ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திலதர்ப்பணப்புரி (சீதலபதி) அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் - ஆதிவிநாயகர் கோவில்

View previous topic View next topic Go down

திலதர்ப்பணப்புரி (சீதலபதி) அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் - ஆதிவிநாயகர் கோவில்

Post by ராஜா on Mon Dec 09, 2013 5:49 pm

முழுமுதற் கடவுளான விநாயகரை ஆலயங்களில் யானை முகத்தோனாகவே தரிசிக்கிறோம். சற்று வித்தியாசமான வடிவில் நரமுக விநாயகராக திலதர்ப்பணப்புரியிலும், முகமில்லா விநாயகராக சித்தமல்லியிலும் தரிசிக்கலாம்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில்- திருவாரூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திலதர்ப்பணப்புரி. இங்குள்ள சிவாலயத்தில் தனிச்சந்நிதியில் மேற்கு நோக்கி தும்பிக்கையின்றி மனித முகத்துடன் விநாயகர் அருள்பாலிக்கிறார்.

யானை முகமாகத் தோன்றுவதற்கு முன் பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட உருவம் இது.

முதன்முதலில் உருவானவர் என்பதால் இவ்விநாயகர் ஆதிவிநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

இத்தலம் பிதுர்தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. திலம்- எள்; தர்ப்பணம்- இறந்தவர்களுக்குச் செய்யப்படும் பித்ருக் கடன்; புரி- தலம். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யச் சிறந்த இடம் என்பதால் இத்தலம் திலதர்ப்பணப்புரி என்று அழைக்கப்படுகிறது.

ஆதிவிநாயகர் என்று அழைக்கப்படும் நரமுக விநாயகர் மனித உருவத்தோடு பாசம், அங்குசம், அபயஹஸ்தமாக ஆனந்த முத்திரையுடன் கூடிய கைகளோடு, இடதுகையை இடது காலின்மீது வைத்தபடி காட்சி அளிக்கிறார்.

இவ்வாலயத்து ஈசன் முக்தீஸ்வரர்; இறைவி சொர்ணவல்லித் தாயார்.

ஸ்ரீராமர் தன் தந்தை தசரதருக்கும், தந்தைக்கு நிகராகத் தான் கருதிய ஜடாயுவுக்கும் இத்தலத்தில்தான் பிண்டம் இட்டார். தசரதர் அதை நேரில் பெற்றுக்கொண்டார் என்பதும், ஸ்ரீராமர் வைத்த பிண்டங்கள் சிவலிங்கங்களாக மாறி ஸ்ரீராமருக்கு அனுக்கிரகம் செய்தன என்பதும் வரலாறு. ஆலயத்தில் பிதுர் லிங்கங்களுக்கு நேராக, ஸ்ரீராமர் வலது காலை மண்டியிட்டு தர்ப்பணம் செய்யும் நிலையில் உள்ள சிலை ஒன்று உள்ளது.

இவ்வாலயத்தைப் பற்றி சிறப்பான வரலாறு ஒன்றும் கூறப்படுகிறது.

கோதாவரி நதிக்கரையில் உள்ள போகவதி நாட்டை நற்சோதி என்ற மன்னன் ஆண்டு வந்தான். ஒருசமயம் நாரத முனிவர் அவனது அரசவைக்கு வந்திருந்தார். மன்னன் நாரதரிடம், ""இப்பூவுலகில் எந்தத் தலம் மிகவும் சிறந்த புண்ணியம் வாய்ந்த தலம்?'' என்று கேட்டான்.

மன்னனே கண்டறிந்து கொள்ளட்டும் என்பதற்காக தலத்தின் பெயரைச் சொல்லாமல் நாரதர், ""எந்தத் தலத்தில் பித்ருக்கள் பிண்ட தானத்தை நேரில் தோன்றி பெற்றுக் கொள்கிறார்களோ அதுவே உத்தம புண்ணியத்தலம்'' என்று கூறினார். பின்னர் நாரதர் மன்னனிடம் விடை பெற்றுச் சென்றார்.

நாரதர் கூறியபடி நற் சோதி மன்னன் இந்திய நாட்டிலுள்ள பல தலங்களுக்கும் சென்று திலதர்ப்பணமும், பிண்ட தானமும் செய்துகொண்டு வந்தான். எந்த இடத்திலும் பித்ருக்கள் நேரில் வராத தால் மனம் வருந்திய மன்னன் தன் நாட்டுக்கே திரும்பிச் சென்றுவிடலாம் என முடிவு செய்தான். அப்போது மன்னன் எதிரில் நாரதர் தோன்றி, ""நான் கூறிய புண்ணிய தலத்திற்கு அருகில் வந்துவிட்டாய்.

சில காத தூரத்திற்கு அப்பால் "திலதைப்பதி' என்ற தலம் இருக்கிறது. அங்கு சென்று அரிசிலாற்றில் நீராடி, உன் பித்ருக்களுக்கு தில தர்ப்பணமும் பிண்ட தானமும் செய்.

அவர்கள் உன் எதிரில் தோன்றி அவற்றை வாங்கி உண்பார்கள்'' என்று கூறினார்.

மன்னன் திலதைப்பதி சென்றான். அங்கு தவம் செய்துகொண்டிருந்த காலவ முனிவரை வணங்கி ஆசிபெற்றான். ஆலயத்திற்குச் சென்று இறைவன்- இறைவியை வணங்கினான்.

அமாவாசையன்று அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி நடுப்பகலில் சங்கல்பத்துடன் திலதர்ப்பணம் செய்து பிண்டம் சமர்ப்பித்தான். பித்ருக்கள் அவன்முன் தோன்றி, படைக்கப்பட்ட பிண்டத்தை ஏற்று உண்டு மகிழ்ந்து மன்னனுக்கு நல்லாசி வழங்கி மறைந்தனர். மன்னன் மனம் மகிழ்ந்தான்.

திலதர்ப்பணப்புரி தலத்திற்கு வந்து பித்ருசாபம், பித்ருதோஷம் போன்றவை நீங்க தர்ப்பணம் செய்து பரிகாரம் காணலாம். மூதாதையர் இறந்த நாள் தெரியவில்லை என்றாலும், இத்தலத்தில் எப்போது வேண்டுமானாலும் பித்ருக்கடன் ஆற்றலாம்.

பார்வதிதேவி உருவாக்கிய திருமேனியின் தலையை சிவபெருமான் வெட்டியபிறகு உள்ள வடிவில் சித்தமல்லி என்ற தலத்தில் தலையில்லாத விநாயகராக அருள்பாலிக்கிறார்.

யானை முகத்தோனாகிய விநாயகரை மனித முகத்துடன்கூடிய வடிவில் திலதர்ப்பணப்புரி யிலும், தலை வெட்டப்பட்ட நிலையில் உள்ள வடிவில் சித்தமல்லியிலும் வழிபடலாம்.

-நன்றி நக்கீரன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திலதர்ப்பணப்புரி (சீதலபதி) அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் - ஆதிவிநாயகர் கோவில்

Post by ராஜா on Mon Dec 09, 2013 5:57 pm

இந்த முறை இந்தியா வந்தபோது இங்கு தான் எங்கள் அப்பாவுக்கு தர்ப்பணம் செய்தோம். காசி , ராமேஸ்வரம் , திரிவேணி சங்கமம் , கயா இந்த நான்கு தலங்களை காட்டிலும் மிக சிறப்பு வாய்ந்த தலம்.

முன்னோர்கள் நேரில் வந்து தர்ப்பணம் பெற்றுக்கொள்வதாக ஐதீகம், இங்கு ஒரு முறை செய்துவிட்டாலே அவர்கள் முக்தி அடைந்துவிடுவார்கள்.

மனித உருவில் இருக்கும் விநாயகர் வேறு எங்கும் பார்க்க முடியாது , அது இந்த தளத்தில் இன்னொரு சிறப்பு
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திலதர்ப்பணப்புரி (சீதலபதி) அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் - ஆதிவிநாயகர் கோவில்

Post by krishnaamma on Mon Dec 09, 2013 6:14 pm

வாவ் ! விவரமாக எழுதி இருக்கீங்க ராஜா புன்னகை ரொம்ப நன்றி , இந்த முறை எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு போகும்போது இங்கும் சென்று வருகிறோம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: திலதர்ப்பணப்புரி (சீதலபதி) அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் - ஆதிவிநாயகர் கோவில்

Post by ராஜா on Mon Dec 09, 2013 6:21 pm

@krishnaamma wrote:வாவ் ! விவரமாக எழுதி இருக்கீங்க ராஜா புன்னகை ரொம்ப நன்றி , இந்த முறை எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு போகும்போது இங்கும் சென்று வருகிறோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1037109நான் எழுதல அக்கா , காப்பி செய்து தான் போட்டேன் .... தினமும் இதை பற்றி விரிவா எழுதணும்னு நினைப்பேன் ஒவ்வொரு நாளும் தட்டி போய் கொண்டே இருந்தது , இன்று உங்க புண்ணியத்தில் பதிவிட்டு விட்டேன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திலதர்ப்பணப்புரி (சீதலபதி) அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் - ஆதிவிநாயகர் கோவில்

Post by krishnaamma on Mon Dec 09, 2013 6:23 pm

@ராஜா wrote:
@krishnaamma wrote:வாவ் ! விவரமாக எழுதி இருக்கீங்க ராஜா புன்னகை ரொம்ப நன்றி , இந்த முறை எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு போகும்போது இங்கும் சென்று வருகிறோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1037109நான் எழுதல அக்கா , காப்பி செய்து தான் போட்டேன் .... தினமும் இதை பற்றி விரிவா எழுதணும்னு நினைப்பேன் ஒவ்வொரு நாளும் தட்டி போய் கொண்டே இருந்தது , இன்று உங்க புண்ணியத்தில் பதிவிட்டு விட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1037112

உங்க புண்ணியத்தில் நாங்க அந்த ஸ்தலத்தை பற்றி தெரிந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தது புன்னகை மீண்டும் நன்றி ராஜா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: திலதர்ப்பணப்புரி (சீதலபதி) அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் - ஆதிவிநாயகர் கோவில்

Post by M.M.SENTHIL on Mon Dec 09, 2013 10:02 pm

கட்டாயம் சென்று வர வேண்டிய இடம். தகவல் அருமை தல.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: திலதர்ப்பணப்புரி (சீதலபதி) அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் - ஆதிவிநாயகர் கோவில்

Post by ராஜா on Tue Dec 10, 2013 11:06 am

@M.M.SENTHIL wrote:கட்டாயம் சென்று வர வேண்டிய இடம். தகவல் அருமை தல.
மேற்கோள் செய்த பதிவு: 1037209கட்டாயம் சென்று வாருங்கள் எங்கள் தஞ்சாவூர் , நாகை , திருவாரூர் மாவட்டத்தில் அவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவில்கள் இருக்கின்றன. இவற்றில் பல கோவில்களின் சிறப்புகள் வெளியே தெரியாமலேயே இருக்கிறது.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திலதர்ப்பணப்புரி (சீதலபதி) அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் - ஆதிவிநாயகர் கோவில்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum