ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Wed Feb 19, 2014 11:21 pm

First topic message reminder :


 பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்?

தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது.

இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.  பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே வரும் 3-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu Apr 17, 2014 11:45 pm

 ‘‘மக்களை முட்டாள்கள் ஆக்குவதை நிறுத்துங்கள்’’ நரேந்திரமோடிக்கு ராகுல் காந்தி கண்டிப்பு

மக்களை முட்டாள்கள் ஆக்குவதை நரேந்திரமோடி நிறுத்தவேண்டும் என்று ராகுல் காந்தி கண்டிப்புடன் கூறினார்.

‘டாபி’ மாதிரி வளர்ச்சி

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலம், கிசான்கஞ்சில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

குஜராத் மாதிரி வளர்ச்சியை நீங்கள் டாபி மாதிரி (இனிப்பு மிட்டாய் மாதிரி) அல்லது பலூன் மாதிரி என அழைக்கலாம். இவையெல்லாம் டாடா, அதானி போன்ற பெரிய மனிதர்கள் பலன் அடையத்தக்க விதத்தில் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை தவிர வேறொன்றும் இல்லை.

டாடாவுக்கு கடன்

பீகாரின் புர்னியா மாவட்ட அளவிலான நிலம், ஏழை, எளியோரின் 45 ஆயிரம் ஏக்கர் நிலம்– ஒற்றை மனிதருக்கு (தொழில் அதிபர் அதானிக்கு) ஒரு சதுர மீட்டர் ரூ.1 என்ற விலையில், அதாவது ஒரு இனிப்பு மிட்டாயின் விலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

நானோ கார் திட்டத்துக்காக டாடா மோட்டார்சுக்கு மோடி 0.1 சதவீத வட்டியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கி இருக்கிறார். ஆனால் நாட்டில் சாமானிய மனிதர்கள் 12 சதவீத வட்டிக்கு வங்கிகளிடமிருந்து கடன் பெறுகிறார்கள். ஒவ்வொரு நானோ காருக்கும் குஜராத் அரசு ரூ.40 ஆயிரம் உதவி வழங்குகிறது.

ரூ.12 சம்பாதித்தால் பணக்காரர்

குஜராத் அரசில் கல்வி, சுகாதாரம், பிற மக்கள் நலத்திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.10 ஆயிரம் கோடியை விடக்குறைவுதான்.

குஜராத்தில் தினமும் ரூ.11–க்கு குறைவாக சம்பாதிக்கிற 40 லட்சம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்வதாக சொல்கிறார்கள். அப்படியானால், தினமும் ரூ.12 சம்பாதிக்கிற ஒருவர் குஜராத்தில் பணக்காரர்.

மக்களை முட்டாள் ஆக்காதீர்கள்

குஜராத்தில் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு பானை குடிநீர் கிடைப்பதில்லை. நரேந்திரமோடி அவர்களே, மக்களை முட்டாள் ஆக்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சி மாதிரி, மற்றொரு மாநிலத்துக்கு சரிப்பட்டு வராது. பீகார் மாதிரி வளர்ச்சி என்றால் அது பீகாருக்கு மட்டுமே சரிபட்டு வரும். அவர் எல்லாம் தெரியும் என்கிறார். அவர் கூற்றுப்படி குஜராத் வளர்ச்சிக்கு அவரைத்தவிர யாருமே பங்களிப்பு செய்யவில்லை. அதையே அவர் ஒட்டுமொத்த நாட்டுக்கும் கூறுவார்.

சித்தாந்த யுத்தம்

நடைபெறுகிற பாராளுமன்ற தேர்தல், இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையேயான மோதல் அல்ல. இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான யுத்தம்.

முதல் சித்தாந்தம், நாட்டின் வளர்ச்சியில் இந்துவா, முஸ்லிமா, பிற்படுத்தப்பட்டவரா, முற்பட்டவரா, ஏழையா, பணக்காரரா என பார்க்காமல் அத்தனைபேரையும் ஒன்றாக அழைத்துச்செல்கிற காங்கிரசின் சித்தாந்தம்.

அடுத்தது, பாரதீய ஜனதாவினுடையது. அது, முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களை மோத விடுவது. மராட்டியத்துக்கு செல்கிற பீகார் மக்களை மராட்டிய மக்கள் அடிக்க தூண்டுவது. கர்நாடகத்தில் பெண்களை குறிவைப்பது.

காங்கிரசின் விருப்பம்

பாரதீய ஜனதாவினருக்கு இந்த தேர்தல் விவசாயிகளை, தொழிலாளர்களை, ஏழைகளை மாற்றுவதற்கான தேர்தல் அல்ல. ஒரே ஒரு மனிதரை மையப்படுத்தி, அவரை பிரதமராக ஆக்குவதற்கான தேர்தல்.

காங்கிரஸ் கட்சி, நாட்டில் வறுமைக்கோட்டுக்கு சற்று மேலே உள்ள 70 கோடி மக்களையும் உயர்த்த விரும்புகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu Apr 17, 2014 11:45 pm

காங்கிரஸ் கட்சியினர் யாரும் திமிராகப் பேசுவது கிடையாது; ராகுல் காந்தி


மத்தியபிரதேச மாநிலம் காண்ட்லாவில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, காங்கிரஸ் கட்சியினர் யாரும் திமிராகப் பேசுவது கிடையாது. கனிவாகவும், பண்பாகவும் பிரசாரம் செய்வது காங்கிரஸ் கட்சியினருடைய இயல்பு. நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைக்கும் உணவு கிடைப்பதை காங்கிரஸ் உறுதி செய்துள்ளது. உணவுப் பொருள்களுக்கான ஆதார விலையை காங்கிரஸ் அரசு பெருமளவு உயர்த்தியுள்ளது. அரசின் செயல்பாடு பற்றி யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தால் ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Thu Apr 17, 2014 11:48 pm

ம.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு தாவிய செஞ்சி ராமச்சந்திரன் அ.தி.மு.க.வில் இணைந்தார்

அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதாவை தி.மு.க.வில் பணியாற்றி வந்த, முன்னாள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய இணை மந்திரியுமான செஞ்சி ந.ராமச்சந்திரன் மற்றும் அவருடைய மகன் டாக்டர் ஆர்.மணிமாறன் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களை அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் இணைந்த செஞ்சி ந.ராமச்சந்திரன் தி.மு.க.வில் இணைவதற்கு முன்பு ம.தி.மு.க.வில் இருந்து வந்தார். ம.தி.மு.க. சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்தியமந்திரியாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Sun Apr 20, 2014 1:50 am

ஜெ., பதில் சொல்ல வேண்டும்:பா.ஜ.,

நாகர்கோவில்: பா.ஜ., மாநில தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் கூறியதாவது: தமிழகத்தில் அதிக இடங்களை பா.ஜ., கூட்டணி கைப்பற்றும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து, ஓட்டுக்களை விலைக்கு வாங்கி விடலாம் என, பெரும் வர்த்தகர்கள் சிலர் களத்தில் இறங்கி உள்ளனர்.இதை தேர்தல் கமிஷன் தடுக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தவறுக்கு முதல்வர் ஜெயலலிதாவும் பதில் சொல்ல வேண்டும். காரணம், இது அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் நடைபெற்ற தவறு, என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by raghuramanp on Sun Apr 20, 2014 9:01 am

இதெல்லாம் ஒரு பொழப்பா
avatar
raghuramanp
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 222
மதிப்பீடுகள் : 52

View user profile

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Apr 21, 2014 1:24 am

ராமர் கோயில்: சட்ட விதிகளை மீற மாட்டோம்- பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளீதர ராவ் உறுதி

ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில், அரசியல் அமைப்பு சட்ட விதிகளை நிச்சயம் மீற மாட்டோம் என, பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளீதர ராவ் தெரிவித்தார்.

கோவை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:

தமிழக அரசியல் பாதையில் மே 16-ம் தேதிக்குப் பின்னர் பெரிய மாற்றங்கள் இருக்கும். இதற்கு முன்பாக தமிழகத்தில் பாஜக தலைமையில் இவ்வளவு வலுவான கூட்டணி அமைந்தது இல்லை. தமிழகத்தில் அதிமுகவுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும். திமுகவில் உள்கட்சி பூசல், குடும்பப் பிரச்சினை அதிகம் இருப்பதால் இந்த தேர்தலில் வலுவிழந்து உள்ளனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி யில், தமிழகம் ஒரு முக்கியமான மாநிலமாகக் கருதப்படுகிறது. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழகத்தில் 9 இடங்களில் சூறா வளி பிரச்சாரம் மேற்கொண்டார். அத்வானியும் வரும் 21-ம் தேதி தமிழகத்தில் பிரச்சாரம் மேற் கொள்ள உள்ளார். இதனால், எங்களது கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளது.

ஊழல், தவறான நிர்வாகம் போன்ற காரணங்களுக்காக காங்கிரஸ் கட்சி மத்திய ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட உள்ளது. நாங்கள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். விவசாயம், தொழில் வளர்ச்சி, விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்துதல், தெளிவான, ஊழல் அற்ற நிர்வாகம் எங்களது ஆட்சியின் முக்கிய குறிக்கோள்.

தமிழகத்தில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டுமானால், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால் மட்டுமே முடியும். தமிழகத்தில் வேளாண் தொழில், மின் தட்டுப்பாடு பிரச்சினைகள், மோடி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் சரி செய்யப்படும் என்றார்.

நீலகிரியில் ஆதரவு யாருக்கு?

நீலகிரி தொகுதியில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.

ராமர் கோயில் கட்டுவது சிறுபான்மையினர் நலனுக்கு எதிராக அமையாதா என கேட்ட போது, ராமர் கோயில் கட்டுவதில் அரசியல் அமைப்பு சட்ட விதிகளை நிச்சயம் மீற மாட்டோம். எனவே, சிறுபான்மையினர் நலனுக்கு எதிராக அமையாது என்றார்.

தேர்தலுக்கு பின்னர் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா என கேட்டபோது, பாஜக தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்கும். எங்களுடன் கூட்டணி கட்சியினரும் உள்ளனர். எங்களுக்குள் தர்ம சங்கடத்தை நீங்கள் (பத்திரிகைகள்) ஏற்படுத்த வேண்டாம் என்றார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறதே எனக் கேட்ட போது, அவர் பாமகவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறாரே, அது போதாதா. பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில்தானே உள்ளது. அவரும், எங்களுடனும், மோடியுடனும் தொடர்பில்தான் உள்ளார் என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Apr 21, 2014 2:56 am

தமிழக மக்களுக்காக நான் 27 முறை சிறைக்கு சென்றுள்ளேன் : வைகோ பேச்சு

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் வைகோ அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி, புதிய பஸ் ஸ்டாண்டு, அண்ணாசிலை, ராமசாமிபுரம், காமராஜர் சிலை, நேரு மைதானம், பாவடி தோப்பு உள்பட பல இடங்களில் பம்பரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியபோது,   ‘’தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து தமிழக மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். இந்த பாராளுமன்ற தேர்தலில் மாற்றுக் கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி வந்துள்ளது. தமிழக மக்களுக்காக நான் 27 முறை போராடி சிறைக்கு சென்றுள்ளேன்.

தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய முல்லை பெரியார், காவேரி, பாலாறு, மற்றும் மீனவர்கள் பிரச்சனைகள் தீர நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும். நமது தொகுதியில் புதிய வாக்காளர்கள் அனைவரும் தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத அணியான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. கட்சியின் பம்பரம் சின்னத்திற்கு வாக்களித்து மோடியை பிரதமராக தேர்வு செய்ய ஆர்வமாக உள்ளனர்.

புதிய வாக்காளர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினர் அனைவரிடமும், ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என அறிவுரை வழங்கி வருகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சி வால் மார்ட் போன்ற பெரிய நிறுவனங்களை இந்தியாவிற்குள் வியாபாரம் செய்ய அனுமதி அளித்துவிட்டு, உள்ளுர் வியாபாரிகளின் தலையில் கல்லை தூக்கிபோட்டு விட்டது. தமிழகத்தில் குடியால் பாதிப்படைந்த குடும்பங்களை பாதுகாக்க மது கடைகளை மூட வேண்டும் என்று ஒரே நோக்கில் 1200 கி.மீ. தொலைவில் நடை பயணம் செய்தேன்.

மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் மதுக்கடைகள் திறந்தால் 20 ஆயிரம் கோடி வருமானம் வரும் என மோடியிடம் கூறியுள்ளனர். அதற்கு அவரோ 50 ஆயிரம் கோடி கிடைத்தாலும் நான் அதை திறக்கமாட்டேன் என உறுதியாக கூறினார்.

கடந்த தேர்தலில் போட்டியிட்டோர் காமராஜர் வீட்டிற்கு சென்றால் தோற்றுவிடுவோம் என்று பொய் கதைகளை கூறி வந்தனர். அக்கதைகளை மறைக்கவே நான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் காமராஜர் வீட்டிற்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வந்து வேட்புமனு தாக்கல் செய்தேன்’’என்று கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Apr 21, 2014 2:57 am

சிதம்பரத்தில் யார் சாதி கலவரத்தை தூண்டுபவர்கள் என தெரியும்? :க.அன்பழகன்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.தி ருமாவளவனை ஆதரித்து திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் காட்டுமன்னார்கோயிலில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர், ’’பெரியார் ஊட்டிய உணர்வும், அண்ணா வளர்த்த பகுத்தறிவும்தான் நம்மை வாழ வைக்கிறது. அந்த கொள்கையுடன் வாழுபவர் திருமாவளவன். தாழ்த்தப்பட்ட, ஓடுக்கப்பட்ட, ஓரங்கப்பட்ட தலித் சமுதாய மக்கள் விழிப்புணர் வுக்காக பெரிய குரல் எழுப்பியவர். தன்னலம் கருதாமல் பாடுபடுபவர். சிதம்பரம் நகரில் 44 ஆண்டுகள் வாழ்ந்தவன், படித்தவன் நான். இங்கு யார் சாதி கலவரத்தை தூண்டுபவர்கள் என தெரியும். யார் ஆத்திரப்படுவார்கள், யார் நஷ்டப்படுவார்கள் என்பது தெரியும். ஆனால் திருமாவளவன் மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்ற பிறகு இன்று ஒரு அமைதி.

ஜனநாயக மனப்பாண்மை, ஒரு ஒற்றுமை, நாம் அனைவரும் ஒரு குலம், தமிழர்களாக வாழ வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட திராவிட இயக்கங்களின் நீதிகட்சி தலைவர்கள் தீண்டாமைக்கு எதிராக போராடியவர்கள். தாழ்த்தப்பட்டவர்கள் ஓடுக்கப்படுவது நியாயம் அல்லை என உரிமையை பெற்று தந்தவர் கருணாநிதி. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு உயர்பதவி வழங்கி பெருமைபட்டவர் கருணாநிதி. அப்படிப்பட்ட வரலாற்றை படைத்துள்ள இயக்கம் திராவிட இயக்கங்கள்.

நடைபெறவுள்ள தேர்தலில் மத்தியில் புதிய ஆட்சி மாற்றம் தேவை, மற்றொன்று தமிழகத்தில் நடைபெறும் ஆட்சிக்கு முடிவு கட்டும் என்னத்தை ஏற்படுத்தும் தேர்தலாக திகழ்கிறது. தமிழகம் முழுவதும் திமுகவிற்கு எழுச்சியும், வரவேற்பும் உள்ளதை பார்த்தால், திமுவை இனி தோற்கடிக்க முடியாது என்ற சிறப்பை பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுபாடு உள்ளது. பாசனத்திற்கு நீர் இன்றி விவசாயிகள் வேதனையில் உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் 7 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வருமானம் இல்லாமலும், இழப்பீடு கிடைக்காமலும் விவசாயிகள் மிகவும் அவதியுற்று வருகின்றனர்.

கருணாநிதி பயிர் இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தினார். அத்திட்டத்தை ஜெயலலிதா அரசு காப்பாற்ற தவறிவிட்டது. வாங்கிய கடனை கட்ட முடியவில்லை என்பதால் விவசாயிகள் பெற்ற 7 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்தவர் கருணாநிதி. புதிய கடளை வட்டியில்லா கடனாக மாற்றினார்.

தமிழகத்தில் திமுகவிற்கும், அதிமுக மற்றும் பல்வேறு கட்சிகளுடன் போட்டியில்லை. திமுகவினரி டையேதான், எந்த தொகுதியில் அதிக வாக்குகள் பெறுவது என்ற போட்டி நிலவுகிறது. இந்தியாவில் மோடி அலை வீசவில்லை. மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும்’’ என்று பேசினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Apr 21, 2014 2:59 am

காங்கிரசுக்கு ஆதரவாக நடிகை மும்தாஜ் பிரச்சாரம்

அரக்கோணம் தொகுதியில் ஆற்காடு, ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம், அரக்கோணம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை மும்தாஜ் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியபோது,  ‘’நமது வேட்பாளர் லண்டனில் படித்தவர். தமிழக மக்களுக்கு உழைக்க வந்திருக்காரு. இளைய எம்.பி. ஒருவரை உருவாக்க இளம் தலைவர் ராகுல் அவரை நிறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் எந்தவித மதக்கலவரமும் நடந்தது இல்லை. இனி மேலும் நடக்காமல் இருக்க காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும். நம் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்து

ள்ளவர்கள் குடும்பத்தில் பிறந்த ராகுலை பிரதமராக்க எல்லோரும் பாடுபட வேண்டும்’’என்று  பேசினார்.

கலவை திமிரி, ஆற்காடு பகுதியில் பேசும் போது தமிழை தத்தி தத்தி மழலை மொழி போல பேசினார். தமிழை ஆங்கிலத்தில் எழுதி வைத்து கொஞ்சும் தமிழில் பேசினார். தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தால் தமிழ் கொஞ்சம் சரளமாக வந்தது.

நடிகை மும்தாஜ் அரக்கோணம் பழைய பஸ் நிலையம், இந்திரா காந்தி சிலை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்வதாக இருந்தது. இதனால் அவரை பார்க்க ரசிகர்கள் 2 இடங்களிலும் காத்திருந்தனர்.

ஆனால் மும்தாஜ் ஓடியன்மணி தியேட்டர் அருகில் பிரசாரம் செய்துவிட்டு திறந்த ஜீப்பில் சுவால்பேட்டை வரை வந்தார். இதனால் பழைய பஸ் நிலையத்தில் நின்றிருந்தவர்கள் இந்திரா காந்தி சிலை அருகே ஓடினர். ஆனால் மும்தாஜ் திடீரென காரில் ஏறி திருத்தணி சென்றார்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Apr 21, 2014 3:00 am

3 வருடமாகியும் மின்சாரம் உற்பத்திக்கான திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வரவில்ல.: சுப. உதயகுமார்

அதிமுக, திமுக கட்சிகள் மக்கள் நலனில் அக்கரை காட்டவில்லை. காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என சுப. உதயகுமார் தெரிவித்தார்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மை.பா. ஜேசுராஜை ஆதரித்து, கன்னியாகுமரியில் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் சக்தி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சுப. உதயகுமார், ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் செய்தார்.

பேட்டை, திருநெல்வேலி நகரம், சந்திப்பு, கொக்கிரகுளம், மேலப்பாளையம், குலவணிகர்புரம், பாளையங்கோட்டை பகுதியில் திறந்த ஜீப்பில் இருந்தவாறு அவர் பிரசாரம் செய்தார். அப்போது உதய குமார் பேசியபோது, ‘’நாட்டில் மக்கள் வரிப்பணம் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரால் சுரண்டப் படுகிறது. இயற்கை

வளங்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் வளம் பெறுகின்றன.

தமிழகத்தில் அதிமுக, திமுக மக்கள் நலனில் அக்கரை காட்டவில்லை. அவர்களை வளப்படுத்தி கொள்கிறார்கள். 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி, மின் உற்பத்தி திட்டங்களை கொண்டு வரவில்லை. மின்தடையை 3 மாதங்களில் தீர்க்கப்படும் என்று தெரிவித்தார்கள். 3 வருடமாகியும் மின்சாரம் உற்பத்திக்கான திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வரவில்லை.

காங்கிரஸ் ஆட்சியால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. பல தரப்பட்ட இனம், மொழி சார்ந்த மக்கள் வாழும் மதசார்பற்ற நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆகவே ஆம் ஆத்மி கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும்’’ என்றார் அவர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Apr 21, 2014 3:01 am

மோடி ஏன் நாட்டின் பிரதமராக வர வேண்டும்?: கெஜ்ரிவால் கேள்வி

மோடி மீது கண் மூடித்தனமாக நம்பிக்கை வைக்காதீர்கள் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை செய்துள்ளார். வாரணாசியில் உள்ள திரிபோலிக்கு அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் பேசியபோது,

நான் இங்குள்ள கிராமத்திற்கு சென்றபோது என்னை பார்த்ததும் சில இளைஞர்கள் 'மோடி' 'மோடி' என கோஷமிட்டனர். மோடி ஏன் நாட்டின் பிரதமராக வர வேண்டும்? என நான் அவர்களிடம் கேட்டேன். ஆனால் அதற்கு அவர்களால் எந்த பதிலும் தர முடியவில்லை. ஊடகங்களில் மோடி பற்றி சித்தரிக்கப்படுவது போதை அளிப்பது போன்றது. அதில் உங்கள் உணர்வுகளை இழந்து விடாதீர்கள் என்று பேசினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Apr 21, 2014 3:02 am

எஸ்.எம்.எஸ். மூலம் ஜெயலலிதா பிரச்சாரம்

தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளுக்கும் வருகிற 24–ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் நாளை மறுநாளுடன் (22–ந்தேதி) நிறைவடைகிறது. தேர்தலையொட்டி, அரசியல் கட்சியினர், செல்போன்கள் மூலமாகவும் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

முதலமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. வுக்கு ஆதரவு கேட்டு வாக்காளர்களிடம் செல்போன் மூலமாக பேசும் வகையில் ‘‘வாய்ஸ் ரெக்கார்டர்’’ ஒன்றும் வெளியானது. திடீரென உங்களுக்கு வரும் போனில், ஜெயலலிதா பேசுவார். ‘‘உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன். இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கூறியதும் போன் இணைப்பு துண்டிக்கப்படும். இது அ.தி.மு.க.வினர் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் ஜெயலலிதா தனது செல்போனில் இருந்து அனுப்புவது போன்ற ஒரு எஸ்.எம்.எஸ்சும் செல்போனில் வலம் வர தொடங்கியுள்ளது. வணக்கம், இந்தியாவை வல்லரசாக்க 40/40 என்ற இலக்கை அ.தி.மு.க. அடைய ‘‘இரட்டை இலை’’ சின்னத்துக்கு வாக்களியுங்கள். அன்புடன் ஜெ.ஜெயலலிதா, அ.தி.மு.க. பொதுச் செயலாளர்’’என்று கூறப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Apr 21, 2014 3:05 am

தேர்தல் விதி மீறல்: யோகா குரு ராம்தேவ் மீது வழக்குப்பதிவு

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி பத்திரிகையாளர்களை சந்தித்ததாக யோகா குரு ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பதேபூர் மண்டல துணை கோட்டாட்சியர் விவேக் ஸ்ரீவத்சவா கூறுகையில், ’’இங்குள்ள யோகா மையத்தில் நடைபெற்ற யோகா திக்ஷா நிகழ்ச்சியில் சனிக்கிழமை கலந்துகொண்ட ராம்தேவ், அதன் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளார்.


இந்த சந்திப்புக்கு மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறவில்லை. எனவே இது தொடர்பாக அந்த யோகா மைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் இது குறித்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Tue Apr 22, 2014 2:33 am

ஒரே ஒரு நபருக்காக காட்டுக்குள் வாக்குச்சாவடி அமைக்கும் தேர்தல் ஆணையம்

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜுனகத் மாவட்டத்தில் பனெஜ் பகுதியில் வசிக்கும் ஒரு நபர் வாக்களிக்க வாக்குச்சாவடி அமைக்கப்படவுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கிர் வனப் பகுதியில் அதிக அளவில் சிங்கங்கள் காணப்படுகின்றன. கிர் வனப் பகுதிக்குள் இருக்கும் பனெஜ் பகுதியில் அறுபது வயது மதிக்கத்தக்க மஹந்த் பரத்தாஸ் தர்ஷன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார்.

இவர் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியாக இவருக்காக மட்டும் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக பேசிய ஜுனகத் மாவட்ட ஆட்சியர் அலோக் குமார் பாண்டே, நாங்கள் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை தான் பின்பற்றுகிறோம். எந்த ஒரு வாக்காளரும் வாக்களிக்க 2 கி.மி தூரதிற்கு அதிகமான தூரம் பயணம் செய்யும் நிலை இருக்ககூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி, ஒரேஒரு நபருக்காக 5 பேர் கொண்ட தேர்தல் அதிகாரிகள் குழு, இரண்டு வனப்பகுதி காவல்துறையினரின் பாதுகாப்போடு 35 கீ.மி காட்டுக்குள் சென்று வாக்குச்சாவடி அமைக்கவுள்ளனர் எனத் தெரிவித்தார்.

கடந்த 2004, 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களிலும், 2007 மற்றும் 2012 ஆண்டுகள் நடைபெற்ற மாநில தேர்தல்களிலும் தர்ஷன்தாஸ் வாக்கை பெற அதிகாரிகள் சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் காட்டுக்குள் சென்று, வாக்குச்சாவடி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Tue Apr 22, 2014 10:18 pm

'என் தாய், வீடுகளில் பாத்திரம் கழுவினார்' நான் டீ விற்றேன்: நரேந்திர மோடி உருக்கமான பேச்சு

மராட்டிய மாநிலம், துலேயில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உருக்கமாகப் பேசினார். அப்போது அவர், ' நான் டீ விற்று வாழ்க்கை நடத்தினேன். என் தாய், மற்றவர்களின் வீடுகளில் பாத்திரம் கழுவினார். எனவே ஏழை மக்களின் துயரங்களை நான் அறிந்திருக்கிறேன். நாம் அம்பேத்கரைப் பின்பற்றி வந்திருக்கிறேன். என்னை விட உங்கள் பிரச்சினைகளைப் புரிந்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது' என குறிப்பிட்டார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Tue Apr 22, 2014 10:19 pm

அனல் பறக்கும் பிரச்சாரம் ஓய்ந்தது; தமிழகத்தில் தேர்தலையொட்டி 36 மணிநேர 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது

நாடு முழுவதும் 16 வது பாராளுமன்ற தேர்தல் 9 கட்டமாக நடைபெறும் என்று கடந்த மாதம் 5ந்தேதி முறைப்படி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

அதிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தது. அந்தவகையில் தமிழ்நாட்டில் 6 வது கட்டமாக வியாழக்கிழமை ஓட்டுப்பதிவு நடக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 875 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலை அமைதியான முறையிலும், நேர்மையான முறையிலும் நடத்துவதற்காக போலீசாருடன், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் மாலையுடன் முடிவடைந்தது.

தேர்தலையொட்டி மாலை 6 மணி முதல், 24ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 36 மணிநேர 144 தடை உத்தரவு மாலை 6 மணிக்கு அமலுக்கு வந்தது. தொடர்ந்து நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Tue Apr 22, 2014 10:20 pm

தேர்தல் பிரசாரத்தை ஜெயலலிதா நிறைவு செய்தார்; ஒரே மேடையில் 40 அ.தி.மு.க. வேட்பாளர்கள்; சென்னையில் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், தனது பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 24–ந் தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மார்ச் மாதம் 3–ந் தேதி கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் இருந்து தனது தேர்தல் பிரசார பயணத்தை ஜெயலலிதா தொடங்கினார்.

சூறாவளி பிரசாரம்

புதுச்சேரி உள்ளிட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 17–ந் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி தொகுதியில் பிரசாரம் செய்தார்.

அன்றுடன் 37 தொகுதிகளில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

சென்னையில் 3 நாட்கள்

அதன் பின்னர், கடந்த 19–ந் தேதி முதல் சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் (வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை) வேன் மூலம் வீதி, வீதியாக சென்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் 19–ந் தேதி வாக்கு சேகரித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ஆலந்தூர் தாலுகா அலுவலகம், ஆலந்தூர் நீதிமன்றம், ரசாக் கார்டன், சூளை தபால் நிலையம், வால்டாக்ஸ் சாலை சந்திப்பு, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் வடசென்னை தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதா, திருவொற்றியூர் தேரடி, மணலி நெடுஞ்சாலை சந்திப்பு, சத்தியமூர்த்தி நகர், பெரவள்ளூர் சந்திப்பு ஆகிய இடங்களில் பொதுமக்கள் மத்தியில் பேசி வாக்கு சேகரித்தார்.

40 வேட்பாளர்கள்

தொடர்ந்து, தென்சென்னை தொகுதியில் நேற்று பிரசாரம் செய்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கந்தன்சாவடி பஸ் நிறுத்தம், ஐந்துவிளக்கு, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் ஆகிய இடங்களில் பேசினார்.

இறுதியாக, தியாகராயநகர் பஸ் நிலையம் அருகே நேற்று இரவு நடைபெற்ற கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 40 பேரும் பங்கேற்றனர்.

ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வி.என்.பி.வெங்கட்ராமனும் இதில் பங்கேற்றார். முதல்–அமைச்சர் ஜெயலலிதா வேனில் இருந்தபடி அங்கு திரண்டு இருந்த மக்கள் மத்தியில் பேசினார். வேனின் அருகே அமைக்கப்பட்டு இருந்த மேடையில் 40 வேட்பாளர்களும் அணிவகுத்து நின்றனர். அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.

பிரசாரத்தை நிறைவு செய்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அமைச்சர் பா.வளர்மதி, கோகுல இந்திரா எம்.எல்.ஏ. ஆகியோர் பூசனிக்காய் கொண்டு ஆரத்தி எடுத்து உடைத்தனர். பின்னர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா போயஸ் கார்டன் திரும்பினார். அங்கேயும், திரண்டு இருந்த ஏராளமான தொண்டர்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தி பூசனிக்காய் உடைத்தனர்.

1½ மாத பயணம்

மார்ச் மாதம் 3–ந் தேதி பிரசாரத்தை தொடங்கிய முதல்–அமைச்சர் ஜெயலலிதா 1½ மாத கால தொடர் சூறாவளி பிரசாரத்திற்கு பிறகு நேற்று தனது பிரசாரத்தை முடித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Tue Apr 22, 2014 10:26 pm

பாகிஸ்தானுக்கும் போனால் கூட நரேந்திர மோடியை எதிர்ப்பதை நிறுத்த மாட்டேன்: உமர் அப்துல்லா

பாகிஸ்தானுக்கும் சென்றால் கூட பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, எதிர்ப்பதை நிறுத்த போவது இல்லை என்று ஜம்மு காஷ்மிர் முதல் மந்திரி உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சி தலைவர் கிரிராஜ் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், மோடியை எதிர்ப்பவர்களுக்கு தேர்தலுக்கு பிறகு இந்தியாவில் இடம் கிடையாது அவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விட வேண்டியதுதான் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா, முசாப்பரபாத்தில் பேருந்தை பிடித்து எல்லை கட்டுபாட்டு கோட்டை தாண்டி சென்றால் கூட மோடியை எதிர்ப்பதை நிறுத்த மாட்டேன் என்று தெரிவித்தார்.

முன்னதாக, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உமர் அப்துல்லா, எங்களுக்கு இன்றையை தினம் மிரட்டம் மேல் மிரட்டல் வருகிறது. எங்களுக்கு ஸ்ரீ நகர் - முசாபராபாத் பேருந்து போக்குவரத்து உள்ளது. எனவே வாகா எல்லையை தாண்டி (பாகிஸ்தானுக்கு செல்ல)டெல்லிக்கோ அமிர்தசரஸ்க்கோ போகவேண்டியது இல்லை. முசபர்பாத்திலே நான் டிக்கெட் வாங்கி விடுவேன். ஏனெனில் நான் மோடியை எதிர்ப்பதை நிறுத்த போவது இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Sun Apr 27, 2014 3:37 am

சோனியாவின் ரேபரேலி தொகுதியின் நிலை கண்டு காங்.,அதிர்ச்சி: தொகுதி முழுவதும் பா.ஜ.,வின் புயல் பிரசாரம்

ரேபரேலி :காங்கிரஸ் தலைவர் சோனியா போட்டியிடும், உ.பி.,யின் ரேபரேலி தொகுதியை, அவர் நான்காவது முறையாக தக்க வைக்க, கடும் சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. 'ரேபரேலி நகரம் வாழ்கிறது; கிராமப்புறங்கள் தேய்கிறது' என, பா.ஜ., தீவிர பிரசாரம் செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியோ, தொகுதி மக்கள் சோனியாவை 'கை'விடமாட்டார்கள் என, நம்பிக்கையுடன் உள்ளது.

சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான உ.பி.,யின் ரேபரேலி தொகுதி, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான தொகுதி. இங்கு, நான்காவது முறையாக,காங்கிரஸ் தலைவர் சோனியா போட்டியிடுகிறார்.

நான்காவது முறை:

இம்மாதம் 30ல், இந்த தொகுதி யில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. சோனியாவை எதிர்த்து, பா.ஜ., சார்பில், அஜய் அகர்வால், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், பர்வேஸ் சிங் போட்டியிடுகின்றனர். முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. சோனியாவுக்கு ஆதரவாக இந்த செயல் கருதப்படுகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி சார்பில், முன்னாள் நீதிபதி பக்ருதீன் போட்டியிடுவார் என, அறிவிக்கப்பட்டது; கடைசி நேரத்தில் அவர், போட்டியிடப் போவதில்லை எனக் கூறி விலகி விட்டார். இதையடுத்து, சமூக ஆர்வலரான, அர்ச்சனா ஸ்ரீவஸ்தவா நிறுத்தப்பட்டுள்ளார். இத்தொகுதியில், 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இங்கு, சோனியா முதலில், 2004ல் போட்டியிட்டார். 'ஆதாயம் தரும் இரட்டை பதவியில் உள்ளார்' என, சர்ச்சை எழுந்ததை அடுத்து, பதவியை அவர் ராஜினாமா செய்தார்.பின், 2006 இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2009ல் போட்டியிட்டு, 3.72 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இப்போது நான்காவது முறை வெற்றிக்காக தீவிர ஓட்டு சேகரிப்பில் உள்ளார்.

காங்கிரசின் குடும்ப தொகுதியான இங்கு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளதால், பா.ஜ., சார்பில், ம.பி., முன்னாள் முதல்வர், உமா பாரதியை நிறுத்த முயற்சி நடந்தது. ஆனால், அவர், உ.பி.,யின் ஜான்சி தொகுதியை விட்டு நகர மாட்டேன் என, திட்டவட்டமாக கூறிவிட்டதால், கையில் கிடைத்த வேட்பாளராக, பா.ஜ., வழக்கறிஞர் அஜய் அகர்வால் நிறுத்தப்பட்டுள்ளார். ரேபரேலியில், சோனியாவுக்காக, அவர் மகள் பிரியங்கா தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இப்போது, மத்தியில் காங்கிரஸ் அரசு மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி, மோடி அலை ஆகியவற்றை பயன்படுத்தி, எப்படியும் வெற்றி பெற, பா.ஜ.,முயற்சிக்கிறது.

400 தொழிற்சாலை:

வாக்காளர்களை கவர, பா.ஜ., கூறும் புகார்கள்:

*சோனியா பல முறை வெற்றி பெற்றுள்ள போதும், ரேபரேலி நகர் பகுதியில் தான் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது; கிராமப்புறங்கள் மோசமாகத் தான் உள்ளன.

*தொகுதி முழுவதும் பொத்தல் விழுந்த, வாகன போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலைகள், கிராமங்களில் குடிதண்ணீர் பிரச்னை, அடிப்படை வசதிகள் இல்லை.

*ரேபரேலி நகரில் முன்னணி கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஆனால், தொகுதி முழுவதும், ஆரம்ப பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை.

*நகரை சுற்றிலும், நான்கு தேசிய நெடுஞ்சாலைகள், 'சூப்பராக' உள்ளன. இது, சோனியா குடும்பத்தார் வந்து போவதற்காக, மத்திய அரசு கண்ணும் கருத்துமாக அமைத்துள்ளது.

*கிராமங்களில் சாலை வசதி மோசமாக உள்ளது. மோட்டார் வாகனங்கள் போக முடியாத அளவிற்கு, குழிவிழுந்த சாலைகளாக உள்ளன.

*கிராமங்களில், உள்ள வீடுகள் அனைத்தும் களிமண்ணால் கட்டப்பட்டவையாக உள்ளன. இது, விருந்தினர் மாளிகையில் தங்கும், சோனியாவும், பிரியங்காவும் கண்டு கொள்வதில்லை.

*மூன்றாவது ரயில் பெட்டி தொழிற்சாலை, 2,700 கோடி ரூபாய் செலவில் ரேபரேலியில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இளைஞர்கள் போதுமான வேலைவாய்ப்பு இன்றிஉள்ளனர்.

*கிராமங்களில் குடி தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. பாசனத்திற்கு தேவையான தண்ணீர் இல்லை.

*கடந்த முறை சோனியா வெற்றி பெற்ற போது, மக்கள் படிப்பறிவு பெற வேண்டும் என, வலியுறுத்தி னார். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு படி இங்கு, 79.39 சதவீத ஆண்களும், 65.46 சதவீத பெண்களும் படிப்பறிவு பெற்று உள்ளனர். இது தேசிய அளவிலான சதவீதத்தை காட்டிலும் குறைவாகும்.

*நகருக்கு வெளியே, மின் தட்டுப்பாடு தலையாய பிரச்னையாக உள்ளது. இதனால், கடந்த 10 ஆண்டுகளில், 800 சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன; 400க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளும் செயல்படவில்லை.

*கிராமங்களில் அடிப்படை வசதி கள் மோசமாக உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக மேம்பாட்டு வேலை திட்டத்தில் ஊழல், மதிய உணவு திட்டத்தில் முறைகேடு போன்றவை முக்கியமாக உள்ளன.இப்படி, பா.ஜ.,வினர், சோனியாவின் தொகுதியை, அக்குவேறு ஆணி வேறாக பிய்த்து காட்டி, மக்களிடம் ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக, பிரியங்கா மற்றும் அவர் தாய் சோனியா,மக்களிடம் கூறுவதாவது:மத்திய அரசு பல வளர்ச்சி திட்டங்களை மேற்கொண்டாலும், அதை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு, மாநில அரசுக்கு தான் உள்ளது. அதில், அகிலேஷ் அரசு தவறி விட்டது.

*கிராமங்களில் சாலைகள் அமைப்பது, மின் சப்ளைக்கு தேவையான போஸ்டுகள், வயரிங் அமைப்பதற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்குகிறது; இதை, செயல்படுத்துவதும், மின்சப்ளையை வழங்குவதும், மாநில அரசின் வேலை.
*கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக, இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்யவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறிவருகின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Sun Apr 27, 2014 4:02 am

பா.ஜ., கூட்டணி கட்சிகள் கைப்பற்றும் இடங்கள் 317 : மூன்றாவது அணிக்கு ஆதரவளிக்க காங்., தயார்

'ஒன்பது கட்டங்களாக நடைபெறும், 16வது லோக்சபா தேர்தல் முடிவுகள், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு சாதகமாக அமையும்; அந்த கூட்டணி, 317 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்கும்' என, ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், மத்தியில் மூன்றாவது அணி ஆட்சியமைக்க உதவுவது என்ற முடிவுக்கு, காங்கிரஸ் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டின், 16வது லோக்சபாவுக்கான, எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இம்மாதம் 7 முதல், மே 12 வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை, இம்மாதம் 7, 9, 10, 12, 17 மற்றும் 24ம் தேதிகளில், ஆறு கட்டங்களாக ஓட்டுப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

அதிக இடங்களில்...

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில், தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆந்திரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில், இன்னும் மூன்று கட்டங்களாக ஓட்டுப் பதிவு நடைபெறவுள்ளது. அதன் பின், மே 16ல், ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.இந்நிலையில், 'லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைக்கும்' என, தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'மொத்தமுள்ள, 543 தொகுதிகளில், பா.ஜ., தலைமையிலான கூட்டணி, 317 இடங்களில் வெற்றி பெறும்; காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு, 120 இடங்கள் மட்டுமே கிடைக்கும்' என, அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல்:

*நாட்டிலேயே அதிகபட்சமாக, உ.பி.,யில், 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு உள்ளது. இங்கு, பா.ஜ., 50 இடங்களை கைப்பற்றும். இம்மாநிலத்தின் தேர்தல் முடிவுகள், மத்தியில் நடைபெரும் ஆட்சி மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும்.

* காங்கிரசை சேர்ந்த, முதல்வர், பிருத்விராஜ் சவான் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில், மொத்தமுள்ள, 48 லோக்சபா தொகுதிகளில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி, 35 இடங்களை கைப்பற்றும். காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடையும்.

*பீகாரில் மொத்தமுள்ள, 40 தொகுதிகளில், பா.ஜ., கூட்டணிக்கு, 30 இடங்கள் கிடைக்கும். இங்கு, ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜன சக்தி கட்சி, பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுகிறது.பா.ஜ.,வுடனான கூட்டணி முறிந்து, தேர்தலில் தனித்து போட்டியிடும், மாநில முதல்வர் நிதிஷ் குமாரின், ஐக்கிய ஜனதா தளம் இந்த தேர்தலில் படுதோல்வி அடையும்.

*பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, ம.பி.,யில் மொத்தம், 29 தொகுதிகள் உள்ளன. இதில், 26 இடங்களை, பா.ஜ., கைப்பற்றும்.

*தெலுங்கானா பிரிவினையால் ஏராளமான அரசியல் குழப்பங்கள் நிலவும் ஆந்திராவில், மொத்தமுள்ள, 42 தொகுதிகளில், பா.ஜ., - தெலுங்கு தேசம் கூட்டணி, 26 இடங்களில் வெற்றி பெறும்

*பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் ரமண் சிங் தலைமையிலான சத்தீஸ்கரில், மொத்தமுள்ள 11 இடங்களில், அனைத்திலும், பா.ஜ., வெற்றி பெறும்.

*பா.ஜ., ஆளும் மற்றொரு மாநிலமான கோவாவின், இரு தொகுதிகளிலும், பா.ஜ.,வே வெற்றி பெறும்.

*காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடகாவில், பா.ஜ., 18 இடங்களை கைப்பற்றும். இங்கு மொத்தம், 28 தொகுதிகள் உள்ளன.

*பா.ஜ., கோட்டையாக திகழும் ராஜஸ்தானில், 25 இடங்களில் 23ல், பா.ஜ., வெற்றி பெறும். இங்கு பா.ஜ.,வை சேர்ந்த வசுந்தரா ராஜே முதல்வராக உள்ளார்.

*பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், 26 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில், 24 இடங்களில், பா.ஜ., வெற்றி பெறும்; காங்கிரஸ் மீண்டும் படுதோல்வி அடையும்.

*திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்கத்தின், 42 தொகுதிகளில், பா.ஜ.,வுக்கு, 12 இடங்களில் வெற்றி கிட்டும். தற்போது இந்த மாநிலத்தில் ஒரு தொகுதி கூட, பா.ஜ., வசமில்லை.

*தலைநகர் டில்லியின், 7 தொகுதிகளில், பா.ஜ., 6ல் வெற்றி பெறும்.

*தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆகிய இரு திராவிடக் கட்சிகள் மட்டுமே, பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் தமிழகத்தில், இம்முறை பலமான கூட்டணியை அமைத்துள்ள பா.ஜ., புதிய வரலாறு படைக்கும். இங்குள்ள 39 தொகுதிகளில், பா.ஜ., கூட்டணிக்கு, 8 இடங்கள் வரை கிடைக்கும்.மொத்தமுள்ள, 543 லோக்சபா தொகுதிகளில், 317 இடங்களில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும்; காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, 120 இடங்களை கைப்பற்றும். மத்தியில் தே.ஜ., கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

குர்ஷித் சூசகம்:

இந்நிலையில், ''மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்படுமானால், மூன்றாவது அணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் உதவும்,'' என, மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின், தேவைப்பட்டால், மத்தியில் மூன்றாவது அணி ஆட்சி அமைக்க, காங்கிரஸ் ஆதரவளிக்கும். காங்கிரஸ், மூன்றாவது அணி கட்சிகளிடமிருந்து ஆதரவை பெறும் கட்சி மட்டுமல்ல; அவர்கள் ஆட்சி அமைக்கவும் ஆதரவளிப்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூன்றாவது அணியில், முலாயமின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், கம்யூ., கட்சிகள் போன்ற பல கட்சிகள் உள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Sun Apr 27, 2014 9:19 am

தோல்வி பயத்தால் 2 தொகுதிகளில் போட்டியிடும் மோடி: மம்தா காட்டம்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி வங்காள மொழி செய்தி சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெரும்பான்மையான அரசியல்வாதிகளிடையே வெளிப்படையான தன்மை இல்லை. மக்களின் நம்பகத்துக்கு உகந்தவர்களாகவும் அவர்கள் இருப்பதில்லை. குஜராத்தில் ஒரு தொகுதியிலும், உத்தரப்பிரதேசத்தில் ஒரு இடத்திலும் மோடி ஏன் போட்டியிட வேண்டும்?

இதில் இருந்து வெற்றி மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்பது தெரிகிறது. அவர் இரண்டு இடத்தில் வெற்றி பெற்றாலும், ஒரு இடத்தில் ராஜினாமா செய்ய வேண்டும். இதன் மூலம் தன்னை வாக்களித்து தேர்வு செய்த மக்களுக்கு அவர் நீதி செய்யப்போவதில்லை என்பது தெளிவாகிறது.

அப்படி இருக்கையில், வெளிப்படைத் தன்மையும், நம்பகத் தன்மையும் எங்கே இருக்கிறது? மோடி பெருமை அடித்த குஜராத் மாடலை நாடு முழுவதும் உருவாக்கிவிட முடியாது. அந்த வகையில் மேற்கு வங்காளம் மாநிலம் எவ்வளவோ நன்றாக உள்ளது.

பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம், கர்ப்பிணிகள் இறப்பு விகிதம் மற்றும் மனித வளர்ச்சி அளவுக்கோலின்படி, மேற்கு வங்காளத்தை விட குஜராத் இன்னும் பின்தங்கியே இருக்கிறது. கலவரத்தின் முகமோ, கலவரக்காரர்களின் கட்சியோ அதிகாரத்துக்கு வருவதை இந்த நாட்டு மக்கள் விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Apr 28, 2014 2:20 am

எங்கள் ஆட்சியில் வங்காளதேசத்தினர் விரட்டப்படுவார்கள்: மோடி ஆவேசப் பேச்சு

மேற்கு வங்காள மாநிலம் சேரம்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கி பேசினார்.

ஓட்டு வங்கி அரசியலுக்காக வங்காள தேசத்தினரை சிகப்பு கம்பளம் விரித்து மம்தா பானர்ஜி வரவேற்பதாக குற்றம் சாட்டிய அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் வங்காளதேசத்தினர் நாட்டை விட்டு விரட்டப்படுவார்கள் என்று ஆவேசத்துடன் எச்சரித்தார்.

இந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது:-

மேற்கு வங்காள மாநிலத்துக்கு பீகாரில் இருந்து மக்கள் வரும் போது, அவர்கள் உங்களுக்கு (மம்தா) வெளி நபர்களாக தெரிகிறார்கள். ஒடிசாவில் இருந்து மக்கள் வரும் போது, அவர்கள் உங்களுக்கு வெளி நபர்களாக தெரிகிறார்கள். மார்வாரிகள் வெளி நபர்களாக தெரிகிறார்கள். ஆனால், வங்காளதேசத்தினர் வரும் போது மட்டும் உங்கள் முகம் பிரகாசமாகி விடுகிறது.

மம்தா பானர்ஜியாகட்டும், மாயாவதி ஆகட்டும், சோனியா காந்தியாகட்டும், இவர்கள் அனைவருமே ஓட்டு வங்கி அரசியலில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். ஓட்டு வங்கி அரசியலுக்காக வங்காள தேசத்தினரை சிகப்பு கம்பளம் விரித்து மம்தா பானர்ஜி வரவேற்கிறார்.

இந்த ஓட்டு வங்கி அரசியல் இந்திய இளைஞர்களின் வாழ்க்கையை இருளடைய செய்து விட்டது. இந்த நாடு இப்படி இயங்குவதை அனுமதிக்க முடியாது. உங்கள் ஓட்டு வங்கி அரசியலுக்காக நாட்டை நீங்கள் நாசப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

சகோதர, சகோதரிகளே.. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். மே 16-ம் தேதிக்குப் பிறகு வங்காளதேசத்தினர் தங்கள் பெட்டி, படுக்கையுடன் எல்லையை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்பதை இங்கிருந்தபடியே நான் எச்சரிக்கை விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Apr 28, 2014 2:33 am

யாருக்கும் பயப்பட மாட்டேன்: பிரியங்கா பதில்

ரே பரேலி: என் மீதும், என் கணவர் மீதும், மோடி மற்றும் பா.ஜ., நடத்தும் தனிப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் தராமல் அமைதியாக இருக்க மாட்டேன். யாருக்கும் பயப்பட மாட்டேன். பா.ஜ.,வின் அரசியல் நிலை பற்றி தொடர்ந்து பேசுவேன் என காங்கிரஸ் தலைவர் சோனியா மகள் பிரியங்கா கூறியுள்ளார்.

பா.ஜ., குற்றச்சாட்டு: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா நில அபகரித்து ஊழல் தொடர்பாக பா.ஜ., வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதற்கு ராபர்ட் வத்ரா வளர்ச்சி மாடல் எனவும் பா.ஜ., பெயரிட்டுள்ளது. சோனியா குடும்பம் அளித்த சலுகை காரணமாக இந்த மாடல் வெற்றி பெற்றுள்ளதாக குற்றம்சாட்டிய பா.ஜ.,வின் ரவிசங்கர் பிரசாத், இதில் சட்டவிதிகள் மற்றும் சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டுள்ளதாக கூறினார். சோனியா குடும்பத்தினரின் தலையீடு காரணமாக வத்ரா மிகப்பெரிய ஒப்பந்தங்களை பெற முடிந்தது எனவும் கூறினார். ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலங்களில் வத்ராவின் முறைகேடுகள் குறித்து இந்த வீடியாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியாவில், சோனியா குடும்பத்தினரின் தலையீடு காரணமாக வத்ரா வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பா.ஜ., தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கவில்லை எனவும், ஊழல் தொடர்பான பிரச்னையை மட்டுமே தாங்கள் எழுப்புவதாகவும் கூறிய அவர், சிலர் பெரிய மனது பற்றி பேசுகிறார். யாருடைய பெரிய மனது, ஒரு லட்ச ரூபாய் முதலிட்டில் வர்த்தகத்தை துவக்கிய வத்ரா, சிறிய காலத்தில் பெரிய தொழிலதிபராக முடிந்தது என கேள்வி எழுப்பினார். பிரியங்காவை தவிர, காங்கிரசுக்கு வத்ராவை ஆதரிப்பதற்கான முக்கிய காரணம் எதுவும் கிடைக்கவில்லை எனவும், இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவும், துணைத்தலைவர் ராகுலும் பதிலளிக்க வேண்டும் எனவும் கூறினார்.

அமைதியாக இருக்க மாட்டேன்-பிரியங்கா பதில்: பா.ஜ., குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த வத்ராவின் மனைவியும், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகளுமான பிரியங்கா கூறியதாவது: தாயுக்கு மகள் ஆதரவு தெரிவிப்பதிலும், சகோதரருக்கு சகோதரி ஆதரவு தெரிவிப்பதிலும் எந்தவித பிரச்னையுமில்லை. பா.ஜ., பதவியை பிடிப்பதற்கு போராட்டம் நடத்துகிறது. யாருக்கும் நான் பயப்பவில்லை. பா.ஜ.,வின் அழிவு உண்டாக்கக்கூடிய அரசியலை பற்றி தொடர்ந்து பேசுவேன். என் மீதும், என் கணவர் மீதும் பா.ஜ., மற்றும் மோடி கூறும் தனிநபர் விமர்சனங்கள் குறித்து பதிலளிக்காமல், நான் நீண்ட நாட்கள் அமைதியாக இருக்க மாட்டேன். பா.ஜ.,வின் குற்றச்சாட்டுக்களில் புதியது ஏதுமில்லை. தொடர்ந்து அவர்கள் பேசட்டும்.அவர்கள் பேசுவார்கள் என்பது எனக்கு தெரியும். பழிவாங்கும் அரசியலில் எனக்கு உடன்பாடில்லை. அதேநேரத்தில் சட்டம் தன் கடமையை செய்யட்டும். அவர்கள் இன்னும் என கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Apr 28, 2014 3:52 am

இந்தியாவை சொர்க்கம் போன்று மாற்றப்போவதாக ஒருநாளும் கூறவில்லை: நரேந்திர மோடி


பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.


அதில், மதச்சார்பின்மை என்ற போர்வைக்குள் மறைந்துகொள்ள காங்கிரஸ் முயற்சிக்கிறது. காங்கிரஸ் கட்சி தன்னை காப்பாற்றிக்கொள்ள போராடுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலையும், அதே அளவும் பாஜக ஆதரவு அலையும் உள்ளது. இந்தியாவை சொர்க்கம் போன்று மாற்றப்போவதாக ஒருநாளும் கூறவில்லை. நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் என்னிடம் தீர்வு உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by சிவா on Mon Apr 28, 2014 3:54 am

பாஜகவினர் வாஜ்பாய் வளர்ப்பு மகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததை மறந்துவிட்டார்கள்: ப.சிதம்பரம்

பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் பாஜகவில் இணைந்தது பற்றி பேசுகிறவர்கள், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வளர்ப்பு மகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததை மறந்துவிட்டார்கள் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அரசியலுக்கு தொடர்பில்லாத பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் பாஜகவில் இணைந்தது குறித்து பேசுவதற்கு முன்பு, நீங்கள் முதலில் வாஜ்பாயின் வளர்ப்பு மகள் ஏன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்ற கேள்வியைத் தான் எழுப்பியிருக்க வேண்டும். வாஜ்பாயின் வளர்ப்பு மகள் கருணா சுக்லா நீண்ட காலமாக அரசியலில் இருந்தவர். பாஜகவில் எம்.பி. பதவி வகித்தவர். அவர் தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பாஜகவில் தாம் நம்பிக்கை இழந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட ராம்தேவை காப்பாற்ற பாஜக முயற்சி செய்கிறது. இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum