உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சினிமா பாடல் வரிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:22 pm

» உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கம்
by T.N.Balasubramanian Today at 6:57 pm

» போர் விமானத்தில் சிந்து பயணம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:23 pm

» பிரான்ஸ் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாதி பலி - அமெரிக்க வான்தாக்குதலில் வீழ்ந்தார்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:21 pm

» அணு ஆயுதங்களை கைவிட வடகொரியாவுக்கு நெருக்கடி தரவில்லை : டிரம்ப்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:19 pm

» முதலை நண்பனுக்கு டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்த கூகுள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:18 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:13 pm

» நீதி மன்ற துளிகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:11 pm

» பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:30 pm

» எந்த கோயிலில், என்ன பலன்?! -
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:25 pm

» தயாரிப்பாளராகும் காஜல் அகர்வால்
by ayyasamy ram Today at 2:43 pm

» முதலிடத்தில் நடிகை சன்னி லியோன்! பீஹார் இன்ஜினியர் தேர்வில் குழப்பம்
by ayyasamy ram Today at 2:13 pm

» மோக முள்
by Monumonu Today at 10:56 am

» அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் மனைவிகளுக்கு சிக்கல் - வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல்
by ayyasamy ram Today at 9:10 am

» சீரகத்தின் சில நன்மைகள்
by ayyasamy ram Today at 8:05 am

» கார்விபத்தில் விழுப்புரம் அ.தி.மு.க., எம்.பி., உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:23 am

» ராமர் கோவில் கட்டுவோம் : காங்கிரசும் வாக்குறுதி
by ayyasamy ram Today at 7:22 am

» 'புல்லட்' ரயிலுக்கு பெயர் வைக்கலாம்
by ayyasamy ram Today at 7:18 am

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்
by ayyasamy ram Yesterday at 10:47 pm

» படித்ததில் பிடித்தது – பல்சுவை
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» சிறந்த வீடியோக்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» இனிமே எப்படி குறை சொல்வது...?!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» முதல் பார்வை: கண்ணே கலைமானே
by T.N.Balasubramanian Yesterday at 8:15 pm

» முதல் பார்வை: டுலெட்
by T.N.Balasubramanian Yesterday at 8:11 pm

» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by T.N.Balasubramanian Yesterday at 7:59 pm

» டிடெக்டிவ் திருமதீஸ்
by ANUBAMA KARTHIK Yesterday at 7:38 pm

» பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கவும், பலவிதமான நோய்களுக்கான அருமருந்து இது!
by ayyasamy ram Yesterday at 7:29 pm

» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by T.N.Balasubramanian Yesterday at 6:48 pm

» உலகின் மிகச்சிறிய நாடு
by T.N.Balasubramanian Yesterday at 3:23 pm

» திக்கற்றவனுக்கு தெய்வமே துணை…!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மனதில் உறுதி வேண்டும்…!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..!!
by ayyasamy ram Yesterday at 2:22 pm

» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்
by ayyasamy ram Yesterday at 2:19 pm

» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» வீரமாமுனிவர்
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இவர்கள் இப்படித்தான்..
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» யாரையும் ஏமாற்றாதீர்கள்..!
by ayyasamy ram Yesterday at 2:14 pm

» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» சிறகுகளைத் தேடி,,,!தாலும் வரும் மழை
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» தோற்றவர்களின் கதை
by kuloththungan Yesterday at 12:53 pm

» புதிய மின்னூல் வேண்டல்.
by prajai Yesterday at 11:41 am

» இந்திய வானம் எஸ்.ரா
by pkselva Yesterday at 8:56 am

» KAVITHAI
by ANUBAMA KARTHIK Thu Feb 21, 2019 11:52 pm

» சென்னையில் ஒரு திருக்கடையூர்
by ayyasamy ram Thu Feb 21, 2019 9:52 pm

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by சிவனாசான் Thu Feb 21, 2019 8:53 pm

» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்
by mani2871967 Thu Feb 21, 2019 6:43 pm

» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Feb 21, 2019 6:29 pm

» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???
by மாணிக்கம் நடேசன் Thu Feb 21, 2019 5:13 pm

Admins Online

கருஞ்சீரகம் !

கருஞ்சீரகம் !

Post by krishnaamma on Wed Jan 08, 2014 1:19 pmகருஞ்சீரகத்தின் பலன்கள் :-

* தோல் நோய்களை குறைக்கும். பசியைத்தூண்டும். சீரணத்தை சீர்படுத்தும். வயிற்றுப் போக்கை குணப்படுத்தும்.

* புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும்.

*பால் சுரப்பைக் கூட்டும்.

* சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.

* கருஞ்சீரகத்தை நீர் விட்டு, அரைத்து, நல்லெண்ணையிëல் குழைத்து கரப்பான், சிரங்கு ஆகியவற்றில் பூசி வர குணம் தெரியும்.


* கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து பிரசவித்த பின் ஏற்படும் வலிக்குப்பூசிட வலி மாறும்.

* கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும்.

* கருஞ்சீரகத்தை வறுத்து காடி விட்டு அரைத்து சொறி, தேமல் மேல் பூசி வர தேமல், சொறி மறையும்.

* கருஞ்சீரகத்தையும், தும்மட்டிக்காயையும் சேர்த்து அரைத்து விலாப்பக்கம் பூசி வர குடல் பூச்சிகள் வெளியேறி விடும்.

* கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட அஜீரணம் மாறும்.

* கருஞ்சீரகப்பொடியை தயிரில் கலந்து சாப்பிட அஜீரணம் மற்றும் வாயு உற்பத்தி மாறும்.

* கருஞ்சீரகத்தை எருமைப்பால் விட்டு அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு மாறும்.

* கருஞ்சீரகத்தை வெற்றிலை சாறு விட்டு அரைத்து காது, கன்னப் பகுதியில் ஏற்படும் வீக்கம் மேல் பற்று போட வீக்கம் மறையும்.

* கைப்பிடி கீழா நெல்லி இலைகளோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து சிறிதளவு பால் சேர்த்து அரைத்து பின் இதை ஒரு கப் பாலில் கலந்து காலை உணவுக்கு அரை மணி நேரம் பின் மற்றும் மாலை நேரம் பருகி வர மஞ்சட்காமாலை குணமாகும்.

இயற்கை மருத்துவம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: கருஞ்சீரகம் !

Post by ஜாஹீதாபானு on Wed Jan 08, 2014 1:36 pm

பகிர்வுக்கு நன்றிமா

கடைல தான் திரும்பக் குடுக்கனும்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30691
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7191

View user profile

Back to top Go down

Re: கருஞ்சீரகம் !

Post by ayyasamy ram on Wed Jan 08, 2014 9:13 pmகருஞ்சீரகத்தை அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில்
பத்துப் பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று
வந்தால் சர்க்கரை வியாதி குறையும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43109
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11760

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

கருஞ்சீரகம் பலன்கள்

Post by கிருஷ்ணா on Wed Feb 12, 2014 10:11 pm

இரு வலைதளங்களில் கிடைத்த தகவல்களை பகிர்கிறேன்

1. 20 கிராம் கருஞ்சீரகத்தை ஒரு மண் சட்டியில் போட்டு வறுத்து தூளாக்கி, 40 கிராம் பொடியாக்கிய பனை வெல்லம் சேர்த்து கலந்துவிட்டு, அதிலிருந்து 1ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால், மாதவிலக்கு கோளாறுகள் சீரடையும். (கருவுற்ற தாய்மார்கள் முதல் 4 மாதங்களுக்கு இதை சாப்பிடக்கூடாது) முகப்பருவுக்கு, கருஞ்சீரகத்துடன் சீரகத்தையும் சம அளவு எடையில் எடுத்து பசும்பால் விட்டு அரைத்து தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும். சளி, இருமலுக்கு கருஞ்சீரகத்தை பொடியாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகிவிடும். கருஞ்சீரக எண்ணெயாக கிடைத்தால் ஒரு வேளைக்கு 1 ஸ்பூன் வீதம் ஒரு நாளைக்கு 3 வேளை சாப்பிடலாம். ஜலதோஷத்தினால் மூக்கில் நீர் வடிந்துக்கொண்டு தொல்லை கொடுத்தால், கருஞ்சீரகத்துடன் ஓமத்தை சேர்த்து பொடியாக்கி, அத்துடன் சிறிது கற்பூரம் சேர்த்து ஒரு துணியில் கட்டி, அடிக்கடி முகர்ந்துக்கொண்டிருந்தால் நீர்வடிதல் நிற்கும்.

2. குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும். கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும். கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும். கருஞ்சீரகப் பொடியை ஒரு துண்டுத் துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது. தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும். கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தைக் காடியுடன் (vinegar) வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும். கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும். காஞ்சிரைப் பூண்டின் சாறுடன் கருஞ்சீரகத்தைக் குழைத்துச் சாப்பிட்டால் நுண் கிருமிகள் வெளியேறிவிடும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம். கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். -

3. கருஞ்சீரகத்தின் பலன்கள் வருமாறு:-

தோல் நோய்களை குறைக்கும். பசியைத்தூண்டும். சீரணத்தை சீர்படுத்தும். வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும். பால் சுரப்பைக் கூட்டும்.
சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.
கருஞ்சீரகத்தை நீர் விட்டு, அரைத்து, நல்லெண்ணையில் குழைத்து கரப்பான், சிரங்கு ஆகியவற்றில் பூசி வர குணம் தெரியும்.
கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து பிரசவித்த பின் ஏற்படும் வலிக்குப்பூசிட வலி மாறும்.
கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும்.
கருஞ்சீரகத்தை வறுத்து காடி விட்டு அரைத்து சொறி, தேமல் மேல் பூசி வர தேமல், சொறி மறையும்.
கருஞ்சீரகத்தையும், தும்மட்டிக்காயையும் சேர்த்து அரைத்து விலாப்பக்கம் பூசி வர குடல் பூச்சிகள் வெளியேறி விடும்.
கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட அஜீரணம் மாறும்.
கருஞ்சீரகப்பொடியை தயிரில் கலந்து சாப்பிட அஜீரணம் மற்றும் வாயு உற்பத்தி மாறும்.
கருஞ்சீரகத்தை எருமைப்பால் விட்டு அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு மாறும்.
கருஞ்சீரகத்தை வெற்றிலை சாறு விட்டு அரைத்து காது, கன்னப் பகுதியில் ஏற்படும் வீக்கம் மேல் பற்று போட வீக்கம் மறையும்.
கைப்பிடி கீழா நெல்லி இலைகளோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து சிறிதளவு பால் சேர்த்து அரைத்து பின் இதை ஒரு கப் பாலில் கலந்து காலை உணவுக்கு அரை மணி நேரம் பின் மற்றும் மாலை நேரம் பருகி வர மஞ்சட்காமாலை குணமாகும்.


கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
மதிப்பீடுகள் : 223

View user profile

Back to top Go down

Re: கருஞ்சீரகம் !

Post by krishnaamma on Thu Feb 13, 2014 8:31 am

ஏற்கனவே இருக்கும் திரி என்பதால் இணைத்துவிட்டேன் கிருஷ்ணா புன்னகை  அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: கருஞ்சீரகம் !

Post by மாணிக்கம் நடேசன் on Thu Feb 13, 2014 8:36 am

நல்ல தகவல் நன்ற அக்கா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4286
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1256

View user profile

Back to top Go down

Re: கருஞ்சீரகம் !

Post by krishnaamma on Thu Feb 13, 2014 8:40 am

@மாணிக்கம் நடேசன் wrote:நல்ல தகவல் நன்ற அக்கா.

எப்படி இருக்கீங்க மாமா? நலமா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: கருஞ்சீரகம் !

Post by ஜாஹீதாபானு on Thu Feb 13, 2014 12:05 pm

கருஞ்சீரகத்தை கடைல திரும்ப குடுத்துட்டேன்மா.
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30691
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7191

View user profile

Back to top Go down

Re: கருஞ்சீரகம் !

Post by ராஜா on Thu Feb 13, 2014 12:13 pm

@ஜாஹீதாபானு wrote:கருஞ்சீரகத்தை கடைல திரும்ப குடுத்துட்டேன்மா.
why why
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31184
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5681

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கருஞ்சீரகம் !

Post by ஜாஹீதாபானு on Thu Feb 13, 2014 12:17 pm

@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:கருஞ்சீரகத்தை கடைல திரும்ப குடுத்துட்டேன்மா.
why why

போன மாசம் மளிகை சாமான் வாங்கும்போது கறுப்பு எள் என்று நினைத்து கருஞ்சீரகம் வாங்கிட்டேன். அதை என்ன செய்வதுனு கிருஷ்ணாம்மாவிடம் கேட்டேன் .கடைல திரும்ப குடுத்துருங்க எனக்கும் தெரியலனு சொல்லி இந்தப்பதிவு போட்டாங்க.

அதான் கடைல குடுத்துட்டேன்புன்னகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30691
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7191

View user profile

Back to top Go down

Re: கருஞ்சீரகம் !

Post by கிருஷ்ணா on Thu Feb 13, 2014 3:28 pm

இது தெரியாமல் நானும் பதிவிட்டுவிட்டேன். ஹிஹிஹி !!!!!
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
மதிப்பீடுகள் : 223

View user profile

Back to top Go down

Re: கருஞ்சீரகம் !

Post by krishnaamma on Thu Feb 13, 2014 6:39 pm

@ஜாஹீதாபானு wrote:கருஞ்சீரகத்தை கடைல திரும்ப குடுத்துட்டேன்மா.

அது மருந்து பொருள் பானு புன்னகை நல்லபடியா திரும்ப தந்துட்டிங்க ! பொதுவாக அது மளிகை கடைகளில் இருக்காதே, நாட்டுமருந்து கடைகளில் தான் கிடைக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: கருஞ்சீரகம் !

Post by ayyasamy ram on Thu Feb 13, 2014 6:47 pm


-
கருஞ்சீரகம் (Nigella sativa) தெற்கு மற்றும்
தென்மேற்கு ஆசியாவினைத் தாயகமாகக் கொண்ட தாவரம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43109
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11760

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: கருஞ்சீரகம் !

Post by சிவா on Mon Oct 01, 2018 6:49 am

ஆரோக்கியத்துக்கான தூண்கள் – கருஞ்சீரகம்

சீரகம் தெரியும், பெருஞ்சீரகம் தெரியும்; அதென்ன கருஞ்சீரகம்? ஆரோக்கியம் தருவதில் சீரகமும் கருஞ்சீரகமும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள். தாளிக்கும் பொருள்களின் கூட்டணியிலும் சமையல் வகையிலும் அதிகம் இடம்பிடித்த கருஞ்சீரகம், இப்போது கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால், கருமையான விதைகளுக்குள் ஒளிந்திருக்கும் நலம் பயக்கும் நுண்கூறுகள் நமது ஆரோக்கியத்துக்கான தூண்கள் என்றே சொல்லலாம்.

அரேபியாவில் `ஆசீர்வதிக்கப்பட்ட விதைகள்’ என்று கருஞ்சீரகத்தைக் குறிப்பிடுகின்றனர். பெர்சிய மருத்துவரான `அவிசென்னா’ தனது நூலில் கருஞ்சீரகத்தின் பயன் குறித்து விவரித்துள்ளார். `டட்’ (Tut) எனும் எகிப்திய அரசரின் கல்லறையில் கருஞ்சீரக விதைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் உணவுகளில் கருஞ்சீரகத்தின் சேர்க்கை அதிகம். மத்தியக் கிழக்கு நாடுகளில் கோதுமையைக் கொண்டு செய்யப்படும் ‘கிப்பே’ (Kibbeh) எனப்படும் உணவில் கருஞ்சீரகம் சேர்க்கப்படுகிறது. எத்தியோப்பியாவின் சில பான வகைகளையும், ரஷ்ய நாட்டின் ரை-ரொட்டி
களையும் (Rye-bread) சுவையூட்டு கிறது கருஞ்சீரகம்.

கருஞ்சீரகத்தில் மட்டுமே இருக்கும் `தைமோகுயினோன்’ (Thymoquinone) என்ற வேதிப் பொருளும் தைமால், பைனீன், அனிதால் போன்றவையும் இதன் மருத்துவக் குணங்களுக்குக் காரணமாகின்றன. பீட்டா கரோட்டின், இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, சோடியம், கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் என உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டங்களைக் கொண்டுள்ளது கருஞ்சீரகம்.

உடலுக்குள் கிருமிகள் நுழையும்போது, அவற்றை எதிர்க்கும் செல்களின் செயல்பாட்டைக் கருஞ்சீரகம் முடுக்கிவிடுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. முதிர்ந்த வயதிலும் நோய் எதிர்க்கும் திறனை மேம்படுத்தும் திறன் கருஞ்சீரகத்துக்கு உண்டு. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், கருஞ்சீரகம் ரத்த அழுத்தத்தைக் குறைத்துச் சிறந்த பலனைத் தந்துள்ளது.

புற்றுக்கட்டிகளின் வளர்ச்சிக்கு, புதிய ரத்தக் குழாய்கள் உருவாவதைத் தடுக்கும் திறன், இதற்கு இருப்ப தாகப் புற்று சார்ந்த ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மரபணுக்களை இயக்கும் புரதங்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் ஆற்றல், கருஞ்சீரகத்தில் உள்ள `தைமோகுயினோன்’ என்ற மூலப்பொருளுக்கு இருக்கிறது. ஒவ்வாமை சார்ந்த நோய்களுக்கு இதன் எண்ணெய் சிறந்த மருந்தாகச் செயல்படும். இதயநோய்களை உருவாக்கக் காரணியாக இருக்கும் கெட்ட கொழுப்பின் (LDL) அளவைக் குறைக்கவும் கருஞ்சீரகம் சேர்ந்த மருந்துகள் உதவும்.

உபகுஞ்சிகை, அரணம் ஆகிய வேறு பெயர்களைக் கொண்ட கருஞ்சீரகத்துக்கு சிறுநீர்ப்பெருக்கி, புழுக்கொல்லி, நஞ்சகற்றி, வாய்வகற்றி போன்ற செய்கைகள் உள்ளன. சரும நோய்கள், உடல்சூடு, வயிறு உப்புசம், இருமல், வாந்தி, வீக்கம் போன்றவற்றுக்குக் கருஞ்சீரகத்தை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்கிறது அகத்தியர் குணவாகடப் பாடல். கொத்தமல்லி மற்றும் மிளகின் சுவைகளைத் தன்னகத்தே வைத்திருக்கும் கருஞ்சீரகத்தைச் சமையலில் தொடர்ந்து சேர்த்து வந்தால் புத்துணர்வு கிடைக்கும்.

நொச்சி இலைகளை நீரில் போட்டுக் கொதிக்கவைத்து, அதில் கருஞ்சீரகப் பொடியைச் சேர்த்துக் குடித்து வந்தால் காய்ச்சல் படிப்படியாகக் குறையும். தலைபாரம், மூட்டுவீக்கம் போன்றவற்றுக்கு, கருஞ்சீரகத்தை மையாக அரைத்து பற்றுப்போட்டால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். தீராத விக்கலை உடனடியாக நிறுத்த, இதன் விதைப்பொடியை மோருடன் கலந்து பருகலாம். தேனில் குழைத்துச் சாப்பிட்டால் தடைபட்ட சுவாசம் எளிதாகும். இதன் மருத்துவக் குணங்களைப் பெற, ரொட்டி வகைகளில் கருஞ்சீரக விதைப்பொடியைத் தூவிச் சாப்பிடலாம்.

பெண்களைப் பாதிக்கும் சில நோய்களைக் குணப்படுத்த, பண்டைய கிரேக்க மருத்துவரான `ஹிப்போகிரேடஸ்’ கருஞ்சீரகத்தை மருந்தாகப் பயன்படுத்தியிருக்கிறார். பூப்பு சுழற்சியை முறைப்படுத்த கருஞ்சீரகப் பொடியை சாதம் வடித்த கஞ்சியில் சேர்த்துக் கொடுத்து வரலாம். குழந்தை பிறந்ததும், கருப்பையின் உள்ளே இருக்கும் அழுக்கை முற்றிலும் வெளியேற்ற கருஞ்சீரகம் உதவுகிறது. தடைபட்ட மாதவிடாயை வெளியேற்ற, ஒரு கிராம் கருஞ்சீரகப் பொடியைச் சிறிது கீழாநெல்லி மற்றும் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம்.

இதன் விதையிலிருந்து பிரித்தெடுக்கும் எண்ணெயை வெற்றிலையில் தடவி மென்று சாப்பிட வீரியவிருத்தி உண்டாகும் என்கிறது சித்த மருத்துவம். கருஞ்சீரக எண்ணெயைத் துணியில் தடவி மோந்து பார்த்தால் மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல் குணமாகும். பழங்காலத்தில் நுரையீரல் பாதை தொற்றுகளைக் குணப்படுத்த கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புழுக்களை வெளியேற்ற இதன் பொடியை மிதமான வெந்நீரில் கலந்து பருகலாம் அல்லது கால் டீஸ்பூன் பொடியை, அரை டீஸ்பூன் விளக்கெண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம். சிறுவர்களுக்கு மூன்று சிட்டிகை பொடியைத் தேனில் குழைத்துக் கொடுத்தால் புழுக்கள் வெளியேறும்; பசி உணர்வு அதிகரிக்கும். கருஞ்சீரகச் சூரணத்துடன், நெருஞ்சில் விதை சேர்த்து நீர்விட்டுக் கொதிக்கவைத்துக் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்து வெளியேறும்.

புதினா, கொத்தமல்லி, இஞ்சி, சீரகத்துடன் கருஞ்சீரகம் சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சிக் குடித்துவந்தால் ரத்த அழுத்தம் சீராகும். நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயம், நாவல்கொட்டைத் தூளுடன் கருஞ்சீரகம் சேர்த்து அவ்வப்போது சாப்பிட, பாதங்களில் உண்டாகும் எரிச்சல், சோர்வு மறையும்.

கருஞ்சீரகத்தை வறுத்துப் பயன்படுத்தி னால் மணம் அதிகரிக்கும். சமைத்து முடித்த உணவுகளில் ஒரு சிட்டிகை கருஞ்சீரகம் தூவினால் தனித்துவமான சுவை கிடைக்கும். அசைவ குழம்பு வகைகளில் மிளகைப் போலவே கருஞ்சீரகத்தையும் சேர்க்கலாம். சீரகத்துக்குச் சிறிது இனிப்பு, கார்ப்பு கலந்த சுவையும், கருஞ்சீரகத்துக்குக் கைப்பு, கார்ப்பு சேர்ந்த சுவையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: கருஞ்சீரகம் !

Post by T.N.Balasubramanian on Mon Oct 01, 2018 5:25 pm

கருஞ்சீரகம் வடநாட்டில் அதிகமாக உபயோகத்தில் உள்ளது.
Kalonji என்று அழைக்கப்படுகிறது.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24171
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8741

View user profile

Back to top Go down

Re: கருஞ்சீரகம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை