புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்! Poll_c10ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்! Poll_m10ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்! Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்! Poll_c10ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்! Poll_m10ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்! Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்! Poll_c10ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்! Poll_m10ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்! Poll_c10ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்! Poll_m10ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 06, 2013 7:39 pm

திருச்சிராப்பள்ளி சந்திப்பு. இரயில் நின்றதும், பெட்டியை விட்டுக் கீழே இறங்கினேன். தரையில் கால்பட்டதும், உடம்பெல்லாம் சிலிர்த்தது.

பள்ளிக்கூடம், கல்லூரி, படித்து முடித்தும் வேலை என்று என் இளமைப் பருவம் முழுவதும் திருசியில்தான். கல்யாணமாகி பரோடா சென்று விட்டேன். என் பெற்றோரும், சென்னைக்குக் குடிபெயர்ந்து விட்டனர். அதனால் கிட்டத்தட்ட பத்து வருடங்களாய் திருச்சியில் என் கால்படவேயில்லை.

என் மச்சினனுக்கு திருச்சியில் திருமணம் என்றதும், துள்ளிக் குதித்தேன். உச்சிப்பிள்ளையார், என்.எஸ்.பி. சாலை, காவிரி ஆறு, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் என்று என் நினைவு நாடாவில் படங்கள் ஓட ஆரம்பித்தன. கூடவே ஜெயசுதாவின் முகம் பெரிதாய் மனதுக்குள் விரிந்தது.

ஜெயசுதா... ஜெயா....! என் பால்யக் காலம் தொட்டு தோழி! பள்ளிக்கூடத்தில் ஒரே வகுப்பு. பிறகு ஒரே கல்லூரி என்று தொடர்ந்த நட்பு.

சிறு வயதிலிருந்தே எங்களுக்குள் எத்தனைக்கு எத்தனை தோழமை இருந்ததோ அத்தனைக்கத்தனை சுவாரஸ்யமான போட்டியும் இருக்கும்.

அவள் சிவப்பு நிறம் என்றால், நான் மாநிறம், அவள் கூந்தல் மெலிதானது, ஆனால் எனக்கு அடர்த்தியான கூந்தல் (நீளமான கூந்தலை முன்னால் விட்டு, சுழற்றி, பின்னே எறிந்து அவளை வெறுப்பேற்றுவேன்), அவள் ஐந்தரை அடி உயரம், நான் ஐந்தேகாலடிதான். இப்படிச் சின்னதான போட்டிகள் மூலம் ஒருவரையொருவர் வெறுப்பேற்றிச் சீண்டி விளையாடுவோம்.

படிப்பு சமாச்சாரத்திலும் அப்படித்தான். கணக்குப் பாடத்தில் எனக்கு தொண்ணூறு மார்க். ஜெயா எழுபத்தைந்துதான். அன்று முழுவதும் கணக்கு விடைத்தாள், என் புத்தகத்தின் மேலேயே அவள் கண்களில்படும்படி வைத்திருப்பேன்.

அடுத்த நாள் ஆங்கிலப் பாடத்தில் அவள் எண்பதும், நான் அறுபதும் என மார்க் வந்தது. ஜெயா ஒரு குறுஞ்சிரிப்புடன், ஆங்கில விடைத்தாளை கையில் வைத்து ஆட்டியபடி பேசினாள்.

கல்லூரியில் இருவரும் பிகாம் எடுத்துப் படித்தோம். படித்து முடித்ததுமே, திருச்சியிலுள்ள பெரிய கம்பெனியில் தேர்வு எழுதினோம்.

அவளுக்குத்தான் முதலில் வேலைக்கு சேர்வதற்கான கடிதம் வந்தது. முகத்தில் கம்பீரம் ஏற, அப்பாயின்மென்ட ஆர்டரை ஹேன்ட்பேக்கில் வைத்தபடி அன்று முழுவதும் அலைந்தாள். மாலையில் இருவரும் மாணிக்க விநாயகர் ஆலயத்துக்குச் சென்றோம்.

கண்மூடிப் பிரார்த்தித்தாள்.வெளியே வந்ததும் கேட்டேன்.பிள்ளையாரிடம் பலமான பிரார்த்தனை போலிருக்கு
ஆமாம், உனக்காகத்தான் என்றாள்.ஆச்சர்யமாய்ப் பார்த்தேன்.

ஒரே ஸ்கூல், ஒரே கல்லூரி, அதே மாதிரி இரண்டு பேருமே ஒரே கம்பெனியில் சேர்ந்தால் நல்லாயிருக்குமே. அதான், பிள்ளையாருக்கு ஐஸ் வெச்சேன் என்றாள்.

நெகிழ்ந்து போனேன். அவள் வேண்டுதல் பலித்தது. அடுத்த இரண்டு நாட்களில் எனக்கும் வேலைக்கான ஆர்டர் வந்து விட்டது.
பிள்ளையாரை நூற்றுயெட்டு முறை வலம் வந்தாள்.

எனக்காக அவள் இத்தனை தூரம் கஷ்டப்பட்டது, என்னை உருக்கி விட்டது. வீட்டுக்கு வந்ததும், வற்புறுத்தி, அவளை அமர வைத்து, காலைப் பிடித்துவிட்டேன். அப்போது குறும்புடன் கேட்டாள்.

"ஏன்டி, ஒரே ஸ்கூல், ஒரே காலேஜ், இப்ப வேலையும் நமக்கு ஒரே கம்பெனியிலேன்னு ஆச்சு. அப்ப, கல்யாணமும் ஒரே ஆளோடதானோ?'

.....................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 06, 2013 7:41 pm

இளவயதுக்கே உரிய கிண்டலுடன் பேசினோம்.

சொன்ன வாய் முகூர்த்தமோ, என்னவோ, கிட்டத்தட்ட அதே போன்ற சூழ்நிலையில் மாட்டிக் கொண்டோம்.
வேலைக்குச் சேர்ந்த இடத்தில், முகுந்தன் எனற சூபர்வைசர் இருந்தான்.

சிரித்த முகம், சிவந்த நிறம், துறுதுறுப்பான செயல், கலகலப்பான பேச்சு, கூடவே கல்யாணமாகாத பிரம்மசாரி. எல்லோருக்குமே அங்கு அவனைப் பிடிக்கும். முக்கியமாய் ஜெயாவுக்கு அவனை மிகவும் பிடித்துப் போனது.

அவளுக்காக நான்தான் தூது போனேன் முகுந்தனிடம்.

"தோழிக்காக தூது வந்தது சரிதான். ஆனால், எனக்குப் பிடிச்ச பொண்ணே தூதாய் வந்ததுதான் கஷ்டமாயிருக்கு' என்றான்.அதிர்ச்சியுடன் பார்த்தேன்.

"உண்மைதான்! உங்களைப் பார்த்தப்புறம், வேற யாருமே எனக்கு அழகாய்த் தெரியவில்லை. என் காதலை ஏத்துக்குங்க' என்று மண்டியிட்டான்.

நான் ஓடி வந்து விட்டேன். எதிர்பாராத தாக்குதல் அது. என்னை ஒருவன் விரும்புகிறான் என்பது பெருமையாய் இருந்தது. அதே சமயம், ஜெயாவின் முகமும், அவளுடனான எனது இத்தனை வருட நட்பும் என்னைக் கலங்கடித்தன.

மாணிக்க விநாயகரை நூற்றி எட்டு தடவை பிரதட்சணம் செய்தேன்.

கண் திறந்து விட்டார் பிள்ளையார். அடுத்த வாரமே, என்னைப் பெண் பார்க்க வந்து, பிடித்துப் போய், அடுத்த இருபது நாளிலேயே, முகூர்த்த தேதியும் முடிவாகி, என் கழுத்தில் தாலி ஏறி, நான் பரோடா வந்து சேர்ந்தது வரை, ஜெட் வேகத்தில் நடந்து முடிந்தன.

பரோடா வந்த புதிதில் ஜெயாவுடன் போனில் அவ்வப்போது பேசுவேன். முகுந்தன் வேறு ஒரு நல்ல கம்பெனியில், அதிகாரியாய் பொறுப்பேற்று, பெங்களூரு சென்று விட்டான் என்று ஜெயா மூலம் தெரிந்தது.

தூர தேசம், புது இடம், புது மொழி, புது வாழ்க்கை என்று என்னில் நான் தொலைந்து போனதால், ஜெயாவுடனான தொடர்புகள் அறுந்து விட்டன இந்த பத்து வருடங்களில்.

இதோ இன்று மறுபடியும் திருச்சியில். நான் சந்தித்தே ஆக வேண்டியவர்கள் இருவர். ஒன்று ஜெயா, அடுத்தது மாணிக்க விநாயகர்.

மாணிக்க விநாயகர் அதே இடத்தில்தான் கம்பீரமாக அமர்ந்து, அருள்பாலித்து கொண்டிருப்பார்.
ஆனால், ஜெயா? அவளுக்கும் திருமணமாகி வெளியூர் போயிருக்கலாம்.

இல்லை, திருச்சி மாப்பிள்ளையே கிடைத்து, இதே ஊரிலேயே இருக்கலாம். நாங்கள் வேலை செய்த கம்பெனியில் கேட்டால் சொல்வார்கள். அவள் பெற்றோர், அதே கீழ ஆண்டாள் வீதியிலேயே அதே வாடகை வீட்டில் இருக்கிறார்களோ இல்லை, வேறு அடுக்குமாடிக் குடியிருப்பில் புகுந்துவிட்டார்களோ, தெரியவில்லை.

எப்படி இருந்தாலும், முதலில் பிள்ளையாரைப் பார்த்து விடலாம். அப்புறம் அவர் விட்ட வழி.
கோயிலின் இருபுறமும் உள்ள வளையல், குங்குமம், தேங்காய் கடை அப்படியே இருந்தது. மாணிக்க விநாயகர் சந்நிதி மட்டும் எடுத்துக் கட்டி, கொஞ்சம் விசாலமான இடமாக்கியிருப்பது தெரிந்தது.

மாணிக்க விநாயகரை மனமுருகப் பிரார்த்தித்தேன். விநாயகரை வலம் வரும்போது கவனித்தேன். தூரத்தில் வருவது ஜெயா போல இருக்கிறதே! சற்றே இடது தோள் சாய்த்து, வலது கையை முன்னே வீசி, நெற்றியில் சற்று அகலமான பொட்டுடன்... அவளேதான்...

பிள்ளையாரை மறந்தேன், கோயிலை மறந்தேன். வயதை மறந்தேன்! ஓடிப்போய் ஜெயாவைக் கட்டிக் கொண்டேன்.என் திடீர்த் தாக்குதலில் முதலில் பயந்து போனவள், திமிற முயன்று, பிறகு என்னைத் தெரிந்ததும், இறுக்கிக் கொண்டாள்.

இருவர் கண்களிலும் அனிச்சையாய் கண்ணீர் வழிந்தது.கோயிலின் உள்பக்கம் மூலையாய் போய் அமர்ந்தோம். பிடித்த விரல்களை விடவே இல்லை இருவரும்.கொஞ்சம் உணர்வலைகள் அடங்கி பிறகுதான் கவனித்தேன்.

ஜெயாவின் கழுத்தில் அதே மெல்லிய செயின் மட்டுமே. என் பார்வையைக் கண்டு புன்னகைத்தாள்.
"நான் அதே ஜெயாதான். எந்தவிதத்திலும் மாறவில்லை' என்றாள்.

அவள் தங்கை, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே, வேற்று மதத்தவனைக் காதலித்து, வீட்டை விட்டு ஓடிப் போனது, அவள் அம்மா இதனாலேயே ஒடிந்துபோய், படுக்கையில் விழுந்தது, அப்பா இறந்து போனது... என்று சோக கீதங்களாய் அவள் வாழ்க்கையில் ஒலித்ததைச் சொன்னாள்.

அவள் திருமணம் தள்ளிப்போய், இப்போது அதைப் பற்றிய பேச்சே காணாமல் போனதை புன்சிரிப்பு மாறாமல் சொன்னாள்.எனக்குத்தான் மனசு ஆறவில்லை.

"உனக்கு ரேவதி டிச்சரை ஞாபகமிருக்கா?' என்றாள், என் புலம்பலைக் கேட்டு.
கல்லூரியில் எங்களுக்கு ஆங்கில ஆசிரியை."யதேச்சையாக ஒருமுறை சந்தித்தபோது சொன்னார். வாழ்க்கையிலே பெரும்பாலானோருக்கு வழக்கமான படிப்பு, திருமணம், குழந்தை என்று ஒரு வட்டத்துக்குள் வாழ்க்கை அமைந்து விடுகிறது.

வெகு சிலருக்கு, அது நிகழ்வதில்லை. ஏனென்றால், அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்டவர்களாம்.'
ரேவதி டீச்சரும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ஞாபகம் வந்தது."

எப்படி ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்னு கேட்கவே இல்லையே நீ' என்றாள் ஜெயா."சொல்லு' என்றேன்.
"தான், தன் குடும்பம்னு சுருக்கிக்காம, மற்றவர்களுக்காக வாழ, என்னைப் போன்ற, ரேவதி டீச்சரைப் போன்ற சிலர் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்.

தினசரி வேலை முடிந்து, அருகிலுள்ள அநாதை ஆசிரமம் போவேன். அங்கே உள்ள குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருவேன். வயதானவர்களுக்கு புத்தகம் படித்துக் காட்டுவேன். அங்கு உள்ள அனைத்துக் குழந்தைகளுக்குமே நான் அக்கா. எல்லாப் பெரியவர்களுக்கும் நான் மகள். உண்மையிலேயே உலகம் பெரிதானதுதான்' என்றாள், பெருமையும், பூரிப்புமாய்.

கமல் மேல் பைத்தியமாய் அலைந்த, பாலகுமாரன் எழுத்தை தேடிப் படித்த, இரகசியமாய் ஏ ஜோக்குகளைப் பகிர்ந்த தோழி, குறும்புத்தனமான என் ஜெயா, மனதளவில் முதிர்ந்து விட்டது புரிந்தது.
அருகிலுள்ள ஹோட்டலில் காப்பி குடித்தோம். காசு தர அவள் கைப்பையைத் திறந்த போது, ஹேர்டை பாக்கெட் கண்ணில் பட்டது.

நான் அதைக் கவனித்து விட்டதைக் கண்டவள் சொன்னாள்.

"மனசுல மூலையிலே, சின்னதாய், துக்குளியூண்டாய் ஒரு எண்ணம். எனக்குன்னு ஏதாவது ஒரு ராஜமாரன் பிறந்து, தொலைஞ்சிருந்து, திடீர்னு வந்து நின்றால், வெள்ளை முடியோடு நான் இருந்தால் நல்லா இருக்காதுல்ல, அதான்' என்று கண்ணைச் சிமிட்டிச் சிரித்தாள்.

எனக்கு ஏனோ அழுகைதான் வந்தது.

நன்றி - மங்கையர்மலர் - கிருஷ்ணா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக