ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஏழு தாளங்கள்
 ayyasamy ram

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

உலகச் செய்திகள்!

Page 2 of 26 Previous  1, 2, 3 ... 14 ... 26  Next

View previous topic View next topic Go down

உலகச் செய்திகள்!

Post by சிவா on Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலிஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Mon Nov 18, 2013 5:15 pm

எங்களை நிர்பந்திக்கக் கூடாது: இலங்கை அதிபர் ராஜபக்சே கோபம்

கொழும்பு: "மனித உரிமைமீறல் குறித்த விசாரணை விஷயத்தில், யாரும் எங்களை நிர்பந்திக்கக்கூடாது,''என, இலங்கை அதிபர், ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் அமைப்பில், 53 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின், 22வது மாநாடு, இலங்கையின், கொழும்பு நகரில், கடந்த 3 நாட்களாக நடந்தது.இலங்கையில், விடுதலை புலிகளுடனான போர் முடிந்த பின்பும், அங்கு மனித உரிமை மீறல்கள் தொடருவதாக, ஐ.நா., மனித உரிமை அமைப்பு புகார் தெரிவித்திருந்தது. இதை காரணம் காட்டி, கனடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பிரதமர்கள் இந்த மாநாட்டை புறக்கணித்தனர்."மத்திய அரசு இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது' என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், பிரதமர் மன்மோகன் சிங், இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. "பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனும், இந்த மாநாட்டில் பங்கேற்கக்கூடாது' என, மனித உரிமை ஆர்வலர்கள் வற்புறுத்தினர்.

ஆனால், இந்த மாநாட்டில் பங்கேற்ற கேமரூன், இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு சென்று, அங்குள்ள தமிழ் மக்களின் நிலையை நேரில் கண்டறிந்தார். அதன் பின், ""மனித உரிமை குறித்து, சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும்,'' என, பேசினார்.

இதுகுறித்து, இலங்கை அதிபர் ராஜபக்சே, நிருபர்களிடம் கூறியதாவது:இலங்கையில், 30 ஆண்டுகளாக சண்டை நடந்தது. இதனால், தமிழர்கள், சிங்களர்கள் மட்டுமல்லாது, முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டனர். அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. அரசியலமைப்பு படியும், சட்ட விதிமுறைகளின் படியும்தான் செயல்படுகிறோம். இவற்றையெல்லாம் மதிப்பதால் தான், வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தினோம். மக்களின் மனோ நிலையை மாற்ற வேண்டியுள்ளது; வடக்கு பகுதி மக்களை மட்டுமல்ல; தெற்கில் உள்ளவர்களையும் மாற்ற வேண்டியுள்ளது.இலங்கையில் போர் முடிந்த பின், நல்லிணக்க குழுவை அமைத்துள்ளோம். இந்த குழுவில் எம்.பி.,க்கள் உளளனர். தனியொருவனாக என்னால் எதையும் செய்ய இயலாது. நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, காலவரையறை எதையும் செய்ய இயலாது. "மற்ற நாடுகள் தலையிட்டு, ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும்; 4 மாதத்தில் முடிக்க வேண்டும்' என, நிர்பந்திக்கக்கூடாது; இதில் நியாயமில்லை. பிரிட்டன் பிரதமர் சொல்வது போல, மார்ச் மாத்திற்குள் விசாரணையை நடத்தி முடிக்க முடியாது. எங்களுக்கு கட்டளை பிறப்பிக்காதீர்கள். தயது செய்து, எங்களது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்காதீர்கள்.இவ்வாறு ராஜபக்சே கூறினார்.

இலங்கை மனித உரிமை அமைப்பை வலுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட விஷயங்கள் இந்த மாநாட்டில் தீர்மானமாக இயற்றப்பட்டன.ஆஸ்திரேலிய பிரதமர், டோனி அபோட், காமன்வெல்த் அமைப்பின் தலைமை பதவியை, இலங்கையிடம் ஒப்படைத்தார். அடுத்த காமன்வெல்த் மாநாடு, மொரீஷியஸ் நாட்டில் நடைபெற இருந்தது. ஆனால், இலங்கையின் மனித உரிமை மீறலை காரணம் காட்டி, இந்த மாநாட்டை புறக்கணித்ததால், அடுத்த மாநாடு, ஐரோப்பிய நாடான மால்டாவில், 2015ல், நடைபெற உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Mon Nov 18, 2013 5:17 pm

31 நாய்களுடன் அமெரிக்க பெண் தற்கொலை

வாஷிங்டன்: அமெரிக்காவில், விலங்குகள் பாதுகாப்பு அமைப்பை நிறுவி, செல்லப் பிராணிகளுக்கு ஆதரவு அளித்து வந்த பெண், தான் வளர்த்த, 31 நாய்களை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவின், ஒகாயோ மாகாணத்தைச் சேர்ந்தவர், சான்ரா லேர்டமைன், 62. சிறு வயது முதலே, வீட்டு விலங்குகளை அதிகம் நேசிக்கும் இவர், ஏராளமான நாய்கள் மற்றும் பூனைகளை வளர்த்து வந்தார்.

செல்லப் பிராணிகளை அதிகம் நேசித்த சான்ரா, விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை துவங்கி, தெருக்களில் திரியும் நாய்கள் மற்றும் பூனைகளை எடுத்து வளர்த்தார். சில நாட்களுக்கு முன் சான்ரா, யாருடைய துணையும் இல்லாமல், அனைத்து பிராணிகளையும் தானே கவனித்துக் கொள்வதை பழக்கப்படுத்திக் கொண்டார். வயது முதிர்வின் காரணமாக, கடந்த சில மாதங்களாக, மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட இவர், தனக்குப் பின் அவர் வளர்த்த பிராணிகளின் நிலை பற்றி கவலை கொள்ளத் துவங்கினார்.இந்நிலையில், சான்ரா தான் வளர்த்த, 31 நாய்களையும், தன் காரில் ஏற்றி, தானும் விஷம் குடித்து, காரின் கதவுகளை இறுக்க மூடிவிட்டார். விஷத்தின் பாதிப்பால் சான்ரா, காரிலேயே இறந்துவிட்டார். காரின் கதவுகள் மூடப்பட்டதால், அதில் அடைக்கப்பட்டிருந்த, 30 நாய்கள் பரிதாபமாக பலியாயின. ஒரே ஒரு நாய் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.அதிகாலை, சான்ராவின் வீட்டிற்கு வந்த அவரின் நண்பர், சான்ரா காரில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் காரை சோதனையிட்டதில், சான்ராவின் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், தனக்குப் பின், இந்த பிராணிகளை கவனிக்க யாரும் இல்லாததால், தான் வளர்த்த பிராணிகளுடன் தற்கொலை செய்து கொள்வதாக அதில் எழுதியிருந்தார். விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுக்கும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பை நிறுவிய சான்ராவின் தற்கொலை, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இத்தனை ஆண்டுகள், தான் வளர்த்த நாய்களையே சான்ரா கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது, வேதனை அளிப்பதாக, அவரின் கணவர் மற்றும் நண்பர்கள் தெரிவித்து உள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by Muthumohamed on Mon Nov 18, 2013 5:18 pm

நல்ல ஒரு தொடர் பதிவு நன்றி அண்ணா தொடரட்டும் உங்கள் சேவை
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Mon Nov 18, 2013 5:32 pm

அமெரிக்காவை பயங்கர சூறாவளி தாக்கியது; 10 மாநிலங்களில் கோரத்தாண்டவம்

அமெரிக்காவை பயங்கர சூறாவளி தாக்கி 10 மாநிலங்களில் கோரத்தாண்டவம் ஆடியது. அதில் 6 பேர் பரிதாபமாக இறந்தனர். நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மின் தடை ஏற்பட்டு பல லட்சம் மக்கள் தவிக்கிறார்கள்.

பயங்கர சூறாவளி வீசியது

அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் பயங்கர சூறாவளி தாக்கியது. மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்தடுத்து 60 தடவைகள் சுழன்று, சுழன்று வீசியது. அத்துடன் ஐஸ் கட்டி மழையும் கொட்டியது. இந்த சூறாவளியால் மரங்கள் வேருடன் சரிந்தன. மின்சார கம்பங்கள் முறிந்தன. வீட்டுக்கூரைகள் காற்றில் பறக்க, வாகனங்களை உருட்டிப்போட்டது.

10 மாநிலங்கள் பாதிப்பு

இந்த சூறாவளிக்கு வாஷிங்டன், இல்லியான்ஸ், மிஷிகன், இண்டியானா, கென்துஸ்கி, ஒகிலஹோமா, ஒஹியோ உள்பட 10 மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் பென்சில்வானியா, நியூயார்க், மேரிலாந்து, நியூஜெர்சி ஆகிய பகுதிகளை தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. சிகாகோ உள்பட பல நகரங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டது. சாலைகள் முழுவதும் குப்பை, கூளங்கள் மற்றும் மரங்கள் விழுந்துகிடக்கின்றன. இதனால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தகவல் தொடர்பு அடியோடு முடங்கியது.

6 பேர் பலி

இந்த சூறாவளிக்கு 80 வயது முதியவர், 78 வயது பெண் உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். இல்லியான்சில் 3 பேரும், கென்துஸ்கி, இண்டியானா, மிச்சோரி ஆகிய இடங்களில் தலா ஒருவரும் இறந்ததாக அதிகாரிகள் கூறினர். இதுதவிர நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு எலும்பு முறிவு மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. இவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.

5 கோடி பேர் தவிப்பு

இல்லியான்ஸ், மிஷிகன், இண்டியானா, கென்துஸ்கி ஆகிய இடங்களில் மின்சாரம் இன்றி 5 லட்சம் மக்கள் தவிக்கிறார்கள். வாஷிங்டனில் வசிக்கும் அந்தோணி ஹொவுரே என்பவர் கூறுகையில், ”எங்கள் வீடு அருகே இருந்த பெரும்பாலான வீடுகளை காணவில்லை. வீடுகளை இழந்தும், மின்சாரம் தடையாலும் மக்கள் அவதிப்படுகிறார்கள்” என்றார். மற்றொருவர் கூறும்போது, ”சூறாவளி வருவதை பார்த்ததும் நானும், குடும்பத்தினரும் அடித்தள அறைக்கு சென்று தப்பினோம். திரும்பி வந்தபோது வீட்டின் பெரும்பகுதியை சூறாவளி அடித்துச் சென்று விட்டது” என்றார்.

சூறாவளி ஏற்படுத்திய பாதிப்பு குறித்து அதிகாரி கூறுகையில், ”10 மாநிலங்களில் பேரழிவை உண்டாக்கி விட்டது. 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்கிறார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் சென்று நிவாரணப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Mon Nov 18, 2013 5:45 pm

எகிப்தில் ரயில் விபத்து: 24 பேர் பலி

கெய்ரோ: தெற்கு எகிப்தில், சரக்கு ரயில் ஒன்று வாகனங்கள் மீது மோதியதில் 24 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் படுகாயம் அடைந்தனர். பெனிசுப் என்ற இடத்தில் இருந்து வந்து கொண்டிருந்த அந்த ரயில் தசூர் என்ற இடத்தில் மூன்று வாகனங்கள் மீது மோதியது. கேட் மூடாததே இந்த பெரும் விபத்திற்கு காரணம் என, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Mon Nov 18, 2013 5:49 pm

ஏவுகணை தாக்கி அமெரிக்க கப்பல் சேதம்


லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க கடற்படை வீரர்கள், தெற்கு கலிபோர்னியா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏவுகணைகள் மூலமான வான்வழித் தாக்குதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், தவறாக ஏவப்பட்ட ஒரு ஏவுகணை, வழிகாட்டி கப்பலை தாக்கியது. இதில், இருவர் காயம் அடைந்தனர். கப்பலின் ரடார் சரியாக செயல்படுகிறதா என்பதை சோதனை செய்ய, இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by SajeevJino on Mon Nov 18, 2013 7:19 pm

@சிவா wrote: ஏவுகணை தாக்கி அமெரிக்க கப்பல் சேதம்


லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க கடற்படை வீரர்கள், தெற்கு கலிபோர்னியா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏவுகணைகள் மூலமான வான்வழித் தாக்குதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், தவறாக ஏவப்பட்ட ஒரு ஏவுகணை, வழிகாட்டி கப்பலை தாக்கியது. இதில், இருவர் காயம் அடைந்தனர். கப்பலின் ரடார் சரியாக செயல்படுகிறதா என்பதை சோதனை செய்ய, இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது


மோதியது ஒரு PTA Pilotless Target Aircraft ஆளிலா விமானம் என்று கூட சொல்லலாம் ..விபத்தில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது ..தாக்குதலுக்கு உள்ளான கப்பல் USS Chancellorsville எந்த வித ஆபத்தும் இல்லை

பயிற்சிக்காக PTA வில் வெடிமருந்துகள் இல்லாததால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை

தாக்கிய PTA

avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Tue Nov 19, 2013 11:54 am

மகாதீர் மருத்துவமனையில் அனுமதி!முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று தலைநகர் தேசிய இருதய கழகத்தில் (National Heart Institute) பொதுப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மகாதீரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்பில் ஏற்பட்டுள்ள நோய் தோற்று காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“மருத்துவக் குழுவினர் அவரை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அவரது உடலில் ஏற்படும் முன்னேற்றம் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்களுக்கு, மகாதீர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும், மருத்துவக் குழுவினர் தற்போது அவருக்கு உடற்பயிற்சிகள் உட்பட பயிற்சி அளித்து கண்காணித்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மகாதீரின் குடும்பத்தினரைத் தவிர மற்ற பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Tue Nov 19, 2013 12:22 pm

மனித உரிமைகளை பாதுகாக்க இலங்கைக்கு சீனா அறிவுரை

மனித உரிமைகளை பேணவும், பாதுகாக்கவும் இலங்கை முயற்சிகள் எடுக்க வேண்டும் என சீனா அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடு குறித்து செய்தியாளர் ஒருவர், சீன வெளியுறவுத் துறை செய்தி டொடர்பாளர் கின் காங்கிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அவர், "ஒரு நாட்டின் சமூக, பொருளாதார பின்னணியைப் பொருத்து, அந்நாட்டின் மனித உரிமைகளைப் பேணுவதில் நாடுகளுக்கு இடையே வித்தியாசம் ஏற்படலாம். ஆனால், தங்கள் தகுதிக்கு ஏற்றவாறு மனித உரிமைகளை பாதுகாக்க அந்தந்த நாடுகள் முயற்சிப்பது அவசியம்" என்றார்.

மேலும், இலங்கைக்கு, மற்ற நாடுகள் ஆக்கபபூர்வமான உதவிகளைச் செய்ய வேண்டும். இலங்கை,மனித உரிமைகளை பேணவும், பாதுகாக்கவும் இலங்கை முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றார்.

சீனாவைப் பொருத்த வரை இதுவரை இலங்கைக்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வந்தது. முதல் முறையாக சீனா, மனித உரிமைகள் விவகாரம் குறித்து இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக போர்க்குற்றத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது கூட, இலங்கை உள்நாட்டு விவகாரத்தை அந்நாட்டு மக்களே சரி செய்து கொள்வார்கள் என்று கூறியிருந்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by ராஜா on Tue Nov 19, 2013 12:45 pm

@சிவா wrote:மனித உரிமைகளை பாதுகாக்க இலங்கைக்கு சீனா அறிவுரை

.
சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது 
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by SajeevJino on Tue Nov 19, 2013 7:26 pm

லெபனானில் உள்ள இரானிய தூதரகத்தில் மனித வெடி குண்டு மற்றும் கார் குண்டு வெடித்து 23 பேர் பலிavatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Wed Nov 20, 2013 3:20 am

கிழக்கு இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு


கிழக்கு இந்தோனேசியாவில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியில் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியுள்ளன.  நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Wed Nov 20, 2013 3:21 am

 இத்தாலியில் புயல்–மழைக்கு 14 பேர் சாவு பாலங்களை வெள்ளம் அடித்து சென்றது

இத்தாலி நாட்டில் உள்ள சர்டினியா தீவை புயல் தாக்கியது. இதனால் பலத்த மழை பெய்து கடுமையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் அங்குள்ள ஒல்பியா பகுதியிலுள்ள நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் பல இடங்களில் பாலங்கள் உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து சாலைகளில் நின்ற கார்களையும் அடித்து சென்றது.

இதனால் தீவில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த புயல்–மழைக்கு இதுவரை 14 பேர் பலியாகி விட்டனர். ஒல்பியா நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வீட்டிற்குள் பிணமாக கிடந்தனர். மற்றொரு இடத்தில் கார் வெள்ளத்தில் சிக்கி அதில் பயணம் செய்த தாயும், குழந்தையும் இறந்தார்கள். பாலம் இடிந்து விழுந்ததில் போலீஸ் அதிகாரி இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்ததுடன் 3 போலீசாரும் காயம் அடைந்தனர். பாலங்களை தண்ணீர் அடித்து சென்றதாலும், சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதாலும் நிவாரணப்பணிகளில் ஈடுபட முடியாமல் அதிகாரிகள் தவிக்கின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Wed Nov 20, 2013 3:21 am

 பாகிஸ்தானில் இந்திய சினிமாப்படங்களை வெளியிட திடீர் கட்டுப்பாடு லாகூர் ஐகோர்ட்டு உத்தரவு

இந்தியாவில் இந்தி சினிமாப்படங்கள் வெளியாகும் அதே நேரத்தில் பாகிஸ்தானிலும் வெளியாகி வந்தன. இஸ்லாமாபாத், லாகூரில் இந்திய சினிமாப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் சினிமா தயாரிப்பாளரும், இந்திய எதிர்ப்பு சிந்தனை உள்ளவருமான முப்ஷீர் லுக்மான் என்பவர் லாகூர் ஐகோர்ட்டில் இந்திய சினிமாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘இந்தியாவில் தயாரிக்கப்படும் சினிமாப்படங்கள் இந்தியர்கள் மூலம் பாகிஸ்தானில் திரையிட சட்டப்படி அனுமதி கிடையாது. எனவே போலி ஆவணங்கள் மூலம் இந்திய சினிமாப்படங்கள் திரையிடுகிறார்கள். அதை தடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இதை நீதிபதி காலித் மகமூத் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, ‘போலி சான்றிதழ் மற்றும் பாகிஸ்தான் அல்லது வெளிநாட்டினர் சார்பில் இல்லாத இந்திய படங்களை திரையிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதிக்க கூடாது’ என உத்தரவிட்டார். அத்துடன் பாகிஸ்தான் தணிக்கைத்துறை (சென்சார் போர்டு) மற்றும் வருவாய் வாரியம் இதுபற்றி வரும் 25–ந் தேதி பதில் அளிக்க வேண்டும் என்றும் அறிவித்தார்.

இந்திய மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை கூடுதல் நேரம் ஒளிபரப்பியதாக சமீபத்தில் 10 தனியார் டி.வி.நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அபராதம் விதித்து பாகிஸ்தான் தகவல் ஒழுங்குமுறை அதிகாரிகள் உத்தரவிட்டார்கள். தற்போது இந்திய சினிமாப்படங்களுக்கு கோர்ட்டு மூலம் தடை ஏற்படும் அச்சம் உருவாகியுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Wed Nov 20, 2013 3:26 am


இலங்கைக்கு எந்த நாடும் கட்டளையிட முடியாது: ராஜபட்ச

போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனின் கருத்தை இலங்கை அதிபர் ராஜபட்ச மீண்டும் நிராகரித்தார். இலங்கைக்கு எந்த நாடும் கட்டளையிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடு, ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. இதனையொட்டி கொழும்பில் செய்தியாளர்களுக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச பேட்டியளித்தார்.

அப்போது செய்தியாளர்கள் அவரிடம், போர்க் குற்றங்கள் குறித்து மார்ச் மாதத்திற்குள் விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவிட வேண்டும்; இல்லையெனில் சர்வதேச விசாரணையை பிரிட்டன் வலியுறுத்தும் என்றும் அந்த நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளது குறித்து கேள்விகள் எழுப்பினர்.

அதற்கு ராஜபட்ச பதில் அளிக்கையில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனின் இந்த கோரிக்கையை ஒருபோதும் ஏற்கமுடியாது. இந்த விவகாரத்தில் எங்களுக்கு உதவிகரமாக இருந்தால் வரவேற்போம். ஆனால், எங்களுக்கு யாரும் கட்டளையிடமுடியாது என்று உறுதிபட தெரிவித்தார்.

பிளவுபடுத்த வேண்டாம்: அவர் மேலும் கூறியதாவது; "எங்களது கருத்துகளுக்கு மதிப்பு கொடுங்கள். எங்கள் செயலுக்கு உறுதுணையாக இருங்கள். ஆனால் சமூகத்துக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். (டேவிட் கேமரூனை அவர் மறைமுகமாக குறிப்பிட்டார்.)

என்மீது சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்திருப்பது குறித்து நீங்கள் (பத்திரிகையாளர்கள்) கேட்கிறீர்கள். என்னுடைய மக்களுக்கு நானே பொறுப்பு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். போர்க் குற்றங்கள் தொடர்பாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற குழுவை அமைத்திருக்கிறோம். அந்தக் குழுவில், அனைத்து கட்சி உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர். அந்த விசாரணைக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.

கால அவகாசம்: மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இலங்கைக்கு கால அவகாசம் வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்ள எங்களுக்கு, கால அளவை நிர்ணயிக்க கூடாது. எங்கள் நாட்டிற்கு என்று சட்ட அமைப்பு மற்றும் அரசியலமைப்பு உள்ளது.

ஏற்கெனவே மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் முடிவடைய காலமாகும். மேலும், வடக்கு மாகாண மக்கள் மட்டுமன்றி, தெற்குப் பகுதி மக்களின் மனநிலையையும் நாங்கள் மாற்ற வேண்டியிருக்கிறது.

அந்த பகுதியில் 30 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. இதில் தமிழர்கள் மட்டுமன்றி, சிங்களர்கள் மற்றும் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் கவனிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பாகும். ஆனால் இதனை ஒரு வாரம் அல்லது மூன்று அல்லது நான்கு வாரங்களில் செய்ய வேண்டும் என்று என்னை நீங்கள் நிர்பந்திக்கக்கூடாது.

காமன்வெல்த்தை மதிக்கிறேன்: காமன்வெல்த் அமைப்பு மீது நாங்கள் மரியாதை வைத்திருக்கிறோம். மனித உரிமை, பத்திரிகை சுதந்திரம் மீதும் மரியாதை வைத்திருக்கிறோம். அதன்காரணமாகத்தான், வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தினோம்.

எங்கள் நாட்டிற்கு என்று நாடாளுமன்றம் உள்ளது. அதன்மூலம் அமைக்கப்பட்ட குழுவிடம், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசனை அளிக்கும்படி மக்களை கேட்டு இருக்கிறோம். என்னால் தனியாக இதனை செய்ய முடியாது' என்றும் தெரிவித்தார் ராஜபட்ச.

பத்திரிகையாளர் குற்றச்சாட்டு: கொழும்புவுக்கு காமன்வெல்த் மாநாடு தொடர்பாக செய்தி சேகரிக்க வந்திருந்த பத்திரிகையாளர்கள், கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையன்று ராஜபட்ச பேட்டி அளித்தபோது, போர்க் குற்றம் குறித்து மட்டும் கேள்விகளை எழுப்பினர். இதனால், ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பின்போது, அதுகுறித்து கேள்விகளை கேட்காமல், காமன்வெல்த் மாநாடு குறித்து மட்டும் கேள்விகளை கேட்கும்படி காமன்வெல்த் அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அப்போது இலங்கையை சேர்ந்த பத்திரிகையாளர் ஓருவர், இலங்கைக்கு எதிராக காமன்வெல்த் அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். காமன்வெல்த் மாநாட்டில் கவனம் செலுத்தாமல், பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன், இலங்கையின் வடபகுதிக்கு சென்றது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த காமன்வெல்த் பொதுச் செயலாளர் கமலேஷ் ஷர்மா, காமன்வெல்த் மாநாட்டுக்கு வந்த தலைவர்களுக்கு இலங்கையின் எந்த பகுதிக்கும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருந்ததாகவும், அதனாலேயே கேமரூன் இலங்கையின் வடபகுதிக்கு சென்றதாகவும் விளக்கம் அளித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Wed Nov 20, 2013 3:26 am

உளவு பார்த்த விவகாரம்: இந்தோனேசியாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது- ஆஸ்திரேலிய பிரதமர்

இந்தோனேசியாவை ஆஸ்திரேலியா உளவு பார்த்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்காக, அந்த நாட்டிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தெரிவித்தார். இதனால், இரு நாடுகளிடேயேயான உறவுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் டோனி அபாட் செவ்வாய்க்கிழமை பேசுகையில், "நாட்டின் பாதுகாப்புக்காக நாங்கள் எடுத்தும்வரும் நடவடிக்கைக்காக இந்தோனேசிய விவகாரத்தில் ஆஸ்திரேலியா மன்னிப்பு கேட்காது. சரியான காரணத்துக்காகவே உளவுத்துறை தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. மற்ற நாடுகளோ அல்லது அரசோ இதுபோன்ற காரணத்துக்காக உளவு நடவடிக்கையில் இறங்கினால், அவை மன்னிப்பு கேட்கும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ""அண்டை நாடுகளுக்கு அதிக மதிப்பளிக்கும் நாங்கள், தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆஸ்திரேலிய வளங்களை அவற்றுக்கு உதவுவதற்கே பயன்படுத்துகிறோமே ஒழிய, தீங்கு விளைவிப்பதற்கில்லை. எனினும், இந்தோனேசிய-ஆஸ்திரேலிய நல்லுறவுக்கான பாதை அருகிலேயே உள்ளது, வெகு தூரத்தில் இல்லை'' என்றார்.

இந்தோனேசிய அதிபர் சுசிலோ பாம்பாங் யுதோயோனோ, அவரது மனைவி அனி மற்றும் மூத்த அமைச்சர்களின் தொலைபேசி உரையாடல்களை ஆஸ்திரேலிய உளவு அமைப்பு ஒட்டுக்கேட்டதாக திங்கள்கிழமை தகவல் வெளியானது.

இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ஆஸ்திரேலியாவை, இந்தோனேசிய அதிபர் மாளிகை கேட்டுக் கொண்டிருந்த நிலையில், பிரதமர் டோனி அபாட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய உளவு அமைப்பின் முன்னாள் ஊழியர் எட்வர்டு ஸ்னோடெனிடமிருந்து பெற்ற ரகசிய ஆவணங்களின் அடிப்படையில் இந்தோனேசிய அதிபர் மற்றும் அவருக்கு நெருக்கமான 9 பேரை உளவு பார்த்ததாக ஆஸ்திரேலிய ஒளிபரப்புக்குக் கழகமும், "தி கார்டியன்' நாளிதழும் செய்தி வெளியிட்டிருந்தன.

அவற்றில், "ஆஸ்திரேலியப் பிரதமராக உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த கெவின் ரூட் பதவி வகித்தபோது, மின்னணு புலனாய்வு அமைப்பும், பாதுகாப்பு இயக்குனரகமும் இணைந்து, 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தோனேசிய அதிபர் யுதோயோனோவின் செல்போனை 15 நாள்கள் ஒட்டுக்கேட்டுள்ளன. அதிபரின் மனைவி அனி, துணை அதிபர் போய்டியோனோ, முன்னாள் துணை அதிபர் யூசுப் கல்லா உள்ளிட்ட 9 பேரின் தொலைபேசிகளும் ஒட்டுக்கேட்கப்பட்டன' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Wed Nov 20, 2013 3:27 am

மோடிக்கு விசா மறுப்பு நீட்டிப்பு: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

மத சுதந்திரத்தை மீறியதாகக்கூறி பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுப்பு தெரிவிப்பதை நீட்டிக்கும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கீத் எலிசன், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிட்ஸ் மற்றும் 12-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கொண்டு வந்தனர்.

அதில், ""குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா வழங்க கூடாது.

இந்தியாவில் சிறுபான்மையினருக்கான மத சுதந்திரம் மற்றும் உரிமைகள் காக்கப்பட வேண்டும்.

அமெரிக்க-இந்திய நல்லுறவு பேச்சுவார்த்தையின்போது இந்த விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தனர்.

கடந்த 2005ஆம் ஆண்டு முதல் மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Thu Nov 21, 2013 12:11 pm

ஈரானுக்கு எதிராக கூடுதல் பொருளாதாரத் தடை

ஈரானுக்கு எதிராக கூடுதல் பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வருவது தொடர்பாக 6 மாதங்கள் வரை காத்திருக்குமாறும், அதற்குள்ளாக பேச்சுகளின் மூலமும் ராஜ்ஜிய நடவடிக்கைகளின் அடிப்படையிலும் தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் தொடர்பாக அந்நாட்டுடன் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் பேச்சு நடத்தவுள்ள நிலையில், ஒபாமா தெரிவித்துள்ள இந்த கருத்து மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் ஒபாமா கூறியதாவது: ஈரான் மீது ஏற்கெனவே பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜிய ரீதியில் பேச்சுவார்த்தைகளின் மூலம் ஏற்படும் முடிவை அறிந்து கொள்ள அடுத்த 6 மாதங்கள் காத்திருக்குமாறு இஸ்ரேல், ஈரான், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் சி.இ.ஓ. கவுன்சில் ஆணடுக் கூட்டத்தில் பேசும்போது ஒபாமா இதைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: “ஈரானுக்கு அணு ஆயுதம் கிடைத்துவிடாமல் செய்வதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் கையாள்வோம். இந்த பிரச்சினையை தீர்ப்பதில் ஈரானுக்கு உள்ள உறுதியை அறிந்து கொள்ள கூடுதல் கால அவகாசம் அளிப்பதில் தவறில்லை. இந்த வாரத்துக்குள்ளோ அல்லது அடுத்த வாரத்துக்குள்ளோ உடன்பாடு ஏற்படும் என்று கருதவில்லை. எனினும், இதுவரை அமல்படுத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் தொடர்ந்து இருக்கும். அணு ஆயுதத் திட்டத்தை செயல்படுத்தவிடாமல் தடுக்கும் வகையில் இந்த பொருளாதாரத் தடைகள் இருக்கும்” என்றார்.

ஈரானுடன் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜெனீவாவில் பேச்சு நடத்தவுள்ள சூழ்நிலையில் ஒபாமாவின் கருத்து வெளியாகியுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Thu Nov 21, 2013 12:12 pm

பாகிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதலில் 5 பேர் பலி

பாகிஸ்தானில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகினர். ஹங்கு மாவட்டத்தில், தல் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் அடுத்தடுத்து 3 முறை தாக்குதல் நடத்தப்பட்டது.

தாலிபன்களுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தும் நேரத்தில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தாது என பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் நேற்று தெரிவித்திருந்த நிலையில் இன்று இத் தாக்குதல் நடந்துள்ளது.

அமெரிக்க அதிபராக புஷ் இருந்த போது தொடங்கப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்கள் தற்போதைய அதிபர் ஒபாமா காலத்திலும் தொடர்கிறது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Thu Nov 21, 2013 4:42 pm

காரை மோதி 3 கி.மீ., தூரம் இழுத்து சென்று இந்திய பெண் கொலை : அமெரிக்க வாலிபர் வெறிச்செயல்

பாஸ்டன் : அமெரிக்க ஓட்டலில் பணியாற்றிய, இந்திய பெண்ணை, 3 கி.மீ., தூரம் காரில் இழுத்து சென்று கொன்றவனை, போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின், பாஸ்டன் பகுதியில் உள்ள, நெடுஞ்சாலை ஓட்டலில், இந்தியாவை சேர்ந்த காஞ்சன் பென், 58, பணியாற்றினார். அவரது கணவரும் அதே ஓட்டலில் பணியாற்றினார். சமீபத்தில் இவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்தது. இந்நிலையில், இந்த ஓட்டலுக்கு வந்த, இரண்டு இளைஞர்கள், ஓட்டலில் தங்கியதற்கான கட்டணத்தை செலுத்த மறுத்தனர். இதனால், காஞ்சன் பென்னுக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. மனைவிக்கு ஆதரவாக காஞ்சன் பென் கணவரும், அந்த இளைஞர்களிடம் வாதிட்டார். இதனால், கோபமடைந்த அந்த இளைஞர்கள், தாங்கள் வந்த காரை, அவர்கள் மீது மோதினர். இதில், காஞ்சன் பென்னின் கணவர் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

தரையில் விழுந்த காஞ்சன் பென்னை, அப்படியே, 3 கி.மீ., தூரம் வரை, அந்த பாதகர்கள் இழுத்து சென்றனர். இதில், காரின் அடியில் சிக்கி காஞ்சன் பென் உயிரிழந்தார்.இதற்கிடையே, வழி போக்கர்கள் சிலர், காரின் அடியில் சடலம் கிடப்பது கண்டு, போலீசாரிடம் தெரிவித்தனர். காஞ்சன் பென்னின் சடலத்தை மீட்ட போலீசார், கொலையாளி, மோசஸ் அக்லோக், 22, என்பவனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Fri Nov 22, 2013 11:14 am

சாலை விபத்து: சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதி!

சுகாதாரத்துறை அமைச்சரும், ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் பயணம் செய்த கார் நேற்றிரவு 8.30 மணியளவில் மலாக்கா அருகே விபத்திற்குள்ளானது. இதில் லேசான காயங்களுடன் சுப்ரமணியம் உயிர் தப்பினார்.

நேற்று இரவு மலாக்காவில் நடைபெற்ற மஇகா கூட்டமொன்றில் கலந்து கொள்ள புத்ரஜெயாவில் இருந்து தனது புரோட்டான் பெர்டானா காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 220.7 வது கிலோமீட்டரில் விபத்து நிகழ்ந்தது.

இதில் சுப்ரமணியத்தின் கழுத்து மற்றும் காலில் காயம் ஏற்பட்டு உடனடியாக அலோர்காஜா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சைகள் செய்த பின்னர், தீவிர சிகிக்சைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இவ்விபத்தில் சுப்ராவின் மெய்க்காப்பாளர் சுல்கிப்ளி அப்துல் வஹாப்புக்கு பலத்த காயங்களும், காரோட்டிக்கு லேசான காயங்களும் ஏற்பட்டு இருவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Sat Nov 23, 2013 4:10 pm

சீனாவில் பெட்ரோலியம் பைப்லைன் வெடித்து 35 பேர் பலி

சீனாவின் கடற்கரை நகரமான குவிங்டாவில் பெட்ரோலியம் பைப்லைன் வெடித்ததில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து குவிங்டாவ் நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

வெய்பாங் நகரில் சீனாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான சினோபெக் (அரசுக்கு சொந்தமானது) பல்வேறு பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளை நிறுவி உள்ளது.

கச்சா எண்ணெய் கிடங்கு அமைந்துள்ள ஹுவாங்டாவ் முதல் வெய்பாங் நகர் வரையில் 176 கி.மீ. நீளத்துக்கு பெட்ரோலியம் பைப்லைன் போடப்பட்டுள்ளது. இந்த லைனின் இடையே குவிங்டாவ் நகரில் கசிவு ஏற்பட்டதால் சப்ளை நிறுத்தப்பட்டது.

வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் கசிவை சரிசெய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, திடீரென தீப்பிடித்து வெடித்தது. இதையடுத்து, விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். கச்சா எண்ணெய் கடலில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விபத்தில் 35 பேர் இறந்தனர். மேலும் காயமடைந்த 130 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Sat Nov 23, 2013 4:12 pm

இலங்கையில் ஈழ எழுத்தாளர் ஜெயபாலனிடம் விசாரணை

இலங்கை சென்ற ஈழ எழுத்தாளர் வ.ஜ.ச. ஜெயபாலனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசா கட்டுப்பாடு விதிமுறைகள் மீறியதாக ஜெயபாலனை இலங்கை காவல்துறையினர் கைது செய்தனர். இலங்கை அரசுக்கு எதிராக செய்தியாளர்களின் பேட்டியின் போது கருத்து கூறியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாங்குளம் அருகே கைதான ஜெயபாலனை விசாரணைக்கு அழைத்துச் சென்றது காவல்துறை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Tue Nov 26, 2013 5:54 pm

உளவு பார்க்கிற வேலையெல்லாம் வேண்டாம் – சாஹிட் எச்சரிக்கை

சிங்கப்பூரின் புலனாய்வுக்குத் தேவையான எந்த ஒரு விவரத்தையும் மலேசிய பகிரத் தயாராக உள்ளது. எனவே இந்த வேவு பார்க்கும் வேலையெல்லாம் தேவையில்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

“முறைப்படி பார்த்தால், எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டின் ரகசியங்களை வேவு பார்க்க முயற்சி செய்யக்கூடாது” என்று சாஹிட் குறிப்பிட்டார்.

அனைத்துலக அளவில் வேவு பார்க்கும் வேலைக்கு அமெரிக்காவிற்கு உதவியாக சிங்கப்பூர் செயல்படுவதாக வெளிநாட்டுப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளதற்கு பதிலளிக்கும் விதமாக சாஹிட் இவ்வாறு கூறியுள்ளார்.

இவ்விவகாரத்தில் முன்னரே அமெரிக்காவிற்கு மலேசியா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது என்றும் சாஹிட் குறிப்பிட்டார்.

“அவர்களுக்குத் தேவையான தகவல்கள் அனைத்தையும் நாங்கள் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கின்றோம். அப்போதாவது அவர்கள் அண்டை நாடான நமக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைக்கட்டும்” என்று உள்துறை அமைச்சகம் உருவாக்கப்பட்ட நாளான இன்று புத்ரா பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் சாஹிட் தெரிவித்துள்ளார்.

உளவு விவகாரங்களில் அமெரிக்காவிற்கு உதவியாக சிங்கப்பூர் இருப்பதாக ஊடகங்கள் கூறுவது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது என்று கூறி, சிங்கப்பூர் தூதரகத்தின் தலைவரை இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு மலேசிய அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு அமைப்பின் குத்தகைதாரர் எட்வார்ட் ஸ்நோடென், சிங்கப்பூரில் கடலுக்கடியில் செல்லும் கேபிள்களின் வழியாக இந்த உளவு வேலைகள் நடக்கிறது என்ற தகவலை வெளியிட்டுள்ளார் என்று ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கடலுக்கடியில் கேபிள்களை பதித்து செயல்பட்டு வரும் சிங்கப்பூர் டெலிகம்யூனிகேசன்ஸ் (Singapore Telecommunications – SingTel) நிறுவனம் இது குறித்து கருத்து கூற மறுத்துவிட்டது.

“இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இது மிகப்பெரிய விவகாரமாக உருவெடுக்கும். அண்டை நாடுகளை உளவு பார்ப்பது நல்ல நண்பனை உளவு பார்ப்பது போன்றது” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் அனிபா அமான் குறிப்பிட்டுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Wed Nov 27, 2013 4:59 pm

 சீனா தடை விதித்துள்ள பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததால் பதற்றம்

சீனா தடை விதித்துள்ள பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானும் சீனாவின் உத்தரவுக்கு அடிபணிய மறுத்து விட்டது.

சீனாவின் உத்தரவு

சீனாவில் கிழக்கு சீனக்கடல் பகுதியில் சில தீவுகள் இருக்கின்றன. இந்த தீவுகள் தொடர்பாக சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே தாவா இருந்து வருகிறது.

இந்த பிரச்சினைக்குரிய பகுதியில் சீனா விமானப்படை தளம் ஒன்றை அமைத்துள்ளது. மேலும், அந்தப் பகுதியில் பிற நாட்டு விமானங்கள் பறக்க வேண்டுமென்றால் முன்கூட்டியே தகவல் தர வேண்டும் என்று சீனா சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இது அமெரிக்காவுக்கும், அதன் நேச நாடான ஜப்பானுக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பகுதியில் இதுவரை தொடர்ந்து வருகிற நிலையை சீர்குலைக்கும் முயற்சி இது என்று அமெரிக்க ராணுவ மந்திரி சக் ஹேகல் கூறினார்.

அமெரிக்க போர் விமானங்கள்

இந்த நிலையில் அந்த பிரச்சினைக்குரிய பகுதியின்மீது அமெரிக்காவின் பி&52 ரக போர் விமானங்கள் இரண்டு பறந்து சென்றன. ஆனால் இது குறித்து சீனாவுக்கு முன்கூட்டி எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தின் அமெரிக்க&சீன உறவுகள் மையத்தை சேர்ந்த பேராசிரியர் சன் ஜெ கருத்து தெரிவிக்கையில், Ò இதேபோன்று இன்னும் இரண்டு அல்லது மூன்று விமானங்களை அமெரிக்கா அனுப்பினால், சீனாவும் இதே பாணியில் பதிலடி கொடுக்க நேரிடும். சீனா வார்த்தையாலே மட்டும் பதில் சொல்லிக்கொண்டிருக்குமானால் அது இழிவானதாக அமைந்து விடும்Ó என கூறினார்.

கண்காணிக்கப்பட்டனவா?

சீன ராணுவ அமைச்சகம் இது தொடர்பாக கூறுகையில், அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததை முழுமையாகக் கண்காணித்தோம் என்றது. ஆனால் அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், அமெரிக்க போர் விமானங்கள் கூர்ந்து கவனிக்கப்படவில்லை என மறுத்துள்ளது.

இதற்கிடையே சீனாவில் பிரச்சினைக்குரிய பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பயிற்சி என்ற பெயரில் பறந்திருப்பது நீண்ட காலம் திட்டமிட்டு நிறைவேற்றிய பயணம், இரண்டு போர் விமானங்கள் குவாமில் இருந்து புறப்பட்டு சென்று குவாமுக்கு திரும்பின என்று பென்டகன் செய்தி தொடர்பாளர் கர்னல் ஸ்டீவன் வார்ரன் தெரிவித்தார்.

ஜப்பானும் மீறியது

அமெரிக்க போர் விமானங்கள் பிரச்சினைக்குரிய பகுதியில் பறந்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கிற வகையில் ஜப்பானும் தனது நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனங்களான ஜப்பான் ஏர்லைன்ஸ், ஏஎன்ஏ ஹோல்டிங் ஆகியவற்றின் விமானங்கள் பிரச்சினைக்குரிய பகுதியில் பறக்கிறபோது, அது குறித்த தகவல்களை சீனாவுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை என கூறி உள்ளது.

அதை அந்த விமான நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. சீனாவின் உத்தரவை மீறியதால் பயணிகள் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஜப்பான் சிவில் விமான தொழில் சங்கம் கூறி உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 26 Previous  1, 2, 3 ... 14 ... 26  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum