உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கஜா புயல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’
by T.N.Balasubramanian Yesterday at 9:28 pm

» பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm

» ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை
by ராஜா Yesterday at 8:57 pm

» கோரிக்கை
by ஞானமுருகன் Yesterday at 7:06 pm

» வேலன்:-ஜிமெயில் தகவல்களை கணினியில் சேமித்துவைக்க
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» கந்தகுரு கவசத்தில் 28 முருகன் கோயில்கள் இடம் பெற்றுள்ளன
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» பார்வை ஒன்றே போதுமே!
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» பழநி கோயிலில் யோகாசனம் அமெரிக்க பக்தர் சாகசம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» உலகச் செய்திகள்!
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் மறைவு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.
by Pranav Jain Yesterday at 1:06 pm

» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'
by krishnaamma Yesterday at 12:44 pm

» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
by krishnaamma Yesterday at 12:39 pm

» , 'திருச்சீரலைவாய்'
by krishnaamma Yesterday at 12:38 pm

» இன்று கந்த சஷ்டி !
by krishnaamma Yesterday at 12:38 pm

» ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ?
by krishnaamma Yesterday at 12:33 pm

» பெண்களின் நகைகளுக்கான விளக்கங்கள் :)
by krishnaamma Yesterday at 12:24 pm

» பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளம்.. வருத்தம் தெரிவித்தது டி.என்.பி.எஸ்.சி
by கோபால்ஜி Yesterday at 12:23 pm

» எங்கள் வீட்டு தீபாவளி ! 2018
by krishnaamma Yesterday at 12:18 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
by krishnaamma Yesterday at 11:58 am

» திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க!!!
by krishnaamma Yesterday at 11:33 am

» செய்தி சில வரிகளில்...
by krishnaamma Yesterday at 11:30 am

» காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)
by krishnaamma Yesterday at 11:27 am

» தமிழ் பொன்மொழிகள் !!!
by krishnaamma Yesterday at 11:25 am

» மகிழ்வாக வாழ இனிய வழிகள் 40 ...
by krishnaamma Yesterday at 11:22 am

» எங்க பொண்ணை கட்டிக்கொடுத்தா, மாப்பிள்ளை சந்தோஷமா வெச்சுக்குவாரா? -
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:48 am

» தமிழ் பழமொழிகளை பகிர்ந்து கொள்ளலாமா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:46 am

» பார்வைக்கு பெயரென்ன…{கவிதை}
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:40 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:25 am

» ஸ்ரீராமதரிசனம் !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:47 am

» கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி
by krishnaamma Yesterday at 8:42 am

» மாமன் - மச்சான் !
by krishnaamma Yesterday at 8:37 am

» படித்ததில் மனதைத் தொட்ட சின்ன கதை ....
by krishnaamma Yesterday at 8:33 am

» நாளை விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:02 am

» 'டுவிட்டர்' நிர்வாகி ராகுலுடன் சந்திப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:57 am

» ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு ஜனவரியில் மறுமணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:54 am

» 2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. திட்டம் - இந்திய வம்சாவளியினரின் ஆதரவு பெற்றவர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:50 am

» செக்கு மாடும்., MBA படித்தவனும்..!
by ஞானமுருகன் Yesterday at 2:52 am

» கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது!
by krishnaamma Mon Nov 12, 2018 11:29 pm

» ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?
by krishnaamma Mon Nov 12, 2018 10:58 pm

» கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை
by krishnaamma Mon Nov 12, 2018 10:52 pm

» 'ராம' என்றால் .....
by krishnaamma Mon Nov 12, 2018 10:46 pm

» ராமாவதாரம் Vs கிருஷ்ணாவதாரம் !
by krishnaamma Mon Nov 12, 2018 10:42 pm

» இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
by krishnaamma Mon Nov 12, 2018 10:42 pm

» நான் மலரோடு தனியாக...
by krishnaamma Mon Nov 12, 2018 10:41 pm

» தமிழகம் 25
by krishnaamma Mon Nov 12, 2018 10:39 pm

» புதியவன் - ராஜேஷ்
by krishnaamma Mon Nov 12, 2018 10:35 pm

» அறிமுகம்--ரூபன்
by krishnaamma Mon Nov 12, 2018 10:31 pm

» அறிமுகம் --திருநாவுக்கரசு தட்சிணாமூர்த்தி
by krishnaamma Mon Nov 12, 2018 10:30 pm

Admins Online

உலகச் செய்திகள்!

உலகச் செய்திகள்!

Post by சிவா on Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலிஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down


Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Fri Nov 22, 2013 11:14 am

சாலை விபத்து: சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதி!

சுகாதாரத்துறை அமைச்சரும், ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் பயணம் செய்த கார் நேற்றிரவு 8.30 மணியளவில் மலாக்கா அருகே விபத்திற்குள்ளானது. இதில் லேசான காயங்களுடன் சுப்ரமணியம் உயிர் தப்பினார்.

நேற்று இரவு மலாக்காவில் நடைபெற்ற மஇகா கூட்டமொன்றில் கலந்து கொள்ள புத்ரஜெயாவில் இருந்து தனது புரோட்டான் பெர்டானா காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 220.7 வது கிலோமீட்டரில் விபத்து நிகழ்ந்தது.

இதில் சுப்ரமணியத்தின் கழுத்து மற்றும் காலில் காயம் ஏற்பட்டு உடனடியாக அலோர்காஜா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் செய்த பின்னர், தீவிர சிகிக்சைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இவ்விபத்தில் சுப்ராவின் மெய்க்காப்பாளர் சுல்கிப்ளி அப்துல் வஹாப்புக்கு பலத்த காயங்களும், காரோட்டிக்கு லேசான காயங்களும் ஏற்பட்டு இருவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Sat Nov 23, 2013 4:10 pm

சீனாவில் பெட்ரோலியம் பைப்லைன் வெடித்து 35 பேர் பலி

சீனாவின் கடற்கரை நகரமான குவிங்டாவில் பெட்ரோலியம் பைப்லைன் வெடித்ததில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து குவிங்டாவ் நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

வெய்பாங் நகரில் சீனாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான சினோபெக் (அரசுக்கு சொந்தமானது) பல்வேறு பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளை நிறுவி உள்ளது.

கச்சா எண்ணெய் கிடங்கு அமைந்துள்ள ஹுவாங்டாவ் முதல் வெய்பாங் நகர் வரையில் 176 கி.மீ. நீளத்துக்கு பெட்ரோலியம் பைப்லைன் போடப்பட்டுள்ளது. இந்த லைனின் இடையே குவிங்டாவ் நகரில் கசிவு ஏற்பட்டதால் சப்ளை நிறுத்தப்பட்டது.

வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் கசிவை சரிசெய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, திடீரென தீப்பிடித்து வெடித்தது. இதையடுத்து, விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். கச்சா எண்ணெய் கடலில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விபத்தில் 35 பேர் இறந்தனர். மேலும் காயமடைந்த 130 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Sat Nov 23, 2013 4:12 pm

இலங்கையில் ஈழ எழுத்தாளர் ஜெயபாலனிடம் விசாரணை

இலங்கை சென்ற ஈழ எழுத்தாளர் வ.ஜ.ச. ஜெயபாலனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசா கட்டுப்பாடு விதிமுறைகள் மீறியதாக ஜெயபாலனை இலங்கை காவல்துறையினர் கைது செய்தனர். இலங்கை அரசுக்கு எதிராக செய்தியாளர்களின் பேட்டியின் போது கருத்து கூறியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாங்குளம் அருகே கைதான ஜெயபாலனை விசாரணைக்கு அழைத்துச் சென்றது காவல்துறை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Tue Nov 26, 2013 5:54 pm

உளவு பார்க்கிற வேலையெல்லாம் வேண்டாம் – சாஹிட் எச்சரிக்கை

சிங்கப்பூரின் புலனாய்வுக்குத் தேவையான எந்த ஒரு விவரத்தையும் மலேசிய பகிரத் தயாராக உள்ளது. எனவே இந்த வேவு பார்க்கும் வேலையெல்லாம் தேவையில்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

“முறைப்படி பார்த்தால், எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டின் ரகசியங்களை வேவு பார்க்க முயற்சி செய்யக்கூடாது” என்று சாஹிட் குறிப்பிட்டார்.

அனைத்துலக அளவில் வேவு பார்க்கும் வேலைக்கு அமெரிக்காவிற்கு உதவியாக சிங்கப்பூர் செயல்படுவதாக வெளிநாட்டுப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளதற்கு பதிலளிக்கும் விதமாக சாஹிட் இவ்வாறு கூறியுள்ளார்.

இவ்விவகாரத்தில் முன்னரே அமெரிக்காவிற்கு மலேசியா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது என்றும் சாஹிட் குறிப்பிட்டார்.

“அவர்களுக்குத் தேவையான தகவல்கள் அனைத்தையும் நாங்கள் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கின்றோம். அப்போதாவது அவர்கள் அண்டை நாடான நமக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைக்கட்டும்” என்று உள்துறை அமைச்சகம் உருவாக்கப்பட்ட நாளான இன்று புத்ரா பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் சாஹிட் தெரிவித்துள்ளார்.

உளவு விவகாரங்களில் அமெரிக்காவிற்கு உதவியாக சிங்கப்பூர் இருப்பதாக ஊடகங்கள் கூறுவது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது என்று கூறி, சிங்கப்பூர் தூதரகத்தின் தலைவரை இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு மலேசிய அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு அமைப்பின் குத்தகைதாரர் எட்வார்ட் ஸ்நோடென், சிங்கப்பூரில் கடலுக்கடியில் செல்லும் கேபிள்களின் வழியாக இந்த உளவு வேலைகள் நடக்கிறது என்ற தகவலை வெளியிட்டுள்ளார் என்று ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கடலுக்கடியில் கேபிள்களை பதித்து செயல்பட்டு வரும் சிங்கப்பூர் டெலிகம்யூனிகேசன்ஸ் (Singapore Telecommunications – SingTel) நிறுவனம் இது குறித்து கருத்து கூற மறுத்துவிட்டது.

“இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இது மிகப்பெரிய விவகாரமாக உருவெடுக்கும். அண்டை நாடுகளை உளவு பார்ப்பது நல்ல நண்பனை உளவு பார்ப்பது போன்றது” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் அனிபா அமான் குறிப்பிட்டுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Wed Nov 27, 2013 4:59 pm

 சீனா தடை விதித்துள்ள பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததால் பதற்றம்

சீனா தடை விதித்துள்ள பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானும் சீனாவின் உத்தரவுக்கு அடிபணிய மறுத்து விட்டது.

சீனாவின் உத்தரவு

சீனாவில் கிழக்கு சீனக்கடல் பகுதியில் சில தீவுகள் இருக்கின்றன. இந்த தீவுகள் தொடர்பாக சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே தாவா இருந்து வருகிறது.

இந்த பிரச்சினைக்குரிய பகுதியில் சீனா விமானப்படை தளம் ஒன்றை அமைத்துள்ளது. மேலும், அந்தப் பகுதியில் பிற நாட்டு விமானங்கள் பறக்க வேண்டுமென்றால் முன்கூட்டியே தகவல் தர வேண்டும் என்று சீனா சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இது அமெரிக்காவுக்கும், அதன் நேச நாடான ஜப்பானுக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பகுதியில் இதுவரை தொடர்ந்து வருகிற நிலையை சீர்குலைக்கும் முயற்சி இது என்று அமெரிக்க ராணுவ மந்திரி சக் ஹேகல் கூறினார்.

அமெரிக்க போர் விமானங்கள்

இந்த நிலையில் அந்த பிரச்சினைக்குரிய பகுதியின்மீது அமெரிக்காவின் பி&52 ரக போர் விமானங்கள் இரண்டு பறந்து சென்றன. ஆனால் இது குறித்து சீனாவுக்கு முன்கூட்டி எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தின் அமெரிக்க&சீன உறவுகள் மையத்தை சேர்ந்த பேராசிரியர் சன் ஜெ கருத்து தெரிவிக்கையில், Ò இதேபோன்று இன்னும் இரண்டு அல்லது மூன்று விமானங்களை அமெரிக்கா அனுப்பினால், சீனாவும் இதே பாணியில் பதிலடி கொடுக்க நேரிடும். சீனா வார்த்தையாலே மட்டும் பதில் சொல்லிக்கொண்டிருக்குமானால் அது இழிவானதாக அமைந்து விடும்Ó என கூறினார்.

கண்காணிக்கப்பட்டனவா?

சீன ராணுவ அமைச்சகம் இது தொடர்பாக கூறுகையில், அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததை முழுமையாகக் கண்காணித்தோம் என்றது. ஆனால் அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், அமெரிக்க போர் விமானங்கள் கூர்ந்து கவனிக்கப்படவில்லை என மறுத்துள்ளது.

இதற்கிடையே சீனாவில் பிரச்சினைக்குரிய பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பயிற்சி என்ற பெயரில் பறந்திருப்பது நீண்ட காலம் திட்டமிட்டு நிறைவேற்றிய பயணம், இரண்டு போர் விமானங்கள் குவாமில் இருந்து புறப்பட்டு சென்று குவாமுக்கு திரும்பின என்று பென்டகன் செய்தி தொடர்பாளர் கர்னல் ஸ்டீவன் வார்ரன் தெரிவித்தார்.

ஜப்பானும் மீறியது

அமெரிக்க போர் விமானங்கள் பிரச்சினைக்குரிய பகுதியில் பறந்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கிற வகையில் ஜப்பானும் தனது நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனங்களான ஜப்பான் ஏர்லைன்ஸ், ஏஎன்ஏ ஹோல்டிங் ஆகியவற்றின் விமானங்கள் பிரச்சினைக்குரிய பகுதியில் பறக்கிறபோது, அது குறித்த தகவல்களை சீனாவுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை என கூறி உள்ளது.

அதை அந்த விமான நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. சீனாவின் உத்தரவை மீறியதால் பயணிகள் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஜப்பான் சிவில் விமான தொழில் சங்கம் கூறி உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Thu Nov 28, 2013 3:41 pm

ஜெர்மனி: 3-வது முறையாக பிரதமராகிறார் மெர்க்கல்

 

நீண்ட இழுபறிக்குப் பின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜெர்மனியில் கூட்டணி அரசு அமையவுள்ளது.

இதையடுத்து, ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஏஞ்சலா மெர்கல் 3-வது முறையாக பிரதமர் ஆகிறார்.

ஜெர்மனியில் கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 631 இடங்களில் ஆளுங்கட்சியான கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (சிடியூ) 311 இடங்களைக் கைப்பற்றியது. இது 41.5 சதவிகிதம் ஆகும்.

ஆனால், ஆட்சியமைக்க 50 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பதால், மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்ற சிடியூ கட்சி முடிவு செய்தது. இதையடுத்து, சமூக ஜனநாயகக் கட்சியுடன் (எஸ்பிடி) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எஸ்பிடி கட்சி முன்வைத்தது.

இதற்கு சிடியூ கட்சி சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, 5 வாரங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை புதன்கிழமை முடிவுக்கு வந்தது. இதற்கான உடன்படிக்கையில் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஏஞ்சலா மெர்க்கல், எஸ்பிடி தலைவர் சிக்மர் கபிரியேல் ஆகியோர் கையெழுத்திட்டனர். பின்னர், அவர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Thu Nov 28, 2013 3:42 pm

இந்திய நீதித் துறைக்கு ஹேம்ராஜின் மனைவி நன்றி

நொய்டாவில் ஆருஷி மற்றும் அவரது வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தல்வார் தம்பதிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்த இந்திய நீதித் துறைக்கு நேபாளத்தில் வாழும் ஹேம்ராஜின் மனைவி நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கும்கலா செய்தியாளர்களிடம் பேசுகையில், பெரிய போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக உணர்கிறேன். இனி ஒரு புதிய வாழ்க்கையை நான் துவங்குவேன். நல்ல தீர்ப்பை வழங்கிய நீதித் துறைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Thu Nov 28, 2013 3:43 pm

போரில் பாதிக்கப்பட்டவர்கள் கணக்கெடுப்பு : பணிந்தது இலங்கை

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, இலங்கையில் நடந்த போரின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களைப் பற்றிய கணக்கெடுப்பை இலங்கை அரசு துவக்கியுள்ளது.

இலங்கையில் நடந்த போரின் போது பல்லாயிரக் கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், போரில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும், காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் வலியுறுத்தினார்.

ஆனால், அதற்கு அப்போது அசைந்து கொடுக்காத ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு, போரில் பாதிக்கப்பட்டவர்களை பற்றிய விவரங்களை இலங்கை அரசு பதிவு செய்யவில்லை என்றால், அதனை உலக நாடுகள் செய்ய வேண்டியிருக்கும் என்று கேமரூன் மீண்டும் எச்சரித்த நிலையில், போரின் போது இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்யும் பணியை இலங்கை அரசு துவக்கியுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Sat Nov 30, 2013 11:27 am

அமெரிக்கப் படைக்கு கர்ஸாய் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் சிறுவன் பலியானதற்கு அதிபர் ஹமீத் கர்ஸாய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான ஹெல்மோன்ட் பகுதியில் வியாழக்கிழமை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தலிபான்களுக்கு எதிராக ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின்போது 12 வயது சிறுவன் உயிரிழந்தான். 2 பெண்கள் காயமடைந்தனர். இதுகுறித்து நேட்டோ படையினர் அந்தப்பகுதியில் விசாரணை நடத்துவார்கள் என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அதிபர் ஹமீத் கர்ஸாய் தெரிவிக்கையில், ""ஆப்கானிஸ்தானில் கடந்த 12 ஆண்டுகளாக அமெரிக்கப் படைகளின் தலையீடு இருந்து வருகிறது. இந்நிலையில் ஹெல்மோன்ட் பகுதியில் தலிபான்களுக்கு எதிராக நேட்டோ படையினர் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். 2 பெண்கள் காயமடைந்துள்ளனர். இது மிகவும் கண்டனத்துக்குரியது. ஆப்கன் மக்களை அமெரிக்கப் படைகள் மதிப்பதில்லை'' என்றார்.

வாஷிங்டனில் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க படைகள் ஆப்கûற்ன விட்டு வெளியேறியாக வேண்டும்.

இந்நிலையில், 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகும் ஆப்கனில் அமெரிக்க படைகள் தொடர்வதற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆப்கானிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Sat Nov 30, 2013 11:28 am

வங்கதேச தேர்தல்: ஒத்திவைக்கக் கோரி எதிர்க்கட்சியினர் இன்று பேரணி

வங்கதேசத்தில் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கட்சி (பிஎன்பி) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சனிக்கிழமை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.

தலைநகர் டாக்காவில் மாலை 3 மணியளவில் இந்தப் பேரணி துவங்கும் என்று பிஎன்பி கட்சியின் இணை பொதுச் செயலாளர் ருஹுல் கபீர் ரிஸ்வி தெரிவித்தார்.

இதனிடையே, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மறுத்துள்ள பிரதமர் ஹசீனா, திட்டமிட்ட நாளில் தேர்தல் நடைபெறும் என்றும், நாட்டு மக்கள் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக நடைமுறைக்கு பங்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், திட்டமிட்டபடி ஜனவரி 5ஆம் தேதி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் காஜி ரகிபுத்தீன் அஹமது வியாழக்கிழமை தெரிவித்தார்.

தேர்தலைக் கண்காணிக்க பிரதமர் ஹசீனா அமைத்துள்ள அனைத்துக் கட்சியினர் அடங்கிய குழவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பிஎன்பி கட்சியினர், கட்சி சாரா குழு ஒன்றினை அமைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் 21 பேர் உயிரிழப்பு: இதனிடையே, எதிர்க்கட்சிகளால் புதன்கிழமை தொடங்கப்பட்டு வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்த 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 21 பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Sat Nov 30, 2013 11:28 am

பேய் விரட்டும் சடங்கில் குழந்தை உயிரிழப்பு: பெற்றோருக்கு சிறை

மலேசியாவில் பேய் விரட்டும் சடங்கில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது. இது தொடர்பாக பெற்றோர் உள்பட 3 பேருக்கு சிறைதண்டனை விதித்து பினாங்கு மாகாணத்தில் உள்ள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

பெற்றோர் மற்றும் அவர்களின் உறவினர் ஆகியோருக்கு ஓராண்டு ஜெயில் மற்றும் 10,000 ரிங்கிட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.93 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டது.

மலேசிய நாட்டின் வடக்கு பினாங்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேய் விரட்டும் சடங்கு நடைபெற்றது. இதில், சுவா வான் ஸýயன் (2) என்ற குழந்தையுடன், அதன் பெற்றோர் உள்பட 8 பேர் பங்கேற்றனர். அவர்கள், போர்வையால் மூடப்பட்டனர்.

இதையடுத்து வெகுநேரம் நடைபெற்ற அந்த சடங்கில், அந்தக் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்தது. இது தொடர்பாக பெற்றோர் மற்றும் உறவினர் ஆகிய 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 2008ஆம் ஆண்டில் முஸ்லிம் தம்பதி இருவர் புகைப்பழக்கம் மற்றும் நோய்களில் இருந்து குணமடைவதற்காக என்று கூறி சடங்கு நடத்தப்பட்டது. அப்போது, இருவரும் அவர்களது குடும்பத்தினரால் அடித்துக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Sat Nov 30, 2013 11:29 am

தாய்லாந்தில் ராணுவ தலைமையகம் முற்றுகை

தாய்லாந்தில் ஷினவத்ரா அரசுக்கு எதிராக தொடர்ந்து 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், வெள்ளிக்கிழமை அந்நாட்டின் ராணுவத் தலைமையகத்தை முற்றுகையிட்டனர்.

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ராணுவத் தலைமையக வளாகத்திற்குள் நுழைந்ததாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலகக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், அவரது கட்சியான பியூ தாய் கட்சியின் தலைமை அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.

இதனால் பியூ தாய் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற்ற பிரதமர் ஷினவத்ரா, போராட்டத்தை கைவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வருமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் சுதீப் தாக்சுபன், ஷினவத்ராவின் அழைப்பை நிராகரித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Sat Nov 30, 2013 11:29 am

ஆங் சான் சூகிக்கு ஆஸ்திரேலியாவில்  டாக்டர் பட்டம்

மியான்மர் எதிர்க் கட்சித் தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகிக்கு ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு 6 நாள்கள் சுற்றுப் பயணமாக சூகி சென்றுள்ளார். அவருக்கு கான்பெரா நகரில் உள்ள ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தின் சார்பில் சிறப்பான சமூக சேவையில் ஈடுபட்டதற்காக கௌரவ டாக்டர் பட்டம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இந்த டாக்டர் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட சூகி கூறியது:

போராட்டப் பாதையின் இறுதிக்கு நாங்கள் வந்துவிட்டோம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இன்னும் போராட்டத்தின் தொடக்கத்தில்தான் இருக்கிறோம். நாங்கள், எங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையில் நடக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. உலக நாடுகள் எங்களின் கனவுகளை நனவாக்குவதற்கு உதவும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. கடினமான உழைப்பின் மூலம் எங்களது இலக்கை அடைவோம் என்று சூகி தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by ayyasamy ram on Sat Nov 30, 2013 11:39 am


-

60 ஆண்டுகளுக்கு முன்பு மியான்மரில் இளவரசியாக
வலம் வந்தவர் ஹிடெக் சு பாயா ஜி என்பவர்
-
அவருக்கு இப்போது 90 வயது ஆகிறது
-
தற்போது குடிசையில் வாழ்வதாக கூறுகிறார்.
தான் இளவரசியாக வசதியுடன் வாழ்ந்த காலத்தை
இளமைக்கால நினைவுடன் கழிப்பதாக தெரிவிக்கிறார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40841
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11704

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Sat Nov 30, 2013 12:49 pm

வறுமையில் 90 வயது மியான்மர் இளவரசி

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை