புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ராக தேவதையின் கதை Poll_c10ஒரு ராக தேவதையின் கதை Poll_m10ஒரு ராக தேவதையின் கதை Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஒரு ராக தேவதையின் கதை Poll_c10ஒரு ராக தேவதையின் கதை Poll_m10ஒரு ராக தேவதையின் கதை Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு ராக தேவதையின் கதை Poll_c10ஒரு ராக தேவதையின் கதை Poll_m10ஒரு ராக தேவதையின் கதை Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு ராக தேவதையின் கதை Poll_c10ஒரு ராக தேவதையின் கதை Poll_m10ஒரு ராக தேவதையின் கதை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒரு ராக தேவதையின் கதை Poll_c10ஒரு ராக தேவதையின் கதை Poll_m10ஒரு ராக தேவதையின் கதை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஒரு ராக தேவதையின் கதை Poll_c10ஒரு ராக தேவதையின் கதை Poll_m10ஒரு ராக தேவதையின் கதை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒரு ராக தேவதையின் கதை Poll_c10ஒரு ராக தேவதையின் கதை Poll_m10ஒரு ராக தேவதையின் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ராக தேவதையின் கதை Poll_c10ஒரு ராக தேவதையின் கதை Poll_m10ஒரு ராக தேவதையின் கதை Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ஒரு ராக தேவதையின் கதை Poll_c10ஒரு ராக தேவதையின் கதை Poll_m10ஒரு ராக தேவதையின் கதை Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ஒரு ராக தேவதையின் கதை Poll_c10ஒரு ராக தேவதையின் கதை Poll_m10ஒரு ராக தேவதையின் கதை Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ராக தேவதையின் கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 11:51 pm

ஒரு ராக தேவதையின் கதை HalBHPa4QMGDcXRzd5tu+kdr7

பழைய பெட்டிகளை சிவராமன் குடைந்து கொண்டிருந்தான் .

பரணை ஒழிக்க நேர்ந்தபோது கிடைத்த பொக்கிஷம்.

பூட்டப்பட்டுக் கிடந்த தன் தந்தையின் பழைய லெதர் சூட்கேஸைப் பார்த்தான். ஒவ்வொரு தரமும் இதைப் பார்க்கும் போது பெட்டியைத் திறக்க நினைப்பான். ஆனால் சாவி இல்லாததால் அந்த எண்ணம் தடைபட்டுக் கொண்டே இருந்தது.

இன்று வேறு வழியில்லை. திறந்துதான் ஆகவேண்டும்.

இவன் மனைவி சில பழைய பண்டங்கள், உடைந்த நாற்காலிகள், ப்ளாஸ்டிக் டீப்பாய்கள், பழைய இரும்புப் பெட்டிகள் என்று ஒரு பழைய சாமான்கள் லிஸ்டே வைத்திருந்தாள். இவர்களுக்குத் தெரிந்த முஸ்லீம் பாய் ஒருவர் வந்து வாங்கிக் கொள்வதாகச் சொல்லி இருக்கிறார்.

""அந்த உடைசல் பொட்டியிலே என்ன இருக்கு? ஹரப்பா மொகஞ்ச தாரோ பொக்கிஷமா? அது எங்கப்பா சொத்துன்னு சொல்லி குப்பையைச் சேத்துக்காம தூக்கி எறியுங்க''

இவன் மனைவியின் திருவாசகம். திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசசகத்திற்கும் உருக மாட்டார்களாமே? இது இவன் மனைவியின் வாசகம்.

மறுப்பு சொல்ல முடியாத மனைவி வாசகம்.

இவன் ஒரு சுத்தியலை எடுத்துப் பெட்டியின் பூட்டை உடைத்தான்.

பல வருடங்களாகப் பூட்டப் பட்டுக் கிடந்த அந்தப் பெட்டி வாய் திறந்தது.

லெதர் இற்றுப் போய் பரணின் தூசியும் பெட்டியின் தூசியும் சேர்ந்து இவன் நாசிக்குள் நுழைந்து தும்மலைத் தோற்றுவித்தது.

இவன் தும்ம, இவன் மனைவி தும்ம, திரும்பவும் இவன் தும்ம என்று தும்மிக் கொண்டே இருந்தான்.

சந்திரமுகி சினிமாவில் அந்தப் பழைய அரண்மனை பங்களாவில் நுழைய ஜோதிகா கதவைத் திறக்கும் போது ஒரு பயங்கர ஓசை கேட்குமே, அதேபோல் ஒரு பெரிய "க்ரீச்' ஒலி. பெட்டி திறந்தது.

ஏதேதோ பழைய கடிதங்கள்... பழைய புகைப்படங்கள் அத்துடன்... ஒரு கிரயப் பத்திரம்... இவன் தந்தை விஸ்வநாதன் இருபது வருடங்களுக்கு முன் இவர்கள் திண்டுக்கல்லில் வாழ்ந்தபோது வாங்கப்பட்ட ஒரு வீட்டின் நிலத்தோடு வாங்கிய கிரயப் பத்திரம்... தேதி, சாட்சிக் கையெழுத்து, வில்லங்க சர்ட்டிபிகேட் எல்லாம் பக்காவாக. வக்கீல் ஒருவரின் பரிந்ததுரையுடன் கூடிய யாரோ கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து அப்பா வாங்கிய வீட்டு பத்திரம். அப்பா அந்தக் காலத்தில் வாங்கிய சொத்து. அப்பா இதை ஏன் யாரிடமும் சொல்லவில்லை?

இவன் வாழ்ந்த இடம் திண்டுக்கல் புதூர் பாலகிருஷ்ணாபுரத்தில். அந்தப் பழனி ரயில்வே

லைனுக்குப் பக்கத்தில் பத்தே வீடுகள் கொண்ட அந்தப் பகுதியில் ஒரு வீடு இவர்கள் வீடு. இவன் வாழ்ந்த வீடு.

அந்தத் தெருவின் மையத்தில் சிறிய பிள்ளையார் கோவில் உண்டு. அரசமரத்தடி பிள்ளையாரை யாரோ ஒரு சிறு கோவில் எழுப்பி அமர வைத்திருந்தார்கள்.

அந்தப் பிள்ளையார் அனைவருக்கும் சொந்தம்.

காசியில் இருப்பது போல் அனைவரும் அவரைத் தொடலாம். அர்ச்சிக்கலாம். தொட்டு வணங்கலாம்...

இவன் கூட சில நாட்கள் தேர்வு சமயத்தில் அந்தப் பிள்ளையாருக்குத் தோப்புக் கரணம் போட்டிருக்கிறான், தேங்காய் வடல் போட்டிருக்கிறான்.

இவர்கள் அந்த ஊரை விட்டு வந்த பிறகு எல்லாமே மறந்து போன நினைவுகள். கடந்த காலங்கள்...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 11:51 pm


இன்று அந்தக் கடந்த காலம் காட்சி தருகிறது.

ஒரு வீடு ஒரு கிரவுண்ட் இடம் இருக்குமா?

இன்றைய விலையில் எத்தனை லட்சம் பெறும்?

அப்பா வைத்த புதையல் தனம்.

இவன் மகன் இன்ஜினியரிங் படிக்க ஆசைப்படுகிறான்.

மகள் மாதங்கி கல்லூரியில் சேரத் தயாராகக் காத்திருக்கிறாள்.

விலைவாசி ஏற்றம், குடும்பச் சூழ்நிலை, அடிக்கடி மனைவியின் நகைகள் காணாமல் போகும்.

இந்த நிலையில் எப்படிப்பட்ட அதிர்ஷ்டம்?

""இப்பவே கிளம்பிப் போங்க. நானும் கூட வரட்டா?''

""வேண்டாம்.. முதல்லே நான் பத்திரத்தோட போறேன். டாக்மென்ட்ஸ் பத்தி ரிஜிஸ்தார் ஆபீஸிலே ஆளை வைச்சு விசாரிக்கறேன். இருபது வருஷமா எந்தத் தகவலும் இல்லை. யாராவது பினாமி பேர்லே யார் யார் இருப்பாங்களோ? ஏதாவது அரசியல் கட்சி அங்கே ஆக்கிரமிப்பு நடத்தாம இருக்கணும். இதெல்லாம் தெரியாம நீ வர வேண்டாம். முதல்லே நான் கிளம்பறேன்''

கிளம்பினான். குடும்பமே இவனுக்கு "டாடா' சொன்னது.

புதையலோடு வரப் போகிற அந்தக் குடும்பத் தலைவனை வரவேற்க அந்த வீடே காத்திருந்தது.

""கஷ்டம் வந்தப்ப எல்லாம் என் நகைகளைத் தந்திருக்கிறேன். பணம் வந்தா முதல்லே இந்தக் கவரிங் நகைகளை வீசி எறிஞ்சுட்டு நல்ல நகை வாங்கிக்கணும். தங்கம் என்ன விலை வித்தாலும் சரி'' மனைவி நினைத்தாள்.

மாதங்கி நினைத்தாள்.

""காலேஜ் போக நல்ல டிரஸ்úஸ இல்லை. முதல்லே நல்ல சுடிதார் செட்டா ஒரு டஜன் வாங்கணும்''

மகன் நினைத்தான்.

""இன்ஜினியரிங் முடிச்சு எம் எஸ் பண்ண ஸ்டேட்ஸ் போகணும்''

கனவுகள் கற்பனைகள்...

இதோ இந்த ஊர்தான் இந்த இடம்தான். இவன் தவழ்ந்த மண்.

திண்டுக்கல் மலைக் கோட்டையை ரயிலில் வரும் போதே பார்த்து தரிசித்துவிட்டான்.

இவன் படித்த பள்ளியில் ஒரு முறை இவர்களை திண்டுக்கல் மலைக் கோட்டையைப் பார்க்கக் கூட்டிச் சென்றார்கள்.

கட்ட பொம்மனின் தம்பி ஊமைத் துரை இங்கு தான் தற்கொலை செய்து கொண்டதாக வரலாறு சொன்னார்கள்.

அபிராமி அம்மன் கோவிலும் மலைக் கோட்டை ஆஞ்சனேயர் கோவிலும் அப்படியே இருந்தன. ஊர் எத்தனையோ மாறி இருந்தாலும் சில அடிப்படை அடையாளங்கள் அப்படியே இருந்தன.

இவன் படித்த செயின்ட் மேரிஸ் கான்வென்ட் பஸ் ஸ்டாண்ட். கடை வீதிகள். மற்றபடி பெரிய பெரிய ஹோட்டல்கள் வந்துவிட்டன. ஏஸி ஹோட்டல் பார் அட்டாச்ட். இன்று நிறைய ஆட்டோக்களும் டாக்ஸிகளும் ஓடிக் கொண்டிருந்தன.

பாலகிருஷ்ணாபுரத்திலிருந்து டவுனுக்கு வர இவர்களுக்கு அன்று கிடைத்தது குதிரை வண்டிகள்தான்.

ஒரு ஆட்டோ பிடித்தான்.

ஆட்டோக்காரருக்கு இவனே வழி சொன்னான்.

முன்பு ஐந்து கட்டிடம் என்று சொல்லப் பட்ட இடத்தில் இப்போது பல கட்டிடங்கள் முளைத்திருந்தன.

ஆனாலும் வழி அதே தான். இதோ இந்தப் பாதை தான்.

ரேஸ் கோர்ஸிலிருந்து ஒரு பாதை தனியே பிரிந்து புதூர் பாலகிருஷ்ணாபுரத்திற்குச் சென்றது. அதே வழி தான்.

பிள்ளையார் இன்றும் இருக்கிறார்.

இவர்கள் வீடு புதிய தோற்றத்தில் காட்சியளித்தது.

இன்னும் நிறைய வீடுகள் முளைத்திருந்தன.

கடைகள் காட்சியளித்தன.

அவன் ஆட்டோவை நிறுத்தினான். பிள்ளையாரை வணங்கினான்.

""உனக்கு எத்தனை முறை தோப்புக் கரணம் போட்டிருக்கிறேன்''. எத்தனை முறை உன்னை வலம் வந்திருக்கிறேன். ஏனோ அந்த மண்ணில் நடக்க வேண்டும் போல் தோன்றியது. இவன் விளையாடிய இடம் கண்ணாமூச்சி விளையாட்டு சடுகுடு.

எத்தனை எத்தனை நிகழ்வுகள்.

அதே ரயில்வே லைன்.

முன்பு ரயில் வரும் நேரத்தில் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பயணிகளைப் பார்த்துக் கையசைப்பான். சிலபேர் பதிலுக்குக் கையசைப்பதும் உண்டு. அப்போது அனைவரும் ஒரே குரலில் "ஓ' வென்று கத்துவார்கள். பழைய நினைவுகள்... இவன் பார்த்துக் கொண்டே நடந்தான். நிறைய வீடுகள். அதில் இவன் தந்தை வாங்கி இருப்பது எந்த வீடு? யாரிடம் கேட்பது?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 11:51 pm


அதோ அதோ ஒரு தனி வீடு. கொஞ்சம் பராமரிப்பின்றி, அநேகமாய் பாழடைந்த நிலையில் ஒரு டெரஸ் வீடு. பெயிண்டின் நிறம் மாறி இவன் அதன் அருகே போனான், வாசலில் ஓர் உடைந்த போர்ட். கிருஷ்ணசாமி சிரசாஸனம் செய்து கொண்டிருந்தார்.

சந்தேகமே இல்லை இந்த வீடு தான்.

சுற்றிலும் இருந்த நிலத்தில் சில பூஞ்செடிகள் காய்ந்து கிடந்தன காய்ந்த சருகுகள் குப்பையாய்க் கிடந்தன.

எதற்காக இப்படி ஒரு வீட்டை இவன் தந்தை வாங்கினார் என்றே புரியாமல் காலிங் பெல்லை அமுக்கினான்.

மணி வேலை செய்யவில்லை. எல்லாமே ஒரே அழகு தான்.

இவன் கதவைத் தட்டினான்.

யாரோ நடந்து வரும் சப்தம். காத்திருந்தான்.

கதவு திறந்தது.

ஒரு மத்திம வயதுப் பெண்மணி கதவு திறந்தாள்.

""நான் சிவராமன்...''

அவள் இவனை ஏற இறங்கப் பார்த்தாள்.

""சொல்லுங்க''

""கிருஷ்ணசாமிங்கிறது?...''

""இந்த வீடு தான்''

""அவர்?..''

அவள் தன் கைகளைச் சற்றே உயர்த்திக் காட்டினாள்.

அவள் காட்டிய இடத்தில் சுவரில் கிருஷ்ணசாமி மாலையுடன் சிரித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் கவனித்தான். அவள் கழுத்தில் தாலி இல்லை. நெற்றி வெறுமையாக இருந்தது.

""ஸôரி''

""பரவாயில்லை. என்ன விஷயமா வந்தீங்க?''

தன் தந்தையும் கிருஷ்ணசாமியும் எடுத்துக் கொண்ட பழைய புகைப் படத்தை ஆல்பத்திலிருந்து பிய்த்து எடுத்துக் கொண்டு வந்திருந்தான். இது தான் சாட்சி.

""இந்த இடத்தை எங்கப்பா வாங்கி இருக்கார். இப்பத் தான் பத்திரம் கிடைச்சது... இந்த இடம் எங்க அப்பாவுக்குச் சொந்தமானது. நான் அவரோட மகன் சிவராமன்''

அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

""நீ நீங்க விஸ்வநாதனோட மகனா?''

""ஆ..மா எங்க அப்பாவை உங்களுக்குத் தெரியுமா?''

அவள் சற்று நேரம் பேசாமல் இருந்தாள்.

கிருஷ்ணசாமி என் சகோதரன். அவனோட நண்பர் தான் உங்க அப்பா. என் புருஷன் இறந்த பிறகு நான் என் அண்ணன் வீட்டோட வந்துட்டேன். என் குடும்பத்துக்காக என் அண்ணன் கல்யாணமே பண்ணிக்கலை. இந்த வீட்டை எனக்குத் தந்துட்டான். என் அண்ணா கடைசியிலே வியாதியிலே படுத்த படுக்கையாயிட்டான். மருந்துச் செலவு குழந்தைகள் படிப்புச் செலவு இந்த வீட்டு மேலே கடன் வாங்கி வாங்கி... உங்கப்பா தான் உதவினார். வீட்டு மதிப்பை விட கடன் தொகை அதிகம். கடைசியிலே இந்த வீட்டையே உங்க அப்பா பேருக்கு எழுதிக் கொடுத்துட்டான் அண்ணா ..உங்க அப்பாவோட நட்பு மட்டும் இல்லையானா... நாங்க எப்பவோ குடும்பத்தோட தற்கொலை செய்துட்டு இருப்போம். உங்கப்பா நல்லவர்''


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 3:00 am


""எங்க அண்ணா இறந்தபிறகு உங்க அப்பாவுக்குத் தகவல் சொல்ல முயன்றேன். ஆனா விலாசம் தெரியல்லை. என்னிக்காவது யாராவது தேடி வருவாங்கன்னு தெரியும். அன்னிக்கு விவரம் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்''

இவள் பேசப் பேச உள்ளே இருந்து ஒரு பெரிய கூக்குரல்.

""என்ன ஆச்சு?''

ஓர் இளம் பெண் ஓடி வந்தாள்.

""அம்மா இந்த சந்தியாவைப்பாரு சாப்பிட மாட்டேன்னு படுத்தறா''

""இவ என் மூத்த மக உதயா. இளையவள் சந்தியா. அவளுக்குக் கொஞ்சம் மூளை வளர்ச்சி போறாது. வைத்தியம் பாக்க வசதி இல்லை. நான் டைலரிங்கிலே சம்பாதிக்கறேன். இவ உதயா முனிசிபல் பள்ளியிலே வேலை பாக்கறா. ஏதோ குடும்பம் ஓடுது...சந்தியா திடீர் திடீர்னு வீதிக்கு ஓடிடுவா. அதனால அவளைச் சங்கிலி போட்டுக் கட்டி வைச்சிருக்கேன். வீட்டை ஒரு பாதி வாடகைக்கு விடவும் பயமா இருக்கு தம்பி. ஆண் பிள்ளை இல்லாத வீடு. யாராவது மூளை சரியில்லாத பொண்ணை ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு பயமா இருக்கு .....இந்த வீட்டை காலி பண்ண எனக்குக் கொஞ்சம் டயம் கொடுங்க தம்பி ''

அவள் பேசப் பேச ""ஐயா... ஐயா சங்கிலியைக் கழட்டிட்டேனே''

கத்தியபடி தலைவிரி கோலமாக கிழிந்த உடையில் ஓடி வருகிறாள் சந்தியா.

""தம்பி அவளைப் பிடிங்க ரோட்டுக்கு ஓடிடுவா''

பெற்றவள் கத்த இவன் ஓடிப் போய் அவளைப் பிடிக்கிறான்.

அவள் தலை முடியைச் சரிசெய்து அவள் முகத்தை நிமிர்த்துகிறான்.

"அப்பா'.

இவனின் மெய் சிலிர்க்கிறது.

இவள் ஒரு ராகம். சந்தியா ராகம். ஜன்ய ராகம். அந்த ராக தேவதை இவனுள் அழுகிறாள்.

அவன் சந்தியாவின் கால் சங்கலிகளை அவிழ்க்கிறான்.

""தம்பி அவ ஓடிடுவா... ஜாக்கிரதை''

இவன் மெல்லப் பேசினான்.

""நீங்க காலி பண்ண வேண்டாம். இங்கேயே இருங்க. சீக்கிரம் வீட்டை ரிப்பேர் பணண ஏற்பாடு பண்றேன். சந்தியாவோட ட்ரீட் மெண்டுக்கும் ஏற்பாடு பண்றேன்''

""தம்பி''

கையோடு கொண்டு வந்திருந்த அந்தக் கிரயப் பத்திரத்தை அவள் கைகளில் தருகிறான்.

இவன் மனைவி திட்டுவாள்.

பிழைக்கத் தெரியாதவன் என்பாள்.

இவன் பிழைக்கத் தெரியாதவனாக இருக்கலாம்.

காத்திருந்த ஆட்டோவில் ஏறுகிறான்.

பர்ஸிலிருந்த இவன் தந்தையின் படம் கீழே விழுகிறது. அதைக்குனிந்து எடுக்கும் போது அப்பா இவனைப் பார்த்துக் கைக் கூப்புவதைப் போல்...

ஆட்டோ வேகம் எடுக்கிறது.

விமலா ரமணி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 05, 2014 8:31 pm

இது நானும் போட்டிருக்கேன் என்று நினைக்கிறேன் சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 06, 2014 5:18 pm

கதை நன்று



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Thu Feb 06, 2014 5:54 pm

ஒரு ராக தேவதையின் கதை 103459460 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக