ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நாளும் ஒரு அழகின் அலை

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Sun Feb 02, 2014 6:09 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு,

வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்..

கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்..

நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்..புன்னகை

அன்புடன்

சின்னக் கண்ணன்..
avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down


Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Wed Feb 19, 2014 10:24 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 43

“அதுல பாருங்கோ…வெந்தயம் ,வேப்பிலை,கறிவேபபிலை ,பாசிப்பருப்பு ,ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில் கொடுத்து மைய அரைச்சுக்கோங்கோ. இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை கூந்தலில் தேய்த்து அலசிப் பாருங்கோ..அப்படியே ஷைன் ஆகும் உங்க கூந்தல்”

“என்னடா.. எனக்குப் பதிலா நீயே ஆரம்பிச்சுட்டியா.. என்ன ஏதாவது தால் ஏஜன்சி எடுத்திருக்கியா.

“சும்மா இரு மனசாட்சி..கூந்தலைப் பத்திக் கொஞ்சம் பேசலாம்னு பார்த்தேன்..இரு பாட்டு சொல்றேன் கேளு..

தமிழ்ப்படங்கள்ல பார்த்தேன்னா.. கண்ண தாசன் பின்னிய கூந்தல் கரு நிற நாகம் நு சொல்லிட்டு இன்னொரு பாட்டில உன் மலர்க்கூந்தல் அலைபாய அவரென்ன சொன்னார்னு கேக்கறார்..

முத்துலிங்கமும் புலமைப் பித்தனும் தோகை போலே மின்னும் பூவை உன்கூந்தல் கார்மேகம் என்றே சொல்வேன் கண்ணே ன்னு சொல்றாங்க..இதழில் கதை எழுதும் நேரம்னு பாட்டுல…..குட்டிக் கதையா இருக்கும்..”

“அப்புறம்”

“பாத்தியா..தென்றலில் ஆடும் கூந்தலைக் கண்டேன் மழை கொண்ட மேகம்னு சொல்றார் வாலி.. நம்ம பகவத் பாதர் என்ன சொல்றார் தெரியுமோ..”

“அதத் தானேடா நீ மொதல்ல சொல்லணும்..ம்ம் சொல்லு”

”கரியதாய் கண்ணிற் கிளமையாய்க் கொஞ்சம்
விரிந்திடக் காட்டின் அடர்த்தியாய் மற்றுமெழில்
பூந்தோட்ட வாசமது பொங்கிடும் வண்ணமாய்க்
கூந்தலைக் கொண்டவள் காண்..”

அப்படிங்கறார் அம்பாளோட கூந்தலைப் பத்தி..

”தள தட்டற மாதிரி தெரியலை.. வெண்பான்னும் சொல்ல முடியலை.. சரி வா.. ஸ்லோகத்தைப் பார்க்கலாம்.
.
**


துநோது த்வாந்தம் ந: துலித தளிதேந்தீவர வநம்
கந ஸ்நிக்த ச்லக்ஷணம் சிகுர நிகுரும்பம் தவ சிவே
யதீயம் ஸெளரப்யம் ஸஹஜம் உபலப்தும் ஸுமநஸோ
வஸந்த்யஸ்மிந் மந்யே வலமதநவாடீ விடபிநாம்

Dhunotu dhvaantam nas tulita-dalit'endivara-vanam
Ghana-snigdha-slakshnam chikura-nikurumbham thava sive;
Yadhiyam saurabhyam sahajamupalabdhum sumanaso
Vasanthyasmin manye vala-madhana-vaati-vitapinam.

”அம்பிகையே கருநெய்தல் மலர்கள் பூத்துக் குலுங்கும் வனத்தினைப் போல அடர்த்தியானதும்,வழவழப்பானதுமான உன் கூந்தல் எங்கள் மனதில் இருக்கும் கருத்த அஞ்ஞானத்தை அகற்றி மெஞ்ஞானத்தை அருளட்டும்.

.உன் கூந்தலின் இயற்கையான மணத்தைத் தாங்களும் பெற வேண்டி உன் கூந்தலில் பாரிஜாதமலர்களும், கற்பகத் தருவின் மலர்களும் வந்து வசிக்கின்றன..”

அம்பிகையை இவ்வண்ணம் மைவார் குழலி,மட்டுவார் குழலியாக தியானிப்பவர்களுக்கு இவ்வுலக பந்தத்தின் வாசனைகள் நலிந்து மோட்சத்திற்குக் காரணமான சுத்த வாசனை மேலிடும்..
avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Thu Feb 20, 2014 10:21 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 44

“கோலிக் குண்டு கண்ணு கோலக் கிளி உதடு
பாலப்போல பல்லு படிய வச்ச வகிடு..”

“அது சரி… பாட்டத் தப்பாப் பாடற போல இருக்கே..”

“ஹி.ஹி எம் எஸ்… கிளியோட உதடு செவப்பாத் தானே இருக்கும்…ஆனா இந்தப்பாட்டுல அம்பாளோட் வகிட வர்ணிக்கிறார் பகவத் பாதர்..”

“ம்ம் உன்கிட்ட எங்க வகிடு இருக்கு..எப்பப் பார்த்தாலும் வெட்டப்படாத க்ரோட்டன்ஸ் செடியாட்டாமா நின்னுக்கிட்டு தானே இருக்கு”

“கொஞ்ச்ம் ஆஃபீஸ்ல வேலை..குளிக்க மறந்துட்டேன்..ஸாரி டைபோ…. ஷாம்ப்பூ போட்டு குளிக்க் மறந்துட்டேன்..அதுக்காக நீயே என்னைக்கிண்டல் பண்ணலாகுமா..”

“ரா வேளைல ராஜ்டிவி, கலைஞர் டிவின்னு பழைய படம் பார்த்தா இப்படித் தான் அந்தக் காலத்தமிழ் வரும்..ஸ்லோகத்தப் பத்திச் சொல்லு”

“”அம்மாவோட முகத் தாமரையிலருந்து பொங்கிப் பெருகி வரும் அழகின் அலைகள் நெற்றி என்ற கரைவரையில் தளும்பி நிற்கின்றதாம்.. எம்.எஸ்..அதை நேர்வழியில் பிராவஹிக்கச் செய்ய வகிடானது வாய்க்கால் வெட்டியது போல இருக்கிறதாம்..”

“பக்தியா இருக்கறச்சே அரசியல்லாம் பேசாதடா..அம்பாள்னு சொல்லு..வா..ஸ்லோகத்துக்குள் போகலாம்

**
தநோது க்ஷேமம் நஸ்தவ செளந்தர்ய லஹரி-
பரீவாஹ ஸ்ரோத: ஸரணிரிவ ஸீமந்த ஸரணி:
வஹந்தி ஸிந்தூரம் ப்ரபல கபரீ பாரதிமிர-
த்விஷாம் ப்ருந்தை: பந்தீ க்ருதமிவ நவீநார்க்க கிரணம்

Tanothu kshemam nas tava vadhana-saundarya lahari
Parivaha-sthrotah-saraniriva seemantha-saranih
Vahanti sinduram prabala-kabari-bhara-thimira-
Dvisham brindair bandi-krtham iva navin'arka kiranam;

**
“”தேவி, உன் முகத்தின் அழகின் அலை பொங்கும் வெள்ளப் பெருக்கு கட்டுப்பட்டு ஓடப்ப்டும் வாய்க்கால் போல இருக்கும் உன் அடர்ந்த கருங்கூந்தலின் நடுவில் இருக்கும் வகிடானது- இருள் மயமான பகைவரது கூட்டத்தால் சிறைபிடிக்கப் பட்ட உதயகாலச் சூரியன் போல ஒளிரும்..

அப்படி மின்னும் குங்குமம் நிறைந்த வகிட்டின் கோடானது எங்களுக்கு எல்லாவித நலங்களையும் அருளட்டும்..”

செளந்த்ர்யலஹரி என பாடலிலே வந்திருப்பதால் இந்தப்பாடல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்..

இவ்வண்ணம் எவனொருவன் தேவியை த்யானிக்கிறானோ அவனுக்குஅடைவதற்கான பொருள்களை எளிதில் அடையவும் அடைந்தவற்றை பாதுகாப்பதுமான அவனது ஷேமத்தை தேவியே பார்த்துக் கொள்வாள்..

ஸீமந்தம் என்றால் வகிடு என்று பொருள்..
avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Sun Feb 23, 2014 10:05 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 45

“உனக்கு நினைவிருக்கா எம்.எஸ்..சின்ன வயசுல மூணாவது வீட்டு அஞ்சு பொண்ணு மாமியோட கடைசிப் பொண்ணு கம்லிய..”

“மறக்குமா என்ன.. அப்பவே நன்னா சைட் அடிப்பியே.. இப்ப அவளைப் பார்த்தியா என்ன..

“அவளை இல்லை..அவளோட பொண்ணை.ரூவி ஹைஸ்ட்ரீட்ல பார்த்தேன்...இங்க தான் பேங்க் மஸ்கட்ல வேலை பார்க்கற பையனுக்குக் கொடுத்துருக்காங்க போல.. போன வருஷம் தான் கல்யாணம் ஆச்சு அங்க்கிள்.. நீங்க எப்படி இருக்கேள்னு ஒரே சந்தோஷம்..அச்சு அசல் கம்லி மாதிரியே இருக்கா..அதுவும் அவளோட முன்னுச்சி முடி கூட அவளோட அமமா மாதிரியே சுருண்டு நெத்தில விழுந்து என்ன ஒரு அழகா இருக்குது தெரியுமா அவ தலையை ஆட்டி ஆட்டிப் பேசினாளா…அப்படியே மேகம் வந்து பூரண சந்திரன மறைக்க முடியாம தலை மேலயும் கொஞ்ச்ம் நுனியிலயும் இருக்குமே அந்த மாதிரி இருந்துச்சு..”

“சரி சரி.. நீ சின்னக் கம்லியப் பத்தி இப்படிச் சொல்ற்…பகவத்பாதர் என்ன சொல்றார் தெரியுமா..சின்னச் சின்ன வண்டுகள் நெற்றி நுனியில் பற்ப்பது மாதிரி அம்பாளின் முன்னுச்சி கேசம் ஆடித்தாம்..”

“இந்த ஸ்லோகத்த கண்ணதாசனும் தழுவியிருக்கார் தெரியுமோ..”

“தெரியுமே.. பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத..அதானே..ச்ந்தோஷமா….வா..ஸ்லோகத்துக்குள்ள போகலாம்..

**
Aralaih swabhavyadalikalabha-sasribhiralakaih
Paritham the vakhtram parihasati pankheruha-ruchim;
Dara-smere yasmin dasana-ruchi-kinjalka-ruchire
Sugandhau madhyanti Smara-dahana-chaksur-madhu-lihah.

தேவி..சற்றே அலர்ந்த பூவினைப் போல சிறு நகையும்..சிறிதளவே தெரிந்தாலும் மகரந்தங்களைப் போல ஒளிவிடும் பற்களையும் மலர்ந்த பூரண தாமரையைப் போன்ற நறுமணமும் கொண்ட எந்த கமல முகத்தில் பரமசிவனின் கண்கள் என்னும் தேன் வண்டுகள் மொய்த்து மகிழ்ந்து மயங்குகின்றனவோ, எந்த முகத்தின்முன்னுச்சி நெற்றியில் சிறுவண்டுகள் மொய்ப்பது போன்று சுருண்ட கேசம் ஆனந்தமாய்க் காற்றிலாடுகிறதோ அந்த உனது முகமானது அலர்ந்த தாமரை மலரை பரிகசிப்பது போன்று இருக்கின்றது..

மலரொத்த அன்னையின் வடிவினை இவ்வண்ணம் தியானிப்பவர்கள் செம்மலர் அணங்காம் அலைமகளின் பூரணத் திருவருளைப் பெறுவர்..
avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Sun Feb 23, 2014 10:07 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 46

அமாவாசையிலிருந்து ப்தினைந்து தினங்கள் சந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்தால் அது பாதி பிறைச் சந்திரனாக வளர்ந்திருக்கும்.. தேவியின் மகுடத்தில் ஏற்கெனவே பிறைச் சந்திர்ன் போல் தோற்ற்மளிப்பதாகச் சொல்லிய பகவத் பாதர் இந்த ஸ்லோகத்தில் தேவியின் நெற்றியையும் பிறை நிலவு என்கிறார்….

மகுடத்தில் இருக்கும் ஒரு பிறை நிலா மேல் நோக்கி இருக்கிறது.. நெற்றியில் இருக்கும் மறுபாதி நிலா கீழ் நோக்கி இருக்கிறது… இவை இரண்டையும் பொருத்தினால்.. முழு நிலவாகிவிடும் என்கிறார்..”

**

லலாடம் லாவண்யத்யுதி விமலம் ஆபாதி தவ யத்
த்விதீயம் தந்மந்யே மகுடகடிதம் சந்த்ர சகளம்
விபர்யாஸ ந்யாஸாத் உபயமபி ஸம்பூய ச மித:
ஸுதாலேப ஸ்யூதி: பரிணமதி ராகா ஹிமகர:

தேவி..உன் லலாடப் பிரதேசம் ( நெற்றிப் பிரதேசம்) அமுதைப் பொழியும் கிரணங்களுடன் கூடிய நில்வைப் போன்று ஒளிர்கின்றது..

அந்த நெற்றி உன்னுடைய மகுடந்த்தின் இன்னொரு பகுதியைப் போல எனக்குப் படுகிறது.. ஏற்கெனவே மேல் நோக்கி ஒரு பிறை நிலவு மகுடத்தில் இருக்க எதிர்த்திசையில் உன் நெற்றியாகிய இன்னொரு பிறை நிலவு.

.இரண்டையும் பொருத்திப் பார்த்தால் முழு நிலவாகி விடும்..

avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Sun Feb 23, 2014 10:13 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 47

ப்ருவெள புக்நே கிஞ்சித் புவனபயபங்கவ்யஸ்நிதி
த்வதீயே நேத்ராப்யாம் மதுகரருசிப்யாம் த்ருதகுணம்
தநுர்மந்யே ஸவ்யேதரகர க்ருஹீதம் ரதிபதே:
ப்ரகோஷ்டே முஷ்டெள ச ஸ்தகயதி நிகூடாந்தரம் உமே

Bhruvau bhugne kinchit bhuvana-bhaya-bhanga-vyasanini
Tvadhiye nethrabhyam madhukara-ruchibhyam dhrita-gunam;
Dhanur manye savye'tara-kara-grhitam rathipateh
Prakoshte mushtau ca sthagayati nigudha'ntharam ume

"சகல லோகங்களுக்கும் இருக்கும் பயத்தைப் போக்கும் சக்தியுடைய உமையே.

.உன்னுடைய புருவங்கள் கீழ் நோக்கியபடி கொஞ்சம் வளைந்த புருவங்கள் வில்லாகவும் உன் கண்களாகிய வண்டுகள் நாணாகவும் அந்த வில்லை மன்மதன் பிடித்திருப்பது உன் முகத்தின் நடுப்பாகமான மூக்காகவும் தோற்றமளிக்கிறது

மன்மதனது கை முஷ்டியானது நாணின் நடுப்பகுதியையும் அவனது விரல்களும் உள்ளங்கையும் நடுப்பகுதியை மறைத்தாற்போலும் இருக்கிறது.."

இவ்வண்ணம் தேவியின் புருவங்களை காமனது வில்லாக தியானிப்பவர்களுக்கு காம ஜயம் உண்டாகுமாம்..
avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by ராஜா on Sun Feb 23, 2014 11:18 am

அருமையான பதிவு சின்னகண்ணன் , பிறகு முழுவதும் படிக்கிறேன்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Sun Feb 23, 2014 12:47 pm

மிக்க நன்றி ராஜா..
avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Mon Feb 24, 2014 10:13 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 48


என்னடா டல்லா இருக்கே”

“ஒண்ணும் இல்லை மனசாட்சி.. நம்ம ஃப்ரண்ட் பாஸ்கரன் தெரியுமோல்லியோ அவர் சென்னை போய்ட்டு வந்திருந்தார்.. அவங்க மாமியார் உப்புமா காரச்சட்னி பண்ணிக் கொடுத்தாங்களாம்..”

“ஏன் அதுக்கப்புறம் உடம்பு முடியாமப் போய்டுச்சாமா..”

“இல்லை..அவங்க மாமியாரோட இன்னொரு மாப்பிள்ளை அமெரிக்கால இருக்காராம்..அவர் வர்றப்பல்லாம் இவங்க உப்புமா கத்தரிக்கா கொத்சு பண்ணித்தருவாங்களாம்..என்ன தான் சொல்லு உ.க.கொ ஜோடிங்கறது சிவாஜி பத்மினி ஜோடியாட்டம்.. உ..கா.சட்னிங்கற்து சிவாஜி ஸ்ரீதேவியாட்டம் இருக்கும்ல.. ஏன் இப்படி ஒரு கண்ல வெண்ணெயும் ஒரு கண்ல் சுண்டைக்காய் வத்தலும் வைக்கறாங்க்ன்னு வருத்தப் பட்டார்..”

“அது ஒரு கண்ல வெண்ணெய் ஒரு கண்ல சுண்ணாம்புன்னுல்ல சொல்வாங்க..ஏன் இப்படி அந்தக் காலத்து உவமைல்லாம் சொல்ற..அப்புறம் என்னாச்சு..

:என்ன் பண்ற்து.. அப்படியே சாப்பிட்டாராம்.. விஸ்வரூபம் பார்க்க முடியலைன்னா திருமால் பெருமை டிவிடி போட்டு லாஸ்ட் சீனைப் பார்க்க்றமாதிரி… ! அதுவும் நல்லா இருந்ததாம்..”

“சரி சரி நீ எதுக்கு இந்த மேட்டர் சொல்றன்னு புரியுது..அம்பாளோட கண்கள் பத்தித் தானே..”

“கற்பூர புத்திடா ஒனக்கு..வா சுலோகத்துக்குள்ள போவோம்..”
**

அஹஸ் ஸுதே ஸவ்யம் தவ நயனம் அர்க்காத்மகதயா
த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜநீ நாயகதயா
த்ருதீயா தே த்ருஷ்டி: தரதளித ஹேமாம்புஜருசி:
ஸ்மாதத்தே ஸந்த்யாம் திவஸ நிசயோரந்தர சரீம்

Ahah sute savyam tava nayanam ark'athmakathaya
Triyamam vamam the srujati rajani-nayakataya;
Trithiya the drishtir dhara-dhalita-hemambuja-ruchih
Samadhatte sandhyam divasa-nisayor antara-charim

தேவி.. உனது வலக்கண் ஆதித்யனான சூர்யனின் ரூபமானதால் பகலை உண்டாக்குகிறது..

உனது இடக்கண் சந்திர ரூபமானதால் இரவை உண்டாக்குகிறது.

. உனது நெற்றியில் இருக்கும் கண்ணோ இதற்கு இடைப்பட்ட காலை மற்றும் மாலை சந்தியை உருவாக்குகிறது

இந்த ஸ்லோகத்தை தியானிப்பவர்களின் கண்களுக்கு வாழும்காலத்தில் எந்தவித பாதிப்புமில்லாமலும் மற்றும் இவரது சந்ததியினரில் எவரும் கண்பார்வை அற்றவராக பிறக்க மாட்டார்கள் என்பதும் பலனாகும்....
avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Mon Feb 24, 2014 10:17 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 49

“சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய எல்லாப் பெண்களுக்குமே எட்டு வகையான பார்வைகள் உண்டாம்..அம்பாளின் கண்களுக்கும் எட்டு வகையான பார்வைகள் நகரங்களுடைய பெயர்களுடன் அமைந்திருக்கின்றன எனச் சொல்கிறது இன்றைய ஸ்லோகம்”

“ஏய்.. நீ வந்தே..இப்படிச் சொல்லிக் கிட்டே போனா எப்படி..கொஞ்சம் புரியறா மாதிரி சொல்லேண்டா..”

“ஆமா நான் ஏதாவது உதாரணம் சொன்னால் திட்டுவே இருந்தும் சொல்றேன்..

விசாலா – விசாலமான உள்ளார்ந்த – மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பத்மினியோட கண்கள்

கல்யாணி – வியப்பு – எத்தனை கேள்வி பதில் எப்படிச் சொல்வேன் – அதே பத்மினி வஞ்சிக்கோட்டை வாலிபன் பாட்டுல

அயோத்யா – காதல்வயப்படுதல் – பாலிருக்கும் பழமிருக்கும் தேவிகா

தாரா – ஆலாஸ்யம் – சோம்பல் மிகுந்த –களைப்போடுகூடிய – கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும் பெண்ணைப்பாடச் சொன்னால் என்னபாடத்தோன்றும் சரோஜா தேவி

மதுரா – சஞ்சலம் – காதல் என்பது இது தானோ அறியேனே – வ.கோ.வா பத்மினியின் கண்கள்

போகவதி – அன்பு மிக்கது – சம்மதமா நான் உங்கள் கூட வர சம்மதமா – பானுமதியின் கண்கள்

அவந்தீ – மயக்கம் – ஆலங்குயில் கூவும் ரயில்..சினேகாவின் கண்கள்

விஜயா – பாதி மூடிய கண்கள் –மயக்கமென்ன இந்த மெளனமென்ன வாணிஸ்ரீ யோடது..”

“போதும் போதும்..ஏண்டா லேட்டஸ்டா யாரும் தெரியாதா”

“அப்படி ஒண்ணும் மனசுல கண் நிக்கறாமாதிரி இல்லை..! இது கூட பார்வைக்குத் தான் கொஞ்சம் உதாரணமா கொடுத்துருக்கேன் தப்புன்னா என்னை மன்னிச்சுக்கோ..”

“உதாரணம் தானே சொல்ற..எனக்குத் தெரியாதா..உனக்கு மனசுல ஒண்ணும் கிடையாதுன்னு.. வா சுலோகத்துக்குள்ள போவோம்..”

**

விசாலா கல்யாணீ ஸ்புடருசியோத்யா குவலையை:
க்ருபாதாராதாரா கிமபி மதுரா போகவதிகா
அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுநகர விஸ்தார விஜயா
த்ருவம் தத்தன் நாம வ்யவஹரண யோக்யா விஜயதே

Vishala kalyani sphuta-ruchir ayodhya kuvalayaih
Kripa-dhara-dhara kimapi madhur'a bhogavatika;
Avanthi drishtis the bahu-nagara-vistara-vijaya
Dhruvam tattan-nama-vyavaharana-yogya vijayate

அம்மா உந்தன் கண்கள் அகன்று விசாலமாகவும் மங்கள கரமாகவும் ஒளிபடைத்ததாகவும் கரு நீலோத்பல மலர்களால் வெல்ல முடியாததாகவும் கருணைப்பெருக்கின் இருப்பிடமாகவும் சொல்லொணா அழகு மிக்கதாயும் ஆழ்ந்த்தாகவும் கருணையோடு காப்பதாகவும் எட்டு நகரங்களின் பெயர் கொண்டு விளங்குகின்றன.

.அந்த நகரங்கள் விசாலை கல்யாணி அயோத்தி தாரை மதுரா போகவதி அவந்தி விஜயா.

உன் திக்விஜய காலத்தில் எந்தெந்த நகரங்களுக்குச் சென்று எந்தவிதமான பார்வையால் செயல்கள் செய்தாயோ அதே பார்வையின் பெயராlல் அந்த நகரங்கள் விளங்குகின்றன.,."

இந்த சுலோக பாராயணம் எந்த இக்கட்டையும வென்று விடுமாம்..

avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Mon Feb 24, 2014 10:21 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 50

கொண்ட எழில்கள் குலையாமல் தானிங்கே
கண்களில் மின்னிடும் காட்சியாய் – வண்டாக
மொய்த்திடும் எண்ண மலர்களில் பொங்கிடும்
பொய்கையாய் இந்தப் பணி..

எழுதத் தெரிந்தது கொஞ்சம்தான் – எனக்கு
....எழுத்தில் தெரிந்ததும் கொஞ்சம்தான்
வழுக்கிச் சென்றிடும் ஆசையினால் – நான்
....விழைந்தேன் வரைந்திட இவ்வுரையை
தழுவிச் செல்கிறேன் பலநூல்கள்- தரம்
....நழுவா துரைத்திட எண்ணுகிறேன்
முழுதும் முடித்திட சக்தியினை – எனக்கு
....மொழிவாய் ஈசனின் உமையவளே..”

“என்ன ஆச்சுடா..பாட்டுல்லாம் பாடறே..”

“ஒண்ணுமில்ல மனசாட்சி..காலைல ஜூரம்னு டாக்டர்கிட்ட போனேனா.. அவர் பனடால் குடுத்தாரா..அதைச் சாப்பிட்டேனா.. பாட்டு வந்தது..”

“உன் பாட்டைக் கேட்டு மத்தவா பனடால் போட்டுக்காம இருந்தா சரி..என்ன..யூஸ்யுவலா இருக்கற மாதிரி இல்லையே நீ..”

“கண்களும் கவி பாடுதே.. கண்ணே… உன்..
கண்களும் கவி பாடுதே..உன் ஆசையால்
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு.. உன்
கண்களும் கவி பாடுதே”

“ஆரம்பிச்சுட்டியாடா..”

“கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னைக் கட்டி இழுத்தாய்..”

“சரி இப்ப என்னங்கற அம்பாளோட கண்கள் பத்திச் சொல்லப் போறியா..”

“உனக்குச் சொல்லவே இல்லையே..மத்யானம் பனடால். சாப்பிட்டேனா..இப்ப சாயந்தரம் பனடால் எக்ஸ்ட்ரா சாப்பிட்டேன்.. அதனால இன்னொன்னு நான் எழுதிட்டேன்..”

“ம்ம் சொல்லு..”

”காதுகளில் நற்கவிதை
....கசிந்துருகித் தேனூற
தூதுசெலும் விழிகளதும்
....தேடுதற்போல் ஓரம்செல
மோதுகின்ற கோபத்தால்
....மெய்மறந்த நெற்றிக்கண்
சூதுதனைக் கொண்டாற்போல்
....சிவந்ததுவே அம்பிகையே..!”


“ஏதோ புரியறா மாதிரி இருக்கு..ஆனாப் புரியலை..என்னாபா மீனிங்க்..”

“வா.வா..சுலோகத்துக்குள்ள போகலாம்..

***

கவீனாம் ஸந்தர்பஸ்தபக மகரந்தைக ரஸிகம்
கடாக்ஷ வ்யோக்ஷேப ப்ரமர கலபெள கர்ணயுகளம்
அமுஞ்சந்தெள த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத தரளெள
அஸுயாஸம்ஸ்ர்காத் அளிகநயனம் கிஞ்சித் அருணம்

Kavinam sandharbha-sthabaka-makarandh'aika-rasikam
Kataksha-vyakshepa-bhramara-kalabhau-karna-yugalam;
Amunchantau drshtva tava nava-ras'asvada tharalau-
Asuya-samsargadhalika-nayanam kinchid arunam.

“அம்பிகையே....கவிஞர்களின் கவிதை என்னும் பூங்கொத்தில் உள்ள தேனைப் பருகுவதில் மிகவும் விருப்பமுள்ளவை உன் இரு காதுகள்..

அவ்விரு காதுகளையும் நோக்கி கருவண்டுகள் போல் உன் விழிகள் கடைவிழிப்பார்வையின் போது சஞ்சரித்து அந்த தேன் பருகத் தவிப்பதைப் போன்று இருப்பதைப் பார்த்து அந்த பாக்கியம் தனக்குக் கிட்டவில்லையே,, தான் சற்றே தள்ளி நெற்றியில் இருக்கிறோமே என எண்ணியதன் காரணமாக சற்றே பொறாமையினால் உனது நெற்றிக்கண் சிவந்திருக்கிறது…

தேவியின் (விசாலாஷி) விசாலமான இந்தக் கண்பார்வையினை த்யானிப்பவர்களுக்கு தொலை நோக்குப்பார்வை அமையுமாம்..
avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Tue Feb 25, 2014 10:01 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 51

“பாவம்னா என்ன தெரியுமாடா உனக்கு”

“நான் தான்.. உன்ன மாதிரி நொய் நொய்னு பேசற மனசாட்சி வச்சுண்டுருக்கேனே..”

“அதில்லைடா நான் சொல்றது bhaவம் இந்த நவரசம்னு சொல்வாங்களே அதில ஒண்ணு குறைச்சல் தான் பாவம்..எண் வகை பாவங்கள்னு சொல்வாங்க.. அது தேவியோட கண்ணில தெரிகிறதாம்..”

“அது என்ன ஒண்ணு குறைச்சலான பாவம்..”

“கொஞ்சம் இப்ப் உட்கார்ந்து யோசிச்சுப் பார்த்தாலும் இந்த சாந்தம் கற பாவம்.. அது க்ண்ணுல கொண்டு வர்றது கஷ்டம் தான்

வா..சுலோக்த்துக்குள்ள போய் ப் பார்க்கலாம்..

*
சிவே ச்ருங்காரார்த்ரா ததிதரஜநே குத்ஸநபரா
ஸரோஷா கங்காயாம் கிரிச சரிதே விஸ்மயவதீ
ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ ஸெளபாக்ய ஜனனீ
ஸகீக்ஷு ஸ்மேரா தே மயி ஜனனீ த்ருஷ்டி: ஸகருணா*

அம்மா.. நீ ஈச்னை நோக்கும் கண்களில் காதல் கசிகிறது.

.அவைகளே உன் ஈசனின் அன்பைப் பெற்ற் இன்னொருத்தியான கங்கையை நோக்கும் போது கோபமாகவும், உன்னிடம் தாயென்ற பாவனையில் அல்லாமல் வருபவர்களிடம் அருவ்ருப்பாகவும்
பரமனின் திருவிளையாடல்களை நினைத்து ஆச்சர்யமும், அவரது உடலை அலங்கரிக்கும் பாம்புகளிட்ம் பயத்தினையும்,தாம்ரை மலரினைப் போன்ற சிவந்த நெற்றிக் கண்ணோ வீரத்தையும் வெளிப்படுத்துகின்றன..

மேலும் தோழிகளைக் காணும் போது மகிழ்ச்சியையும் உன்னைப் போற்றும் என்னைப் போன்ற அடியவர்களிடம் கருணையையும் அவை வெளிப்ப்டுத்துகின்றன..

சாந்தம் என்பது மன விகாரமற்ற நிலையாகும்..இதற்கு எடுத்துக்காட்டு ஈசனின் தஷிணா மூர்த்தி நிலையாகும்.. ,

இந்த சுலோக பாராயணம் மற்றவர்க்ளை வசீகரிக்கும் தன்மையை அதிகப்படுத்துமாம்..

avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Tue Feb 25, 2014 10:04 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 52

”அதுல பாருங்கோ..பெண்களோட முகத்தில பாசமான பார்ட்டும் மோசமான பார்ட்டும் எது தெரியுமா…

அவங்களோட கண்கள் தான்..ஆசையைச் சொல்றதும் அதுதான்.. வருத்தத்தை வெளிப்படுத்தறதும் அது தான்..

யோவ்.. வாய்யா.. அப்படின்னு இமையை படபடக்க ஹஸ்கி வாய்ஸ்ல மனைவி  கூப்பிட்டா ஹஸ்பண்ட் அவ்வளவு தான்..

அதே மனைவி கொஞ்சம் கண்கள் ஓரத்துல அழுகையைக் காண்பிச்சான்னா போச்சு..ஆஃபீஸ் போய் கம்ப்யூட்ட்ர் ஆன்பண்ணாலும் அவமுகம் தான் தெரியும்..

இந்தக் கண்களோட அழைப்பு இருக்கே.. ஒரு திரைக்கவிஞர் என்ன சொல்றார்

சிறு குடை போல் விரியும் இமையும்
விழியும் பார்த்தால் ஆசை மலரும்..

தூங்கறதுக்காக கண்களை மூடப் படறதுக்காகப் படைக்கப்பட்ட்து மட்டுமல்ல மனதளவில் ஆசையைத் தூண்டும் வ்ண்ணம் உள்ளவை பெண்களின் கண்ணிமைகள்..அப்படின்னு என்னோட சித்தப்பா அடிக்கடி சொல்வார்..!

இந்த ஸ்லோகத்தில் அம்பாளின் கண்கள் மன்மத பாணங்களாகவும் இமைகளும் அதிலிருக்கும் முடிகளும் அந்த பாணங்களோட் வேகத்தை க் கூட்ட்றதுக்காகக் கட்டப்பட்ட சிறகுகள் மாதிரி இருக்கறதா பகவத் பாத்ர் சொல்றார்.

அதுவும் அந்த பாணங்களை இமைகளாகிற சிறகுகளால சொய்ங்க்க்னு ஈசன் மேல எய்தா என்னாகும்.. அவரும் குளிர்ந்து போகிறாராம்


**
கதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி ததநீ
புராம் பேத்து: சித்தப்ரசமரஸ வித்ராவண பலே
இமே நேத்ரே கோத்ராதரபதி குலோத்தம்ஸகலிதே
தவாகர்ணாக்ருஷ்ட ஸ்மர சர விலாஸாம் கலயத:

அம்பிகே.. இமவானின் வம்சத்திற்குப் பெருமை கொடுப்பவள் அல்லவா நீ.. உனது காதுவரையில் நீண்டு இருக்கும் கண்களானது சிவபெருமானின் மனதைக் கலக்குவதற்காக மன்மதனால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிறகுகளுடன் கூடிய பாணங்களாக இருக்கின்றன

இச்சுலோக பாராயணம்  காமனை வெல்லும் பலம் தருமாம்..அத்துடன் கண்கள் காதுகள் போன்றவற்றின் கோளாறுகளையும்  நீக்குமாம்....

avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Wed Feb 26, 2014 10:27 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 53

“ஒரு செப்புப் பாத்திரத்தை எடுத்து அதை சுத்தமாகக் கழுவி த் துடைத்து புதிதாக உரைக்கப் பட்ட சந்தனத்தைத் தடவ வேண்டும்.பின் அதை விளக்கெண்ணெயால் ஏற்றப் ப்ட்ட குத்துவிள்க்கின் மெல்லிய் சூட்டில் சுடப் பண்ண, பாத்திரத்தின் அடியில் மை பெருகும்.. அந்தக் கரித்தூளை எடுத்து வெண்ணெயில் பிசைந்து, வாசனைப் பண்டங்களைச் சேர்த்தால் மை தயார்..”

“புதுசா ஐ டெக்ஸ் கம்பெனில் சேர்ந்திருக்கியா என்ன..”

“போ மனசாட்சி.. இந்தக் கருவிழி நடனம் தருகின்ற நளினம்னு பாட்றாங்களே.. அதுக்கெல்லாம் காரணம் என்ன.. கண்ணுக்கு பார்டர் போட்ட மாதிரி இருக்கற கண் மை தான்..

கண் மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட
நான் ஆடுவேன் னு

சொல்லிச் சொல்லியே அந்தக் காலத்துலருந்து இந்தக் காலம் வரைக்கும் பெண்கள் ஆடவரை ஆட்டிப் படைப்பதும் இந்தக் கண் மையால் தான். அதன் மூலம் பளீரிடுகிற கண்களால் தான்...

இப்பத் தான் காஜர் நு பென்சிலாட்டம்லாம் வந்துடுச்சு..

“அப்புறம்”

“சிகப்பு கறுப்பு வெளுப்பு”

“நின்னு போன சுஜாதா நாவலோட பேர்.. அப்புறம் தான் ரத்தம் ஒரே நிறம்னு எழுதியிருந்தாரே..அதையா சொல்லப் போறே..”

“ஸீ.. கண்ணுன்னு எடுத்துக்கிட்டா விழிகள் கருமை அதைச்சுற்றி வெண்மை கண்ணோரம் சிவப்பு அதைச் சொன்னேன்..உதாரணத்துக்கு…

“வேண்டாம்..ஏதாவது நடிகை பேரைச் சொல்லுவே..சரி..இவை எதைக் குறிக்கறதாம்…”

“ப்ரம்மா சிருஷ்டி செய்யும் தொழில் செய்பவர்.. அது ரஜோ குணம், விஷ்ணு காக்கும் தொழில் அது ஸத்வ் குணம்.. ருத்ரன் தமோ குண்ம்..அழிப்பவர் இந்த மூன்று பேரோட குணங்களையும் தன்னோட கண்கள்ள வச்சுருக்காளாம் அம்பாள்..வா ஸ்லோகத்துக்குள்ள போய்ப் பார்க்கலாம்”

***

Vibhaktha-traivarnyam vyatikaritha-lila'njanathaya
Vibhati tvan-netra-trithayam idam Isana-dayite;
Punah strashtum devan Druhina-Hari-Rudran uparatan
Rajah sattvam vibhrat thama ithi gunanam trayam iva

விபக்த த்ரைவர்ண்யம் வ்யதிகரித லீலாஞ்ஜநதயா
விபாதி த்வந் நேத்ரத்ரிதயம் இதம் ஈசாநதயிதே
புந: ஸ்ரஷ்டும் தேவாந் த்ருஹிணஹரிருத்ராந் உபரதாந்
ரஜஸ்ஸத்வன் பிப்ரத் தம இதி குணானாம் த்ரயமிவ

அம்பிகையே… அஞ்சனத்தைத் தரித்து பிரகாசமாய் இருக்கும் உன் கண்களில் இருக்கும் வெண்மை, சிகப்பு, கருப்பு போன்ற நிறங்களானது ப்ரளய காலத்தில் உன்னிட்ம் மறைந்து போன பிரம்மா விஷ்ணு ருத்ரன் போன்றோரை மீட்கும் வண்ணம் ரஜோ சத்வ தமோ குணங்களுடன் கூடியதாக இருக்கின்றன..

இவ்வாறு தேவியை தியானிப்பவர்கள் அஞ்சனப் ப்ரயோகம் கைவரப் பெற்று யாவரையும் வசீகரிக்கும் திறன்பெறுவர்..
avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Wed Feb 26, 2014 10:30 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 54


“கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்…

யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே கண்ணனோடு நான் ஆட..

சோனா ஓ சோனா ”

“மொத ரெண்டு பாட்டு நதி பேரு ஓகே..அது என்ன மூணாவதா..”

“அதுவும் நதி தான் சோணாபத்ரான்னு நதி..அதுக்கு கூகிள்ல சோணா நதின்னு போட்டா இந்தப் பாட்டும் அப்புறம் சில படங்களும் வருது..”

“ம்ம் அதப்பார்த்திருப்பியே நீ.. அப்புறம் கண்டு பிடிச்சியா இல்லையா..”

“கண்டுபிடிக்காம..அந்த நதி ஸோன் நதியாம் வடக்கே பாயும் நதி கங்கையில கலக்கறதாம்..காஞ்சிப் பெரியவா சொல்லியிருக்கார்.. அந்த ஸோன் நதியில் உள்ள ஸோன பத்ரக் கல்லை பூஜையறையில் வைத்து விநாயகரை வழிபடணுமாம்..

அப்புறம் இந்த ஸோணபத்ராவப் பத்தி வால்மீகி ராமாயணத்திலயும் வந்திருக்கு.. ராம லஷ்மணர்கள் விஸ்வாமித்ரருக்கு ஹெல்ப் பண்ண தாடகையைத் தேடிப் போறச்சே இந்த நதிக்கரையில் தங்குவார்களாம்..”

“அது சரி..என்ன திடீர்னு நதிகளைப் பத்தி எல்லாம்..”

“நேற்று அம்பாளின் கண்கள் மூவகை குணங்களைக் குறிக்கிறதுன்னு சொன்னாரில்லையா பகவத் பாதர்..

இந்த சுலோகத்துல அந்தக் கண்கள்ல இருக்கற் மூன்று நிறங்களும் இந்த மூன்று நதிகளைக் குறிக்கறதுங்கறார்..
கங்கை வெண்மை யமுனையின் இன்னொரு பெயர் காளிந்தி – சூரியனின் மகள் – கருமை ஸோண பத்ரா- சிவப்பு..

கங்கையும் யமுனையும் கிழக்கு நோக்கிப் பாய்கின்ற நதிகளாகும்..

ஸோனபத்ரா நதியின் மணலில் தங்கத் தாதுக்கள் இருப்பதால் சிவந்த நிறத்துடன் ஒளிருமாம்..மற்றும் அந்த நதி மேற்கு நோக்கிப் பாயும் நதியாம்..”

“அப்புறம்.. சாண்டில்யனோட மஞ்சள் ஆறுல கூட டைட்டில் ல வர்ற ரிவர் தான் சோணாபத்ராவா இருக்குமோ”

“இருக்கலாம்.. ஐயாம் நாட் ஷ்யூர்.. சரி வா ஸ்லோகத்துக்குள்ள போய்ப் பார்ப்போம்..”

**[
color=#ff0066]
பவித்ரீகர்த்தும் ந: பசுபதிபராதீந ஹ்ருதயே
தயாமித்ரைர் நேத்ரை: அருணதவள ச்யாமருசுபி:
சோணோ கங்கா தபநதநயேதி த்ருவம் அமும்
த்ரயாணாம் தீர்த்தானாம் உபநயஸி ஸம்பேதம் அநகம்


Pavithrikarthum nah pasupathi-paradheena-hridhaye
Daya-mithrair nethrair aruna-dhavala-syama ruchibhih;
Nadah sono ganga tapana-tanay'eti dhruvamamum
Trayanam tirthanam upanayasi sambhedam anagham.
[/color]

“தேவி.. பசுபதியான பரமனின் இருப்பிடமான உள்ளத்தை உடையவளே..

மிக அன்புடன் கருணை மிக்கதும் தனித்தனியாக இருக்கும் சிகப்பு,கருமை வெண்மை பொன்ற நிறங்களால் மூன்று மெல்லிய வரிகளை உடைய விழிகள் கொண்டவளே..

சிவந்த நிறத்தோடு மேற்கு நோக்கிச் செல்லும் சோண பத்ரா நதி, சூரியனின் மகளும் கிழக்கு நோக்கிப் பாய்பவளுமான கருமை மிக்க யமுனை நதி, வெண்மை பொங்கும் கங்கை நதி ஆகிய எல்லா விதமான பாவங்களைப் போக்கும் மூன்று புண்ணிய தீர்த்தங்களின் சங்கமமாக உனது விழிகள் இருக்கின்றன

..அப்படிப்பட்ட உனது விழிக்ளின் பார்வை எங்களைப் புனிதப் படுத்தும்..

தேவியின் விழிகளில் பொங்கும் இந்த முக்கூடலை தியானிப்பவர்களுக்கு அவர் அறியாமையினால் செய்த பாவங்கள் விலகுமாம்.. ஞானமும் கிட்டிடுமாம்..
avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Thu Feb 27, 2014 10:21 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 55நிமேஷோந்மேஷாப்யாம் ப்ரளயமுதயம் யாதி ஜகதீ
த்வேத்யாஹு: ஸந்தோ தரணிதர ராஜந்ய தநயே
த்வதுன்மேஷாஜ்ஜாதம் ஜகதிதம் அசேஷம் ப்ரளயத:
பரித்ராதும் சங்கே பரிஹ்ருத நிமேஷாஸ் தவ த்ருச:

Nimesh'onmeshabhyam pralayam udayam yaati jagati
Tave'ty ahuh santho Dharani-dhara-raajanya-thanaye;
Tvad-unmeshaj jatham jagad idham asesham pralyatah
Pari-trathum sankhe parihruta-nimeshas tava drusah.

”அம்பிகையே..மலையரசனின் மகளே..நீ கண் மூடித் திறந்தால் உலகம் அழிந்து மறுபடியும் தோன்றுகின்றது என பெரியோர்கள் கூறுவார்கள்..

எனில் கண்ணிமைகளைக்கூட மூடாமல் கருணையுடன் கண்களைத் திறந்தவாறு வைத்திருந்து உலகம் யாவற்றையும் அழிவில் இருந்து காப்பதாக நான் எண்ணுகிறேன்"

தேவியின் இமையாத விழிகளை தியானிப்பவர் பிறவிப்பெருங்கடலில் இருந்து விடுபடுவர்..
avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Thu Feb 27, 2014 10:25 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 56


“மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே”

“நாம பேசப் போறதோ உலகையும் உலகியலைத் தோற்றுவித்தவளுமான அம்பிகையைப் பத்தி.. ஏன் இவ்வுலக அரசியல்லாம் பேசற..

“அடப்பாவி..மதுரையைப் பத்திப் பேசினா அரசியல் தானா. நானே ஒரு மதுரைக் காரன்..அந்தக்கால.. சரி..மனசாட்சி..இது ஓகேயா..
இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல ”

“ஆஹா வாலித் தாத்தா வாலிபத்துல எழுதினது.. இந்த சுலோகத்துலயும் கண்கள் பத்தித் தான் எழுதியிருக்காரா பகவத் பாதர்..

“ஆமாம்.. அவருக்கு எவ்வளவு சொன்னாலும் அம்பாளோட கண் அழகை வர்ணிக்கறதுல்ல ஆர்வம் அடங்கலை போல.. திரைப்பாட்டுல நீரோடையில மீன்கள் அடிக்கடி தாவும்.. அதுபோல மானுட பத்மினியோட கண்கள் தாவுதுன்னு வாலி சொன்னாரில்லயா”

“சரி”

“இதில் பகவத் பாதர் சொல்றார்.. நீரில் இருக்கற மீன்கள்லாம் அம்பாளோட கண்களைப் பார்த்து பயந்து கப்சிப்னு சைலண்டா குளத்துக்கடியிலேயே பயத்தோட கண் திறந்த படி அம்பாளோட் கண்களைப் பார்த்துக்கிட்டே இருக்காம்..”

“ஏனாம்”

“அம்பாளோட் அருள் மழை பொழியும் கண்கள் காதுகளை நோக்கி அடிக்கடிப் போவது அந்த மீன்களைப் பத்திக் கோள் சொல்லத்தான் இருக்கும்னு அவை நினைக்கின்றனவாம்..அதுமட்டுமில்ல..

“சொல்லு..”

பேசும் விழிகள் பேச வரலாம் பிஞ்சு முகத்தைக் கொஞ்ச வரலாம்
ஆசை நதியில் நீந்த வரலாம் அல்லிப் பூவில் மணம் பெறலாம்

”மறுபடி பாட்டா..இதுல அல்லிப் பூவா.”

“யா.. மஹா லஷ்மி பகற்பொழுதுகளில் அம்பிகையின் கண்களில் வாசம் செய்வதற்காக தான் இருக்கும் அல்லி மலர்களைப் பூட்டிக் கொண்டு அம்பிகையின் கண்களுக்கு வருகிறாள்..இரவில் அம்பாளாகப் பட்டவள் யோக நித்திரை செய்யும் சமயம் அவளை டிஸ்டர்ப் செய்யக் கூடாதுன்னு அங்கிருந்து கிளம்பி அல்லி மலர்களை ஓபன் பண்ணி அங்கே வந்து துயில் கொள்ளுகிறாள்..அப்படிங்க்றார் பகவத்பாதர்..”

“நடு நடுல்ல இங்க்லீஷ் ரொம்ப அவசியமோ..அப்புறம்..”

“எல்லா குளங்கள்லயும் மீன் இருக்கும்.. மதுரை பொற்றாமரைக் குளத்தில மீன் இருக்காது தெரியுமோ.. அங்கே மீன லோசனி இருக்காளே..”

“சரி வா.. சுலோகத்துக்குள்ள போவோம்..”


**
தவாபர்ணே கர்ணே ஜபநயன பைசுன்ய சகிதா:
நிலீயந்தே தோயே நியதம் அநிமேஷா: சபரிகா:
இயம் ச ஸ்ரீர் பத்தச் சத புடக வாடம் குவலயம்
ஜ்ஹாதி ப்ரத்யூஷே நிசி ச விகடய்ய ப்ரவிசதி

Tav'aparne karne-japa-nayana-paisunya-chakita
Niliyante thoye niyatham animeshah sapharikah;
Iyam cha srir baddhasc-chada-puta-kavaiam kuvalayam
Jahati pratyupe nisi cha vighatayya pravisathi.

“தேவி, நீ அடியவர் விரும்புவதை உடனே தருகிறாய்.. எனில் எவருக்கும் கடன்படாதவள் ஆகிறாய்.. தவிர இமவானின் மகளாகப் பிறந்த காலத்தில் இலைகளைக் கூட உண்ணாமல் ஈசனுக்காக தவமிருந்தவள் நீ..பர்ணம் என்றால் இலை.. எனில் நீ அபர்ணா என்று அழைக்கப் பெற்றாய்..

அபர்ணா…உனது நீள் விழிகள் காதுகளுக்கு அருகில் செல்வதால் அவை தம்மைத் தாம் கோள் சொல்வதாக எண்ணிப் பயந்து மீன்கள் - நீ அவர்களுக்கு ஏதாகிலும் தண்டனை தந்துவிடுவாய் என எண்ணியபடியே மூடாத விழிகளுடன் நீருக்கடியில் உன்னையே பார்த்த வண்ணம் இருக்கின்றன..

உனது கண்களில் வாசம் செய்திடும் மஹாலஷ்மியும் பகலில் நீலோத்பலம் எனச் சொல்ல்ப் படும் அல்லி மலர்களை விட்டு வந்து உன் கண்களில் இருந்து அருள் புரிந்து விட்டு இரவில் நீலோத்பலங்க்ள் மலர்ந்ததும் அவற்றில் எழுந்தருளுகிறாள்….”

தேவியின் மேன்மை அறிந்து இதை தியானிப்பவர்க்ளுக்கு கண்களில் எல்லாவித குறைபாடுகளும் நீங்குமாம்..மேலும் மஹாலஷ்மியின் பூரண அருளும் கிட்டுமாம்..

avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Thu Feb 27, 2014 10:34 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 57

“வானில் நடமிட்டு வட்டமுகம் கோணாமல்
நாணி நகைபுரியும் நங்கையினைப் போலே
வரையற்ற வண்ணவொளி வையத்தில் நன்றாய்
நிறைத்தே அருளும் நிலவு
*
ஏக்கம் மிகக்கொண்டு ஏங்கிவரும் காதலரை
தேக்கி நிறுத்தாமல் தென்றலுடன் கூடக்
குளிர்வித்துக் காட்டின் மரநிழலில் அழகாய்
ஒளியும் நிலவின் ஒளி
*
மன்னனா மற்றோரா மாயங்கள் செய்கின்ற
கண்ணனா கள்வனா என்றெல்லாம் வெண்மதியும்
எண்ணாமல் ஈவாள் ஒளியை அதுவுமவள்
கொண்டிருக்கப் பெற்ற குணம்
*
பாவை அழகினைத்தான் பக்குவமாய் வர்ணிக்க
தேவையுள வார்த்தைகள் தீர்ந்துவிட அங்கே
கதியேது மில்லாமல் கற்றவர்கள் சொல்வர்
மதியை மயக்கும் மதி
*
வானில் இருந்தவள்தான் வந்துவிட்டாள் என்றெண்ணி
தேனில் பழத்தினைத் தோய்த்தே சுவைத்தாற்போல்
மேயும் நிலவின் பிரதிபிம்பம் தான்வாங்கிக்
காயும் நிலவால் கடல் “

“ஒமகசீயா நா ந நா நா..”

“என்னாச்சு மனசாட்சி..”

“பின்ன என்ன..இப்படில்லாம் திடீர்னு பயமுறுத்தினா.. அழகா உன்னோட பாணில்ல நிலவு ஒரு பெண்ணாகி பாடியிருக்கலாமில்லை..”

“கொஞ்சம் எழுதிப் பார்த்தேன் இந்த கொண்டிருக்கப் பெற்ற குணம் ஈற்றடி மட்டும் முத்தொள்ளாயிரத்தில இருந்து வாங்கிக்கிட்டேன்....”

“சரி பட் உன் நேர்மை எனக்குப் பிடிச்சுருக்கு.. சொல்லு நிலவைப்பத்தி..இந்த ஸ்லோகத்துல வருதாக்கும்..”

”அதுக்கும் முன்னால அல்லிங்கறது நார்மல் அல்லி..வெண்ணிறமா இருக்கும்..நீலோத்பலம்ங்கறது பிங்க்கலர்ல இருக்கும்..அதையே குவளை மலர்னு சொல்வாங்க நீல அல்லின்னும் சொல்வாங்க.. இதை ஒரு நண்பர் எனக்குச் சொன்னார்…

கொஞ்சம் கருநீலத்திலும் தென்படும் போல இருக்கு. அவற்றைக் கருங்குவளை என்றும் சொல்வார்களாம்... nymphaea pubescens நிம்பையா ப்யுபிசென்ங்கறது பொடானிகல் நேம்.”

“எங்கேயோ போய்ட்ட

“எங்கேயும் போகலை..போவதற்கு வெகு தூரம் இருக்கு..உனக்குத் தெரியுமா திருப்புகழ்ல குவளை மலர் பற்றி வருது..

.// சஞ்சரி உகந்து நின்று முரல்கின்ற தண் குவளை உந்து குழலாலும் ... வண்டுகள் மகிழ்ந்து, நின்று ரீங்காரம் செய்யும் குளிர்ச்சி பொருந்திய குவளை மலர் விளங்கும் கூந்தல் மூலமாகவும், //
அப்புறம்..”

“ம்ம் எனக்குத் தெரியும்.. திருவெம்பாவைலயும் வருது.. //பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம்குருகு இனத்தால்
நீர் நிரம்பிய குளத்தில் பசுமையும், கருமையும் கலந்த குவளை மலர்கள் உள்ளன//

தவிர ஒரு குறளும் இருக்கு தெரியுமோ.

காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழைக் கண்ணொவ்வோம் என்று. –

”குட் மனசாட்சி.. இன்றைய சுலோகத்தில என்ன சொல்றார் பகவத் பாதர்னு பார்ப்போமா..

**
த்ருவா த்ராகீயஸ்யா தரதளித நீலோத் பலருசா
தவீயாம்ஸம் தீநம் ஸ்நபய க்ருபயா மாமபி சிவே
அநேநாயம் தந்யோ பவதி ந ச தே ஹாநிரியதா
வநே வா ஹர்ம்யே வா ஸமகர நிபாதோ ஹிமகர:

Drisa draghiyasya dhara-dhalita-nilotpala-rucha
Dhaviyamsam dhinam snapaya kripaya mam api Sive;
Anenayam dhanyo bhavathi na cha the hanir iyata
Vane va harmye va sama-kara-nipaatho himakarah

“”மங்களங்கள் யாவும் அருள்பவளே..தேவி..சற்றே மலர்ந்த கருங்குவளை மலரின் காந்தியைப் போன்ற, காதுவரை நீண்ட உன்னுடைய கண்ணின் பார்வை உன்னைத் தொழாமல் எங்கோ இருக்கும் தகுதியற்றவனான என் மீதும் விழட்டும். ,
அதனால் உனக்கு ஒரு குறைவும் ஏற்படாது.. நிலவானது ஏழையோ அரசமாளிகையோ என்றெல்லாம் எண்ணுவதில்லை.. காட்டிலும் அரசமாளிகையிலும் தன் குளிர்ந்த ஒளியினை வழங்குகின்றது..அதுபோல உன் கண்களின் கருணை ஒளி என் மீதும் படவேண்டும்..”

“அன்னையவள் கருணை எந்த வித்யாசமும் இல்லாமல் அருள் வழங்கக் கூடியது என்கிறார் ஆதிசங்கரர்..

இவ்வாறு ஜகன்மாதாவை தியானித்தால் அன்னையின் அருள் மட்டுமில்லாது பொருளும் பெற்று இன்புறலாம்.
avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Sun Mar 02, 2014 10:11 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 58

“என் துணை என் நண்பன்னு ரொம்ப நாளைக்கு முன்னால ஒரு விளம்பரம் நினைவிருக்கா..””

“இல்லாம.. அமிர்தாஞ்சன்.. யூ நோ.. சில பெண்கள் எல்லாம் தலை வலிக்குதோ இல்லியோ பெட்ல தலகாணிக்குப் பக்கத்துலயோ அடிலயோ வச்சுக்குவாங்க..அப்பப்ப புருஷனைக் கூட அவ்வளவு காதலா பார்க்காம அந்த அமிர்தாஞ்சன் பாட்டில பார்த்துக்குவாக்க.. தலை வலிக்குதோ இல்லியோ ஸ்லைட்டா தடவிக்கிட்டா தான் தூக்கமே வரும் சில் பெண்களுக்கு..ஸ்மெல்லால தூக்கம் போகும் சில கணவர்க்ளுக்கு..அது வேற விஷயம்..””

“சரியாச் சொன்ன போ..தலை வலிக்கறச்சே இந்த அமிர்தாஞ்சனத்தை எங்கு தடவுவாங்க..

“இது என்ன கேள்வி இது.. நெற்றிப் பொட்டில் தான்..”

“அதாவது பொட்டு வைத்த முகமோ ந்னு பாட்டுல வர்ற பொட்டு இருக்கற இடத்துலயா..

“ஏண்டா படுத்தற..அங்க இல்லை.. கண்களுக்கும் காதுகளுக்கும் இடையே இருக்கற பிரதேசம்..ரொமாண்டிக் சமயத்துல அந்தக் காது லோலாக்க வருடி சைட்லயும் கொஞ்சம் வருடினேன்னு வச்சுக்க ஆப்பொஸிட் சைட் அப்படியே ஃபணால்..”

“ஏய்.உன்கிட்ட யாரு இவ்வளவு டீடெய்ல் கேட்டா..அந்த நெற்றிப் பொட்டும் பட்டுக் கன்னமும் வளைஞ்சு இருக்காம் அம்பாளுக்கு.. அம்பாளோட கண்களோ காதுவரை நீண்ட கண்கள்..அவை அப்பப்ப காதுகிட்ட பார்வையை வீச்றச்சே இந்த வளைஞ்சுருக்கற நெற்றிப் பொட்டு வில்லாகவும், அந்த ஓரவிழிப் பார்வைகள் கணைகளாகவும் தென்படறதாம்..அதுவும் யாரோட பாணங்கள்.. மன்மதனோட பாணங்கள்..”

“இந்த ஸ்லோகத்துல அப்படிச் சொல்றாரா..அதாவது மன்மதனோட கணையானது சைட்ல போகுதாக்கும்..”

“ஆமாம்ப்பா..இதப் புரிஞ்சுக்க எனக்கு சித்த நாழி ஆகிடுச்சு..வா…ஸ்லோகத்துக்குள்ள போகலாம்”

**
அராளம் தே பாலீயுகளம் அக்ராஜந்யதநயே
ந கேஷாம் ஆதத்தே குஸுமசர கோதண்ட குதுகம்
திரச்சீநோ யத்ர ச்ரவணபதம் உல்லங்க்ய விலஸத்
அபாங்கவ்யாஸங்கோ திசதி சரஸந்தாந திஷணாம்

Araalam the paali-yugalam aga-rajanya-thanaye
Na kesham adhatte kusuma-shara-kodhanda kuthukam;
Tiraschino yathra sravana-patham ullanghya vilasann-
Apaanga-vyasango disati sara-sandhana-dhisanam

மலையரசன் மகளே.. உன் வளைந்த காது மற்றும் கண்களுக்கு இடையேயான நெற்றிப்பொட்டு எனச் சொல்லப் படும் பிரதேசமானது சற்றே வளைந்திருப்பதால் மன்மதனின் கரங்களில் உள்ள வில் போலவும் அப்பிரதேசத்தில் அவ்வப்போது ஒளிரும் கடைக்கண் பார்வையானது காதுகளை ஊடுருவி பிரகாசிப்பதால் அவன் பூட்டியிருக்கும் மலர்க்கணைகளைப் போலவும் தோன்றுகிறது..

இவ்வண்ணம் தேவியை தியானிப்பவர்கள் காமனையும் வெல்லும் தன்மை பெறுவர்…
avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Sun Mar 02, 2014 10:14 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் 59


ஸ்புரத் கண்டாபோக ப்ரதிபலித தாடங்கயுகளம்
சது:சக்ரம் மந்யே தவ முகமிதம் மந்மதரதம்
யமாருஹ்ய த்ருஹ்யத்வநிரதம் அர்கேந்துசரணம்
மஹாவீரோ மார: ப்ரமத பதயே ஸஜ்ஜிதவதே

Sphurad-ganddabhoga-prathiphalitha-thatanka yugalam
Chatus-chakram manye thava mukham idam manmatha-ratham;
Yam-aruhya druhyaty avani-ratham arkendhu-charanam
Mahaviro marah pramatha-pathaye sajjitavate.


தேவி.. உன்னுடைய பரிசுத்தமான கண்ணாடி போன்று ஒளிரும் கன்னங்களில்- தாடங்கம் என்று சொல்லப் படும் ஸ்ரீசக்ர வாடிவிலான இரண்டு வைரத் தோடுகளும் உன் காதுகளில் இருந்து அதன் ஒளியால் பிரதிபலிக்கப் படுகின்றன…


. இப்படி நான்கு சக்கரங்கள் தெரியும் உனது முகமானது பொன் வண்ண மன்மதனின் தேர் போன்று காட்சி அளிக்கின்றது..

இத் தேரில் ஏறிக்கொண்டு மன்மதன் சூரியன் சந்திரன் என்ற இரு சக்கரங்களுடன் பூமியாகிய தேரில் ஏறிச் சென்று முப்புரம் எரித்த பரமசிவனுடன் போருக்குச் செல்வது போன்றிருக்கிறது..”

இச்சுலோக பாராயணம் எல்லோரையும் வசீகரிக்கும் ஆற்றலைப் பெற்றுத் தரும்..

avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Sun Mar 02, 2014 10:15 am


நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .60

ஸரஸ்வத்யா: ஸுக்தீரம்ருதலஹரீ கெளசல ஹரீ:
பிபந்த்யா: சர்வாணி ச்ரவண சுளுகாப்யாம் அவிரளம்
சமத்காரச்லாகா சலிதசிரஸ: குண்டலகணோ
ஜணத்காரைஸ் தாரை: ப்ரதிவசநமசஷ்ட இவ தே

Sarasvatyah sukthir amrutha-lahari-kaushala-harih
Pibanthyah Sarvani Sravana-chuluk abhyam aviralam;
Chamathkara-slagha-chalita-sirasah kundala-gano
Jhanatkarais taraih prati-vachanam achashta iva te.


”அம்பிகையே. உனது பொருள் பொதிந்த அமுதமான பேச்சை இடைவிடாது கேட்டுக் கொண்டிருக்கும் கலைமகள் அதன் இனிமையில் மயங்கி,, தன் வீணையின் ஒலியைவிட இனிமை அதில் இருப்பதைக் கண்டு வியந்து அழகாகத் தலையசைக்கிறாள்..

அப்போது அந்த சரஸ்வதியின் காதணிகள் மெல்ல அசைகின்றன..

அதிலுள்ள மணிகள் ஜனஜன என அழகிய ஒலி எழுப்புகின்றன..

அந்த ஒலி ,மலையரசன் பத்தினியே, உன் பேச்சை ஆமோதிப்பதுபோல,, உன் பேச்சை வியந்து ஆஹாகாரம் செய்வது போல இருக்கின்றது….

இந்த ஸ்லோகத்தை சிரத்தையோடு பாராயணம் செய்தால் அந்த இடங்களில் மணிகளின் ஜனத்காரங்கள் கேட்கும்.. தேவியின் அருளும் கிட்டும்..
avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by T.N.Balasubramanian on Mon Mar 03, 2014 7:14 am

சின்னக்கண்ணன் , அன்பு மலர்  அன்பு மலர் 
பெரிய விஷயங்களை அழகாக தருகிறீர்கள். நன்றி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22152
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Mon Mar 03, 2014 10:27 am

நன்றி, ரமணீயன் ஐயா..

@T.N.Balasubramanian wrote:சின்னக்கண்ணன் , அன்பு மலர்  அன்பு மலர் 
பெரிய விஷயங்களை அழகாக தருகிறீர்கள். நன்றி

ரமணியன்
avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Mon Mar 03, 2014 10:34 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .61


”மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே”

“வாய்யா வா வா ஏன் ரெண்டு நாள் ஒன்னோட குரலே ஒலிக்கலை மனசாட்சி.. எவ்ளோ சந்தோஷமா இருந்தோம் தெரியுமா நானும், மத்தவங்களும்!!”

“சும்மா இதானே வேணாங்கறது..காரணம் இல்லாம நாம பேசிப்போமா என்ன..உனக்கு மூங்கில் முத்துன்னா என்னன்னு தெரியுமோ”

”எனக்கு முரடன் முத்து தான் தெரியும் தேவிகா படம்..“

“உதைக்கணும் உன்னை.. இந்த மூங்கில் இருக்கோல்லியோ புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாம். புல் வகையிலேயே மிகவும் பெரிதாக வளரக்கூடியது.

திருமணத்தின் போது மணமக்களை வாழ்த்துபவர்கள்

“ஆல் போல் தத்து அருகது போல வேரோடி, மூங்கில் போல் சுற்றம் முசியாமல்"

என வாழ்த்துவாங்களாம் அந்தக் காலத்தில்... அந்தளவிற்கு தன் இனத்தோடு பலஆண்டுகள் இணைந்து கணுக்கணுவாய் தோன்றி வளரக் கூடியது மூங்கிலாக்கும் மூங்கிலானது தொடர்ந்து வேரிலிருந்து கன்று தோன்றி வளர்ந்து வளர்ந்து பல தலைமுறை தாவரங்களும் புதராக ஒன்றாக இருக்கும். இது நூறு அடி உயரம் வளரக்கூடிய பல பருவப் புதர் மரம் என்று சொல்வார்கள்..”

“ஏன் ஏதாவது மூங்கில் பிஸினஸ் பண்ணப் போறியா..ஏண்டா திடீர்னு போர் அடிக்கற..”

“இல்லைப்பா ஒரு விஷயம் கொஞ்சம் தெரிஞ்சுண்டதைச் சொல்லலாமேன்னு தான்.

. இன்றைய ஸ்லோகத்துல மூங்கில் முத்துன்னு வருது.. அது என்னன்னு பார்த்தா திருஞான சம்பந்தர் தேவாரத்துலயும் சுந்தரரோட திருச்சோற்றுப் படையிலையும் வருது...

கழைநீர் முத்துங் கனகக் குவையும்
சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே

. //மூங்கில்களிடத்து உளவாகிய சிறந்த முத்துக்களும் , பொற்குவியல்களும் சுழிகளில் சுழல்கின்ற நீரையுடைய காவிரி யாற்றையுடைய , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே//

இது சுந்தரர் தேவாரம்..

பீலிம்மயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம்
சூலிம்மணி தரை மேல் நிறை பொழியும் விரி சாரல்

//பீலியுடைய ஆண்மயில்கள் தங்கள் பெண்மயில்களோடு வாழும் பொழில்களும்,
மூங்கில்கள் தங்கள் சூலிலிருந்து முத்துக்களை நிலமெங்கும் பொழிகின்ற
விரிந்த சாரலும் உடைய திருவண்ணாமலையில்//னு

இது ஞான சம்பந்தர் தேவாரம்..

ஸோ மூங்கில் தண்டைக் கீறினா முத்துக்கள் போல இருக்கும் போல இருக்கு –அந்தக் காலத்துல..அந்த முத்துக்கள்ல ஒண்ணு அம்பாள் சுவாசிக்கறச்சே வெளிவந்து அம்பாளோட் மூக்கின் அணியாக ஆகியிருக்குமோங்கறார் பகவத் பாதர்…

அப்புறம் கழைங்கறது மூங்கிலைக் குறிக்கும் கழைக்கூத்தாடி தெரியுமோ..”

“தெரியாம என்ன..வாணி ராணில வாணிஸ்ரீ மேல கயிற்று மேல ஒரு கம்போட நடப்பாங்களே..வாணிஸ்ரீ ஒரு விதமான அழகுதான் இல்லியோ.... “

“ஏண்டா பழைய படத்துல இருந்து தான் உவமை கொடுக்கணுமா.. சரி..இன்றைய ஸ்லோகத்துல அம்பாளோட நாசி மூங்கிலுக்கு ஒப்பாக இருக்காம்.. வா டீடெய்லா ஸ்லோகத்தில் போய்ப் பார்க்கலாம்..

**
அஸெள நாஸாவம்ச: துஹிநகிரிவம்சத்வஜபடித்
வதீயோ நேதீய: பலது பலமஸ்மாக முசிதம்
வஹந்த்யந்தர் முக்தா: சிசிரகர நிச்வாஸகளிதம்
ஸ்ம்ருத்யா யத்தாஸாம் பஹிரபி ச முக்தாமணிதர:

Asau naasa-vamsas tuhina-girivamsa-dhvajapati
Thvadhiyo nedhiyah phalatu phalam asmakam uchitam;
Vahathy anthar muktah sisira-kara-nisvasa galitham
Samruddhya yat tasam bahir api cha mukta-mani-dharah


பனிமலை மன்னனின் குலம் செழிக்க அதில் பறக்கும் துவஜஸ்தம்பக் கொடி போன்றவளே.. அம்பிகே.

.உனது மூங்கில் தண்டு போன்ற மூக்கில் நல் முத்துக்களால் ஆன மூக்குத்தியினை அணிந்திருக்கிறாய்..அதில் உள்ள முத்துக்கள், உனது மூங்கில் தண்டு போல் இருந்த மூக்கினுள் இருந்து இடப்பக்கம் சந்திர நாடியில் சுவாசித்த பொழுது வெளிப்பட்ட முத்துக்கள் போல பிரகாசிக்கின்றன..

அப்படி சிறந்த முத்துக்களை அணிந்திருக்கும் மூக்கானது நாங்கள் கேட்கும் யாவற்றையும் எங்களுக்கு அளிக்கட்டும்..”மனித உடலில் மூன்று நாடிகள் உள்ளன.

.இடை- இடது பக்கம் உள்ளது, பிங்கலை – வலது பக்கம் உள்ளது; , மூன்றாவதான சுஷுமான நாடி இயங்க இடை பிங்கலை சரிவர இயக்கப்பட வேண்டும்.

இந்த மூன்று நாடிகளும் இணையும் இடமே மூலாதாரம். ஜனன உறுப்பிற்கும் ஆசன வாயிற்கும் இடையில் நான்கு விரல் பரப்பில் உள்ள இடமே மூலாதாரம் .

இடை என்பது இடது நாசி வழியாக சுவாசிக்கப்படும் உயிர்க்காற்று.

பிங்கலை என்பது வல நாசி வழியாக சுவாசிக்கப்படும் உயிர்க்காற்று.

இந்த இரண்டு காற்றுகளும் இணைந்து இயக்கப்படும் அல்லது திறக்கப்படும் முதுகெலும்பின் தண்டின் அடிப்பாகத்தில் சுஷுமான நாடி மூலம் மேல் நாடிகளும் ஆதாரங்களும் இயக்கப் பட வேண்டும்.

அம்பாள் இந்த மூன்று நாடிகளுக்கும் நடுவில் ஹ்ருதயாகாசத்தில் முத்துக்களால் ஆன ஆபரணங்கள் அணிந்து வீற்றிருக்கிறாள்..

இந்த ஸ்லோக தியானத்தினால் மரண பயம் நீங்கி லஷ்மி கடாக்ஷத்துடன் முக்தியும் கிட்டுமாம்..
avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Mon Mar 03, 2014 10:41 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .62

“பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்”

“ஹை.. நீ பாடறியா.. நானும் சினிமாப் பாட்டு பாடறேன்..

பச்சை மா மலை போல் மேனி
பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர் தம் கொழுந்தே”

“அடப்பாவி..இது தொண்டரடிப் பொடியாழ்வார் எழுதின பாசுரம்..”

“சினிமாப்பாட்டு தானே சிவாஜிபாடியிருக்காரே..”

“உன்னைத் திருத்தவே முடியாது…சரி பவளத்துக்கு பொட்டானிகல் பேர் என்னன்னா கொரலியும் ரப்ரம்..”

“மம்மீ ஈஈ.. நான் இப்ப அழுவேன்.. அழகா செக்கச் சிவந்த இதழோ இதழோ பவளம் பவளம் செம்பவளம்னு பாடறதவிட்டுட்டு”

“இல்லைடா.. முதல்ல பவளத்தில கொடியே வராது..அப்புறம் தானே பூக்கள் பூக்க முடியும்..பவளம்கறது ஒரு பாறை..பவளப் பூச்சின்னுஒரு பூச்சி கட்டற கூடாக்கும் அது..அதுவும் ஆழ்கடல்ல தான் கட்டுமாம்..அதுவும் சிவந்தபவளம் எனப்படுகிற ரெட் கோரல் தான்காஸ்ட்லியாம்..”

“ஓகே..அப்புறம்..கோவைப்பழத்துக்குப் பாடப் போறியா..

“கள்ளனாக்கும் நீ..கரெக்டா சொன்னியே..

வண்ணச் சிவப்பினை வாயினில் கொண்டாலும்
உன்னுதடு கொண்ட ஒளிர்நிறத்தில் முகமும்
கடுகாய்ச் சிறுத்தபடி கண்களுக்குள் வெட்கப்
படுமாமே கோவைப் பழம்

”அது சரி..என்னை மாதிரில்லாம் உனக்கு எழுத வராது மனசாட்சி..இன்றைய ஸ்லோகத்துல பவழமும் கோவைப் பழமும் வருதாக்கும்..”

“பவளம்னு சொல்லு.. அது coral..பவழம்னு சொன்னா அது மல்லிப் பூவாய்டும்..:

:நெசமாவா”

“ஒரு உத்தேசமா சொன்னேன்..வா.. அம்பாளோட உதடுகளைப் பற்றி பகவத் பாதர் என்ன சொல்றார் பார்க்கலாம்..

**

ப்ரக்ருத்யா (ஆ)ரக்தாயாஸ் தவ ஸுததி தந்தச்சதருசே:
ப்ரவக்ஷ்யே ஸாத்ருச்யம் ஜநயது பலம் வித்ருமலதா
ந பிம்பம் தத்பிம்ப ப்ரதிபலந ராகாத் அருணிதம்
துலாம் அத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேத கலயா

Prakrithya'rakthayas thava sudhati dantha-cchada-ruchaih
Pravakshye saadrisyam janayathu phalam vidhruma-latha;
Na bimbam tad-bimba-prathiphalana-raagad arunitham
Thulam adhya'rodhum katham iva bhilajjetha kalaya.

“தேவி.. அழகிய பல்வரிசையைக் கொண்ட இயற்கையாகவே சிவந்த வண்ணத்தில் இருக்கும் உனது உதடுகளுக்கு உவமை சொல்ல விரும்புகிறேன்..

பவளக் கொடியில் பழம் பழுத்தால் அதை உன் உதடுகளின் நிறம் எனச் சொல்லலாம்..அதிலோ பழம்,பூ காய் எதுவும் வராது..

தவிர அடுத்ததாக கோவைப் பழத்தைச் சொல்லலாம் என்றால் அதை நீ உன் உதடுகளின் அருகே கொண்டு சென்ற போது தான் உன் உதடுகளின் நிறம் பிரதிபலித்து அது சிவந்த வண்ணத்தை அடைந்தது..

அப்படியே அடைந்தாலும் உன் உதட்டுச் சிவப்பில் பதினாறில் ஒரு பாகம் கூட அடைய முடியவில்லையே என வெட்கப்படுகிறது..”

இந்த சுலோகத்தை தியானிப்பவர் பதினாறுவகைப் பேறும் பெற்று பெருவாழ்வு வாழ்வர்..


avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by சின்னக் கண்ணன் on Tue Mar 04, 2014 12:20 pm

நாளும் ஒரு அழகின் அலை...

செளந்தர்ய லஹரி

ஸ்லோகம் .63

ஸ்மித ஜ்யோத்ஸ்நா ஜாலம் தவ வதன சந்த்ரஸ்ய பிபதாம்
சகோராணாம் ஆஸீத் அதிரஸதயா சஞ்சுஜடிமா
அதஸ்தே சீதாம்சோ: அம்ருதலஹரீம் ஆம்லருசய:
பிபந்தி ஸ்வச்சந்தம் நிசி நிசி ப்ருசம் காஞ்ஜிகதியா

Smitha-jyothsna-jalam thava vadana-chandrasya pibatham
Chakoranam asid athi-rasataya chanchu-jadima;
Athas the sithamsor amrtha-laharim amla-ruchayah
Pibanthi svacchhandam nisi nisi bhrusam kaanjika-dhiya.

“அம்பிகையே உன் முகமென்னும் முழுமதியில் புன்சிரிப்பென்னும் ஒளிக்கிரணங்களைப் பருகும் சகோரபட்சிகளுக்கு அவற்றை அதிகமாகப் பருகியதால் திகட்டி விடுகின்றன..

எனவே அவை இரவில் வரும் நிலவின் கிரணங்களை தங்கள் வாய்ச்சுவையை மாற்ற எண்ணி, புளித்த கஞ்சி என நினைத்து முகஞ்சுளித்தபடி உண்கின்றன..””

முழு நிலவு என வர்ணிக்கப் பட்டாலும் தேவியின் முகம் பலமடங்கு ஒளிபொருந்தியது..

அதிலிருந்து வரும் ரச்மி எனச் சொல்லப்படும் கதிர்களோ சாதரண சந்திரனின் அமுத கிரணங்களை புளித்த கஞ்சி நீர் என்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பதாக இந்த ஸ்லோகத்தில் சொல்லப் படுகிறது.

இந்த சுலோக பாராயணம் எல்லோரையும் வசீகரிக்கும் ஆற்றல் தருமாம்..
avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: நாளும் ஒரு அழகின் அலை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum