ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 ayyasamy ram

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

உணவுக்கு மட்டுமா உப்பு…
 ayyasamy ram

வேடனின் வடிவில் முருகன்
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தீபாவளி கதைகள்

View previous topic View next topic Go down

தீபாவளி கதைகள்

Post by சிவா on Sat Nov 02, 2013 2:48 am

மராட்டிய மாநிலத்தில் தீபாவளி பண்டிகை வித்தியாசமாக 5 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த 5 தீபாவளிகள் கொண்டாட்டத்துக்கும் பின்னணியில் ஒவ்வொரு கதை இருக்கிறது.

1. தந்திராஸ்

மன்னர் ஹிமாவின் மகன் தனது 16 வயதில் அதுவும் திருமணமான 4–வது நாளில் பாம்பு கடித்து இயற்கை எய்துவார் என்று ஜோதிடம் கூறியது. அந்த நாளும் வந்தது. எப்படியாவது தனது கணவர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த இளவரசனின் புதுமனைவி, பாம்பு வீட்டுக்குள் வந்து விடாதபடி வீடு முழுவதும் தீபங்களை ஏற்றி வைத்தாள். வீட்டு வாசல் மற்றும் அனைத்து பகுதிகளிலும் தங்க, வைர, வைடூரிய நகைகள், பொற்காசுகள், வெள்ளிகாசுகளை, நவரத்தினங்களை கொட்டி வைத்தாள். இவற்றில் தீபத்தின் ஒளிபட்டு பிரதிபலித்து அரண்மனையே பிரகாசித்தது.

குறிப்பிட்ட நேரத்தில் இளவரசனின் உயிரை எடுப்பதற்காக எமன் பாம்பு வேடம் தரித்து உள்ளே வந்தான். அங்கு இருந்த பிரகாசமான ஒளியால் பாம்பின் கண்கள் குருடாகி விட்டது. இளவரசன் இருந்த இடத்துக்கு செல்ல முடியவில்லை. நகைகளின் உச்சியில் ஏறி அமர்ந்த பாம்பு இளவரசி பாடிய பாடல்களை மெய்மறந்து கேட்டு கொண்டே இருந்தது. அதற்குள் விடிந்து விட்டது. 4–வது நாள் முடிந்து விட்டதால் பாம்பு அங்கிருந்து சென்று விட்டது. இளவரசியின் தந்திரத்தால் கணவர் உயிர் காப்பாற்றப்பட்டதால் அந்த நாளை தந்திராஸ் என கொண்டாடுகிறார்கள். இது தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு நடக்கும்.  

அன்றைய தினம் பெண்கள் வீடுகள் முழுவதையும் அலங்கரித்து விளக்கு ஏற்றி கொண்டாடுவார்கள். பெண்கள் தங்கள் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் நீண்ட நாள் வாழ பூஜை செய்வார்கள். நன்கு பிசையப்பட்ட மாவில் தீபம் ஏற்றி, எமனுக்கு பூஜை செய்து வழிபடுவார்கள். இந்து மரபுப்படி அழித்தல் தொழிலை செய்துவரும் எமனை, தனந்த்ரயோதஷி (தந்திராஸ்) தினத்தன்று பூஜை செய்து வழிபாடு செய்தால் ஆண்களுக்கு ஆசி வழங்கி நீண்ட ஆயுள் கொடுப்பார் என்பது ஐதீகம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபாவளி கதைகள்

Post by சிவா on Sat Nov 02, 2013 2:49 am

2. நரகசதுர்த்தி


இது தீபாவளிக்கு முந்தைய நாள் அதாவது நவம்பர் மாதம் 1–ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று கொண்டாடப்பட்டு விட்டது. இதற்கும் ஒரு கதை இருக்கிறது. நரகாசுரன் என்ற அரக்கன் இந்திரனை வென்று அவனது சொர்க்க ராஜ்ஜியத்தை கைப்பற்றி கொண்டான். 16 ஆயிரம் பெண்களையும் சிறைபிடித்தான்.  தேவேந்திரனின் தாய் அதிதி அணிந்திருந்த மந்திர சக்தி கொண்ட கம்மலையும் எடுத்து சென்று விட்டான்.

இதனையடுத்து தேவர்கள் தங்களை காக்க வேண்டி மகாவிஷ்ணுவை தஞ்சம் அடைந்து அபயம் கேட்டனர். அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்த மகாவிஷ்ணு நரகாசுரனிடம் போரிட்டு அவனை கொன்று தேவர்களையும், மக்களையும் காத்தார்.

நரகாசுரன் தேவலோகத்தில் இருந்து சிறைபிடித்து சென்ற 16 ஆயிரம் பெண்களையும் விடுவித்தார். அதிதியின் மந்திர சக்தி கொண்ட கம்மலையும் மீட்டார். உலக மக்களை பயத்தில் இருந்து நீக்கிய அந்த நாளையே நரக சதுர்த்தி தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபாவளி கதைகள்

Post by சிவா on Sat Nov 02, 2013 2:49 am

3. பெரிய தீபாவளி

இதுதான் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை. நரகாசுரன் இறந்ததையடுத்து அதிகாலையிலேயே மக்கள் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பூஜைகள் செய்வார்கள். பின்னர் இனிப்பு சாப்பிட்டு பட்டாசுகளை வெடித்து மிக மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். இதை லட்சுமி பூஜை என்றும் அழைக்கின்றனர். இந்த நாளில் தான் 14 ஆண்டுகள் காட்டுக்கு சென்ற ராமர் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பியதாக நம்பப்படுகிறது. ராமர், சீதையுடன் அயோத்தி திரும்பிய மகிழ்ச்சியின் வெளிப்பாடே பெரிய தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. அதேபோல பெரிய தீபாவளி நாளில்செல்வத்தின் கடவுளான லட்சுமி வீட்டுக்கு வந்து நேரடியாக அருள்புரிவார் என்ற நம்பிக்கையும் உள்ளது. யார் வீடு சுத்தமாக இருக்கிறதோ, அவர் வீட்டுக்குத்தான் லட்சுமி வருவார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

எனவே பெரிய தீபாவளி தினத்தன்று வீட்டை நன்றாக சுத்தப்படுத்தி விளக்குகளால் அலங்கரித்து லட்சுமியை வரவேற்கும் விதமாக பூஜை செய்வார்கள். இதனைத்தொடர்ந்து ‘தீபாவளிச்சா பட்வா’ என்ற விழா கொண்டாடப்படுகின்றது. இதன்படி பெண்கள் கணவன்மார்கள் நீண்ட ஆயுள் பெற வேண்டி ஆலமரத்தில் நூல் கட்டி சுற்றி வந்து வழிபட்டு சிறப்பு பூஜை செய்வார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபாவளி கதைகள்

Post by சிவா on Sat Nov 02, 2013 2:50 am

4. கோவர்த்தன பூஜை

நாளை இந்த விழா கொண்டாடப்படுகிறது. ராமன் பாலம் கட்டிய போது அனுமான் கோவர்த்தன மலையை தூக்கி சென்றாராம். அதற்குள் பாலம் கட்டி முடிக்கப்பட்டு விட்டதால் ஓரிடத்தில் அந்த மலையை வைக்கும் போது என்னை ஏன் இங்கே வைத்து விட்டு செல்கிறாய் என்று அனுமானிடம் அந்த மலை கேட்டது.இதற்கு, ராமர் அடுத்து கிருஷ்ண அவதாரம் எடுத்து உன்னை தூக்குவார், அதுவரை இங்கேயே கார்த்திரு என்று அனுமான் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. அதன்படி மலையை தூக்கி பிடித்து மக்களுக்கு காட்சியளித்ததையே கோவர்த்தன பூஜையாக கொண்டாடுகிறார்கள்.

தேவலோக அரசபதவியில் இருந்த இந்திரன் கர்வம் கொண்டிருந்தான். அவனது கர்வத்தை உணர்ந்து கொண்ட கிருஷ்ணர், இந்திரனுக்கு செய்யும் யாகத்தை தடுத்து நிறுத்தி ஆயர்கள் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும் கோவர்த்தன மலைக்கு பூஜை செய்து விழா எடுக்க கூறினார். இதனால் கடும் கோபம் கொண்ட இந்திரன்ஆயர்குலத்து மக்களையும், ஆலோ சனை கூறிய கிருஷ்ணரையும் பழிவாங்க நினைத்தான். கிருஷ்ணர் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை மறந்த இந்திரன் வர்ணதேவனை அழைத்து மேகங்களை திரட்டி கடும் மழையை பொழிந்து பிருந்தாவனத்தை அழித்து விடும்படி கட்டளையிட்டான்.

அப்போது, கிருஷ்ணர் தனது சுண்டு விரலால் கோவர்த்தன மலையை தாங்கி மக்களுக்கு குடையாக பிடித்து மக்களை காத்தார். தனது தோல்வியை உணர்ந்த இந்திரன் மகாவிஷ்ணுவின் கிருஷ்ண அவதார மகிமையை உணர்ந்து கர்வம் அழிந்தான். இந்த நாளில் வீட்டிலேயே மலை போன்று வடிவங்களை அமைத்து அலங்கரித்து வழிபாடு நடத்துவார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபாவளி கதைகள்

Post by சிவா on Sat Nov 02, 2013 2:50 am

5. ‘பாவ்–பீச்‘ விழா

நரகாசுரனை கொன்று விட்ட மகிழ்ச்சியில் இருக்கும் கிருஷ்ணர் தனது சகோதரி சுபத்ரா வீட்டுக்கு சென்றார். அவரை சுபத்ரா வெற்றி திலகமிட்டு வரவேற்றார். இந்த நாளை பாவ்பீச் விழாவாக கொண்டாடுகின்றனர். இந்த விழா 4–ந் தேதி (திங்கட்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளை சகோதரர்கள் தங்களது சகோதரிகள் வீடுகளுக்கு சென்று அவர்களை நலம் விசாரிக்கும் தினமாக கடைபிடிக்கின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தீபாவளி கதைகள்

Post by பாலாஜி on Sat Nov 02, 2013 1:44 pm

நல்ல பதிவு .... பகிர்வுக்கு நன்றி   


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தீபாவளி கதைகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum