ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

View previous topic View next topic Go down

2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by krishnaamma on Thu Dec 12, 2013 6:40 pm

மேஷம்


உறுதியான அறிவும் தீரமிக்க செயலில் வீரமும் கட்டுகின்ற மேஷ ராசி அன்பர்களே!

இந்த வருடம் புத்தாண்டு 2014 கன்னி லக்னத்திலும் தனுகராசியிலும் பிறக்கிறது. அனைத்து சிறப்பம்சங்கள் உங்கள் ராசிக்கு இருப்பதால், இந்த வருடம் உங்களுக்கு எல்லா வகையிலும் சிறப்பான பலன்கள் தான் நடக்கும் என்று ஆணித்தரமாகச் சொல்லலாம்.

வேலை, உத்தியோகம் இல்லாதோருக்கு படிப்புக்கேற்ற வேலையும், திருப்தியான ஊதியமும் கிடைக்கும்., இந்தப் புதுவருடத்தில், பதவி உயர்வும் ஊதிய உயர்வும் திருப்தியான இடமாற்றமும் ஏற்படும்.

சொந்தத் தொழில் துறையில் இழுத்துப் பறித்து தொழிலை வலுக்கட்டாயமாக ஓட்டியவர்களுக்கு 2014ல் நல்ல முன்னேற்றமும் திருப்பமும் உண்டாகும். தொழில் உங்களைப் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் முறை. ஆனால் கடந்த காலத்தில் கடன் உடன் வாங்கி, தவணை வாங்கி தொழிலை நீங்கள் காப்பாற்றி வந்தீர்கள். வரும் தை மாதம் முதல் ஜனவரி 14 ல் இருந்து தொழில் பன்மடங்காகும் , வியாபாரம் நன்றாக இருக்கும் , செல்வம் சேரும்அதுதான் நேரம் காலம் என்பது! தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது அது தான்!

இன்னும் சிலர் பழைய தொழிலை அபிவிருத்தி செய்வதோடு சிலர் புதிய தொழிலையும் தனியாகவோ கூட்டாகவோ ஆரம்பிக்கலாம்.
உணவு, காப்பி, ஜுஸ் கடை, ஸ்டேசனரி, நூல், ஜவுளி, இரும்புயந்திரம், வாகனம், ஜெராக்ஸ், மின் தொடர்பு சாதனம் போன்ற தொழில்கள் எல்லாம் மிகச் சிறப்பாக இருக்கும். ஜாதகரீதியாக லக்னம் அல்லது ராசியில் ராகு - கேது சம்பந்தம் இருந்தாலும், அல்லது ராகு - கேது தசாபுத்தி நடந்தாலும் எக்ஸ்போர்ட்ஸ் தொழிலும் ஆரம்பிக்கலாம்.
7ல் சனி ராகு இருப்பது களஸ்திர தோஷம் மாங்கல்ய தோஷம் என்றாலும், 2014 கிரக சஞ்சாராத்தால் தோஷம் எல்லாம் நீங்கி உடனே திருமணம் கூடிவிடும். அதாவது குரு மிதுனத்தை விட்டு மாறுவதற்குள் தடைப்பட்ட திருமணம் கூடிவிடும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஜாதகரீதியாக தோஷம் இருந்தால் அல்லது 30 வயது தாண்டியும் திருமணம் ஆகாமல் இருந்தால், பெணக்ள் பார்வதிகலா சுயம்பர ஹோமமும், ஆண்கள் கந்தர்வ ராஜஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்து கொள்ளலாம். இதனால் திருமணத் தடை நீங்குவது மட்டுமல்ல, நல்ல மண வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமான, மன நிறைவான குடும்பமும் அமையும்.
ஏற்கனவே திருமணமாகிப் பலவருடம் புத்திரபாக்கியம் இல்லாமல் ஏங்கித்தவித்தவர்கள் புது வருடத்தில் வாஞ்சாகல்ப கணபதி புத்திர ஹோமமும், சந்தான பரமேசுவர ஹோமமும், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமமும் செய்து தம்பதிகள் கலச அபிஷேகம் செய்து கொண்டால் உடனே வாரிசு யோகம் அமையும். சேங்காலிபுரம் அல்லது சேந்தமங்கலம் சென்று தத்தாத்ரேயரை வழிபட்டால் ஆண்வாரிசு அமையும். பெண் வாரிசு வேண்டுவோர் திருக்கடையூர் அபிராமியம்மனை வழிபடலாம்.
கடந்த காலத்தில் நோயின் பிடியில் சிக்கித் தவித்து ஒவ்வொரு டாக்டராகப் பார்த்தும் முழுமையான குணம் ஏற்படாதவர்களும், அலோதிபதி, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, அக்குபஞ்சர் என்று மாறி மாறி ட்ரீட்மெண்ட் எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிரகக்கோளாறா, செய்வினைக் கோளாற, குடுயிருப்பு வாஸ்துகுற்றமா என்று புலம்பிக் குழம்பியவர்களுக்கும் 2014ல் உடனடி தீர்வும் நல்ல மாறுதலும் உண்டாகும்.
அதேபோல கடந்த காலத்தில் தவிர்க்க முடியாத செலவினங்களினால் வரவுக்கு மீறிய விரயங்களால் வட்டிக்கு வாங்கி கட்டமுடியாமல் கலங்கித் தவிப்பவர்களுக்கும் நல்லவழி பிறக்கும். வருட லக்னம் 6ஆவது லக்னம் 6ஆம் இடம் என்பது எதிரி, கடன், வைத்தியச் செலவு ஆகிய பலனைக் குறிக்கும். அங்கு ராசினாதன் செவ்வாய் இருப்பதாலும் 6க்குடைய புதன் 5க்குடைய சூரியன் சாரம் பெற்று சூரியனோடும் சேர்ந்து, குரு, செவ்வாய், சனி, ராகு இவர்களால் பார்க்கப்பட்டதாலும் எதிரி, கடன், வைத்தியச் செலவு போன்ற 6ஆம் இடத்துத் தொல்லைகள் எல்லாம் வேரோடு வீழ்ந்துவிடும்.
13/06/2014 ல் குருபெயர்ச்சி, மேஷ ராசிக்கு 3ல் மறைவாக இருந்த குரு 4ஆம் இடமான கடகத்துக்கு மாறி அங்கு உச்சபலம் பெறுவார். கடக குரு மேஷ ராசிக்கு 8ஆம் இடம் விருச்சிகத்தையும், 10ஆம் இடம் மகரத்தையும், 12ஆம் இடம் மீனத்தையும் பார்க்கப் போகிறார். அதனால் தொழில் விருத்திக்காகவும், குடும்பத்தில் நல்ல காரியங்களுக்காவும், சுபச் செலவுகளும் பணப்பற்றாக்குறைய சமாளிக்க கடன்படும் சூழ் நிலையும் ஏற்படும். கடன் வாங்குவது என்பது ஒரு கௌரவப் பிரச்சனைதானே, அதுதான் 8ஆம் இடத்துப் பலன்!
21/06/2014ல் ராகு - கேது பெயர்ச்சி, இதுவரை ஜென்மத்தில் நின்ற கேது 12ஆம் இடம் மீனத்துக்கும், 7ல் நின்ற ராகு 6ஆம் இடம் கன்னிக்கும் மாறுவார்கள். ராகு - கேது பெயர்ச்சி மேஷ ராசிக்கு அற்புதமான யோகமான பெயர்ச்சி 6ம் ,12ம் பாப் ஸ்தானங்கள். அங்கு நிற்கும் பாப கிரகங்கள் மேற்படி பாப பலனை அழித்துவிடும். அதாவது வீண்விரயம், அவப்பெயர், நஷ்டம் இவற்றை இல்லாமல் செய்துவிடும். அதேபோல ராகுவும் எதிரி, கடன், வைத்தியச் செலவு, போட்டி பொறாமைகளையும் இல்லாமல் அழித்துவிடும். எனவே, குருபெயர்ச்சியும் ராகு கேது பெயர்ச்சியும் மேஷ ராசிக்கு மிக மிக யோகமான பெயர்ச்சியாகும்.
16/12/2014 ல் தான் சனிபெயர்ச்சி, மேஷ ராசிக்கு 8ல் சனி வருவதால் அட்டமச் சனி ஆரம்பம் ஆரம்பத்தில் சனி விசாகம் 4ல் இருப்பார். விசாகம் குரு நட்சத்திரம் குரு 9க்குடையவர். சனி 10க்குடையவர். மேலும் கடகத்தில் உச்சம் பெறும் குரு விருச்சிகத்திலுள்ள அட்டமச் சனியைப் பார்க்கப் போவதால் தர்மகர்மாதிபதி யோகம் ஆகும். ஆகவே அட்டமச் சனியைப் பற்றி மேஷ ராசிக்குக்காரர்கள் ஆதிகம் கவலைபட வேண்டாம். வாழ்த்துகள்.
கடவுள் நினைவோடும் ,விழிப்புணர்வோடும் செயல்பட்டால் , பிரச்சனைகள் பலவற்றை வராமலேயே தவிர்த்து விடலாம் வந்தாலும் சமாளித்து விடலாம்

வாழ்க வளமுடன் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by krishnaamma on Thu Dec 12, 2013 6:40 pm

ரிஷப ராசி

கார்த்திகை 2,3,4 ஆம் பாதம். ரோஹிணி, மிருகசீரிஷம் 1,2, ஆம் பாதம்

தன் சொந்த முடியவை காற்றாய் சுவசிக்கும் கற்பனை திறன் மிக்க ரிஷப ராசி அன்பர்களே !
இந்த வருடம் புத்தாண்டு 2014 உங்கள் ரிஷப ராசிக்கு 5ஆவது லக்னம் கன்னியிலும், 8ஆவது ராசி தனுசு ராசியிலும் பிறக்கிறது. அதேசமயம் 8ஆம் இடம் என்பது அகௌரவம், அபகீர்த்தி, விபத்து, பீடை, விசனம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம் என்பதால், ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு எதிரிகளால் இடையூறுகளும் பிரச்சனைகளும் ஏற்படத்தான் செய்யும். உங்கள் வளர்ச்சியிலும் செல்வாக்கிலும் சாதனையிலும் பொறாமை கொண்டவர்கள் புழுதிவாரித் தூற்றினாலும், உங்கள் பெருமையும் திறமையும் புகழும் எந்த வைகையிலும் குறையாது; பாதிக்காது! அதனால் போட்டியாளர்களின் பொறாமைப் பேச்சுக்கள் உங்களுக்கு பட்டை தீட்டுவதாக கருதிக் கொண்டால் ஜொலிப்பீர்கள்
2014 எண் கணிதப்படி 7 கேதுவின் எண் கேது ராசிக்கு 12ல் மறைந்திருந்தாலும் மகரச் சுக்கிரனுக்கு 4ல் இருக்கிறார். ராசிக்கு ஆதிபதி சுக்கிரன் 9ல் இருக்க 9க்குடைய சனி ராசிக்கு 6ல் இருக்க சுக்கிரனும், சனியும் பரிவர்தனை. 6 ஆம் இடம் தொழில் ஸ்தானமாகிய 10ஆம் இடத்துக்கு பாக்கியஸ்தானம். எனவே உங்களிடைய தொழில், வேலை, உத்தியோகம் எல்லாவற்றிலும் முன்னேற்றமும் வெற்றியும் லாபமும் இந்த வருடத்தில் அற்புதமாக இருக்கும்.

சனி, ராகு - கேது சம்பந்தப்பட்டதால், படித்து முடித்து வேலை தேடும் வாலிபர்கள் குவைத், அரபு நாடுகளுக்கும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற கிழக்கு நாடுகளுக்கும் நைஜீரியா, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்கும் போய் வேலை பார்க்கலாம். வாய்ப்புகள் தேடிவரும். வருவதை பயன்படுத்திக் கொள்ளவும். ஏற்கனவே வெளி நாடுகளில் வேலைபார்ப்போருக்கு இந்தப் புதுவருடம் கூடுதல் சம்பளம், அதிக நன்மைகள், பலங்களை உண்டாக்கும். சிலர் வெளி நாட்டிலேயே வேறு இடங்களுக்கு மாறாலாம்.

4ஆம் இடத்துக்கு திரிகோணத்தில் தனுசு ராசியில் சூரியன், புதன், சந்திரன், சேர்க்கையாகவும், குரு, செவ்வாய், சனி, ராகு பார்வையும் கிடைப்பதால் கடன் வாங்கி வீடு, மனை, பிளாட் வாங்கலாம். டூவீலர் அல்லது கார் வாங்கும் யோகமும் உண்டு. படிக்கும் மாணவர்களுக்கு 2014ல் மேற்படிப்பு, பட்டம் வாங்கும் யோகமும் தடையில்லாத கல்வியும் உண்டாகும். தாயின் அன்பும் ஆதரவும் நோயற்ற வாழ்வும் தேக ஆரோக்கியமும் உண்டு. வாயும் வயுறுமாக இருக்கும் பெண்கள் தாய் வேறு சேய் வேறு என்று சுகப்பிரவசம் அடையலாம்.

வருடத் தொடக்கத்தில் 2ல் உள்ள குரு ஜூன் மாதம் 13ஆம் தேதி 3ல் கடகத்தில் உச்சம் அடைவார். குருவுக்கு 3ஆம் இடம் சுமாரான இடம் தான். என்றாலும், ரிஷப ராசிக்கு 8, 11க்குடைய குரு தைரிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று 7ஆம் இடத்தையும், 9ஆம் இடத்தையும், 11ஆம் இடத்தையும் பார்க்கிறார். அதனால் திருமணமாகவேண்டிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமண தடை விலகி நல்ல மனைவி, கணவன் அமைவார். திருமணமாகி ஒருவரைஒருவருவர் புரிந்துகொள்ளாமல் பிரிந்து வாழும் தம்பதிகளும், இக்காலகட்டத்தில் ஒன்று சேர்ந்து நன்று வாழலாம். இன்று போல் என்றும் இன்பம் துய்க்கலாம்.

நல்ல கணவன் அமைய பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும், நல்ல மனைவி அமைய ஆண்கள் கந்தர்வ ராஜஹோமமும் செய்து கொள்வது அவசியம். அதேபோல பிரிந்து வாழும் தம்பதிகள் இணைந்து வாழ பதிகமான ஹோமமும், சதிகமன ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்து கொள்ளலாம்.

9ஆம் இடத்தை குரு பார்பதன் பலனாக தகப்பனார் அல்லது பாட்டனார் வகையில் பூர்வீகச் சொத்துப்பிரச்சனைகள் இருந்தால் கடக குருப்பெயர்ச்சிக்கு பிறகு பிரச்சனைகள் எல்லாம் சுமுகமாகத் தீர்ந்து அனுபவத்துக்கு வரும். ராஜபாளையத்திலிருந்து தெங்காசி பாதையில் வாசுதேவ நல்லூருக்கு பக்கத்தில் தாருகாபுரம் என்ற ஊர் உள்ளது. அங்கு தலைவன் கோட்டை ஜமீனுக்குப் பாத்தியதைப்பட்ட மத்தியஸ்தனாதர் கோவில் இருக்கிறது. மிகப்பழமையான சிவன் கோவில்.அம்பாள் அகிலாண்டேஸ்வரி. சிவனைச் சுற்றிவரும் பிராகாரத்தில் தட்ணாமூர்த்தி நவகிரங்களோடு காட்சியளிக்கிறார். தஞ்சைமாவட்டம் கும்பகோணம் பக்கமும் உண்டு. நவகிர தோஷம் இருந்தால் மாறிவிடும். சென்னையிலிருந்து ஆந்திரா போகும் பாதையில் பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வழி சுருட்டப்பள்ளி என்ற ஊரில் சிவன் கோவிலில் தாம்பத்திய தட்சணாமூர்த்தி சந்ததி இருக்கிறது. தட்சணாமூர்த்தி மடியில் அம்பாளை வைத்திருப்பது போல விசேஷ விக்கிரகம். இவரை வழிபட்டால் குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறு பாடுகள் இருந்தால் மறைந்துவிடும்.

கடகம் 3ஆம் இடம். அங்கு உச்சம் பெறும் குரு உங்களுக்கு மனோதைரியத்தையும், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையையும் உற்றார். உறவினர்கள், உடன் பிறப்புகளின் உதவியையும் ஆதரவையும் தருவார்.

11ஆம் இடத்தை குரு பார்ப்பதால், எதிர்பாராத வெற்றி, லாபம், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். வழக்கு, வியாஜ்ஜியங்கள் இருந்தால் அதில் உங்களுக்கு சாதகமான அனுகூலமான தீர்ப்பு கிடைக்கும். மூத்த சகோதர- சகோதரி வகையில் நன்மை உண்டாகும். சிலர் எப்போதோ பல வருடங்களுக்கு முன்பு விளையாட்டாக ஊருக்கு ஒதுக்குபுறமாக இடத்தில் காலி மனையாய் குறைந்த விலைக்கு வாகி போட்டிருப்பார்கள். அன்று அதை வாங்கும்போது குடும்பத்தில் உள்ளவர்கள் வேஸ்ட் என்று விமர்சனம் செய்தார்கள். இப்பொழுது அதையொட்டி நான்கு வழிசாலை வரபோவதால், அந்த இடத்தின் மதிப்பும் மவுசும் கூடிவிடும். அதானால் உங்கள் இடத்தில் ரெஸ்ட்டாரண்ட் கட்டவும் திட்டமிட்டு உங்களை அணுகலாம். ஒன்றுக்கு பத்துமடங்கு வாங்கிய விலைமேல் அதை வாங்கலாம். அதானால் நல்ல லாபம் கிடைக்கலாம். அல்லது அந்தத் திட்டத்தை நீங்களே நிறைவேற்றா முயற்சிக்கலாம்.

விற்றவருக்கும் யோகம் வாங்கியவருக்கும் யோகம். அதிர்ஷ்ட லட்சுமி பார்வை கிடைக்கும் போது அபரிமிதமான யோகம் தேடிவரும். அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதத்தான் விவேகானந்தர் ஒருவருக்கு கிடைக்கும் என்ற அமைப்பு இருந்தால் அதைத் தடுக்க எந்த சக்தியாலும் முடியாது என்றார்.

இந்த வருடம் 13/06/2014ல் குருபெயர்ச்சி வருகிறது. ஜூன் மாதம் 21ஆம் தேதி ராகு - கேது பெயர்ச்சியும் வருகிறது. கடந்த ஒன்றரை வருடகாலமாக துலாராசியில் இருந்த ராகு இப்போது கன்னி ராசிக்கும், மேஷத்தில் இருந்த கேது மீன ராசிக்கும் மாறுவார்கள்.

ரிஷப ராசிக்கு 5ல் ராகு 11ல் கேது இருப்பது ஒரு திருப்புமுனைதான். உங்கள் மனதில் அரித்துக்கொண்டிருந்த பல பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். 5ஆம் இடம் பிள்ளைகள் ஸ்தானம். பிள்ளைகள் வகையில் திருமணம், வாரிசு, தொழில் உயர்வு, வாழ்க்கை முன்னேற்றம் போன்ற நல்ல காரியங்கள் எல்லாம் தடைப்பட்டு தாமதப்பட்டு கலங்கிய பெற்றோர்களுக்கு ஈகோ உணர்வும், நீயானானா என்ற போட்டி இருந்த நிலையும் மாறி சுமூகத் தீர்வு ஏற்படும். இதெல்லாம் கடகத்துக்கு குருமாறியதும் நடக்கும். கடக உச்ச குரு 9ஆம் இடத்தில் உள்ள கேதுவை பார்ப்பதால் அந்த பலன் ராகுவுக்கு சேரும்.

குறிப்பாக ராகு திசை, கேது திசை அல்லது அவரவர் புத்தி நடந்தாலும் அனுகூலமான பலங்களை எதிர்ப்பார்க்கலாம். ராகு - கேது பெயர்ச்சிக்கு காளஹஸ்தி, சென்று வழிபடலாம். வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by krishnaamma on Thu Dec 12, 2013 6:43 pm

மிதுனம்

மிருகசீடம் 3,4 ஆம் பாதம்,திருவாதிரை , புனர்புசம் 1,2,3 ஆம் பாதம்
இனிமையான பேச்சால் பிறரின் மனதில் நீங்காத வண்ணமாகி விடுகின்ற மிதுன ராசி அன்பர்களே!

ஆங்கிலப் புதுவருடம் 2014 கன்னி லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. வருடத் தொடக்கத்தில் மிதுன ராசினாதன் புதனும், வருட ராசினாதன் குருவும் பரிவர்த்தனையாக இருப்பதும் தனிச்சிறப்பு. குரு மிதுனத்திலும் புதன் தனுசுவிலும் பரிவர்த்தனை. கிரகங்கள் இருந்தாலும் அல்லது தர்மகர்மாதிபதி யோகம் இருந்தாலும் அந்த ஜாதகத்தில் எந்த கிரகங்கள் சோதனையைத் தந்தாலும் அவற்றைக் கடந்து சமாளிக்க முடியும். வலுவாக சாதனை புரியலாம். இழந்த பதவி, செல்வங்களை மீண்டும் பெறலாம். என்பது பொது விதி!
2014ல் மேற்சொன்ன இரண்டு யோகமும் உண்டு. குருவும் சனியும் பரிவர்த்தனை மிதுன ராசிக்கு 9க்குடைய சனியை 10க்குடைய குரு பார்ப்பதால் தர்மகர்மிதிபதி யோகம். எனவே மற்ற ராசிகாரர்களைவிட மிதுன ராசிக்கும் கன்னி ராசிக்கும் 2014 சூப்பர் வருடமாக அமையும்.
ராசி நாதன் புதனை சனியும், செவ்வாயும், ராகுவும் பார்ப்பதும் சிறப்பு. கடந்த காலத்தில் வேலை உத்தியோகத்தில், தொழில்துறையில் பல வகையிலும் நஷ்டப்பட்டவர்களுக்கும் கஷ்டப்பட்டவர்களுக்கும் இந்த வருடம் சொந்தத் தொழில் யோகமும், உத்தியோகத்தில் உயர்வும், முன்னேற்றமும் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகம், திருமணமானவர்களுக்கு வாரிசு யோகமும் உண்டாகும்.
7ஆம் இடத்தை சனி, ராகு, செவ்வாய் பார்ப்பது குற்றம்தான் என்றாலும், மிதுன ராசி நாதனும் வருட லக்னாதிபதியுமான புதன் 7ல் இருப்பதோடு வருட ராசி நாதன் குரு பார்ப்பதால் தோஷம் நீங்குகிறது. அதேபோல 5ஆம் இடத்துக்கும் குரு பார்வை இருப்பதோடு 5க்குடைய சுக்கிரனும் 8க்குடைய வரும் பரிவர்த்தனை யோகம். அப்படியே திருமணத் தடையும் தாமதமும் இருந்தால், ஆணகள் கந்தர்வராஜ ஹோமமும், பெணகள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து கொள்ளலாம்.
அதேபோல ஜாதகத்தில் பத்திர தோஷம் இருந்தால் வாஞ்சா கல்ப கணபதி ஹோமமும், புத்திர ப்ராப்தி ஹோமமும், சந்தான பரமேசுவர ஹோமமும் செய்தால் வாரிசு யோகம் பெறலாம். அதனால் ஹோமத்திற்கு நல்ல பலன் உண்டு என்பது அனுபவரீதியான உண்மை. இது பற்றி தினசரி ஹோமம் நடக்கும் தன்வந்திரி பீட ஸ்தாபகர் யாகபுருஷர் முரளிதர ஸ்வாமிகள் அக்னி ஹோமங்கள் அல்லலைத் தீர்க்குமா என்னும் தொடரை வாராவாரம் பாலஜோதிடம் வார இதழில் எழுதி வருகிறார்.
தொழில் காரகன் சனி ராகுவோடு சேர்ந்து தொழில் ஸ்தானம் 10க்கு 8ல் இருப்பதால் சிலருக்கு தொழில், வேலை சம்பந்தமான பிரச்சனைகளும் சங்கடங்களும் இருக்கலாம். ஆனால் மிதுன குரு சனியையும் ராகுவையும் பார்க்கப்போவதால், தொழில் சம்பந்தப்பட்ட யோகங்கள் தோல்வியில்லாமல் நடக்கும். தொட்டது துலங்கும்.
சம்பளத்துக்கு இருபோர் சொந்தத் தொழில் தொடங்கலாம். குறைந்த சம்பளத்தில் குமுறுகிறவர்கள் நிறைந்த சம்பளத்தில் வேலை மாறலாம். அல்லது வெளி நாடு போகலாம். கை நிறைய சம்பாதிக்கலாம். வெளி நாட்டில் சேமித்த பணத்தைக்கொண்டு உள்ளூரில் வீடு, மனை, வாகன யோகங்களை அமைத்துக் கொள்ளலாம். தகப்பனார் காலத்திலிருந்தே சொந்த வீடு என்பது கனவு வீடாக இருந்த நிலைமாறி நனவாகும். நிஜமாகும். என். ஆர். ஐ வகையில் வங்கிகடனும் வாங்கி வீட்டைக் கட்டலாம்.
நான் நினைவு தெரிந்த நாள் முதல் சுமார் 100 வீடுகளுக்கு மேல் மாறியவன். பென்னமராவதி அருகில் பூமி நாத சுவாமி ஆராண வல்லியம்மன் கோவில் சென்று பூஜை செய்த பிரகு சொந்த இடம் வாங்கினேன். வெளி நாட்டில் வேலை செய்த இளையமகன் பேரில் வங்கிக்கடனும் கிடைத்தது. 70 வயதுக்குமேல் சொந்த வீட்டில் அமரும் பாக்கியம் கிடைத்தது. நீங்களும் செவலூர் சென்று பூமி நாதரை வழிபடலாம்.
மிதுன ராசிக்கு 4ஆவது இடமான கன்னியில் 2014 ஆம் வருடம் பிறப்பதால், ஜாதக அமைப்பு நன்றாக இருந்தால் 2014ல் உங்களுக்கு சொந்த வீடு, வாகன யோகம் அமைந்து விடும். 9ஆம் இடம் பூர்வ புண்ணியஸ்தானம். அதற்குடைய சனி உச்சம் பெற்று 4க்குடைய புதனைப் பார்ப்பதால் சிலர் பூர்வீக இடத்தை நல்ல விலக்கு விற்று புதிய வீடு வாங்கலாம். அல்லது கட்டலாம். பூமி காரகன் செவ்வாயும் புதனைப் பார்க்கிறார்.
ஜென்மத்தில் குரு நிற்பதால், புதனும் சூரியனும் ஜென்ம ராசியைப் பார்ப்பதும் உங்களுடைய செல்வாக்கு மேன்மையடையும்; திறமை, கௌரவம், செயல்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவமும் மதிப்பும் உண்டாகும். கலைத்துறையிலும், பொது வாழ்க்கையிலும், ஆன்மிகத்துறையிலும், அரசியலிலும் ஈடுபட்டுள்ளோருக்கு பாராட்டும் மாரியாதையும் பரிசும் கிட்டும். புதன் ஜோதிடகாரகன் என்பதால், ஜோதிட சம்பந்தமான ஆய்வும் மேற்கொள்ளலாம். ஜோதிடராக பரிமளிக்கலாம். வாக்குபலித்திற்கு இஷட தெய்வ உபாசனை மேற்கொள்ளலாம்.
அச்சுத் தொழிலுக்கும், மருந்து வகையறாவுக்கும் புதன் அதிபதியாவார். அதனால் பிரிண்டின், மெடிக்கல் போன்ற துறையிலும், ஏஜென்ஸி கமிஷன் அடிப்படைத் தொழில் துறையிலும் ஈடுபடலாம். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வாசலைத் தேடிவந்து கதவைத் தட்டும். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது உங்கள் பொறுப்பு. 7ஆம் இடத்தை சனி, செவ்வாய், ராகு பார்ப்பதால், வாலிப வயதுடைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் காதல் திருமணம் நடக்க வாய்புண்டு. 7ஆம் இடத்தை 7க்குடைய குருவே பார்ப்பதால், அது பெற்றோர் அல்லது பெரியோர் அனுமதியுடன் நடக்கும் எனலாம். ஆரம்பத்தில் சில எதிர்ப்புகளும் குழப்பங்களும் காணப்பட்டாலும் முடிவில் முழு சம்மதத்துடன் நிறைவேறும்.
இந்த வருடம் முக்கியமான இரண்டு கிரப் பெயர்ச்சிகள் ஏற்படுகின்றன. 13/06/2014 குரு பெயர்ச்சி, மிதுன ராசியில் இருக்கும் ஜென்ம குரு 2ஆம் இடமான கடகத்தில் உச்சம் பெறுவார். 7, 10க்குடையவர் 2ல் உச்சம் பெறுவது 100க்கு 100 யோகமாகும். கடக குரு 6ஆம் இடத்தையும், 8ஆம் இடத்தையும், 10ஆம் இடத்தையும் பார்க்கப் போகிறார். 10க்குடையவரே 10ஆம் இடத்தைப் பார்ப்பது பலன் தான். அதனால் முன்னர் குறிப்பிட்டது போல தொழில் வளம் பெறும். நலம் பெறும் பலம் பெறும். கடகம் சந்திரன் ராசி, சந்திரன், சூரியன் ராஜ கிரகம். எனவே 10க்குடையவர் அங்கு இருப்பதால், அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அரசு வேலையில் இருப்போருக்கு உயர்வுண்டு. முன்னேற்றமுண்டு.
21/06/2013 ல் ராகு கேது பெயர்ச்சி துலாராசியில் நிற்கும் ராகு கன்னி ராசிக்கும், மேஷ ராசிலிருக்கும் கேது மீன ராசிக்கும் மாறுவார்கள். இந்த இரு ராசிகளும் மிதுனத்துக்கு கேந்திர ராசிகளாகும். ராகு 4ல், கேது 10ல். எனவே ராகு - கேது பெயர்ச்சிகளும் உங்களுக்கு அற்புதமான பலங்களைத் தரும். தேக ஆரோக்கியம் தாயன்பு கல்வி உயர்வு, பூமி, வீடு, வாகன சுகம் ஆகிய நன்மைகளையும், தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு, முயற்சிகளில் வெற்றி ஆகிய நன்மைகளையும் தரும். வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்!


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by krishnaamma on Thu Dec 12, 2013 6:44 pm

கடகம்
புனர்பூசம், 4ஆம் பாதம், பூசம் ஆயில்யம்

மிகுந்த பாசமும் ,உருகும் உள்ளமும்,கழுகைப் போல் கூரிய விழிப்புணர்வும் கொண்ட கடக ராசி அன்பர்களே
2014 ஆம் ஆண்டு கடக ராசிக்கு 6ஆவது ராசியான தனுசு ராசியிலும், 3ஆவது லக்னமான கன்னியா லக்னத்திலும், மூல நட்சத்திரத்திலும் பிறக்கிறது. 6ஆவது ராசி என்பதால் மத்திம பலன் என்று பயப்படவேண்டாம். வருட ராசினாதன் குரு கடகத்தில் தான் தனுசுவுக்கு 8ஆவது ராசியில்தான் உச்ச பலன் அடைவார். அது மட்டுமல்ல. கடக ராசி நாதன் சந்திரன் தனுசு ராசியில் நிற்கும் போது ஆங்கிலப் புது வருடம் பிறக்கிறது. மேலும் வருடம் பிறக்கும் காலம் தனுசு ராசி அதிபதி குருவும், உங்கள் ராசி அதிபதி சந்திரனும் சமசப்தம்மாக நின்று பார்த்துக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல. ஆங்கிலப் புது வருடம் கன்னியா லக்னத்தில் பிறக்க, அந்த லக்னாதிபதி புதனும் தனுசுவில் நின்று குருவால் பார்க்கப்படுவதோடு புதனும் குருவும் பரிவர்த்தனையாகவும் இருக்கிறார்கள். இது ஒரு அற்புதமான கிரக அமைப்பு.


6ஆம் இடம் என்பது 10ஆம் இடமான தொழில் ஸ்தானத்துக்கு பாக்கியஸ்தானம் ஆகும். எனவே இந்தப் புது வருடத்தில் உங்களுக்கு தொழில் முன்னேற்றமும் வளர்ச்சியும் உண்டாகும். படித்து முடித்து வேலை தேடி அலைவோருக்கும் இந்த ஆண்டு நல்ல வேலையில் இருப்போருக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் எதிர்பார்க்கலாம். கடக ராசிக்கு 8க்குடைய சனி உச்சம் பெற்று 10ஆம் இடத்தைப் பார்ப்பதால் சிலர் அரபு நாடுகளுக்குப் போய் வேலை பார்க்கலாம். கை நிறைய சம்பாதித்து சொந்த ஊரில் வீடு, மனை, பிளாட் வாங்கலாம். கடக ராசிக்கு 6ஆம் இடத்தை சனி, ராகு, குரு பார்ப்பதால், 4ஆம் பாவப் பலனுக்காக கடன் வாங்கலாம். 4ஆம் இடம் வாகனஸ்தானம். 4க்குடைய சுக்கிரன் வாகன காரகன். சுக்கிரனும் சனியும் பரிவர்த்தனை என்பதால் சிலர் 4 சக்கர வாகனம் வாங்கலாம்.
7க் குரிய சனி, ராகு சம்பந்தம் என்பதால் சிலருக்கு காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் நடக்க இடமுண்டு. 7க்கு குரிய வரை குரு பார்ப்பதால் பெற்றோர் சம்மதத்துடன் மேற்படி திருமணம் நடக்கும். குரு ஜூன் மாதம் கடக ராசிக்குமாறி உச்சம் அடையும்போது கடகத்துக்கு 7ஆம் இடத்தைப் பார்க்கும் காலம், காதல் திருமணத்தில் ஒருதலைக் காதலாக இருந்தால் காமோகர்ஷண ஹோமம் செய்து கொண்டால் முறையற்ற காதல் நிறைவேறாமல் போய்விடும்.
4ல் சனி, ராகு நிற்பதால், சிலர் கடந்த வருடத்தில் ஆரோக்கியக் குறைவையும் அறுமை சிகிச்சை போன்ற அவஸ்தைகளையும் தந்திருக்கலாம். செவ்வாய் - சனி பார்வைக்குப் பிறகு அன் நிலைமாறி முன்னேற்றமான திருப்பங்களைக் கொடுத்தாலும் புது வருடத்திலிருந்து 100க்கு 100 என்பதை விட 100க்கு 150 மடங்கு முழு சுகத்தையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்தும் என்பதை ஆணித்தரமாகச் சொல்லாம்.
நோய் குணமாகியும் ஓய்வில் இருக்கும் படியான சூழ் நிலையில் கட்டிப்போட்ட மாதிரி இருந்தவர்களுக்கு இந்த ஆங்கிலப் புது வருடத்தில் இருந்து சுதந்திரமாக உலா வருதலும் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் செயல்படுவதுமான சூழ் நிலை உண்டாகிவிடும். வெய்யில் அலையக் கூடாது. மழையில் நனையக் கூடாது. அசைவ உணவு சாப்பிடக் கூடாது. உப்பு, புளி, காரம் சேர்க்கக்கூடாது. என்றெல்லாம் கட்டுண்டு கிடந்தவர்கள் எல்லாம் கட்டுப்பாடுகளைக் களைந்து தூக்கியெறிந்துவிட்டு விருப்பப்பட்ட உணவுகளைச் சாப்பிடலாம்.
4ல் உள்ள சனி, ராகுவை வருட ராசி நாதன் குரு பார்ப்பதோடு, வருட லக்னமான கன்னி லக்னத்துக்கு 4ஆம் இடமான தனுசுவையும் மிதுன குரு பார்ப்பதே காரணம். அடுத்து ஜூன் மாதம் வருட லக்னத்துக்கு கன்னிக்கு 4க்குடைய குரு உங்கள் ராசியில் கடகத்தில் உச்சம் பெற்று 9ஆம் இடத்தைப் பார்க்கப் போவதும் ஒரு காரணம்.
7க்குடைய சனி 7க்கு 10ல் உச்சம் பெற, சுக்கிரனும் சனியும் பரிவர்த்தனையாக இருப்பதாலும், மனைவிக்கு வேலைவாய்ப்பும் அல்லது மனைவி பேரில் தொழில் யோகமும் உபரி வருடமானமும் ஏற்பட இடமுண்டு. ஏஜென்ஸி அடிப்படையில் அல்லது யந்திர சம்பந்தமான அல்லது நூல் ஆடை, அலங்கார சாதனங்கள் சம்பந்தப்பட்ட தொழில்கள் லாபகரமாக இருக்கும். படித்துப் பட்டம்பெற்ற மனைவிகளுக்கு அரசுப் பணி அல்லது தனியார் வேலை அமைய வாய்ப்புண்டு.
3க்குடைய புதன் கடகத்துக்கு 6ல் மறைந்து செவ்வாய், சனி, ராகு பார்வையைப் பெருவதால், உடன் பிறப்புகள் வகையில் ஒரு சிலருக்கு காரணமில்லாத கவலைகளும் பிரச்சனைகளும் ஏற்படலாம். என்றாலும் குருவும் புதனைப் பார்ப்பதோடு, புதனும் குருவும் பரிவர்த்தனை என்பதால், நீரடித்து நீர் விலகாது என்பதுபோல சங்கடங்களும் சஞ்சலங்களும் நீங்கிவிடும். சுக்கிரனும் சனியும் பரிவர்த்தனை புதனும் குருவும் பரிவர்த்தனை. ஒரு ஜாதகத்தில் ஆட்சி, உச்ச பலனைவிட பரிவர்த்தனை யோகம் பெறும் கிரகங்களுக்குத்தான் முழு யோகம் உண்டாகும். அதேபோல தர்மகர்மாதிபதி யோகத்துக்கும் அதினன்மை ஏற்படும்.
கடக ராசி நாதன் சந்திரனும், பாக்கியாதிபதியான குருவும் ஒருவருக்கொருவர் சமசப்தம கேந்திரத்தில் இருப்பதால் கெஜகேசரி யோகம் உண்டாகிறது. குருவும் சந்திரனும் சேர்ந்திருந்தால் குரு சந்திர யோகம். கேந்திரமாக இருந்தால் கெஜகேசரி யோகம். சந்திரன் 6லும் குரு 12லும் மறைவதால் மைனஸ் பாய்ண்ட் என்றாலும், சந்திரன் கடக ராசி நாதன் என்பதோடு, குரு கடக ராசிக்கு உச்சனாதன் என்பதால் இருவருக்கும் விதி விலக்கு உண்டு. ஆகவே மேலே சொன்ன யோகங்கள் எல்லாம் பிளஸ் பாயிண்டாக மாறிவிடும்.
நீண்ட காலம் நிலவிய குடும்பப் பிரச்சனைகள் எல்லாம் தீரும். கணவன் - மனைவி, பிள்ளைகள், உடன் பிறப்புகள், உற்றார் உறவினர்கள் வகையில் ஒற்றுனையும் உடன்பாடும், உதவிகளும் உண்டாகும். வீடு பத்திரப்பதிவு, மனை ஆரம்பம், கிரகப்பிரவேசம் போன்ற திட்டங்கள் வெற்றியடையும். வீட்டுக்குத் தேவையான ஆடம்பர, அலங்காரப் பொருட்கள் எல்லாம் வாங்கலாம். சிலர் உள்ளூரை விட்டு வெளியூரில் வாங்கியப் போட்ட காலிமனை பிளாட்டை நல்ல விலக்கு விற்றுவிட்டு உள்ளூரில் வேறு இடம் பரிவர்த்தனை செய்யலாம். அல்லது வாகனம் வாங்கலாம். நல்ல காரியங்கள் நிறைவேறும். மொத்தத்தில் இந்த வருடம் இனிய வருடமாக அமையும். இந்த வருடம் முக்கியமான இரண்டு கிரகப் பெயர்ச்சிகள் ஏற்படுகின்றன. 13/06/2014 குருப்பெயர்ச்சியும், 21/06/2014ல் ராகு கேது பெயர்ச்சியும் ஏற்படுகிறது.
இதுவரை கடக ராசிக்கு 12ல் மறைவதாக இருந்த குரு 13/06/2014ல் ஜென்ம ராசிக்கு உச்சமாக மாறுவார். 6, 9 க்குடையவர் ஜென்மத்தில் உச்சம் பெற்று 9ஆம் இடத்தைப் பார்க்கக்கூடும். அது பூர்வ புண்ணியஸ்தானம். 9க்குடையவரே 9ஆம் இடத்தை பார்ப்பது உன்னதம்! அதனால் குருவருளும் திருவருளும் பரிபூரணமாக விளங்கும். தெய்வானுகூலம் தேடிவரும். இதுவரை நீங்கள் செய்த பூஜாபலனும் பிரார்த்தனைகளும் ஜெப தபங்களும் இனிமேல் தான் வேலை செய்யப்போகிறது. இதுவரை உங்கள் வழிபாடு முனிவர்கள் தவம் இயற்றியதுக்குச் சமம். உங்கள் தவத்தை மெச்சி தெய்வம் நேரில் தோன்றி நீங்கள் கேட்டும் வரத்தைக் கொடுப்பதுபோல, இனி நீங்கள் விரும்பியதும் வேண்டியதும் கிடைக்கும். நியாயமான ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.
அடுத்து கடக குரு 5ஆம் இடத்தையும், 7ஆம் இடத்தையும் பார்க்கப்போவதால், திருமணம், புத்திர பாக்யம் போன்ற நன்மைகளும் நல்லதும் நடக்கும். ஏற்கனவே திருமணம்மகி பிள்ளைகளைப் பெறெடுத்தவர்களும் மனைவி - மக்கள் எதிர்காலத்துக்காக இன்சூரன்ஸ் பண்ணுவது பிக்சட் டெபாசிட் சேமிப்பது போன்ற வைப்பு நிதி முதலீடுகள் செய்யும்படி அமையும். 9ஆம் இடம் என்பது திருகோணஸ்தானம், அதற்குடைய குரு 5, 9 என்ற திருகோணத்தைப் பார்ப்பதால் எல்லாம் நலம் எல்லாம் வளம் எல்லாம் இன்பமயம்.
குரு திருகோணத்தில் பலம் என்பது போல சனி கேந்திரத்தில் பலம். சனி கடக ராசிக்கு 4ஆம் இடம் கேந்திரத்தில் பலம் பெற்று லக்ன கேந்திரத்தையும், தசம கேந்திரத்தையும் பார்ப்பதால், உங்கள் ஆற்றலும் திறமையும் பளிச்சிடும். வெளிப்படும். ஊரும் உலகமும் நண்பர்களும் மற்றவர்களும் உங்கள் திறமையை கண்டு வியந்து போற்றிப் புகழ்வார்கள்.
உங்கள் தொழில் துறையில் நீங்களும் புகழ்பெறலாம்.
10ல் கேது இருப்பதால் ஆன்மிகம், ஜோதிடம், மருத்துவத் துறையிலும் பிரகாசிக்கலாம். 10ஆம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் கட்டட காண்ராக்ட் தொழில் துறையில் மேன்மையடையலாம். அல்லது ஹோட்டல் அக்னி சம்பந்தமான தொழில் ஆரம்பித்து பிரபலம் அடையலாம். சனியும், ராகுவும் 10ஆம் இடத்தை பார்ப்பதால் கம்பியூட்டர், டிராவல்ஸ், யந்திர சாதன இரும்புத்தொழில் வகையிலும் பேர் எடுக்கலாம். லாபம் தேடலாம்.

21/06/2014ல் துலா ராகு கன்னியிலும் மேஷ கெது மீனத்திலும் மாறுவார்கள். 3ஆம் இடம் ராகுவுக்கு யோகமான இடம். 9ஆம் இடம் மீனம். அந்த பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வரும் கெது அந்த வீட்டுக்குடைய குருபார்வையைப் பெறுவது விசேஷம். முன்னரே சொன்ன மாதிரி, ஆன்மிக ஈடுபாடும் ஆன்மிகத் தொண்டும் தொடரும். சிலர் அறனிலையத் துறையில் தர்மகர்த்தா பதவி, ஆன்மிகத் தொண்டர் பணி, ஆலயத் திருப்பணி குழுவின் பொறுப்பு ஏற்கலாம். சகோதர சகாயம், முஸ்லீம் நண்பர்களின் நட்பு, உதவி போன்ற நன்மைகளையும் 3ஆம் இடத்து ராகு தருவார். இஸ்லாமிய ஜாதகர்கள் வக்ப் போர்டில் முக்கிய பொறுப்புகள் ஏற்கலாம். வாழ்த்துகள்

வாழ்க வளமுடன்!


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by krishnaamma on Thu Dec 12, 2013 6:44 pm

சிம்மம்

மகம்,பூரம், உத்திரம் 1ஆம் பாதம்

புதிய கருத்துக்களுக்கு வரவேற்பு அளிப்பதோடு,பழைய மரபு களை மறக்காமல் மதிப்பளிக்கின்ற சிம்ம ராசி அன்பர்களே !
2014ஆம் ஆண்டு சிம்ம ராசிக்கு 5ஆவது ராசியான தனுசு ராசியிலும், 2ஆவது லக்னமான கன்னி லக்னத்திலும் மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. அதனால் இந்த வருடம் உங்களுக்கு இனிய வருடமாகத் திகழும். வருடம் பிறப்பது மூல நட்சத்திரத்தில் அதற்கு ஜென்மம், அனுஜென்மம், திரிஜென்ம நட்சத்திரம் என்பது மூலம், அஸ்வின், மகம் ஆகும். ஆகவே வருட நட்சத்திரத்தில் இருந்து திரிஜென்ம நட்சத்திரமான மகம் உங்கள் ராசியில் அடங்குவதால், வருடப் பிறப்பு உங்களுக்கு யோகமாகவே அமையும். உங்களுடைய ஆற்றல் பிரகாசிக்கும். தோற்றம் மிளிரும். திறமை வெளிப்படும். பெருமை சேரும். செய்யும் காரியங்களிலும் முயற்சிகளிலும் சீரும் சிறப்பும் உண்டாகும். செல்வாக்கு ஏற்படும். பட்ட பாட்டுக்கு பலனும் பாராட்டும் கிடைக்கும்.
சிம்ம ராசிக்கு 2ஆவது தன ஸ்தான லக்னத்தில் ஆங்கிலப் புதுவருடம் பிறப்பதால், இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்குப் பொருளாதாரத்தில் எந்தக் குறையும் இருக்காது. வாக்கு வன்மையும், வாக்கு நாணயமும் சிறப்பாக இருக்கும். சொல்வாக்கு, செல்வாக்கு அடையும். 2ஆம் இடம் வாக்கு, தனம், குடும்பம், நேந்திரம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். வாக்கு மேலோங்குவதுபோல, குடும்பத்திலும் அமைதி, ஆனந்தம், மகிழிச்சி, மன நிறைவு ஆகிய பலங்கள் உண்டாகும். சிம்ம ராசிக்கு 5,8க்குடைய குரு 11ல் நிற்கிறார். 5ஆம் இடத்தையே பார்க்கிறார். 2ஆம் இடத்துக்கு 10ல் குரு இருக்கிறார். ஜூன் மாதம் குரு மாறும்போது ராசிக்கு 12ல் உச்சம் பெறுவார். 2ஆம் இடத்துக்கும் வருட லக்னத்துக்கும் 11ல் உச்சம் பெறுவார். எனவே தொடர்ந்து பொருளாதாரத்திலும் வரவு செலவிலும் தன்னிறைவு எதிர்பார்க்கலாம். பற்றாக்குறைக்கு இடமிருக்காது. தாராளமான வரவுசெலவும் இருக்கும்.
சிம்ம ராசிக்கு 7 1/2 சனி விலகிவிட்டது. கடந்த 7 1/2 சனியில் கருத்து வேறுபட்டாலும், ஒருவரைஒருவர் புரிந்து கொள்ளாமலும், ஈகோ உணர்வாலும், கணவன் மனைவிக்குள் விவகாரம், இடைக்காலப் பிரிவு, ஒரு வீட்டுக்குள் இருந்தாலும் பேச்சுவார்த்தை இல்லாமல் மௌனப் பிரட்சி என்று சங்கடப்பட்டவர்கள், இப்பொழுது ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு சேர்ந்து வாழலாம். ஈகோ உணர்வு மாறி ஈகை உணர்வோடு சேர்ந்து வாழலாம்.
5க்குடைய குரு 5ஆம் இடத்தையே பார்ப்பதால் வாரிசு யோகம் உண்டாகும். ஏற்கனவே பெண் வாரிசு இருப்பவர்களுக்கு இனி ஆண் வாரிசு யோகம் உண்டாகும். வாரிசு உள்ளவர்களுக்கு அவர்களின் ஆயுள், ஆரோக்கியம், படிப்பு, வேலை, சம்பாத்தியம் போன்ற எதிர்கால முன்னேற்றத்துக்காக ஆக்கப் பூர்வமான வழிமுறைகள் தென்படும். அடுத்து ஜூன் மாதம் குருப் பெயர்ச்சி. மிதுன குரு கடகத்தில் உச்சம் அடையும் காலம் 5ஆம் இடம் தனுசுக்கு 8ல் மறைவதால் யோகம் பாதிக்குமோ என்று சந்தேகப்பட வேண்டாம். ஏனென்றால் புத்திரகாரகனும் புத்திர ஸ்தானாதிபதியுமான குரு உச்சம் பெறுவதால் அனுகூலமான பலன் தான் நடக்கும். 5க்கு 8ல் சிம்ம ராசிக்கு 12ல் குரு உச்சம் அடைவதால் பிள்ளைகள் வகையில் சுப விரயச் செலவுகள் உண்டாகும். என்பது பலன்.
பருவ வயதடைந்த பிள்ளைகளுக்கு திருமணம், புத்திர பாக்கியம் சம்பந்தப்பட்ட பலங்களுக்கும், படிக்கும் பிள்ளைகளுக்கு படிப்பு சம்பந்தமான சுபச் செலவுகளும், படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புச் செலவுகளும் ஏற்படலாம். சிலர் படிப்புக்காக அல்லது வேலைக்காக வெளி நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். அதுவும் சுபச் செலவுதான்.
3ஆம் இடத்தை குரு பார்ப்பதால் சகோதர சகோதரி வகையில் அனுகூலம் ஆதரவும் எதிர்பார்க்கலாம். அதேபோல நண்பர்கள் வகையிலும் உதவியும் ஒத்தாசையும் எதிர்பார்க்கலாம். 3என்பது நட்பு ஸ்தானம். அங்கு சனி இருப்பதால், 3என்பது நட்பு ஸ்தானம். அங்கு சனி இருப்பதால் நாடார் அல்லது கிறிஸ்தவ நண்பர்கள் தொடர்பும், ராகு இருப்பதால் முஸ்லிம் நண்பர்கள் தொடர்பும் உண்டாகும். அவர்களால் நன்மையும் உண்டாகும். சிம்ம ராசிக்கு 7க்குடைய சனி 3ல் உச்சம் அடைவதோடு அந்த வீட்டுக்குடைய சுக்கிரனும் சனியும் பரிவர்த்தனையாக இருப்பதால், மனைவி வகையில் சிலருக்கு கடன் உதவியும் அல்லது தொழில் வாய்ப்பும் உருவாகலாம்.
4,9 க்குடைய செவ்வாய், சிம்மராசிக்கு 2ல் இருப்பதால் தாய் தந்தையரால் சிலருக்கு நன்மைகள், உதவிகள் உண்டாகும். தாய்வழிச் சொத்து அல்லது தந்தைவழிச் சொத்துகள் கிடைக்கவும் அமைப்பு உண்டாகும். 9என்பது பூர்வ புண்ணிய பாக்கியஸ்தானம். அங்கு கேது நிறக், அதர்கு சனி ராகு பார்வையும் செவ்வாயின் பார்வையும் கிடைப்பதால் சிலருக்கு ஆன்மிகம், ஜோதிடம், வைத்தியம், மாந்திரீகம் போன்ற துறையில் ஆர்வம் ஏற்படலாம்.
சிம்ம ராசிக்கு 10க்குடைய சுக்கிரன் 10ஆம் இடத்துக்கு பாக்கியஸ்தானத்திலும் ராசிக்கு 6ஆம் இடத்திலும் இருப்பதால் தொழில் சம்பந்தமாக சிலர் கடன் வாங்கி தொழில் விருத்தி செய்யலாம் அல்லது புதிய தொழில் தொடங்கலாம். சிலர் போட்டி, பொறாமைகளையும் சந்தித்து சமாளிக்க வேண்டும். 6ஆம் இடம் கடன், எதிரி போட்டியைக் குறிக்கும் இடமல்லவா! இந்த வருஅத்தில் குரு பெயர்ச்சியும் ராகு கேது பெயர்ச்சியும் வருகிறது. குருப்பெயர்ச்சி 13/06/2014ல் மிதுனத்திலிருந்து கடகத்துக்கு குரு மாறுவார். கடகம் சிம்ம ராசிக்கு 12ஆம் இடம். அங்கு குரு வருவது ஒரு வகையில் கெடுதல்.
அதனால் சிம்ம ராசிக்காரர்களின் பதவி, வேலை, உத்தியோகத்தில் சிக்கலும் பிரச்சனையும் உண்டாகலாம். சிம்ம ராசிக்கு 5, 8க்குடைய குரு 5ஆம் இடத்துக்கு 8ல் மறைவு. ராசிக்கும் 12ல் மறைவு. 8ஆம் இடத்துக்கு திருகோணம் என்பதோடு 8ஆம் இடம் மீனத்தையும் 9ஆம் பார்வை பார்க்கிறார். அதனால் கௌரவப் போராட்டம் ஏற்படலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் வழக்கு விவகாரங்களில் தோல்வி, ஏமாற்றம், இழப்பு, நஷ்டம் ஏற்படலாம். கவலையும் கலக்கமும் உண்டாகலாம். நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்று எதிர்மறைப் பலனை சந்திக்கலாம்.
கடக குரு உச்சமாக இருந்து சிம்ம ராசிக்கு 4ஆம் இடத்தையும், 6ஆம் இடத்தையும், 8ஆம் இடத்தையும் பார்க்கக்கூடும். 4ஐ பார்ப்பதால் தேக ஆரோக்கியத்தில் தெளிவும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். படிப்பில் தடை இருக்காது. மேற்படிப்பு முயற்சிகளும் கைகூடும். 6ஆம் இடம் 8ஆம் இடத்தைப் பார்ப்பதால் கவலை, கடன், போட்டி, பொறாம, எதிர்ப்பு இடையூறுகளும் அதனால் பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும்.

வாழ்க வளமுடன்!


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by krishnaamma on Thu Dec 12, 2013 6:45 pm

கன்னி ராசி


உத்திரம் 2,3,4ஆம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2, ஆம் பாதம்


வாழ்க்கையில் நெளிவுசுழிவுகளைத் தெளிவாக அறிந்து வைத்திருக்கின்ற கன்னி ராசி அன்பர்களே!
ஆங்கிலப் புதுவருடம் 2014 ஆம் ஆண்டு உங்களுடைய ராசியில் பிறக்கிறது. கன்னி லக்னம், மூல நட்சத்திரம், தனுசு ராசியில் ஆங்கில புதுவருடப் பிறப்பு. உங்கள் ராசியில் லக்னமும், 4ஆவது ராசியில் வருட ராசியும் அமைவதால், இந்த வருடம் உங்களுக்கு பெருமை, புகழ், கௌரவம், கீர்த்தி, அந்தஸ்து எல்லாம் மிகச் சிறப்பாக இருக்கும். கடந்த வருடம் 7 1/2 சனிச் காரணமாக உடல் ஆரோக்கியக் குறைவும் வைத்தியச் செலவும், சில பேருக்கு அறுவை சிகிச்சை போன்ற சங்கடங்களும் ஏற்பட்டிருக்கலாம். இந்த வருடத் தொடக்கத்தில் இருந்தே பூரண சுகமும் ஆரோக்கியமும் மனதில் உற்சாகமும் உருவாகும். ஆஸ்பத்திரி சிகிச்சை என்ற நடுக்கம் அறவே தீர்ந்துவிடும்.
4ஆம் இடம் சுகத்தை மட்டுமல்ல தாயார், கல்வி, பூமி, வீடு, வாகனம் போன்றவற்றையும் குறிக்கும் இடம். அந்த வீட்டுக்குடைய குரு உங்கள் ராசிக்கும் வருட லக்னத்துக்கும் 10ல் நின்று 4ஆம் இடத்தைப் பார்ப்பது சிறப்பு. எனவே கோழிக்கூண்டு மாதிரி குறுகிய வீட்டில் அவதிப்பட்டவர்களுக்கு, இவ்வருடம் கோவில் மாதிரி அற்புத வீடு, பங்களாவே அமையும். சிலர் சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம்.
4க்குடையவர் 10ல் நிற்பதால் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறவர்களுக்கு இந்த ஆண்டு முதல் தொழில் விருத்தியும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். அரசாங்க சட்ட திட்டதாலும், பத்திரப்பதிவு கட்டண உயர்வாலும் ரியல் எஸ்டேட் தொழில் கடந்த 2 ஆண்டு காலமாக சரியில்லை. ஒரு சிலர் நகைகளை அடகு வைத்து வெளியில் கடன் வாங்கி ஒரு சில இடங்களை கிரயம் முடித்து ப்ளாட் போட்டிருக்கலாம். அது வேகமாக விற்பனையாகாமல் முடங்கிக் கிடப்பதால் வட்டி நட்டம், கையிருப்பு நட்டம் என்று பாதிக்கப்பட்டிருக்கலாம். அந்த கஷ்டம் எல்லாம் இந்த ஆண்டுமுதல் தீர்வுக்கு வந்து விடும். வீடு, மனை புரோக்கர்களுக்கும் தொழில் யோகம், தனயோகம் உண்டாகும்.
படிக்கும் மாணவர்களுக்கு கடந்த காலம் 7 1/2 சனியின் பிடியால் மறதி, மந்தப்போக்கு, பாடப்பகுதியில் அரியர்ஸ் என்று தேக்கத்தைச் சந்தித்து ஊக்கத்தை இழந்தவர்களுக்கும் 2014 மாறுதலையும் ஆறுதலையும் தேறுதலையும் தரும். படிப்பை பூர்த்தி செய்வதோடு மேற்படிப்பையும் தொடரலாம். படித்துப் பட்டம் பெற்றும் அடுத்து நல்ல வேலை, நல்ல சம்பளம் இல்லாமல் மன உளைச்சலில் தினமும் கலங்கியவர்களுக்கும் 2014ல் நல்ல வேலை, நல்ல சம்பளம் அமையும். ஒரு சிலர் வெளி நாட்டு வேலைக்கும் போய் சம்பாதிக்கலாம். பெற்றவர்கள் பட்ட கடனையும் அடைத்து உதவலாம். கடந்த வருடம் கரண்டு கட், நல்ல பணியாள் இல்லாத சூழ்னிலை, பணப்பற்றாக்குறை போன்ற காரணங்களினால் தொழில்துறையில் ஏமாற்றம், இழப்பு, கை நஷ்டம் என்று கலங்கியவர்களுக்கும் 2014 கைகொடுத்து தூக்கிவிடும். கவலையையும் கண்ணீரையும் துடைக்கும். சிலர் அரசு உதவியோடும் தனியார் நிதியுதவியோடும் புதிய தொழில் ஆரம்பித்து திருப்தியாகச் செயல்படலாம்.
7க்குடையவர் 10ல் இருப்பதால் வேலை தேடி முயற்சிக்கும் மனைவிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அல்லது மனைவி பெயரில் தொழில் செய்யலாம். பெண்கள் ஜாதகமாக இருந்தால், 7 கணவர் ஸ்தானம் என்பதால் கணவருக்குப் பதவி உயர்வு யோகம் அமையும். அல்லது அடிமை வேலையை உதறித் தள்ளிவிட்டு சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாம். முதலீடு பற்றாக்குறையைச் சமாளிக்க கூட்டுச் சேரலாம். ஏற்கனவே பணியில் இருக்கும் மனவிக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும். விரும்பிய இடப்பெயர்ச்சியும் ஏற்படும்.
2ஆம் இடத்தில் சனியும் ராகுவும் சேர்க்கை என்பதோடு சனியும் சுக்கிரனும் பரிவர்த்தனையாக இருப்பதால், அவ்வப்போது குடும்பத்தில் சலசலப்புகளும் ஈகோ உணர்வால் வறட்டு கௌரவப் பிரச்சனைகளும் உண்டாகலாம். சில சமயம் கலகலப்புகள் மறைந்து கவலைகள் நிலவும். அம்மாதிரி சந்தர்ப்பங்களில் குடும்பத்தில் உள்ளவர்களின் கருத்துகள் மாறுபட்ட மனோ நிலையில் இருக்கும் சமயம், நீங்கள் மௌனத்தை கடைப்பிடித்தால் மோனம் கலகனாஸ்தி என்று தீர்வாகிவிடும். குரு பார்வை இருப்பதால் ஓரளவு பிரச்சனைகள் கடுமையாக இருக்காது.
2ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் பொருளாதாரத்தில் சரளமான பணப்புழக்கமும், வாக்கு நாணயம் காப்பாற்ற்ப்படுதலும், சொல்லுவதைச் செய்வதும் செய்வதைச் சொல்லுவதுமான பலங்களும் நடக்கும். குடும்பச் சூழ்னிலைஉய்லும் சில சமயம் பனிப்போர் நடந்தாலும் உடனே அது சமரசமாகி விடும்.
குரு வக்கிரம் : 24-10-2013 முதல் 20-02-2014 வரை இந்த காலம் சற்று கவனமாக இருக்க வேண்டும்
உங்கள் ஜாதகத்தில் தாசபுத்தி சரியாக இருந்தால் நான்றாக இருக்கும் ,
தட்சிணாமூர்த்தியை வியாழன் தேறும் வழிபாடு செய்ய வேண்டும் , தினமும் 108 முறை சிவாய நமக என்று செல்லவும்

குருப்பெயர்ச்சி : 13-0-2014 இல் நடக்கிறது மிகவும் அருமையான காலம் பல வெற்றிகள் கிடைக்கும் ,
திருமணம் கண்டிப்பாக நடக்கும் , புத்திர பக்கியம் கிடைக்கும் , எதிர்பர்ப்பது நடக்கும்

ராகு கேது பெயர்ச்சி :
21-06-2014 இதனால் சில குடும்ப பிரச்சனைகள் வரும் . குடும்பத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும் , கணவன் மனைவிக்குள் சில பிரச்சனைகள் வரலாம்
துர்க்கை அம்மன் வழிபடு அவசியம்

வாழ்க வளமுடன்!


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by பாலாஜி on Thu Dec 12, 2013 6:45 pm

என் ராசி வரும் பொழுது படித்துகொள்கின்றேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by krishnaamma on Thu Dec 12, 2013 6:46 pm

துலாம் ராசி

சித்திரை 3,4-ஆம் பாதம், சுவாதி , விசாகம் 1,2,3, ஆம் பாதம்


ஒருவரை பார்த்த உடன் அவரின் குணநுனுக்கங்களை அறிந்து கொள்ளும் திறமையுள்ள துலாராசி அன்பர்களே !

ஆங்கிலப் புதுவருடம் 2014 ஆம் ஆண்டு துலா ராசிக்கு 3ஆவது இடம் தனுசு ராசியிலும் 12ஆவது இடம் கன்னி லக்னத்திலும் பிறக்கிறது. 2014 ஆம் வருட ராசி நாதன் குரு உங்கள் ராசிக்கு 9ல் நின்று உங்கள் ராசியைப் பார்ப்பதால் செல்வாக்கும் சொல்வாக்கும் குறையாது. திட்டமிட்ட செயல்களைத் திருப்திகரமாக செயல்படுத்தலாம். இவ்வருடம் எங்கேங்கும் வெற்றி எதிலும் வெற்றி தங்கு தடையில்லாமல் தன்னிகரில்லாத வெற்றி என்று வெற்றி கீதம் இசைக்கலாம்.
3ஆம் இடம் தைரிய ஸ்தானம், சகாய ஸ்தானம், நட்பு ஸ்தானம், சகோதர ஸ்தானம். அப்படிப்பட்ட 3ஆவது ராசியில் புதுவருடம் பிறப்பதோடு, அந்த ராசி நாதனே உங்கள் ஜென்ம ராசியைப் பார்ப்பது விசேஷம்தான். ஆறு மாதம் கழித்து குரு 10ஆம் இடமான கடகத்துக்கு மாறுவார். மாறுனாலும் உச்சபலம் அடைவதால் வருடம் முழுக்க முழுக்க அந்த யோகமும் வெற்றியும் தொடரும்.
நண்பர்களின் ஆதரவும், உடன் பிறந்தோரின் ஒத்துழைப்பும் உங்களுக்கு மன தைரியத்தையும் துணிவையும் தரும். 9ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். பூர்விக சொத்து களைக் குறிக்கும் ஸ்தானம். துலா ராசிக்கு 6க்குடைய குரு 9ல் நிற்பதால், பூர்வீக சொத்து பங்குபாகங்களில் சகோதரிகளும் உரிமை கொண்டாடலாம். ஏற்கனவே அவர்கள் திருமண காலத்திலேயே பொன்னாபரண்ங்கள், பண்டம் பாத்திரம்,
சீர்வரிசை என்று சிறப்பாக செய்து விட்டபடியால், இனி இருக்கும் சொத்துகளில் பெண்பிள்ளைகள் உரிமை கொண்டாட முடியாது.கொண்டாடக்கூடாது என்று நீங்கள் கோரிக்கை வைக்கலாம். இருந்தாலும் அது செயல்படுமா என்பது அன்னையின்விருப்படியே நடக்கலாம்.
அப்படியே பஞ்சாயத்து செய்து ஏதோ பேருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து சமாதானப்படித்தலாம். ராஜபாளையம் தெங்காசிப் பாதையில் வாசுதே நல்லூரிலிருந்து 5 கிலோமீட்டரில் தாருகாபுரம் உள்ளது. பஞ்சபூதத் தலங்களில் அது நீர் ஸ்தலம். சுவாமி மத்தியஸ்தனாதர். அம்பாள் அகிலாண்டேஸ்வரி. இவரை வழிபடுவதால் நவகிரகங்களும் அனுகிரகங்களாக பஞ்சாயத்து விவகாரத்திலும் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு உண்டாகும்.
12ஆவது விரய ஸ்தானத்தில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால், இந்த வருடம் தவிர்க்க முடியாத செலவுகளும் ஏற்படும். என்றாலும் அவை சுபங்களச் செலவுகளாகவே அமையும். ராசியில் யோககாதிபதியான சனி உச்சம் பெறுவதாலும், 2,7 க்குடைய செவ்வாய் கன்னியா லக்னாத்தில் இருப்பதாலும் குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகமும், வாரிசு வேண்டுவோருக்கு வாரிசு யோகமும் உண்டாகும். 9க்குடைய புதனும் 3க்குடைய புதனும் பரிவர்த்தனையாக இருப்பதும் ஒரு காரணம்.
துலா ராசி நாதன் சுக்கிரன் 4ல் அமர்ந்து 10ஆம் இடம் கடகத்தைப் பார்க்கிறார். ஜென்ம ராசியில் உச்சம், பெற்ற சனியும் 10ஆம் இடத்தைப் பார்க்கிறார். ஜென்ம ராசியில் உச்சம் பெற்ற சனியும் 10ஆம் இடத்தைப் பார்க்கிறார்.சனி ராஜயோகாதிபதியாவார். பிள்ளைகளைப் பெற்றொர், பிள்ளைகளினால் பெருமையும் அடையலாம். படிப்பு, விளையாட்டு, கலைத்துறை, பேச்சுப்போட்டி, எழுத்துபோட்டி என்று உங்கள் பிள்ளைகள் சாதனை படைத்து பேரும்புகழும் பரிசும் வாங்குவது உங்களுக்கு பெருமைதானே!
2014ல் பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் பெருமை சேரும். உங்களைவிட புகழ்பெறும் பாக்கியம் உங்கள் மக்களுக்கு உண்டு. 5க்குடைய சனி உச்சம் பெற்று, அவரையும் 5ஆம் இடத்தையும் 9ஆம் இடத்தில் உள்ள குரு பார்த்த பெருமை அதுதான். ஒருசில பிள்ளைகளினால் பெற்றவர்கள் அடையும் வேதனையும் வடிக்கும் கண்ணீரும் சொல்லி முடியாது. இப்படிப்பட்ட பிள்ளை இருப்பதை விட இறப்பதே மேல் என்று நினைக்கத் தோன்றும். 5க்குடையவர் நீசமாகி 5ல் பாபகிரக சம்பந்தம் இருக்கும் பெற்றோர் ஜாதகம் அப்படித்தான் அமையும். இப்படிச் சொன்னப்படி கேட்காத பிள்ளைகள் திருந்துவதற்கு என்ன பரிகாரம் என்றால், 21 ஞாயிற்றுக்கிழமை காலை 6மணி முதல் 7 மணிக்குள் சூரிய ஓரையில், நந்தி சன்னிதியில் நெய் விளக்கு ஏற்றி பிரார்த்திக்க வேண்டும்.
இந்த வருடம் குரு, ராகு, கேது, சனி ஆகிய 3 கிரகப் பெயர்ச்சிகள் ஏற்படும். ஜூன் மாதம் 13ஆம் தேதி குருப்பெயர்ச்சியும், ஜூன் மாதம் 21ல் ராகு - கேது பெயர்ச்சியும் ஏற்படும். ஆனால் சனிப்பெயர்ச்சி டிசம்பர் 16ல் வருவதால் அதன் பலனை 2015ல் விரிவாக காணலாம். 13/06/2014ல் மிதுன குரு கடகத்துக்கு மாறுவார். அதாவது துலா ராசிக்கு 9ல் இருந்து 10ஆம் இடத்துக்கு மாறுவார். 9ஆம் இடத்தைவிட 10ஆம் இடம் சர்வசாதாரண இடம் தான். 10ஆம் இடத்து குரு பதிமாறச் செய்யும் என்பார்கள். ஆனால் குரு கடகத்தில் உச்சம் பெற்று துலா ராசிக்கு 2ஆம் இடத்தையும், 4ஆம் இடத்தையும், 6ஆம் இடத்தையும் பார்க்கப் போவதால், பாதிப்புக்கு இடமில்லை. மேலும் 10ஆம் இடத்துக்கு குரு பாக்கியாதிபதி என்பதால் தொழில் கெடாது. வியாபாரம் விருத்தியடையும். புதிய வேலைவாய்ப்பும் உண்டாகும். 4ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தேக ஆரோக்கியமும் சௌக்கியமும் உண்டாகும். சிலருக்கு வாகன பரிவர்த்தனை யோகம் உண்டாகும். சிலருக்கு பூமி, வீடு, வாகன யோகம் அமையும். சிலருக்கு தாய்வழிச் சொத்து கிடைக்கும். சிலருக்கு வேலை பார்க்கும் மனவி பேரில் கடன் வாங்கி புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யும் யோகம் உண்டாகும்.
இன்னும் சிலர் ஒரு வட்டிக்கு வாங்கி 2வட்டிக்கு தாங்களே கையிலிருந்து கடனை அடைத்து நஷ்டப்பட்டது உண்டு. அப்படிப் பட்டவர்களுக்கு கடகத்தில் உச்சம் பெறும் குருவை ஜென்மத்தில் உச்சம் பெறும் சனி பார்ப்பதால், திடீர் தனப்ராப்தி யோகம் அமையும். பொதுவாக உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுக்கச் செய்யும் என்பது பழமொழி. ஆனால் சனியோடு ராகு - கேது சம்பந்தம் பெறுவதால் மேற்கண்ட விதிக்கு விதி விலக்கு ஆகும். கெட்டவன் கெட்டிடில் கிட்டும் யோகம். ஜூன் 21ஆம் தேதி ராகு - கேது பெயர்ச்சிக்குப் பிறகும் அந்த யோகம் தொடரும். கேதுவை குரு பார்க்கவும், குருவை ராகு பார்க்கவும் ஒரு அமைப்பு ஏற்படும்.
21ஆம் தேதி ராகு - கேது பெயர்ச்சி துலா ராசிக்கு ஜென்மத்தில் நின்ற ராகு 12ஆம் இடத்துக்கு மாறுவார். 7ஆம் இடத்தில் நின்ற கேது துலாராசிக்கு 6ல் மாறுவார். பாபகிரகங்கள் பாப ஸ்தானத்தில் நிற்பது யோக பலனாகும். கடந்த காலத்தில் கணவன் - மனவிக்குள் கருத்து வேறுபாடும் சண்டையும் சச்சரவுமாக சஞ்சலப்பட்டவர்கள் உண்டு. அதிலும் வருமானம் உள்ள மனைவி - வருமானம் இல்லாத கணவரை அலட்சியப்படுத்துவதால் கணவருக்கு கௌரவப் பிரச்சனையாகி, அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வெறுத்துப் போயிருப்பார்கள். இந்த ராகு - கேது பெயர்ச்சி. அந்த மாதிரி குடும்பத்தில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும். அதாவது கணவருக்கு எப்படியாவது வருமானம் ஏற்பட்டு வைராக்கியமும் தெம்பும் உண்டாகிவிடும். அதனால் மனைவிகளும் கணவனுக்குரிய மரியாதையையும் கொடுத்துவிடுவார்கள்.
20/02/2014 வரை குரு வருடத் தொடக்கத்தில் வக்ரமாக இருப்பார். அடுத்து 2014 கடைசியில் நவம்பர் 27 முதல் குரு வக்ரம் அடைவார். பிப்ரவரி வரை குரு வக்ரமாக இருக்கும் காலம் மிதுனத்தில் இருப்பார். துலாராசிக்கு 9ல் வக்ரம் என்பது யோகம். தகப்பனார், பூர்வ புண்ணியம் வலுப்பெறும் காலம். தெய்வானுகூலம் தேடிவரும். குருவளும் திருவளும் பெருகும். நவம்பரில் குரு வக்ரம் அடையும்பொழுது துலா ராசிக்கு 10ல் குரு உச்சமாக இருப்பார். அதுவும் நன்மையான காலமே! தொழில் உயர்வு, மேனமை, பிரகாசம் ஏற்படும். கடகம் சந்திரன் ராசி! சந்திரன் மானில அரசு கிரகம். சூரியன் மத்திய அரசு கிரகம். எனவே அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு, விரும்பிய இடப்பெயர்ச்சி ஏற்பட இடமுண்டு. தொழில் துறையில் மாற்றம் இல்லாதவர்களுக்கு குடியிருப்பில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றம் முன்னேற்றமான மாற்றமாக அமையும்.
`2014 ஜூலை முதல் ஒரு மாத காலம் குரு அஸ்தமனமாக இருப்பார். குரு வக்ரம் அடையலாம். ஆனால் நீசமாகக்கூடாது. அஸ்தமனம் அடையக்கூடாது. அதனால் எந்த இடத்தில் இருக்கிறாரோ எந்த இடத்தைப் பார்க்கிறாரோ அவற்றில் எல்லாம் பிரச்சனைதான். அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் குரு பரிகார பூஜை செய்ய வேண்டும். திருவண்ணாமையிலிருந்து போளூர் போகும் பாதையில் கலசப்பாக்கத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் பூண்டி என்னும் ஊர் இருக்கிறது. அங்கு பூண்டிசாமி ஜீவசமாதி சென்று வழிபடவும். நவகிரகங்களின் தோஷங்கள் சித்தர்களின் ஜீவசமாதி சென்றுதான் போக்க வேண்டும். வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்!


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by krishnaamma on Thu Dec 12, 2013 6:46 pm

விருச்சிகம்

விசாகம் 4 ஆம் பாதம் அனுஷம் கேட்டை

நுணுக்கமான அறிவும் நுட்பத்திறனும் வல்லமை பெருமையும் கொண்ட
விருச்சிக ராசி அன்பர்களே !
ஆங்கிலப் புதுவருடம் 2014 ஆம் ஆண்டு உங்களுடைய விருச்சிக ராசிக்கு 2ஆவது ராசியான தனுசு ராசியிலும், 11ஆவது இடமான கன்னியா லக்னத்திலும் உதயமாகிறது. ஆங்கிலப் புதுவருடம் மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. என்வே இந்தப் புதுவருடம் உங்களுக்கு எல்லா வகையிலும் ஏற்றமும் பெருமையும் உடைய வருடமாக இருக்கும் என்பதில் எந்த வகையிலும் சந்தேகமே இல்லை. கடந்த வருடத்தில் அனுபவித்த விரயம், ஏமாற்றம், இழப்பு, நஷ்டம் எல்லாம் இந்த வருடத்தில் நிவர்த்தியாகிவிடும். வட்டியும் முதலுமாக சம்பாதித்து, சேமித்து பொருளாதாரப் பற்றாகுறையை நெருக்கடியைச் சரிக்கட்டிவிடலாம். தனகாரகனும் தனாதிபதியுமான குரு 8ல் மறைந்தாலும், தனது ஸ்தானத்தை பார்ப்பதால் எதிர்பாராத தனப்ராப்திக்கும் இடமுண்டு. உங்களுக்கு வரவேண்டிய அல்லது உங்களுக்குச் சேர வேண்டிய பணத்தொகையை இந்த வருட ஆரம்பத்திலேயே அடைந்துவிடலாம்.
மேலும் குடும்பத்தில் திருமணம், புத்திரபாக்கியம் போன்ற யோகங்களையும் இந்த ஆண்டு அடையலாம். கல்வி பயிலும் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வமும் முன்னேற்றமும் உண்டாகும். மேற்படிப்பு யோகமும் ஏற்படும். 8ஆம் இடத்து குரு விருச்சிக ராசிக்கு 4ஆம் இடத்தை பார்ப்பதால், தேகனலமும் ஆரோக்கியமும் சுகமும் உண்டாகும். தாய்ன்பும் பாராட்டும் ஏற்படும். வீடு, மனை பாக்கியமும் எதிர்பார்க்கலாம். வாடகை வீட்டில்க் கிரயம் முடித்துப் போகலாம். அல்லது சொந்த வீடுகட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம்.
8ஆம் இடம் என்பது 9ஆம் இடமான பூர்வ புண்ணியஸ்தானத்துக்கு விரயஸ்தானம் 12ஆம் இடமாகும் என்பதால், பிதுரார்ஜித சொத்துகளை சிலர் விக்கிரயம் செய்யலாம் அல்லது பரிவர்த்தனை செய்யலாம். ஒன்றைக் கொடுத்து இன்னொன்றை வாங்குவது பரிவர்த்தனை எனப்படும். அத்துடன் குடும்பத்தில் நேர்ந்து கொண்ட தெய்வப் பிரார்த்தனைகளை இப்போழுது நிறைவேற்றிவிடலாம். விருச்சிக ராசிக்கு 11ஆவது லாபஸ்தானத்தில் கன்னியில் புதுவருட லக்னம் அமைவதால் லாபம், வெற்றி, அனுகூலம் உண்டாகும். வழக்கு வியாஜ்ஜியங்களிலும் விவகாரங்களிலும் சாதகமான பலனும் வெற்றியும் ஏற்படும். 12ஆம் இடத்தில் சனியும் ராகுவும் நின்று 2ஆம் இடத்தைப் பார்ப்பதோடு, 2க்குடைய குருவின் பார்வையைப் பெறுவதால் தன சம்பாத்தியத்துக்காக சிலர் வெளி நாட்டு வேலைக்குப் போகலாம் அல்லது வெளி மாநிலம் போகலாம். சில குறுக்கீடுகளும் தடைகளும் ஏற்பட்டாலும், அவற்றைக் கடந்து செயல்படவும். அரபு நாடுகளுக்கு அல்லது மேற்கத்திய நாடுகளுக்குப் போகலாம். வெளி நாட்டில் செட்டில் ஆனவர்கள் இந்த ஆண்டு பல வருடங்களுக்குப் பிறகு தாய் நாடு திரும்பிவந்து தாயாதி, பங்காளி, உறவினர்களோடு உறவாடி உவகையடையலாம்.
10ஆம் இடம் தொழில் ஸ்தானம். அதற்கு திரிகோண ராசியில் புதுவருடம் பிறப்பதால், தொழில் விருத்தியும் தன விருத்தியும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். அது சூரியனின் ராசி என்பதால், அரசு வேலை வாய்ப்பும், அரசு வேலையிலிருப்போருக்கு அனுகூலமான பலனும் உண்டாகும். அரசியலில் ஈடுபாடு உடையவர்களுக்கு பதவி உயர்வு, தேர்தலில் ஜெயம், முக்கியமான கட்சிப் பொறுப்பு போன்ற பலங்களும் உண்டாகும். சமூகத்தில் நல்ல அந்தஸ்தும் மதிப்பும் மரியாதையும் ஏற்படும். 10ஆம் இடத்துக்கு தனஸ்தானம் 2ஆம் இடத்தில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால், தொழில், சம்பாத்தியம் சிறப்பாக இருப்பதோடு சேமிப்பும் உண்டாகும். நீண்டகால சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். வாழ்க்கையில் அன்பும் ஆதரவும் பெருகும். குடும்ப ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படும்.
குரு பெயர்ச்சி இந்த ஆண்டு 13/06/2014ல் குருப் பெயர்ச்சி. 8ல் மறைவாக இருந்த குரு 9ல் கடகத்தில் உச்சம் பெற்று உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். 3ஆம் இடம், 5ஆம் இடங்களையும் பார்க்கக்கூடும். சகோதர சகாயம், நண்பர்கள் ஆதரவு, குடும்ப உறவினர்களின் ஒத்துழைப்பு, புதியவர்களின் உதவி, எதிர்காலம் இனிமையாகவும் வளமையாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை, தைரியம், தெம்பு ஆகிய பலங்களை குரு தருவார். 5ஆம் இடம் புத்திரஸ்தானம், அதற்குடைய குரு 9ல் உச்சம் பெற்று 5ஆம் இடத்தைப் பார்க்கப் போகிறார். பிள்ளைகளுக்கும் பெற்றவர்களுக்கும் நல்லுறவும் நட்பும் தொடரும். பிள்ளைகளின் வளச்சியால் பெற்றோர் பெருமை அடையலாம். பெற்றோர் ஆதரவால் பிள்ளைகள் நிம்மதி அடையலாம். திருமணப் பருவத்தில் உள்ள பெண்களுக்கும் ஆண்களுக்கும் திருமணம் கூடும். திருமணமான பிள்ளைகள் வகையில் தொல்லைகளும் பிரச்சனைகளும் விலகி நல்லவை நடக்கும். அதாவது சம்பத்திகள் பொருத்தம் சந்தோஷமாகும்.
12/03/2014 வரை குரு வக்ரமாக இருப்பார். போன வருடம் 2013 மார்ச் முதல் குரு வக்ரம். 2014 பிறக்கும் போதே குரு வக்ரம்தான். அடுத்து இரண்டாவது கட்டமாக 27/11/2014 முதல் மீண்டும் குரு வக்ரம் அடைவார். 2015 மார்ச் வரை குரு வக்ரகதி. இந்த வக்ரகதியும் உங்கள் ராசிக்கு 100க்கு 100 நன்மையும் யோகமும் உடையதாக இருக்கும். நல்ல இடத்தில் இருக்கும் கிரகம், வக்ரம் அடையும்போது நல்ல பலங்களை ஆணித்தரமாகச் செய்யும். கெட்ட இடத்தில் வக்ரமாகும் கிரகம் கெட்ட பலனையும் கட்டாயம் வலுவாகச் செய்யும். வாழ்த்துகள்
21-06-2014 இல் நடைக்கிறது , உங்களுக்கு இந்த கால கட்டதில் சில பிரச்சம்னைகள் வரலாம் , புத்திர பக்கியம் தள்ளிபோகும் , படிப்பு மந்த மாகும் , நன்றாக இல்லை
சனிபெயர்ச்சி : 16-12-2014 இல் நடக்கிறது இதன் பலன் கள் 2015 இல் நடக்கும் அப்போழுது பார்ப்போம்

வாழ்க வளமுடன் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by krishnaamma on Thu Dec 12, 2013 6:47 pm

தனுசு ராசி

செயல் பாட்டில் விரைவான போக்குக்கும் , சிந்தனைத் மேம்பாடும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே
ஆங்கிலப் புதுவருடம் 2014 ஆம் ஆண்டு தனுசு ராசியிலும், மூல நட்சத்திரத்திலும் பிறக்கிறது. தனுசுக்கு 10ஆம் இடமான கன்னி லக்னத்தில் வருடம் பிறப்பதால் இவ்வருடம் எல்லா வகையிலும் ஏற்றமும் யோகமும் உள்ளதாக விளங்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உருவாகும். எதையும் திறம்பட நிறைவேற்றி சாதித்து பேரும் புகழும் பெருமையும் அடையலாம். செய்யும் தொழிலாகட்டும் வியாபாரமாகட்டும் பணியாகட்டும் எல்லாவற்றிலும் முத்திரை பதிக்குமளவு முன்னேற்றமும் வெற்றியும் எதிர்பார்க்கலாம். தேக ஆரோக்கியத்திலும் தெளிவும் பூரணசுகமும் உண்டாகும். பொருளாதாரத்திலும் குறைவில்லாமல் சரளமாக நிலையும் திருப்தியும் உண்டாகும். சிலர் சேமிப்புத் திட்டங்களில் வைப்பு நிதியில் முதலீடு செய்யலாம்.
7ல் குரு, 11ல் சனி, நிற்க, அவர்களை ராசி நாதன் குரு பார்ப்பதால் திருமணத் தடை விலகும். குருபார்வை 11ஆம் இடம், ஜென்ம ராசி, 3ஆம் இடங்களுக்குக் கிடைக்கிறது. குரு ராசி நாதன் என்பதோடு 2014 ஆம் வருட ராசி நாதனும் என்பதால் அரசில் வரிக்குவரி சர்சார்ஜ் போட்டு வசூலிப்பது போலவும் சம்பளத்துக்குமேல் ஊக்கத்தொகை வழங்குவது போலவும் உங்களுக்கு இரட்டிப்பு யோகம் உண்டாகும். லாபம் உண்டாகும்.
வேலை பார்க்கும் இடத்திலும் உங்களுடைய உண்மையான உழைப்புக்கும் விசுவாசத்துக்கும் நேர்மைக்கும், நியாயமான பலனும் பயனும் உயர்வும் உண்டாகும். இதுவரை முதலாளிகளைக் காக்கா பிடித்து, கோள் சொல்லி தங்கள் காரியங்களை சாதித்துக் கொண்டவர்களின் சாயம் வெளுத்துப் போகும். நிர்வாகத்தினருக்கு அசல் எது, போலி எது நல்லவர் யார், கெட்டவர் யார் என்ற உண்மை புலப்பட்டு களையெடுப்பு செய்து உங்களைப் போன்ற உண்மையானவர்களுக்கு உயர்வு தருவார்கள்.
7ல் உள்ள குரு திருமணத் தடைகளைப் போக்கி மனைவி யோகம் கணவர் யோகத்தைத் தருவார். பரிகாரம் செய்து மாதக்கணக்கில் ஆகியும் பலன் கிடைக்கவில்லையே என்று கலங்கித் தவித்தவர்களுக்கும், வருடத் தொடக்கத்தில் தை முதல் சுபகாரிய பேச்சு வார்த்தை ஆரம்பமாகி, வைகாசிக்குள் திருமணம் கூடிவிடும். அடுத்து குரு ஜூன் மாதம் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு மாறி உச்ச பலம் பெற்று 2ஆம் இடத்தை பார்க்கும்போது குடும்பத்தில் குழந்தை சத்தம் கேட்டும். புதிதாக திருமணமானவர்களுக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் உருண்டோடியும் வாரிசு உருவாகவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கும் வாரிசு உதயமாகிவிடும்.
குருபெயர்ச்சி இந்த வருடம் 13/06/2014ல் குருபெயர்ச்சி. மிதுனத்தில் இருக்கும் குரு தனுசு ராசிக்கு 8ஆம் இடமான கடகத்துக்கு மாறுவார். குரு கடகத்தில் உச்சம் என்பதும், குரு தனுசு ராசிக்கு மூலத் திரிகோண ராசிக்கு 8ஆம் இடத்தில்தான் உச்சம் பெறுவார் என்பதும், சிறப்பம்சங்கள். என்வே அட்டம குரு உங்களைப் பொறுத்த வரையில் கெட்டது செய்யமாட்டார் என்பது நிச்ச்யம். ஏற்கனவே நான் அடிக்கடி எழுதுவது ராசி நாதன் அல்லது லக்ன நாதனுக்கு தோஷமில்லை. என்பதோடு, வருட ராசி நாதன் என்ற முறையிலும் 8ல் குரு கெட்ட பலன் நடத்தாது. உச்சம் பெற்ற ராசி நாதன் 12ஆம் இடம், 2ஆம் இடம், 4ஆம் இடங்களைப் பார்க்ககூடும். அதனால் சுபவிரயங்கள் நிறைய உண்டாகும். மங்கள விரயம் ஆதாய விரயம் எனலாம். செலவுக்கேற்ற வகையில் தன வரவும் உண்டாகும். வரவு வந்துகொண்டே இருந்தால் செலவைப் பற்றி சிந்திக்க வேண்டாமே! 4ஆம் இடத்தை குரு பார்ப்பதால் கல்வி, கெள்வி, பூமி, வீடு, வாகனம், சுகம், தாயன்பு போன்ற 4ஆம் இடத்துப் ப்லங்களும் யோகபலங்களாகவே அமையும். மாணவர்களின் படிப்பு, லட்சியம் ஈடேறும். படித்து முடித்தவர்களுக்கு படிப்புக்கேற்ற வேலையும் சம்பாத்தியமும் உண்டாகும்.
சனிபெயர்ச்சி 16/12/2014ல் சனிபெயர்ச்சி துலா ராசியில் இருக்கும் சனி விருச்சிக ராசிக்கு மாறுவதால், தனுசு ராசிக்காரர்களுக்கு 7 1/2 சனி ஆரம்பம். முதல் சுற்று நடப்பவர்களுக்கு மங்கு சனி. 2ஆம் சுற்று நடப்பவர்களுக்கு பொங்கு சனி. 3ஆம் சுற்று நடப்பவர்களுக்கு மரணச் சனி என்று சொன்னாலும், ஆயுள் குற்றம் பண்ணாது பயப்பட வேண்டாம். 90வயதுக்கு மேல் வாழ்கிறவர்கள் 3ஆம் சனிகளையும் சந்திருப்பார்கள். மரணத்துக்குச்சமமான வேதனை என்று எடுத்துக் கொள்ளலாம். வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by krishnaamma on Thu Dec 12, 2013 6:48 pm

@பாலாஜி wrote:என் ராசி வரும் பொழுது படித்துகொள்கின்றேன்
மேற்கோள் செய்த பதிவு: 1038151

என்னுடையதும் உங்களதும் ஒன்று என்றே நினைக்கிறேன் புன்னகை மீனம் - உத்திரட்டாதி . இந்த முறை கடைசிலிருந்து போடலாமா என்று கூட யோசித்தேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by krishnaamma on Thu Dec 12, 2013 6:49 pm

மகரம் 60%உழைத்து வாழ்வின் முன்னேற துடிக்கும் லட்சிய பார்வை கொண்ட மகர ராசி அன்பர்களே !

ஆங்கிலப் புதுவருடம் 2014 12ஆவது ராசியான தனுசு ராசியிலும், 9ஆவது இடமான கன்னியா லக்னத்திலும் 2014ஆம் வருடம் பிறக்கிறது. மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. அடைப்படை வசதிகள் பெருகும். ஆடம்பர அத்தியாவசிப் பொருட்கள் வாங்கலாம். ஃபிரிட்ஜ், வாஷின்மெஷின், ஏ.ஸி, டைனின் டேபிள் போன்ற ஆடம்பர அதிதியாவசியப் பொருட்கள் சேரும். சில பொருட்களை ரொக்கம் கொடுத்து வாங்கலாம். சில பொருட்களை தவணை அடிப்படையில் வாங்கலாம். வருடத் தொடக்கத்திலிருந்து ஜூன் வரை 3,12க்குடைய குரு 6ல் மறைகிறார். அதனால் கடன் வாங்கும்கட்டாயம் ஏற்படும். இப்படி தவணை அடிப்படையில் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதே கடன் தானே!
இப்படிக் கடன் வாங்காவிட்டால், வைத்தியச் செலவு மாறிமாறி வந்து கொண்டிருக்கும். சிலருக்கு விபத்தினால் கால் முறிவு, அறுவை சிகிச்சை என்று ஏற்பட்ட், முழு குணமாகாமல் அவஸ்தையாக இருக்கும். சிலர் டூவிலர் தவணைக் கடன் மூலமாக வாங்கலாம். 10ல் சனியும், ராகுவும் நிற்க குரு பார்ப்பதால், உடல் நலக் குறைவால் கிட்டதட்ட 18 மாதகாலமாக தொழில், வருமானத்தைக் கவனிக்க முடியாமல் போயிற்று. கடனை வாங்கியே வாழ்க்கையை ஓட்ட வேண்டியுள்ளது. வைத்தியச் செலவையும் சந்திக்க வைக்கிறது. இந்த ஒன்றரை வருடமாக ஏற்பட்ட கடன் களையெல்லாம் எப்படி அடைக்கப் போகிறோம் என்று நினைத்தாலே பெருக்கவலை வந்துவிடும். ஆகவே எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். யாருக்கும் மனதார எந்தக் கெடுதலும் நினைக்காத உங்கள் நல்ல மனதுக்கு எந்தக் கெடுதலும் வராது. 7ஆம் இடத்தையும் குரு பார்ப்பதோடு 10ஆம் இடத்தையும் குரு பார்க்கிறார்.
எனவே தொழில், வருமானம், வேலை, சம்பாத்தியம், வெளி நாட்டு யோகம் ஆகிய பலன் நடக்கும். தொழிலும் வருமானமும் ரெகுலராக இருந்தாலே மற்ற எல்லாப் பிரச்சனையும் சமாளித்துவிடலாம்.
மகர ராசிக்கு ஆங்கில வருடப்பிறப்பு 9ஆவது கன்னி லக்னத்தில் பிறப்பதால், உங்களுக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணமாக இருக்கும். வருட லக்னாதிபதி புதனை வருட ராசி நாதன் குரு பார்க்கிறார். அதனாலும் உங்கள் பெருமை, திறமை, செல்வாக்கு போன்றவற்றுக்கு குறைவில்லை. மேலும் மகர ராசி நாதன் சனியை குரு பார்க்கிறார். ஆகவே தொழிலும் வாழ்க்கையும் தொய்வில்லாமல் செயல்படும். 10ல் ராகுவும் - கேதுவும் கோள் கிரகங்கள். எனவேஉங்களைப் பற்றி வேலைசெய்யும் இடத்திலும் தொழில் செய்யும் இடத்திலும் தவிர்க்க முடியாத விமர்சங்களும் வீண் அபவாதங்களும் ஏழலாம். இருந்தாலும் குரு பலத்தால் அவற்றையெல்லாம் களைந்து முன்னேறலாம்.
மகர ராசிக்கு 12ஆவது ராசியில் புதுவருடம் பிறப்பதால், வேண்டாத செலவுகள் உண்டானாலும் அதற்கு குரு பார்வை கிடைப்பதால் இப்பொழுது அவை அவசியமாகத் தோன்றாவிட்டாலும் பின்னால் ஒருசமயம் அது முக்கியமானதாகப்படும். அதை முங்கூட்டியே வருமுன் காப்போம் மாதிரி செய்து விட்டது அப்பொழுது நல்லதாகத் தெரியும். மகர ராசிக்கு 4ல் கேது நிற்பது சுகக்கேடு, தைக்கு பிரச்சனை, கல்வித்தடை போன்ற பலங்களைத் தரும் என்றாலும், அந்த வீட்டுக்குடைய செவ்வாய் 9ல் நின்று 4ஆம் இடத்தைப் பார்ப்பதால் விதிவிலக்காகிறது. அதாவது எந்த ஒரு பாவத்திலும் கெடுபலனை ஏற்படுத்தும் கிரகம் இருந்தாலும் அதற்கு குரு பார்வை இருக்க வேண்டும் அல்லது அந்த ராசி நாதன், லக்ன நாதன் பார்ப்பதாலும் தோஷம் நிவர்த்தியாகிவிடும். அந்த அடிப்படையில் 4ஆம் இடத்துக் கேதுவால் உங்களுக்கு கெடுதல் ஏற்பட இடமில்லை.
8க்குடைய சூரியன் 12ல் மறைவதும் 6க்குடியய புதனும் 12ல் மறைவதும் விபரீத ராஜயோகம் ஆகும். எதை நல்லது என்று கருதுகிறீர்களோ அதுவே கெடுதலாக மாறும். எதைக் கெடுதல் என்று ஒதுக்குகிறீர்களோ அது நன்மைடைத் தருவதாகவும் பயன் உள்ளதாகவும் மாறிவிடும்.
குருபெயர்ச்சி 13/06/2014 ல் குருபெயர்ச்சி ஏற்படும். மகர ராசிக்கு 6ல் இருக்கும் குரு 7ஆம் இடத்துக்கு மாறுவார். அங்கு உச்சமடைவார். அதனால் குரு மிதுனத்தில் வந்தது முதல் உங்களையும் அறியாமல் கடனுக்கு மேல் கடன் ஏறிக்கொண்டே போனது! கடன் வாங்கவே தயங்கும் நீங்கள் அத்தியாவசியக் கடனாக சக்திக்கும் மீறியவகையில் கடனை வாங்கித் தள்ளி விட்டீர்கள். வாங்கிய கடன், வட்டி எல்லாம் செய்ய வேண்டும். சுமையாக அழுத்த, திகைத்துப்போன உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பாரத்தை எல்லாம் இறக்கி வைத்த மாதிரி கடங்களை அடைக்கச் செய்துவிடும்.
உச்சகுரு உங்கள் ராசியைப் பார்ப்பதோடு 11ஆம் இடம் லாபஸ்தானத்தையும் 3ஆம் இடம் தைரிய ஸ்தானத்தையும் பார்க்ககூடும். எனவே, லாபம், சேமிப்பு, வெற்றி மனத்துணிவு ஆகிய பலங்களைத் தரக்கூடும். கட்னத ஓராண்டுக்கும்மேல் வருமானமே இல்லாமல் வைத்தியச் செலவு, குடும்ப செலவு, வட்டிச் செலவு எல்லாவற்றுக்கும் கடன் வாங்கியே காலத்தை ஓட்டியவர்களுக்கு, புதையல் எடுத்தமாதிரி குரு பகவான் எந்த ரூபத்திலோ அள்ளித்தரப்போகிறார். நீங்களும் நல்ல வாழ்வு வந்தது என்று துள்ளிக்குதிக்கப் போகிறீர்கள்.
2014 பிறக்கும்போதே குரு வக்ரமாக இருக்கிறார். மார்ச் 12வரை வக்ரகதியாக இருக்கிறார். 6ஆம் இடத்தில் வக்ரமாக இருப்பதால் கடன், வைத்தியச் செலவு, போட்டி, பொறாமைகள் எல்லாம் நீடிக்கும். ஏனென்றால், எந்த ஒரு கிரகமும் வக்ரமாக இருக்கும்போது அந்த இடத்தௌப் பலனை அதிகரிக்கும். பலமடையச் செய்யும். அஸ்தானாமாக இருக்கும்போது அந்த இடத்துப் பலனை அழிக்கும். நாசம் செய்துவிடும். குரு கெட்ட இடமான 6ல் வக்ரம் என்பதால் 6ஆம் இடத்துப் பலனை ரோகம், ருணம், சத்ரு போன்ற பலன் அதிகப்படுத்துகிறார்.
ராகு - கேது பெயர்ச்சி இந்த வருடம் ஜூன் மாதத்தில் குருப்பெயர்ச்சியும் வருகிறது. 21/06/2014ல் ராகு கேது பெயர்ச்சியும் ஏற்படுக்கிறது. 21/06/2014ல் ராகு கேது பெயர்ச்சி. துலா ராசியில் உங்கள் ராசிக்கு 10ல் சனியோடு சேர்ந்திரிந்த ராகு 9ல் கன்னி ராசிக்கும் மகரத்துக்கு 4ல் மேஷத்தில் இருந்த கேது 3ஆம் இடம் மீன ராசிக்கும் மாறுவார்கள்.
சனிபெயர்ச்சி 2014 டிசம்பர் மாதம் 16ஆம் தேதி சனிபெயர்ச்சி. 10ல் இருக்கும் சனி பகவான் 11ஆம் இடம் விருச்சிகத்துக்கு மாறுவார். பொதுவாக 11ஆம் இடத்துச் சனிபகவான் உங்களுக்கு லாபத்தையும் வெற்றியையும் தரும் என்பதில் சந்தேகமில்லை. விரிவான பலங்களை சனிப்பெயர்ச்சி பலனிலும் 2015ஆம் ஆண்டு பலனில் பார்க்கலாம். வாழ்த்துகள்

வாழ்க வளமுடன்!


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by krishnaamma on Thu Dec 12, 2013 6:49 pm

கும்பம் ராசி 75%

ஆங்கிலப் புதுவருடம் 2014 ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்திலும், தனுசு ராசியிலும், கன்னிலக்னத்திலும் பிறக்கிறது. கும்பராசிக்கு 11ஆவது லாப ராசியாகும். 8ஆம் இடமான கன்னி அட்டம லக்னமாகும். 8ஆவது லக்னத்தில் வருஅம் பிறப்பது சொதனையும் வேதனையும் தந்தாலும், ஜெயஸ்தானமாகிய தனுசு ராசியில் பிறப்பதால் சோதனைகளையும், வேதனைகளையும் மாறுமளவு, சாதனை படைத்திடலாம். ஆறுதலைப் பெற்றிடலாம். உதாரணமாகச் சொல்லப் போனால் நீண்டகாலமாக பத்துப்பன்னிரண்டு வருடமாக வாரிசு இல்லாத தம்பதிகளுக்கு, ஆபரேஷன் செய்து ஆண் குழந்தை பிறப்பது மாதிரி! ஒரு பக்கம் அறுவை சிகிச்சை வேதனை இன்னொரு பக்கம் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சாதனை! ஆனந்தம்!.
தனுசு ராசி நாதன் வருட ராசி நாதன் குரு வருடத்தொடக்கத்தில் கும்ப ராசிக்கு 5ல் வக்ரமாக நின்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். அத்துடன் கும்பத்துக்கு 9ஆம் இடம் பாக்கிய ஸ்தானம் துலா ராசியை 5ஆம் பார்வையாகவும் 11ஆம் இடம் தன் ராசியை 7ஆம் பார்வையாகவும், பார்க்கிறார். அதுமட்டுமல்லாமல் கும்ப ராசி நாதன் சனி உச்சம் பெற அவரையும் குரு பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை. அதனால் செல்வாகு, புகழ், கீர்த்தி, கௌரவம், அந்தஸ்து, செயல்பாடு எல்லாம் மேன்மையாகவும் சிறப்பாகவும் இருக்கும்.
இதுவரை குடத்துக்குள் வெளிச்சமாக இருந்த நீங்கள் இனிமேல் குன்றின்மேல் ஏற்றிவைத்த தீபம்போல பிரகாசிக்கப் போகிறீர்கள். உங்களுடைய திறமையும் ஆற்றலும் பொருமையைத் தேடித்தரும். வி.ஐ.பிக்களின் தொடர்பு கிடைக்கும். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். அதன் மூலமாக உங்கள் தொழில் வளத்தை நிலையானதாக்கிக் கொள்ளலாம். வசதி வாய்ப்புகளப் பெருக்கிக் கொள்ளலாம். 5ஆம் இடத்து குரு ஜூன் மாதம் 6ஆம் இடத்துக்கு கடகத்துக்கு மாறும்போது சில தடைகளும் எதிர்ப்பு இடையூறுகளும் ஏற்பட்டாலும் அப்போழுதும் சனி 9ல் உச்சம் பெற்று கடக குருவை 10ஆம் பார்வை பார்க்கக்கூடும். 2, 11க்குடைய குருவை ராசி நாதன் சனி பார்ப்பதால் தொடர்ந்து செல்வாக்கும் யோகமும் கிடி கொண்டிருக்கும்.
வருட லக்னம் 8ஆம் இடம் என்பது 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்துக்கு 12ஆம் இடம் விரஸ்தானம் என்பதால், சிலர் பிதுரார்ஜித சொத்துகளை முன்னோர் சொத்துகளை நல்ல விலக்கு லாபத்துக்கு விற்கும் பாக்கியம் உண்டாகும். கும்ப ராசி நாதன் சனி 12க்கும் உடையவர் 11ஆம் இடத்தைப் பார்ப்பதால் லாப விரயம் ஆகும். அதேபோல நீண்டகாலமாக நடந்துவரும் வில்லங்கம், விவகாரம், வியாஜ்ஜியங்களிலும் உங்களுக்கு வெற்றிவாய்ப்பு உண்டாகும். காணாமல்போன பொருட்களும் வரவேண்டிய பணமும் இக்காலத்தில் வந்துசேரும். கும்பகோணம் குடவாசல் அரிகில் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரையும் கார்த்தவீர்யார் ஜூனரையும் அபிஷேக பூஜை செய்து வழிப்பட்டால், வரவேண்டிய தொகையும் இழந்த பொருள்களும் மீண்டும் கிடைக்கும்.
குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி குருப்பெயர்ச்சி. கும்ப ராசிக்கு 5ல் மிதுனத்தில் உள்ள குரு 6ஆம் இடத்துக்கு கடகத்து மாறுவார். 2,11க்குடைய குரு 6ல் மறைவது, ஒருவகையில் குற்றம்தான் என்றாலும், அவர் உச்சம்பெற்று 2ஆம் இடத்தையும், 10ஆம் இடத்தையும் பார்க்கிறார். எனவே தொழில் யோகம் தொடர்ந்து வேலை செய்யும். தன சம்பாத்தியம் நிலையாக நீடிக்கும். 6ஆம் இடத்து குரு 12ஆம் இடத்தையும் பார்ப்பதால், சிலருக்கு இடப்பெயர்ச்சியும் குடுயுருப்பு மாற்றாமும் வெளி நாட்டு வேலைவாய்ப்பும் ஏற்படலாம். தவிர உச்சம் பெற்ற குருவை 9ல் துலாத்தில் உச்சம்பெற்ற சனி பார்க்கிறார். உச்சனை உச்ச்ன் பார்ப்பது குற்றம் என்றாலும், கும்ப ராசி நாதன் சனி வருட ராசி நாதன் குரு என்பதால் விதி விலக்கு உண்டு. இதை கௌரப் பிச்சை என்று எடுத்துக் கொள்ளலாம். அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லஞ்சம் வாங்குவதும், ஒரு காரியத்தை முடிக்க பேரம் பேசுவதும், கட்சிக்கு தேர்தல் நிதி வசூலிப்பதும் கௌரவப் பிச்சைத்தான். ஆகவே குரு மிதுனத்தில் இருந்தாலும் கடகத்தில் இருந்தாலும், பொருளாதாரத்திலும் உங்கள் திட்டங்களிலும் வெற்றியாகவும் லாபமாகவும் இருக்கும் என்பதை மறக்கவேண்டாம்.
குருவக்ரம் 12/03/2014 வரை மிதுன குரு வக்ரமாக இருப்பார். இக்காலம் உங்கள் கனவுகளும் திட்டங்களும் அற்புதமாக நிறைவேறும். பிள்ளைகளுக்கு நல்லகாரியம் நடக்கும். திருமணம், புத்திரபாக்கியம், படிப்பு, வேலை சம்பாத்தியம் போன்ற திருப்தியான பலங்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் விசேஷங்கள் நடக்கும். அடுத்து 17/11/2014 முதல் மீண்டும் குரு வக்ரம் அடைவார். அப்பொழுது கடகத்தில் கும்பத்துக்கு 6ல் இருப்பார். 6ஆம் இடம் ரோகம், ருணம், சத்துரு ஸ்தானம் என்பதால், இக்காலம் அவையெல்லாம் அதிகமாகவே காணப்படும். அவசியத்தை முன்னிட்டு அதிகமாகக் கடன் வாங்கலாம். போட்டி, பொறாமைகள் உருவாகலாம். என்றாலும் கும்ப ராசி நாதன் சனி உச்சம் பெற்று குருவைப் பார்ப்பதால், எல்லாவற்றையும் எளிதாகச் சமாளித்து விடலாம்.
குரு அஸ்தமனம் 6/07/2014 முதல் ஒரு மாதம் குரு அஸ்தமனமாக இருக்கிறார். இக்காலம் குரு கடகத்தில் 6ல் மறைகிறார். அதனால் 6ஆம் இடத்துக் கெடுதல்கள் எல்லாம் மறைந்து விடும். ராகு கேது பெயர்ச்சி 21/06/2014 ல் ராகு கேது பெயர்ச்சி கும்ப ராசிக்கு இதுவரை 9ல் சனியோடு சேர்ந்திருந்த ராகு 8ஆம் இடம் கன்னிக்கும், 3ல் மேஷத்தில் இருந்த கேது இப்போழுது 2ம் இடம் மீனத்துக்கும் மாறுவார். ராகு 8ல் இருப்பது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம் என்ற அடிப்படையில் நல்லது. குரு பார்க்க கோடி குற்றம் விலகுமல்லவா! சனிபெயர்ச்சி 2014 டிசம்பர் 16ல் சனிபெயர்ச்சி 9ல் உள்ள சனி 10ஆம் இடத்துக்கு மாறுவார். தொழில், வாழ்க்கையில் புதுப்பிரச்சனைகளை உருவாக்கும் என்றாலும், கடக குரு விருச்சிக சனியைப் பார்ப்பதால் தீமை குறையும். வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by krishnaamma on Thu Dec 12, 2013 6:50 pm

மீன ராசி

நற்குணங்கள் மிகுதியும் அவசப்படாமல் எதிலும் நிதானம் காட்டக்கூடிய பக்குவம் கொண்ட மீன ராசி அன்பர்களே!
2 ஆங்கிலப் புதுவருடம் 2014 ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் கன்னி லக்னத்தில் உதயமாகிறது. உங்களின் மீன ராசிக்கு 10ஆவது ராசியிலும், 7ஆவது லக்னத்திலும் வருடம் பிறப்பது மிக மிக யோகமான அனுகூலமான அமைப்புத்தான். மேலும் ஆங்கிலப்புது வருடம் தனுசு ராசியில் பிறப்பதால் தனுசு ராசி நாதன் குருவே உங்களின் ராசி நாதன் ஆவார். அவர் மீன ராசிக்கு 4ல் நின்று 10ஆம் இடத்தைப் பார்க்கிறார். வருட ராசியையும் பார்க்கிறார். அத்துடன் கன்னி லக்னத்துக்கு 10ல் நிற்கிறார். ஆகவே மீனராசிக்கு 10ஆம் இடம், வருட லக்னத்துக்கு 10ஆம் இடம் என்று 10க்கு குரு தொழில், வியாபாரம், வேலை, உத்தியோகம் எல்லாவற்றிலும் மேன்மையும் முன்னேற்றமும் யோகமும் உண்டாகும் என்பது உண்மை.
2013நவம்பரிலிருந்தே குரு வக்ரமாக இருக்கிறார். 12/03/2014 வரை குரு வக்ரம்! வக்ரத்தில் உக்ர பலம் என்பது அடிக்கடி எழுதிவரிகிறேன். நல்ல இடத்தில் குரு வக்ரமாக இருப்பதால், உங்களுக்கு நல்ல பலன்களே பலமாக நடக்கும். அதாவது மீன ராசிக்கு 4ஆம் இடம், 10ஆம் இடம்,12ஆம் இடம் ஆகியவற்றுக்கு குரு தொடர்பி. தேக ஆரோக்கியம், பூமி, வீடு, வாகன யோகம், தொழில் யோகம், வெளி நாட்டுப் பயணம், குடும்பத்தில் சுபமங்கள விரயம் ஆகிய பலன்கள் நடக்கும். 8ஆம் இடத்தையும் குரு பார்க்கிறார். அதனால் உங்களைப் பற்றி வெளிவுலத்தில் தேவையற்ற விமர்சனம் செய்வார்கள். உங்கள் வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள் உங்கள் மீது அவதூறு பரப்புவார்கள். அது உங்கள் காதில் விழும்போது கவைப்படுவீர்கள். அதாவது நீங்கள் யாரையும் பகையாகவும் விரோதியாகவும் கருதவில்லையென்றாலும், உங்களுக்கு வேண்டாதவர்கள் அல்லது உங்களைப் பிடிக்காதவர்கள் உங்களை எதிரியாகக் கரிதி இடைஞ்சல் செய்வார்கள். ஆனால் அவையெல்லாம் நிலைக்காது.
2014 ஜனவரி முதல் குருபார்வையில் சிறப்பாக அட்டமச் சனியின் கெட்டபலன் எல்லாம் விட்டு விலகப்போகும். 2014 மார்ச் முதல் ஜீன் வரை சனியும் வக்ரம் அடைவார். சனியின் வக்ரம் அட்டமஸ்தான பலனி அதிகப்படுத்தலாம். அதாவது சந்தேகம், சலிப்பு எந்தப் பிரச்சனையிலும் பயம், பீதி, கவலை தோன்றலாம். ஜூன் 13ஆம் தேதி குருப்பெயர்ச்சி. குரு கடகத்தில் உச்சம் பெறும் காலம். உச்சசனி உச்ச குருவைப் பார்ப்பதால், உச்சனை உச்சன் பார்க்கும் காலம் மேற்கண்ட கெடுபலன் நீங்கிவிடுகிறது.
கன்னி லக்னத்துக்கு 4, 7க்குடைய குரு 10ல் மிதுனத்தில் நின்று 2ஆம் இடம் துலாம், 4ஆம் இடம் தனுசு, 6ஆம் இடம் கும்பம் ஆகியவற்றைப் பார்ப்பதால், பொருளாதாரத்தில் தட்டுப்பாடோ நெருக்கடியோ இருக்காது. தேக ஆரோக்கியத்திலும் தெளிவான நிலையுண்டாகும். முன்சொன்னமதிரி பூமி, வீடு, வாகனம், தாயன்பு, கல்வி மேன்மை ஆகிய 4ஆம் இடத்தைப் பார்ப்பதால் பற்றாக்குறை பட்ஜெட்டை சரிக்கட்ட அல்லது அத்தியாவசிய தேவைக்காக கடன் வாங்க நேரும். ஒரு சிலர் வீடுகட்ட அல்லது கார் வாங்க அல்லது கல்யாணம் காட்சி நடத்த கடன் வாங்கலாம். அது சுபச் கடந்தான்.
கடந்த 2013 5ஆம் இடம் புத்திரஸ்தானத்தை சனி பார்ப்பதால், பிள்ளைகளின் வைத்தியச் செலவு அல்லது பிரசவ செலவுக்காக நகைகளை அடகு வைத்து கடன் வாங்கிருக்கலாம். 2014 ஜூன் மாதம் 5ல் குரு உச்சம்பெறும் போது அந்தக் கடன்களை எல்லாம் அடைத்துவிடலாம். அடகு நகைகளயும் மீட்டு விடலாம். மொத்தத்தில் 2014 வாழ்க்கை முன்னேற்றம், தொழில் உயர்வு, வியாபார விருத்தி, மன நிறைவு, புது வாழ்வு, செல்வாக்கு, கீர்த்தி, கௌரவம், பாராட்டு, பெருமை ஆகிய பலனையெல்லாம் சந்திக்கலாம். படித்து முடித்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு அல்லது தொழில் வருமானம் கூடும். வருடத் தொடக்கம் முதல் ஆறு மாத காலம் மனைவி வைகையில் யோகம் பாக்கியம் உண்டாகும்.
குருபெயர்ச்சி 13/06/2014ல் குருபெயர்ச்சி மீன ராசிக்கு 4ல் இருக்கும் குரு 5 ஆம் இடம் புத்திர ஸ்தானத்துக்கு மாறுவார். அக்காலம் பிள்ளைகளுக்கு ஆரோக்கியம், திருமணம், பட்டப்படிப்பு, வேலை, சம்பாத்தியம், வாரிசு யோகம், வீடு, மனை வாகன யோகம் போன்ற நன்மைகள் உண்டாகும். வருட ராசி தனுசுக்கு 8ஆம் இடத்தில் குரு மறைவானாலும் வருட லக்னம் கன்னிக்கு 11 லாபஸ்தானத்தில் உச்சம் பெறுவதால், எதிர்பாராத அதிர்ஷ்டமும் லாபமும் எதிர்பார்க்கலாம். சிலருக்கு இடப்பெயர்ச்சி, ஊர்மாற்றம் ஏற்படலாம்.
குருவக்ரம் 2014 மார்ச் ஜூலை 6முதல் ஒரு மாதம் ஆகஸ்டுவரை குரு அஸ்தானம். 5ல் கடகத்தில் உச்சகதியில் குரு அஸ்தனம் அடைவதால் பாதிப்பு ஏற்படாது என்றாலும், உங்களுடைய முயற்சிகளிலும் காரியங்களிலும், தடை, தாமதம் கணக்கம் ஏற்படலாம். சிலசமயம் ஒரு செலவுக்கு இரு செலவு ஆகலாம். வீண் விரயம்! சில சமயம் வைத்தியச் செலவு! சில சமயம் தாயார் வகையில் அல்லது பிள்ளைகள் வகையில் செலவு.
ராகுகேது பெயர்ச்சி 21/06/2014 ல் ராகு கேது பெயர்ச்சி மீன ராசிக்கு 8ல் இருந்து அட்டமச் சனியோடு சேர்ந்து உங்களை வாடவைத்த வதங்கவைத்த ராகு ராசிக்கு 7ஆம் இடத்துக்கு கன்னிக்கு மாறுகிறார். குடும்பஸ்தனத்தில் நின்று குடும்ப அமைதியையும் ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் கெடுத்து வந்த கேது ஜென்ம ராசிக்கு மீனத்துக்கு மாறுகிறார். திருமணத் தடையும் தோஷமும் விலகும். சனிபெயர்ச்சி 2014 டிசம்பர் 16ல் சன்பெயர்ச்சி, ராசிக்கு 8ல் இருந்து உங்களை தலையில் கொட்டிக் கொண்டயிருந்த சனி 8ஆம் இடத்தை விட்டு விலகி 9ஆம் இடம் மாறுகிறார். இதுவே உங்களுக்கு 100க்கு 100 ஆறுதல் பட்ட கஷ்டத்துக்கு ஒரு விமோசனம் எனவே இனிமேல் தொட்டது துலங்கும். விட்டது கிடைகும். இழந்தது மீண்டும் வரும். வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by பாலாஜி on Thu Dec 12, 2013 7:01 pm

பகிர்வுக்கு நன்றி ..... (வி.பொ .பா)


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by சிவா on Thu Dec 12, 2013 7:02 pm

கடந்த வருடம் 7 1/2 சனிச் காரணமாக உடல் ஆரோக்கியக் குறைவும் வைத்தியச் செலவும், சில பேருக்கு அறுவை சிகிச்சை போன்ற சங்கடங்களும் ஏற்பட்டிருக்கலாம்.

கார்த்திகாவுக்கு சிசேரியன்! அதிர்ச்சி 
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by krishnaamma on Thu Dec 12, 2013 7:29 pm

@சிவா wrote:
கடந்த வருடம் 7 1/2 சனிச் காரணமாக உடல் ஆரோக்கியக் குறைவும் வைத்தியச் செலவும், சில பேருக்கு அறுவை சிகிச்சை போன்ற சங்கடங்களும் ஏற்பட்டிருக்கலாம்.

கார்த்திகாவுக்கு சிசேரியன்! அதிர்ச்சி 
மேற்கோள் செய்த பதிவு: 1038160

ஒ.................அவங்க என்ன நக்ஷத்திரம் ?


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by மாணிக்கம் நடேசன் on Fri Dec 13, 2013 7:28 am

எங்க அக்காவ ஒரு சின்ன காயம் கூட படாம நாங்க பாத்துக்கிட்டோம், ஆனா, நீங்க சீசரின் வரைக்கும் கொண்டாந்து விட்டிட்டீங்க.இதுக்கு ஒங்க பொண்ணும்தான் காரணம்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by சிவா on Sun Apr 06, 2014 5:06 pm

இந்தப் பதிவை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார்கள்!   

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by Aathira on Sun Apr 06, 2014 5:16 pm

மிக்க மகிழ்ச்சி. 

ஆனால் எத்தனை பேர் எதிர்காலத்தை ஜோசியத்தில் கையில் கொடுக்க நினைக்கிறார்கள் என்பது இதனால் தெரிகிறது.. 


நானும்தான்......


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by சிவா on Sun Apr 06, 2014 5:43 pm

@Aathira wrote:[link="/t106703p15-2014-12#1056683"]மிக்க மகிழ்ச்சி. 

ஆனால் எத்தனை பேர் எதிர்காலத்தை ஜோசியத்தில் கையில் கொடுக்க நினைக்கிறார்கள் என்பது இதனால் தெரிகிறது.. 


நானும்தான்......

இது ஒருவருக்கு அளிக்கப்படும் உற்சாக டானிக்! எனவே இதுபோன்ற பலன்கள் எழுதுபவர்கள் அனைவருக்கும் உற்சாகமளிக்கும் வகையில் எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!

அடுத்தடுத்த குரு, சனிப் பெயர்சிகள், வருடப் பிறப்பு இவைகளுக்கு “ஜோதிட பாரதரத்னா ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார்” ஆகிய நான் பலன்கள் எழுதலாம் என்றிருக்கிறேன், இது குறித்து தாங்கள் என நினைக்கிறீர்கள்?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by Aathira on Sun Apr 06, 2014 8:34 pm

@சிவா wrote:[link="/t106703p15-2014-12#1056686"]
@Aathira wrote:[link="/t106703p15-2014-12#1056683"]மிக்க மகிழ்ச்சி. 

ஆனால் எத்தனை பேர் எதிர்காலத்தை ஜோசியத்தில் கையில் கொடுக்க நினைக்கிறார்கள் என்பது இதனால் தெரிகிறது.. 


நானும்தான்......

இது ஒருவருக்கு அளிக்கப்படும் உற்சாக டானிக்! எனவே இதுபோன்ற பலன்கள் எழுதுபவர்கள் அனைவருக்கும் உற்சாகமளிக்கும் வகையில் எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!

அடுத்தடுத்த குரு, சனிப் பெயர்சிகள், வருடப் பிறப்பு இவைகளுக்கு “ஜோதிட பாரதரத்னா ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார்” ஆகிய நான் பலன்கள் எழுதலாம் என்றிருக்கிறேன், இது குறித்து தாங்கள் என நினைக்கிறீர்கள்?
நானும்தான் என்று போட்டிருந்ததை நீங்க பாக்கல. நல்ல வேளை.

“ஜோதிட பாரதரத்னா ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார்” பலன்கள் சொன்னால் பரவாயில்லை. சுவாமி சிவானந்தா வேண்டாம்
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by krishnaamma on Sun Apr 06, 2014 9:34 pm

@சிவா wrote:[link="/t106703p15-2014-12#1056686"]

இது ஒருவருக்கு அளிக்கப்படும் உற்சாக டானிக்! எனவே இதுபோன்ற பலன்கள் எழுதுபவர்கள் அனைவருக்கும் உற்சாகமளிக்கும் வகையில் எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!

அடுத்தடுத்த குரு, சனிப் பெயர்சிகள், வருடப் பிறப்பு இவைகளுக்கு “ஜோதிட பாரதரத்னா ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார்” ஆகிய நான் பலன்கள் எழுதலாம் என்றிருக்கிறேன், இது குறித்து தாங்கள் என நினைக்கிறீர்கள்?

சிவா, சூப்பர் முடிவு தான் புன்னகை என்னுடைய ராசி மீனம் அதுக்கு கொஞ்சம் பார்த்து எழுதுங்கோ புன்னகை

ஜாலிஜாலிஜாலி
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by krishnaamma on Sun Apr 06, 2014 9:34 pm

@சிவா wrote:[link="/t106703p15-2014-12#1056679"]இந்தப் பதிவை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார்கள்!   


வாழ்த்துகள் சிவா புன்னகை அன்பு மலர்
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum