனதா வேட்பாளரும், முன்னாள் மாநில தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் வாரணாசி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தி மற்றும் ஆங்கிலமும் பேசுவதால், பிரசாரம் செய்வதில் மொழி பிரச்சினை இல்லை என்றார்.

இந்தியில் சரளமாக பேசும் புலமை பெற்ற சிவகங்கை பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜா வதோதரா தொகுதியில் மோடிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். மோடி தமிழக வருகையின்போது அவரது இந்தி பேச்சை எச்.ராஜாதான் தமிழில் மொழி பெயர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய செல்கிறார்கள்.

அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜனதா சார்பில் நடிகை ஸ்மிருதிஇரானி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் அமேதி சென்றுள்ளார். அங்கு ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Apr 28, 2014 3:55 am

மோடி எங்களை கவுரவபடுத்தி விட்டார்: லதா ரஜினிகாந்த் பேட்டி


பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடந்த 13ந் தேதி சென்னைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.

இது தொடர்பாக ரஜினிகாந்தின் மனைவி லதா பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

நரேந்திரமோடி ரஜினியின் மிக நெருங்கிய நன்பராவார். ரஜினிகாந்த் உடல் நலம் இல்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தபோது மோடி நேரில் வந்து பார்த்தார். இப்போது அவர் எங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து எங்களை சந்தித்தது உள்ளார். இதனால் நாங்கள் அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறோம். அவர் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை கவுரவபடுத்தி விட்டார் என்று கூறினார்.

24-ந் தேதி ஓட்டு பதிவின்போது ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லாமேரி கல்லூரியில் முதல் ஆளாக சென்று ஓட்டு போட்டார். இதுபற்றி லதாவிடம் கேட்டபோது ‘‘ரஜினி முதல் ஆளாக சென்று ஓட்டுபோட்டதற்கு எந்த திட்டமும் இல்லை. அவர் எப்போதும் காலையிலே சென்று காத்திருந்து ஓட்டு போடுவார். அன்றும் அதேபோல் முன்கூட்டி சென்றார். அவர் முதல் ஓட்டு போடும் நிலை ஏற்பட்டது. ஆனால் அது தற்செயலாக நடந்தது’’ என்று கூறினார்.

கோச்சடையான் படம் வெளியாவதில் எல்லாமே நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. நான் முதல் நாளில் முதல் காட்சியை ரசிகர்களோடு அமர்ந்து பார்க்க உள்ளேன். இது எனக்கு சிறப்பான தருணம் என்று கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Apr 28, 2014 11:03 pm


மதசார்பின்மை பற்றி மோடியிடம் இருந்து எனக்கு விரிவுரை தேவையில்லை: உமர் அப்துல்லா

மதச்சார்பின்மை பற்றி சான்றிதழோ அல்லது விரிவுரையோ உங்களிடம் இருந்து எனக்கு தேவையில்லை என்று மோடிக்கு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

உமர் அப்துல்லாவின் தந்தையும் மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லா மோடிக்கு ஆதரவு அளிப்பவர்கள் கடலில் தான் குதிக்க வேண்டும் என்று பேசியதை அடுத்து வார்த்தை போர் துவங்கியுள்ளது.

இன்று காலை பரூக் அப்துல்லாவின் கருத்து பற்றி டிவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்து இருந்த மோடி, மோடிக்கு வாக்கு அளிப்பவர்கள் கடலில் குதிக்கவேண்டும் என்று சொல்வதற்கு பதிலாக, அப்துல்லா தானும் தனது குடும்பத்தினரும் கண்ணாடி முன் நின்று காஷ்மீரை எப்படி பாழாக்கியுள்ளோம் என்று பார்க்க வேண்டும்.மதச்சார்பின்மைக்கு அதிக தீங்கு விளைவித்தவர்கள் நீங்களும் உங்கள் குடும்பத்தினருமாகத்தான் இருப்பீர்கள் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ள உமர் அப்துல்லா, மதசார்பின்மை குறித்து உங்களிடம் இருந்து எனக்கு சான்றிதழ் தேவையில்லை. ஒருவேளை சான்றிதழ் பெறும் நாள் வந்தால் அன்றய தினம் எனது பதவியை ராஜினாமா செய்து இருப்பேன். காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேறியதற்கு பெரும்பாலான காஷ்மீர் முஸ்லிம்கள் வேதனை அடைந்துள்ளனர். அவர்கள் திரும்பிவருவதையே விரும்புகிறார்கள். இந்தநிலையில், மோடியின் அறிக்கை, அவர்களை புண்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Apr 28, 2014 11:05 pm


நாங்கள் மோடிக்கு எதிரானவர்கள் இல்லை, அவரது நோக்கத்திற்கு எதிரானவர்கள் - பரூக் அப்துல்லா

காஷ்மீர் மாநிலம் பழைய ஸ்ரீநகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய, காங்கிரசின் கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லா, இந்த தேசம், மக்களுக்கு சொந்தம். எனவே, என்ன செய்வது என்று மக்களுக்கு தெரியும். மதவாத சக்திகளிடம் இருந்து எங்களை இறைவன் காப்பாற்ற வேண்டும். இந்தியா, மதவாத நாடாக மாற முடியாது. ஒருவேளை அப்படி மாறினால், இந்தியாவுடன் காஷ்மீர் இருக்காது. தீவிரவாதிகள் என் மீது ஆயிரக்கணக்கான கையெறி குண்டுகளை வீசினாலும், நான் பயப்பட மாட்டேன்’. ‘‘மோடிக்கு ஓட்டு போடுபவர்களை கடலில் மூழ்கடிக்க வேண்டும்’’ என்று கூறினார்.

இத்தகைய பேச்சை அடுத்து பாரதீய ஜனதா மற்றும் பரூக் அப்துல்லா இடையிலான வார்த்தை போர் முண்டுள்ளது. காஷ்மீர் மதசார்பின்மையை பரூக் அப்துல்லா, அவரது தந்தை மற்றும் அவரது மகன் சீர்குலைத்துவிட்டனர் என்று நரேந்திர மோடி கூறினார்.

இந்நிலையில் காஷ்மீரில் நடந்த கூட்டத்தில் பேசிய பரூக் அப்துல்லா, நாங்கள் நரேந்திர மோடிக்கு எதிரானவர்கள் இல்லை அவரது நோக்கத்திற்கு எதிரானவர்கள். நரேந்திர மோடி அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட விரும்புகிறார். நாங்கள் இவ்விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை பின்பற்றுகிறோம். ஆனால் அதனை அவர்கள் மீறுகின்றனர். காஷ்மீர் பண்டிட்கள் திரும்பி வருவார்கள் என்று கூறியுள்ளார்.

பா.ஜனதா தனது பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில், அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370–வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Apr 28, 2014 11:06 pm


குஜராத்தை பற்றி ஒன்றும் அறியாதவராய் இருக்கிறார் ராகுல் காந்தி: நரேந்திர மோடி


குஜாராத்தை பற்றி ஒன்றும் அறியாதவராய் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இருக்கிறார் என்று பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார். பாடன் மக்களவை தொகுதிக்குட்ட்ட கேரலு என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் மேலும் கூறுகயில், எனது சொந்த நகரான வத்நகருக்கு இது வரை 100க்கும் மேற்பட்ட பிரநிதிகளை, நான் உண்மையிலேயே தேநீர் விற்றேனா இல்லையா என்று கண்டறிய காங்கிரஸ் அனுப்பி சோதித்துள்ளது.

நீங்கள் உங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டும் என்றால் ராகுல் காந்தியின் பேச்சை கேளுங்கள். அவருடய கணக்கு படி 27ஆயிரம் கோடி வேலை வாய்ப்புகள் குஜராத்தில் காலியாக உள்ளது என்கிறார். குஜராத்தில் மொத்த மக்கள் தொகையே 6 கோடியாக உள்ள நிலையில் இது எப்படி சாத்தியம்? என்ன வகையான மாதிரி நபரை காங்கிரஸ் கொண்டு வந்துள்ளது.

ராகுல் காந்தி சமீபத்தில் குஜராத்தில் லோக் அயுக்தா அமைக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் குஜாராத்தில் லோக் அயுக்தா இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும்.ராகுல் பாய் உங்களுக்கு இது போன்ற அறிவு இல்லை என்றால்? இந்தியாவுக்கு என்ன ஆகும். என்றார்.

மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை குற்றம் சாட்டிய அவர், நர்மதா அணை விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காக சோனியா காந்தி குஜராத்திற்கு அநீதி இழைத்து விட்டார் என்று தெரிவித்தார். மேலும், குஜராத் மக்களுக்கு குடீநீர் இல்லை என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.நான் உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். காங்கிரஸ் ஆட்சியின் போது, தண்ணீர் ரயில் மூலமாக சவுரசாஷ்டிரா பிராந்தியத்துக்கு அனுப்பட்டது. ஆனால் தற்போது நாங்கள் பெரிய குழாய்கள் அங்கு அமைத்துள்ளோம்.

அம்மா மகன் அரசாங்கத்தில் அவர்களுடைய அரசியல் ஆலோசகர் நாட்டை வழிநடத்துகிறார். நர்மதா அணையில் தடுப்புகளை கட்ட நீங்கள் அனுமதி அளிக்கவில்லை. இதன் படி குஜராத்திற்கு நன்கு மடங்கு தண்ணீர் அதிகமாக அளித்து இருக்க வேண்டும். ஆனால், தடுப்புகளை அமைத்தால் இன்னும் 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தனது தளத்தை குஜராத்தில் இழந்துவிடும் என்று அவருடைய அலோசகர் அவர்களை எச்சரித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Tue Apr 29, 2014 10:53 am

கட்சிகளின் கசப்பான தேர்தல் பிரச்சாரம்


நாடு முழுவதும் 7-வது கட்டமாக 89 மக்களவைத் தொகுதிகளுக்கும் தெலங்கானா சட்டமன்றத்துக்கும் (நாளை) புதன்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் கசப்பின் உச்சத்தை எட்டியது.

இந்த வார்த்தைப் போரில் மையத்தில் நரேந்திர மோடி நிற்க, அவரைச் சுற்றி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டன.

7-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று (செவ்வாய்கிழமை) மாலை முடிவுக்கு வந்தது. தான் சற்றும் சளைத்தவர் இல்லை என்பது போல், தன் மீதான விமர்சனங்களுக்கு மோடியும் பிரச்சாரங்களில் பதில் அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி: "பொழுதுபோக்குக்காக நீங்கள் வேறு எங்கும் செல்ல வேண்டாம். ராகுல் வீடியோக்களை பாருங்கள். நாள் முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்கலாம். சில நேரங்களில் நீங்கள் மனஇறுக்கத்தில் இருந்தால் உடனடியாக ராகுலின் பேச்சுகளை கேளுங்கள். அவரது கணித அறிவின்படி குஜராத்தில் 27,000 கோடி பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையே 6 கோடிதான். இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 125 கோடி. அதையும் தாண்டி குஜராத்தில் 27,000 கோடி பணியிடங்கள் காலியாக இருப்பதாக ராகுல் கூறுகிறார். எந்த மாதிரியான நபரை தேர்தல் பிரச்சாரத்துக்கு காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளது என்பது எனக்குப் புரியவில்லை" என பேசியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கான்பூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி: "குஜராத்தில் ஒரே ஒரு மாதிரி வளர்ச்சித் திட்டம் தான் நடைமுறையில் இருக்கிறது. அது பணக்காரர்களுக்கான வளர்ச்சித் திட்டம். மோடி அரசிடமிருந்து பெற்ற சலுகையின் காரணமாக தொழிலதிபர் அதானி, ரூ. 35 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளார். நாட்டில் ஒரு சிலர் மட்டுமே வளம் பெற வேண்டும் என்று மோடி கருதுகிறார் போலும். நாங்கள் (காங்கிரஸ்) அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியைத்தான் விரும்புகிறோம்" என பேசினார்.

ஆனால், விடாமல் வார்த்தைப் போரை தொடர்ந்த பாஜக, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான நிலமோசடி புகாரை கையில் எடுத்தது.

"எங்களுக்கு சவால் விடுவதை நிறுத்திக் கொண்டு ராபர்ட் வதேரா மீதான புகார்கள் தொடர்பான எங்கள் கேள்விகளுக்கு காங்கிரஸ் பதில் அளிக்க வேண்டும்" என பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இது தவிர சமூக வலைத்தளங்களில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரை விமர்சித்து நரேந்திர மோடி பதிவுகள் இட்டிருந்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu May 01, 2014 4:10 am

 வரிசையில் நிற்காமல் வாக்களிக்க சென்ற சிரஞ்சீவியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்!

வரிசையில் நிற்காமல் வேகமாக வாக்களிக்க சென்ற சிரஞ்சீவியை வரிசையில் நின்ற பொதுமக்கள் தடுத்து நிறுத்தனர்.

வாக்குப்பதிவு

தெலுங்கானா பகுதியில் இன்று பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் வ் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகரும், காங்கிரஸ் கட்சியின் மத்திய மந்திரியுமான சிரஞ்சீவி தனது வாக்கை பதிவு செய்ய ஐதராபத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வாக்களிக்க சென்றார். அப்போது அங்கு பொதுமக்கள் நீண்ட தூரம் வரிசையாக நின்றுள்ளனர்.

தடுத்து நிறுத்தம்

இந்நிலையில் சிரஞ்சீவி வேகமாக வரிசைக்கு முன்னே சென்றுள்ளார். அப்போது வரிசையில் நின்ற கார்த்திக் என்ற வாலிபர் சிரஞ்சீவி முன்னே சென்று வாக்களிக்க மறுப்பு தெரிவித்தார். கார்த்திக் கூறுகையில் “உங்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை தேவையா? நீங்கள் வேண்டுமானால் மந்திய மந்திரியாக இருக்கலாம், ஆனால் நீங்கள் மூத்த குடிமகன் இல்லை. நீங்கள் உங்களுடையை குடும்பத்தினருடன் வரிசைக்கு முன்னதாக செல்லக்கூடாது.” என்று கூறினார். அப்போது சிரஞ்சீவி வாக்காளர்களை சமாதான படுத்த முயன்றார். 

சிரஞ்சீவி விளக்கம்

மற்ற வாக்காளர்களும் எதிர்த்ததை அடுத்து சிரஞ்சீவிக்கு தர்ம சங்கடமாக இருந்தது. இதனையடுத்து சிரஞ்சீவி எதுவும் கூறாமல் வரிசையின் கடைசியில் போய்நின்றார். பின்னர் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த சம்பவத்திற்கு விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில் “நான் வழிமுறைகளை மீறவில்லை. நான் என்னுடையை பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்க்கவே சென்றேன். இதனை மீடியாக்களே பெரிதாக்கிவிட்டன” என்று கூறினார்.

இது தொடர்பாக கார்த்திக் கூறுகையில், “நான் சிரஞ்சீவி மீது மிகவும் மரியாதை வைத்துள்ளேன். ஆனால் அவரும் வழிமுறைகளை பின்பற்றி வரிசையில் நிக்க வேண்டும். அவர் 65 வயதை தாண்டிய மூத்த குடிமகன் இல்லை” என்று கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu May 01, 2014 4:13 am

 வாக்குச்சாவடி அருகே தாமரை சின்னத்தை காண்பித்ததாக புகார் நரேந்திரமோடி மீது வழக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு

பா.ஜனதாவின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி குஜராத் மாநிலம் காந்திநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த தொகுதியில்தான் அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு ஓட்டு உள்ளது.

தாமரை சின்னம்

நேற்று இந்த தொகுதியில் ஓட்டுப்பதிவு நடந்தபோது மோடி, ரனீப் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் வெளியே வந்த அவர் தாமரை சின்னத்தை காண்பித்து, செய்தியாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். இதுதொடர்பான காட்சிகள் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாயின.

காங்கிரஸ் புகார்

இதற்கு காங்கிரஸ் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் சட்டப்பிரிவு செயலாளர் கே.சி.மிட்டல், உடனடியாக தலைமை தேர்தல் கமிஷனிடம் புகார் செய்தார்.

அதில் “வாக்குச்சாவடி அருகே பா.ஜனதாவுக்காக மோடி பிரசாரம் செய்துள்ளார். மேலும் பொதுமக்களிடையே கட்சியின் சின்னத்தையும் காண்பித்து இருக்கிறார். இதுமக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி விதிமுறை மீறல் ஆகும். இதற்காக அவரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து நீக்கம் செய்யவேண்டும்” என்று கூறியிருந்தார்.

குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியாவும் தேர்தல் கமிஷனிடம் புகார் செய்துள்ளார். அதில் தேர்தல் விதிமுறைகளை மீறிய மோடியை கைது செய்யவேண்டும் என்று கோரியுள்ளார்.

இதேபோல் குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் சுக்தேவ் பட்டேலும் தேர்தல் கமிஷனிடம் முறையிட்டுள்ளார்.

வீடியோ காட்சிகள் ஆய்வு

இதனையடுத்து காந்திநகர் வாக்குச்சாவடியில் மோடி ஓட்டுப்பதிவு செய்து விட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய வீடியோ காட்சிகளை தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் உடனடியாக டெல்லிக்கு வரவழைத்து அதனை ஆய்வு செய்தனர்.

பின்னர் குஜராத் மாநில அரசு நிர்வாகத்துக்கு அதிரடியாக சில உத்தரவுகளையும் தேர்தல் அதிகாரிகள் பிறப்பித்தனர்.

அந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மோடி மீது வழக்கு

குஜராத் மாநிலம் முழுவதிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்த நேரத்தில் நரேந்திரமோடி கூட்டம் நடத்தியதும், அதில் அவர் பேசியதும் 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126(1)(ஏ) மற்றும் 126(1) (பி) ஆகிய பிரிவுகளை மீறும் செயல்களாகவே அமைந்திருப்பதாக தேர்தல் கமிஷன் கருதுகிறது.

இந்த கூட்டத்தில் தாமரை சின்னத்தை காண்பித்து மோடி பேசும் விதம் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும் அமைந்து உள்ளது. இது காந்தி நகர் பாராளுமன்ற தொகுதியின் தேர்தலை மட்டுமின்றி, இதே நேரத்தில் நாட்டில் தேர்தல் நடக்கும் பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அமைந்து இருக்கிறது.

எனவே நரேந்திரமோடி மீதும், இந்த கூட்டத்தை நடத்தியவர்கள் மீதும் புகார் அல்லது வழக்கு பதிவு செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிடுகிறது.

தொலைக்காட்சிகள் மீதும் நடவடிக்கை

மேலும் இந்த கூட்டம் தொடர்பாக காட்சிகளை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் மற்றும் இதர மின்னணு ஊடகங்கள் மீதும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126(1),(பி) பிரிவின் படி தனித்தனியாக புகார்களும் அல்லது வழக்குகளும் பதிவு செய்யப்படவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து காந்திநகர் குற்றப்பிரிவு போலீசார் மோடி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

தலைமை செயலாளருக்கு உத்தரவு

இந்த பிரச்சினை தொடர்பாக குஜராத் மாநில தலைமைச்செயலாளர் விரிவான அறிக்கையை உடனடியாக தங்களுக்கு அனுப்பி வைக்கும்படியும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் காந்திநகர் கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ரூப்வந்த் சிங், கட்சியின் தேர்தல் சின்னத்தை மோடி காண்பித்த விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பி இருப்பதாக தெரிவித்தார்.

சட்டப்பிரிவு கூறுவது...

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126(1), (ஏ), மற்றும் (பி) ஆகிய பிரிவுகளின்படி ஓட்டுப்பதிவு முடிவடைவதற்கு முந்தைய 48 மணி நேரத்திற்கு அப்பகுதியில் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் கூட்டம் நடத்துவது அல்லது அதில் கலந்து கொள்வது, பொதுக்கூட்டத்தில் பேசுவது அல்லது அதில் இணைந்து கொள்வது, ஊர்வலம் நடத்துவது ஆகியவற்றை சினிமா காட்சிகளாகவோ, தொலைக்காட்சி படமாகவோ மற்றும் இதுபோன்ற இதர சாதனங்கள் மூலமாகவோ எவர் ஒருவரும் ஒளிபரப்பு செய்யக்கூடாது எனக்கூறப்பட்டுள்ளது.

விதிமுறைகளை பின்பற்றவேண்டும்

மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 130-வது பிரிவின்படி கடந்த ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் கமிஷன் வெளியிட்ட உத்தரவில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் வாக்குச்சாவடிக்குள் எந்தவொரு கட்சியினரும் தங்களது கட்சியின் தேர்தல் சின்னம் பொறித்த தொப்பிகள், சால்வைகள், உடைகள் ஆகியவற்றை அணிந்து வரக் கூடாது.

இதேபோல் தேர்தல் நடைபெறும் நாளில் யாரும் ஓட்டு கேட்டோ, சின்னங்களை காண்பித்தோ பிரசாரம் செய்யக்கூடாது. இதேபோல் துண்டு பிரசுரங்கள், சமிக்ஞைகள் செய்வதையும் அனுமதிக்கக்கூடாது.

தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மையங்களிலும் இந்தி விதிமுறைகளை பின்பற்றவேண்டும் எனவும் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

தேர்தல் கமிஷன் விதிமுறைகளின்படி, ஓட்டுப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்கு அருகே 100 மீட்டர் சுற்றளவு தூரத்துக்கு ஓட்டுக்கேட்டு பிரசாரம் செய்வது தேர்தல் விதிமுறை மீறல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu May 01, 2014 4:14 am

பாராளுமன்றத் தேர்தல் 2014; 7 வது கட்ட வாக்குப்பதிவு; 89 தொகுதிகளில் காலை வாக்குப்பதிவு தொடங்கியது

நரேந்திர மோடி, சோனியா காந்தி உள்பட பல தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் உள்பட 89 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு தொடங்கியது.

இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தல் 9 கட்டமாக அறிவிக்கப்பட்டதில், 6 கட்ட தேர்தல்கள் 349 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துவிட்டன. 7–வது கட்டமாக இன்று 89 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஆந்திர மாநிலத்தை பிரித்து உருவாக்கப்பட்ட புதிய மாநிலமான தெலுங்கானாவில் பாராளுமன்ற தேர்தலுடன், முதல் சட்டமன்ற தேர்தலும் நடப்பது குறிப்பிடத்தக்கது.

7 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இந்த தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்கள், தொகுதிகள் எண்ணிக்கை விவரம் வருமாறு:– குஜராத் – 26, பஞ்சாப் – 13, ஆந்திரா – 17, உத்தரபிரதேசம் – 14, மேற்கு வங்காளம் – 9, பீகார் – 7, காஷ்மீர் – 1, யூனியன் பிரதேசங்களான தத்ரா நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ தலா ஒரு தொகுதிகள். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோர் குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள். மோடி குஜராத்தின் வதோதரா தொகுதியிலும், சோனியா காந்தி உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் களம் காண்கிறார்கள். பாரதீய ஜனதா தலைவர்கள் எல்.கே.அத்வானி (காந்திநகர்), ராஜ்நாத்சிங் (லக்னோ), அருண்ஜெட்லி (அமிர்தசரஸ்), முரளிமனோகர் ஜோஷி (கான்பூர்), உமா பாரதி (ஜான்சி) மற்றும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா (ஸ்ரீநகர்) ஆகியோரின் வெற்றி–தோல்வி இன்று முடிவு செய்யப்படுகிறது. இன்றைய தேர்தலில் முக்கிய தலைவர்கள் போட்டியிடுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த 89 தொகுதிகளில் 1,295 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 13 கோடியே 83 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu May 01, 2014 4:21 am

ஏப்ரல் 30ம் தேதியை மறக்க மாட்டேன்: மோடி

திருப்பதி: முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்ட இந்த நாளை(ஏப்ரல் 30) மறக்க மாட்டேன் என பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.

திருப்பதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது: என் மீது வழக்குப்பதிவு செய்வதில் காங்கிரஸ் காட்டிய தீவிரம், தோல்வியடையப்போகிறோம் என்பதை காங்கிரஸ் உணர்ந்து, அதிர்ச்சியடைந்திருப்பதை காட்டுகிறது. தனது வாழ்நாளில் டீ விற்றவர் சவால் விட்டுள்ளார் என கவலை கொண்டுள்ளது. நான் எந்த வித குற்றமும் செய்யவில்லை. பா.ஜ.,வின் தேர்தல் சின்னமான தாமரை இலையை காட்டினேன். எனது வாழ்நாளில் எந்த வழக்கும்பதிவு செய்யப்பட்டதில்லை. தவறான வழியில் இருசக்கர வாகனம் மற்றும் கார் ஓட்டியதாகவும், தவறான இடத்தில் காரை நிறுத்தியதாக கூட வழக்குப்பதிவு செய்யப்பட்டதில்லை. ஆனால் இன்று நான் தரையிறங்கிய போது, வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து தெரியவந்தது. நிச்சயமாக ஏப்ரல் 30ம் தேதியை மறக்க மாட்டேன்.

கத்தி, துப்பாக்கி, பிஸ்டல் மற்றும் வழக்குப்பதிவு செய்து மிரட்டும் போது, ஒருவரால் புரிந்து கொள்ள முடியும். இன்று என் மீது ஏன்வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியுமா? தாமரையை மக்களிடம் காட்டியதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தோற்கும் நிலையில் உள்ளது. தனது வாழ்க்கையில் டீ விற்றவர், சவால் விட்டுள்ளது டில்லி அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. நான் ஊழல் மற்றும் முறைகேடு செய்ததில்லை. மற்றவர்களை செய்ய தூண்டியதில்லை. விட்டதுமில்லை. நாட்டையும், ஆந்திராவையும் சுரண்டியவர்கள், தங்கள் தவறுக்கு வருந்தியாக வேண்டும்.

டில்லியில் உள்ள தாய் மற்றும் மகனின் அரசாங்கம், கறுப்பு பணம் குறித்த பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய மூன்றாண்டு காலம் எடுத்துக்கொண்டது. திறமையான மனித வளம், கேஜி பேசின் கேஸ், நீண்ட கடற்கரை மூலம் இந்த மாநிலம் வளர்ச்சியடைய முடியும். சீமாந்திரா பகுதியை வளர்ச்சியடைய செய்வேன். இந்த பகுதி மக்கள் பா.ஜ.,தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியை ஆதரிக்க வேண்டும். சீமாந்திராவை சிறந்த மாநிலமாக்க சந்திரபாபுநாயுடுவை முதல்வராக்க வேண்டும் என கூறினார்.

இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜன்சேனா கட்சி தலைவரும், மத்திய அமைச்சர் சிரஞ்சீவி சகோதரருமான பவன் கல்யாண் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Fri May 02, 2014 3:49 am

ஊழலை ஒழிக்கவும், பரம்பரை ஆட்சியை அகற்றுவதற்கும் ராகுலை தோற்கடியுங்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்

அமேதி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், நாட்டில் ஊழல் ஒழிக்கப்படுவதற்கும், பரம்பரை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் காங்கிரஸ் கட்சியி துணை தலைவர் தோற்கடிக்கப்பட வேண்டுமென பேசியுள்ளார்.

அமேதி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் குமார் விஷ்வாசை ஆதரித்து ஜக்டிஷ்பூரில் வாக்கு சேகரித்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஊழலை அடியோடு அழிக்கவும் பரம்பரை ஆட்சியை அகற்றவும் ராகுலை தோற்கடியுங்கள் என்று பேசினார்.

மேலும், காங்கிரஸ் கட்சி நாட்டை கொள்ளை அடித்ததாகவும், ஊழல், மோசமான அரசு மற்றும் பணவீக்கத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Fri May 02, 2014 4:02 am


மோடி தனக்குத்தானே பிரதமர் என்று நினைத்துக் கொண்டுள்ளார்: சோனியா காந்தி

நரேந்திர மோடி தனக்குத்தானே பிரதமராக நினைத்து, அதை அறிவித்துக் கொண்டு, தான் ஏற்கெனவே இந்த நாட்டின் பிரதமர் ஆகிவிட்டதாக நடந்துகொள்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

முடிவுகள் எல்லாம் வந்துவிட்டதுபோலும், அவர் முள்ளின் மீது அமர்ந்திருப்பதுபோலும் ஒரு தோற்றத்தை மோடி ஏற்படுத்தி வருகிறார் என்று உத்திரப் பிரதேச மாநிலம் பைஸாபாத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசியபோது சோனியா காந்தி கூறினார்.

மோடி அனைத்து வளங்களும் ஒரே கையில் வர வேண்டும் என்றும் தாமே அதிகாரத்தின் ஒட்டுமொத்த மையம் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இந்த நாட்டின் மக்களே தேசத்தின் தலையெழுத்தை தீர்மானிப்பர் என்பதை அவர் மறந்துவிட்டார் என்றும் கூறியுள்ளார் சோனியா காந்தி.

அண்மைக்காலமாக இரு தலைவர்களுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. மே 12ம் தேதி இருவரும் ஒருவருக்கு ஒருவர் கூறிக் கொள்ளும் இந்தக் கூரிய வார்த்தைகள் ஒருவேளை முடிவுக்கு வரலாம். அண்மையில், தாயும் மகனும் பொய்களை யார் சொல்வது என்பதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக மோடி குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Fri May 02, 2014 4:20 am

மோடி கண்டிப்பாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்: ப. சிதம்பரம்

குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. பா.ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளரான மோடி வாக்களித்த பின், வாக்குச்சாவடிக்கு வெளியே தாமரை சின்னத்துடன் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார்.

இது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் என்று அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

யாரோ ஒருவர் தவறான பாதையில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டால் அவர் கண்டிப்பாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதுதான் கண்ணியமிக்க செயலாகும் என நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று மோடி மீதான வழக்குப்பதிவு குறித்துதான் பெயரைச் சொல்லாமல் சிதம்பரம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Sat May 03, 2014 5:19 am

தேர்தல் முடிவு வெளியாவது தாமதமாகும்: பிரவீன்குமார் தகவல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாவது தாமதமாகும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறிய அவர், ஒவ்வொரு சுற்று முடிவிலும் 14 மேஜைகளில் எண்ணப்பட்ட வாக்குகளை பற்றி விவரம் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், வேட்பாளர்களின் முகவர்களுக்கு வாக்கு விவரம் அளிக்க உள்ளதால் இம்முறை தேர்தல் முடிவுகள் வர காலதாமதம் ஆகும் என்றும் கூறினார்.

மேலும் குண்டுவெடிப்பை தேர்தலுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் பிரவீன்குமார் கேட்டுக்கொண்டார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Sat May 03, 2014 5:28 am

சோனியா காந்தி பேச்சுக்கு 'அமைதி காத்தது' சீமாந்திரா

சீமாந்திராவில் நடந்த காங்கிரஸ் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பேச்சுக்கு, எவ்வித ஆரவார வரவேற்பும் தரப்படாதது, அப்பகுதி மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.

ஆந்திரத்தில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதற்குப் பிறகு, முதல் முறையாக சீமாந்திராவுக்கு பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களின் அதிருப்தியை நேரில் கண்டார்.

சீமாந்திராவில் இம்மாதம் 7-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குண்டூரில் உள்ள ஆந்திர முஸ்லிம் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி கலந்துகொண்டு பேசினார்.

சோனியா காந்தியின் 30 நிமிடப் பேச்சை வரவேற்கும் வகையில், கூட்டத்தில் இருந்து ஒருமுறை கூட கைத்தட்டலோ, ஆரவாரமோ எழுப்பப்படவில்லை.

ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்தது குறித்து உருக்கத்துடன் விவரித்த சோனியா காந்தி, சீமாந்திரா மக்கள் நலனில் கருத்தில்கொண்டே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.

பல ஆண்டுகளாக தெலங்கானா மக்களின் கோரிக்கைக்கு காங்கிரஸ் மதிப்பளித்து, மாநில பிரிவினைக்கு இறுதி முடிவு மேற்கொண்டது என்றும், இது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது என்றும் அவர் கூறினார்.

சீமாந்திரா இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், சீமாந்திரா வளர்ச்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு செய்துள்ள நலத் திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.

தனது பேச்சை வரவேற்காமல், சீமாந்திரா மக்கள் அமைதி காத்தது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பெரும் ஏமாற்றத்தை தந்ததாக தெரிகிறது.

இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றாலும்கூட, எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை என்பதை மிகுதியாக காலியாக இருந்த இருக்கைகளே காட்டின.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon May 05, 2014 12:43 am

மோடியை கைது செய்யவேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு மம்தா வேண்டுகோள்

பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான மோடி வகுப்புவாத வன்முறையை தூண்டிவிட்டு அசாமில் கலவரத்தை உருவாக்கிவிட்டுள்ளதாகவும், அதே போல் மேற்கு வங்கத்திலும் மக்களிடம் மதம் மற்றும் சாதி வெறியை தூண்டி கலவரம் ஏற்படும் வகையில் பேசி வருகிறார்.

இவ்வாறு பேசி வரும் அவரை கைது செய்வதுடன், மேற்கு வங்கத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இனி அவர் கலந்து கொள்ளவும் தடை விதிக்கவேண்டும் என மம்தா கேட்டுக்கொண்டுள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள கிரிஷ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மம்தா பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது:

இந்து, முஸ்லிம், வங்காளி மற்றும் வங்காளி அல்லாதவர்கள் என அனைவரையும் நாங்கள் எங்கள் நெஞ்சங்களில் ஒன்றாகவே வைத்துள்ளோம். அவர்களில் ஒருவர் மீது மோடி கை வைத்தாலும் நாங்கள் டெல்லியை முற்றுகையிடுவோம்.

வகுப்புவாதத்தை வேர்விட வைக்கும் முயற்சிகளில் பா.ஜ.க ஈடுபட்டு வருகிறது. கலவரங்களை உருவாக்குபவர்கள் நாட்டின் தலைவராக முடியாது. அவரது கருத்துகளை கேட்டுத்தான் அசாமில் அப்பாவி சிறுபாண்மையினர் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டை வழி நடத்துபவர்களே கலவரத்தை உருவாக்க நினைத்தால் நாடு என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள் என மம்தா பேசினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Tue May 06, 2014 5:54 am

காங்கிரஸ் கோட்டையில் விழுந்தது ஓட்டை; சீமாந்திரா தேர்தலில் கட்சிக்கு கடும் நெருக்கடி

விஜயவாடா: சில ஆண்டுகளுக்கு முன்வரை, காங்கிரசின் கோட்டையாக திகழ்ந்த, ஆந்திராவின் சீமாந்திரா பகுதியில், தற்போது, அந்த கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் தெலுங்கானா மாநில அறிவிப்பால், அங்கு நடக்கவுள்ள லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ், படுதோல்வியை சந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள மாநிலங்களில் ஒன்றாக, ஆந்திரா திகழ்ந்தது. கடைசியாக நடந்த இரண்டு சட்டசபை தேர்தல்களிலும், காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது.

33 பேர்:

கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 33 பேர், வெற்றி பெற்றனர். மத்தியில், இரண்டாவது முறையாக ஐ.மு., கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு, ஆந்திர மாநிலம் முக்கிய காரணமாக விளங்கியது. ஆனால், 'ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும்' என்ற, மத்திய அரசின் அறிவிப்பு, காங்கிரசின் செல்வாக்கை, அதல பாதாளத்துக்கு தள்ளி விட்டது. ஆந்திராவில், தெலுங்கானா அல்லாத, ராயலசீமா, கடலோர ஆந்திரா ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி, சீமாந்திரா என, அழைக்கப்படுகிறது. தெலுங்கானா அறிவிப்பால், இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள், காங்கிரஸ் மீது, கடும் கோபத்தில் உள்ளனர். பல ஆண்டுகளாக காங்கிரசில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி, சமீபத்தில், பா.ஜ.,வில் சேர்ந்தார். இதேபோல், முதல்வராக இருந்த கிரண் குமார் ரெட்டி, தனியாக கட்சி துவக்கியுள்ளார். ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள், இவரின் கட்சிக்கு சென்று விட்டனர். இதனால், சீமாந்திராவில், காங்கிரஸ் கூடாரம் காலியாகி விட்டது. இந்நிலையில், சீமாந்திராவில் உள்ள, 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 லோக்சபா தொகுதிகளுக்கும், நாளை தேர்தல் நடக்கவுள்ளது.

கடும் போட்டி:

இதில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசுக்கும், கடும் போட்டி நிலவுகிறது. கிரண்குமார் ரெட்டியும், தன் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். இவர்களுக்கு இடையில் நடக்கும் போட்டியில், காங்கிரஸ் கட்சி, இருக்கும் இடமே தெரியவில்லை. பல தொகுதிகளில் போட்டியிடுவதற்கு, அந்த கட்சிக்கு வேட்பாளர்களே கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய சாம்பசிவ ராவ் கூறியதாவது:

காத்திருப்பர்:

சீமாந்திரா பகுதி, காங்கிரசின் கோட்டையாக விளங்கியது. முன்பெல்லாம், இந்திரா, ராஜிவ், சோனியா போன்ற தலைவர்கள் இங்கு வந்தால், இரண்டு லட்சம் மக்கள், அவர்களை பார்ப்பதற்காக காத்திருப்பர். ஆனால், சமீபத்தில், இந்துர்பூருக்கு ராகுல் வந்தபோது, சில ஆயிரம் பேர் தான், இருந்தனர். காங்கிரசின் செல்வாக்கு சரிந்துள்ளதற்கு, இது, நல்ல உதாரணம். இந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது. கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்புக்கு, கட்சியின் மூத்த தலைவர்கள் தான், காரணம். இவ்வாறு, அவர் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu May 08, 2014 10:11 am

502 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிந்தது

புதுடில்லி : லோக்சபா தேர்தலில் நேற்றுடன் 502 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நிறைவடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற 64 தொகுதிகளுக்கான 8ம் கட்ட ஓட்டுப்பதிவில் 66 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி இருப்பதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 81.28 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu May 08, 2014 10:37 am


கடந்த முறை சிவகங்கையில் நடந்தது போல் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் - தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் பேட்டி

மே 16 ஆம் தேதி நடைபெறும் பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் 24 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 16 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கோவையில் இன்று பயிற்சி நடைபெற்றது.

தேர்தல் தொடர்பாக இதுவரை 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 1200 வழக்குகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள வழக்குகளுக்கு வருகிற 16 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். இதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது ரூ.10 லட்சத்துக்குறைவான பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தால் பணத்துக்கு உரியவர்கள் அதற்கான கணக்கை தேர்தல் ஆணையத்திடம் காண்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் இருந்தால் அது வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் அதற்கான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் செலவுகள் தொடர்பான கணக்கை வாக்கு எண்ணிக்கை முடிந்த 30 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

அந்த கணக்கில் ஏதாவது முறைகேடுகள் இருந்தால் அவர்கள் வெற்றி பெற்றவராக இருந்தாலும் அவர்களது வெற்றி தகுதி நீக்கம் செய்யப்படும். மேலும் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும். சிவகங்கையில் கடந்த முறை மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது போல் இந்த முறை ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு சுற்றின் போதும் ஏஜென்ட்களிடம் கையெழுத்து பெறப்படும். அதன்பின்னரே அடுத்த சுற்று தொடங்கும்.

இவ்வாறு தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Wed May 14, 2014 2:35 am


மக்களவைத் தேர்தல் 2014: வாக்குப்பதிவில் புதிய சாதனை!

ஒன்பது கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் 66.38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலேயே அதிக வாக்குப்பதிவு சதவீதம் இதுவாகும்.

கடந்த 1984-85-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 64.01 சதவீத வாக்குகள் பதிவானதே இதுவரை அதிகபட்ச வாக்குப்பதிவு சதவீதமாக இருந்தது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட பின், ராஜீவ் காந்தி அரசியலில் களமிறங்க, அப்போது ஏற்பட்ட அனுதாப அலை காரணமாக 64.01 சதவீத வாக்குகள் பதிவாகின.

மக்களவைத் தேர்தலில் சாதனை அளவாக 66.38 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. எட்டு கட்ட வாக்குப்பதிவுகளில் 66.2 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.

9-வது கட்ட வாக்குப்பதிவு

இறுதி மற்றும் 9-வது கட்டமாக உத்தரப்பிரதேசம், பிஹார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் 41 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை தேர்தல் நடைபெற்றது.

இதில், மேற்கு வங்க மாநிலத்தில் 81.77 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கு 2009-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 82 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரில் மோடி

“2014- பொதுத் தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகியிருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது. வாட்டும் வெயில், கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்துள்ளனர்” என ட்விட்டர் தளத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Wed May 14, 2014 2:36 am

ஒரு எம்.பி.யை கொண்ட கட்சி என்றாலும் பரவாயில்லை யார் ஆதரவு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம் பா.ஜனதா அறிவிப்பு

ஒரு எம்.பி.யை கொண்ட கட்சி என்றாலும் பரவாயில்லை, யார் ஆதரவு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று பா.ஜனதா கூறியது.

அமித் ஷா

பா.ஜனதா கூட்டணி, மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இருப்பினும், எந்த கட்சியின் ஆதரவையும் ஏற்க பா.ஜனதா தயாராக உள்ளது. இதுகுறித்து, குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடிக்கு நெருக்கமானவரும், உத்தரபிரதேச மாநில பா.ஜனதா பொறுப்பாளருமான அமித் ஷா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

272–க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்குடன் போட்டியிட்டோம். அது கிடைக்கப்போகிறது. இருப்பினும், ஒரே ஒரு எம்.பி.யை கொண்ட கட்சியாக இருந்தாலும், எங்களை ஆதரிக்க விரும்பினால், தேச நலன்கருதி அதை ஏற்றுக்கொள்வோம். பா.ஜனதா கூட்டணிக்கு 290 முதல் 305 இடங்கள் வரை கிடைக்கும். உத்தரபிரதேசத்தில் மட்டும் 50 முதல் 55 இடங்கள் கிடைக்கும்.

அத்வானிக்கு என்ன பொறுப்பு

தேர்தலுக்கு பிறகு, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்களுக்கு என்ன பொறுப்பு அளிப்பது என்பதை கட்சியின் உயரிய அமைப்பான ஆட்சி மன்றக்குழு முடிவு செய்யும். எனக்கு என்ன பொறுப்பு என்பதையும் கட்சி முடிவு செய்யும். கட்சியின் முடிவை நான் ஏற்றுக்கொள்வேன்.

இந்த தேர்தல் முழுவதும் பா.ஜனதாவுக்கு சாதகமாகவே அமைந்தது. இது, நரேந்திரமோடியின் வெற்றி, பா.ஜனதாவின் வெற்றி.

உ.பி. வியூகம்

உத்தரபிரதேசத்தில் அதிக இடங்களைப் பிடிக்க நாங்கள் அதிரடி வியூகம் வகுத்தோம். மாநிலத்தை இரண்டு, மூன்று தொகுதிகள் அடங்கிய 30 பிளாக்குகளாக பிரித்தோம். ஒவ்வொரு பிளாக்கிலும் தனித்தனி வியூகத்துடன் செயல்பட்டோம். கட்சியின் அமைப்புரீதியான கட்டமைப்பை பலப்படுத்த கடுமையாக பாடுபட்டேன். உ.பி.யின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கட்சிக்கு நல்ல வெற்றி கிடைக்கும். இவ்வாறு அமித் ஷா கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Wed May 14, 2014 2:55 am

காங்கிரசை கைகழுவுகிறது பவார் கட்சி:நிலையான ஆட்சிக்கே ஆதரவு என்கிறது

மும்பை:கடந்த 15 ஆண்டாக, காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும், தேசியவாத காங்., கட்சியின் அணுகுமுறையில், தற்போது மாற்றம் ஏற்பட்டு உள்ளது. பா.ஜ.,வுக்கு ஆதரவாக, அக்கட்சி கருத்து தெரிவித்து உள்ளது.

சமரசம்:காங்கிரசும், மத்திய விவசாய அமைச்சர், சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும், மகாராஷ்டிரா மாநிலத்தில், 15 ஆண்டாக, கூட்டணி ஆட்சி நடத்துகின்றன. இருகட்சி தலைவர்களுக்கும் இடையே, அவ்வப்போது மோதல் ஏற்பட்டாலும், மூத்த தலைவர்கள் தலையிட்டு, சமரசம் செய்வது வழக்கமாக உள்ளது.இந்த லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, தேசியவாத காங்., பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க பேச்சு நடத்துவதாக, தகவல் வெளியானது. பின், அது வதந்தி என, தெரியவந்தது.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து, கருத்துக் கணிப்புகளும் வெளிவந்து விட்டன. கருத்துக் கணிப்புகள், பா.ஜ.,வுக்கு ஆதரவாகவே உள்ளன.'மத்தியில், பா.ஜ., ஆட்சி அமையும்' என, தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனால், தேசியவாத காங்., கட்சியின் அணுகுமுறையில், திடீர் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய கனரக தொழில் துறை அமைச்சருமான, பிரபுல் படேல், நேற்று கூறியதாவது:காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணியில், நாங்கள் அங்கம் வகிப்பது உண்மை தான். அதே நேரத்தில், உண்மை நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது. நிலையான ஆட்சி அமைவதே, நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது.பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன், மத்தியில் ஆட்சி அமைத்தால், அது, நல்ல விஷயம் தான். எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும், அது, நிலையான ஆட்சியாக இருக்க வேண்டும்.

நாட்டின் நலன்:பா.ஜ., நிலையான ஆட்சியை தந்தால், அதை வரவேற்கிறோம். அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களின் கொள்கைகள், வேறுபட்டவையாக இருக்கலாம்.ஆனால், நாட்டின் நலன் சார்ந்த விஷயத்தில், அனைவருக்கும் ஒரே கருத்து தான். நாட்டு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலான அரசு அமைய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu May 15, 2014 1:04 pm

தோல்வியை ஏற்றுக் கொள்ள தயாராகும் ராகுல் 'கட்சி நடத்திய சர்வேயிலும் பா.ஜனதாவுக்கு 225-230 தொகுதிகள்'

படுதோல்வியை சந்திக்கும் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக மறுத்தது. ராகுல் காந்தி மற்றும் அவரது உதவியாளர்கள் ஒன்றாக கை கோர்த்துக் கொண்டு கடந்த இரண்டு நாட்களாக பஞ்ச் வார்த்தைகள் மற்றும் நல்ல நகைச்சுவை வார்த்தைகளை கொண்டு பேசி வருகின்றனர். அவர்கள் நாங்கள் இந்தகளத்தில் தான் தோற்றுள்ளோம் ஆனால் போரில் தோற்கவில்லை என்று பேசுகின்றனர். நாடு முழுவதும் ராகுலின் குழு எடுத்த உள்கட்சி சர்வேயில் கட்சி 100 தொகுதிகளை கூட தாண்டாது என்று தெரியவந்துள்ளது என தகவல்கள் தெரிவித்துள்ளன. கட்சி 85 முதல் 92 தொகுதி வரையிலே வெற்றி பெறும் என்றும், பாரதீய ஜனதா 225 முதல் 230 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று சர்வேயில் தெரிய்வந்துள்ளது.

2009 பாராளுமன்றத் தேர்தலில் 206 தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ், இந்த தேர்தலில் 100க்கும் கீழான தொகுதியிலே வெற்றி பெறும் என்று தெரியவந்ததை அடுத்து தோல்வியை ஏற்றுக் கொள்ள அவர் தாயாராகி வருவதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், எதிர்க்கட்சி தலைவராக செயல்பட ராகுல் காந்திக்கு உதவி செய்ய மூத்த அரசியல் தலைவர்களை கட்சி தேடி வருவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by T.N.Balasubramanian on Thu May 15, 2014 10:26 pm

தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறுகிறது .
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுகிறதோ?
பார்ப்போம்
ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by ரா.ரா3275 on Thu May 15, 2014 10:32 pm

@T.N.Balasubramanian wrote:[link="/t108308p135-2014#1063876"]தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறுகிறது .
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுகிறதோ?
பார்ப்போம்
ரமணியன்

நல்லா இருக்கே இந்த கணக்கு.சூப்பர் அய்யா.
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum