ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சங்கப்பலகை

View previous topic View next topic Go down

சங்கப்பலகை

Post by சாமி on Tue Nov 19, 2013 11:36 am

"சங்கப்பலகை' - என்ற இப்புதிய பகுதிக்கு, தமிழ் இலக்கியத்தை முதன்மைப் பாடமாக (இளங்கலை, முதுகலை, இளம் முனைவர், முனைவர்) எடுத்துப் படிக்கும் மாணவர்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. மாணவர் பெயர், முழு முகவரி, தொ.பே.எண், படிக்கும் கல்லூரி / பல்கலைக்கழகத்தின் பெயர், அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றை இணைத்து மூன்று பக்கங்களுக்கு மிகாமல் (500 சொற்களுக்குள்) எழுதி அனுப்பவும். மின்னஞ்சலில் அனுப்புவோர் ஜ்ர்ழ்க் மற்றும் ல்க்ச் ஃபைல் இணைத்து அனுப்ப வேண்டும். - -ஆசிரியர் - தினமணி
*******************************************************************************************************************

சங்கப்பலகை: கல்வெட்டில் சமயப்பொறை!
பா. ஆடலரசு - முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

சமயம் என்பது இறையுணர்வு பற்றி விரிவாகக் கூறும் மனித மனம் பற்றிய கருத்துகளாகும். மனிதனுடைய அனுபவங்களில் முதன்மை அங்கமாக சமயம் அமைந்துள்ளது. மக்களின் மனப்பக்குவமும் வாழ்க்கைப் பக்குவமும் செம்மையாக அமைய வேண்டும் என்று அவ்வப்போது ஞானியர் தோன்றிக் கூறிய கருத்துகளே பல சமயங்கள் தோன்ற காரணமாயின. அதனால், சமுதாயத்தில் பல்வேறு சமயப்பூசல்கள் தோன்றலாயின. எனவே, இன்றைய சமுதாயத்தில், சமயப் பொதுமையை போற்றிப் பேண வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆனால், 737 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தமிழர்கள் சமயப் பொதுமையை வளர்த்து வந்துள்ளனர் என்பதை ஓர் கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில், திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் பேருந்துச் சாலையில் பதினோராவது கி.மீ. தொலைவில் "பெருமுக்கல்' என்னும் ஊர் உள்ளது. இவ்வூரின் மலையுச்சியில் "புற்றிடங் கொண்டார்' எனும் கோயிலில் காணப்படும் கல்வெட்டு பல அரிய வரலாற்றுச் செய்திகளை வழங்குகிறது. இக்கல்வெட்டு விக்கிரம பாண்டியனுடைய 7-ஆவது ஆட்சியாண்டில் (கி.பி.1275) உருப்பெற்றுள்ளது. அக்கல்வெட்டுச் செய்தி வருமாறு:


"இவை அணுக்கப் பல்லவரையன் எழுத்து, செம்பி

யன் பல்லவரையன் எழுத்து, தென்னவ தரையன்

எழுத்து, வாகுலராயன் எழுத்து, மழவராயன்

எழுத்து, தேவகண்டன் எழுத்து, குருகுலராயன்

எழுத்து, செம்பியநரையன் எழுத்து, மீனவன்

முடையான் எழுத்து, வானவன் விழுப்பரையன்

எழுத்து, தேவாண்டை எழுத்து, குலோத்துங்க

சோழப்பட்டினனாட்டு வேளாண் எழுத்து, குன்ற

மெடுத்தான் எழுத்து, திருவண்ணாமலையுடை

யான் எழுத்து, இராசாமாணிக்கப் பல்லவராயன் எழுத்து,

அருள்மொழிப் பல்லவராயன் எழுத்து, பட்டினநாட்டு

வேளாண் எழுத்து, தென்னவராயன்

எழுத்து, இராசராசப் பட்டினனாட்டு வேளாண்

எழுத்து, வில்லவன் விழுப்பரையன் எழுத்து, திருச்

சிற்றம்பல முடையான் எழுத்து, சிவக்கொழுந்தன்

இராசேந்திர சோழ விழுப்பரையன் எழுத்து,

அரையன் சிற்றம்பலமுடையான் எழுத்து, அரும்

பாக்கியான் எழுத்து, நல்லா தன் திருவண்ணா

மலையுடையான் மளவராயன் எழுத்து'

மொத்தம் 36 வரிகளில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெயரோடும் எழுத்து என்று முடிவு பெற்றிருப்பது சிந்திக்கத்தக்கது. இப்படி ஒரே கல்வெட்டில், அனைத்து சமயத்தவரையும் ஒன்றாக வைத்து முப்பத்தொரு பெயர்களைக் காண்பது அரிதானது. வைணவ சமயத்தவர் சார்பாக குன்றமெடுத்தான் என்பவனும், சைவ சமயத்தவர் சார்பாக சிவக்கொழுந்தன், இராசேந்திர சோழ விழுப்புரையன், அரையன் சிற்றம்பலமுடையானும் சான்றாக உள்ளனர். புத்த சமயச் சார்பாக

வாகுலராயன் என்பவனும், சமண சமயத்தின் சார்பாக தேவகண்டன், தேவாண்டை, குருகுலராயன் ஆதிபுருஷன் ஆகியோர் உள்ளனர்.

இவ்வாறு, சமயப் பொறைமையோடு சைவ, வைணவ, புத்த, சமணம் என்று அனைத்து சமயத்தினரும் இக்கல்வெட்டில் சான்றாக இருப்பதிலிருந்து, அந்நாளில் அனைத்து சமயத்தினரையும் சமமாக நடத்தியுள்ளனர் என்பதை உணர முடிகிறது. சமுதாயத்தில் பாழ்பட்டுக் கொண்டிருக்கும் சமய ஏற்றத்தாழ்வுகள், பூசல்கள் போன்றவற்றால் சமயத்தைப் பாழ்படுத்தி வரும் சிலருக்கு இந்தக் கல்வெட்டு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: சங்கப்பலகை

Post by சாமி on Tue Nov 19, 2013 11:39 am

சங்கப்பலகை: பெண்பாற் புலவர்களின் சமுதாய ஆளுமை! ஜா. புஜ்ஜி

பண்டைத் தமிழக மகளிர் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருந்துள்ளனர் என்பதை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். சங்க இலக்கியங்களில் 42 பெண்பாற் புலவர்கள் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அக்காலத்தே மகளிர் கல்வி கேள்வியில் சிறந்து விளங்கினர். பெண் கல்வியில் சிறந்த நாடாக சங்ககாலத் தமிழகம் விளங்கியது.

ஒளவையார், பொன்முடியார், ஆதிமந்தியார், காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார் முதலானோர் புலவர்களாக இருந்து இலக்கியத் தொண்டாற்றியுள்ளனர். அவர்களுள் ஒüவையார், பொன்முடியார் ஆகிய இருவரின் சமுதாய ஆளுமைகளைக் காண்போம்.

"பாணர்' குடியில் பிறந்த ஒüவையார் அரசியல் ஆலோசகராகவும், தூது செல்பவராகவும் இருந்திருக்கிறார். ஆண் - பெண் நட்பிற்கு ஒரு முன்னோடியாக இருந்ததையும் காணமுடிகிறது.

ஒரு சமயம், தகடூர் மன்னன் அதியமானுக்கும், காஞ்சி மன்னன் தொண்டைமானுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாகத் தொண்டைமான் அதியனின் மீது போர் தொடுக்க விழைந்தான். ஓயாது போரில் ஈடுபட்டால் மக்கள் துன்புறுவர்; இதனால் உள்நாட்டுக் குழப்பம், வறுமை ஏற்படும். இதனைத் தவிர்க்க அதியமான், ஒüவையைத் தொண்டைமானிடம் தூது அனுப்பினான்.

தொண்டைமான், ஒüவையை அன்புடன் வரவேற்று, உபசரித்துத் தன் படைக்கலன்களைக் காண அழைத்துச் செல்கிறான். அவனது ஆணவத்தையும் அகங்காரத்தையும் உணர்ந்து கொண்ட ஒüவை,""இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்

கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் யணிந்து,

கடியுடை வியன் நகர் அவ்வே; அவ்வே

பகைவர்க் குத்தி கோடுநுதி சிதைந்து,

கொல்துறைக் குற்றில மாதோ - என்றும்

உண்டாயின் பதம் கொடுத்து

இல்லாயின் உடன் உண்ணும்

இல்லோர் ஒக்கல் தலைவன்

அண்ணல் எங்கோமான் வைந்நுதி வேலே'' (புறநா.95)என்கிறார். "அரசே! உன்னுடைய படைக்கருவிகள் எல்லாமே புத்தம் புதிதாகச் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றன. அழகாக அலங்கரிக்கப்பட்டு மயிற்பீலி சூடி கண்ணுக்கு நிறைவாக இருக்கின்றன. ஆனால், அதியனின் வேற்படைகள் பழைய கருவிகளாக அன்றோ காட்சியளிக்கின்றன! வேல் முனைவேறு மழுங்கிக் காணப்படுகிறது. உன் கருவிகள் எல்லாம் எத்தனை அழகாய் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதியனது படைக்கருவிகள் பாதிநேரம் கொல்லன் பட்டறையில் பழுதுபார்க்கச் சென்றுவிடுகின்றன' என்று புகழ்வதுபோல அவனைப் பழித்தார். மேலும், "செல்வம் உள்ளபோது பலருக்குக் கொடுத்தும், செல்வம் இல்லாதபோது உள்ளதைப் பலரோடு உண்ணும் வறியவர்களின் சுற்றத்திற்குத் தலைவன் அதியன்' என்றும் கூறுகிறார்.

இதனைக் கேட்ட தொண்டைமான் தன் முடிவை மாற்றிக்கொண்டான். இரு மன்னர்களுக்கிடையே போர் மூளக்கூடிய நேரத்தில், தூது சென்று போரைத் தடுப்பது என்பது எளிதான செயல் அன்று. அச்செயலைத் திறம்படச் செய்து முடித்த பெண்பாற் புலவரான ஒüவை போற்றுதற்குரிய பெண்மணி ஆவார். முதல் பெண் தூதுவர் என்ற சிறப்புக்கும் உரியவர்!


""பால் கொண்டு மடுப்பவும் உண்ணா னாகலிற்

செறாஅ தோச்சிய சிறுகோ லஞ்சியொடு

உயவொடு வருந்து மன்னே இனியே

புகர்நிறங் கொண்ட களிறட் டானான்

முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே

உன்னில னென்னும் புண்ணொன் றம்பு

மானுளை யன்ன குடுமித்

தோன்மிசைக் கிடந்த புல்லண லோனே'' (புறநா.310)


போர் நடக்கிறது. போரில் எதிரி ஒருவனால் தன் படைக்கருவிகளை இழந்த நிலையில் ஒருவன் காணப்படுகிறான். நிராயுதபாணியாய் நிற்கும் அவன் தன் எதிரிகளை வீழ்த்தத் துடிக்கிறான். அப்போது அவன் மார்பில் பாய்ந்த வேல்களைப் பார்க்கிறான். இறக்கும் தருவாயில் இருக்கும் அவ்வீரன், ""நான் இறப்பதற்கு முன் இவ்வேல்களைப் பார்த்திருக்கக் கூடாதா! அவற்றைக் கொண்டு எதிரிகளை வதைத்திருப்பேனே'' என்று எண்ணி மருகுகிறான். இவ்வீரன் தன்னுடைய இளம் பருவத்தில் எப்படியிருந்தான் என்றால், அவனுடைய தாயார் கிண்ணத்தில் பாலூற்றி எடுத்து வரும்போது அதை உண்ணாமல் அடம்பிடித்து நிற்கும்போது, தாயார் அவனை அடிப்பதற்குக் கொம்பை ஓங்கும்போது அஞ்சி நடுங்கியவனாம். ஆனால் இப்போதோ, போர்க்களத்தில் நின்று தன் உயிரை விடும்போதும் எதிர்த்துப் போரிடத் துணிகிறான். இவ்வாறு நாட்டுப்பற்றுடைய வீரம் செறிந்த கருத்துகள் நிறைந்த பாடல்களைப் பாடியுள்ளார் பொன்முடியார்.

சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் அக்காலச் சமுதாயத்தைத் தங்கள் பாடல்களில் படம்பிடித்துக் காட்டியுள்ளனர். அரசனுக்கு ஆலோசனைகள் கூறும் மந்திரியாகவும், தூது சென்று வெற்றியுடன் திரும்பும் மதிநுட்பம் கொண்ட தூதுவராகவும், புலமையுடன், சமுதாயத்தைத் திருத்தும் ஆளுமைத்திறன் கொண்டவராகவும் இருந்துள்ளனர் என்பதை சங்க இலக்கியம் தெளிவாக எடுத்துரைக்கிறது.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: சங்கப்பலகை

Post by சாமி on Sun Nov 24, 2013 11:56 am

சங்கப்பலகை செந்தமிழாற்றுப்படையில் தமிழின் சிறப்புகள்
சு. சீனிவாசன், முனைவர் பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.

இன்றைய நாகரிக வளர்ச்சியில் மனிதனின் பண்பு, பழக்கவழக்கம் மனிதநேயம் மற்றும் மரபு சார்ந்த நிலைகள் போன்றவை மாறுபட்டுக் கொண்டிருக்கும் சூழலில் அவன் பேசக்கூடிய மொழியும் சிதைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையை உணர்ந்து 60 ஆண்டுகளுக்கு முன்பே தமிழை உணராத சில தமிழ் மக்களுக்குத் தமிழின் சிறப்பு, இயல்பு, எதிர்காலத் தமிழக நிலை, தமிழை வளர்க்கும் முறை ஆகியவற்றைக் கூறி, தமிழனைத் தமிழ் படித்து தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி சுந்தர சண்முகனார் என்பவர் "செந்தமிழாற்றுப்படை' என்னும் நூலை 1951 ஆம் ஆண்டில் இயற்றியுள்ளார். 519 அடிகள் கொண்ட இந்நூலில் தமிழின் சிறப்புகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

"செந்தமிழாற்றுப்படை' என்பது தமிழ் கற்ற ஒரு தமிழன், தமிழ் கற்காத மற்றொரு தமிழனை, தமிழ் கற்றுத் தாய்நாட்டுக்குத் தொண்டு புரிவதற்காகத் தமிழ்த்தாயிடம் ஆற்றுப்படுத்துவதாகும். அஃதாவது, எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் தாயிடம் செல்லாக் குழந்தையைத் தூண்டித் தாயிடம் அனுப்பும் விந்தையாகும். இங்கே ஆற்றுப்படுத்துவது தமிழனை, ஆற்றுப்படுத்தும் இடம் தமிழ்த்தாய். எனவே, தமிழர் தமிழ்த்தாய் இரண்டிற்கும் பொதுவாகத் தமிழாற்றுப்படை என்னும் பெயர் அமைந்துள்ளது.

தமிழ் மகன் நிலை கூறி ஆற்றுப்படுத்துதல் (1-33)

தாயானவள் பிள்ளைக்கு உணவு தந்து பின் தன் பிள்ளையிடம் பதிலுதவி நாடுகிறாள். ஆனால் தமிழ்நாடோ மக்களுக்குப் பல்லாண்டு உறையுள், உணவு கொடுத்து பதிலுதவி எதிர்பார்ப்பதில்லை. ஆகையால் அது தாயினும் சிறந்தது செந்தமிழ் மகனே! மனிதப் பிறப்பில் உயர்வு தாழ்வுகள் இடையில் வருவனபோல், மனிதன் இடையில் எத்துணை மொழி கற்றாலும் அவன் இளமையிலும், இறக்கும்போதும் மனைவி மக்களிடத்தில் பேசும் வளமை வாய்ந்த மொழி தமிழ்மொழி மைந்தா!

அறுசுவை விருந்தில் அமுதைத் துறந்தேன், திருமணத்தில் தாலி மறந்தேன், உலகமானது தட்டை எனக் கூறினோர் போல தமிழ் கலை, தமிழிசை இல்லையென தமிழை உணராது தாழ்த்தும் தமிழா! நெய்யைப் பெற்ற பித்தளை அதன் சுவையை சுவைக்க முடியாதது போல தமிழைத் தாய் மொழியாகப் பேசப்பெற்றும், அதன் நூல் நயம் அறியாதவனே! பயன் தரும் பைந்தமிழ் மதுவை விரும்பினயாயின் நான் கூறுவதைக் கேட்பாயாக! என்று கூறி ஆற்றுப்படுத்துகிறார்.

தமிழன் ஒருவன் தான் மட்டும் தாய்மொழித் தமிழை உணர்ந்து நுட்பமாய் அறிந்து வளம் பெற்று அனுபவிக்காமல், எதிர்ப்பட்ட தமிழனிடத்தில் தமிழின் இயல்பினையும் சிறப்பினையும் கூறி ஆற்றுப்படுத்துவது அவனது சுயநலமில்லாத எண்ணத்தையும் தாய்மொழி மீது கொண்டுள்ள பற்றையும் எடுத்துக் காட்டுகிறது.

அடுத்து, 77 முதல் 186 அடிகளில், தமிழின் தொன்மை, சிறப்பு, வளர்ச்சி மற்றும் 20-ஆம் நூற்றாண்டு தமிழ் அறிஞர்கள் பற்றிய செய்திகள், தமிழ்ப் புலவர்கள் தமிழைப் பேணிக்காத்த முறைமை, தமிழனின் பெருமை, தமிழ் நிகழ்த்திய அற்புதங்கள் போன்றவற்றைக் கூறி ஆற்றுப்படுத்துகிறார்.

221-353 அடிகளில் தமிழ்மொழியின் (இழி) நிலையைக் கூறி, தமிழை வளர்க்க ஆற்றும் கடமையைத் தமிழன்னை கூறல், தமிழைப் பிழையாக எழுதும் தமிழர்தம் பிழையை உணரச்செய்தல், நாட்டில் எல்லா நிகழ்ச்சிகளையும் தமிழில் இயற்ற வேண்டும் எனக் கூறுதல், தமிழின் நுட்பத்தை அறிந்துகொள்ளச் செய்தல் போன்ற பல செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன.

445 முதல் 504 அடிகளில், "தமிழைக் கற்க இன்னின்ன கல்லூரியில் சென்று பயில்க' எனக் கூறுதல், தமிழ் மொழியை வளர்ப்பதற்கு படிக்கத் தகுந்த பல கல்லூரியின் பெயர்களைப் பட்டியலிட்டுக் கூறி அக்கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் படித்து தமிழைக் கற்று தமிழ்மொழியை வளர்த்திடுவீர்! என்றும் கூறி ஆற்றுப்படுத்துகிறார்.

இந்நூலின் மூலம் நம் தமிழ் மொழியின் இயல்பினையும் சிறப்பினையும் நன்கு அறிந்து, நுட்பமாய் உணர்ந்து தாய்மொழியாகிய நம் தமிழ்மொழியைப் பிழையில்லாமல் எழுதவும் பேசவும் முன்வர வேண்டும்; வேற்றுமொழியைப் பேசினாலும் நம் தாயாகிய தமிழ் நாட்டில் தமிழிலேயே பேசுதல் வேண்டும்; தமிழ் மொழிக்கு அனைத்துத் துறைகளிலும் முதன்மை அளிக்க வேண்டும் என்பதை ஆசிரியர் வலியுறுத்துகிறார்.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: சங்கப்பலகை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum