ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நாகேஷ் நினைவு தினம்: போலிசெய்ய முடியாத ஆச்சரியம்!!

View previous topic View next topic Go down

நாகேஷ் நினைவு தினம்: போலிசெய்ய முடியாத ஆச்சரியம்!!

Post by அருண் on Sun Feb 09, 2014 2:16 pmஒரு நடிகன் என்னென்ன வேடங்களில் நடிக்கலாம்? திருடன், போலீஸ், நல்லவன், கெட்டவன், வில்லன், தந்தை..சமயங்களில் கதைப்படி இறந்துபோய்

பிணமாகக்கூட நடிக்க நேரும். மாலைகள் போர்த்தப்பட்ட உடலை அசைக்காமல், மூச்சைக் கட்டுப்படுத்திக்கொண்டு சற்று நேரம் இருக்க வேண்டியிருக்கும். ஆனால் நடமாடும் பிணமாக, நின்றபடி உடலை விறைத்துக்கொண்டு , உடலில் உயிர் இருப்பதையே மறைத்து நடிக்க நாகேஷ் ஒருவரால்தான் முடியும். கமலுடன் இணைந்து தொடங்கிய தனது இரண்டாவது இன்னிங்ஸில் நாகேஷ்

ஜொலித்த ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தின் அந்த நகைச்சுவைக் காட்சியை ரசிக்காதவர்களும், அவரது உடல்மொழியைப் பார்த்து வியக்காதவர்களும் இருக்கவே முடியாது. தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் அல்ல, தமிழகத்தின் இணையில்லாத கலைஞர்களில் ஒருவர் அவர்.

`திருவிளையாடல்’ தருமி, `தில்லானா மோகனாம்பாள்’ வைத்தி, `காதலிக்க நேரமில்லை’ செல்லப்பா என்று அவர் நடித்த பாத்திரங்களை யாராலும் நகலெடுக்க முடியாது. நடனம், பாய்ச்சலான உடல்மொழி என்று பிற நகைச்சுவை நடிகர்கள் (சந்திரபாபு நீங்கலாக!) நினைத்துக்கூடப் பார்க்க முடியாத

பிரதேசங்களில் கொடிநாட்டியவர். முகமெங்கும் அம்மைத் தழும்பு, ஒடிசலான உருவம், சற்று முறைத்த மாதிரியான பார்வை என்ற தோற்றம் கொண்ட நாகேஷை திரை நடிகராக இல்லாமல் சாதாரண சக மனிதராகக் கற்பனை செய்துபாருங்கள். சுள்ளென்று எரிந்துவிழுவாரோ என்று எண்ணி சற்றுத்

தொலைவில் இருந்துதான் பேசியிருப்போம். ஆர்ப்பாட்டமான உடல் அசைவுகளும் உயர் டெசிபல் குரலுமாக நம் கவலைகளைக் காணாமல் போகச் செய்த அந்த அற்புதமான நகைச்சுவை நடிகர் நம் மனதுக்கு நெருக்கமானவராக ஆனது எப்படி? அதுதான் அவரது உயர்ரக நகைச்சுவை உணர்வு. தனது வாழ்வின் அனுபவத்திலிருந்து எடுத்து அவர் கையாண்டது அது.

உலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர்கள் போலவே அவரது வாழ்க்கையும் துயரங்களும் ஏமாற்றங்களும் நிறைந்ததுதான். தனது வாழ்வின் சோகங்களையும் நகைச்சுவையாக மாற்றத் தெரிந்த கலைஞர் அவர். அதனால் தான் `‘எல்லாம் இருக்கு.. ஆனா இந்த கதை மட்டும் கெடச்சிட்டா..படம் எடுத்துடலாம்” என்று கலைத்தாகத்துடன் அலையும் ஓஹோ புரொடக்‌ஷன் செல்லப்பாவைப் பார்த்தவுடன் அடக்க முடியாமல் சிரித்துவிடும் நாம், “மாது வந்திருக்கேன்” என்றபடி ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் நிற்கும்போது நெகிழ்ந்து விடுகிறோம்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி தொடங்கி அனைத்து நடிகர்களுடனும் நடித்த நாகேஷ், படத்தின் பிரேமுக்குள் வந்ததும் பார்வையாளர்களின் கவனத்தைத் தன்பக்கம் ஈர்க்கத் தெரிந்த கலைஞர். தனது முதல் நாடகத்தில் கிடைத்த `வயிற்று வலிக்காரன்’ என்ற சிறு வேடத்தின் மூலம் தனது அசாத்தியமான நம்பிக்கையுடன் கூடிய நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்ந்தவர் என்பதால் இதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களை விட அதிக புத்திசாலிகளாக, கஷ்டமான சூழல்களில் அவர்களுக்கு அறிவுரை சொல்பவர்களாகச் சித்திரிக்கப்படுவது வழக்கம். சில விதிவிலக்குகள் இருக்கலாம். அதுபோன்ற புத்திசாலித்தனமான நண்பன் பாத்திரத்தில் நாகேஷ் அளவுக்கு யாரும் ஜொலிக்கவில்லை. ஏனெனில் அவருக்குக் கதாநாயகனைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் அனைத்தும் அத்துபடியாக இருக்கும் என்பதை நம்பும்படியான தோற்றம் இயல்பாகவே அமைந்துவிட்டது. கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை மற்றும் டையுடன் சேல்ஸ்மேன் பாத்திரம் என்றாலும் சரி குடுமி வைத்த கிராமத்தான் பாத்திரம் என்றாலும் சரி அதை புத்திசாலித்தனம் கொண்ட துடுக்குத்தனத்துடன் அவரால் மிளிரச்செய்ய முடிந்தது.

‘சோப்பு சீப்பு கண்ணாடி’ படத்தில் பணக்கார வீட்டுப் பையனான நாகேஷ், கல்யாணம் செய்யுமாறு வற்புறுத்தும் தன் குடும்பத்தினரை எதிர்த்து வீட்டை விட்டு ஓடிவிடுவார். ரயிலில் செல்லும்போது தன்னுடன் பயணிக்கும் கிராமத்து மனிதர்களைக் கடுமையாகக் கிண்டல் செய்வார்.

டிக்கெட் எடுக்காமல் பயணிப்பதாகவும், ஆங்கிலம் தெரியாதவர்கள் என்றும் அவர்களைச் சீண்டுவார். டிக்கெட் பரிசோதகர் வரும்போது கையைக் கட்டிக்கொண்டு பேசாமல் நிற்பார். காரணம் அவரும் டிக்கெட் எடுத்திருக்க மாட்டார். இதைக் கேட்டவுடன் சக பயணிகள் கொதித்தெழுவார்கள். “வித்தவுட் லே வந்துட்டுத் தான் எங்களையெல்லாம் கிண்டல் பண்ணினாயா” என்று அவர்மீது பாய்வார்கள்.

டிடிஆர் நாகேஷை அழைத்துச் செல்லும்போது ஒருவர் கேட்பார், “என்னவோ இங்க்லீசுலெ பேசுனியே இப்பொ பேசு”. தனது திமிரில் இருந்து சற்றும் தளராத நாகேஷ் திரும்பிப் பார்த்து சொல்வார், “அயாம் ஸாரி!”

`அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் குரூரமான வில்லன் பாத்திரத்திலும் நகைச்சுவை செய்வார். திமிராகப் பேசும் நாகேஷை இன்ன பிற வில்லர்களுடன் சேர்த்து போலீஸ் கமல் உள்ளாடையுடன் அழைத்து வருவார்.

தன்னை அந்தக் கோலத்தில் புகைப்படம் எடுக்க முயலும் புகைப்படக்காரரை நாகேஷ் மிரட்டுவார். “போட்டோ எடுப்பே?” எனும்போது கமல் லத்தியால் ஒன்று வைப்பார். அதுவரை கொடூரமான வில்லனாக மிரட்டிக் கொண்டிருந்த நாகேஷ், வலி தாங்காமல் உடலை எக்கி, “வே..” என்பார்.

இந்தியாவின் ஜெர்ரி லூயி என்று புகழ்பெறும் வகையில், இணையற்ற நகைச்சுவைக் கலைஞராக மிளிர்ந்த நாகேஷ், எந்தக் காட்சியாக இருந்தாலும் அதில் தனது நகைச்சுவை முத்திரையை அழுத்தமாகப் பதித்ததில் ஆச்சரியமென்ன?

நன்றி - வெ. சந்திரமோகன்
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நாகேஷ் நினைவு தினம்: போலிசெய்ய முடியாத ஆச்சரியம்!!

Post by balakarthik on Sun Feb 09, 2014 2:22 pm

பாலசந்தர் என்ற இயக்குனர் இல்லையென்றால் நாகேஷ் வெறும் நகைச்சுவை நடிகராக மறைந்து போயிருப்பார் அவரை சாகாவரம் பெற்ற நடிகராக மாற்றியவர்களில் பாலச்சந்தருக்கு பெரும்பங்கு உண்டு
       


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாகேஷ் நினைவு தினம்: போலிசெய்ய முடியாத ஆச்சரியம்!!

Post by அருண் on Sun Feb 09, 2014 2:44 pm

முற்றிலும் உண்மை பாஸ்! எதிர் நீச்சல்! சர்வர் சுந்தரம். இன்னும் சொல்லி கொண்டே போகலாம் இந்த படத்தில் அபார நடிப்பை வெளி கொண்டு வந்தவர் ஆவார்!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நாகேஷ் நினைவு தினம்: போலிசெய்ய முடியாத ஆச்சரியம்!!

Post by balakarthik on Sun Feb 09, 2014 5:38 pm

நாகேஷை இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். ஆறு வருசங்களுக்கு முன்பு ஒரு முறை இயக்குனரான எனது நண்பர் தனது படத்தில் நடிக்க வைப்பதற்காக நாகேஷை பார்க்க அழைத்து சென்றார். அந்த நேரத்தில் அவர் நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்தார். நட்பிற்காக சில படங்கள் ஒத்துக் கொண்டதோடு சரி. வீட்டில் எளிமையான நாலு முழ வேஷ்டி, பனியன் அணிந்தபடியே அவர் அமர்ந்திருந்த விதம் வெகு இயல்பாக இருந்தது. படத்தில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்று மறுத்துவிட்டார்.

விடைபெறும் போது இயக்குனரிடம் என்னை எதுக்குப்பா கூப்பிடுறே.சம்பளம் குறைச்சலா தந்தா போதும்னு தானே. என்று கேலியாக கேட்டார். அதெல்லாம் இல்லை சார் நீங்க எவ்வளவு பெரிய நடிகர் என்று இயக்குனர் வியந்த போது நீ என்ன பாக்க வெறுங்கையை வீசிகிட்டு வந்ததில் இருந்தே நான் எவ்வளவு பெரிய ஆளுனு தெரியுதே. ஏம்பா ஒரு எலுமிச்சம்பழம் கூடவா வாங்கிட்டு வந்திருக்க கூடாது என்று சொல்லி சிரித்தார்.

நண்பர் சங்கடத்துடன் அப்படியில்லை என்றதும் சும்மா கேலிக்கு சொன்னேன் என்றபடியே விடை தந்தார். காரில் வரும்போதெல்லாம் நாகேஷை பற்றியே பேசிக் கொண்டு வந்தார் இயக்குனர். ஆனால் எனக்கு நாகேஷ் மனதில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் இருப்பதை உணர்ந்தேன்.


அதன் சில ஆண்டுகளுக்கு பிறகு ஒரு படப்பிடிப்பு தளத்தில் பின்மதியத்தின் போது நாகேஷை தற்செயலாக பார்த்தேன். தனியே அமர்ந்திருந்தார். கறுப்பு நிற பேண்ட், கோடு போட்ட சட்டை, வயோதிக தோற்றம். அருகில் யாருமேயில்லை. வெயில் அவர் காலில் பட்டுக் கொண்டிருந்தது. அதை அவர் பொருட்படுத்தவில்லை.

கடந்து போன ஒரு வயதான லைட்மேனை அவர் பெயர் சொல்லி கூப்பிட்டவுடனே அவர் அண்ணே என்று அருகில் வந்து பவ்வியமாக குனிந்து நின்றார். உட்காருடா என்று அருகில் இருந்த நாற்காலியை காட்டினார். அந்த ஆள் நின்று கொண்டேயிருந்தார். இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க நாலைந்து இளம்பெண்களும் பையன்களும் வந்திருந்தார்கள். அவர்கள் நாகேஷை கடந்து சென்றார்கள். ஒருவர் கூட அவரிடம் நின்று பேசவோ, அவரை பார்த்து வியப்பு அடையவோ இல்லை.
உள்ளே இருந்த கதாநாயகனை நோக்கி உற்சாகமாக போய்க் கொண்டிருந்தார்கள். அதை நாகேஷ் கவனித்திருக்க வேண்டும் தன்னோடு பேசிக் கொண்டிருந்தவரிடம் சொன்னார்.


பாத்தியாடா.. நம்மளை ஒரு ஆளா கூட இந்த பொண்ணுக கவனிக்கலை. நான் பாக்காத ஹீரோவா? நானே எத்தனை படத்தில் ஹீரோவா நடிச்சிருக்கேன். இவங்களுக்கு எல்லாம் ஹீரோன்னா அருவாளை தூக்கிட்டு வெட்டணும். வானத்தில பறந்து பறந்து சண்டை போடணும். ஜிகினா டிரஸ் போட்டுகிட்டு கட்டிபுடிச்சி ஆடிணும். நான் அப்படி எதுவும் பண்ணலை. காமெடியன் தானே. அதான் கடந்து போய்கிட்டே இருக்காங்க என்றார்.

எனக்கு சார்லி சாப்ளின் நினைவு வந்தது. அவர் லைம் லைட்ஸ் என்றொரு படம் இயக்கியிருந்தார். அது வயதான காலத்தில் ஒரு கோமாளி கொள்ளும் மனவேதனைகளை பற்றியது. கோமாளிக்கு கண்ணாடியில் தன் உருவத்தை பார்க்கும் போது கடந்தகால கைதட்டல்கள் காதில் விழும்.

லைம் லைட்ஸ் படத்தில் ஹாலிவுட்டின் இன்னொரு பிரபலமான நகைச்சுவை நடிகர் பஸ்டர் கீட்டன் நடித்திருப்பார். கீட்டனும் இப்படம் நடித்த காலத்தில் புறக்கணிப்பிலும் தனிமையிலும் தான் வாழ்ந்து கொண்டிருந்தார். இந்த படம் கோமாளியின் அந்தரங்கவலிகளை சிறப்பாக வெளிப்படுத்தியது. சிரிப்பின் பின்னே ஒளிந்திருக்கும் அழுகையை அடையாளம் காட்டியது.

ஒருவகையில் அன்று நான் பார்த்த நாகேஷ் சிரிப்பின் பின்னே ஒளிந்திருக்கும் வேதனை கொண்ட நடிகரே.

உலகெங்கும் நகைச்சுவை நடிகர்கள் மக்களை சிரிக்க வைக்கிறார்கள். ஆனால் அவர்களது சொந்த வாழ்க்கை சிக்கலும் பிரச்சனைகளும் வலியும் தனிமையும் நிரம்பியதாகவே இருந்திருக்கிறது. அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.
குழந்தைகளின் கனவு நட்சத்திரமான சாப்ளினுக்கு சிறுவர்களையே பிடிக்காது. சொந்த பிள்ளைகளை கூட வெறுத்தார், மனைவியை விவகாரத்து செய்தார். உடன் வேலை செய்பவர்களை மோசமாக நடித்தினார் என்று எண்ணிக்கையற்ற புகார்கள். தமிழில் என்எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, போன்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் துயர் நிரம்பியதே.

உலகையே சிரிக்க வைப்பவன் மனம் நிரம்பிய வேதனையில் இருப்பது ஒருவகையில் சாபம் போலும். நாகேஷ் வாழ்க்கையும் அப்படிதானிருந்தது.

அந்த படப்பிடிப்பு தளத்தில் நாகேஷ் உடன் பேசிக் கொண்டிருந்த லைட்மேனை பின்னொருநாள் சந்தித்த போது இந்த சம்பவத்தை நினைவுபடுத்தி கேட்டேன். அவர் ஆதங்கத்துடன் நாகேஷ் ஷ÷ட்டிங்கிற்கு வருவதற்காக எம்.ஜி.ஆர். சிவாஜி எல்லாம் காத்துகிட்டு இருந்ததை பாத்திருக்கேன் சார் என்றபடியே

திருவிளையாடல் பட ஷ÷ட்டிங், சிவாஜி சார் மேக்கப் போட்டு சிவனாக ரெடியாகி காத்துகிட்டு இருக்காரு .நாகேஷ் வரலை. லேட்டா வந்தாரு. சிவாஜிக்கு கோபம் அதை காட்டி காட்டிகிடாம ஷாட் ரெடியானு கேட்டாரு. தருமியாக நாகேஷ் சிவன் பின்னாடி நடந்து போற மாதிரி சீன். சிவாஜி கம்பீரமா நடக்கிறாரு. பின்னாடி நாகேஷ் உடம்பை வளைச்சி தரையில விழந்துட போறவரு மாதிரி நடக்க தன் பின்னாடி நாகேஷ் ஏதோ காமெடி பண்றாருனு சிவாஜிக்கு புரியுது. ஆனா திரும்பி பார்க்க முடியலை, மேல இருந்த லைட்மேன்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.ஷாட் முடிஞ்சதும் நினைச்சி நினைச்சி சிரிச்சோம். எப்பேர்பட்ட நடிகர் நாகேஷ் என உணர்ச்சிவசப்பட்டு சொன்னார்.

அப்படித்தானிருந்தது நாகேஷின் காலம். அவர் நகைச்சுவையில் கொடி கட்டி பறந்த நாட்களில் ஒய்வின்றி நடித்திருக்கிறார். மக்கள் திரையில் நாகேஷை பார்த்த நிமிசம் சிரித்திருக்கிறார்கள்.

இன்று பல நகைச்சுவை நடிகர்களை குரலால் பாவனை செய்துவிட முடியும். மிமிக்ரி செய்பவர்கள் அதை சாதித்து காட்டுகிறார்கள். நாகேஷை அப்படி மிமிக்ரி செய்பவர்களை நான் கண்டதேயில்லை. காரணம் நாகேஷை குரலால் மட்டும் பாவனை செய்துவிட முடியாது. நாகேஷாக பாவனை செய்ய நாகேஷாகவே மாறவேண்டும், உடல்மொழி வேண்டும்,வேறு வழியேயில்லை.

எல்லா அரிய விஷயங்களையும் காலம் ஒரு நாள் கண்டுகொள்ளாமல் விட்டு போய்விடுகிறது. அது பெரும்பான்மை திரை நட்சத்திரங்களுக்கு அவர்கள் கண்முன்னே நடந்துவிடுகிறது. புறக்கணிப்பு தான் அவர்களின் மிகப்பெரிய வலி. அன்று படப்பிடிப்பு தளத்தில் நான் கண்டதும் அத்தகைய ஒன்று தான்.

தமிழ் சினிமாவில் தனித்த ஆளுமையாக இருந்த போதும் நாகேஷ் தேசிய அளவிலான எந்த அரசு அங்கீகாரமும் கிடைக்காமல் போன கலைஞனே.

அவரது நகைச்சுவை இயல்பானது. அது நினைத்து நினைத்து சிரிக்க கூடியது. அடுத்தவரை புண்படுத்தாதது. துளியும் ஆபாசமற்றது. அவரது நகைச்சுவைக்கு நம் மரபில் நீண்ட தொடர்ச்சியிருக்கிறது. தெருக்கூத்தில் வரும் கட்டியக்காரன். நாடகமேடையில் வரும் பபூன் என்று நமக்கான மரபிலிருந்த உடல்மொழியும் பகடியும் அவர் சரியாக உள்வாங்கியிருந்தார். அதே நேரம் அவர் சாப்ளினை, ஜெரி லூயிசை போல தன் உடலை நகைச்சுவையின் வெளியீட்டு வடிவமாக்கி கொண்டிருந்தார்


வேகம் தான் அவரது நகைச்சுவையின் பிரதான அம்சம். நடந்து செல்வதாகட்டும். துள்ளி விழுவது ஆகட்டும் எதிலும் மிகுவேகம் கொண்டிருந்தார். அதே நேரம் குணசித்திர வேஷங்களில் நடிக்கும் போது தனது வழக்கமான நடிப்பு வந்துவிடாமல் கவனமாக விலகி, ஆழமாகவும் மிகையின்றியும் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட சிறந்த நடிகர்.


நாகேஷின் மெலிந்த உடல் தான் அவரது பலம். ஒரு படத்தில் வில்லன் அவரை பார்த்து கொத்தவரங்காய் மாதிரி உடம்பை வச்சிகிட்டு எவ்வளவு வேலை காட்டுறே என்று கேட்பார். அது தான் நிஜம். தன்னியல்பாக அவருக்குள் நகைச்சுவை உணர்வு இருந்தது. அதை அவர் வெளிப்படுத்தும் பாங்கு அற்புதமானது. திருவிளையாடல் தருமியும், தில்லானா மோகனாம்பாள் வைத்தியும், சர்வர் சுந்தரமும், என எத்தனையோ மறக்கமுடியாத நகைச்சுவை பாத்திரங்கள்.


எனக்கு வேட்டைகாரன் என்ற படத்தில் வரும் நாகேஷின் நகைச்சுவை ரொம்பவும் பிடிக்கும். படம் முழுவதும் சீட்டுவிளையாடுவதில் விருப்பம் உள்ளவராக இருப்பார். பாதி தூக்கத்தில் சீட்டை அவர் விரித்து காட்டும் அழகும், அதை வைத்து அவர் செய்யும் வேடிக்கைகளும் வாய்விட்டு சிரிக்க வைப்பவை.


நாகேஷின் நகைச்சுவை உணர்வை மட்டுமின்றி அவருக்குள் இருந்த அற்புதமான நடிப்பு திறனை முழுமையாக வெளிப்படுத்தியவர் கே. பாலசந்தர். இந்த இருவரின் கூட்டணி தமிழ் சினிமாவில் உருவாக்கிய புத்துணர்ச்சி இன்றும் வியப்பளிக்க வைக்கிறது. குறிப்பாக மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம், பாமா விஜயம் அனுபவி ராஜா அனுபவி, நீர்குமிழி, என்று எத்தனை வெற்றிபடங்கள்.


வெற்றி சினிமாவில் பலருக்கும் தன்னை பற்றிய மிகையான பிம்பத்தை உருவாக்கிவிடுகிறது. நாகேஷ் விஷயத்திலும் அது நடந்திருக்கிறது. நண்பர்களை விட்டு விலகியிருக்கிறார் சினிமா தானே என்று நினைத்து நாகேஷ் செய்த படங்கள் பல அவரது இயல்பான நகைச்சுவையை கூட நிறைவேற்ற முடியாமல் தோற்றுபோனது. தன்னை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மறு எத்தனிப்பில் அவர் ஒத்துக் கொண்ட படங்களும் அவரது புறக்கணிப்பிற்கு கூடுதல் காரணங்களாகின.


பாலசந்தருக்கு அடுத்தபடியாக நாகேஷை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டவர் கமலஹாசன். கமலோடு நாகேஷ் நடித்த படங்களில் நாகேஷின் நகைச்சுவை அற்புமாக அமைந்திருந்தது. நாகேஷை வில்லனாக மாற்றிய அபூர்வ சகோதரர்கள், பிணமாக நடித்த மகளிர் மட்டும் , அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம் உள்ளிட்ட எத்தனையோ படங்கள் நாகேஷிற்கு நடிப்பின் புதிய பரிமாணங்களை உருவாக்கியது.


நாகேஷின் பாணி தான் இன்றும் தமிழ் நகைச்சுவைக்கு அடிப்படையாக இருக்கிறது. அவரை போல வசனங்களை வெளிப்படுத்துவதில் உள்ள தனித்துவமும் உடலை தன் கட்டிற்குள் வைத்திருந்த நடிப்பும், துள்ளல் நடனமும், சட்டென மாறும் முகபாவங்களும் இன்று வரை வேறு நகைச்சுவை நடிகருக்கு முழுமையாக கூடி வரவில்லை.


சிரிப்பின் உச்சம் அழுகையில் முடியும் என்பார்கள். தனது துயரங்களுக்கான அழுகையை சிரிப்பாக மாற்ற தெரிந்தவனே உயர் கலைஞன். நாகேஷ் அதற்கொரு தனி அடையாளம்.


அவரது மரணம் ஏற்படுத்தியுள்ள வெற்றிடம் பிறரால் நிரப்பபட முடியாதது.


இன்றைக்கும் தொலைக்காட்சியில் நாகேஷின் நகைச்சுவை காட்சி துணுக்கு ஏதாவது வந்தால் கடந்து சென்றுவிடமுடியாமல் முழுமையாக பார்க்க தூண்டுகிறது. அது தான் அவரது மிகப்பெரிய அங்கீகாரம்.

எஸ்.ராமகிருஷ்ணன்
ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் உதயம் இதழில் வெளியான கட்டுரை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாகேஷ் நினைவு தினம்: போலிசெய்ய முடியாத ஆச்சரியம்!!

Post by அனுராகவன் on Sun Feb 09, 2014 5:40 pm

பகிற்வுக்கு மிக்க நன்றி!!
அவரைப்பற்றி இன்று நினைவு கூறுவது மிகவும் முக்கியம்..
avatar
அனுராகவன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 224
மதிப்பீடுகள் : 68

View user profile

Back to top Go down

Re: நாகேஷ் நினைவு தினம்: போலிசெய்ய முடியாத ஆச்சரியம்!!

Post by ராஜா on Mon Feb 10, 2014 11:19 am

இந்தியநடிகர்களில் குறிப்பிடதகுந்த ஒருவர் நடிகர் நாகேஷ் அவர்கள் , இவர்கள் புகழ் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் நீடித்து நிற்கும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாகேஷ் நினைவு தினம்: போலிசெய்ய முடியாத ஆச்சரியம்!!

Post by krishnaamma on Mon Feb 10, 2014 9:02 pm

நல்ல பகிர்வு நன்றி அருண் புன்னகை  அன்பு மலர் 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நாகேஷ் நினைவு தினம்: போலிசெய்ய முடியாத ஆச்சரியம்!!

Post by ஜாஹீதாபானு on Tue Feb 11, 2014 1:46 pm

பகிர்வுக்கு நன்றிavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30288
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நாகேஷ் நினைவு தினம்: போலிசெய்ய முடியாத ஆச்சரியம்!!

Post by SenthilMookan on Wed Feb 12, 2014 12:28 am

 
avatar
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 258
மதிப்பீடுகள் : 89

View user profile

Back to top Go down

Re: நாகேஷ் நினைவு தினம்: போலிசெய்ய முடியாத ஆச்சரியம்!!

Post by veeyaar on Wed Feb 12, 2014 7:41 am

நாகேஷி் பல படங்களில் அவருடைய தனித்தன்மை யாராலும் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு பிரமிப்பூட்டும் வகையில் இருக்கும். கல்யாண ஊர்வலம் அதற்கு ஒரு சாட்சி. பாலச்சந்தர் படத்திர்கு நாகேஷ் நன்கு பயன் பட்டார். அனைத்து இயக்குநர்களின் படங்களிலும் நாகேஷின் நடிப்பில் சிறப்பான பங்களிப்பு இருந்து வந்தது. ஸ்ரீதர் மிக அருமையாக அவரை பயன் படுத்திக் கொண்டது அவருடைய திறமை.

ஜெர்ரி லூயிஸுக்கு சற்றும் குறைந்தவரல்ல நாகேஷ், சொல்லப் போனால் அவரை விட இன்னும் சிறந்த நடிகர் என சொல்லலாம்.
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: நாகேஷ் நினைவு தினம்: போலிசெய்ய முடியாத ஆச்சரியம்!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum