ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 rajeshk1975

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 SK

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருநீறு இட்டு யார் கெட்டார்?

View previous topic View next topic Go down

திருநீறு இட்டு யார் கெட்டார்?

Post by சாமி on Sun Feb 16, 2014 3:08 pmதிருநீறு என்பதை திரு+நீறு என்று பிரிக்கலாம். திரு என்பது 'தெய்வத்தன்மை வாய்ந்தது' என்று பொருள். "பாவங்களை நீற்றுவதால்" நீறு என்று பெயர்.  ஆக திருநீறு என்பது 'பாவங்களை நீக்கும் தெய்வத்தன்மையுடைய பொருள்' என்று அறியலாம். இந்த திரியில் திருநீற்றின் பெருமைகளைப் பற்றிச் சிறிது சிந்திக்கலாம். முதலில் ஒரு வரலாறைப் பார்ப்போம்.

எயினனூர் என்பது சோழவள நாட்டிலுள்ள பல்வளம் நிறைந்த சிற்றூர். இத்தலத்தில் ஈழவர்குலச் சான்றோர் மரபில் தோன்றிய உத்தமரே ஏனாதிநாதர் என்பவர். இவர் மிகுந்த சான்றாண்மை உள்ளவர். திருவெண்ணீற்றுப் பக்தியில் சற்றும் குறையாதவர். மெய்ப்பொருள் நாயனாரைப் போலவே, திருநீறு அணிந்தவர் யாவரேயாயினும், அவர்களைச் சிவமாகப் பார்த்து வணங்கி வழிபடுவார். பகைவர் மேனியில் திருவெண்ணீற்றின் ஒளியைக் கண்டுவிட்டால் போதும், உடனே பகைமையை மறந்து அவரை வணங்கி வழிபடுவார். இதனால் இவர் பகைவரும் போற்றும்படியான நல்லொழுக்கத்தில் தலைசிறந்து விளங்கினார்.

இப்பெரியார் சோழ மன்னர் படையில் ஒரு காலத்தில் சேனாதிபதியாக இருந்தவர்களின் சந்ததியில் தோன்றியவர். இப்பெரியார் வாட் பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். இவரிடம் நல்ல வீரமும், வாட் பயிற்சி அளிக்கும் முறையும் இருந்ததால் இவரிடம், வாட் பயிற்சி பெற மாணவர்கள் நிறைய வந்து சேர்ந்த வண்ணமாகவே இருந்தனர். வாட் பயிற்சி மூலம் கிடைத்த வருவாயை யெல்லாம் சிவனடியார்களுக்கே செலவு செய்தார்.

இறைவன் படைப்பில், கருணை உள்ளம் கொண்ட வெள்ளை மனம் படைத்தவர்களுக்கும் பகைவர்கள் இருக்கத்தானே செய்கின்றனர். பாரெல்லாம் பால் பொழியும் தண் நிலவையும் கிரகணம் வந்து விழுங்குவதுபோல், ஏனாதிநாதரையும், பகைவன் ஒருவன் சூழ்ச்சியால் வெல்லத்தான் கருதினான். அவ்வூரில் அதிசூரன் என்று ஒருவன் இருந்தான். இவனும் வாட் பயிற்சி கூடம் ஒன்றை அமைத்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தான்.
(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: திருநீறு இட்டு யார் கெட்டார்?

Post by சாமி on Mon Feb 17, 2014 11:19 am2) தொழில் நுட்பத்தில் ஏனாதிநாதரைவிட மிக மிகக் குறைந்தவன். அதனால், அதிசூரனிடம் ஆரம்பகாலத்தில் அறியாமல் வந்து சேர்ந்த ஒருசில மாணாக்கர்கள் கூட விவரம் தெரிந்ததும் விலகத் தொடங்கினர். இதனால் ஏனாதிநாதரிடம், ஏராளமான மாணவர்கள் பயிற்சி பெற்று விளங்க, அதிசூரனிடம் ஒன்றிரண்டு மாணவர்கள் கூட பயிற்சி பெற வருவதே கஷ்டமாகி விட்டது. இதனால் அதிசூரனது வருவாய் குறைந்தது. முத்துச்சிற்பி முன்னால், வெத்துச்சிப்பி மதிப்பிழந்து தூக்கி எறியப்படுவது போல், ஏனாதிநாதர் முன்னால் எல்லாவகையிலும் மதிப்பிழந்து போனான் அதிசூரன் ! அதிசூரன், ஏனாதிநாதரிடம் அழுக்காறு கொண்டு பகைமை பாராட்டினான். அழுக்காறு, அவா, சினம், இன் சொல் ஆகிய தீய குணங்களை கொண்டிருந்த அதிசூரன், அன்பு, அடக்கம், பக்தி, பொறுமை, இன்சொல் ஆகிய உயர் குணங்களைக் கொண்ட ஏனாதிநாதரை எதிர்த்துப் போர் புரிந்து அவருடைய தொழில் உரிமையைக் கைப்பற்ற சங்கல்பம் பூண்டான்.

ஒருநாள், தன் சுற்றத்தாரையும் சில போர் வீரர்களையும் அழைத்துக்கொண்டு, நாயனாரின் வீட்டை வந்தடைந்தான். சிங்கத்தின் குகை முன்னால் சிறு நரி ஊளையிடுவது போல், வீரம் படைத்த ஏனாதிநாதர் முன்னால் கோழை மனம் கொண்ட அதிசூரன் போர்பரணி எழுப்பினான். ஏனாதிநாதரே ! ஒரே ஊரில் இரண்டு பயிற்சிக் கூடம் எதற்கு ? அதிலும் இரண்டு ஆசிரியர்கள்தான் எதற்கு ? இவ்வூரில் வாட் பயிற்சி ஆசானாக இருப்பதற்குரிய தகுதியும், திறமையும் யாருக்கு உண்டு என்பதை ஊரறியச் செய்ய, நாம் உரிமைப் போர் புரிவோம். துணிவிருந்தால் போர் செய்ய வருக என்று ஊளையிட்டான். அதிசூரனின் சவாலைக் கேட்டு ஏனாதிநாதர் சிங்கம் போல் கிளர்த்தெழுந்தார்.

உனக்கு இம்முறையே தக்கது என்று தோன்றினால் அவ்வாறே போர் புரிவோம். நானும் அதற்கு இசைகிறேன் என்றார். இருவர் பக்கமும் படைவீரர்கள் சேர்ந்தனர். நகரின் வெளியிடத்தில் இருவர் படைகளும் போர் செய்வதற்கு வந்து குவிந்தன. அதிசூரன் உள்ளத்தில் பகைமை உணர்ச்சி இருந்துகொண்டே இருந்தது ! போரும் ஆரம்பமானது ! அணிவகுத்து நின்ற இருதிறத்து வில்வீரர்களும், வாள் வீரர்களும், பயங்கரமாக் தத்தம் உயிர்களைத் துச்சமாக மதித்துப் போர் புரிந்தனர்.

வாள் பிடித்த கைகளும், வேல் பிடித்த கைகளும், வில் பிடித்த கைகளும் அறுபட்டு விழுந்தன. சிரசுகள் துண்டிக்கப்பட்டு உருண்டன. வீரர்கள் மார்பகங்களை வேல்கள் துளைத்துச் சென்றன. வீரிகழல்கள் அறுபட்டு ரத்தத்தில் தோய்ந்தன. தாள்களும், தோள்களும் புண்பட்டன. இரத்தம் சிந்தின. வெளி வந்த குடல்களில் உடல்கள் பின்னிப்பிணைந்தன. அதிசூரன் படை வன்மையாக முறியடிக்கப்பட்டது. போரில் தலைப்பட்ட பகைவர் யாவரும் கொலை செய்யப்பட்டனர்.

போர்க்களத்தில் போர் புரிந்து மடியாதோர், ஞான உணர்வு வந்தபோது, இதயத்திலுள்ள பற்று, பாசங்கள் மறைவது போல் போர்க்களத்தை விட்டு ஓடினர். ஏனாதிநாதர் வீரத்திற்கு முன்னால் நிற்க முடியாது புறமுதுகு காட்டி ஓடினான் அதிசூரன். வெற்றிவாகை சூடித் திரும்பினார் ஏனாதிநாதர். நாட்கள் பல கடந்தன. அதிசூரன் உள்ளத்தில் பகைமை உணர்ச்சி வளர்ந்து கொண்டே இருந்தது.
(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: திருநீறு இட்டு யார் கெட்டார்?

Post by சாமி on Wed Feb 19, 2014 7:49 amஅதிசூரன் நேர் பாதையில் நாயனாரை வெல்ல முடியாது என்பதை உணர்ந்து சூழ்ச்சியால் கொல்லக் கருதினான். அதற்காக வேண்டி மற்றொரு சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். ஒருநாள் அதிசூரன், ஏவலாளன் ஒருவனை ஏனாதிநாதரிடம் அனுப்பினான். தன்னோடு வேறோரிடத்திலே தனித்து நின்று போர் புரியலாம் என்றும் வீணாகப் பெரும் படை திரட்டிப் போர் புரிந்து எதற்குப் பல உயிர்ச் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் தனது வஞ்சக முடிவைச் சொல்லி அனுப்பினான். அவனது அந்த முடிவிற்கும் ஏனாதிநாதர் சம்மதித்தார். அதன் பிறகு அதிசூரன் சண்டை போடுவதற்கான நான் குறித்து நேரம் கணித்து இடத்தைத் தேர்ந்தெடுத்து ஏனாதிநாதருக்குச் சேதியும் சொல்லி அனுப்பினான். அதற்கும் அவர் சம்மதித்தார்.

குறித்த நாளும் வந்தது ! அதிசூரன் வஞ்சனையால் வெல்லத்தக்க சூழ்ச்சி செய்தான். போருக்குப் புறப்படும் முன் நெற்றியிலும், உடம்பிலும் திருநீற்றைப் பூசிக் கொண்டான். வாளும் கேடயமும் எடுத்துக் கொண்டான். தனது நெற்றியும், உடம்பும் தெரியாதவாறு கவசத்தாலும், கேடயத்தாலும் மறைத்துக் கொண்டான். போர் புரிய வேண்டிய இடத்திற்குச் சென்றான். அங்கே ஏனாதிநாதர் அதிசூரனை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார். அதிசூரன் கேடயத்தால் , தன் முகத்தை மறைத்த வண்ணமாகவே நாயனாருக்கு முன் சென்றான். இருவரும் போர் புரியத் தொடங்கினர். புலியைப் போல் பாய்ந்து சண்டை செய்தார் ஏனாதிநாதர். பூனைபோல் பதுங்கி, பதுங்கி, அவரது வாள் வீச்சிற்கு ஒதுங்கி, ஒதுங்கிச் சண்டை செய்தான்.

அதிசூரன். ஏனாதிநாதர் வாளைச் சுழற்றி பயங்கரமாகப் போர் புரிந்தார். அதிசூரனின் உயிர் ஒவ்வொரு கணமும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தது. ஏனாதிநாதர் கைகளிலே சுழன்று கொண்டிருந்த வாள், அதிசூரனின் உடலைக் கிழித்துக் கொல்ல நெருங்கி வருகின்ற தருணத்தில், அதிசூரன் தன் உடலை மறைத்துக் கொண்டிருந்த கவசத்தையும்,கேடயத்தையும் விலக்கினான். வெண்ணீறு அணிந்த அதிசூரனின் நெற்றியைப் பார்த்துத் திடுக்கிட்டார் நாயனார்.
(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: திருநீறு இட்டு யார் கெட்டார்?

Post by சாமி on Thu Feb 20, 2014 8:12 am4) அவர் கைகள் தளர்ந்தன. வீரம் பக்திக்கு அடிமையானது. அவரது வாளின் கூர்மை திருவெண்ணீற்றுக்கு முன்னால் மழுங்கிப் போனது. ஆ! கெட்டேன் ! பகைவன் என்று போரிட வந்தேனே ! சிவத்தொண்டராக அல்லவா தெரிகிறார். இத்தனை நாளாக ஒருபொழுதும் இவருடைய நெற்றியில் காணாத திருவெண்ணீற்றின் பொலிவினை இன்று காண்கிறேனே ! இவர் சிவத்தொண்டரே தான். இவரோடு, இனியும் போரிடுவது தகாத செயல் ஆகும். உண்மையை உணராமல் எவ்வளவு பெரும் பாவம் செய்ய இருந்தேன் ! என் பிழையை எம்பெருமான் தான் பொறுத்தருள வேண்டும். இனிமேல் நான் இவருடைய உள்ளக் குறிப்பின் வழியே நிற்பேன் என்று திருவுள்ளங்கொண்ட ஏனாதிநாத நாயனார், தம் கையிலிருந்த வாளையும், கேடயத்தையும் கீழே போட எண்ணினார்.

அத்தருணத்தில் , நாயனாருக்கு வேறொரு எண்ணமும் பிறந்தது. நாம் ஆயுதங்களைக் கீழே போடுவது இவ்வடியாரை அவமதிப்பது போலாகும். நிராயுத பாணியயைக் கொன்றார் என்ற இழிவுப் பெயர் இவருக்கு வந்துவிடும் ! அத்தகைய அபகீர்த்தி இவருக்கு ஏற்படாவண்ணம் இறுதிவரை நான் ஆயுதத்துடனே இவரை எதிர்த்து நிற்பதுபோல் பாசாங்கு செய்வேன் என்று எண்ணியபடியே வாளையும், கேடயத்தையும் தாங்கி, எதிர்த்துப் போர் செய்வது போல் பாவனை செய்து கொண்டிருந்தார். பின்னர் சொல்லவும், வேண்டுமோ ? அவர் முன்னே நின்ற கொடிய பாதகனும், தன் கருத்தை நிறைவேற்றிக் கொண்டான். அதிசூரனும் ஓடி ஒளிந்தான்.

ஆகாயத்தில் பேரொளி தெரிந்தது ! எம்பெருமான் உடையாளுடன் விடை மேல் எழுந்தருளினார். ஏனாதிநாத நாயனாரை உயிர் பெற்றெழச் செய்தார். நாயனார் நிலமதில் வீழ்ந்து, இறைவனை வணங்கி நின்றார். பகைவனது வாளால் உலகப்பற்று பாசம், பந்தம் ஆகிய எல்லாத் தெடர்புகளையும் அறுத்துக்கொண்ட ஏனாதிநாத நாயனாருக்கு பேரின்ப வாழ்வை அளிப்பதற்கென்றே இவ்வளவு பெரிய சோதனையை நடத்திய எம்பெருமான், நீ நம்மை விட்டுப் பிரியாதிருக்கும் பெரு வாழ்வினைப் பெறுவாயாக என்று திருவாய் மலர்ந்தார்.

திருவெண்ணீறு அருள்மயமானது. எம்பெருமானின் திருமேனியால் எந்நேரமும் பிரகாசித்துக் கொண்டே இருக்கும் திருநீறு அணிவதால் மனிதர்க்கு அமர வாழ்வு கிட்டும். உய்யும் வழிக்கு உயர்ந்த மார்க்கம் பிறக்கும். இத்தகைய திருவெண்ணீற்றின் பெருமையை உணர்ந்திருந்த நாயனார், திருவெண்ணீற்றுக்கும், வெண்ணீறு அணிந்த அன்பர்க்கும் காட்டிவந்த பேரன்பைத்தான் என்னென்பது ?
(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: திருநீறு இட்டு யார் கெட்டார்?

Post by ayyasamy ram on Thu Feb 20, 2014 8:57 am

 
-
“கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை,
மங்காமல் பூசி மகிழ்வரேயாமாகில்,
தங்கா வினைகளும் சாரும் சிவகதி,
சிங்காரமான திருவடி சேர்வரே”
---
என்பார் திருமூலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திருநீறு இட்டு யார் கெட்டார்?

Post by ராஜா on Thu Feb 20, 2014 11:09 am

 திருநீறின் மகிமையை சொல்லும் அருமையான பக்தி கதை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திருநீறு இட்டு யார் கெட்டார்?

Post by balakarthik on Thu Feb 20, 2014 11:31 am

அருமையான பக்தி கதை எங்க தாத்தா சிறுவயதில் என்னை திருநீறு பூச வைக்க இப்படி கூறினார் திருநீறு நெற்றி நிறையா பூசுவதால் நம் தலை எழுத்து எமனுக்கு தெரியாதாம் அதனால் அவன் நம்மை பீடிக்க பயப்பிடுவானாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திருநீறு இட்டு யார் கெட்டார்?

Post by சாமி on Fri Feb 21, 2014 8:06 am

5)

திருநீறைப்பற்றி திருஞானசம்பந்தப் பெருமான் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?

> சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயிலில் (மதுரை) எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, தமிழ் மந்திரம் போல நினைத்ததைக் கொடுப்பது; நினைப்பவரைக் காப்பது.
> சிவலோகத்தில் உள்ள வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது.
> அழகு தருவது.
> எல்லா நூல்களாலும் புகழப்படுவது.
> ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது.
> சிவமயத்தில் நிலைத்துள்ளது.

> குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, அறம், பொருள், இன்பம் வீடு எனும் நான்கு வேதங்களில் புகழ்ந்து ஓதப்பெறுவது.
> கொடிய துயர்களைப் போக்குவது.
> சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது.
> புகழ்ந்து போற்றத் தக்கது.
> உண்மையாக நிலைபெற்றிருப்பது.

> திருஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது.
> முனிவர்களால் அணியப் பெறுவது.
> நிலையாக எப்போதும் உள்ளது.
> சிவனடியார்களால் புகழப்படுவது.
> இறைவனிடம் பக்தியை விளைப்பது.
> வாழ்த்த இனியது.
> எண்வகைச் சித்திகளையும் தரவல்லது.

(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: திருநீறு இட்டு யார் கெட்டார்?

Post by சாமி on Sat Feb 22, 2014 6:19 am

6)

> திருஆலவாயான் திருநீறு தன்னை அணிந்தோரைப் பிறர் கண்ணுக்கு அழகராயளித்துக் கருத்திற்கு இனிமை விளைப்பது.
> அழகைக் கொடுப்பது.
> விரும்பி அணிவார்க்குப் பெருமை கொடுப்பது.
> இறப்பைத் தடுப்பது.
> அறிவைத் தருவது.
> உயர்வு அளிப்பது.

> திருஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது.
> புண்ணியத்தை வளர்ப்பது.
> பேசுதற்கு இனியது.
> பெருந்தவம் செய்யும் முனிவர்கட்கு ஆசையை அறுப்பது.
> முடிவான பேரின்பநிலையை அளிப்பது.
> உலகோரால் புகழப்படுவது.

> அழகிய மாளிகைகள் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறு செல்வமாக இருப்பது.
> துன்பம் போக்குவது.
> மனவருத்தத்தைத் தணிப்பது.
> துறக்க இன்பத்தை அளிப்பது.
> சிறப்பாகச் சைவ சமயத்தார்க்கும் பொதுவாக எல்லாச் சமயத்தார்க்கும் பொருத்தமாயிருப்பது
> புண்ணியரால் பூசப்பெறுவது.

> கூர்மைக்கு விளக்கம் தருகின்ற சூலப்படையினை ஏந்திய திருஆலவாயான் திருநீறு, திரிபுரங்களை எரிக்கச் செய்தது.
> இம்மை மறுமை இன்பம் தர இருப்பது.
> பிறரோடு பழகும் பயன் அளிப்பது.
> செல்வமாக விளங்குவது.
> உறக்கநிலையைத் தடுப்பது.
> தூய்மையை அளிப்பது.
(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: திருநீறு இட்டு யார் கெட்டார்?

Post by ayyasamy ram on Sat Feb 22, 2014 6:28 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி 
-

ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு
திருநீறு அணிந்தவர்களைக் காணும் அன்பர்கள்
இனிமைக் கொள்வார்கள்.

அத்தகைய திருநீற்றை விரும்பி அணிபவர்களுக்கு
பெருமை கொடுக்கும். வல்லமை தரும்.
இறப்பினைத் தடுக்கும். நல்லறிவைத் தரவல்லது

திருநீறு. மன்னுயிர்களுக்கு உயர்வைத் தரும் ஆற்றல்
உடையது இத்திருநீறு.


avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திருநீறு இட்டு யார் கெட்டார்?

Post by சாமி on Sun Feb 23, 2014 7:45 am> பாம்புகள் வளைந்து தவழும் திருமேனியனாகிய திருஆலவாயான் திருநீறு,
இராவணன் பூசிப் பயன் பெற்றது.
> நல்லவர்களால் எண்ணத்தக்கது.
> பராசக்தி வடிவமானது.
> பாவம் போக்குவது.
> தத்துவங்களாக (மெய்ப்பொருள்) இருப்பது.
> மெய்ப்பொருளை உணர்த்துவது.

> நஞ்சுண்ட கண்டனாகிய திருஆலவாயான் திருநீறு,
திருமால் பிரமர்களால் அறியப்பெறாத தன்மையை உடையது.
> வானுலகில் வாழும் தேவர்கள் தங்கள் மேனிகளில் பூசிக்கொள்வது.
> பிறவியாகிய இடரைத் தவிர்த்து
> நிலையான இன்பம் அளிப்பது.

> மேல் உலகில் வாழ்வோர் பணிந்து போற்றும் திருஆலவாயான் திருநீறு,
குண்டிகை ஏந்திய கையர்களாகிய சமணர்கள் சாக்கியர்களின் கண்களைத் திகைக்கச் செய்வது.
> தியானிக்க இனியது.
> எட்டுத் திசைகளிலும் வாழும் மெய்ப்பொருளுணர்வுடையோரால் ஏத்தப்பெறும் தகைமைப்பாடு உடையது.

(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: திருநீறு இட்டு யார் கெட்டார்?

Post by சாமி on Sun Feb 23, 2014 10:51 pm8) ஞானசம்பந்தர் திருவாக்கால் திருநீற்றின் பெருமையை அறிந்து கொண்டோம். திருநீற்றின் மகிமையால் ‘கூன் பாண்டியன்’, ‘நின்ற சீர் நெடுமாறன்’ ஆன வரலாறு தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்வோம்!

பல்வளமுடைய பாண்டி நாட்டை அரசாட்சி செய்த பாண்டியர்களுள் கூன் பாண்டியன் என்பவனும் ஒருவனாவான். இவனது இயற்பெயர் நெடுஞ்செழியன் . அவனுடைய முதுகு கூன் விழுந்திருந்ததால் கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்டான். கூன் பாண்டியன் அறிவு மிக்கவன். தன்னுயிர் போலவே எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துபவன். நீதியும் நேர்மையும் அவனிடத்தில் இயற்கையாகவே அமைந்திருந்தன. இங்கனம் நல்ல குணங்கள் பலவும் அமையப் பெற்ற கூன் பாண்டியன் மதுரை மாநகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, பாண்டி நாட்டை செங்கோல் முறை தவறாமல் அரசாண்டு வந்தான். கூன் பாண்டியன் மனைவி மங்கையர்க்கரசி என்பவள், பெண்டிர்க்குரிய நற்குணங்கள் பலவும் கொண்டிருந்தாள். தனது பெயருக் கேற்பவே மங்கையருக்கெல்லாம் அரசியாகவே விளங்கினாள். கணவன் கருத்துணர்ந்து நடப்பதில் வல்லவனாகத் திகழ்ந்தாள்.

இல்லற வாழ்க்கையும் நற்குண மனைவியும் பெற்ற கூன் பாண்டியன், அரசியல் வாழ்க்கையிலும் நெறி தவறா அமைச்சன் ஒருவனையும் பெற்றிருந்தான். குலச்சிறை என்னும் பெயருடைய அவன், கூன் பாண்டியனுக்குத் தலைமை அமைச்சனாக இருந்து ஆட்சியைத் திறமையாக நடத்தி வந்தான். மங்கையர்க்கரசியாரை மனைவியாகவும், குலச்சிறையை அமைச்சனாகவும் பெற்ற கூன் பாண்டியன், யாதொரு குறையுமின்றி வாழ்ந்து வந்தான். அவன், சொக்கநாதக் கடவுளிடம் அளவில்லா அன்பு கொண்டிருந்தான். அவனைப் போலவே, அவன் மனைவியும் அமைச்சனும் சிவ பக்தியிற் சிறந்து விளங்கினர். மன்னன் கோயில்களில் பூசைகள் குறைவில்லாமல் நடப்பதற்கு ஏற்பாடுகள் செய்தான். சிவனடியார்களைக் கடவுள் போல போற்றி வழிபட்டான்.

இல்லற வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், பக்தி வாழ்க்கையிலும் மேம்பட்டு விளங்கிய கூன் பாண்டியனது ஆட்சியில் குடிமக்கள் அமைதியுடன் வாழ்ந்தனர். வறுமை என்பதே பாண்டிய நாட்டில் தலைகாட்டவில்லை; வளம் கொழிந்தது. தேனைச் சுற்றி எறும்புகள் மொய்ப்பதைப் போல, வளமுள்ள பாண்டி நாட்டை நோக்கி, நாலா திசையிலும் மக்கள் வந்து குடியேறினர்; பல சமயத்தைச் சார்ந்தவர்களும், பல மொழிகளைப் பேசுபவர்களும் மதுரை நகரில் நிரம்பினர். அவர்களுள், அருகனைக் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமண சமயத்தினர் மிகுதியாக மதுரையில் குடியேறினர்.
(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: திருநீறு இட்டு யார் கெட்டார்?

Post by சாமி on Tue Feb 25, 2014 6:45 amசிறிது சிறிதாகச் சமணர்கள் அரசனிடம் செல்வாக்குத் தேடிக் கொண்டனர். கூன் பாண்டியன் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையுடையவன். அதனால், சமணர்களையும் பிற சமயத்தவர்களையும் ஆதரித்தான். ஆனால், அவ்வாறு ஆதரித்தது அவனுக்கே தீங்காக முடிந்தது. சமண சமயத்தைப் பற்றிய செய்திகளைச் சமண முனிவர்கள் வாயிலாகக் கேட்டுணர்ந்தான். சமணர்களும் அதுதான் சமயமென்று, சைவ சமயத்தைவிடச் சமண சமயம் மேலானது என்று அரசன் நம்புமாறு செய்தனர். உண்மை யுணராத அரசன், மனம் மாறத் தொடங்கினான்.

வாழையடி வாழையாகச் சைவ சமயத்திலே வளர்ந்து வந்த பாண்டியர் குலத்திலே பிறந்த கூன் பாண்டியன், சமணரது வலையில் வீழ்ந்து விட்டான்; சைவ சமயத்தை விட்டு சமணனாக மாறினான். அரசன் சமண சமயத்திற்கு மாறியதை அறிந்ததும் மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் புழுப்போல் துடித்தனர். சைவ சமயம் மங்கிவிடுமே என்று அஞ்சினர். கூன் பாண்டியனைத் திருத்த முடியுமா? அவன் அரசனாயிற்றே? என்ன செய்வானோ? என்று எண்ணியவராய், மனதிற்குள்ளேயே பொருமினர். இருந்தாலும் அரசனுக்குத் தெரியாமல், சைவ சமய வளர்ச்சியில் கருத்தைச் செலுத்தினர். 'அரசன் எவ்வழி, குடிமக்கள் அவ்வழி' என்பார்கள். அரசன் சமண சமயத்தைத் தழுவியதை அறிந்த குடிமக்களில் பலரும் சமண சமயத்தை மேற்கொள்ளத் தொடங்கினர்; அரசன் மேல் உள்ள அச்சத்தால் சிலர் சமணராயினர்; சமணருடைய கொடுமை தாங்காமல் சமணரானோர் பலர்.

சைவத்தில் சிறந்து விளங்கிய மதுரை மாநகரம் சமண சமயத்திற்கு அடிமைப்பட்டது. கொஞ்ச நஞ்சமிருக்கும் சைவ சமயமும் எங்கே அழிந்து விடுமோ என்று மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் அஞ்சினர். சமண சமய வளர்ச்சியில் கருத்தைச் செலுத்தியிருந்த கூன் பாண்டியன், போரில் ஈடுபடும்படியான நிலை ஏற்பட்டது. வட நாட்டரசன் ஒருவன், பெரும்படையுடன் கூன் பாண்டியனைத் தாக்குவதற்காகப் புறப்பட்டு வந்தான். அவன் படையெடுத்து வருவதை ஒற்றர்களால் அறிந்த கூன் பாண்டியன் தானும் போருக்குத் தயாரானான். பாண்டியப் படை அணி வகுத்து நின்றது. கூன் பாண்டியன் வேப்பமாலை சூடித் தேரேறிப் புறப்பட்டான்.

தேர்மீது மீன்கொடி பட்டொளி வீசிப் பறந்தது; முரசு முழங்கப் பாண்டியப் படை அரசனைப் பின் தொடர்ந்தது. வடநாட்டுப் படையும் பாண்டியப் படையும் திருநெல்வேலியிலே சந்தித்தன; இரு பெரும் படைகளும் மோதிக் கொண்டன; பாண்டியனிடத்திலே யானைப் படை மிகுதியாக இருந்தன. சில நாட்கள் வரையில் முழு மூச்சோடு போரிட்டுக் கொண்டிருந்த வடநாட்டுப் படை, பாண்டியனது யானைப் படை முன் நிற்கமாட்டாமல் புறங்காட்டி யோடின.

வடநாட்டுப் படையின் தோல்வியைக் கண்டு பாண்டிய வீரர்கள் தோள்தட்டி ஆரவாரித்தனர். பாண்டியன், வெற்றி பெற்றதற்கு அடையாளமாக வேப்ப மாலையோடு வாகை மாலையும் சூடிக் கொண்டு மதுரையை அடைந்தான். வெற்றி வீரனாக வரும் தங்கள் அரசனை மக்கள் மகிழ்ச்சியுடன் சென்று வரவேற்றனர். மங்கையர்க்கரசியாரும் தன் கணவனின் வெற்றியை அறிந்து மகிழ்ச்சிக் கடலில் திளைத்தாள். போர் முடியுற்றதால் நாட்டில் அமைதி நிலவியது. பாண்டியன் தனது கருத்தை மேலும் சமண சமய வளர்ச்சியில் செலுத்தத் தொடங்கினான்.

ஆங்காங்கே சமணக் கோயில்களும், சமணப் பள்ளிகளும் கட்டப்பட்டன. அரசன் சமண சமய வளர்ச்சியில் மிகுதியான கருத்தைச் செலுத்தியதால், சைவ சமயம் மேலும் தாழ் நிலையடையத் தொடங்கியது. மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் சைவ சமயம் தாழ்ந்து வருவதைக் கண்டு மிகக் கவலை கொண்டார்கள்; சைவ சமய வளர்ச்சிக்கு யாது செய்வதென்று இருவரும் ஆராய்ந்தனர்.
(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: திருநீறு இட்டு யார் கெட்டார்?

Post by சாமி on Wed Feb 26, 2014 7:04 amஅப்போது சீர்காழிப் பகுதியிலே தோன்றிய திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் சைவத் தொண்டு செய்து வருவதைக் கேள்வியுற்றனர். சம்பந்தரால் சைவம் தழைக்கும் என்று நம்பினர். எனவே, அவரை மதுரைக்கு அழைப்பது என்று முடிவு செய்தனர். தங்கள் நம்பிக்கைக்குரிய ஏவலாளரில் சிலரை, அரசனுக்குத் தெரியாமல் சம்பந்தரிடம் அனுப்பினர்; பாண்டி நாட்டின் சமய நிலையைப் பற்றிய உண்மையை அவருக்குச் சொல்லுமாறு ஏவலாளரிடம் கூறியிருந்தனர். திருஞானசம்பந்தர் ஒவ்வோர் ஊராகச் சென்று, சிவபெருமானை வழிபட்டு வந்தார்.

அம்முறையில் திருமறைக்காட்டிற்குச் சென்று, வேதவனப் பெருமாளை வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது, மங்கையர்க்கரசியாராலும் குலச்சிறையாராலும் அனுப்பப்பட்ட ஏவலாளர்கள், திருஞானசம்பந்தரைக் கண்டு வணங்கினர். அவர்கள் வாயிலாக பாண்டி நாட்டில் சமண சமயம் வளர்ச்சி பெற்று வருவதையும், சைவ சமயம் தாழ்ந்து வருவதையும், அறிந்தார். பாண்டியன் சமண சமயத்தையும், மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் சைவ சமயத்தையும் ஆதரித்து வருவதும் அவருக்குத் தெரியும்; வந்த ஏவலாளர்கள் அவரைப் பாண்டி நாட்டிற்கு வந்து, சமணர்களை வாதத்தில் வென்று, சைவ சமயத்தை ஈடேற்றுமாறு வேண்டிக் கொண்டனர்.

திருஞானசம்பந்தரும் அதற்கு உடனபட்டார். தம்முடன் இருந்த அடியாராகிய திருநாவுக்கரசரிடம் சொல்லிவிட்டுப் பாண்டி நாட்டிற்குப் பயணமானார். அவரைப் பின்தொடர்ந்து சைவ அடியார் கூட்டம் சென்றது. திருஞானசம்பந்தர் அடியார்கள் கூட்டத்துடன் மதுரைக்கு அருகில் வந்து கொண்டிருந்தார். அவரது வருகையைக் கேள்வியுற்ற மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர். மங்கையர்க்கரசியார் திருஞானசம்பந்தரை வரவேற்றுக் கோயிலுக்கு அழைத்து வருமாறு குலச்சிறையாரை அனுப்பிவிட்டுத் தாம் நேராகக் கோயிலுக்குச் சென்றார்.

குலச்சிறையார், மதுரைக்குப் புறத்தே தங்கியிருந்த திருஞானசம்பந்தரைச் சென்று கண்டு வணங்கி வரவேற்று அளவளாவினார். குலச்சிறையார், திருஞானசம்பந்தரை மீனாட்சியம்மையைத் தரிசிப்பதற்காகக் கோயிலுக்கு எழுந்தருளுமாறு வேண்டிக் கொண்டார். அவரும் அவரது வேண்டுகோளுக்கிணங்கித் தம்முடைய திருக்கூட்டத்துடன் கோயிலுக்குச் சென்றார்.

முன்னமே கோயிலுக்குச் சென்று காத்திருந்த மங்கையர்க்கரசியார், சம்பந்தரைக் கண்டதும் கீழே விழுந்து பணிந்தார். சம்பந்தர் சொக்கநாதக் கடவுளையும் அங்கயற்கண்ணியையும் வழிபட்டுத் தேவாரத் திருப்பதிகங்கள் பாடினார். பின்னர் எல்லோரும் ஒன்றுகூடி அளவளாவினார்கள். சமணர்கள் செய்யும் கொடுமைகளையெல்லாம் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் மற்றைய அடியார்களும் சம்பந்தருக்குத் தெரிவித்தனர். சமணர்களை வாதத்தில் வென்று சைவ சமயத்தை நிலை நிறுத்துமாறும், அரசனையும் சைவனாக்கித் திருநீறணியச் செய்யுமாறும் வேண்டிக் கொண்டனர். சம்பந்தரும் சமணரை வாதத்தில் வெல்வதாக வாக்களித்தார்.

சம்பந்தர் தங்கியிருப்பதற்காக மடம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. சம்பந்தர் இறைவனைத் தொழுத பின் தம்முடைய திருக்கூட்டத்தோடு மடத்திற்குச் சென்று தங்கினார். சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளியதை அறிந்த சமணர்கள் கடுங்கோபங் கொண்டனர். அவருக்கு எந்த வகையிலாவது தீங்கு செய்து, மதுரையை விட்டு ஓடிப் போகுமாறு செய்ய வேண்டுமென்று திட்டமிட்டனர்.

சமணர்கள் எல்லோரும் ஒரே கூட்டமாகப் பாண்டியனைக் காணச் சென்றனர். சம்பந்தரது வருகையால் சமண சமயம் அழிந்து விடும் என்று முறையிட்டனர். கூன் பாண்டியன் அதற்கு யாது செய்வது என்று அவர்களையே வினவினான்.சமணர்கள் தங்கள் மந்திர வித்தையால் மடத்திற்கு நெருப்பிட்டு, சம்பந்தரை மதுரையை விட்டு ஓடச் செய்வதாகக் கூறினர். சமண சமய வெறியினால், அரசனும் அதற்கு உடன்பட்டான்.
(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: திருநீறு இட்டு யார் கெட்டார்?

Post by சாமி on Wed Feb 26, 2014 10:57 pm11) ஞானசம்பந்தரும் அடியார்களும் தங்கியிருந்த மடத்தை நோக்கி நள்ளிரவில் சமணர்கள் சென்றனர். அப்பொழுது எல்லோரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். சமணர்கள் தங்கள் மந்திர வித்தையால், மடத்தில் தீப் பற்றுமாறு செய்ய முயன்றனர். ஆனால், அவர்கள் மந்திர வித்தை சம்பந்தரையோ, அவர் தங்கியிருந்த மடத்தையோ ஒன்றும் செய்யவில்லை. சமணர்களுக்கு அச்சம் வந்து விட்டது. அரசன் அறிந்தால் தங்களைத் தண்டிப்பதோடு, சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறிவிடுவான் என்பதை உணர்ந்தனர்.

அதனால், தீப் பந்தங்களைக் கொண்டு திருமடத்திற்குத் தீயிட்டனர்; மடத்தை நெருப்பு எரிக்கத் தொடங்கியது. நெருப்புப் பரவத் தொடங்கியதும் அடியார்கள் கூச்சலிட்டனர். விழித்தெழுந்த சம்பந்தர் திருமடம் தீப்பற்றி எரிவதைக் கண்டார். சமணர்களாலேயே அச் செயல் நிகழ்ந்தது என்பதை அடியார்கள் சொல்ல அறிந்து கொண்டார். உடனே, சிவபெருமான் மீது தேவாரம் பாட, நெருப்பு இருந்த இடம் தெரியாமல் அணைந்தது. அரசனும் நெருப்புப் பரவுவதற்குக் காரணமாக இருந்தவனாதலால், அந்நெருப்பே, சுரநோயாக அவனைச் சென்றடைந்தது. அரசன் புழுவாய் துடித்தான்; அரசாங்க மருத்துவர்களும் சமண மந்திரவாதிகளும் விரைந்தனர்.

சமணர்களின் மருந்தாலும் மந்திரத்தாலும் பாண்டியனது சுரநோய் மேலும் வளர்ந்ததேயொழியச் சிறிதும் குறைந்தபாடில்லை. நோயினால் துடித்த பாண்டியன், தன்னுடைய நோயைத் தீர்க்க முடியாத அவர்களையெல்லாம் அப்பால் போகுமாறு வெறுப்புடன் கூறினான். மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் சம்பந்தருக்குச் செய்த தீங்கினால்தான் அந்த நோய் வந்ததென்றும், சம்பந்தர் வந்தால்தான் அந்த நோய் நீங்குமென்றும் சொல்லினர். நோயைப் பொறுக்க முடியாத பாண்டியன், எப்படியாவது தனது நோய் நீங்கினால் போதுமென்று எண்ணினான்; அதனால், உடனே சம்பந்தரை அழைத்து வருமாறு கட்டளையிட்டான்.

சம்பந்தர் அரண்மனைக்கு எழுந்தருளினார்; சமணர்கள் அவரது வருகையை விரும்பவில்லை. அதனால், அரசனிடம் சென்று சம்பந்தர் வந்தால் சமண சமயம் அழிந்துவிடுமென்றும், அவரை வராமல் தடுக்குமாறும் வேண்டிக் கொண்டனர். ஆனால், அரசன் அவர்கள் சொல்லுக்கு உடன்படவில்லை.

சம்பந்தரையும் சமணர்களையும் தன்னெதிரில் ஒன்று கூடுமாறு சொல்லினன். இருவரில் எவர் தங்கள் தெய்வத் தன்மையால் தன்னுடைய நோயைத் தீர்த்தாலும், அவர்கள் சொல்வது போல் கேட்பதாகப் பாண்டியன் கூறினான். ஞானசம்பந்தரும் சமணர்களும் அதற்கு உடன்பட்டனர். சமணர்கள் தங்கள் மந்திர வித்தையால் இடப்பக்கத்து நோயைத் தீர்ப்பதென்றும், சம்பந்தர் தமது வன்மையால் வலப் பாகத்து நோயைத் தீர்ப்பதென்றும், முடிவாயிற்று.
(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: திருநீறு இட்டு யார் கெட்டார்?

Post by சாமி on Tue Mar 04, 2014 9:59 am12) முதலில், சமணர்கள் தங்கள் மந்திரத்தை ஓதி, மயில் தோகையால் அரசனது இடப் பக்கத்தைத் தடவினர். தடவியவுடன், நோய் குறைவதற்கு மாறாகப் பன்மடங்கு பெருகியது. ஞானசம்பந்தர் 'மந்திரமாவது நீறு' என்னும் தேவாரம்பாடி, அரசனது வலப்பாகத்தில் திருநீற்றினைத் தடவினார். தடவியவுடனேயே வலப்பக்க நோய் இருந்த விடம் தெரியவில்லை. அரசன் சம்பந்தரது பெருமையை உணர்ந்தான்; சமணர்களையெல்லாம் அவ்விடத்தைவிட்டு உடனே அகன்று விடுமாறு கட்டளையிட்டான்.

அவர்கள் அரசனது கட்டளைக்கு அஞ்சி உடனே சென்றுவிட்டனர். அரசன் சம்பந்தரை வணங்கித் தன்னுடைய இடப்பாகத்து நோயையும் தீர்க்குமாறு வேண்டிக் கொண்டான். சம்பந்தரும் இடப் பக்கத்தில் திருநீறு தடவ , அந்நோய் மறைந்தது; நோயோடு அவனது கூனும் மறைந்தது. நெடுநாளாக இருந்த கூனும் சுரநோயும் நீங்கப் பெற்ற பாண்டியன், சைவ சமயத்தின் பெருமைகளை உணர்ந்தான்.

அன்று முதல் அவனுக்கு 'நின்ற சீர் நெடுமாறன்' என்ற பெயர் ஏற்பட்டது. சைவசமய வளர்ச்சியில் கருத்தைச் செலுத்தத் தொடங்கினான்; சிவன் கோயில்களுக் கெல்லாம் பூசைகள் நடப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்தான். சிவனடியார்களை அன்போடு உபசரித்து வந்தான்; நீண்ட நாள் சிவத்தொண்டு செய்தபின் இறைவனது திருவடி நிழலை அடைந்தான்.
(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: திருநீறு இட்டு யார் கெட்டார்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum