உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சித்தர்களின் பரிசு படித்ததில்!!! தொப்புளில் எண்ணை போடுங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:57 pm

» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:43 pm

» பில் கேட்ஸ் கண்டு பிடித்த டாயிலெட்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:38 pm

» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…!
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:36 pm

» கொத்தனார் சூடி
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:36 pm

» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..!
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:35 pm

» பம்லிடி வௌவால் – பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 6:05 pm

» 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:05 pm

» சுய அறிமுகம்.
by ஞானமுருகன் Today at 5:21 pm

» ஒரு கருவறை... இருவாசல்கள்... சூரியத் தேரில் அருள்புரியும் சாரங்கபாணி பெருமாள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:54 pm

» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:24 pm

» உலகின் முதல் 5 ஜி கால்- சக்கைபோடு போட்ட இசட்டிஇ.!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:20 pm

» புத்தகம் கிடைக்குமா ?
by gans Today at 4:10 pm

» அன்புக்காக அன்பு வைத்திடு, அதுவே நிலைத்து நிற்கும்...!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:56 pm

» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:43 pm

» ஆன்மிக படங்கள்
by ayyasamy ram Today at 2:50 pm

» இங்கு சிறந்த முறையில் பட்டி டிங்கரிங் பார்த்து பூச்சு பூசப்படும்...!! - வாட்ஸ் அப் பகிர்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:40 pm

» உதவி தேவை
by கவுண்டர் Today at 12:40 pm

» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:33 pm

» காளானின் மருத்துவ பயன்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:29 pm

» ஆண்களை பெண்களாக மாற்றிய கேரள அரசின் பித்தலாட்டம் அம்பலம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:06 pm

» ஆன்மிக பொன்மொழிகள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:55 am

» நண்பர்களே
by கவுண்டர் Today at 10:05 am

» கோணலாக இருந்தாலும் குறையாத ருசி - விடுகதை
by ayyasamy ram Today at 6:15 am

» “சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Today at 5:49 am

» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு
by ayyasamy ram Today at 5:45 am

» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து
by ayyasamy ram Today at 5:42 am

» சொல்லிவிடு வெள்ளி நிலவே
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 7:42 pm

» ஏழு கழுதை வயசு ஆகுது… இன்னும் ! - வாட்ஸ் அப் பகிர்வு
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்
by ayyasamy ram Yesterday at 7:28 pm

» 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி
by T.N.Balasubramanian Yesterday at 7:26 pm

» ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு....
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» குடைமிளகாயின் மருத்துவப் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» ரூபே கார்டு மூலம் கதர் துணி ஷாப்பிங் செய்த மோடி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:50 pm

» குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?
by ராஜா Yesterday at 5:25 pm

» `வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» ஆறு விக்கெட் வீழ்த்தினார் சகால்: 230 ரன்னில் ஆஸி., ஆல் அவுட்
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:12 am

» 'வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:44 am

» அமெரிக்க வாழ் இந்தியர்கள் 3 முக்கிய பதவிகளில் நியமனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:45 am

» பிறர் இன்பம் கண்டு மகிழ்வது பெரும் புண்ணியம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:40 am

» சபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி
by ayyasamy ram Yesterday at 7:16 am

» ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து
by ayyasamy ram Yesterday at 7:07 am

» எம்.ஜி.ஆர்., நாணயம் இன்று வெளியீடு
by சிவனாசான் Thu Jan 17, 2019 6:59 pm

» வயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் : நீர் தேவை பாதிக்கு பாதி குறைந்ததாக விவசாயிகள் உற்சாகம்
by சிவனாசான் Thu Jan 17, 2019 6:51 pm

Admins Online

உலகச் செய்திகள்!

உலகச் செய்திகள்!

Post by சிவா on Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலிஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down


Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Wed Nov 13, 2013 12:56 pm

 இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் நாளை கொல்கத்தா வருகை

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் நாளை மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவுக்கு வருகை தரவுள்ளார்.

சுமார் 6 மணி நேரம் இங்கு தங்கியிருக்கும் அவர், ஜோகாவில் உள்ள வணிகவியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பின்னர், ஆகில இந்திய வானொலிக்கு பிரத்யேக பேட்டியளிக்கும் டேவிட் கேமரூன், கொல்கத்தாவில் புதுப்பிக்கப்பட்டு வரும் இந்திய அருங்காட்சியகத்தை பார்வையிட்டு கொண்டு நிறுவன பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இந்த குறுகிய நேர சுற்றுப்பயணத்தின் போது மேற்கு வங்களா மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை அவர் சந்திப்பாரா? என்ற உறுதியான தகவல்கள் ஏதுமில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Wed Nov 13, 2013 12:58 pm

உலக சமூக பணியாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

உலகில் சமூக அக்கரையோடு சில நலப்பணிகளை செய்துவரும் சமூகபணியாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருவதாக WHO என்று சொல்லப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

தற்போது 72 இலட்சமாக இருக்கின்ற உலக சமூக பணியாளர்களின் பற்றாக்குறை, 2035ம் ஆண்டில் 1 கோடியே 29 இலட்சமாக உயரும் என எச்சரித்துள்ள WHO நிறுவனம், வயது காரணமாக ஓய்வுபெறும் மற்றும் அதிக ஊதியம் கிடைக்கும் பணிகளைத் தேடிச்செல்லும் நலப்பணியாளர்களுக்குப் பதிலாக, புதிதாகப் பணியாளர்களை வேலைக்கு எடுக்காமல் இருப்பது இப்பற்றாக்குறைக்கு ஒரு காரணம் எனக் கூறியுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Wed Nov 13, 2013 12:59 pm

எகிப்தில் அவசரநிலை நீக்கம்: நீதிமன்றம் உத்தரவு

எகிப்து நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டது. இதற்கான உத்தரவி எகிப்தின் நிர்வாக நீதிமன்றம் நேற்று வெளியிட்டது.

இந்த நீதிமன்ற  ஆணைபடி, நேற்று மாலை 4 மணி முதல், எகிப்திலுள்ள அவசர நிலை நீக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் நடைமுறையான ஊரடங்கும் நீக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எகிப்தின் தற்காலிக அரசுத் தலைவர் அத்லி மான்சோர் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி  நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Wed Nov 13, 2013 1:12 pm

 வங்காளதேசத்தில் தொழிலாளர்-போலீஸ் மோதல்; 50 பேர் காயம்வங்காளதேச தலைநகர் டாக்கா மற்றும் புறநகரில் ஏராளமான ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டத்தில் குதித்தார்கள். இவர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் சம்பளம் கொடுக்க குழு சிபாரிசு செய்தது. ஆனால் ரூ.6 ஆயிரம் வழங்க  வலியுறுத்தி தொழிலாளர்கள் மீண்டும் நேற்று  போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டன. 2-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்தது. டாக்கா புறநகரில் உள்ள சவார், அஸ்பிலா ஆகிய இடங்களில் தொழிலாளர்கள் சாலைகzளில் தடைகளை ஏற்படுத்தி போராட்டம் நடத்தினார்கள். பாதுகாப்புக்கு சென்ற போலீசார் கைவீசி தாக்கப்பட்டனர். இதனால் தொழிலாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வெடித்து கூட்டத்தினரை கலைத்தனர். இந்த சம்பவங்களில் 50 பேர் படுகாயம் அடைந்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by SajeevJino on Wed Nov 13, 2013 2:30 pm

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் நாளை கொல்கத்தா வருகை
ராஜ குடும்பம் இளவரசர் சார்லசும் கமீலாவும் இரண்டு நாள் முன்பு வரை கூட இந்தியாவில் தான் இருந்தனர்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

ரஷ்யா: பஸ் மீது தாக்குதல் நடத்தி 6 உயிர்களை பறித்த பெண் தீவிரவாதியின் கணவன் உள்பட 5 பேர் சுட்டுக்கொலை

Post by சிவா on Sun Nov 17, 2013 9:29 amதெற்கு ரஷ்யாவின் காகாசஸ் மாகாணத்தின் வழியே கடந்த மாதம் சென்ற பயணிகள் பஸ் மீது தற்கொலைப் படை பெண் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.

ஒரு நிறுத்தத்தில் அந்த பஸ் நின்றபோது பஸ்சினுள் ஒரு பெண் ஏறினாள். அடுத்த சில நிமிடங்களில் மரங்கள் அடர்ந்த சாலையில் பஸ் சென்றபோது அவளது உடல் வெடித்து சிதறியதும், பயணிகள் பலர் தூக்கி வீசப்பட்டதையும் டிரைவர் சீட் அருகேயுள்ள சி.சி.டி.வி. கேமரா படம் பிடித்துள்ளது.

இந்த தாக்குதலில் 32 பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதலை நடத்தியது நய்டா அசியலோவா(30) என்றும், டகேஸ்தான் பகுதியை சேர்ந்தவள் என்பதும் தெரிய வந்தது.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் காகாசஸ் மாகாணத்திற்கு அருகே அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் பந்தயங்களை நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் நிகழ்ந்த இந்த தற்கொலைப் படை தாக்குதல் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.

முஸ்லிம்களுக்கென்று தனிநாடு வேண்டும் என்று போராடி வரும் குழுவினர் 2002-ம் ஆண்டு திரையரங்கம் மீது நடத்திய தாக்குதலில் 130 பேரும், 2010ம் ஆண்டு மாஸ்கோ விமான நிலையத்தின் மீது நடத்திய தாக்குதலில் 35 பேரும் பலியானது நினைவிருக்கலாம்.

நய்டா அசியலோவை அவரது கணவர் தான் தற்கொலைப் படை தீவிரவாதியாக மாற்றி பஸ் மீதான இந்த தாக்குதலுக்கு தயார்படுத்தியதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

வெடி குண்டு நிபுணரான 22 வயது ட்மிரிட்டி சோகோலோவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நய்டா அசியலோவா கணவனால் மூளைச் சலவை செய்யப்பட்ட பின்னர் தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு அந்த பஸ்சை வெடிக்க வைத்ததாக அந்த செய்திகள் தெரிவித்தன.

இந்த தாக்குதலுக்காக மனைவியின் இடுப்பில் வெடிகுண்டு பெல்ட்டை கட்டி பலமுறை ட்மிரிட்டி சோகோலோவ் ஒத்திகை பார்த்த தகவலும் தெரியவந்துள்ளது.

ரஷ்யாவின் தீவிரவாத தடுப்பு போலீசார் ட்மிரிட்டி சோகோலோவ்-வை வலை வீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், டகேஸ்தான் தலைநகர் மக்கச்காலா அருகேயுள்ள கிராமத்தில் அவன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்தபோது உள்ளே இருந்த சிலர் போலீசாரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.

போலீசார் நடத்திய எதிர் தாக்குதலில் ட்மிரிட்டி சோகோலோவ் உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Sun Nov 17, 2013 9:30 am

வியட்னாமில் மழை வெள்ளத்திற்கு 19 பேர் பலி

வியட்னாமில் கடந்த ஒருவாரமாக பெய்த தொடர் மழையினால் பல மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குவாங் ன்காய் மாகாணத்தை சேர்ந்த 64 ஆயிரத்து 500 பேர் மற்றும் குவாங் நாம் மாகாணத்தை சேர்ந்த 16 ஆயிரத்து 600 பேர் என 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஹோய் அன் நகரின் பல சாலைகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. அதை சுற்றியுள்ள 2 மாவட்டங்கள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கி மிதக்கின்றன. பின்தின் மாகாணத்தை சேர்ந்த 12 பேரும் மத்திய மாகாணத்தை சேர்ந்த மேலும் 7 பேரும் என மொத்தம் 19 பேர் வெள்ளத்தில் மூழ்கி பலியானதாக தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணாமல் போன 10க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by SajeevJino on Sun Nov 17, 2013 11:06 am

சவுதி அரேபியாவில் கூட நல்ல மழை பெய்து வருவதாகவும் ..தலை நகர் ரியாதை வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும் தகவல்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Sun Nov 17, 2013 11:24 am

@SajeevJino wrote:சவுதி அரேபியாவில் கூட நல்ல மழை பெய்து வருவதாகவும் ..தலை நகர் ரியாதை வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும் தகவல்

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Sun Nov 17, 2013 12:29 pm

 சீனாவில் காவல் நிலையத்துக்குள் நடந்த மோதலில் 11 பேர் பலி

சீனாவின் வடமேற்கு மாகாணமான ஜின் ஜியாங் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நேற்று பிற்பகலில் கிளர்ச்சியாளர்கள் அத்து மீறி நுழைந்து நடத்திய தாக்குதலில் இரண்டு போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த தாக்குதல் தொடர்பாக 8 பேரை பெய்ஜிங் நகர போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர்களில் 2 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. இதையடுத்து  5 குற்றவாளிகளை பெய்ஜிங் போலீசார் கைது செய்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Mon Nov 18, 2013 5:15 pm

எங்களை நிர்பந்திக்கக் கூடாது: இலங்கை அதிபர் ராஜபக்சே கோபம்

கொழும்பு: "மனித உரிமைமீறல் குறித்த விசாரணை விஷயத்தில், யாரும் எங்களை நிர்பந்திக்கக்கூடாது,''என, இலங்கை அதிபர், ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் அமைப்பில், 53 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின், 22வது மாநாடு, இலங்கையின், கொழும்பு நகரில், கடந்த 3 நாட்களாக நடந்தது.இலங்கையில், விடுதலை புலிகளுடனான போர் முடிந்த பின்பும், அங்கு மனித உரிமை மீறல்கள் தொடருவதாக, ஐ.நா., மனித உரிமை அமைப்பு புகார் தெரிவித்திருந்தது. இதை காரணம் காட்டி, கனடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பிரதமர்கள் இந்த மாநாட்டை புறக்கணித்தனர்."மத்திய அரசு இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது' என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், பிரதமர் மன்மோகன் சிங், இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. "பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனும், இந்த மாநாட்டில் பங்கேற்கக்கூடாது' என, மனித உரிமை ஆர்வலர்கள் வற்புறுத்தினர்.

ஆனால், இந்த மாநாட்டில் பங்கேற்ற கேமரூன், இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு சென்று, அங்குள்ள தமிழ் மக்களின் நிலையை நேரில் கண்டறிந்தார். அதன் பின், ""மனித உரிமை குறித்து, சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும்,'' என, பேசினார்.

இதுகுறித்து, இலங்கை அதிபர் ராஜபக்சே, நிருபர்களிடம் கூறியதாவது:இலங்கையில், 30 ஆண்டுகளாக சண்டை நடந்தது. இதனால், தமிழர்கள், சிங்களர்கள் மட்டுமல்லாது, முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டனர். அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. அரசியலமைப்பு படியும், சட்ட விதிமுறைகளின் படியும்தான் செயல்படுகிறோம். இவற்றையெல்லாம் மதிப்பதால் தான், வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தினோம். மக்களின் மனோ நிலையை மாற்ற வேண்டியுள்ளது; வடக்கு பகுதி மக்களை மட்டுமல்ல; தெற்கில் உள்ளவர்களையும் மாற்ற வேண்டியுள்ளது.இலங்கையில் போர் முடிந்த பின், நல்லிணக்க குழுவை அமைத்துள்ளோம். இந்த குழுவில் எம்.பி.,க்கள் உளளனர். தனியொருவனாக என்னால் எதையும் செய்ய இயலாது. நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, காலவரையறை எதையும் செய்ய இயலாது. "மற்ற நாடுகள் தலையிட்டு, ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும்; 4 மாதத்தில் முடிக்க வேண்டும்' என, நிர்பந்திக்கக்கூடாது; இதில் நியாயமில்லை. பிரிட்டன் பிரதமர் சொல்வது போல, மார்ச் மாத்திற்குள் விசாரணையை நடத்தி முடிக்க முடியாது. எங்களுக்கு கட்டளை பிறப்பிக்காதீர்கள். தயது செய்து, எங்களது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்காதீர்கள்.இவ்வாறு ராஜபக்சே கூறினார்.

இலங்கை மனித உரிமை அமைப்பை வலுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட விஷயங்கள் இந்த மாநாட்டில் தீர்மானமாக இயற்றப்பட்டன.ஆஸ்திரேலிய பிரதமர், டோனி அபோட், காமன்வெல்த் அமைப்பின் தலைமை பதவியை, இலங்கையிடம் ஒப்படைத்தார். அடுத்த காமன்வெல்த் மாநாடு, மொரீஷியஸ் நாட்டில் நடைபெற இருந்தது. ஆனால், இலங்கையின் மனித உரிமை மீறலை காரணம் காட்டி, இந்த மாநாட்டை புறக்கணித்ததால், அடுத்த மாநாடு, ஐரோப்பிய நாடான மால்டாவில், 2015ல், நடைபெற உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Mon Nov 18, 2013 5:17 pm

31 நாய்களுடன் அமெரிக்க பெண் தற்கொலை

வாஷிங்டன்: அமெரிக்காவில், விலங்குகள் பாதுகாப்பு அமைப்பை நிறுவி, செல்லப் பிராணிகளுக்கு ஆதரவு அளித்து வந்த பெண், தான் வளர்த்த, 31 நாய்களை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவின், ஒகாயோ மாகாணத்தைச் சேர்ந்தவர், சான்ரா லேர்டமைன், 62. சிறு வயது முதலே, வீட்டு விலங்குகளை அதிகம் நேசிக்கும் இவர், ஏராளமான நாய்கள் மற்றும் பூனைகளை வளர்த்து வந்தார்.

செல்லப் பிராணிகளை அதிகம் நேசித்த சான்ரா, விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை துவங்கி, தெருக்களில் திரியும் நாய்கள் மற்றும் பூனைகளை எடுத்து வளர்த்தார். சில நாட்களுக்கு முன் சான்ரா, யாருடைய துணையும் இல்லாமல், அனைத்து பிராணிகளையும் தானே கவனித்துக் கொள்வதை பழக்கப்படுத்திக் கொண்டார். வயது முதிர்வின் காரணமாக, கடந்த சில மாதங்களாக, மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட இவர், தனக்குப் பின் அவர் வளர்த்த பிராணிகளின் நிலை பற்றி கவலை கொள்ளத் துவங்கினார்.இந்நிலையில், சான்ரா தான் வளர்த்த, 31 நாய்களையும், தன் காரில் ஏற்றி, தானும் விஷம் குடித்து, காரின் கதவுகளை இறுக்க மூடிவிட்டார். விஷத்தின் பாதிப்பால் சான்ரா, காரிலேயே இறந்துவிட்டார். காரின் கதவுகள் மூடப்பட்டதால், அதில் அடைக்கப்பட்டிருந்த, 30 நாய்கள் பரிதாபமாக பலியாயின. ஒரே ஒரு நாய் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.அதிகாலை, சான்ராவின் வீட்டிற்கு வந்த அவரின் நண்பர், சான்ரா காரில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் காரை சோதனையிட்டதில், சான்ராவின் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், தனக்குப் பின், இந்த பிராணிகளை கவனிக்க யாரும் இல்லாததால், தான் வளர்த்த பிராணிகளுடன் தற்கொலை செய்து கொள்வதாக அதில் எழுதியிருந்தார். விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுக்கும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பை நிறுவிய சான்ராவின் தற்கொலை, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இத்தனை ஆண்டுகள், தான் வளர்த்த நாய்களையே சான்ரா கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது, வேதனை அளிப்பதாக, அவரின் கணவர் மற்றும் நண்பர்கள் தெரிவித்து உள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by Muthumohamed on Mon Nov 18, 2013 5:18 pm

நல்ல ஒரு தொடர் பதிவு நன்றி அண்ணா தொடரட்டும் உங்கள் சேவை
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15331
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Mon Nov 18, 2013 5:32 pm

அமெரிக்காவை பயங்கர சூறாவளி தாக்கியது; 10 மாநிலங்களில் கோரத்தாண்டவம்

அமெரிக்காவை பயங்கர சூறாவளி தாக்கி 10 மாநிலங்களில் கோரத்தாண்டவம் ஆடியது. அதில் 6 பேர் பரிதாபமாக இறந்தனர். நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மின் தடை ஏற்பட்டு பல லட்சம் மக்கள் தவிக்கிறார்கள்.

பயங்கர சூறாவளி வீசியது

அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் பயங்கர சூறாவளி தாக்கியது. மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்தடுத்து 60 தடவைகள் சுழன்று, சுழன்று வீசியது. அத்துடன் ஐஸ் கட்டி மழையும் கொட்டியது. இந்த சூறாவளியால் மரங்கள் வேருடன் சரிந்தன. மின்சார கம்பங்கள் முறிந்தன. வீட்டுக்கூரைகள் காற்றில் பறக்க, வாகனங்களை உருட்டிப்போட்டது.

10 மாநிலங்கள் பாதிப்பு

இந்த சூறாவளிக்கு வாஷிங்டன், இல்லியான்ஸ், மிஷிகன், இண்டியானா, கென்துஸ்கி, ஒகிலஹோமா, ஒஹியோ உள்பட 10 மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் பென்சில்வானியா, நியூயார்க், மேரிலாந்து, நியூஜெர்சி ஆகிய பகுதிகளை தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. சிகாகோ உள்பட பல நகரங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டது. சாலைகள் முழுவதும் குப்பை, கூளங்கள் மற்றும் மரங்கள் விழுந்துகிடக்கின்றன. இதனால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தகவல் தொடர்பு அடியோடு முடங்கியது.

6 பேர் பலி

இந்த சூறாவளிக்கு 80 வயது முதியவர், 78 வயது பெண் உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். இல்லியான்சில் 3 பேரும், கென்துஸ்கி, இண்டியானா, மிச்சோரி ஆகிய இடங்களில் தலா ஒருவரும் இறந்ததாக அதிகாரிகள் கூறினர். இதுதவிர நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு எலும்பு முறிவு மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. இவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.

5 கோடி பேர் தவிப்பு

இல்லியான்ஸ், மிஷிகன், இண்டியானா, கென்துஸ்கி ஆகிய இடங்களில் மின்சாரம் இன்றி 5 லட்சம் மக்கள் தவிக்கிறார்கள். வாஷிங்டனில் வசிக்கும் அந்தோணி ஹொவுரே என்பவர் கூறுகையில், ”எங்கள் வீடு அருகே இருந்த பெரும்பாலான வீடுகளை காணவில்லை. வீடுகளை இழந்தும், மின்சாரம் தடையாலும் மக்கள் அவதிப்படுகிறார்கள்” என்றார். மற்றொருவர் கூறும்போது, ”சூறாவளி வருவதை பார்த்ததும் நானும், குடும்பத்தினரும் அடித்தள அறைக்கு சென்று தப்பினோம். திரும்பி வந்தபோது வீட்டின் பெரும்பகுதியை சூறாவளி அடித்துச் சென்று விட்டது” என்றார்.

சூறாவளி ஏற்படுத்திய பாதிப்பு குறித்து அதிகாரி கூறுகையில், ”10 மாநிலங்களில் பேரழிவை உண்டாக்கி விட்டது. 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்கிறார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் சென்று நிவாரணப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by சிவா on Mon Nov 18, 2013 5:45 pm

எகிப்தில் ரயில் விபத்து: 24 பேர் பலி

கெய்ரோ: தெற்கு எகிப்தில், சரக்கு ரயில் ஒன்று வாகனங்கள் மீது மோதியதில் 24 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் படுகாயம் அடைந்தனர். பெனிசுப் என்ற இடத்தில் இருந்து வந்து கொண்டிருந்த அந்த ரயில் தசூர் என்ற இடத்தில் மூன்று வாகனங்கள் மீது மோதியது. கேட் மூடாததே இந்த பெரும் விபத்திற்கு காரணம் என, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: உலகச் செய்திகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை