உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

பாமரர் தேவாரம்

பாமரர் தேவாரம் - Page 2 Empty பாமரர் தேவாரம்

Post by ரமணி on Tue Jan 07, 2014 9:34 am

First topic message reminder :

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)

(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)

அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1

[அன்னதானச் செய்தி: Aadalvallan

மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2

[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]

கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3

[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]

ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4

[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]

புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5

[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]

அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6

உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7

கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8

பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9

ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10

ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11

--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down


பாமரர் தேவாரம் - Page 2 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ரமணி on Fri Apr 11, 2014 8:59 am

வணிகனின் மகளாய்ப் பிறந்தபா லாம்பாள்
. வன்னிம ரத்தடித் தவத்தால்
மணிமிடற் றரனின் பிரிவினை யறுத்தே
. மணம்கொளப் பெற்றவின் னாமம்
அணங்கவள் கமலம் நின்றருள் செய்ய
. மழலையர் நோயற வாழ்வர்
பணிமகள் வாயிற் பெண்ணிரு யுருவிற்
. கணியெனக் காஞ்சனித் தொட்டில். ... 5

[மிடறு = கழுத்து; வாயிற் பணிமகள் = துவாரபாலகி;
காஞ்சனி = மஞ்சள்]

சூரியன் மனையாள் இருவரும் பக்கம்
. சூழவே நின்றிடும் நவக்கோள்
ஆரமாய் மற்ற கோளெலாம் அவரைப்
. பார்க்கவே கோள்வினை குன்றும்
ஆரமாய்க் குவியும் கரங்களிற் றாளம்
. ஆர்த்திட நிற்குமா ரூரர்
பூரணன் தந்த பொன்னை-ஐ யுற்றே
. ஊடலில் நின்றதோர் கோலம்! ... 6

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 2 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ரமணி on Sat Apr 12, 2014 9:17 am

அன்னமாய் மாறி அழலென நின்ற
. அரன்முடி தேடிய அயன்தான்
சொன்னபொய் யுரையால் அன்னமாய் நிற்க
. உருத்திரன் அருளினால் தவம்செய்
துன்னியே போற்றத் தன்னுருப் பெறவே
. முன்னுரு நீங்கிய தீர்த்தம்
அன்னமாம் பொய்கை என்றுபேர் பெற்றே
. நம்வினை யழிநிலை நீரே. ... 7

எழுமையும் அடியேன் அடியவர்க் கடியேன்
. இவரினும் புரப்பவர் இல்லை
தொழுதுமேன் காட்டார் சேவடி யானே
. உரிமையா யவர்பொருள் ஆனேன்
உழல்மனம் ஆறப் பாச்சிலாச் சிரமத்
. துறைபவ னேத்தியா ரூரர்
மொழிந்திடும் பாடல் உளம்வரப் பெற்றால்
. ஒழியுமே இனிவரும் பிறப்பே. ... 8

[எழுமை = ஏழு பிறப்பிலும்]

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 2 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ரமணி on Sun Apr 13, 2014 10:01 am

(இறுதிப் பகுதி)

புனற்சடை கலையும் கொன்றையும் உறையப்
. பூதமும் பேய்களும் சூழ
வனத்திடை நீறு பூசியே ஆடும்
. அனல்விழிப் பரமனும் பெண்ணைக்
கனற்றிடும் நோயைப் பாச்சிலாச் சிரமக்
. காவலன் மகிழவே தீர்க்க
மனங்கொளப் பாடிக் காழியர் விளைத்த
. அற்புதம் ஆழ்ந்திட உய்வே. ... 9

வானமும் உயிரும் வையமும் அறமும்
. மானிட மனமுறை குணமும்
ஆனவோர் இறையை அறிதலே உய்வென்
. றாமெனும் மறைநெறி பழிக்கும்
கானலாம் நெறிகள் தவிர்த்திடும் அடியார்
. காத்திடும் பாச்சிலாச் சிரம
ஞானனைப் போற்ற நன்மைகள் சேர
. நலிவெலாம் ஓடியே போமே. ... 10

பாச்சிலாச் சிராமப் பாழியின் மூர்த்தி
. பாரினில் அவரது கீர்த்தி
மூச்சினில் நாமம் மந்திரம் ஒலிக்க
. மூழ்கிடச் செய்திடும் தீர்த்தம்
வாச்சியம் வேதம் ஒலித்திட இறையை
. வழிபடும் அடியவர் கூட்டம்
பேச்சினில் செயலில் பாட்டினில் ஐயன்
. பேர்வர ஏர்வரு மன்றோ? ... 11

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 2 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ரமணி on Tue Apr 22, 2014 8:47 am

திருப்பூவனூர் - 2.
(எண்சீர் விருத்தம்: அரையடி வாய்பாடு: காய் காய் மா தேமா )

கோவில்:
http://temple.dinamalar.com/New.php?id=331
http://www.shivatemples.com/sofct/sct103.php

பதிகம்:
’பூவனூர்ப் புனிதன்’ (அப்பர்)
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=50650

சதுரங்க வல்லவனாய் அருள்செய் யீசன்
. சாமுண்டி மூலமாகச் செய்யும் கோவிற்
பொதுமன்றில் நடம்செய்யும் பூவ னூரே
. பொருளுரைத்தே வினைபோக்கும் தலமென் றாக
நிதம்சூலி நாமத்தை நெஞ்சிற் கொண்டே
. நிமலன்பேர் நனிபரவி முத்தி யுற்றார்
பதம்போற்றித் தலைவணங்கி யுளங்க னிந்தால்
. பாவங்கள் நமைவிட்டு நீங்கும் இன்றே. ... 1

தத்தாநமர் என்றுதன தாவி நீங்கும்
. தருணத்தில் பகைவனையே பக்த னாக்கி
முத்தநாதன் கொலைவஞ்சம் எதிர்கொள் கோவி
. லூர்வேந்தன் மெய்ப்பொருளார் சரிதை கண்டே
இத்தருணம் இகல்தன்னை எதிர்கொள் யாரும்
. ஈசனருள் பெற்றுய்வார் பூவ னூரில்
பத்திவரும் பயம்போகும் வளரும் பான்மை
. அத்தனடி தலைவணங்கிப் போற்று வோர்க்கே. ... 2

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 2 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ரமணி on Wed Apr 23, 2014 6:49 am

மேனியெங்கும் வெண்ணீறாய் மாதோர் பாகன்
. மேவியருள் புரிகின்ற பூவ னூரில்
வானிறங்கும் கங்கையாறு தலையிற் றாங்கி
. வானமுதை வையமுறச் செய்த வேந்தன்
கான்தனிலே பேயார்க்க நடனம் செய்யும்
. காட்சியுளம் கொள்வார்க்கே அச்சம் நீங்கி
தானென்ற உணர்வழிந்து மேன்மை யார
. அன்பொன்றே சிவமென்னும் பான்மை யாமே. ... 3

பூச்சொரியும் கொன்றைசிவ நினைவை யூட்டப்
. பூவுலகம் மேலுலகம் நின்றே கேட்கப்
பாச்சொரியும் ஐந்தெழுத்தைக் குழலில் ஊதிப்
. பரமனடி சேர்ந்தார்-ஆ னாய னாரின்
ஆச்சரியக் கதைகேட்டே பூவ னூரில்
. அம்மையப்பன் தாளிணையைப் பற்று வோர்க்கே
மாச்சரியம் முதலான பகையாம் ஆறும்
. மனம்விட்டு நீங்கிடவே மல்கும் அன்பே! ... 4

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 2 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ரமணி on Thu Apr 24, 2014 7:56 am

வேகாத செங்கலதைப் பச்சை யென்பர்
. வேதியிலே வேகாத பதிகம் பச்சை
ஆகாதோ அம்மையப்பன் ஞானப் பிள்ளை
. அமணரெலாம் தோற்றிடவே தீயில் இட்டே
பாகான பைந்தமிழில் பரமன் போற்றிப்
. பாண்டியனைத் தாயறமே திரும்பச் செய்த
வாகான தேவாரம் வேதம் போற்றும்
. மாதேவன் மேவுதலம் பூவ னூரே. ... 5

குறிப்பு:

சமணர்களுடன் சம்பந்தர் அனல்வாதம் செய்தபோது தாம் முன்பே பாடிய
திருநள்ளாற்றுத் திருப்பதிகத்தை நெருப்பில் இட்டபோது அது எரியாமல்
பச்சென்றிருந்ததால் அப்பதிகம் ’பச்சைப் பதிகம்’ என்றழைக்கப்படுகிறது.

புரமூன்றும் சிரித்தழித்தே மூவர் ஆன்மா
. உருவாகத் தன்சபையிற் கொண்ட தேவன்
அருளன்னை இடப்பக்கம் கொண்டே மேவி
. ஆட்கொள்ளும் தலமாகும் பூவ னூரில்
விரிசடையும் முக்கண்ணும் புரிநூல் மார்பில்
. வெண்ணீறும் புலியதளும் செம்பொற் றாளும்
தரிசனமாய்க் காண்போர்தம் உளத்தில் தங்கி
. அறநெறியில் உய்விக்கத் திரளும் அன்பே. ... 6

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 2 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ந.க.துறைவன் on Thu Apr 24, 2014 11:38 am

தேடிப் படித்துப் பதிந்து பகிர்கிறீர்கள் தொடருங்கள் சார்..
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
மதிப்பீடுகள் : 450

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 2 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ரமணி on Fri Apr 25, 2014 6:30 am

கண்படைத்தே வழிபட்டு மகிழச் செய்தே
. காத்தருளும் ஆழிதனைப் பெற்றான் மாயன்
பெண்ணவளைக் கொளும்நம்பி யாரூர் தம்மை
. வெண்ணெய்நல் லூர்த்தலத்தில் கொண்டான் பித்தன்
வெண்ணீறன் வில்லாளி விமலைக் கூறன்
. வினையாளும் வித்தகனைப் பூவ னூரில்
கண்ணாரக் காணுமுளம் களியில் ஆர்ந்தே
. அண்ணலவன் தாள்நாடப் பெருகும் அன்பே. ... 7

வல்லரக்கன் கரம்பற்ற மலையும் ஆட
. வஞ்சியவள் நடுங்கிடவே கயிலை யீசன்
தொல்லைதனைக் கால்விரலால் தலைகள் பத்தும்
. தோயநிலம் அழுத்தியவன் செருக்கைக் கொண்டே
பல்விதமாய் அருள்செய்தே காத்து நின்ற
. பரமனவன் மேவுதலம் பூவ னூரில்
செல்கதியாய் நாடியுள மார வாழ்த்தின்
. எல்லையிலா அன்பினிலே வாழ்வ துண்டே! ... 8

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 2 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ரமணி on Sat Apr 26, 2014 8:40 am

(இறுதிப் பகுதி)

அழலோங்கும் தூணாக யீசன் நிற்க
. அடிமுடியை அயன்மாலும் தேடிக் காணாத்
தழலாகும் தண்ணிலவின் கிரணம் போல
. தருக்கினையே உருத்தெரியா தொழித்தே நின்றால்!
கழலிணையே கதியெனவே திண்ணம் கொண்டால்
. கடைக்கண்ணால் இன்னல்கள் தீரச் செய்யும்
மழுவாளி மேவிநிற்கும் பூவ னூரில்
. வழுத்துவோர்க்கு வாழ்வினிலே என்றும் அன்பே. ... 9

தீயதனில் வேதநெறி இறையைக் காணத்
. தீயதென அதுபழிக்கும் நெறிகள் தள்ளி
ஆயிழையாள் இடம்கொண்டே அமரும் தேவன்
. ஆதிபக வனுருவாக அறியும் நெஞ்சில்
மாயயெலாம் விலகிடவே தெரியும் உண்மை
. மாண்பதனை நிலைநிற்கச் செய்தே நம்மைச்
சேயதனைத் தாயவள்போல் காக்கும் ஈசன்
. செம்பொருளாய் மேவுதலம் பூவ னூரே. ... 10

புனிதனெனத் துணைவனென ஆதி நாதன்
. புற்றரவன் பாதியானான் பூத நாதன்
மனிதரிலே தலையானோர் போற்று மீசன்
. மன்நின்றே அறிவொண்ணா இயல்பி னானான்
என்னனாகி மனையாகி எந்தை யாகி
. என்தனமாய் மேவுதலம் பூவ னூரே
என்றெல்லாம் திருநாவுக் கரசர் போற்றும்
. எண்குணன்நம் எண்ணமுறில் வினைகள் போமே. ... 11

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 2 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ரமணி on Sat May 17, 2014 12:00 pm

தில்லை (சிதம்பரம்)
கோவில்: http://temple.dinamalar.com/New.php?id=492

சந்தக் கலிவிருத்தம்: மா(3) கூவிளம்(4) தேமா(3) கூவிளம்(5)
(’தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்’--சம்பந்தர் தேவாரம்: 2.28.1.)

மூவர் பாடிய மூல வேடுகள்
தேவன் ஆடிய தில்லை யூரினில்
மேவு முத்திரை ஏற வந்தருள்
பாவ நாசனின் பாலன் வாழியே! ... 1

ஈழம் வேய்தலில் ஏடு காண்டலில் ... [ஈழம் = பொன்]
சோழ வேந்தரும் சேவை மேற்கொள
பாழி தில்லையில் ஆடும் கூத்தனை
ஆழி தாண்டிட ஆசி வேண்டுவோம். ... 2
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 2 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ரமணி on Sun May 18, 2014 9:27 am

ஐந்து மன்றினில் ஆவி யாறவே
பைந்த மிழ்தனில் நால்வர் பாடவே
வேய்ந்த பொன்னடி வேடன் ஆடவே
பாய்ந்த வின்னருள் பாவம் தீர்க்குமே. ... 3

நாலு திக்கினில் நால்வர் வந்தனர்
ஆலன் பேர்புகழ் பாடி யருளினர்
ஞாலம் நீக்கிய ஞானி யர்நாதன்
கோலம் கண்டிடக் கூத்து மாடுவான். ... 4

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 2 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ரமணி on Mon May 19, 2014 7:34 am

மாசில் சீடனும் வாத வூரரே
நேச நண்பனும் ஏம சுந்தரர்
தாச னாய்த்திரு நாவின் வேந்தரே
பாச மைந்தசம் பந்த ரானரே. ... 5

ஆதி சேடனின் பாக மாமுனி
பாதி மேனிபுல் பாத மாமுனி ... [புல் = புலி]
காதல் மேலுற ஆடல் காணநாம்
ஆதி தில்லையில் காண முக்தியே. ... 6

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 2 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ரமணி on Tue May 20, 2014 6:23 pm

உருவில் ஆடலன் கூத்து நோக்கியும்
அருவில் தில்லை வானம் நோக்கியும்
அருவும் ரூபமும் லிங்கம் நோக்கியும்
மருவு மாசைகள் மாய வாழ்வமே. ... 7

அஞ்செ ழுத்தினில் ஐயன் மந்திரம்
அஞ்செ னும்வகை ஐயன் காரியம்
அஞ்சு சக்தியில் தில்லை நாயகன் .. [ஆதி, பரா, இச்சா, கிரியா, ஞான சக்திகள்]
பஞ்ச பூதமும் ஆள ஞாலமே. ... 8

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 2 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ரமணி on Thu May 22, 2014 6:31 pm

(இறுதிப் பகுதி)

வேத னாடலை வேழ மைந்தனில்
பாத கிண்கிணி யாக மாடவே ... [ஆகம் = உடல்]
ஊதும் கோபத் தூர்வ மாமுனி ... [ஊதும் = பெருத்திடும்]
காத மூர்ந்தே கண்ட தில்லையே. ... 9

[தூர்வாச முனிக்காகத் தில்லைக் கற்பக விநாயகர் தன் தந்தையின் நடனத்தை
ஆடிக் காட்டியதாக வரலாறு.
http://natarajadeekshidhar.blogspot.in/2012/03/blog-post.html

போதன் கூறெனும் பூவன் வாழையும்
மாத வன்புகழ் வாழை மொந்தையும்
பேத மில்சிவன் பேயன் வாழையும்
வேத நாயகர் மேவும் பேரிலே. ... 10

[பிரம்மனின் அம்சமாகப் பூவன் வாழையும், விஷ்ணுவின் அம்சமாக மொந்தை (முகுந்த) வாழையும்,
சிவனின் அம்சமாகப் பேயன் வாழையும் கருதப்படுவதன் பின்னுள்ள கதை இங்கே:
http://natarajadeekshidhar.blogspot.in/2010/09/blog-post_20.html]

பஞ்ச பூதமும் அஞ்சு மன்றமும்
அஞ்சு சுற்றென அஞ்சு கோசமும்
அஞ்செ ழுத்தினன் ஆகும் தில்லையைத்
தஞ்ச மாக்கொள அஞ்சை வெல்லலாம். ... 11

விளக்கம்:
பஞ்ச பூதங்களின் தில்லை ஆகாயத் தலம்; கோவிலின் ஐந்து பிரகாரங்கள்
உயிரின் ஐந்து கோசங்களைக் குறிப்பன (அன்ன, மனோ, பிராண, விஞ்ஞான ஆனந்த கோசங்கள்);
அஞ்சை வெல்லுதல் = ஐந்து புலன்களை அடக்கியாளுதல்.

--ரமணி, 05/05/2014

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 2 Empty Re: பாமரர் தேவாரம்

Post by ரமணி on Fri May 30, 2014 10:38 am

திருமழபாடி
(கலித்துறை: விளம் தேமா விளம் தேமா புளிமாங்காய்)
(’நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே(று)’--சம்பந்தர் தேவாரம் - 1.98.1)

கோயில்:
http://temple.dinamalar.com/New.php?id=438
http://www.shivatemples.com/nofct/nct54.php
http://templesoftamilnadu.co.in/tag/temple-for-getting-married/

நந்திகல் யாணம் செய்தவோர் கோவில் நலம்பாடச்
சுந்தரர் பாடல் விரும்பிய ஈசன் துதிபாட
வந்தருள் செய்தே விந்தையோர் கோவில் மழபாடிச்
சுந்தரப் பிள்ளை யார்துணை நிற்க விழைவேனே. ... 1

நரமுக மாவும் அயனுறை லோகத் தரன்லிங்கம் ... [நரமுக மா = புருடாமிருகம்]
உரமுடன் நன்றாய்த் தாபனம் செய்ய உறைந்தானே
மருத்துவன் ஈசன் கொள்ளிடம் பாயும் மழபாடி
உருவினில் வைரத் தூணென அப்பர் பதிகத்தே. ... 2
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1206
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634

Back to top Go down

பாமரர் தேவாரம் - Page 2 Empty Re: பாமரர் தேவாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை