ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உங்கள் குழந்தை படுக்கையை நனைக்கிறதா?

View previous topic View next topic Go down

உங்கள் குழந்தை படுக்கையை நனைக்கிறதா?

Post by சிவா on Thu Feb 19, 2009 2:05 am

சுமார் 2-3 வயதுக்குள் குழந்தையின் சிறுநீர் கழிக்கும், மலம் கழிக்கும் பழக்கங்கள் சீராகி விடுகின்றன. மூச்சா, ஆச்சு என்று மழலையில் தனது அவசரத்தைத் தெரிவிக்க கற்றுக்; கொள்கின்றன. பள்ளிக்கு அனுப்பவும், வெளியில் அழைத்துச் செல்லவும் இந்த வயதும், பழக்கமும் அனு கூலமாக இருக்கின்றன. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஜட்டியை நனைப்பதை நிறுத்திவிட வேண்டும் என்றே எதிர்; பார்க்கிறார்கள்.

இந்த எதிர்பார்ப்பை பாதிப்பதாக சில குழந்தைகளுக்கு உறக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் அமைந்து விடுகிறது. இந்தப் படுக்கையை நனைக்கும் பழக்கத்தினால் குழந்தையின் ஜட்டி மட்டுமல்லாது இரவு உடைகள், படுக்கை, படுக்கை விரிப்பு, அருகில் படுத்திருப்பவரின் உடைகள் எல்லாமே நனைந்து விடுகின்றன. குழந்தை களின் தூக்கமும் கலைந்து விடுகிறது. அதனால் பெற்றோருக்கும், குழந்தைக்கும் எரிச்சல் உண்டாகிறது.

குழந்தையின் இந்தக் குறையை பல பேர் முன்னிலையில் சுட்டிக்காட்டவும், மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசவும், கிண்டல் செய்து அவமானப்படுத்தவும், பல பெற்றோர் முன்வருகின்றனர். இதனால் குழந்தைக்கு பெற்றோரிடம் வெறுப்பும், குற்ற உணர்வும், பயமும் அதிகரிப்பதைத் தவிர வேறு ஒரு பலனும் கிடைப்பதில்லை.

தன் உணர்வுக்கும், கட்டுப்பாட்டுக்கும் அப்பால் நடக்கும் இந்தச் செயலால் குழந்தையின் மனநிலை பாதிக்கப்படுகிறது. பெற்றோர் இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் கலாட்டா செய்வதாலும் நிலைமை இன்னும் மோசமாகி இரண்டு, மூன்று முறை படுக்கையை நனைக்கும் குழந்தைகளும் இருக்கின்றன.

இந்தப் பழக்கம் சில குழந்தைகளிடையே தினமும் நனைக்கும் பழக்கமாக உள்ளது. வேறு சில குழந்தைகள் வாரத் தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நனைக்கும். சில குழந்தைகளோ எப்போதாவது ஒருநாள் நனைக்கும்.

இந்தப் படுக்கையை நனைக்கும் பழக்கத்திற்கு காரணம்தான் என்ன? பல மருத்துவ அறிஞர்களின் கருத்துப்படி:-

* சிலசமயம் இது பரம்பரை பழக்கமாகிறது. 75 சதவித குழந்தைகளின் பரம்பரைகளில் இந்தப் பழக்கம் இருந்திருக்கிறது.

* சில குழந்தைகளின் சிறுநீர்ப்பையின் அளவு சிறியதாக இருப்பதனால் சிறுநீரை அடக்கும் திறன் குறை வாகிறது.

* சிறுநீர்ப்பையில் இன் பெக்ஷன் அல்லது சிறுவர் களுக்கு சிறு வயது நீரிழிவு நோய் இருப்பதன் அறி குறியாகவும் கொள்ளலாம்.

* குழந்தை ஆழ்ந்து தூங்கும் பழக்கமும், தன்னுணர்வின்றி சிறுநீர் கழிப்பதன் காரணமாக இருக்கலாம்.

* மனநிலையைப் பொறுத்த காரணங்களும் இருக்கலாம். உணர்ச்சிகளை பாதிக்கும் சம்பவங்களினாலும் இந்தப் பழக்கம் இருக்கலாம்.

* இடைவெளியின்றி அடுத்த குழந் தையின் வரவு, பள்ளிக்கூடம் போகும் பழக்கம், பள்ளியில் உள்ள பயம், மிரட்டல், பெற்றோர் உறவில் விரிசல் போன்றவையும் குழந்தைக்கு இந்தப் பழக்கத்தை உண்டு பண்ணியிருக்கலாம்.

குழந்தை நல மருத்துவர்கள் இந்தப் பழக்கம் உள்ள குழந்தைகளை மிரட்டவோ, கடுமையாக நடத்தவோ கூடாது என்கிறார்கள்.குழந்தை வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை தன்னை மீறி நடக்கிறது என்பதை பெரியவர்களாகிய நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

குழந்தைகள் தூங்கப் போகுமுன்னும், நடுஇரவில் ஒருமுறையும், விடியற் காலையிலும் டாய்லட்டில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை நாம் கற்றுத்தர வேண்டும். நமது தூக்கத்தைக் கொஞ்சம் தியாகம் செய்து இரவில் எழுந்து குழந்தையை டாய்லெட் அழைத்துப் போய் வரவேண்டும். இரவு ஏழு மணிக்கு மேலே திரவ உணவுகளை முற்றிலுமாக நிறுத்தி விடலாம். இரவு பால் குடித்தவுடன் ஒரு முறை சிறுநீர் கழித்துவிடச் சொல்லவும். சாப்பாட்டுக்குப் பிறகு அரை டம்ளர் தண்ணீ ரோடு நிறுத்திக் கொள்ளுங்கள். படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைக்கு எக்ஸ்ட்ரா ஆதரவையும், கவனிப்பையும் வழங்கிப் பாருங்கள் பலன் தரலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum