ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கரையே இல்லாத ஆறு
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
SK
 
ayyasamy ram
 
கோபால்ஜி
 

Admins Online

பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு

View previous topic View next topic Go down

பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு

Post by கவின் on Thu Jan 09, 2014 11:17 am


மனிதன், விலங்கு,
பறவை, ஊர்வன, மரம்,
தாவரம், செடி,
கொடி போன்ற
உயிரினங்கள் வாழவேண்டுமெனில் ஓர்
இருப்பிடம்
தேவைப்படுகின்றது.
இவை யாவுக்கும்
இருப்பிடம்
கொடுத்து நிற்பது அந்தரத்தில் நின்று சுழன்றுகொண்டிருக்கும்
ஒன்பது கோள்களில் ஒன்றான
பூமியாகும்.

பூமியில்
மட்டும்தான் உயிரினங்கள்
வாழமுடியும். மற்றைய
எட்டுக் கோள்களிலும் உயிரினம் வாழ முடியாது.
பூமியில் உள்ள நீர், காற்று,
வெப்பம்
ஆகியவை உயிரினங்களை வாழ
வைக்கின்றன. இதனால்தான்
பூமியும் உயிர் பெற்றுச் சிறப்புடன்
நிலைத்துள்ளது. எனினும்
சூரியன் இன்றேல் பூமியும்
இல்லை. ஏன் மற்றைய எட்டுக்
கிரகங்களும்
இயங்காது அழிந்துவிடும். எனவே சூரியன் பிறந்த
கதையையும் காண்போம்.
ஒரு கருநிலைக்
கோட்பாட்டின்படி (Theory) 460
கோடி ஆண்டுகளுக்குமுன்
ஒரு கிட்டிய நட்சத்திரம் விசையால்
அழிக்கப்பட்டு அந்த
வெடிப்பொலி அதிர்வு அலைகளைக்
கதிரவன் முகிற் படலமூலம்
வெளியேற்றி அதற்குக்
கோணமுடக்கான இயங்கு விசையைக்
கொடுத்தது.

இது முகிற்சுழற்சி, ஈர்ப்பு,
செறிவு ஆகியவற்றை விரைவுபடுத்தியது.
அதனால் செறி தொகுதிகள்
கெட்டியடைந்து மத்தியில்
வெப்பம் பெருகியது.
இவ்வெப்பம் வெளியேற முடியாது மேலும்
மையவெப்பம்
கூடிக்கொண்டது. ஈற்றில்
நீர்வாயு (Hydrogen) கீலியமாக
(Helium) அணுமாற்றம்
பெற்று ஒரு நட்சத்திரம் (T.Tauri) தீப்பிடித்து எரிந்து ஒரு சூரியன்
உருவாயிற்று. இச் சூரியன்
460 கோடி ஆண்டுகளாக
இற்றைவரை பிரகாசித்து எரிந்துகொண்டிருக்கின்றது.

கதிரவன் மண்டலம்
தொடக்கத்தில் சுழற்சியான
தூசி, பாறை, நீரகம், கீலியம்
போன்றவை நிறைந்திருந்தன.
கதிரவன் மண்டலத்தின்
பிறப்புத்தான் பூமி. இப்பூமியானது 457
கோடி ஆண்டுகளுக்குமுன்
தோன்றியதென்பர்.
அன்று பூமியும்
நெருப்புக் கோளமாகச்
சூரியனைப்போல் எரிந்துகொண்டிருந்தது.

நீண்ட காலத்தின்பின்
பூமியின்
மேற்பரப்பு குளிர்ச்சியடைந்தது.
ஆனால் பூமியின் மையப்
பகுதி இன்றும்
அனலாகவே இருக்கின்றது. பூமி குளிர, மேகங்களும்
குளிர்ந்து,
பெருமழை பெய்து, நீர்
குழிகளில்
பாய்ந்து தேங்கிக் கடல்கள்
தோன்றின. பூமியில் 453 கோடி ஆண்டளவில்
ஒரு நிலா தோன்றியது.

இனி பூமியில் ஏற்பட்ட
மாற்றங்களையும், அதில்
தோன்றிய
உயிரினங்களையும், மனிதன்
தோன்றிய முறைகளையும்,
அவன் எய்திய உயர்ச்சிகளையும்
காண்போம்


. • பூமியில் 400
கோடி ஆண்டளவில்
உயிரினங்கள்
தோன்றியிருக்கலாம்
என்று கருதப்படுகிறது

• 350
கோடி ஆண்டுகளுக்குமுன்
தாவர இலைகள் பச்சிலை
பெற்று உணவைத்
தயாரிக்கும் தாவர
ஒளி இயைபாக்கம் பெற்றன.

• 260 கோடி ஆண்டளவில்
நீரிலுள்ள உயிரணுச்
சவ்வுகள்
தரையிலும் தோன்றின.

• 230 கோடி ஆண்டளவில்
உயிரகம் செறிந்த
வளிமண்டலம்
தோன்றியது.

• 100
கோடி ஆண்டுகளுக்குமுன்
காளான்கள் தோன்றின.

• தாவரம் 70
கோடி ஆண்டுகளாக
வாழ்ந்து வருகின்றன.

• 53
கோடி ஆண்டுகளுக்குமுன்
கடல் மீன்கள்
முள்ளெலும்புடன்
தோன்றின.

• 45
கோடி ஆண்டுகளுக்குமுன்
ஒட்டுத்தோடுடைய இணைப்புடலி உயிரினங்களின்
ஒரு வகைப் பிராணி
(Arthropods)
நீரிலிருந்து நிலத்தில்
வாழத் தொடங்கியது.

• 38
கோடி ஆண்டுகளுக்குமுன்
நாற்கால் (Tetrapods)
பிராணிகள்
மீனிலிருந்து தோன்றின.
இவை நீரிலிருந்து தலையை வெளியில்
நீட்டிச் சுவாசிக்கத்
தொடங்கின. இதே
காலப்பகுதியில்
முதலாவது முதுகெலும்பு பொருந்திய
தரை விலங்குகளும்
தோன்றின.

• 36
கோடி ஆண்டுகளின்முன்
தாவரங்கள் விதைகளைத் தம்
விருத்திக்காகத்
தந்துதவின.

• 31 கோடி ஆண்டுகளில்
பாலூட்டிகள், பறவைகள்,
ஊர்வன
தோன்றின.

• 23
கோடி ஆண்டுகளின்முன்
ஊர்ந்து செல்லும் மாபெரும்
விலங்குகள் (Dinosaurs)
தோன்றின.

• 15 கோடி ஆண்டுகளில்
பழமையானதும்
பறப்பனவற்றிற்கும்
ஊர்வனவற்றிற்கும்
இடைப்பட்ட ஓர் அதிசயப்
பறவை (Archaeopteryx) இனம்
தோன்றியது.

• 7 கோடி ஆண்டுக்
காலப்பகுதியில்
பாலூட்டிகள் பெரிதாக
வளர்ந்தன.

• 3 கோடி ஆண்டளவில் சில
பாலூட்டிகள் டொல்வின்
மீன்களாகக் கடலுக்குத்
திரும்பின.

• 20 இலட்சம் ஆண்டளவில்
முதல் மனிதன்
ஆபிரிக்காவில்
தோன்றினான்.

• எட்டு (08) இலட்சம்
ஆண்டுகளுக்குமுன்
நெருப்பின்
பிரயோகமும் அதைக்
கட்டுப்படுத்தும்
ஆற்றலையும் மனிதன் பெற்றுக்கொண்டான்.

• இரண்டு (02) இலட்சம்
ஆண்டளவில் உறுப்பியல்
சார்ந்த
அமைப்பியலான
புது நாகரிகப்
பண்பாடுடைய மனிதன் ஆபிரிக்காவில்
தோன்றினான்.

60 இலட்சம்
ஆண்டுகளுக்குமுன்
வாழ்ந்த ஒரு சிறிய ஆபிரிக்க
குரங்கின் இரு மரபினர்வழித்
தோன்றலின் ஒன்றான
வாலில்லாக் குரங்கு இனம் எழுந்து நிமிர்ந்து நின்று நடக்கக்கூடிய
ஆற்றலைப் பெற்றது. இதன்
மூளை வளர்ச்சியும்
மிகுதியாகப் பெருகியது.

20 இலட்சம் ஆண்டளவில் இந்த
வாலில்லாக்
குரங்கினத்தை மனித
இனமாக
வகைப்படுத்தப்பட்டது. மனித
இனம் இரு காலுள்ள பாலூட்டும் இனத்தின்
குரங்குக் குடும்பத்தைச்
சேர்ந்தது. மனித இனத்தின்
மிக நெருங்கிய உறவினர்
சிம்பன்சியாகும். (Chimpanzee).

பல்லினால் அரைக்கும்
முறையைச் சீராக்கி,
கோரைப் பல்லைக்
குறைத்து,
குரல்வளையையும் வளைந்த
நாவடி எலும்பையும் சரிவுபடுத்தப்பட்டமை மனிதன்
கதைப்பதற்கு ஏதுவாயமைந்தது.
சிம்பன்சிக்கும்
மனிதனுக்கும் உள்ள
பரிணாம வளர்ச்சி எலிக்கும்
சுண்டெலிக்கும் உள்ளதைவிடப்
பத்து மடங்கு கூடியதாக
அவதானிக்கப்பட்டது.
அணுமரபுவழிப்
பரிசோதனையில் 98.4 சத வீதம்
சிம்பன்சிக்கும் மனிதனுக்கும் இடையில்
ஒப்பானதாக இருந்தமையும்
காணப்பட்டது.

உறுப்பியல் சார்ந்த
அமைப்பியலான
புது நாகரிகப்
பண்பாடுடைய மனிதன்
சுமார் இரண்டு இலட்சம்
(2,00,000) ஆண்டளவில் ஆபிரிக்காவில்
தோன்றினான். இதை ஓர்
இலட்சத்து அறுபதினாயிரம்
(1,60,000)
ஆண்டுகளுக்கு மேலான
புதை படிவமூலம் கணக்கிட்டுள்ளனர்.

நின்டர்தல் (Neanderthals)
என்றொரு தனி இனம்
ஆன்மிகத் துறையில் ஊறிய
முதல் மனிதனாக
இருந்துள்ளமைக்கு ஆதாரங்கள்
கிடைத்துள்ளன. இவர்கள் இறந்த
பொழுது சடலங்களை அவர்கள்
உண்ட உணவுடனும்,
பாவித்த கருவிகளுடனும்
அடக்கம் செய்து தம் ஆன்மிக
உணர்வை வெளிக்கொணர்ந்தனர். இவர்களின் வழித்தோன்றல்
அன்றிலிருந்தே அருகிவிட்டது.

தற்கால மனித மூளையின்
நிறை 1,400 கிறாம் (1.4
கிலோ அல்லது 03 இறாத்தல்)
ஆகும். இதன் கன பரிமாணம்
1,400 கன. சென்ரி மீற்ரறாகும்.
மனித மூளையானது சிம்பன்சி,
கொறில்லா குரங்குகளின்
மூளையிலும் பார்க்க
இரு மடங்காகும். மனித
மூளையின் விரிவுk;
வளர்ச்சியும் அவன் உயர்வுக்கு முழுமுதற்
காரணமாம்.

மூளையின் பருமன்
கூடியபடியால் தலைகள்
பெரிதாக வளரமுன்
குழந்தைகள் விரைவில்
பிறக்கின்றனர். இதன்
காரணமாக எளிதில் கூடிய உருமாறும் தன்மையையும்
புதிதாகக் கற்பதற்குரிய
கூடிய பரும அளவையும்
கொண்டுள்ளனர். இத்துடன்
அவர்களுக்குக் கூடிய காலச்
சார்புநிலையும் (Dependence) தேவைப்படுகின்றது.

ஆதி மனிதனின் மனச்
செயற்றிறன் தன்
உடலை நிமிர்த்தி நிற்கச்
செய்தது. இதனால் அவன்
மேல் உறுப்பான கைகளால்
பொருள்களைக் கையாளுவதற்கும்
கருவிகளைப் பெரிய
அளவில் பாவிப்பதற்கும்
மற்றைய இனங்களைவிட
மனிதன்
முன்னிலை அடைந்துள்ளான். இன்று மனிதன்
தென்துருவமடுத்த பெரும்
பனிப்பரப்பைத் (Antarctica) தவிர
மற்றைய எல்லாக்
கண்டங்களிலும்
செறிந்து வாழ்கின்றான். 2012-ஆம் ஆண்டின் உலகச்
சனத்தொகை 707
கோடியாகும்.

பொதுநலத் தொண்டுச்
செயற்றிறன்,
உறவினர்க்கிடையில்
நிலவும்
உறவு போன்றவற்றில்
பெரும் சிக்கலை உண்டாக்கியது.
மொழி பெரும்
முன்னேற்றமடைந்தது.
கருவிகள் மிக நுட்பமாகச்
செய்யப்பட்டன. இவைகள்
மேலும் ஒத்துளைப்பையும் மூளை வளர்ச்சியையும்
கொடுத்தன. குடியேற்றமற்ற
தென் அமெரிக்காக்
கண்டத்தின் தென் முனைப்
பகுதிக்கு 11,000-ஆம்
ஆண்டளவில் கடைசியாக மக்கள் குடியேறினர்.

ஆதி மனிதர்
நாடோடி வேட்டையாடும்
சிறு குழுவாக வாழ்ந்தனர்.
மொழி சிக்கலைக்
கொடுத்தபடியால் ஞாபகத்
தன்மையிலும் செய்திப் பரிமாற்றத்திலும் சிரமங்கள்
ஏற்படப் புது விதமான
முறைகளைக்
கைக்கொண்டு கருத்துப்
பரிமாற்றம் விரைவாகச்
செய்தனர். திருவள்ளுவருக்கு முன்
(தி.மு) 8500 - 7000 ஆண்டுக்
காலப்பகுதியில் மத்திய
கிழக்கில் பயிர்
வேளாண்மையும்,
விலங்குடனான உழவு விவசாயமும்
செய்யத்தொடங்கினர்.

இது அயல் நாடுகளுக்கும்
பரவித் தனித்துவமாகச்
சீவித்து ஒரேயிடத்தில்
நிரந்தரமாகக் கமத்தொழிலில்
ஈடுபட்டு வாழ்ந்தனர்.
விவசாயம் பெரு விளைச்சலைத்
தந்தது. அதேநேரம் அரச
வகுப்பினரும் தோன்றினர்.
அத்தோடு உழைப்புப்
பங்கீட்டு (Division of Labour)
முறையும் நடைமுறைக்கு வந்தது.
இது பூமியின் முதல்
நாகரிகமாக மத்திய
கிழக்கு நாடுகளில் தி.மு.
4000 – 3000 ஆண்டுகளில்
ஏற்பட்டது. இதனோடு பண்டைய
எகிப்தும், இந்து ஆற்றுப்
பள்ளத்தாக்கு நாகரிகமும்
தோன்றியது.

இன்னும் தி.மு. 3000
ஆண்டுகளுக்குமுன்
பழமை வாய்ந்ததும் இன்றும்
புழக்கத்திலுள்ளதுமான
இந்து மதம் தோன்றியது.
மேலும் எழுத்து முறை, பதிவுகள், நூல் நிலையம்,
விஞ்ஞானம் (முதல் நிலை)
வியாபாரம், சண்டை சச்சரவு,
நிலம் பற்றல்,
வல்லரசு போன்றன
உருவாகியன. தி.மு. 500-ஆம் ஆண்டளவில் மத்திய கிழக்கு,
இந்தியா, சீனா, ஈரான், கிறீஸ்
ஆகிய நாடுகள் ஆதிக்கம்
பெற்றன.

இத்தாலியில் கலை, சமயம்,
விஞ்ஞானம் ஆகியவற்றில் 14-
ஆம் நூற்றாண்டில்
மறுமலர்ச்சி தோன்றியது.
மேலும் 15-ஆம் நூற்றாண்டில்
விஞ்ஞானம், தொழில் முறை ஆகியவற்றில்
ஐரோப்பிய நாடுகளில்
பெருமாற்றங்கள் பெற்றன.
1914–1918ஆம் ஆண்டுகளிலும்
1939–1945ஆம் ஆண்டுகளிலும்
இரண்டு உலக யுத்தங்கள் நிகழ்ந்தன.

அன்றிருந்த சர்வதேச சங்கம்
இந்த யுத்தங்களைச் சமரசம்
செய்து வைக்க
முடியவில்லை. இதற்காக
ஐக்கிய நாடுகள்
அமைப்பு உருவாகியது. 1992-ஆம் ஆண்டில் ஐரோப்பிய
நாட்டினம்
ஒன்று சேர்ந்து ஐரோப்பிய
ஒன்றியத்தை உருவாக்கினர்.
போக்குவரத்தும்,
தொடர்சாதனமும் முன்னேற்றமடைந்தன. உலகப்
பொருளாதாரமும் நாட்டின்
அரசியல் நடைவடிக்கைகளும்
ஒன்றுடனொன்று பின்னிப்
பிணைந்தன.

தொழில் நுட்ப விஞ்ஞான
வளர்ச்சியில் உள்ளடங்கிய
அணு படைக்கலம், கணிணி,
மரபுவழிப் பண்பியல் சார்ந்த
பொறியியல், உலக மயப்
பொருளியல், தொடர் சாதனம், போக்கு வரத்து, தொழில்
நுட்பம் ஆகியன 1940-ஆம்
ஆண்டிலிருந்து இற்றைவரை உலகின்
அநேக பகுதிகளில் வாழும்
மக்களின் நாளாந்த
வாழ்க்கையில் அதிக செல்வாக்கைக்
கொடுக்கின்றன. இன்னும்
குடியாட்சி,
முதலாளித்துவம்,
சூழ்நிலைச் சுற்றாடல்
ஆகியனவும் செல்வாக்கை உயர்த்தி உள்ளன.

உலகச் சனத்தொகை பெருக,
நோய், யுத்தம், வறுமை,
வன்முறை, தீவிரவாதம்,
உலகளாவிய
வெப்பநிலை ஆகியன
தோன்றின. 1957-ஆம் ஆண்டில் ருசிய கூட்டரசு தன்
முதலாவது செயற்கைத்
துணைக்கோளைக்
கோள்வீதியில்
செலுத்தியது. திரு.
யூரி ககாரின் (Yuri Gagarin) என்பவர்
முதலாவது விண்வெளி வீரனானார்.
அமெரிக்க வீரனான திரு. நீல்
ஆம்ஸ்ரோங் (Neil Armstrong)
சந்திரனில் கால் பதித்தார். 20-
ஆம் நூற்றாண்டில் ருசியாவும்
அமெரிக்காவும்
விண்வெளி ஆய்வுப்
பயணத்தை மேற்கொண்டனர்.
avatar
கவின்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 165
மதிப்பீடுகள் : 43

View user profile

Back to top Go down

Re: பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு

Post by ayyasamy ram on Thu Jan 09, 2014 1:29 pm--

மனிதக் குரங்குகள் மனிதனைப்போல்
ஆற்றல் வாழ்ந்தவை என்பதை அடிப்படையாக
கொண்டு எடுக்கப்பட்ட ஆங்கில படம்
Rice of the planet of Apes - ஆகும்
-
குரங்குகளை வைத்து ஆங்கிலத்திலும்
தமிழிலும் நிறைய படங்கள் வந்துள்ளன
-
நமது முன்னோர்களை வாழ்த்துவோம்...!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum