ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 amutha jothi

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!

View previous topic View next topic Go down

குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!

Post by sundaram77 on Wed Nov 20, 2013 6:18 pm

அன்பு நண்பர்களே,
நெடுங்காலம் ஆகி விட்டது...
ஒரு பாடலை இப்போதாவது இடலாம் என எண்ணம் !

ஒருத்தி , அவளது தோழி , அவ்வொருத்தியின் தலைவன் ! மூவர்தான் இங்கு உலகம் !!
இந்த தோழி இருக்காளே - நான் சொல்வது சங்கப்பாடல்களில் காணும் தோழிகளை - எந்த இலக்கியத்திலும் காண முடியாதவள் ! அடியேன் இதைச் சொல்லவில்லை ; சொல்வதற்கான தகுதியும் இல்லை - ஏனெனில் தெரிந்தது , தமிழன்றி ஆங்கிலம் மட்டும்தான் ! ஆயின் , பல மொழிகள் கற்றுத்துறைப் போகிய ஞானம் சிறந்த பல்லோர் சங்க இலக்கியத் தோழிகள் போல் திறம் வாய்ந்தோர் வேறு இலக்கியங்களில் இல்லை என உறுதிபடக் கூறியுள்ளனர் ! She is not just a Friend , Philosopher and Guide ! இவர்களுக்கும் மேலானவள் !! தலைவியைத் தன் உயிரெனத் தாங்குபவள் ; தலைவியின் மகிழ்ச்சி தன்னதே எனத் திளைப்பவள் ; அவளின் மென் மனதில் தோன்றும் - முகத்தில் அல்ல அன்பர்களே - சிறு மாறுதல்களையும் உடனறிபவள் ; அது துயரம் சார்ந்ததெனில் உடன் அதை துடைத்தெறிய முயல்பவள் ; தலைவியின் மனம் களவு போனதெனில் , அந்நிலையில் முழு உறுதுணையாய் இருப்பவள் ; தூதும் போவாள் ; தலைவிக்கு அமைச்சாயும் இருப்பாள் ; தலைவனையும் , தவறிழைக்கையில்
அவன் செயல்களை சாடுபவள் ; தலைவி சொல்ல நினைத்தும் சொல்ல முடியாதவற்றை தலைவனிடம் நயம்படச் சொல்பவள் ;
தலைவனையும் நட்பாய் நினைப்பவள் ...

இப்படிப்பட்ட தோழி கிடைக்க கோடி கோடி புண்ணியம் - தலைவி மட்டுமில்லை , அவளது முன்னோர்களும் -செய்திருக்கவேணும் ...

சரி , இங்கு என்னவென எட்டிப்பார்ப்போமே ...

தன் உற்ற தோழியிடம் தலைவி சொல்கிறாள் ...
என் தலைவனிடம் நீ , என் பொருட்டு , கடிந்து பேசாதே ; உரையல் என்கிறாள் .
ஏன் அவ்வாறு சொல்கிறாள் ..!? ஒன்றுமில்லை , கதை இதுதான் ...

தலைவன் ஏதோ ஒரு நிமித்தமாய் தலைவியை விட்டு சிலகாலம் பிரிந்துவிட நேர்கிறது .
( இதை , சிலர் பரத்தமையோடு உள்ள உறவினால் பிரிந்துள்ளான் என்றும் கொள்வர் ; அப்படிப் பொருள் கொள்வதில் என்ன திருப்தியோ...!?) காதலில் கனிந்து நிற்கும் அன்புள்ளம் கொண்ட இருவர் பிரிந்திருத்தல் வேதனையே . அவளுடன் உடனுறையனாக , மாதொரு பாகனாக , வசித்த நாளெல்லாம் அவள் சுகித்திருந்தவள் மட்டுமல்ல ; இல்லறமும்மாண்புற நடத்தி வந்தவள் . அதனாலேயே , அவளின் பெண்மையுள்ளம் மலர்ந்து மணம் நீக்கமற வீசலாயிற்று ; அவளின் மேனியழகும் மிகுந்து , வாழ்நாளும் நீடிக்குமாய் இன்புற தோற்றம் கண்டது .
ஆனாலும் என் ...!? அத்தலைவன் மனம் பேதலுற்று அவளைப் பிரிந்தபோது , அவளது மேன்மைகளும் அவளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டன ; அவளது பெண்மை நலங்கள் தொலைந்தது மட்டுமல்லாமல் அவளது உடலழகும் மாசுபட்டது ; குறைபட்ட இவ்விரு நலங்களால் அவளது இன்னுயிரும் நீங்கிவிடும் நிலை ; அப்படியும் , தலைவன் மாட்டு அத்தலைவி கொண்ட காதலன்பு குறையவில்லை ! அதானாலேயே , அவள் தோழியிடம் இவ்வாறு கூறலானாள் :

" என் இனிய தோழியே, தலைவரின் பிரிவு என் அனைத்து நலங்களையும் தொலையச் செய்ததுவே ; அவனுக்காகவே வாழ்ந்த என் உயிரும் கழிந்து விடும் போலும் ! என் நிலை பொறுக்காது அவனை சுடு சொற்களால் தீண்டியிருக்கிறாய் .உன்னை எனக்குப் புரியாமல் போய்விடுமா ! ஆனாலும் , நீ இனி அவனை இம்மாதிரியெல்லாம் கடிந்து பேசாதே ! ஏன் தெரியுமா ... என் தலைவனின் நேசம் முன் போல் சுடர் விடவில்லை ; அப்படி உள்ளபோது , நான் எப்படி அவனிடம் ஊடல் கொள்வது ; உரிமையிருந்தால் அல்லவா , கோபமோ , புலவுமோ செல்லும் ; அப்படியான  நிலைதான் இப்போதில்லையே ! இருப்பினும் அவனை நான் ஏற்றுக் கொள்கிறென் ; ஏனென்று விளங்குகிறதா தோழியே ...! அவன் எனக்கு கணவானாக அன்பு காட்டதபோதும் , எமக்கு அன்னை போலும் தந்தை போலும் அன்பு காட்டுகின்றானே ; என் அன்னையை நான் புறக்கணிக்க இயலுமா ?! ; எம் தந்தைக்குதான் நான் அடங்காது ஒழுக முடியுமா ?! இயலாது தானே ! அதனால் , அவனின் அன்பினை நானும் இந்தவாறு இப்போது பாராட்டுகிறேன் ; அவனை வரச் சொல்லடி ; அவன் இனி எமக்கு அன்னையும் அத்தனமாய் இருக்கட்டும் !"

நன்னலம் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரையல் ; அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ , தோழி !
புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே.


-அள்ளூர் நன்முல்லையார். ( குறுந்தொகை 93 )


ஆழத்திலும் ஆழ்ந்த தன் உள்ளக் குமுறல்களை எவ்வளவு நுட்பமாய் இத்தலைவி வெளியிடுகிறாள் ...
அவளுக்கு, கழிந்த காதலின் பெருமை இனிக்காண முடியாது எனத் தோன்றினாலும் தலைவனை விட்டுக்
கொடுக்கவும் - அதுவும் தன் உயிரனைய உற்ற தோழியிடம் கூட - அவள் மனம் ஒப்பவில்லை ...

சரி , அன்பர்களை , செவ்வியல் இலக்கியத்தின் சீரியக் குணக்கூறுகளான அமைதியும் , செறிவும் , கட்டுக்கோப்பும்
கொண்ட இக்குறுந்தொகைப் பாடலை நம் உள்ளம் அள்ளும் வண்ணம் நான்கே நான்கு வரிகளில் யாத்தவர்
அள்ளூர் ( என்ன பெயர் பொருத்தம் ! ) நன்முல்லையார்!

இப்பாடலில் எளிய சொற்களே உள ; முதல் வரியில் உள்ள இரண்டு ' நலம் ' கவனிக்கப்பட வேண்டியது !


சாஅய் - சாய்ந்து , மங்கி , குறைந்து
கழியினும் - நீங்கினும் , பிரியினும்
உரையல் - சொல்லாதே , குறையாக சொல்லாதே
புலவி - ஊடல்

நீரும் நிழலது இனிதே ; புலவியும்
வீழுநர் கண்ணே இனிது .


அன்புடன்,
சுந்தரம்
avatar
sundaram77
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 77
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum