ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நாஸ்கா கோடுகள், தமிழர் விமானதளமா?

View previous topic View next topic Go down

நாஸ்கா கோடுகள், தமிழர் விமானதளமா?

Post by செம்மொழியான் பாண்டியன் on Fri Nov 22, 2013 4:30 pm

பெர்முடா முக்கோணம், ராம் – சேது பாலம், போன்று உலகில் விடை கண்டறியப்படாத விசித்திரங்களுள் ஒன்றைத்தான். நாஸ்கா கோடுகள் என்று அழைக்கப்படும் வடிவங்கள் தென் அமெரிக்காவின் பெரு என்ற நகரின் அருகே மலைத் தொடரில் அமையப்பட்டுள்ளது. சாதாரணமாக தரையில் இருந்து பார்த்தால் எந்த ஒரு வித்தியாசமும் இல்லாத நிலப்பரப்பாக தென்படும் இந்த மலைத்தொடர் சற்று உயரப் பறந்து வானில் இருந்து பார்க்கும் போது அதிசயமான வரிகளையும், உருவங்களையும் கொண்டதாகத் தெரிகிறது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3500 மீட்டர் உயரமுள்ள இந்த மலைத் தொடரில் மிகவும் நேர்த்தியாக, துள்ளியமாக சமன் செய்யப்பட்டார் போல காட்சி தரும் இந்த நிலபரப்பு நவீன கால விமான ஓடுதளத்தைப் போன்றே காட்சி அளிக்கின்றன. மேலும் இங்கே சிலந்திப் பூச்சிகளின் உருவங்களும் தென்படுகின்றன. இவை அனைத்தும் பண்டைய கால விமான தளங்களாகவும், விமானம் தரையிறங்க தேவையான அறிகுறிகளாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்ற சந்தேகங்களை உருவாக்குகுன்றன.

சரி, இதற்கும் தமிழருக்கும் என்னப்பா சம்பந்தம் என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றுகிறதல்லவா? சற்று விரிவாக பார்ப்போம்.

உலகமெங்கும் உள்ள பகுதிகளில் சென்று வாணிபம் செய்து தம் நாகரீகத்தை வேறூன்றியவன் தமிழன் என்று நாம் சொல்லியிருந்தாலும் அதை இங்கு ஆதாரங்களுடன் எடுத்துரைக்க கடமைப்பட்டிருகிறோம்.

தென் அமெரிக்காவில் நவராத்திரித் திருவிழா!
பாரதத்தில் கொண்டாடப்படும் மிகவும் முக்கிய திருவிழாக்களுள் ஒன்றான நவராத்திரித் திருவிழா பெரு நகரில் ராம – சீதா என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

தென் அமெரிக்க தெய்வங்களின் ஒற்றுமை!

மெக்ஸிக சிவாலயம்
தென் அமெரிக்காவில் முழுவதும் தோண்டிப் பார்க்கும் போது விநாயகர் சிலைகள் கிடைகின்றன. யானை வடிவத்துடன் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த தெய்வச் சிலைகளைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர். இதில் என்ன வியப்பு என்று கேட்க்கிறீர்களா? தென் அமெரிக்கப் பகுதிகளில் யானைகளே இருந்ததில்லை, இன்றும் வாழ்வதில்லை என்பது தான் அந்த வியப்பிற்கு காரணம். மேலும் இப்பகுதி மக்கள் சூரியனை வழிபடும் பழக்கம் கொண்டவர்கள்.

மொழி ஒற்றுமை!
ஸ்பெயின் படையெடுப்பிற்கு முன்னர் மெக்ஸிகோவில் வாழ்ந்த மக்கள் “Aztec” என்று அழைக்கப்பட்டனர். இது “Asthikar” என்ற சொல்லில் இருந்து மறுவியதாக இருக்கலாம்! இதே போல் பெருவில் வாழ்ந்த மக்கள் “Incas” என்றழைக்கப்பட்டனர். இது “Ina” என்ற சொல்லில் இருந்து உறுப்பெற்றதாக இருக்கக் கூடும். “இனா” என்பது சூரியனைக் குறிக்கும் ஒரு சொல். இராமரை “இனகுல திலகம்” என்று அழைப்பதுண்டு. அதாவது சூரிய குலத்தைச் சேர்ந்தவன் என்று பொருள்.

மேலும் இந்த பகுதியில் வாழும் மக்கள் கடலில் பயன்படுத்தும் ஓடங்களை கட்டுமரம் என்று அழைக்கின்றனர். இது ஒரு தூய தமிழ் சொல் என்பதும் இன்றளவும் தமிழில் கட்டுமரம் எனும் சொல் பயன்பாட்டில் உள்ளது உலகமறிந்தது. மேலும் இவர்களின் மூலம் தான்ன் ஸ்பெயின், பிரஞ்சு மற்றும் ஜெர்மன் மொழி வாயிலாக கட்டுமரம் என்ற சொல் ஆங்கிலத்தில் ஊடுறுவியது என்கிறது மொழி ஆய்வுக் குறிப்பு. அது மட்டுமல்ல அவர்கள் இன்றும் கட்டுமரம் கட்டும் தொழில் நுட்பம் தமிழர்களின் அதே தொழில் நுட்பத்தை ஒத்து அமைந்துள்ளது.

தமிழரின் கடல் பிரயாணம்!
பழந்தமிழர் கடல் பிரயாணங்களில் தலைசிறந்து காணப்பட்டனர்.”இந்தியர்கள் தலைசிறந்த கடல் பிரயாணிகளாக இருந்தனர் மேலும் அவர்கள் நாகரீகத்திலும் முதிற்சி பெற்றவராய் இருந்தனர். கொலம்பஸ் பிறப்பதற்கு பல நூற்றாண்டிற்கு முன்னரே அவர்களுடைய கலாச்சாரத்தை ஜாவா, பாலி, சுமத்ரா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, சாம்பா, அன்னம் மற்றும் சியாம் ஆகிய தேசங்களில் நிறுவி 14ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்து வந்தனர்” என்று ஆராய்ச்சியாளர், சமன் லால் கூறுகிறார்.

இது மட்டுமல்ல, “அமெரிக்க கண்டத்திற்கு வந்து அமெரிக்கர் என்று பெயர்பெற்றவர்கள் அனைவரும், கிழக்கே இருக்கும் இந்தியாவில் இருந்து நீரோட்டத்தால் கொண்டுவந்து சேர்க்கப்பட்டவர்கள்”, என்று மெக்ஸிக அரசு ஆராய்சியாளரே தெரிவித்திருக்கிறார். இது மெக்ஸிக வெளியுறவு அலுவலகத்தால் வெளியிடப்பட்ட புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

தென் அமெரிக்க அரசு மற்றும் விழாக்கள்!தென் பாரதத்திலும் பெங்காலிலும் சரக் பூஜா என்று ஒரு விழா கொண்டாடப்படுவதுண்டு. இதே விழா மெக்ஸிகோவிலும், பெருவிலும் கொண்டாடப்படுகிறது. மெக்ஸிகோவில் உள்ள பழங்கால கோவில்கள் கம்போடியாவில் உள்ள தமிழர்கள் கட்டிடக் கலையுடன் கட்டப்பட்ட கோவில்களைப் போல் இருக்கின்றன. மன்னர்களின் முன் ஆலவட்டம் வீசுவது, மன்னரின் மேடை, ஆசனம், கொடை மற்றும் கிரீடம் ஆகியவை அரசரின் கௌரவம் சார்ந்த பழக்கமாக பாரதத்தில் மன்னர்களால் பின்பற்றப்பட்டுள்ளது. மெக்ஸிகோ மற்றும் பெரு நாட்டு மன்னர்களும் இதை பின்பற்றியுள்ளனர்.

இவர்களின் அரசாட்சி முறையும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள இந்து மற்றும் புத்த மத அரசர்களின் ஆட்சியைப் போன்றே அமைந்திருக்கிறது. மேலும் இவர்களது கட்டிட கலையும் தென்னிந்திய கட்டிடக்கலையை ஒத்து அமைந்துள்ளது. வாஸ்து பார்த்து கட்டிடம் கட்டும் பழக்கம் இவர்களுக்கு இருந்துள்ளது. மெக்ஸிக அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள மெக்ஸிக்க மன்னர்களின் கிரீடம், இந்து மற்றும் புத்த மத அரசர்களின் கிரீடத்தைப் போலவே சூரியன் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

விளையாட்டு!
பழந்தமிழரின் பொழுதுபோக்கு விளையாட்டான தாயம் பட்டௌளி என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது. இதே விளையாட்டு மெக்ஸிகோவிலும் பெருவிலும் பட்ச்சிசி (Pachisi) என்ற பெயரில் இருந்துள்ளது.

அரசர்கள் சிம்ம ஆசனத்தை (Lion throne) பயன்படுத்துவது அவர்களுடைய கௌரவத்தைக் குறிக்கும் பழக்கமாக பாரதத்தில் இருந்துள்ளது. இதே போன்ற சிம்மாசனங்களை மெக்ஸிக அரசர்களும் பயன்படுத்தி வ்அந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மெக்ஸிகோ, குடெமலா, பெரு, பொலிவியா மற்றும் கொண்டுராஸ் ஆகிய நகரங்களில் உள்ள தெய்வங்கள் பாரதத்தில் வழிபடப்பட்டு வந்த தெய்வங்களை நினைவுபடுத்துகின்றனர். மேலும் இங்கே பாரதத்தில் உள்ளதை விட அதிக படியான தெய்வங்களும், மிக பிரம்மாண்டமான விலையுயர்ந்த ஆலயங்களும் அமையப்பட்டுள்ளன. சிவன், விநாயகர், இந்திரா, சூரியன், அனுமன், விஷ்னு மற்றும் விஷ்னுவின் ஆமை வடிவ கூர்ம அவதாரம் ஆகியவை மத்திய மற்றும் தென் அமெரிக்க பகுதிகளின் பிரதான கடவுள்களுள் சில. இங்கே சிவன், விநாயகர் மற்றும் விநாயகரின் அருகில் இருக்கும் சுண்டெலியைக் கூட பெருவில் வாழ்ந்த “இன்கா” பழங்குடியினரின் புராதாண கதைகளில் காணலாம். டிகோ ரிவெரா என்ற மெக்ஸிக பழங்கால கோவிலில் கணபதியை தரிசிக்கலாம். குடெமலா அருங்காட்சியகத்தில் அனுமன் மற்றும் சிவனின் சிலைகளைக் காணலாம். மேலும் மெக்சிகோவில் உள்ள வெரா க்ருஷ் என்ற இடத்தில் லிங்க வடிவ சிவனையும் காணலாம். இவை அனைத்தும் தென் அமெரிக்க பழங்குடியினரின் வழிபாட்டு கடவுள்களாக பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்துள்ளன.

மெக்ஸிகோவில் உள்ள விஷ்னு சிலையை அவரது கையில் உள்ள சங்கு, சக்கரத்தை வைத்து எளிதாக உணர முடிகிறது. யுனைடட் ஃப்ரூட் லைன் என்ற நறுவனம் குடெமலாவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் விஷ்னுவின் இந்த ஆமை வடிவ கூர்ம அவதார சிலையை பாதுகாத்து வருகிறது. இதை அவர்கள் ஆமைக் கல் என்று பெயரிட்டுள்ளனர். இந்திராவின் சிலையும், விஷ்னுவின் வாமன அவதாரச் சிலையும் மெக்ஸிக தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவற்றுல் ஒன்று பாலியில் இருந்தும் மற்றொன்று மெக்ஸிகோவில் இருந்தும் கிடைக்கப்பட்டவை.

மெக்ஸிகோவில் இருக்கும் கோவில்களுள் மிகப் பெரியது சிவன் கோவில். போர்கடவுளாக வழிபடப்பட்ட சிவன் பாம்புகளால் சூழப்பட்டுள்ளார். இக்கோவில் சுமார் 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மேலும் இங்கு சுமார் 3000 தேவ தாசிகள் வாழ்ந்து இறைப்பணியை ஆற்றியுள்ளனர். கோவில்களில் தேவதசிகள் இருக்கும் வழக்கம் தமிழக கோவில்களில் தான் பின்பற்றப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கோபுரம் தமிழக கட்டிடக்கலையில் மிகவும் அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் படையெடுப்பின் போது இக்கோவில் சிதைக்கப்பட்டு மறு சீரமைப்பு பணிகள் நடந்ததற்கான தடையங்கள் தென்படுகிறது. மெக்ஸிகோவின் டிக்கல் நகரில் உள்ள கோவில்கள், பாரத தேசத்தில் உள்ள மதுராவில் உள்ள கோவில்களைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தொல்லியல் ஆய்வாளரான ஈ.ஜி. ஸ்கொய்ர், தனது ஆய்வின் இறுதியில் 1851 ஆம் ஆண்டு இதைப் பற்றி, “இந்த புராதான கட்டிடங்களின் உள்ளேயும், வெளியேயும் ஆய்வு செய்யும் போது நமக்கு வெளிப்படையாக புலப்படும் விஷயம் என்னவென்றால், இவை இந்துஸ்தானிய கலைகளை ஒத்து அமையப்பட்டுள்ளது.” என்று எழுதுகிறார்.

மேலும் சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபெல்ஸ் குறிப்பிடுகையில், பாரதத்தில் பின்பற்றப்பட்டதைப் போலவே உடன் கட்டை ஏறுதல், பூனுல் மாற்றுதல், காதில் துளையிடுதல் போன்ற பழக்க வழக்கங்களும், சாதி பிரிவுகளும் இங்கிருந்த மக்களிடையே இருந்துள்ளது என்று குறிப்பிடுகிறார்.

“லீ ரேஸஸ் ஆர்யன்ஸ் டீ பெரு” என்ற புத்தகத்தில் லோபெஸ் என்னும் ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர், “பெரு நாட்டின் புராண காவியங்களின் ஒவ்வொரு பக்கங்களிலும், இராமாயணம் மற்றும் மஹாபாரதத்தின் சுவடுகள் பதிந்துள்ளன” என்கிறார். மேலும் சமஸ்கிருதமே அங்கிருந்த அரசர்களின் மொழியாக இறுந்திருக்கக்கூடும் என்று அவர் கூறுகிறார்.

இராமாயணத்தில் பெரு!

பெருவில் உள்ள திரிசூல வடிவம் (Trident in Peru)
இராமாயணத்தில், சீதையை இராவணன் கடத்திச் சென்ற பிறகு சுக்ரிவன் தனது படை வீரர்களை சீதையைத் தேடி வர அனுப்புகிறான். அப்போது கிழக்கே செல்லும் வீரர்களுக்கு ஒரு சின்னம் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டு அங்கு தேடி வர சொல்கிறான். அந்த சின்னமானது “திரிசூல வடிவில் ஒரு மலையில் பொறிக்கப்பட்டிருக்கும், மேலும் அது வானத்தில் இருந்து பார்க்கும் போது ஒளிரும்” என்றும் குறிப்பிடுகிறான்.

இதே போன்றொரு சின்னம் பெரு நாட்டின் மேற்கு கடற்கரையோரம் ஒரு மலையில் அமையப்பட்டுள்ளது.

சரி, சீதையைத் தேடி சுக்ரிவன் தனது வீரர்களை இவ்விடத்தைக் குறிப்பிட்டு அனுப்பியதன் நோக்கம் என்ன? அதாவது இராவணன் சீதையைக் கவர்ந்து தமிழக (தென்) பகுதி வழியாக சென்றிருக்கிறான். தென் பகுதி வழியாக சென்றிருந்தால் அவன் அங்கே வாழக்கூடியவனாகத் தான் இருக்க வேண்டும். மேலும் கவர்ந்து சென்ற சீதையை எளிதில் மீட்க முடியாத இடத்திற்கு எடுத்துச் செல்வதாய் தான் அவன் திட்டமிட்டிருக்க வேண்டும். மேலும் விமானம் மூலம் தான் சீதை கடத்தப்பட்டிருக்கிறாள். எனவே அவள் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் சுக்ரிவனுக்கு வருகிறது. மேலும் தென் பகுதியில் வாழக்கூடியவனாய் இருந்தால் இவ்விடம் சென்றிருப்பான் என்ற சந்தேகம் எழுவதன் மூலம் தமிழன் இப்பகுதியுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவனாய் இருந்திருக்க வேண்டும்.

இது மட்டுமல்ல இராமன் சீதையைத் தேடி போகும் போது இலங்கைக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையே மிதக்கும் பாலத்தை கட்டினார்கள். இதை கட்டியது இராமனுடன் வந்த நலனைப் போன்ற வானரங்களுள் சிலர். நலன் என்பவர் விஸ்வகர்மா என்னும் கட்டிடப் பொரியாளரின் மகன். இவர்கள் இணைந்து மிதக்கும் பாறைகள், மரங்கள், மரக்கட்டைகள், வேர்கள் மற்றும் நாணல்களைக் கொண்டு இந்த பாலத்தை அமைத்தனர். இதற்கு அதாரமாக அதைக் கட்ட பயன்படுத்தப்பட்ட மிதக்கும் கற்கள் இன்னும் இராமேஸ்வரத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது போன்ற கிட்டத்தட்ட 20 மிதக்கும் தீவுகள் பாரதத்திற்கும் இலங்கைக்கும் இடையே காணப்படுகின்றன. இது போன்ற தீவுகளை இலங்கைக்கும் பாரததிற்கும் எளிதாக சென்றுவர மற்றும் தமது படைகளின் போக்குவரத்திற்காக இராவணனும் கட்டி இருக்கக்கூடும்.

இன்றும் கூட இது போன்ற மிதக்கும் தீவுகளை பெரு நாட்டு பழங்குடி மக்கள் இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள தீவுகளைப் போலவே கட்டுகிறார்கள்.

எனவே தமிழர்கள் பல்லாயிரமாண்டு முன்னரே தென்னமெரிக்காவில் சென்று தன் கலாச்சாரத்தை நிறுவியது புலப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வுகள் அனைத்தும் இராமாயணக் காலத்திற்கு ஒட்டியே நிகழ்ந்துள்ளன. தென் அமெரிக்காவில் கிடைக்கப்பெற்ற தொல்லியல் சான்றுகள் சுமார் கி.மு 1200 ஆம் ஆண்டுகளுக்கு பிறகானதாக இருக்கின்றன. எனவே இங்கு இன்னும் ஆய்வு செய்தால் மேலும் பல்லாயிரமாண்டு முந்தைய தடையங்கள் கிடைக்க வாய்ப்புண்டு.

பழங்காலத்தில் விமானம் இருந்துள்ளதைப் பற்றி ஏற்கனவே நாம் வேறொரு பதிவில் பார்த்தோம். இது அதை மெய்ப்பிக்கிறது. காரணம் இந்த கோடுகள் தரையில் இருந்து பார்க்கும் போது தெரிவதில்லை. இதையே தான் சுக்ரிவனும் குறிப்பிடுகிறான். மேலும் மாயன் நாகரீகம் என்பது தமிழர் நாகரீகமே என்பதையும் முந்தைய பதிவுகளில் பார்த்துள்ளோம்.

avatar
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1276
மதிப்பீடுகள் : 369

View user profile

Back to top Go down

Re: நாஸ்கா கோடுகள், தமிழர் விமானதளமா?

Post by டார்வின் on Fri Nov 22, 2013 8:02 pm

    
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: நாஸ்கா கோடுகள், தமிழர் விமானதளமா?

Post by T.N.Balasubramanian on Fri Nov 22, 2013 9:17 pm

சுவையான தகவல்கள். 
peru நாட்டில் அடுத்ததேர்தலில், தமிழ் நாட்டில் இருந்து  குறைந்தது நிச்சயமாக ஒரு கட்சியாவது போட்டி இடும் 

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: நாஸ்கா கோடுகள், தமிழர் விமானதளமா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum