ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

முருகன் செய்திகள்

View previous topic View next topic Go down

முருகன் செய்திகள்

Post by சிவா on Thu Nov 14, 2013 3:23 am

செந்தமிழ்க் கடவுள் சேயோன் முருகனின் பெயரில் அமைந்த மூவெழுத்துக்குமே தனிச்சிறப்பு உண்டு. அது, மூன்றும் தமிழின் மூவினங்களில் அமைந்தவை என்பதுதான். (மு-மெல்லினம், ரு-இடையினம், கா-வல்லினம்)

* வடநாடுகளில் முருகனை கார்த்திக் என்றே அழைக்கிறார்கள். அங்கே வேழமுகன், வேலவனின் தம்பியாகக் கருதப்படுகிறார். அங்குள்ள கதைகளின்படி பிள்ளையாருக்கு இரு மனைவியர் உண்டு. முருகன் பிரம்மச்சாரியாக கூறப்படுகிறார்.

* சுப்பையா, சுப்பராயலு, சுப்புடு, சுப்பண்ணா என்றெல்லாம் முருகனை அழைக்கிறார்கள் ஆந்திர, கர்னாடக மக்கள்.

* முருகன் பாம்புகளின் தலைவன் என்று கருதும் பழக்கம் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களிடம் நிலவுகிறது. பாம்பினைக் கண்டால் சாம்பிாரணி தூபம் போட்டு "சுப்பண்ணா ஓடிப்போ' என்று சென்னால் தீங்கு ஏதும் செய்யாமல் ஓடிவிடும் என்பது அவர்கள் நம்பிக்கை.

* பிரம்மசாரி, கிருஹஸ்தன், சன்யாசி என்ற மூன்று திருக்கோலங்களிலும் காட்சிதரும் தெய்வம், முருகன் மட்டுமே.

* பரமபாகவதன், பரம வைஷ்ணவன், பரம மகேஸ்வரன், பரம பிராம்மண்யன் இவையெல்லாம் பல்லவர் காலத்தில் முருகனுக்கு வழங்கிய பெயர்கள். மாமல்லன் அமைத்த குடைவரைகளில் யானை மீதமர்ந்துள்ள முருகனைக் காணலாம்.

*இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் இரண்டிலுமே திருமுருகனின் அவதாரச் சிறப்பும் தீரமும் கூறப்பட்டிருக்கிறது.

* செந்தில்வேலன், சூரனை வதைத்த பின்னர் தணிகைமலையில் ஓய்வெடுத்தார் என்பது தெரிந்திருக்கும். அவர் தாரகாசுரனை வதம் செய்த பிறகு தன் சினம் தணித்த தலம் எது தெரியுமா? கர்னாடகாவில் உள்ள சுப்ரமண்யா. குக்கே சுப்ரமண்யா என்றழைக்கப்படும் இத்தலத்தில் புற்றின்மீதே அமர்ந்திருக்கிறார் முருகன். அருகில் உள்ள மலை, குமார பர்வதம். ஆறு குமாரதாரா.

* கடவுளரில் கந்தனைப் பற்றியே அதிக அளவில் பழமொழிகள் இருக்கின்றன. இதோ சில...

வேலை வணங்குவதே வேலை.

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை.

வயலூரான் துணை இருக்க அயலூரான் தேவையா?

கவிதைக்குக் கம்பன்; கருணைக்கு கந்தன்.

கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.

வேலிருக்க வினையில்லை; மயிலிருக்க பயமில்லை.

* மேருமலையைச் சுற்றிவந்த நவக்கிரகங்களை, தன் தலைநகரான மகேந்திரபுரியை சுற்றிவந்து தூய்மை செய்யும்படி அடிமைப்படுத்தினான் சூரபத்மன். முருகன் அவனை அழித்து நவகோள்களுக்கும் விடுதலை அளித்ததால், கந்தனை வணங்குவோரை எந்த கிரகமும் வருத்தாது.

* கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் அரசு புரிந்த மன்னர்கள் போரில் வெற்றி பெற அருளும் போர்க்கடவுளாகப் போற்றினர். தங்களின் தலைநகருக்கு மயூரம் என்றே பெயரிட்டு முருகனையே காவல் தெய்வமாக இருத்தி வணங்கினர்.

* மாமல்லபுரத்தருகே உள்ள சாளுவன் குப்பத்தில் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த முருகன் கோயில், 2005-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சங்ககாலத்துக் கட்டடக்கலைக்கு நிகராக செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் வடக்கு நோக்கி அமைந்திருக்கிறது வடிவேலனின் கருவறை. வாயிலில் நெடிய வேல் ஒன்று ஒற்றைக்கல்லில் வடிக்கப்பட்டு உயர்ந்து நிற்கிறது. முருகன் வழிபாடு பண்டை காலத்திலேயே இருந்ததை உணர்த்துவதாக இக்கோயில் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

* கந்தனை மணக்கக் காத்திருந்த திருமாலின் மகள்களான அமிர்தவல்லியும் சுந்தரவல்லியுமே தெய்வானை, வள்ளியாகப் பிறந்தனர். இருவரில் தெய்வானை தேவர்கோன் வாகனமான ஐராவதத்திற்கும், வள்ளி வள்ளிமலையில் திரிந்த மானின் வயிற்றிலும் பிறந்தனர். தேவயானையை இந்திரனும், வள்ளியை வேடர் தலைவனான நம்பிராஜனும் வளர்த்தனர். எனவே தெய்வானையை யானை மகள் என்றும், வள்ளியை மான் மகள் என்றும் கூறுவது மரபு.

* கிராமப்புற தெய்வமாக விளங்கும் பச்சை அம்மன் பார்வதியின் அம்சம் என்பது ஐதீகம். பச்சையம்மனுக்குத் துணையாக வந்த தோழியருள் கங்கையும் வள்ளியும் உண்டு. கங்கையே காத்தாயி என்ற பெயரில் முருகனை மடியில் இருத்தியபடி காட்சி தருகிறாள். வள்ளி, வனக்குறத்தியாக தனி சன்னதியில் இருப்பாள். வள்ளியை முத்துக்குறத்தி, ஞானக்குறத்தி என்றும் அழைக்கின்றனர். பச்சையம்மன் திருவிழாவின்போது வள்ளி திருமணமும் நடத்தப்படுவது மரபாக இருக்கிறது.

* காளிதாசரின் குமாரசம்பவம், முருகனின் அவதாரத்தினை முழுமையாக விவரிக்கிறது.

* சுடராக இருந்த சுப்ரமண்யனை கங்கையே சுமந்து சென்றாள் என்பதால் முருகனுக்கு காங்கேயன் என்ற பெயர் உண்டு. மகாபாரதத்தில் வரும் பீஷ்மர், கங்கையின் மகன் என்பதால் அவரையும் காங்கேயன் என்று அழைப்பர். பார்வதியின் சேய் என்பதால், சேயோன் என்ற பெயரும் கந்தனுக்கு உண்டு.

* புராணங்களின்படி வேலவனின் பன்னிரு கரங்களில் ஐந்தாவது மற்றும் ஆறாவது கரங்களே வேலைப் பிடித்துச் சுழற்றுகின்றனவாம். இது அஞ்சுதலைப் போக்கி ஆறுதலைத் தருபவன் முருகன் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதாகச் சொல்வர்.

* தந்தையை வேண்டித் தவமிருந்த முருகனுக்கு அன்னை பார்வதியே காவலிருந்தாள். மாகாளியாக வடிவெடுத்துக் காவலிருந்த அவள் கீழ்வேளூர் என்னும் அதே தலத்தில் அஞ்சுவட்டத்து அம்மன் என்ற திருப்பெயருடன் இன்றும் காட்சியளிக்கிறாள்.

* வயலூரில் ஆட்சி செய்யும் வடிவேலனை, திருமணமானவர்கள், குடும்பத்துடன் சென்றுதான் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். அங்கே சுவாமி, அம்பாளை வணங்கிய பிறகு சுப்ரமண்யனை வழிபட வேண்டும். இப்படிச் செய்தால் வாழ்வில் வளமும் நலமும் பெருகும். ஒற்றுமை நிலைக்கும் என்பது நம்பிக்கை. வாரியார் சுவாமிகள் இத்தலத்து முருகனையே குருவாக ஏற்றார்.

* சூரபத்மனின் கொடுமை தாங்காத தேவர்கள் சிவனாரிடம் முறையிடச் சென்றபோது அவர் தவத்தில் ஆழ்ந்து இருந்தார். ஐந்து நாட்களுக்குப் பிறகே அவரது தவம் கலைந்தது. தேவர்கள் தம் துயரைச் சொன்னதும் தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார் ஈசன். அதன் சுடரே ஆறுமுகனின் அவதாரத்திற்குக் காரணமானது. தேவர்கள் இறைவன் முன் காத்திருந்த ஐந்து நாட்களும் தரிசித்த நாளும் சேர்ந்த ஆறு தினங்களே சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் ஆறு நாட்கள். கந்தசஷ்டி, சூரசம்ஹார தினம் மட்டும் அல்ல. ஆறுமுகனின் அவதார தினமும் அதுவே.

* சக்திதரன், பாலசுவாமி, ஸ்கந்தன், கஜவாகனன், சரவணபவன், தேவசேனாபதி, சுப்ரமண்யன், கார்த்திகேயன், குமாரன், ஷண்முகன், தாரகாரி, வள்ளி கல்யாணசுந்தரன், சேனானி, பிரமமசாஸ்தா, கிரௌஞ்சபேதன், சிகிவாகனன் ஆகிய இந்தப் பதினாறு பெயர்களையும் சொல்லி முருகனை வணங்கினால் பதினாறு பேறுகளும் கிட்டும் என்கிறது கந்தபுராணம்.

-காளிதாசன்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முருகன் செய்திகள்

Post by amirmaran on Thu Nov 14, 2013 2:51 pm

கார்த்திகை மாதம் நெருங்கும் நேரத்தில் நல்ல தகவல்...

amirmaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 601
மதிப்பீடுகள் : 193

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum