புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_m10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10 
7 Posts - 54%
heezulia
"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_m10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10 
6 Posts - 46%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_m10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10 
49 Posts - 61%
heezulia
"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_m10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10 
27 Posts - 34%
mohamed nizamudeen
"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_m10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_m10"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை


   
   
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Nov 28, 2013 3:50 pm

பண்ணைகளில் நோய்வாய்ப்பட்டு சாகும் கோழிகளை கிலோ ரூ.10க்கு வாங்கி, துண்டு துண்டாக வெட்டி, மாட்டிறைச்சி கலந்து, "மலிவு விலை சிக்கன்' என்ற பெயரில், கிலோ ரூ.30க்கு விற்பது, திருப்பூரில் அதிகரித்துள்ளது. சாலையோர சிறு ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் பிரியாணி, சில்லி சிக்கன், சிக்கன் பிரை ருசிப்போர் உஷாராக இல்லாவிடில், மருத்துவமனையில் "படுக்க வேண்டிய' அபாயத்துக்கு தள்ளப்படலாம்.


திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளில் 8.7 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தினமும் 2 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இங்குள்ள 4,500 பனியன் நிறுவனங்களில், ஏறத்தாழ 6 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். தவிர, பனியன் உற்பத்தி சார்ந்த உபதொழில் நிறுவனங்களில் லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். பனியன் தொழிலாளர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். வாடகை வீடுகளில் தங்கி வேலைக்கு செல்பவர்கள். இவர்களின் அன்றாட உணவுத்தேவையை, சாலையோர சிறு ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகள், ஆம்னிவேன் கடைகள் பூர்த்தி செய்கின்றன. இவை இட்லி, தோசை, பல வகை சாதம் மட்டுமின்றி, சிக்கன், மட்டன், பீப் பிரியாணி, சில்லி சிக்கன், சில்லி பிரை, பெப்பர் பிரை என்ற பெயரில், அசைவ உணவு வகைகளையும் விற்கின்றன.

மிகக்குறைந்த விலைக்கு, அதாவது, பிளேட் பிரியாணி ரூ. 15க்கும், சில்லி சிக்கன் போன்ற அயிட்டங்கள் பிளேட் ரூ.10க்கும் விற்கப்படுவதால், வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக, டாஸ்மாக் கடைகளின் அருகிலுள்ள தள்ளுவண்டி கடைகளில் கூட்டம் தள்ளுகிறது. இவ்வகை கடைகள் சிலவற்றில் சுகாதாரமான அசைவ உணவுகள் விற்கப்படுகின்றன. பல கடைகளில், உடல்நலத்துக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான அசைவ உணவு வகைகள் விற்கப்படுகின்றன. சிக்கன் பிரியாணி, சில்லி சிக்கன் என்ற பெயரில் காக்கை கறியும், பண்ணையிலேயே செத்துப்போன கோழி கறியும் சமைக்கப்படுகின்றன. இவற்றை, திருப்பூர் மாநகராட்சி நகர்நல பிரிவு அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வில் கண்டுபிடித்து, பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

75 கிலோ பறிமுதல்:


திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், பண்ணையில் செத்து மடிந்த கோழிகளின் கறி, பார்சல் செய்யப்பட்டு விற்கப்படுவது குறித்த செய்தி, கடந்த 26ம் தேதி, "தினமலர்' நாளிதழின், திருப்பூர் "அக்கம் பக்கம்' இணைப்பில் வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி நகர்நல அலுவலர் செல்வக்குமார் தலைமையிலான குழுவினர், அங்கு சோதனை நடத்தி, 75 கிலோ "செத்த கோழி' கறி பாக்கெட்களை பறிமுதல் செய்து, திருப்பூர், வ.உ.சி., நகரைச் சேர்ந்த நந்தகோபால்,44, என்பவரை பிடித்து விசாரித்தனர். கோழிப்பண்ணைகளில் இருந்து வாங்கி வந்தது தெரியவந்தது.

கிலோ ரூ.10:


திருப்பூர் மாவட்டம், பல்லடம், பொங்கலூர், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 5000 கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, உற்பத்தியாகும் கோழிகளில், குறைந்தது 5 சதவீத கோழிகள் இடநெருக்கடி, நோய் பாதிப்பு, அதிக உணவு உட்கொள்ளுதல் உள்ளிட்ட காரணங்களால் செத்துவிடுகின்றன. இவற்றை பண்ணையாளர்கள், ஆழக்குழிதோண்டி புதைத்தழிக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், சில பண்ணையாளர்கள் அவ்வாறு செய்யாமல், எடைபோட்டு, கிலோ 10 வீதம் விற்றுவிடுகின்றனர். அவ்வாறு விற்கப்பட்ட கோழிகளை வாங்கிய நந்தகோபால், ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களில் வைத்து சுத்தம் செய்து, அரை கிலோ, ஒரு கிலோ, இரண்டு கிலோ பாலித்தீன் "பிக்கப்' பைகளில் வைத்து, கிலோ ரூ.30க்கு டூ வீலரில் எடுத்துச் சென்று, தள்ளுவண்டிக் கடைக்காரர்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளார். இவரைப்போன்று, திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர், செத்த கோழி வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பதாக, திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் குறித்த தகவலையும், மாநகராட்சி நிர்வாகம் சேகரித்து வருகிறது.

ரூ. 10 ஆயிரம் அபராதம்:


திருப்பூர் மாநகராட்சி நகர்நல அதிகாரி டாக்டர் செல்வக்குமார் கூறியதாவது: இறந்து சில நாட்களான கோழிகளின் கறியுடன், மாட்டிறைச்சி கலந்து, பாக்கெட் போட்டு"சிக்கன்' என்ற பெயரில் விற்றுள்ளனர். இன்று(நேற்று) நடத்திய ஆய்வில் 75 கிலோ கறி பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை, மாநகராட்சி எல்லைக்குள் நடந்த சோதனைகளின் மூலம் 550 கிலோ கறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையிலான உணவு வகைகளை விற்போர் குறித்து தகவல் திரட்டி வருகிறோம். பிடிபடுவோர் மீது, "தமிழ்நாடு பொதுசுகாதாரச் சட்டம்- 1939' ன்படி, நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பிடிபடும் நபருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. அசைவ பிரியர்கள் முன்னெச்சரிக்கையுடன் உணவுகளை வாங்கி உண்பது நல்லது. பண்ணையில் பலியான கோழி மற்றும் கறியை விற்போர் குறித்து தகவல் அறிவோர், 94435 52519 என்ற எண்ணில் என்னையும், உணவு பாதுகாப்பு அலுவலரை 97881 12466 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். உடன் நடவடிக்கை எடுக்க, தயாராக உள்ளோம்' என்றார்.

ருசித்தால் ஆபத்து!


திருப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் பிரியா கூறுகையில், ""நோய் வாய்ப்பட்டு இறந்த கால்நடைகள் மற்றும் கோழிகளின் கறியை உட்கொண்டால்,வயிற்றில் ஜீரண உபாதைகள் ஏற்படும். வயிற்றுப்போக்கு,வாந்தி ஏற்படவும் வாய்ப்புள்ளது. சுகாதாரமற்ற அசைவ உணவுகளை தொடர்ச்சியாக உண்ணும் போது, ஜீரண உறுப்புகள் நிரந்தரமாக பாதிக்கப்படும் அபாயமுள்ளது,'' என்றார்.

நன்றி: தினமலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 28, 2013 4:03 pm

அடப்பாவிகளா...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 28, 2013 4:10 pm

கிலோ ரூ 10 என்று கூறும்பொழுதே சுதாரித்துக் கொள்ள வேண்டாமா? அதையும் மீறி வாங்கினால் இப்படித்தான்!

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Nov 28, 2013 4:18 pm

நம்மாளுகதான் ப்ரீயா கிடைச்சா பினாயில கூட குடிப்பாங்களே ........

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82358
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2013 7:05 pm

-
மீன்களிலியே விரால் மீன் உயிருடன் இருந்தால்
விலை அதிகம்...!
-
அயல்நாடுகளைப் போல கோழிகளை உரித்தபின்னர்
கெடாமல் பக்குவப்படுத்தும் முறை வந்தால்
பண்ணை நடத்துபவர்ளுக்கு நஷ்டம் வராது....
--

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Nov 28, 2013 11:42 pm

DERAR BABU wrote:நம்மாளுகதான்  ப்ரீயா கிடைச்சா பினாயில கூட குடிப்பாங்களே ........
"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை 3838410834 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை M"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை U"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை T"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை H"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை U"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை M"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை O"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை H"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை A"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை M"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை E"மலிவு விலை' சிக்கன் கிலோ ரூ.10: பண்ணையில் செத்த கோழிகள் விற்பனை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Nov 29, 2013 11:12 am

ayyasamy ram wrote:-
மீன்களிலியே விரால் மீன் உயிருடன் இருந்தால்
விலை அதிகம்...!
-
அயல்நாடுகளைப் போல கோழிகளை உரித்தபின்னர்
கெடாமல் பக்குவப்படுத்தும் முறை வந்தால்
பண்ணை நடத்துபவர்ளுக்கு நஷ்டம் வராது....
--
ஆமோதித்தல் ஆமோதித்தல் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக