ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உலகச் செய்திகள்!

Page 26 of 26 Previous  1 ... 14 ... 24, 25, 26

View previous topic View next topic Go down

உலகச் செய்திகள்!

Post by சிவா on Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலிஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: உலகச் செய்திகள்!

Post by krishnaamma on Tue Aug 18, 2015 12:02 pm

@shobana sahas wrote:வர வர பிளேன் இல் பயணிக்கவே பயம்மா இருக்கு ..... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1157938

ஆமாம் ஷோபனா................சோகம் .................... பயம் பயம் பயம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Wed Aug 26, 2015 1:00 am

எங்களிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை இந்தியா மறந்துவிட்டது பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் மிரட்டல் பேச்சுஎங்களிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை இந்தியா மறந்துவிட்டது என்று பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.

பேச்சுவார்த்தை ரத்து

இந்தியா–பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான 2 நாள் பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. பாகிஸ்தானின் அடாவடி நடவடிக்கையால் பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில் ரத்து ஆனது. எனினும், இந்தியா கடுமையான நிபந்தனைகளை விதித்ததால்தான் பேச்சுவார்த்தையை ரத்து செய்தோம் என்று பாகிஸ்தான் சாக்கு போக்கு கூறி வருகிறது.

இதுபற்றி நேற்று இஸ்லாமாபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கூறியதாவது:–

அணு ஆயுதங்கள்

பேச்சுவார்த்தை ரத்து ஆனதற்கு பாகிஸ்தான் காரணம் இல்லை. கடந்த ஆண்டு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பிரதமர் மோடி, இந்த பிராந்தியத்தின் சக்தி வாய்ந்த நாடாக இந்தியாவை நினைத்துக் கொள்கிறார். ஆனால் பாகிஸ்தானிடம் அணுசக்தி இருக்கிறது என்பதை அவர் மறந்துவிட்டார்.

மோடியின் இந்தியா இந்த பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நாடுபோல் நடந்து கொள்ளுமேயானால்... நாங்களும் அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுதான். எங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும்.

இந்தியா தனது விருப்பப்படி இயல்பான சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று விரும்புகிறது. அப்படி என்றால் வர்த்தகம், போக்குவரத்து குறித்துதான் பேச முடியும்.

ஓடிவிடவில்லை

காஷ்மீர் ஒரு பிரச்சினை இல்லை என்றால் எல்லையில் 7 லட்சம் படை வீரர்களை இந்தியா குவித்து வைத்திருப்பது ஏன்?... இருநாடுகளுக்கும் இடையே காஷ்மீர் ஒரு பிரச்சினையாக உள்ளது என்பதையும் அதற்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதையும் சர்வதேச நாடுகள் விரும்புகின்றன.

தற்போதைய தந்திரம்(பேச்சுவார்த்தை ரத்து) வேலைக்கு ஆகாது என்பதை இந்தியா உணர வேண்டும். காஷ்மீர் மக்கள் தங்களுடைய தலைவிதியை நிர்ணயித்துக்கொள்ள பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா முன்வரவேண்டும்.

தீவிரவாதம் தொடர்பான பேச்சைக் கண்டு பாகிஸ்தான் ஓடிவிடவில்லை. பாகிஸ்தானில் இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ தீவிரவாதத்தை தூண்டிவிடுவதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Wed Aug 26, 2015 1:58 am

நேபாளத்தில் பயங்கரம் ஈட்டி, கோடரியால் தாக்கி 8 போலீசார் படுகொலை ஆர்ப்பாட்டக்காரர்கள் 3 பேர் பலி

நேபாள நாட்டை மறு சீரமைக்கும் விதமாக 7 மாகாணங்களை உருவாக்கும் சட்ட வரைவு நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் ஏழைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என மேற்கு நேபாளத்தின் திகாபூர் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் அறிவித்தனர். இதற்கு போலீசார் தடை விதித்தனர்.

போலீசாரின் தடையை மீறி நேற்று 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திகாபூர் நகரில் திரண்டனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், அங்கே இருந்த போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் இந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது.

அப்போது போலீசாரை கோடரி, ஈட்டியால் தாக்கியும் கற்களால் வீசியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் உள்பட 8 பேர் பலியாயினர்.

போலீசாரின் தாக்குதலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள இவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கலவரம் வெடித்துள்ள திகாபூரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர கூடுதல் போலீஸ் படையினர் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக நேபாள உள்துறை மந்திரி பம்தேவ் கவுதம் தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Thu Sep 03, 2015 9:30 pm

மலாக்கா கடற்பகுதியில் படகு கவிழ்ந்து 13 பேர் பலி; பலரைக் காணவில்லை!மலாக்கா – மலேசியாவில் இருந்து இந்தோனேசியாவிற்கு 70க்கும் மேற்பட்ட ஆட்களைச் ஏற்றிச் சென்ற படகு ஒன்று, மலேசியாவின் செலங்கோர் மாகாணத்தில் சபாக் பெர்னாம் நகருக்கு அருகே மலாக்கா ஜலசந்தியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதை அறிந்த மீனவர்கள் விரைந்து வந்து 15 பேரை மீட்டனர். 13 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். பலரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணியில் 12 கப்பல்கள்களும் ஒரு விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

படகில் வந்தவர்கள் அகதிகளா அல்லது சட்டவிரோதமாக மலேசியாவில் குடியேறிப் பின் இந்தோனேஷியாவிற்குக் கள்ளப் படகேறிச் சென்றவர்களா எனக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Thu Sep 03, 2015 9:36 pm

பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்தி உலகை வியப்பில் ஆழ்த்திய சீன ராணுவம்

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை வெற்றி கொண்டதின் 70-வது ஆண்டையொட்டி பீஜிங்கில் சீனா ராணுவம் மிகப்பெரிய அணிவகுப்பு நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானை வீழ்த்தி, வெற்றி கொண்டதின் 70–வது ஆண்டு விழாவையொட்டி மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பினை நடத்தப்போவதாக சீனா அறிவித்திருந்தது.

தலைநகர் பீஜிங்கில் தியனன்மென் சதுக்கத்தில், சீனா அந்த பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை இன்று நடத்தி காட்டியது. இந்த அணிவகுப்பில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ராணுவ அணிவகுப்பில் சுமார் 12 ஆயிரம் ராணுவ வீரர்கள் பங்கேற்றுது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. மேலும் 200 விமானங்கள்,டாங்கிகள், ஏவுகணைகள் அணிவகுத்து வந்தது பார்வையாளர்களை கவர்ந்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Thu Sep 03, 2015 9:38 pm

சிறிய அல்லது நீண்ட போருக்கு தயார்: பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி

இந்திய தலைமைக்கு போர் வெறி மேலோங்கினால் சிறிய அல்லது நீண்ட போருக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் இந்தியாவுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தும் என்றும் அந்நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.

இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங், வருங்காலத்தில் சிறிய மற்றும் வேகமுடனான போருக்கு இந்தியா தயாராகி வருகிறது என்று வெளியிட்ட அறிக்கையை அடுத்து ஆசிப்பின் பதில் கருத்து வெளியாகியுள்ளது. ரேடியோ பாகிஸ்தான் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஆசிப் பேசும்போது, பாகிஸ்தான் அமைதியில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால் எந்த தாக்குதலுக்கும் எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என தெரியும் என்று கூறியுள்ளார்.

இந்திய ராணுவ தளபதியின் கருத்து குறித்து பேசிய ஆசிப், இந்தியா சிறிய அல்லது நீண்ட போரை தொடுத்திட்டால் அதற்கு சரியான பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முழு அளவில் தயாராகவுள்ளது என கூறியுள்ளார். இதற்கு முந்தைய போர்கள் குறித்து அவர் பேசுகையில், கடந்த 1965ம் ஆண்டு இந்திய படைகளின் தாக்குதல்களை பாகிஸ்தான் படையினர் முறியடித்தனர்.

1965ம் ஆண்டில் லாஹூரை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் கனவை எங்களது படைகள் நசுக்கின. வருங்காலத்திலும் இதனையே நாங்கள் செய்வோம் என அவர் கூறியுள்ளார். கடந்த 50 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட அதிக அனுபவம் மற்றும் செயல் திறனுடன் பாகிஸ்தான் ராணுவம் தற்பொழுது உள்ளது என அவர் கூறியுள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக பல வருடங்களாக எங்களது படைகள் போரிட்டு வந்துள்ளன.

எந்த சவாலையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என அவர்களுக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும், பிரதமர் நவாஸ் ஷெரீப் அமைதியில் நம்பிக்கை கொண்டுள்ளார் என ஆசிப் கூறியுள்ளார். சமீபத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் எழுந்த பதற்றம் மற்றும் இந்திய மற்றும் பாகிஸ்தானிய படைகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சூடு ஆகியவற்றை அடுத்து ஆசிப்பின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Fri Sep 04, 2015 11:58 pm

ஒரு வரிச் செய்திகள்!

குவாட்டமாலா: குவாட்டமாலா நாட்டின் அதிபர் ஓட்டோ பெரஸ் தனது பதவிலியிலிருந்து விலகிய அடுத்த சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இலண்டன்: சிரியா சிறுவன் மரணத்தின் எதிரொலி – மேலும் ஆயிரக்கணக்கில் சிரியா அகதிகளுக்கு தஞ்சம் தருவோம் என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் அறிவிப்பு!

கோலாலம்பூர்: “மகாதீர் மீது காவல் துறை நடவடிக்கை வேண்டாம்” அமைச்சர் நஸ்ரி வேண்டுகோள்!

கோலாலம்பூர்: கள்ளக் குடியேறிகள் படகு விபத்து – மரண எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது!

கோலாலம்பூர்: “மலேசியாவுக்கு எல்லாமே இறங்கு முகமாக இருக்கின்றது” – நஜிப்பின் தம்பி நசிர் ரசாக்

கொபானே: தனது மரணத்தால், உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி திரும்பிப் பார்க்க வைத்த 3 வயது சிரியா சிறுவன் சிரியா எல்லையில் நல்லடக்கம்!

கோலாலம்பூர்: “2.6 பில்லியன் சாதாரண நன்கொடையல்ல – பிரம்மாண்ட ஊழல்” – வெளிப்படைத்தன்மைக்கான அனைத்துலக மன்றத் தலைவர் கூறுகின்றார்.

கோலாலம்பூர்: “நஜிப் பதவி விலகி 700 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை மீதான விசாரணைக்கு வழிவிட வேண்டும்” -ஐக்கிய நாட்டு சபையின் ஊழல் ஒழிப்புக்கான கூட்டமைப்பின் தலைவர் அறைகூவல்

ஜோகூர் பாரு: “ஐக்கிய அரபு குடியரசிடம் 10-0 கோல் கணக்கில் மலேசியா மோசமான தோல்வி – காரணமான பயிற்சியாளரை மாற்றுங்கள்” – ஜோகூர் இளவரசர் அறைகூவல்

கோலாலம்பூர்: “நஜிப் பெற்ற சர்ச்சைக்குரிய நன்கொடையை இனியும் புத்ரா ஜெயா மூடி மறைக்க முடியாது” – பிரபல அமெரிக்க பத்திரிக்கையாளர் டேவிட் கப்ளான் ஊழல் தடுப்பு மாநாட்டில் பேச்சு
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Sat Sep 05, 2015 12:26 am

உலகையே உலுக்கிய சிரிய குழந்தையின் மரணம்: தாய் மற்றும் சகோதரனுடன் சொந்த ஊரில் அடக்கம்

சிரியாவில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக, ஐரோப்பாவிற்கு சென்று தஞ்சம் புகுவதற்காக, லட்சக்கணக்கான அகதிகள் கடல் வழியாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்களில் 23 பேர், கடந்த புதன் அன்று, துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டிற்கு இரு படகுகளில் சென்றனர். அதில் படகு கவிழ்ந்து 12 பேர் நடுக்கடலில் மூழ்கி மூச்சுத்திணறி, துடிதுடித்து பலியாகினர். 9 பேர் மட்டுமே பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒருவன்தான் மூன்று வயதே ஆன ஐலன். அவனோடு சேர்ந்து அவன் தாயும் 5 வயது அண்ணனும் நீரில் மூழ்கி இறந்தனர். முன்னரே இது போன்ற சம்பவங்கள் பல நிகழ்ந்திருந்தும் கூட தன் நாட்டிற்கு அகதிகளை அழைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டாமல் பிடியை இறுக்கியபடியே இருக்கிறார்கள் ஐரோப்பிய கொள்கை வகுப்பாளர்கள்.

இந்த நிலையில், 3 வயது குழந்தையான ஐலன், கடற்கரை மணலில் முகம் புதைத்தபடி, வெறும் சடலமாகக் கிடக்கும் புகைப்படம், உலகின் கள்ள மௌனத்தை அசைத்து பார்க்கத் துவங்கியுள்ளது. இந்த கொடூர சம்பவம் நடந்த துருக்கியின் போட்ரம் மாவட்டம், கடல் கடந்து வரும் அகதிகளின் சந்திப்பு புள்ளியாக உள்ளது. இங்குள்ள அகியர்லார் கடற்கரையில், கடந்த புதன்கிழமை காலை 6 மணியளவில் நிலுபர் டெமிர் என்ற பெண் புகைப்பட-நிருபர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

இந்நிலையில் இறந்த மூவரின் உடலும், அவர்களது சொந்த ஊரான சிரியாவின் கொமானியில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் குடும்பத் தலைவரான அப்துல்லா கதறி அழுதபடி, தன் குடும்பத்தினரின் உடல்களை வலம் வந்த காட்சி, அங்கு கூடியிருந்தவர்களை விம்மி அழ வைத்தது.

எல்லையை கடந்தது குறித்து இறந்த குழந்தையின் தந்தையான அப்துல்லா குர்தி கூறுகையில், “என்னுடைய குடும்பத்தின் மரணம் அரபு நாடுகள் சிரிய அகதிகளுக்கு உதவ வைக்கும் என்று நம்புகிறேன்.” என்று பிற அகதிகளின் உயிர் காக்கும் அக்கறையுடன் கண்ணீர் சிந்தினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Sat Sep 05, 2015 12:27 am

‘ஐ.எஸ். தீவிரவாதிகளை சும்மாவிடமாட்டேன், நாடு திரும்பி அவர்களுக்கு எதிராக சண்டையில் குதிப்பேன்’ கடலில் பலியான பிஞ்சுக் குழந்தையின் தந்தை

‘ஐ.எஸ். தீவிரவாதிகளை சும்மாவிடமாட்டேன், நாடு திரும்பி அவர்களுக்கு எதிராக சண்டையில் குதிப்பேன்’ என்று கடலில் பலியான பிஞ்சுக் குழந்தையின் தந்தை அப்துல்லா குர்தி கூறிஉள்ளார்.

சிரியாவின் உள்நாட்டுப்போர், அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி விட்டது. அவர்களில் பலரும் தங்கள் மீதியான வாழ்க்கையை கழித்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமான நிலையில், அண்டை நாடான துருக்கி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் அகதிகள் பிரச்சினையை ஐரோப்பிய நாடுகள் தீராத தலைவலியாக கருதுகின்றன. இந்நிலையில் துருக்கியில் கடலில் பலியாகிக்கிடந்த குழந்தை அய்லான் படம், உலகையே உலுக்கி விட்டது. இதனையடுத்து ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாட்டிலும் சற்று மாற்றம் வந்துஉள்ளது.

குழந்தை அய்லானின் தந்தை முதலில் கனடாவிடம் அடைக்கலம் கேட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகிஉள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குலுக்கு பயந்து சிரியாவின் கொம்பானி நகரில் இருந்து கடந்த ஆண்டு துருக்கி சென்ற அப்துல்லா குர்தி என்பவர், தனது மனைவி ரெஹான், மூத்த மகன் காலிப்(வயது 5), இளைய மகன் அய்லான்(3) ஆகியோருடன் கனடா நாட்டில் அடைக்கலம் புக அனுமதி கேட்டார். அது நிராகரிக்கப்பட்டது. இதனால் கிரீஸ் நாட்டுக்கு கள்ளப்படகில் சென்று அங்கிருந்து ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் தஞ்சம் புகுந்தவிடலாம் என்று கருதினார்.

துருக்கி கடல் பகுதியில் மனைவி குழந்தைகளுடன் திருட்டு படகில் பயணம் செய்வதற்காக 3.5 லட்சம் ரூபாயை அப்துல்லா குர்தி கொடுத்து இருக்கிறார். பாதுகாப்பற்ற கடல் பயணத்தை மேற்கொண்டபோதுதான் அப்துல்லா குர்தி தனது மனைவி குழந்தைகளை ராட்சத கடல் அலைகளுக்கு காவு கொடுக்க நேர்ந்தது. அதுவும் பிஞ்சுக் குழந்தை அய்லான் கடற்கரையில் முகம் புதைந்த நிலையில் பிணமாக கிடந்த புகைப்படம் உலகையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.

முதலில் அப்துல்லா குர்திக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்த கனடா அரசு, தற்போது அய்லானின் மரணக் காட்சியைப் பார்த்தும், எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலுக்கும் பதறிப்போய் அவருக்கு அடைக்கலம் கொடுக்க முன் வந்துள்ளது. ஆனால், அப்துல்லா குர்தி கனடாவின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

அப்துல்லா குர்தி பேசுகையில், எனது மனைவிதான் இந்த உலகம். அவள் இல்லாமல் எதுவுமே கிடையாது. மனைவியும், குழந்தைகளும் என் கைகளில் இருந்தபோதே மரணத்தை தழுவி விட்டனர். தற்போது, எனது இளைய மகன் இறந்த புகைப்படக் காட்சியை பார்த்து எனக்கு அடைக்கலம் தருவதாக கனடா அரசாங்கம் கூறுகிறது. இதை நான் ஏற்கப் போவதில்லை. எனது குடும்பத்தையே இழந்துவிட்டேன். இனி நான் கனடா சென்று வாழ்வதால் எதுவும் ஆகிவிடாது. என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஐ.எஸ். தீவிரவாதிகளை சும்மாவிடமாட்டேன். நாடு திரும்பி அவர்களுக்கு எதிராக சண்டையில் குதிப்பேன்.என்று கூறிஉள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by krishnaamma on Sat Sep 05, 2015 12:08 pm

நன்றி சிவா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by T.N.Balasubramanian on Sat Sep 05, 2015 12:53 pm

ஐயோ பாவம் !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22145
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Tue Aug 16, 2016 2:39 pm

பெரு நாட்டை அதிர வைத்த நிலநடுக்கம்: 4 பேர் பலி, பலர் காயம்

லிமா: பெரு நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

கைலோமா மாகாணத்தில் உள்ள ஆரெக்வீபா மற்றும் அன்யு பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5.3 ஆக பதிவாகியுள்ளது. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும் சுற்றுலா பயணிகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மிகவும் தாழ்வான பகுதியான கைலோமா மாகாணத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by ayyasamy ram on Tue Aug 16, 2016 3:19 pm


-
சோகம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37110
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Tue Aug 16, 2016 5:11 pm

91 அடி ஆழம் உள்ள கடலில் 38 மணி நேரம் நீந்தி உயிர் தப்பிய பெண்

சீனாவை சேர்ந்த பான் (32) என்ற பெண், ஜப்பானிலிருந்து ஷாங்காய் நகருக்கு சென்ற குரூஸ் என்ற கப்பலில் கடந்த 10ம் தேதி பயணம் செய்துள்ளார். அவர் ஷாங்காய் பகுதி அருகே வந்த போது கப்பலில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

ஆனால் தன் மகள் வீடு திரும்பாததை அறிந்த அவரது தந்தை பான் சென்ற கப்பலுக்கு தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஆனால் அவர்களோ தாங்கள் பயணிகள் அனைவரையும் ஷாங்காய் நகரில் இறக்கிவிட்டதாக கூறினார்.

இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி அப்பகுதி வழியே படகில் சென்ற ஒருவர் பான் கடலில் தத்தளித்துகொண்டிருப்பதை கண்டு அவரை உயிருடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அவர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது மீன்கள் சில கடித்திருப்பதாகவும், அதனால் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 91 அடி ஆழம் உள்ள கடலில் ஒரு லைப் ஜாக்கெட் இல்லாமலும், உணவு எதுவுமில்லாமல் தொடர்ந்து 38 மணி நேரம் கடலில் பான் உயிருடன் மீட்கப்பட்டதை கண்டு அவரது தந்தையார் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

பான் ஒரு நல்ல நீச்சல் வீரர் என்பதால், அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by T.N.Balasubramanian on Tue Aug 16, 2016 5:35 pm

வாழ்த்துக்கள் பான் .நீண்ட ஆயுள் கடவுள் உனக்கு அருள்வாராக.அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22145
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by M.Jagadeesan on Tue Aug 16, 2016 5:44 pm

Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them.
என்பார் ஷேக்ஸ்பியர் .

நீச்சல் வீராங்கனை BONN IS BORN GREAT .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Tue Aug 16, 2016 7:39 pm

அரசாங்க நிதியுதவி பெற குழந்தைகளுக்கு போலியான அறுவை சிகிச்சை செய்த தாயாருக்கு 7ஆண்டுகள் ஜெயில்

இங்கிலாந்து நாட்டில் அரசாங்க நிதியுதவி பெறுவதற்காக பெற்ற குழந்தைகளுக்கு போலியான அறுவை சிகிச்சை செய்த தாயாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள கிராய்டன் நகரில் பெயர் வெளியிடப்படாத தாயார் ஒருவர் தனது 6 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.இந்நிலையில், வறுமை மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் அரசாங்க நிதியுதவியான 3,75,000 பவுண்ட் (3.2 கோடி ரூபாய்) தொகையை பெற திட்டமிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து 6 குழந்தைகளில் இருவர் ஊனமுற்றவராக நடிக்க அவர் பயிற்சி அளித்து வந்துள்ளார். இதன் அடிப்படையில், இருவருக்கும் ஆஸ்துமா மற்றும் மன இறுக்க நோய் இருப்பதாக தாயார் நாடகமாடியுள்ளார்.

பின்னர், குழந்தைகளுக்கு கட்டாயப்படுத்தி மருந்து மாத்திரைகளையும் கொடுத்து வந்துள்ளார். மேலும், பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றில் நுகர்வு குழாய்களும் பொறுத்தப்பட்டது.

இந்த சிகிச்சைகளுக்காக அவர் 2002 முதல் 2013 வரை சுமார் 2,87,800 பவுண்ட்( ரூ.2.49 கோடி ரூபாய்) அரசாங்க நிதியுதவியை பெற்றுள்ளார்.மேலும், எஞ்சிய தொகையினை பெற முயற்சி செய்தபோது அவரது நாடகம் அம்பலமாக கடந்த 2013ம் ஆண்டு தாயார் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இதன் இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, அரசாங்க நிதியுதவியை பெறுவதற்காக பெற்ற குழந்தைகளுக்கு போலியான அறுவை சிகிச்சை செய்த தாயாருக்கு 7.6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Thu Aug 18, 2016 7:01 am

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ கோரத்தாண்டவம் 82 ஆயிரம் பேர் வெளியேற உத்தரவு

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ கோரத்தாண்டவமாடி வருகிறது. இதன் காரணமாக 82 ஆயிரம் பேர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீ

அமெரிக்காவில் இப்போது கோடை காலம் ஆகும். அங்கு, கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மலைப்பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை காட்டுத்தீ பிடித்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. காட்டுத்தீயின் கோரத்தாண்டவத்தில் இதுவரை 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நாசமாகி உள்ளது.

இந்த ஆண்டு கோடை காலத்தில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்திய தீ விபத்தாக இது கருதப்படுகிறது.

வீடுகளுக்கு ஆபத்து

‘புளுகட் பயர்’ என்றழைக்கப்படுகிற இந்த தீ விபத்தினால், அங்கு சான்பெர்னார்டினோ நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், அமெரிக்க அரசின் உதவியைப் பெறும் வகையிலும் அங்கு நெருக்கடி நிலையை பிரகடனம் செய்து கலிபோர்னியா மாகாண கவர்னர் ஜெர்ரி பிரவுன் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீயில் அழிந்து விட்டன.

நெடுஞ்சாலை மூடல்

இந்த தீ விபத்து குறித்து அமெரிக்க தீயணைப்பு படை செய்தி தொடர்பாளர் லின் சீலியட் கூறும்போது,‘‘ இந்த தீ அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. தீயின் பின்னால் அதிவேகமாக காற்று உள்ளது. இது கட்டுப்படுத்துவதற்கு கடினமான ஒன்று’’ என்று குறிப்பிட்டார்.

காட்டுத்தீ பரவி வருவதால் விரும்பத்தகாத விளைவுகளை தவிர்க்கிற வகையில் அங்கு லாஸ் வேகாஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களை இணைக்கிற ‘இன்டர்ஸ்டேட்–15’ நெடுஞ்சாலை மூடப்பட்டு விட்டது.

700 வீரர்கள்

கஜோன் பாஸ் பகுதியில் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் 700 தீயணைப்பு வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த கட்டமாக இந்த தீ, மொஜாவே பாலைவனத்தை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சான் பெர்னார்டினோ ரைட் உட் மற்றும், பெலான் நகர் பகுதிகளில் வாழ்கிற மக்கள் 82 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர்.

சாம்பல் மழை

காட்டுத்தீ காரணமாக பெலான் பகுதியில் சாம்பல் மழை பெய்வதாக அங்குள்ள கால்நடை வளர்ப்பு பண்ணை அதிபர் தெரிவித்தார்.

இன்னொரு பக்கம் வடக்கு கலிபோர்னியாவில் கிளேட்டன் பகுதியிலும் கடந்த சனிக்கிழமை காட்டு தீ பிடித்து பரவி வருகிறது. இந்த தீ விபத்தில் 175 வீடுகள் அழிந்தன. இங்கு 35 சதவீத தீ இப்போதுதான் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதே போன்று மத்திய கலிபோர்னியாவில் சிம்னியில் காட்டுத்தீ பரவியதில் 6,900 ஏக்கர் பரப்பளவு அழிந்தது. 40 கட்டிடங்களும் நாசமாகின.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Thu Aug 18, 2016 6:01 pm

டுவிட்டரில் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு அதிகரித்திருப்பதாக வல்லுநர்கள் கணிப்பு

சமூக வலைத்தளமான டுவிட்டரில், ஆங்கிலத்தில் உலகளவில் அனுப்பப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு சார்ந்த டுவீட்கள் அதிக அளவில் உயர்ந்திருப்பதாக பிபிசி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை மாதத்தில், இஸ்லாமிய எதிர்ப்பு, தரக்குறைவான அல்லது வெறுப்புணர்வைக் காட்டும் டுவீட்கள் மொத்தம் 7 ஆயிரம் அனுப்பப்பட்டதாக பிரிட்டிஷ் கருத்தாய்வு நிறுவனம் டெமோஸ் அமைப்பை சேர்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் மாதத்தில், இது போன்ற டுவீட்டுகள் 2,500 ஆக இருந்தது.

ஐரோப்பாவிலிருந்து வெளிவந்த இது போன்ற டுவீட்களில் பெரும்பாலானவை பிரிட்டனில் இருந்தே வந்துள்ளன. ஜூன் 15 ஆம் தேதி அன்று இது போன்ற டுவீட்கள் அதிகபட்சமாக பதிவாகி உள்ளன.

இதற்கு முந்தைய நாள், பிரஞ்சு நகரமான நீஸில் டிரக் தாக்குதல் நிகழ்ந்து 80க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் அமைப்பினர் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Sat Aug 20, 2016 9:21 pm

சீனாவில் முயல் என நினைத்து சிறுமியை வேட்டைக்காரர்கள் சுட்டு கொலை செய்ததை அடுத்து, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சீனாவின் அன்ஹுயி மாகாணம் லுயான் பகுதியில் டிரக்கில் வந்த மூன்று வேட்டைக்காரர்கள், அங்குள்ள பண்ணையில் செடி கொடிகள் மற்றும் புற்கள் நிறைந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை முயல் என நினைத்து துப்பாக்கியால் சுட்டனர்.

பின்னர் அருகில் சென்று பார்த்தபோது சிறுமி என்று தெரிந்ததும், சம்பவ இடத்திலிருந்து தப்பித்தனர். உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த சிறுமியை கண்ட அவரது பெற்றோர், அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து, அந்த மூன்று வேட்டைக்காரர்களும், அருகிலிருந்த போலீசில் சரணடைந்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by ayyasamy ram on Sun Aug 21, 2016 10:10 am


-
துருக்கியில் திருமண நிகழ்ச்சியொன்றில் குண்டு வெடிப்பு: 22 பேர் பலி!

-
துருக்கியில் சனிக்கிழமை இரவு திருமண நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபம் ஒன்றின் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 22 பேர் பலியானார்கள்.

துருக்கி நாட்டில் சிரியா எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள நகரம் காஜியண்டெப். இந்த நகரத்தில் சனிக்கிழமை இரவில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த மண்டபம் ஒன்றின் அருகில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தில் 22 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். சுமார் 90-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக ஆளுநர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் நேரப்படி இரவு 10.50 மணியளவில் இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் அரபு நாட்டு பிரிவினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக துருக்கிபின் ஆளும் நீதி மற்றும் வளர்ச்சி கட்சியின் காஜியண்டெப் நகர எம்.பி சமில் தய்யார் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் தற்கொலை படையிப்பினரின் முயற்சியாக இருக்கலாம் என்று துருக்கி துணை பிரதமர் மெஹ்மட் சிம்ஸ்க் தெரிவித்தார்.இந்த சம்பவத்திற்கு துருக்கி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37110
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 21, 2016 12:43 pm

சோகம்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4553
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by T.N.Balasubramanian on Sun Aug 21, 2016 7:19 pm

@சிவா wrote:சீனாவில் முயல் என நினைத்து சிறுமியை வேட்டைக்காரர்கள் சுட்டு கொலை செய்ததை அடுத்து, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சீனாவின் அன்ஹுயி மாகாணம் லுயான் பகுதியில் டிரக்கில் வந்த மூன்று வேட்டைக்காரர்கள், அங்குள்ள பண்ணையில் செடி கொடிகள் மற்றும் புற்கள் நிறைந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை முயல் என நினைத்து துப்பாக்கியால் சுட்டனர்.

பின்னர் அருகில் சென்று பார்த்தபோது சிறுமி என்று தெரிந்ததும், சம்பவ இடத்திலிருந்து தப்பித்தனர். உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த சிறுமியை கண்ட அவரது பெற்றோர், அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து, அந்த மூன்று வேட்டைக்காரர்களும், அருகிலிருந்த போலீசில் சரணடைந்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மேற்கோள் செய்த பதிவு: 1219424

மரணம் எப்பிடி எல்லாம் சம்பவிக்கிறது . ஐயோ பாவம் !
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22145
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by T.N.Balasubramanian on Sun Aug 21, 2016 7:19 pm

@ayyasamy ram wrote:
-
துருக்கியில் திருமண நிகழ்ச்சியொன்றில் குண்டு வெடிப்பு: 22 பேர் பலி!

-
துருக்கியில் சனிக்கிழமை இரவு திருமண நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபம் ஒன்றின் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 22 பேர் பலியானார்கள்.

துருக்கி நாட்டில் சிரியா எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள நகரம் காஜியண்டெப். இந்த நகரத்தில் சனிக்கிழமை இரவில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த மண்டபம் ஒன்றின் அருகில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தில் 22 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். சுமார் 90-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக ஆளுநர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் நேரப்படி இரவு 10.50 மணியளவில் இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் அரபு நாட்டு பிரிவினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக துருக்கிபின் ஆளும் நீதி மற்றும் வளர்ச்சி கட்சியின் காஜியண்டெப் நகர எம்.பி சமில் தய்யார் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் தற்கொலை படையிப்பினரின் முயற்சியாக இருக்கலாம் என்று துருக்கி துணை பிரதமர் மெஹ்மட் சிம்ஸ்க் தெரிவித்தார்.இந்த சம்பவத்திற்கு துருக்கி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1219456

மரணம் எப்பிடி எல்லாம் சம்பவிக்கிறது . ஐயோ பாவம் !
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22145
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 26 of 26 Previous  1 ... 14 ... 24, 25, 26

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum