ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 deeksika

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 anikuttan

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

'சிவாஜி என்ற மாநடிகர்'

View previous topic View next topic Go down

'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by vasudevan31355 on Wed Nov 13, 2013 10:52 am

'சிவாஜி என்ற மாநடிகர்'

தொடர்-1

ஈகரையில் என்னை அன்புடன் வரவேற்ற அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி!

புது அறிமுகமான நான் ஈகரையில் நடிகர் திலகத்தின் ஒவ்வொரு படங்களைப் பற்றியும் அனைவரும் அறியும் வண்ணம் ஒரு நெடுந்தொடர் ஆரம்பித்துள்ளேன். 'சிவாஜி என்ற மாநடிகர்' என்று இத்தொடருக்குப் பெயர் இட்டுள்ளேன். தங்கள் மேலான ஆதரவையும், கருத்துக்களையும் எதிர்நோக்குகிறேன். அனைவருக்கும் என் நன்றி!

'பராசக்தி'வெளி வந்த நாள்: 17-10-1952

மூலக்கதை: எம்.எஸ். பாலசுந்தரம்

திரைக்கதை, வசனம்: கலைஞர் மு.கருணாநிதி

இசை: ஆர். சுதர்சனம்

ஒளிப்பதிவு: எஸ்.மாருதிராவ்

தயாரிப்பு: நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாள்

இயக்கம்: கிருஷ்ணன்-பஞ்சு

நடிக, நடிகையர்: நடிகர் திலகம், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சகஸ்வரநாமம், வி.கே.ராமசாமி, பண்டரிபாய், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர்.


கதை:

பாரிஸ்டர் சந்திரசேகரன் தன் தம்பிகளுடன் சிறு வயது முதல் (ஞானசேகரன், குணசேகரன்) ரங்கூனில் வாழ்ந்து வருகிறார். தமிழ்நாட்டில் மதுரையில் தந்தையுடன் இவர்களின் தங்கை கல்யாணி வசித்து வருகிறாள். அவளுக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளையும் பார்த்தாகி விட, உலகப் போர் காரணமாக அண்ணன்மார்கள் மூவரும் ரங்கூனிலிருந்து தங்கையின் கல்யாணத்திற்கு வர கப்பலில் இடம் கிடைக்காததால் கடைத்தம்பி குணசேகரன் மட்டும் திருமணத்திற்கு இந்தியா புறப்பட்டு வருகிறான். கப்பலும் குறிப்பிட்ட நேரத்தில் மதராஸ் வரமுடியாமல் போர்க் காரணங்களினால் தாமதப்படுகிறது. திருமணம் முடிந்து கர்ப்பமுறும் கல்யாணி குழந்தையைப் பெற்றெடுத்து கணவனை விபத்தில் பறி கொடுக்கிறாள். தந்தையையும் இழக்கிறாள். அநாதை ஆகிறாள். கப்பலில் மதராஸுக்கு தாமதமாக வந்து சேரும் குணசேகரன் தான் கொண்டுவந்த பணத்தையும், பொருளையும் வஞ்சகர்களிடம் பரிதாபமாகப் பறி கொடுக்கிறான். ஒரு சாண் வயிற்றுக்காக பைத்தியம் போல நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான். விதவையான கல்யாணி இட்லிக் கடை நடத்தி குழந்தையுடன் கஷ்டப்படுகிறாள். தன் தங்கையை பல சிரமங்களுக்கிடையில் மதுரை வந்து கண்டு மனம் நொந்து போகிறான் குணசேகரன். தான் அண்ணன் என்று அவளிடம் காட்டிக் கொள்ளாமலேயே.அவளுக்கு துணையாக அவளுடனே இருக்கிறான். கல்யாணிக்கு அவன் கிறுக்கண்ணா. ஆனால் அங்குள்ள காமுகன் ஒருவனின் நடத்தைக்குப் பயந்து இட்லிக்கடையை விட்டு விட்டு குழந்தையுடன் அந்த ஊரை விட்டே போய் விடுகிறாள். கல்யாணியைக் காணாமல் தேடி அலைகிறான் குணசேகரன்.

இடையில் போரின் உக்கிரம் தாளாமல் ரங்கூனிலிருந்து தமிழகம் திரும்ப பயணப்படும் ஞானசேகரனும் சந்திரசேகரனும் ஜப்பான் விமானங்களின் குண்டு வீச்சால் பிரிகிறார்கள். தம்பிகளை இழந்து தவிக்கும் சந்திரசேகரன் திருச்சி வந்து நீதிபதியாகி தன் தங்கை கல்யாணியைத் தேடுகிறார். ஞானசேகரன் குண்டு வீச்சால் கால்களை இழந்து நொண்டியாகிறான். பர்மா அகதிகளில் ஒருவனாக தமிழகம் வந்து சேர்கிறான். ஞானசேகரனும் அவனுடன் வந்த மற்ற அகதிகளும் ஆதரவின்றி  பிச்சைக்காரர்களாகவே ஆகி விடுகின்றனர்.

அனாதையாகத் திரியும் குணசேகரனுக்கு அடைக்கலம் கொடுத்து அவனுக்கு நல்வாழ்வு காட்டுகிறாள் புரட்சி எண்ணம் கொண்ட விமலா என்ற ஒரு கோதை.

ஊர் விட்டு ஊர் மாறி வந்து காமுகர்களிடமும், கயவர்களிடமும் சிக்கி சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகிறாள் கல்யாணி. பசிக் கொடுமையில் குழந்தைக்கு பால் வாங்கக் கூட இயலாத நிலையில் அனைவரிடமும் பிச்சை கூட கேட்கிறாள் கல்யாணி. ஆனால் யாரும் இரக்கம் காட்டவில்லை. மாறாக அவள் கற்பைத்தான் விலை பேசுகிறார்கள். கோவில் பூசாரி ஒருவன் கல்யாணியின் கற்பை சூறையாட முயல்கிறான். வாழவே வழியில்லாமல் போன நிலையில் பசியின் அகோரப் பிடியில் தவிக்கும் தன் மழலைச் செல்வத்தையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயல்கிறாள் கல்யாணி. ஆனால் காவலர்களிடம்  மாட்டிக் கொள்கிறாள். வழக்கை விசாரிக்கும் நீதிபதியோ அவளுடைய அண்ணன் சாட்சாத் சந்திரசேகரன்தான். கல்யாணி தன்னுடைய சோகக்கதையை கோர்ட்டில் சொல்ல அவள் தன் தங்கை என்று தெரிந்து துடித்து விழும் நீதிபதி அண்ணன் சந்திரசேகரன் மனநிலை பாதிக்கப்படுகிறார்.

கல்யாணின் வாழ்வை சூறையாட நினைத்த பகல் வேஷ காமாந்தக பூசாரி ஒருவனை வெட்டி நீதிமன்றம் புகுகிறான் குணசேகரன். அங்கு தனக்காகவும், குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக கோர்ட்டில் நிற்கும் தன் தங்கைக்காகவும் புரட்சிகரமாக புதுமையாக வாதாடுகிறான். தான் பட்ட துயரங்களையும் தன் தங்கை கல்யாணி பட்ட துயரங்களையும் எடுத்துரைக்கிறான். சமூகத்தில் பெண்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் ஏற்படும் கொடுமைகளைப் பற்றியும் சாடுகிறான். வழக்கு முடிவுக்கு வந்து குணசேகரன் நிரபராதி என்று விடுதலையாகிறான். கல்யாணியின் குழந்தையும் கருணை மனம் கொண்ட குணசேகரனுக்கு அடைக்கலம் தந்த அதே விமலாவால் காப்பாற்றப்பட்டு உயிர் பிழைப்பதால் கல்யாணியும் குற்றத்திலிருந்து விடுவிக்கப் படுகிறாள். தன் தங்கையைக் கண்ட சந்தோஷத்தில் அண்ணன் சந்திர சேகரனும் குணமடைகிறார். பிச்சைக்காரனாக அலைந்து திரிந்த ஞானசேகரனும் குடும்பத்துடன் இணைகிறான். தன் வாழ்வில் உறுதுணையாய் நின்ற விமலாவைக் கரம் பற்றுகிறான் குணசேகரன். பிரிந்த குடும்பம் ஒன்று சேர்கிறது. பிச்சைகாரர்களுக்காக ஒரு அநாதை விடுதியும் திறக்கப்படுகிறது.கதாநாயகன் குணசேகரனாக நடிகர் திலகம், அண்ணன் சந்திரசேகரனாக எஸ்.வி.சகஸ்ரநாமம், தம்பி ஞானசேகரனாக எஸ்.எஸ்.ராஜேந்திரன், தங்கை கல்யாணியாக ஸ்ரீரஞ்சனி, கதாநாயகி விமலாவாக பண்டரிபாய் திறம்பட நடித்தனர். கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள் மிக அற்புதமாக இயக்கம் செய்தனர்.

நடிகர் திலகத்தின் முதல் படம். நாயகனாக நடிகர் திலகம் ஒப்பந்தம் செய்யப்பட்டு சிலகாட்சிகளும் எடுக்கப்பட்ட பிறகு 'தோற்றப் பொலிவு சரியில்லை... பையன் மீன் மாதிரி வாயைத் திறக்கிறான்' என்று  ஏ.வி.எம்.செட்டியார்,மற்றும் சிலர் சிவாஜியை நிராகரித்து அன்றைய பிரபலம் கே.ஆர்.ராமசாமி அவர்களை நாயகனாக மாற்றிப் போடலாம் என்று சொல்ல, படத்தின் தயாரிப்பாளர் பெருமாள் நடிகர் திலகத்தின் நடிப்பின் மேல் இருந்த நம்பிக்கையால் சிவாஜியை மாற்ற இயலாது என்று கண்டிப்பாகக் கூறி விட்டார். சிவாஜி இல்லையென்றால் படத்தின் பங்குதாரர் நிலையில் இருந்து விலகுவதாகவும் அறிவித்து விட்டார்.

சிவாஜியின் அசாத்தியமான திறமையை நாடகங்கள் வாயிலாக அறிந்திருந்த, அப்போதைய அரசியல் பெருந்தலையாய் வளர்ந்து கொண்டிருந்த அறிஞர் அண்ணா சிவாஜியைத்தான் கதாநாயகனாகப் போட வேண்டும் என்று சிபாரிசு செய்ய வேறு வழியில்லாமல் மெய்யப்ப செட்டியார் ஒத்துக் கொண்டார்.

ஒல்லியான உடல்வாகுடன் வறுமையாகத் தெரிந்த சிவாஜிக்கு இரண்டு  மாதங்கள் நல்ல ஆகாரங்கள் வழங்கி அவர் தோற்றப் பொலிவு மெருகூட்டப்பட்டது. மறுபடி ஷூட்டிங் தொடங்கியது. இரவுபகலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு 1952-இல் பராசக்தி தீபாவளிக்கு வெளியிடப்பட்டு மாபெரும் புரட்சி வெற்றி பெற்றது. திராவிட இயக்க கொள்கைகள் பலமாக அடியெடுத்து வைத்து நுழைய பாலமாக அமைந்தது பராசக்தி.

நடிகர் திலகத்தின் முதல் படத்திலேயே அவருடைய பிரம்மிக்கத்தக்க புதுமையான நடிப்பைக் கண்டு திரையுலகமே வாய் பிளந்தது. புரட்சிக் கருத்துக்கள் கொண்ட கூர்மையான கதைக்கு மிகவும் பொருத்தமான கலைஞரின் வசனங்கள் பட்டி தொட்டியெங்கும் சிவாஜியின் குரலில் சிங்கநாதமாய் ஒலித்தன. பராசக்தியின் வசனங்கள் புதிதாக வரும் நடிகர்களுக்கு பாலபாடமாகியது. அந்த நீதிமன்றக் காட்சி ("நீதிமன்றம்...  விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது") வசனத்தைப் பேசிக்காட்டினால்தான் திரையுலகிலே எவரும் அடியெடுத்து வைக்க முடியும் என்ற நிலை நீண்ட வருடங்கள் தொடர்ந்தது. கமல், சிவக்குமார் போன்ற பெரிய நடிகர்கள் எல்லாம் அந்த வசனத்தைப் பேசிக்காட்டி விட்டுத்தான் தமிழ் சினிமா உலகில் கால் பதிக்க முடிந்தது.

அதுவரை படம் நெடுக பாடல்களும், உணர்ச்சியில்லாத வசன உச்சரிப்புகளும், பொறுமையை சோதிக்கும் சவ சவ இழுவைக் காட்சிகளுமாய் இருந்த தமிழ்த்திரையுலகம் பராசக்திக்குப் பின் முற்றிலும் மாறிப் போனது. திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடிக்க மிகப் பெரிய தூண்டுகோலாய் அமைந்தது 'பராசக்தி'

பராசக்திக்கு முன் பராசக்திக்குப் பின் என்று தமிழ்த் திரையுலக வரலாறு மாறியது. சிவாஜிக்கு முன் சிவாஜிக்குப் பின் என்று உலக நடிப்பிலக்கணமே இரண்டாக ஆனது.இன்றுவரை அனைவரும் அதிசயப்படுவது இது சிவாஜிக்கு முதல் படமா? என்றுதான். நாடக மேடை அனுபவம் அப்படிக் கை கொடுத்தது இந்தக் கலைஞனுக்கு. 'தென்றலைத் தீண்டியதில்லை நான்' என்னும் வசனம் மட்டுமே திரையரங்குகளில் நம் காதுக்குக் கேட்கும். மற்ற வசனங்கள் ரசிகர்கள் கைத்தட்டல்களில் காதுகளில் விழாது. குரலின் ஏற்ற இறக்கங்கள், மிக மிகத் தெள்ளத் தெளிவான உச்சரிப்பு, நொடிக்கொரு தரம் மாறும் முகபாவம், முதல் படத்திலேயே பணக்கார ரங்கூன்வாசியாக, பணமிழந்து வாடும் ஏழையாக, ராஜாவாக, மந்திரியாக, சேவகனாக தனி நடிப்பு, பைத்தியக்காரனாக பலவித உணர்ச்சிகளில் பாங்கான நடிப்பு, டூயட்டில் ஆண்மை கம்பீரம், வறுமையின் வாட்டத்தை முகத்தில் பிரதிபலிக்கும் திறமை, நீதி மன்றத்தில் சிங்கமென கர்ஜித்து முழங்கும் முழக்கம் என ஒரே படத்திலேயே அத்தனை விஷயங்களையும் வழங்கி இன்று வரை நம் நெஞ்சில் குணசேகரனாக வாழ்கிறார் நடிகர் திலகம்.

படம் காங்கிரஸ்கார ஆட்சியால் தடை செய்யப்பட்டு மீண்டு வந்து வெள்ளி விழாக் கொண்டாடியது. பலஊர்களில் நூறு நாட்கள் கண்டது. ஈழத்தில் பிரம்மாண்ட வெற்றியினைப் பெற்றது. மறு வெளியீடுகளிலும் அமர்க்களமாக ஓடியது.அந்த வருடத்தின் மறக்க முடியாத தீபாவளி விருந்தாக அனைவருக்கும் அமைந்தது.

'புதுப் பெண்ணின் மனதை தொட்டுப் போறவரே'.... 'ஓ ரசிக்கும் சீமானே வா'... 'கா கா கா...  நெஞ்சு பொறுக்குதில்லையே'... 'பூமாலை... புழுதி மண் மேலே' என்ற வெகு பிரசித்தி பெற்ற சலிக்காத பாடல்கள்.

பராசக்தி பாடல்களை இயற்றியோர்: மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கலைஞர் கருணாநிதி, உடுமலை நாராயண கவி, காமாஷிநாதன்

மாருதிராவ் அவர்களின் சிறப்பான பளிச்சென்ற ஒளிப்பதிவு

கிருஷ்ணன் பஞ்சு இரட்டையரின் அற்புதமான புதுமை இயக்கம்

என்று இந்த பராசக்தி சகலத்திலும் சக்தி பெற்று விளங்கினாள். அது மட்டுமல்ல. தமிழ்த்திரை உலகம் பெருமை கொள்ள அருமையான சிவாஜி கணேசன் என்ற ஒப்பற்ற நடிக மைந்தனை நமக்கு அருளினாள்

இந்தக் கட்டுரைத் தொடர் முழுதும் என் சொந்தப் படைப்பே.

(பராசக்தி தொடருவாள்).


Last edited by vasudevan31355 on Wed Nov 13, 2013 11:15 am; edited 7 times in total
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by சிவா on Wed Nov 13, 2013 10:58 am

அருமை திரு வாசுதேவன்!

ஒரு படத்திற்கே இவ்வளவு அழகான விளக்கங்களா...! மிகவும் ரசித்தேன்..

தொடர்ந்து தங்களின் கட்டுரைகளைப் படிக்க ஆர்வமாக உள்ளோம்...
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by சிவா on Wed Nov 13, 2013 12:05 pm

வைரம் போன்றவர் சிவாஜி

"பராசக்தி படத்தால்தான் சிவாஜியின் புகழ் பரவியது' என்று சிலர் சொல்கின்றனர். இதில் எனக்கு உடன்பாடில்லை. வைரத்தின் ஒளியை சில நாட்களுக்குத்தான் மறைக்க முடியும். வைரத்தைப் போன்றவர் சிவாஜி. பராசக்தி படத்துக்கு முன்பும் அவரிடம் இத்தனை திறமைகளும் ஒளிந்து கிடந்தன. இந்தப் படத்தின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்.

 அமெரிக்காவை கொலம்பஸ்தான் கண்டுபிடித்தார். ஒப்புக்கொள்ளலாம். கொலம்பஸ் இல்லாவிட்டால், அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டிருக்காதா என்ன? அதுபோன்றவர்தான் சிவாஜி.

 - சிவாஜிக்கு இப்படி புகழாரம் சூட்டியவர் அண்ணாதுரை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by சிவா on Wed Nov 13, 2013 12:07 pm


இங்குள்ள கட்டுரையைப் பற்றி தங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by பூர்ணகுரு on Wed Nov 13, 2013 12:42 pm

மிக அருமையான வர்ணனை !

ஆர்வத்தை தூண்டி விட்டது !

தொடருங்கள் - காத்‌திருக்கிறோம் ! புன்னகை
avatar
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 345
மதிப்பீடுகள் : 322

View user profile

Back to top Go down

Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by ராஜா on Wed Nov 13, 2013 1:24 pm

தொடர் ஆரம்பமே மிக அருமையாக உள்ளது. தொடருங்கள் படிப்பதற்கு ஆர்வமுடன் உள்ளோம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by பாலாஜி on Wed Nov 13, 2013 7:49 pm

சிறப்பான தொடர் ..   

தொடருங்கள் ......தொடர்கின்றோம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by veeyaar on Thu Nov 14, 2013 7:39 am

வாசு சார்
பராசக்தி திரைப்படத்துடன் திரையுலக வாழ்வைத் துவக்கிய உலக மாநடிகரைப் பற்றிய தொடரை அதே பராசக்தி திரைப்படத்துடன் துவக்கியுள்ளது பொருத்தமாய் உள்ளது.
ஆவலைத் தூண்டும் வண்ணம் தங்கள் எழுத்து நடை உள்ளது.
தொடருங்கள்.
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by ஜாஹீதாபானு on Thu Nov 14, 2013 12:16 pm

எனக்கு மிகவும் பிடித்த படம் இது...எப்போது போட்டாலும் விரும்பி பார்ப்பேன்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30263
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by jenisiva on Thu Nov 14, 2013 3:52 pm

மிக்க மகிழ்ச்சி. மிக அருமையான பதிவு.

சிவாஜி ஐயா நடிப்புக்கு உயிர் கொடுத்தவர். நீங்கள் அவர் நடித்த படங்களுக்கு உங்கள் எழுத்து மூலம் இன்னொரு முறை உயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள் .

இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றி பெரும் .

இப்பொழுதுள்ள இளைஞர்கள் புது பட மோகத்திலிருந்து சிறிது விலகி இந்த திரியை பார்த்தார்கள் என்றால் பழைய திரைப்படங்களின் அருமையும், வெறும் பாடல்களும் குத்து பாட்டுகளும், காதல் மற்றும் சண்டை காட்சிகள் மட்டும் தான் நடிப்பு என்கின்ற கருத்தை மாற்றிக்கொண்டு நடிப்பு என்றால் என்ன ? என்பதை அறிவார்கள் .
avatar
jenisiva
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 480
மதிப்பீடுகள் : 88

View user profile

Back to top Go down

Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by vasudevan31355 on Thu Nov 14, 2013 9:39 pm

'சிவாஜி என்ற மாநடிகர்' நெடுந்தொடருக்கு வரவேற்பு அளித்த அத்துணை பேருக்கும் என் இதயம் கனிந்த நன்றி.

'பராசக்தி' முதல் பதிவை பாராட்டிய அன்பிற்கினிய நல்லுளங்கள் சிவா, பூர்ணகுரு, ராஜா, பாலாஜி, வீயார், ஜாஹிதாபானு, ஜெனிசிவா அனைவருக்கும் என் நன்றிகள்.

சிவா சார்,

அண்ணா அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றி கூறிய அருமையான கருத்தை இங்கு பதித்து பதிவை சிறப்பாக்கியதற்கு மிக்க நன்றி.
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by சிவா on Thu Nov 14, 2013 10:24 pm

@vasudevan31355 wrote:
அண்ணா அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றி கூறிய அருமையான கருத்தை இங்கு பதித்து பதிவை சிறப்பாக்கியதற்கு மிக்க நன்றி.
மகிழ்ச்சி அண்ணா!

(என்னை சிவா என்று மட்டும் அழைத்தால் போதும்! அதுவே எனக்கு மகிழ்ச்சி தரும்)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by krishnaamma on Fri Nov 15, 2013 1:16 pm

//புது அறிமுகமான நான் ஈகரையில் நடிகர் திலகத்தின் ஒவ்வொரு படங்களைப் பற்றியும் அனைவரும் அறியும் வண்ணம் ஒரு நெடுந்தொடர் ஆரம்பித்துள்ளேன். 'சிவாஜி என்ற மாநடிகர்' என்று இத்தொடருக்குப் பெயர் இட்டுள்ளேன். தங்கள் மேலான ஆதரவையும், கருத்துக்களையும் எதிர்நோக்குகிறேன். //

அருமையான திரி, நல்லா இருக்கு, தொடருங்கள் படிக்க காத்திருக்கிறோம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by M.M.SENTHIL on Fri Nov 15, 2013 1:36 pm

நடிப்புலக வரலாறு,
அவரின் வரலாறு
வரவேற்க வேண்டியதே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6174
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by jayaravi on Thu Nov 28, 2013 6:44 pm

பராசக்தியினால்  உயர்ந்தமனிதன்

Dear Vasu sir - You are time and again demonstrating through your passionate postings that you have no parallel to draw to describe about NT . Even magazine or journals during those days would not have explained so nicely the way you did. Hats Off to you and God bless.

Ravi
Hyderabad

 
avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by ayyasamy ram on Thu Nov 28, 2013 7:01 pm

பதிவகள்... 
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by vasudevan31355 on Mon Dec 02, 2013 8:45 am

அருமை தோழர்கள் கிருஷ்ணம்மா, செந்தில், ஜெயரவி அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by vasudevan31355 on Mon Dec 02, 2013 8:47 am

அய்யாசாமி அவர்களே!

தாங்கள் பதிவிட்டுள்ள நடிகர் திலகத்தின் நினைவுத் தபால் தலை படம் அருமை. மிக்க நன்றி!
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by S.VINOD on Mon Dec 02, 2013 9:04 am

வாசு சார்

மையம் திரியில் உங்கள் -ஈகரை பதிவுகள் பற்றிய தகவல்களை வழங்கிய திரு .கோபால் - பிரபல உலக தர விமர்சன ஆய்வாளர் மற்றும் மக்கள் திலகத்தை நேசிக்கும் பண்பாளர் எங்கே ?
avatar
S.VINOD
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 51
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by vasudevan31355 on Tue Jan 14, 2014 9:04 am

அனைவருக்கும் நடிகர் திலகத்தின் ஆசிகளுடன் கூடிய இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by ayyasamy ram on Tue Jan 14, 2014 9:08 am

 
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by jayaravi on Tue Jan 14, 2014 6:51 pm

இன்று ஒரு இனிய நன்னாள் ! ஆதவனுக்கு நன்றி சொல்லும் நாள் - அந்த ஒளி கடவுள் நம் நன்றியை எதிபார்ப்பது இல்லை - அவன் தன் கடமையை  சரிவர செய்துகொண்டுருக்கின்றான் - அதனால் தான் இந்த உலகம் இருளில் இன்னும்  சிக்கி தவிக்காமல் உள்ளது - இந்த பாடல் அவனுக்கு நன்றி சொல்லும் பாடல் - இது போல எளிய , இனிய பாடல்  NT படத்தை விட்டால் வேறு எங்கு கிட்டும் ?

அன்புடன் ரவி

avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: 'சிவாஜி என்ற மாநடிகர்'

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum