ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 ராஜா

என்ன ஆயிற்று ?
 ராஜா

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஓட்டுக்கு வேட்டு வைக்குமா... ஆட்டோ பிரச்னை?அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் அரசு

View previous topic View next topic Go down

ஓட்டுக்கு வேட்டு வைக்குமா... ஆட்டோ பிரச்னை?அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் அரசு

Post by balakarthik on Wed Feb 19, 2014 2:17 pm
கோவையில் குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட்ட ஆட்டோக்களை, பிற ஆட்டோ டிரைவர்கள் கொடூரமாக தாக்கிய விவகாரத்தில், பொதுமக்களின் கோபம், அரசின் மீது திரும்பியுள்ளது; இது வரும் லோக்சபா தேர்தலில் எதிரொலிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை மாவட்டம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன; தமிழகத்தின் மற்ற பகுதிகளை ஒப்பிடுகையில், கோவை மாவட்டத்திலுள்ள ஆட்டோக்களில் வசூலிக்கப்படும் கட்டணம், பல மடங்கு அதிகம். சென்னையில், குறைந்தபட்ச ஆட்டோ கட்டணமாக 25 ரூபாயை நிர்ணயித்துள்ள தமிழக அரசு, கிலோ மீட்டருக்கு 12 ரூபாய் வசூலிக்க அனுமதியளித்துள்ளது.இதே கட்டணத்தை, மாநிலம் முழுவதற்குமான கட்டணமாக நிர்ணயிக்க வேண்டுமென்று கோடிக்கணக்கான தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்; ஆனால், தமிழக அரசு, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களுக்கான ஆட்டோ கட்டணத்தைக் கூட நிர்ணயிக்கவில்லை.கோவை நகருக்கு ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்க வேண்டுமென்று பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டு, ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பிய பின்பும், இது தொடர்பாக எந்த முடிவையும் தமிழக அரசு எடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக, கோவையில் வன்முறை வெடித்து, சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஏழு ஆண்டுகளுக்கு முன், அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணப்படி, ஆட்டோக்களை இயக்கி வரும் 'மக்கள் ஆட்டோ' நிறுவனத்தின் 2 ஆட்டோக்களையும், அவற்றின் டிரைவர்களையும் ஆட்டோ டிரைவர்கள் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக, 5 பேர் மீது கொலை முயற்சி மற்றும் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வளவு அசம்பாவிதங்கள் நிகழ்ந்த பின்னும், ஆட்டோக்களுக்கு கட்டண நிர்ணயம் செய்யாமல் தமிழக அரசு தாமதித்து வருவது, பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது; தாக்குதல் சம்பவத்தில், அ.தி.மு.க., தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களே நேரடியாக ஈடுபட்டதும், கூட்டணிக் கட்சியான கம்யூ., கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., நிர்வாகிகளே இந்த போராட்டத்தை முன்னெடுத்ததும் இந்த அதிருப்தியை கோபமாக மாற்றியுள்ளது.இந்த விஷயத்தில், முடிவெடுக்க முடியாமல் தமிழக அரசு தவிப்பதற்கு என்ன காரணமென்பதும் புரியாத புதிராகவுள்ளது. பரபரப்பான போக்குவரத்து நிலவும் நேரத்தில், நூற்றுக்கணக்கான ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதையும், நடுரோட்டில் வன்முறையில் இறங்கியதையும் பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.கோவை நகரில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் ஓடினாலும், போராட்டத்தில் இறங்கியது சில நூறு ஆட்டோ டிரைவர்கள்தான்; அதிலும் வன்முறையில் ஈடுபட்டோர், மிகச் சிலர்தான்; இதைப் பார்க்கும்போது, குறைந்த கட்டண ஆட்டோக்களுக்கு எதிரான போராட்டத்தில் நியாயமில்லை என்பதை பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் உணர்ந்தே, பங்கேற்கவில்லை என்பது புரிகிறது.மிகக்குறைவான ஆட்டோ டிரைவர்களே போராட்டத்தில் ஈடுபட்டாலும், அவர்கள் வன்முறையில் இறங்கியது, சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் அவர்களுக்கு இருக்கும் அச்சமின்மையையே வெளிப்படுத்தியுள்ளது.

இதற்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது, குறிப்பிட்ட சில ஆட்டோ தொழிற்சங்கங்கள்தான். கோவை நகரில், 150க்கும் அதிகமான ஆட்டோ ஸ்டாண்ட்கள் இருக்கின்றன; ஒரே ஒரு பெயர்ப் பலகை இருந்தால், எந்த இடத்திலும் ஸ்டாண்ட் அமைத்துக் கொள்ளலாம் என்கிற கலாசாரம், சமீபமாக விரைவாகப் பரவி வருகிறது. இவ்வாறு ஸ்டாண்ட் அமைத்து, ஆட்டோ ஓட்டுபவர்கள்தான், மீட்டர் கட்டணத்துக்கும் ஒத்து வராமல், குறைந்த கட்டணத்துக்கு ஓட்டுவோரையும் இயங்க விடாமல் தடுப்பதில் முன்னணியாகவுள்ளனர். ஆட்டோ ஸ்டாண்ட்களுக்கு தலைவர், செயலர் என்று இவர்களாகவே நியமித்துக் கொண்டு, ஒவ்வொரு இடத்துக்குச் செல்வதற்கான வாடகையையும் நிர்வாகிகளே நிர்ணயிக்கும் கொடுமை, கோவையில் நித்தமும் அரங்கேறி வருகிறது. மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து அமைக்கப்படும் இத்தகைய ஸ்டாண்ட்களால், மக்களுக்கு எந்த வகையிலும் பயன் கிடைப்பதில்லை; அரசுத்துறைகளுக்கும் வருவாய் ஏதுமில்லை.இந்த அத்துமீறல்கள் அனைத்துக்கும் முடிவு கட்டுவதற்கு, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாநகர காவல்துறை ஒருங்கிணைந்து, பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசர அவசியம். இதற்கென,


பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய சிறப்புக் குழுவை, தமிழக அரசு நியமிக்க வேண்டும். எங்கெங்கு ஆட்டோ ஸ்டாண்ட்களை வைத்துக் கொள்ளலாம், அங்கே எத்தனை ஆட்டோக்கள் வரை நிறுத்தலாம் என்பதை இந்த குழுவே முடிவு செய்ய வேண்டும்; ஒவ்வொரு ஆட்டோ ஸ்டாண்டுக்கும் மாதந்தோறும், மாநகராட்சி வாடகை வசூலிக்க வேண்டும்; மீட்டர் கட்டணத்துக்கு ஒத்து வராத ஆட்டோக்களை ஸ்டாண்ட்களில் நிறுத்த அனுமதி தரவே கூடாது; இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே, கோவை நகரில் ஆட்டோக்களின் அத்துமீறல்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும்.ஏறத்தாழ 70 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கும் சென்னை நகரிலேயே, ஆட்டோ மீட்டர் கட்டணத்தை வெற்றிகரமாக நிர்ணயித்து, மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள தமிழக அரசுக்கு, கோவை நகரில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை அமல்படுத்துவது பெரிய விஷயமாக இருக்காது. ஆனால், 12 ஆயிரம் ஆட்டோ டிரைவர்களின் ஆதரவுக்காக, இதனை இனியும் தாமதப்படுத்தினால், கோவை மாவட்டத்திலுள்ள பல லட்சம் வாக்காளர்களின் அதிருப்தி, நிச்சயமாக வரும் தேர்தலில் எதிரொலிக்கும்.

கைது செய்யப்படுவாரா சுகுமாறன்?

கோவை நகரில் மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த முயற்சிக்கும் போதெல்லாம், அதற்கு எதிராக ஆட்டோ டிரைவர்களைத் திரட்டி, போராட்டத்தை நடத்துபவர், ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் தலைவராகவுள்ள சுகுமாறன்தான்.கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், கோவையில் சாதாரண ஆட்டோ டிரைவராக தனது வாழ்க்கையை துவக்கியவர்; சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின் பொறுப்புக்கு வந்ததும், ஆட்டோ ஓட்டுவதை விட்டு விட்டார்; ஆனாலும், நிர்வாகியாக தொடர்ந்து நீடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன், இதேபோன்ற ஒரு போராட்டத்தின்போதுதான், ஆட்டோ டிரைவர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார்; கடந்த திங்களன்று 'மக்கள் ஆட்டோ' நிறுவன ஆட்டோ, டிரைவர் தாக்கப்பட்டசம்பவமும், இவரது தலைமையில் மறியல் நடந்த பின்பே, அரங்கேறியது.பல லட்சம் மக்களுக்கு பயன் தரும் மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த விடாமல் போராட்டம் நடத்தி, சட்டம் ஒழுங்கை பாதிப்புக்குள்ளாக்கும் இவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து, கைது செய்ய வேண்டுமென்ற கோரிக்கை, மக்கள் மத்தியில் வலுத்துள்ளது.இது குறித்து, மாநகர காவல்துறை உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, 'எல்லா போராட்டங்களிலும் தலைவர்கள் தப்பி விடுவர்; தொண்டர்களே சிக்கிக்கொள்வர். அதேபோலவே, இவரும் இதுவரை எந்த போராட்டத்திலும் நேரடியாக சிக்கியதே இல்லை; அதனால், அவரைக் கைது செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை,' என்றார்.

இதற்குப் பெயர்தான் தோழமையா?

'மக்களின் தோழன்' என்று சொல்லிக்கொள்கிற கம்யூ., கட்சி, இதுபோல மக்கள் நலனுக்கு எதிராக தங்களது கட்சியின் தொழிற்சங்கம் செயல்படுவதை எப்படி அனுமதிக்கிறது என்ற கேள்வி எழுகிறது; இது வரும் லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும் வாய்ப்புள்ளது.இதுபற்றி கோவை எம்.பி., நடராஜனிடம் கேட்டதற்கு, ''நான் டில்லியில் இருக்கிறேன்; கோவையில் நடந்த விஷயம் எதுவும் எனக்குத் தெரியாது; வன்முறையில் யாராவது இறங்கியிருந்தால், அது நிச்சயம் தவறுதான்; விசாரித்து விட்டுச் சொல்கிறேன்,'' என்றார்.

குண்டர் சட்டம் பாயும்: போலீஸ் கமிஷனர்

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம் கேட்டபோது, ''அனுமதியின்றி ஊர்வலமாக சென்ற ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்; வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்; அரசு நிர்ணயித்தபடி நியாயமாக தொழில் செய்வோர் யாராக இருந்தாலும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். 'மக்கள்ஆட்டோ' டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

''எதிர்ப்பை சந்திக்க தயாராகவுள்ளோம்!''

'மக்கள் ஆட்டோ' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செல்வராஜ் சிறப்பு பேட்டி:

'பழைய மீட்டர் கட்டணம் இப்போது பொருந்தாது' என, தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனரே?

புதிதாக கட்டணம் நிர்ணயம் செய்யும்போது, ஆட்டோ தொழிற்சங்கம் மற்றும் நுகர்வோர் அமைப்புகளை கலந்தாலோசனை செய்ய வேண்டுமென, ஐகோர்ட் கூறியுள்ளது; ஆனால், 2007ல் நிர்ணயம் செய்த மீட்டர் கட்டணத்தை ரத்து செய்யவில்லை; எங்கள் ஆட்டோக்களில், பழைய மீட்டர் கட்டணம் தான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; இந்த கட்டணத்தில் ஆட்டோ ஓட்டுவதை யாராலும் தடுக்க முடியாது.

ஆட்டோ டிரைவர்களின் எதிர்ப்பை எப்படி சமாளிக்க போகிறீர்கள்?

ஆட்டோ டிரைவர்கள் யாரையும் நாங்கள் எதிரிகளாக பார்க்கவில்லை; சகோதரர்களாக பார்க்கிறோம். ஆட்டோ தொழிலை சீர்படுத்தவேண்டும் என்பதற்காக முயற்சிக்கிறோம்; இதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

குறைந்த கட்டணத்தில் ஆட்டோ ஓட்டக்கூடாது என, மிரட்டல் வந்ததா?

அப்படி எதுவுமில்லை; எந்த எதிர்ப்பு வந்தாலும், சந்திக்க தயாராக இருக்கிறோம். திங்கட்கிழமையன்று நடந்த சம்பவம், வேதனைக்குரியது; செய்யும் தொழிலை தெய்வம் என்கிறோம்; அந்த தெய்வத்தை காலால் உதைத்து, கல் கொண்டு தாக்கியவர்களை ஆட்டோ டிரைவர்களாக கருதமுடியாது. இந்த பிரச்னையை சட்டரீதியாக சந்திப்போம்; வழக்கை வாபஸ் பெறமாட்டோம்.

மக்களிடம் வரவேற்பு எப்படியிருக்கிறது...?

தினமும் ஆயிரம் அழைப்புகளுக்கு மேல் வருகிறது; எங்களால் 50000 அழைப்புகளுக்கு மட்டுமே சென்றடைய முடிகிறது. மற்ற ஆட்டோ டிரைவர்களும் இயக்கத்தில் இணைந்தால், மக்களுக்கு சேவை செய்யமுடியும்.

உங்கள் நிறுவனத்துக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருவதாகச் சொல்கிறார்களே...?

பணமுள்ளவர்கள் ஆட்டோவுக்கு முதலீடு செய்கிறார்கள்; வேலை வேண்டுவோர் ஆட்டோ ஓட்டுகின்றனர்; அவர்களுக்கு தினமும் 900 ரூபாய் வருமானம் உறுதியாக கிடைக்கிறது.

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை அரசு உடனடியாக நிர்ணயம் செய்யாவிட்டால்...?

பழைய மீட்டர் கட்டணத்தில் லாபம் கிடைக்கிறது. அரசு எப்போது புதிய கட்டணம் நிர்ணயம் செய்யுமோ, அதுவரை இதே கட்டணத்தில் ஆட்டோ ஓட்ட தயாராக இருக்கிறோம்; அரசு எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்கிறதோ, அடுத்த நாளே அதை அமல்படுத்துவோம்.இவ்வாறு செல்வராஜ் தெரிவித்தார்.

6 பேர் கைது; ஒரு ஆட்டோ பறிமுதல்!

கடந்த திங்கட்கிழமையன்று 'மக்கள் ஆட்டோ' நிறுவன ஆட்டோக்களையும், அவற்றின் டிரைவர்களையும் தாக்கியது தொடர்பாக, புலியகுளம் குணசேகரன், 45, சாய்பாபா காலனி நவுசத், 29, பூச்சியூர் சுரேஷ், 30, தொண்டாமுத்தூர் சுபாஷ் சந்திரபோஸ், 22 ஆகிய நான்கு ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இருவர் அ.தி.மு.க., தொழிற்சங்கத்தினர்; ஒருவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்; மேலும், சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.சரவணம்பட்டி பகுதியில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் சதீஷ், 26, ஆறுமுகம், 54 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களின் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி மற்றும் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

''நான் ஆட்டோ ஓட்டி 20 வருஷமாச்சு!''

ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் தலைவர் சுகுமாறனிடம் கேட்டதற்கு, ''நான் ஆட்டோ ஓட்டி, 20 ஆண்டுகளாகி விட்டது; எனது பாதுகாப்பு கருதி, என்னை ஆட்டோ ஓட்ட வேண்டாமென்று கட்சியும், தொழிலாளர்களும் கேட்டுக்கொண்டதால் நான் ஓட்டுவதில்லை; எனக்கு பல ஆட்டோக்கள், கார், சொத்து இருப்பதாகக் கூறுவது பொய்; எனக்கென்று ஒரே ஒரு ஆட்டோ மட்டுமே ஓடுகிறது; நான் வைத்துள்ள டூவீலரும், கட்சியால் தரப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று நடந்த வன்முறை, வருத்தத்தை ஏற்படுத்துகிறது; ஆட்டோ தொழிலாளர்கள், இதுபோன்ற வன்முறையில் ஈடுபடக்கூடாது; 'மக்கள் ஆட்டோ' நிறுவன ஆட்டோவால் தொழில் பாதிப்படைந்து, பசிக்குள்ளான ஆட்டோ டிரைவர்கள்தான் இப்படிச் செய்துள்ளனர்,'' என்றார்.

நன்றி :- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஓட்டுக்கு வேட்டு வைக்குமா... ஆட்டோ பிரச்னை?அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் அரசு

Post by ராஜா on Wed Feb 19, 2014 2:27 pm

2007 இல் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கும் "மக்கள் ஆட்டோ " ஒன்று ஒருநாளைக்கு 900 ரூபாய் உறுதியாக ஓட்டுனருக்கு கிடைக்கும் என சொல்லுகிறது.

நீங்க என்னடா என்றால்
'மக்கள் ஆட்டோ' நிறுவன ஆட்டோவால் தொழில் பாதிப்படைந்து, பசிக்குள்ளான ஆட்டோ டிரைவர்கள்தான் இப்படிச் செய்துள்ளனர்,''
என்று சொல்லுறீங்க , அப்ப உங்களோட ஒரு நாள் வருமானம் எவ்வளவுடா , குடிக்கும் மற்ற ஈன செயலுக்கும் சம்பாதிக்கும் பணத்தை செலவழித்தால் உங்களுக்கு அரசு எவ்வளவு கட்டணம் வசூலிக்க சொன்னாலும் பத்தாத்து
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30923
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum