உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய தாவலில் திற.புதிய இடுகைகள்
» வட போச்சே…!
by ஜாஹீதாபானு Today at 3:52 pm

» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF
by சிவா Today at 3:44 pm

» தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி
by ayyasamy ram Today at 3:41 pm

» கவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்
by ayyasamy ram Today at 3:36 pm

» ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்
by சிவா Today at 3:00 pm

» ரமணியின் கவிதைகள்
by சிவா Today at 2:35 pm

» மீண்டும் புதிதாய்
by T.N.Balasubramanian Today at 2:32 pm

» ஞானக்கூத்தன் கவிதைகள்
by T.N.Balasubramanian Today at 2:23 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by சிவா Today at 2:22 pm

» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்
by சிவா Today at 2:15 pm

» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்
by சிவா Today at 2:12 pm

» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா?
by சிவா Today at 2:10 pm

» "நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு
by சிவா Today at 2:07 pm

» இணக்கமாய் ஓர் வணக்கம் !
by சிவா Today at 2:04 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:12 pm

» அக்னிக்கு அஸ்திவாரம்....!
by ayyasamy ram Today at 12:06 pm

» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்
by SK Today at 11:41 am

» சுப்பிரமணி – நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:37 am

» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am

» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» இன்னும் எதிர்காலம் இருக்கிறது –அனுபவ மொழிகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am

» காடையேழு வள்ளல் – நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am

» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 am

» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து!- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:38 am

» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am

» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.
by velang Today at 7:24 am

» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்
by ayyasamy ram Today at 7:19 am

» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am

» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am

» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by koogai Today at 12:24 am

» பகுத்துண்ணல் அறம் :
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 9:01 pm

» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
by சிவனாசான் Yesterday at 8:51 pm

» மலேசிய செய்திகள்
by சிவனாசான் Yesterday at 8:43 pm

» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 8:29 pm

» முக்கியச் செய்திகள்
by சிவனாசான் Yesterday at 8:24 pm

» வைரமுத்து மீது பாலியல் புகார்
by சிவனாசான் Yesterday at 8:12 pm

» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே?”
by ஜாஹீதாபானு Yesterday at 5:24 pm

» தேதி சொல்லும் சேதி
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by சிவா Yesterday at 4:48 pm

» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்
by சிவா Yesterday at 4:42 pm

» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை
by சிவா Yesterday at 4:23 pm

» மைக்ரோ கதை
by ஞானமுருகன் Yesterday at 1:57 pm

» ஒரு பக்கக் கதைகள்
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» யோசிக்கிறாங்கப்பா!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி
by ayyasamy ram Yesterday at 10:27 am

» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்
by ayyasamy ram Yesterday at 10:14 am

» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:01 am

» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்!
by சிவா Yesterday at 9:11 am

» இதுவும் கடந்து போகும்
by ayyasamy ram Yesterday at 9:07 am

» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:
by ayyasamy ram Yesterday at 9:02 am

Admins Online

உறுப்பினராக இணையுங்கள்

உலகச் செய்திகள்!

உலகச் செய்திகள்!

 on Tue Nov 12, 2013 3:05 pm
First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலிஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85710
மதிப்பீடுகள் : 10797

View user profile http://www.eegarai..net

Back to top Go down


Re: உலகச் செய்திகள்!

 on Wed Oct 03, 2018 2:34 am


வாஷிங்டன்: தென் சீன கடல் பகுதியில் ரோந்து வந்த அமெரிக்க போர் கப்பலை மோதுவது போல் சீன போர் கப்பல் அபாயகரமாக நெருங்கி வந்ததால் பரபரப்பு நிலவியது. தென் சீன கடல் பகுதி எரிசக்தி வளங்கள், மீன் வளம் நிறைந்ததாகும். முக்கிய கடல் வழிப்பாதையாக திகழும் தென் சீன கடலை சீனா ஒட்டுமொத்தமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. அங்கு தனது ராணுவ நிலைகளை நிறுவக்கூடிய அளவுக்கு செயற்கைக்தீவுகளை உருவாக்கி, தனது படைகளை குவித்து வருகிறது. அதே நேரத்தில், அண்டை நாடுகளான தைவான், பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா, வியாட்நாம் உள்ளிட்ட நாடுகள் தென் சீன கடல் பகுதியில் தங்களுக்கும் உரிமை உள்ளதாக கூறி வருகின்றன.அவர்களுக்கு ஆதரவாக, தென் சீன கடல் என்பது சர்வதேச பகுதி எனவும் அங்கு பல நாடுகளின் கப்பல்கள் சுதந்திரமாக சென்று வர உரிமை உள்ளது எனவும் அமெரிக்கா தெரிவித்து வருகிறது. அமெரிக்க கப்பல்களும் அவ்வழியாக ரோந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளன. இதன் காரணமாக, சீனா, அமெரிக்கா இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது.இந்நிலையில், அமெரிக்காவின் ஆயுதம் தாங்கிய போர் கப்பலான ‘டிகாடர்’ நேற்று தென் சீன கடல் பகுதியில் உள்ள கேவன்-ஜான்சன் மணல் திட்டு பகுதியில் ரோந்து சென்ற போது சீன கப்பல் மிக அருகே அபாயகரமான வகையில் நெருங்கி வந்துள்ளது. இத்தகவலை அமெரிக்காவின் பசிபிக் கடற்படை செய்தித்தொடர்பாளர் கமாண்டர் கிறிஸ்டன்சன் கூறி உள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், ‘‘பொதுவாக கடற்கரையிலிருந்து 12 நாட்டிகல் மைல் தொலைவுக்கு அப்பால் கடல் பகுதியில் பிற நாடுகளின் கப்பல்கள் பயணிக்க முழு சுதந்திரம் உண்டு. அதேபோல், அமெரிக்க போர் கப்பல் சென்று கொண்டிருந்த போது, திடீரென சீன போர் கப்பல் மிக அருகே நெருங்கி வந்தது. வெறும் 45 மீட்டர் இடைவெளியில் மோதுவது போல் வந்த சீன போர் கப்பல், அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை செய்தது. இரு கப்பல்களும் மோதுவதை தவிர்க்க அப்பகுதியிலிருந்து வெளியேறினோம். சீனாவின் இந்த நடவடிக்கை பாதுகாப்பற்றது, சரியானதல்ல’’ என கண்டனம் தெரிவித்துள்ளார்.அதே நேரத்தில் சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அனுமதியின்றி கடல் எல்லைக்குள் நுழைந்ததால் அமெரிக்க போர் கப்பலை எச்சரிக்கை செய்வதற்கான சீன போர் கப்பல் சென்றது. சீனாவின் மணல் திட்டுகள் பகுதியில் அமெரிக்கா தனது போர் கப்பலை அனுப்பி தொடர்ந்து அத்துமீறுகிறது. சீனாவின் இறையாண்மை, பாதுகாப்புக்கு மிரட்டல் விடும் மனப்போக்குடன் அமெரிக்கா நடந்து கொண்டால், அது இரு நாட்டின் உறவை வெகுவாக பாதிக்கும்’ என கூறப்பட்டுள்ளது.ஏற்கனவே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் முற்றியுள்ள நிலையில், தென் சீன கடல் விவகாரத்திலும் மோதல் போக்கு வலுவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85710
மதிப்பீடுகள் : 10797

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

 on Wed Oct 03, 2018 2:41 am


ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு கனடாவை சேர்ந்த பெண் விஞ்ஞானி உட்பட 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த கண்டுபிடிப்புகள், சாதனைகளை நிகழ்த்துவோருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது. 2018ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்கள் ஸ்வீடன் நகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ விஞ்ஞானி ஜேம்ஸ் பி அலீசன், ஜப்பானின் தசுகோ ஹோன்ஜோ ஆகியோருக்கு 2018ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுவோர் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. அமெரிக்காவை சேர்ந்த ஆர்தர் அஷ்கின்), பிரான்சை சேர்ந்த ஜெராடு மவுரோ (74) மற்றும் கனடாவை சேர்ந்த டோன்னா ஸ்டிரிக்லேண்ட் ஆகிய 3 விஞ்ஞானிகளும் இயற்பியலுக்கான நோபல் பரிசை பெறுகின்றனர்.

பரிசுத்ெதாகையயான ரூ.7.3 கோடியில் 50 சதவீதத்தை ஆர்தர் அஷ்கின் பெறுகிறார். மீதமுள்ள பரிசுத்தொகையை மவுரோவும், டோன்னாவும் பகிர்ந்து கொள்வார்கள். லேசர் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பில் ஈடுபட்டதற்காக 3 பேருக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் கண் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும். 3வது பெண் விஞ்ஞானி இயற்பியல் துறையில் கடந்த 1903ம் ஆண்டு மேரி க்யூரி, 1963ம் ஆண்டு மரியா கோபெர்ட் மேயர் ஆகிய பெண் விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். அதன் பின்னர் எந்த பெண் விஞ்ஞானியும் இயற்பியல் துறையில் நோபல் பரிசை பெறவில்லை. இப்போது, 55 ஆண்டுகளுக்கு பிறகு கனடாவை சேர்ந்த டோன்னா ஸ்டிரிக்ட்லேண்ட் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85710
மதிப்பீடுகள் : 10797

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

 on Thu Oct 04, 2018 6:19 am
போர்பஸ் பணக்கார அமெரிக்கர்கள்: டிரம்ப் பின்னடைவு
-
வாஷிங்டன்:
பணக்கார அமெரிக்கர்களுக்கான போர்ப்ஸ்
பட்டியலில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப்
138 வது இடத்திற்கு கிழறங்கியுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து 2018-ம் வரையிலான
பணக்கார அமெரிக்கர்கள் பெயர் பட்டியலை
முன்னணி பத்திரிகையான போர்பஸ் வெளியி்ட்டது.

இதில் முதல் 400 இடங்களை பிடித்துள்ள பணக்கார
அமெரிக்கர்கள் பெயரில் அதிபர் டெனால்டுடிரம்ப்
121வது இடத்தில் இருந்து கீழறங்கி 138 இடத்திற்கு
தள்ளப்பட்டார்.

இதன் மூலம் அவரது சொத்து மதிப்பு குறைந்து
வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
-----------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39963
மதிப்பீடுகள் : 11671

View user profile

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

 on Thu Oct 04, 2018 6:23 am
ஆப்கானிஸ்தானில், 24 மணி நேரத்தில் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
-
காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள்
கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இவர்களை தவிர ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்பட பல்வேறு
பயங்கரவாத இயக்கங்களும் அங்கு காலூன்றி தாக்குதல்
நடத்தி வருகின்றன.

ஆப்கான் ராணுவம் இவர்களின் கொட்டத்தை ஒடுக்க
போராடி வருகிறது.

இந்த நிலையில் ஆப்கான் தேசிய ராணுவப்படையினர்
மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் நாடு முழுவதும்
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக
இறங்கினர்.

அவர்கள் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதிகளை
சுற்றிவளைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தினர்.

அதே சமயம் 120 போர் விமானங்கள் பயங்கரவாதிகளின்
நிலைகளை குறிவைத்து வான்தாக்குதல்களை நடத்தின.

ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் இந்த அதிரடி
நடவடிக்கையில் 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும்
68 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இவர்களில் 42 பேர் தரைவழி தாக்குதலிலும், 26 பேர்
வான்தாக்குதலிலும் கொல்லப்பட்டதாக ராணுவ வட்டார
தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 21 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்ததாகவும்,
2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும்
அந்த தகவல்கள் கூடுதலாக தெரிவிக்கின்றன.
-
-------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39963
மதிப்பீடுகள் : 11671

View user profile

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

 on Thu Oct 04, 2018 6:27 am

--
ஈரான் மீதான பொருளாதார தடையை நீக்க அமெரிக்காவுக்கு, சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

-
திஹேக்,
அணு ஆயுத குறைப்பு தொடர்பாக அமெரிக்கா
உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் கடந்த 2015–ம்
ஆண்டு ஈரான் ஒப்பந்தம் செய்துகொண்டது.
-
அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்தபோது
போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை, தற்போதைய
ஜனாதிபதி டிரம்ப் அப்போதே குறை கூறிவந்தார்.

பின்னர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும்
இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக தன்னிச்சையாக
அறிவித்தார். அது மட்டுமின்றி ஈரான் மீது புதிய
பொருளாதார தடைகளையும் அவர் விதித்தார்.

இதில் முக்கியமாக மருந்து பொருட்கள், மருத்துவ
உபகரணங்கள் போன்ற பொருட்கள் ஏற்றுமதிக்கு
தடை விதிக்கப்பட்டு இருந்தது.


இந்த பொருளாதார தடையை எதிர்த்து சர்வதேச
நீதிமன்றத்தில் முறையிட்டது, ஈரான்.
இந்த விவகாரத்தை விசாரித்த
நீதிபதி அப்துல்ஹாவி அகமது யூசுப், நேற்று
அமெரிக்காவுக்கு உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதன்படி மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், உணவு
மற்றும் விவசாய பொருட்கள் போன்ற அத்தியாவசிய
பொருட்கள் மீதான தடைகளை விலக்க வேண்டும் என
நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் விமான பாகங்கள் மீதான தடைகளையும்
விலக்கிக்கொள்ள வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில்
குறிப்பிட்டார்.
-
---------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39963
மதிப்பீடுகள் : 11671

View user profile

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

 on Mon Oct 08, 2018 5:11 am


சுமார் ரூ.7 கோடி விலைமதிப்புடைய விண்கல்லை, கடந்த 30 ஆண்டுகளாக ஒருவர் தன் வீட்டின் கதவு அசையாமல் இருப்பதற்காக முட்டுக்கொடுக்கப் பயன்படுத்திய சுவாரஸ்யமும், அவலமும் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளரான மோனா சிர்பெஸ்குவிடம் அதே பகுதியை சேர்ந்த பெயர்கூறப்படாத மனிதர் ஒருவர் தன் வீட்டின் கதவு அசையாமல் இருப்பதற்காக முட்டுக்கொடுக்கப் பயன்படுத்தி வந்த ஒரு கல்லை கொடுத்து அதன் தன்மைகள் குறித்து சோதனை செய்யக் கூறியுள்ளார்.

சுமார் 10 கிலோ எடைக்கொண்ட அந்த அதிசய கல்லை ஆய்வு செய்ததின் முடிவில் ஆராய்ச்சியாளருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது 30 வருடங்களாகக் வீட்டின் கதவிற்கு முட்டுக்கொடுக்கப்பட்டிருந்தது விண்கல் எனச் சோதனையில் தெரியவந்துள்ளது.

1930 -ஆம் ஆண்டுகளில் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகனில் உள்ள எட்மோட் என்ற பகுதியில் உள்ள விளைநிலத்தில் விழுந்ததும் என்றும் அதனுடைய இன்றைய அமெரிக்கா டாலர் மதிப்பு 1 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயின் ரூ.7.37 கோடி) இருக்கும் என தெரிவித்தார்.

மேலும், மோனா சிர்பெஸ்கு, அந்த அதிசய கல்லை வாஷிங்டனில் உள்ள புகழ்பெற்ற ஸ்மித் சோனியன் இன்ஸ்டிட்யூட் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தார். அதனை ஆய்வு செய்தவர்கள் விண்கல் என உறுதி செய்தனர். தற்போது அதை விலை கொடுத்து வாங்க அனைவரும் போட்டிபோட்டு முன்வந்துள்ளனர்.

பெரும்பாலான விண்கல்லிலும் 90 முதல் 95 சதவீதம் வரை இரும்பு இருக்கும். ஆனால், இந்தக் கல்லில் 88 சதவிகிதம் இரும்பும், 12 சதவிகிதம் நிக்கல் இருப்பதும், இதுவரை பூமியில் விழுந்த விண்கற்களில் இதுவே பெரியது என்பது தான் இதன் தனி சிறப்பு.

இதுகுறித்து வானவியல் ஆராய்ச்சியாளர் மோனா சிர்பெஸ்குவி கூறுகையில், என் வாழ்நாளில் இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த கல்லை நான் ஆராய்ச்சி செய்ததில்லை. மெக்சிகனில் காணப்பட்ட ஆறாவது மிகப்பெரிய விண்கல் இதுவாகும். "இது என் வாழ்க்கையில் நான் பணியாற்றிய மிக மதிப்புமிக்க மாதிரி என்றும் தொடக்க கால சூரிய மண்டலத்தின் அங்கம் தற்போது என் கைகளில் கிடைத்துள்ளதாக உணர்ந்தேன் எனக் கூறினார்

பல கோடி மதிப்புடைய விண்கல்லை தனது வீட்டின் கதவு அசையாமல் இருப்பதற்காக முட்டுக்கொடுத்து வந்தவரும், பெயர் வெளியிடப்படாத உரிமையாளர் கூறுகையில், நான், கடந்த 1988-ஆம் ஆண்டுதான் அந்த நிலத்தை வாங்கினேன். அப்போது நிலத்துடன் சேர்ந்து இந்தக் கல்லும் எனக்குக் கிடைத்தது. நீண்ட நாள்களாக இந்தக் கல்லை பற்றி ஏதோ ஒரு சந்தேகம் எனக்குள் இருந்து வந்தது. இதையடுத்து அதனை தெளிவுப்படுத்திக் கொள்வதற்காகவே கல்லை சோதனைக்கு அளித்து தெளிவுப்படுத்தக் கூறினேன். தற்போது அந்த கல் விண்கல் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதனை தற்போது விற்கவும், அதில் கிடைக்கும் விற்பனை தொகையில் 10 சதவீதத்தை மெக்சிகன் மத்திய பல்கலைக்கழகத்துக்கு வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே நிலத்தின் முன்னாள் உரிமையாளர் 1930-ஆம் ஆண்டு தன் நிலத்தில் இந்தக் கல் இருந்ததாகக் கூறியுள்ளார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85710
மதிப்பீடுகள் : 10797

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

 on Mon Oct 08, 2018 5:17 am


இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிவுநிலைக்கு தள்ளப்பட்டது. அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரைமட்டமானது.

சுனாமி தாக்குதலில் பாதித்த பலு நகரில் நடைபெறும் மீட்பு பணியில் ராணுவமும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மேலும் பலர் மாயமாகி போயுள்ளனர். அதே நேரத்தில் உள்ளே சிக்கி தவிப்பவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1944 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக, மீட்புப்படை அதிகாரிகள் கூறுகையில், சுமார் 62,359 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது வரை 2,549 பேர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், பல அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள் என பல கட்டிடங்களின் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என தெரிவித்துள்ளனர்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85710
மதிப்பீடுகள் : 10797

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

 on Wed Oct 10, 2018 5:47 pm


நைரோபி: கென்யாவின் வடக்குப் பகுதியில் புதனன்று காலை பேருந்து கவிழ்ந்த விபத்தில் 50 பேர் பரிதாபமாக பலியாகினர்.

கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து அந்நாட்டின் வடபகுதியில் விக்டோரியா நதிக்கரையில் அமைந்துள்ள கிசுமு என்ற இடத்திற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த் பேருந்தில் 67 பேர் பயணிக்கக் கூடிய வசதி உள்ளது.

அப்பேருந்தானது கெரிச்சோ மாகாணத்தின் போர்ட் டெர்னான் என்ற இடத்திற்கு அருகே வந்துகொண்டிருந்த பொழுது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சாலை அருகே இருந்த சிறு பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குளானது.

இந்த விபத்தில்
Code:
31 ஆண்கள், 12 பெண்கள் மற்றும் 7 குழந்தைகள்
மரணமடைந்தனர். இடிபாடுகளுக்கு இடையே மேலும் சிலர் சிக்கியிருப்பதால் பலி எணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

குறிப்பிட்ட அந்த இடமானது அடிக்கடி இத்தகைய விபத்துகள் நடக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது

இந்தத் தகவலை பிபிசி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

விபத்தில் மரணமடைந்தோரின் குடும்பங்களுக்கு கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன் விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85710
மதிப்பீடுகள் : 10797

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

 on Wed Oct 10, 2018 5:48 pm
Code:
வங்கதேச பிரதமர் பேரணியில் குண்டு வெடிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர்கள் இருவர் உட்பட 19 பேருக்கு தூக்கு

டாக்கா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரணியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2004-ஆம் ஆண்டு வங்கதேச பிரதமராக இருந்தவர் கலீதா ஜியா. அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்தவர் ஷேக் ஹசீனா.இவர் தலைநகர் டாக்காவில் உள்ள வங்கபந்து மைதானத்தில் பேரணி ஒன்றை நடத்தினார். இந்தப் பேரணியில் எதிர்பாராதவிதமாக தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இதில் 24 பேர் மரணமடைந்தனர். மேலும் 500 பேர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பின் விளைவாக ஷேக் ஹசீனாவுக்கு கேட்கும் திறனில் சிறிது குறைபாடு ஏற்பட்டது.

இந்த வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், அப்போதைய உள்துறை அமைச்சர் லுத்போஸமான் மற்றும் கல்வித்துறை இணை அமைச்சர் அப்துஸ் ஸலாம் பின்ட்டு உள்ளிட்டோர் மீதுகுற்றம் சுமத்தப்பட்டு வழக்கு நடந்து வந்தது.

இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் பேரணியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

புதனன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் முன்னாள் அமைச்சர்கள் லுத்போஸமான் மற்றும் அப்துஸ் ஸலாம் பின்ட்டு உள்ளிட்ட 19 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், அவரது முன்னாள் அரசியல் செயலர் ஹாரிஸ் சவுத்ரி உள்ளிட்ட 19 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 11 பேருக்கும் இந்த வழக்கில் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்து தெரிவித்த அந்நாட்டின் சட்ட அமைச்சர் அனிசுல் ஹக், இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட தாரிக் ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் சவுத்ரி ஆகியோருக்கு தண்டனையை உயர்த்தி மரண தண்டனை வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85710
மதிப்பீடுகள் : 10797

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

 

Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை