ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4

View previous topic View next topic Go down

''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4

Post by vasudevan31355 on Sun Nov 24, 2013 11:31 am

தொடர்-3 மற்றும் 4

''பரதேசி' ( தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்)தொடர்-3 'பரதேசி' (தெலுங்கு)

வெளி வந்த நாள்: 14.01.1953

தொடர்-4 'பூங்கோதை'(தமிழ்)

வெளி வந்த நாள்: 31.01.1953

உரையாடல் - சக்தி கிருஷ்ணசாமி

இசை: ஆதிநாராயண ராவ்

ஒளிப்பதிவு: கமால் கோஷ்

தயாரிப்பு: அஞ்சலி  பிக்சர்ஸ் கம்பைன்ஸ்  (நடிகை அஞ்சலி தேவி மாறும் அவர் கணவர் ஆதிநாராயண ராவ்)          

இயக்கம்: எல்.வி. பிரசாத்

நடிக, நடிகையர் : நடிகர் திலகம், 'அக்கினேனி' நாகேஸ்வரராவ், அஞ்சலி தேவி, எஸ்.வி.ரங்காராவ், பண்டரி பாய், வசந்தா, ரேலங்கி...


கதை:

சந்த்ரம் (நாகேஸ்வரராவ்) ஓர் இளைஞன். ஏழையும் கூட. தன் தந்தையை விபத்தில் பறி கொடுக்கிறான். வறுமையில் வாடுகிறான். அவனுடைய நண்பன் ரகு (ஜனார்த்தன்) திடீரென மாரடைப்பால் மரணம் எய்துகிறான். இறந்த ரகுவிற்கு சுசீலா (பண்டரிபாய்) என்ற மனைவியும் மோகன் என்ற சிறு வயது மகனும் உண்டு. நண்பன் ரகு இறந்ததால் அவன் மனைவி, மகன் இருவரையும் தன் பொறுப்பில் வைத்து காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான் சந்தத்ம். அதனால் கடுமையாக பணிபுரிந்து அதிக மணி நேரங்கள் உழைத்து நண்பனின் குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். இதனால் அவன் உடல் நிலை சீர்கெடுகிறது. அவன் உடல்நிலையைப் பரிசோதிக்கும்  மருத்துவர் சந்தரமை ஒரு நல்ல மலைப் பிரதேசத்திற்கு சென்று சில காலம் அவனை ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்துகிறார்.

சந்திரமும் மருத்துவர் அறிவுரையின்படி சீதகிரி என்னும் அழகிய மலைப் பிரதேசத்திற்கு ஓய்வெடுக்க செல்கிறான். அங்கு பூக்கள் விற்கும் லக்ஷ்மி (அஞ்சலிதேவி) என்ற பெண்ணுடன் காதல் வயப்படுகிறான். அங்கிருக்கும் ஒரு கோவிலில் வைத்து அவளை திருமணமும் செய்து கொள்கிறான். சந்தரமுக்கு சொந்த ஊரிலிருந்து வேலை நிமித்தம் ஒரு அவசர அழைப்பு வருவதால் அவன் லஷ்மியிடம் சொல்லாமல் ஊருக்குத் திரும்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சந்த்ரம் தங்கியிருந்த ஓட்டலில் லஷ்மி வந்து அவனைப் பற்றி விசாரிக்கையில் சந்த்ரம் அங்கில்லை என்பது தெரிகிறது. லஷ்மி இதனால் அதிர்ச்சியடைகிறாள். சந்த்ரம் தன்னை ஏமாற்றி விட்டானோ என்று பரிதவிக்கிறாள்.

லஷ்மி இதனிடையே கர்ப்பமாகிறாள். இனியும் விஷயத்தை மறைக்க முடியாது என்று லஷ்மி தன் தந்தை ரங்கடுவிடம் தான் சந்த்ரமை திருமணம் செய்த விஷயத்தையும், அதனால் தான் கர்ப்பமுற்றிருக்கும் நிலைமையையும் சொல்லி சந்திரனை தேடிக் கண்டு பிடித்து வரும்படி மன்றாடுகிறாள். சந்த்ரமைத் தேடி அவனைக் கண்டுபிடிக்க முடியாமல் மலைக் கிராமத்திற்கு திரும்பும் ரங்கடு தன மகள் லஷ்மியின் நிலைமையால் ஊராரின் கேலிப் பேச்சுக்கு ஆளாகி அவமானம் தாங்காமல் தற்கொலை புரிந்து கொள்கிறான்.

இதற்கிடையில் லஷ்மியை தன்னுடன் அழைத்து செல்ல மறுபடி சீதகிரிக்கு வரும் சந்த்ரம் லஷ்மியின் வீடு தீப்பற்றி எரிந்து போய் விட்டதாகவும், அதில் சிக்கி லஷ்மி உயிரை விட்டு விட்டதாகவும் கேள்விப்பட்டுத் துடித்துப் போகிறான், சோகத்துடன் மறுபடி சொந்த ஊருக்கே திரும்புகிறான்.

ஆனால் தந்தையை இழந்த லஷ்மி தீ விபத்திலிருந்து தப்பி சந்த்ரம் மூலம் தனக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு தாரா( வசந்தா) எனப் பெயரிட்டு அவளை மிகவும் கஷ்ட்டப்பட்டு வளர்க்கிறாள்.

வருடங்கள் உருண்டோட சந்த்ரம் வளர்க்கும் நண்பனின் மகன் ஆனந்த் (சிவாஜி கணேசன்) இளைஞனாகிறான். ஒரு வேலையாக சீதகிரிக்கு வரும் சந்தரன் அங்கு லஷ்மியின் மகள் தாராவைப் பார்த்து காதல் கொள்கிறான். தன் வாழ்க்கை சந்த்ரமால் வீணாகப் போனதாக நினைத்து வருந்தும் லஷ்மி தன் மகள் வாழ்க்கையும் தன்னைப் போல ஆகிவிடக் கூடாதே என்று கவலை கொள்கிறாள். தாரா ஆனந்ததைக் காதலிப்பதைத் தடுத்து எதிர்க்கிறாள். அவனிடமிருந்தும் தாராவைப் பிரிக்க நினைக்கிறாள். இதற்கிடையில் சந்த்ரமும் சீதகிரிக்கு திரும்ப வருகிறான்.

சந்த்ரம் தன் மனைவி லஷ்மியை சந்தித்தானா?

ஆனந்த், தாராவின் காதல் வெற்றி பெற்றதா?

சந்தர்மும் லஷ்மியும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா?

போன்ற கேள்விகளுக்கு சில திருப்பங்களுடன் கூடிய கிளைமாஸ் பதில் சொல்லுகிறது.

'பரதேசி' மற்றும் 'பூங்கோதை' படங்கள் பற்றிய சில சுவையான விசேஷ தகவல்கள்

1. நடிகர் திலகத்தின் முதல் நேரடித் தெலுங்குப் படம் இது.

2. தெலுங்குப் படவுலகின் முடிசூடா நாயகர் 'அக்கினேனி' நாகேஸ்வரராவ் (ANR )அவர்களுடன் நடிகர் திலகம் இணைந்த முதல் படம் இது.

3..பிரபல இயக்குனர் திரு.எல்.வி.பிரசாத் அவர்கள், அஞ்சலி தேவி இவர்களுடன் சிவாஜி இணைந்த முதல் படம்.

4.' பராசக்தி' படத்திற்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் நடிகர் திலகம் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் திலகத்தின் புதுமையான நடிப்பைப் பற்றிக் கேள்விப்பட்ட பக்கத்து புளோரிலிருந்த நடிகை அஞ்சலி தேவி தான் நடிப்பதை நிறுத்திவிட்டு சிவாஜி நடிப்பதைப் பார்க்க 'பராசக்தி' ஷூட்டிங்கிற்கு வந்திருக்கிறார். சிவாஜியின் நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறார்.

5. அப்போதே தெலுங்கு, மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் மிகப் பிரபலமாகி விட்ட நடிகை அஞ்சலிதேவி (சிவாஜிக்கு மிக சீனியர்)  பிரபல மியூசிக் டைரக்டர் ஆதி நாராயண ராவ் அவர்களைத் திருமணம் செய்து கொண்டு 'அஞ்சலி பிக்சர்ஸ்' என்ற சொந்த சினிமாத் தயாரிப்பு கம்பெனி ஒன்றை ஆரம்பித்து 'பரதேசி' படத்தை தெலுங்கிலும், தமிழிலும் தயாரிக்க முடிவு செய்தார். இயக்குனர் எல்.வி. பிரசாத் என்று முடிவாயிற்று. 'பரதேசி' தெலுங்குப் படத்திற்கு தமிழில் 'பூங்கோதை' என்று பெயர் வைக்கப்பட்டது. நாகேஸ்வரராவ் வளர்ப்பு மகனாக வரும் ஆனந்த் கதாபாத்திரத்திற்கு சிவாஜி என்ற அந்த புதுப் பையன் நன்கு பொருந்துவார் என்று அஞ்சலிதேவி சிவாஜியின் பராசக்தி படத்தின் நடிப்பைப் பார்த்து முடிவெடுத்தார். சிவாஜியை தனியே அழைத்து 'பூங்கோதை' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார். முதல் தொகையாக ஒரு நல்ல தொகையைக் கொடுத்து சிவாஜியை மகிழ்வித்தார். அஞ்சலி தேவி.(நடிகர் திலகம்.காம், மற்றும் மதிப்பிற்குரிய திரு.ராகவேந்திரன் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி)

6. சிவாஜியும் அற்புதமாக 'பூங்கோதை' படத்தில் நடித்துக் கொடுத்தார். இதற்கிடையில் 'பரதேசி' தெலுங்குப் படத்திற்காக அந்த கதாபாத்திரத்திற்கு வேறொரு தெலுங்கு நடிகர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவரின் நடிப்பு எல்வி.பிரசாத்திற்கும், அஞ்சலி தேவிக்கும் பிடிக்காமல் போனதால் தெலுங்கிலும் சிவாஜியே செய்தால் நன்றாக இருக்கும் என்று அஞ்சலி தேவி சிவாஜியைக் கேட்க சிவாஜி சற்று தயங்கினார். "நான் நடிக்கப் போகும் பத்திரத்திற்கு நீங்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருக்கும் அந்த தெலுங்கு நடிகரை எனக்காக நீக்கினால் அவர் வருத்தப் படுவாரே" என்று சிவாஜி அஞ்சலி தேவியிடம் சொல்ல, சிவாஜியின் பெருந்தன்மையைப் புரிந்து கொண்ட அஞ்சலிதேவி அந்த தெலுங்கு நடிகரின் மனம் புண்படாத வகையில் அவரிடம் பேசி, அவரை சமாதானப் படுத்தி, அவருக்கும் ஒரு தொகையைக் கொடுத்து, அவரை நீக்கி, பின் சிவாஜியை புக் செய்தார்.

7.அதனால்' பரதேசி' தெலுங்கு, அதன் தமிழாக்கம் 'பூங்கோதை'  இரண்டு மொழிப் படங்களிலும் சிவாஜியே திறம்பட நடித்தார். சிவாஜி தெலுங்கில் வசனங்களை அருமையாக மனனம் செய்து பிரமாதமாக தெலுங்கை உச்சரித்து 'ஆனந்த்' என்ற கதாபாத்திரத்தின் மூலம்  தெலுங்கு மக்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்தார்.

8. பின்னாட்களில் சிவாஜி அவர்கள் தமிழ்த் திரையலகில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த நேரத்தில் (அதாவது தமிழ்த் திரைப்படத் தொழிலின் மொத்த வியாபாரத்தில் மூன்றில் இரண்டு பங்கு வியாபாரம் இந்தக் காலக் கட்டங்களில் நடிகர் திலகம் சிவாஜியை வைத்தே நடந்தது) அஞ்சலி தேவிக்கு வயதாகி விட்டது. 1973 ஆம் ஆண்டு அஞ்சலி தேவி நாகேஸ்வரராவ் அவர்களை வைத்து' பக்த துக்காராம்' என்ற தெலுங்குப் படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். அதில் மிக முக்கியமாக மகாரஷ்டிர 'வீர சத்ரபதி சிவாஜி' வேடம் ஒன்று முக்கியமான பாத்திரமாக, படத்தை முடித்து வைக்கும் பாத்திரமாக வரும். அந்த 'வீர சத்ரபதி சிவாஜி' பாத்திரத்திற்கு நம் சிவாஜிதான் மிகப் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்த அஞ்சலிதேவி அந்தப் பாத்திரத்தில் நடிக்க சிவாஜியை அணுகினார். சிவாஜி அவர்களும் தனக்கு ஆரம்ப காலங்களில் அஞ்சலிதேவி பரதேசி, பூங்கோதை படங்களில் சான்ஸ் கொடுத்து உதவி செய்ததை மறக்காமல் மிகுந்த நன்றி உணர்ச்சியுடன் 'சத்ரபதி சிவாஜி' வேடத்தில் நடித்துத் தர மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். 'பக்த துக்காராம்' படத்தில் ஒரு கால் மணி நேரமே வரும் அந்த வீர சிவாஜி பாத்திரத்தில் 'சத்ரபதி சிவாஜி'யாகவே நடிகர் திலகம் வாழ்ந்து காட்டி இன்றளவும் அந்த பாத்திரத்தைப் பற்றிப் பேச வைத்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் நடித்ததற்காக சிவாஜி அவர்கள் அஞ்சலிதேவியிடம் நன்றி உணர்ச்சியின் காரணமாக ஒரு பைசா கூட வாங்க வில்லை என்பது இன்னோர் செய்தி. 'பக்த துக்காராம்' ஆந்திராவில் சக்கை போடு போட்டு வசூலை வாரிக் குவித்தது.

நடிகர் திலகம் அதன் பிறகு முதல் டெலிவிஷன் தொடராக பம்பாய் தூர்தர்ஷனுக்கு 'சத்ரபதி சிவாஜி' என்ற நாடகத்தை நடித்துக் கொடுத்தார். அப்போது அஞ்சலிதேவி தான் தயாரித்த' பக்த துக்காராம்' படத்தில் வீர சிவாஜியாக நடிகர் திலகம் அணிந்த உடைகளே டெலிவிஷன் நாடகத்திற்கும் பயன்படுத்தப் பட்டன. அஞ்சலிதேவி சிவாஜி அவர்கள் மேல் கொண்ட பேரன்பினால் வீர சிவாஜி உடைகளை டெலிவிஷன் நாடகத்திற்காக நடிகர் திலகம் சிவாஜிக்கு தந்து உதவினார்.

8.1951 -இல் இந்தியில் வெளி வந்த 'ராஜா ராணி' படத்தின் உரிமையை வாங்கி அஞ்சலிதேவி பரதேசி, பூங்கோதை திரைப்படங்களைத் தயாரித்தார். இயக்குனர் எல்.வி. பிரசாத் இந்திப் படத்தின் முழுக் கதையையும் அப்படியே எடுத்துக் கொள்ளாமல் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி சினிமாக்களுக்குத் தக்கபடி கதையை மாற்றி பின் இயக்கம் செய்தார்.

9. நடிகர் திலகத்திற்கு ஜோடியாக தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களில் அப்போது ஓரளவிற்கு பிரபலமாய் இருந்த நடிகை வசந்தா 'தாரா' பாத்திரத்தில் நடித்தார்.

10. நடிகர் திலகம் முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் இயக்கத்தில் நடித்து வெளிவந்து சக்கை போடு போட்ட 'அந்தமான் காதலி' திரைப்படம் பரதேசி மற்றும் பூங்கோதை திரைப் படங்களைத் தழுவி எடுக்கப் பட்டதாகும். தெலுங்கில் நாகேஸ்வரராவ் ஏற்ற பாத்திரத்தை அந்தமான் காதலியில் நடிகர் திலகமும், அஞ்சலிதேவி பாத்திரத்தை நடிகை சுஜாதாவும், நடிகர் திலகத்தின் ஆனந்த் பாத்திரத்தை தெலுங்கு குணச்சித்திர நடிகர் சந்திரமோகனும், தாரா பாத்திரத்தை நடிகை கவிதாவும், ரங்குடு பாத்திரத்தை நடிகர் செந்தாமரையும் சிறு சிறு பாத்திர மாறுதல்களுடன்  ஏற்று நடித்திருந்தனர்.

11..பரதேசி, பூங்கோதை இரு படங்களும் சிவாஜி அவர்களின் படங்களில் மிக மிக அபூர்வமான படங்கள். இப்படங்களை பெரும்பாலோனோர் பார்த்திருப்பதே அரிது. இப்படங்களின் வீடியோ சிடிக்கள் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. நானும் தேடுகிறேன் தேடுகிறேன் தேடிக் கொண்டே இருக்கிறேன். நானும் இப்படத்தைப் பார்த்ததில்லை. பல்வேறு பத்திரிக்கை செய்திகள், ஊடகங்கள், வீடியோ பேட்டிகள் உதவியில்தான் இக்கட்டுரையை வடித்துள்ளேன். அதனால்தான் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி விமர்சிக்க முடியவில்லை. அப்படி இந்தப் படம் பார்க்கும் அதிர்ஷ்டம் நேர்ந்தால் (நிச்சயம் நிகழும்) இப்படத்தில்  நடிகர் திலகம் அவர்களின் பங்களிப்பைப் பற்றி அவசியம் எழுதுகிறேன்.

12. தென்னிந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே முதன் முதலாக ஸ்லோ மோஷன் காட்சி அறிமுகமானது இந்தப் படத்தில்தான். சாகுந்தலை நாட்டிய நாடகக் காட்சியில் ஸ்லோ மோஷன் காட்சி காண்பிக்கப் பட்டதாம். பிரபல இயக்குனர் சாந்தாராம், அவருடைய ராஜ்கமல் கலாமந்திர் சார்பாக ஸ்லோ மோஷன் காட்சிகளுக்காகவே வெளிநாட்டிலிருந்து ஸ்பெஷலாகத் தருவிக்கப் பட்ட சிறப்புக் காமிரா தான் இந்த இரு படங்களுக்காக வாடகைக்கு வாங்கப்பட்டு உபயோகிக்கப் படுத்தப் பட்டதாம். (நன்றி: தி இந்து)

13. இயற்கை சூழல்கள் அதிகம் தேவைப்பட்ட இந்த படங்களுக்கு மொத்தம் நான்கு ஆர்ட் டைரக்டர்கள் பணி புரிந்தனராம். (T.V.S.ஷர்மா,  
வாலி, தோட்டா வெங்கடேஸ்வரா, ஏ.கே சேகர் என்ற 4 ஆர்ட் டைரக்டர்கள்). இயற்கை எழில் சார்ந்த மலைப் பிரதேசங்களிலும் சில காட்சிகள் படமாக்கப் பட்டதாம்.

13. பிரபல ஒளிப்பதிவாளர் கமால் கோஷ் அவர்களின் உதவியாளராக இருந்தவர்தான் பிரபல ஒளிப்பதிவு மேதை ஏ.வின்சென்ட் அவர்கள். இவரிடம் தான் இயக்குநர் எல்.வி.பிரசாத் அவர்கள் நடிகர் திலகத்தின் கண்களைப் பார்த்து இவர் மிகச் சிறந்த நடிகராக வருவார் என தீர்க்க தரிசனமாக கணித்தாராம்

இந்த இரு படங்களைப் பற்றி என்னால் இயன்றவரை திரட்டிய தகவல்களை அளித்துள்ளேன்.

இக்கட்டுரைத்தொடர் முழுதும் என் சொந்தப் படைப்பே.

கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.

நன்றி!

வாசுதேவன்
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4

Post by ராஜா on Sun Nov 24, 2013 12:42 pm

முதலில் இது போன்ற கட்டுரையை எழுதுவதற்கு உங்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன். இன்றைய தலைமுறையினருக்கு தெரியாத பல விசயங்களை உங்களின் பதிவுகள் வெளிக்கொண்டுவருகின்றது. தொடருங்கள் ஐயா நன்றி அன்பு மலர் நன்றி 
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4

Post by vasudevan31355 on Sun Nov 24, 2013 4:10 pm

''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4

சில தவல்கள் தொடர்கிறது.....

14. தன்னை முதன் முதல் ஆதரித்து வாய்ப்பு கொடுத்ததால் அஞ்சலி தேவி அவர்களை சிவாஜி அவர்கள் பாஸ் பாஸ் என்று தான் அழைப்பார். அவ்வளவு நன்றிப் பற்று நடிகர் திலகத்திடம் இருந்தது.

15. இந்தப் படங்களின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதுதான் சிவாஜி அவர்களின் திருமணமும் நடந்தது. ஒரு ஆறு மாத காலம் படப்பிடிப்பை ஒத்தி வைத்து விட்டு அஞ்சலிதேவி சிவாஜி அவர்களை திருமணத்திற்கு அனுப்பி வைத்தார். திருமணம் முடிந்து வரும் போது சிவாஜி நன்றாக சதை போட்டிருந்தார். அதற்கு நாகேஸ்வரராவ் "என்ன சிவாஜி!  மாமனார் வீட்டு சாப்பாடு பலமா! நல்லா சதை போட்டுட்டு வந்துட்டியே" என்று ஜோக் அடித்து சிரித்தாராம்.அது முதற்கொண்டு சிவாஜி அவர்களின் குடும்பத்தாரோடு நெருக்கமாக  இருந்து இருந்திருக்கிறார் அஞ்சலிதேவி.

16. நாகேஸ்வரராவ் இடைவேளை வரை இளவயது சந்த்ரமாகவும், இடைவேளைக்குப் பிறகு நடிகர் திலகத்துத் தந்தையாக வயதான தோற்றத்திலும் முதன் முதலாக நடித்தார். அப்போது அவரும் இளைஞர்தான். நாகேஸ்வரராவ் தந்தையாகவும், நடிகர் திலகம் மகனாகவும் நடிக்க நாம் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா! இன்னொரு கொசுறு செய்தி என்னவென்றால் இதே நாகேஸ்வரராவ் மகன் நாகார்ஜுனனுடன் நடிகர் திலகம் 'அக்னி புத்ருடு' என்ற தெலுங்குப் படத்தில் கை கோர்த்தார். அதனால் அப்பா, பிள்ளை இருவருடனும் நடித்த பெருமைக்குரியவராகிறார் நடிகர் திலகம்.

17. வயதான கெட்-அப்பில் நாகேஸ்வரராவ் அவர்களை போட்டோ செக்ஷனுக்காக புகைப்படம் எடுக்கும் போது குளோஸ்-அப் ஷாட்ஸ் சரிவரவில்லை. இயக்குனருக்கு திருப்தி வரவில்லை. மிகவும் இரக்கப்பட்டு பார்க்க வேண்டிய வயதான வேடம் ஆகையால் பல தடவை நாகேஸ்வரராவை மேக்-அப் மாற்றி மாற்றி திருப்தி வரும் வரை புகைப்படம் எடுத்தார் இயக்குனர் எல்வி.பிரசாத். நாகேஸ்வரராவும் மிக்க பொறுமையுடன் ஒத்துழைத்தார்.

18. சிவாஜி அவர்கள் நாடகங்களில் நடித்து விட்டு பின் திரைப்படங்களுக்கு வந்தார். வந்த புதிதில் நாடகங்களில் உரக்க பேசுவது, எமோஷன் காட்சிகளில் சற்று அதிகப்படியாக நடிப்பது போன்றே இப்படங்களில் அவர் நடிக்க, இயக்குனர் எல்.வி.பிரசாத் அவர்கள்,"தம்பி...நாடகங்களில் காட்ட வேண்டிய அதிகப்படியான முக பாவங்கள், சத்தமான உச்சரிப்புக்கள் சினிமாவுக்கு அவ்வளவாகத் தேவையில்லை. நீ சினிமாவுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு நடித்தால் போதும்" என்று நாடகங்களுக்கும், சினிமாவுக்கும் நடிப்பில் உள்ள வித்தியாசங்களை ஒரு குரு போல நடிகர் திலகத்திற்கு கற்றுக் கொடுத்தாராம். நடிகர் திலகமும் கற்பூரம் போல 'டக்'கென அவர் சொன்னதைப் புரிந்து கொண்டு, சினிமாவுக்கேற்றமாதிரி பிரமாதமாக நடித்து இயக்குனர் எல்.வி.பிரசாத் அவர்களிடமே அதிகப் பட்சமான பாராட்டுக்களைப் பெற்றாராம். தொழிலை சரியாகக் கற்றுக் கொடுத்ததனால் நடிகர் திலகம் திரு. எல்.வி.பிரசாத் அவர்களை கடைசி வரை மறக்காமல் "சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும் என்று எனக்கு சொல்லிக் கொடுத்து என்னை  சினிமா நடிகனாக்கிய செதுக்கிய குரு" என்று குருபக்தியோடு குறிப்பிடுவதுண்டு.


Last edited by vasudevan31355 on Sun Nov 24, 2013 4:14 pm; edited 2 times in total
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4

Post by vasudevan31355 on Sun Nov 24, 2013 4:11 pm

மிக்க நன்றி திரு ராஜா அவர்களே! தங்களுடைய உற்சாகப் படுத்தும் பதிவினால் இன்னும் பதிவுகளை சிறப்பாகத் தர வேண்டும் என்று பொறுப்பு எனக்கு அதிகரிக்கிறது.

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4

Post by தமிழ்செல்விஞானப்பிரகசம் on Sun Nov 24, 2013 4:28 pm

இவ்விரண்டு படங்களைப்பற்றி தகவல்களை அறியத் தந்தமைக்கு நன்றிகள்.
avatar
தமிழ்செல்விஞானப்பிரகசம்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 26
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4

Post by ayyasamy ram on Sun Nov 24, 2013 5:00 pm

 
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4

Post by மாணிக்கம் நடேசன் on Sun Nov 24, 2013 5:44 pm

பூங்கோதை படத்தின் விடியோ எங்கே கிடைக்கும்?

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4

Post by vasudevan31355 on Sun Nov 24, 2013 7:55 pm

அன்பு நெஞ்சங்கள் தமிழ்செல்விஞானப்பிரகசம், அய்யாசாமி ராம், மற்றும் மாணிக்கம் நடேசன் ஆகியோருக்கு பதிவிற்கு பாராட்டு அளித்தமைக்காக என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மாணிக்கம் நடேசன் சார்,

தங்கள் கேள்விக்கு பதிவிலேயே என்னுடைய பதில் உள்ளது. பரதேசி மற்றும் பூங்கோதை படங்களின் ஒளி நாடாக்கள் அல்லது டிவிடி கள் எங்குமே இல்லை, மிகப்பழைய படங்கள் ஆதலால் கிடைப்பது சிரமமே. உலகெங்கிலுமுள்ள பல டிவிடி ஷாப்களுக்கு மெயில் அனுப்பிப் பார்த்து விட்டேன். எங்குமே கிடைக்கவில்லை. நடிகர் திலகத்தின் அத்தனை திரைப்படங்களையும் சேர்த்து விட வேண்டும் என்பதே என்னுடைய மிகப் பெரிய லட்சியம். இடைவிடா முயற்சியின் காரணமாக அதில் ஓரளவிற்கு வெற்றியும் கிடைத்துள்ளது. ஒரு வேளை சென்னை தொலைகாட்சி நிலையத்தார் (தூர்தர்ஷன்) இப்படத்தின் பிரதிகளை வைத்திருக்கலாம். ஆனால் இதுவரை ஒளிபரப்பியதாகத் தெரியவில்லை. நானும் எவ்வகையிலாவது இப்படத்தின் வீடியோவைப் பிடிக்க முயன்று வருகிறேன். அப்படிக் கிடைக்குமாயின் கண்டிப்பாகத் தங்களுக்குத் தெரியப் படுத்துகிறேன்.

நன்றி!
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4

Post by veeyaar on Mon Nov 25, 2013 7:20 am

வாசு சார்
பரதேசி, மற்றும் பூங்கோதை இரு படங்களைப் பற்றிய தகவல்கள் மிகவும் அபூர்வமானவை. நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய இந்தத் தொடர் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது.
பாராட்டுக்கள்.
ராகவேந்திரன்
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum