ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்

View previous topic View next topic Go down

விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்

Post by nandhtiha on Thu Oct 29, 2009 6:01 pm

விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்

http://www.nilacharal.com/ocms/log/10260918.asp

விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம்!

ச.நாகராஜன்


ஒரு விஞ்ஞானி ஒரு வினாடிக்கு ஐந்து கோடி அதிர்வுகளைத் தரும் ஒலியை ஏற்படுத்தினார். அப்போது அங்கே இருந்த பஞ்சுப் பொதிகள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன

ஒலிக்கு மகிமை உண்டா?

ஒலிக்கும் அதன் அதிர்வுகளுக்கும் மனித உடல் மற்றும் மனதுடன் சம்பந்தம் உண்டா? ஒலியும் அதிர்வுகளும் எதையும் உருவாக்கும் வல்லமை படைத்தவையா?

மனித உடல், மனம் ஏன் ஆன்மாவுக்கே நலம் அளிக்க வல்லவை மந்திரங்கள் என்று ஹிந்து மதம் கூறுகிறது. மந்திரங்களின் மகத்துவத்தை விஞ்ஞானபூர்வமாக அறிய விழையும் ஆர்வம் 1787ம் ஆண்டே துவங்கி விட்டது என்றால் வியப்பாக இல்லை?


க்ளாட்னி ப்ளேட்ஸ்

ஜெர்மானியரான எர்னஸ்ட் ஃப்ளோரன்ஸ் ஃப்ரடரிக் க்ளாட்னி (தோற்றம் 30-11-1756 மறைவு 3-4-1827) ஒரு
சிறந்த இசை வல்லுநர். அவர் ஒரு சிறந்த இயற்பியல் விஞ்ஞானியும் கூட. 1787ம் ஆண்டு
அவர் தனது கண்டுபிடிப்புகளை
இசை கொள்கை சம்பந்தமான கண்டுபிடிப்புகள்' என்ற
நூலில் எழுதி வெளியிட உலகமே பரபரப்புக்குள்ளானது! இவரது பிறப்பிலும் இறப்பிலும்
கூட இசை ஒரு தற்செயல் ஒற்றுமையை ஏற்படுத்தி இருப்பதும் ஒரு அதிசயம்தான்! பிரபல இசை
மேதை மொஜார்ட் பிறந்த அதே ஆண்டுதான் இவர் பிறந்தார். பிரபல இசை மேதை பீத்தோவன்
மறைந்த அதே ஆண்டுதான் இவர் மறைந்தார்!


க்ளாட்னிதான் ஒலியியல் (acoustics) என்ற புதிய இயலை வகுத்தார். ஒலி அலைகள் என்ன செய்யும் என்பதை
அவர் சோதனைகள் மூலம் நிரூபித்தார்! நுண் மணல் பரப்பிய ஒரு தகடின் ஓரத்தில் செங்குத்தாக ஒரு வயலின் வில்லை (bow) அவர் வாசிக்க ஆரம்பித்தவுடன் ஒலிக்குத் தகுந்தவாறு வெவ்வேறு வடிவங்களாக அந்த மணல் துகள்கள் பிரிந்து தோற்றமளிக்க ஆரம்பித்தன. இவற்றை அவர் தொகுத்தார். கால்டினி ப்ளேட்ஸ் என்று இவை உலகப் புகழ் பெற்றன. உலகில் உள்ள
இயற்பியல் பொருளை' ஒலி பாதிக்கிறது என்பதே அவரது ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பு. அது பல்வேறு ஜாமட்ரி வடிவங்களை உருவாக்குவதைப் பார்த்த அனைவரும் அதிசயித்தனர்!

நெப்போலியன் அளிக்க முன் வந்த பரிசு

மாமன்னன் நெப்போலியனின் அரசவைக்கு க்ளாட்னி அழைக்கப்பட்டார். தனது சோதனைகளை மன்னர் முன்
அவர் நிகழ்த்திக் காண்பித்தார். நெப்போலியன் ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்று அசந்து போனார். இப்படி ஒலி அலைகளால் மணல் துகள்களில் வெவ்வேறு வடிவங்கள் ஏன் ஏற்படுகிறது என்பதை விளக்கிக் கூறுபவர்களுக்கு 3000 ஃப்ராங்க் பரிசாக அளிக்கப்படும் என அறிவித்தார். இந்தப் பரிசை 1816ல் சோபி ஜெர்மெய்ன் என்ற பெண்மணி பெற்றார்! நெப்போலியன் க்ளாட்னிக்கு 6000 ப்ராங்க் கொடுத்து அவரைப் பாராட்டினார்.


காவராண்ட் ஆராய்ச்சி

இதைத் தொடர்ந்து உலகெங்கும் ஏராளமான விஞ்ஞானிகள் ஒலி அலைகளின் சக்தியைத் தீவிரமாக ஆராயத்
தொடங்கினர். வியன்னாவில் மார்ஷல்ஸ் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த காவாராண்ட் என்ற
எஞ்சினியருக்கு திடீரென ஒரு புதுத் தொல்லை ஏற்பட்டது. எப்போதெல்லாம் அவர் தனது
வகுப்பறைக்குப் போகிறாரோ அப்போதெல்லாம் அவருக்கு இயல்பான அமைதி போய் மனக்கலக்கமும்
உடல் தளர்ச்சியும் ஏற்பட்டது. அவரால் எந்தச் செயலையும் செய்ய இயலாத நிலை
ஏற்பட்டது. இதன் காரணம் எதுவாக இருக்க முடியும் என்று அவர் தீவிரமாக ஆராய
ஆரம்பித்தார்.


ஒரு நாள் சுவரில் சாய்ந்தவாறே யோசித்துக் கொண்டிருந்த போது சூட்சுமமான ஒலியின்
அதிர்வுகளை உணர்ந்தார். அருகே உள்ள அறையில் புதிதாக பொருத்தப்பட்ட ஒரு ஏர்கண்டிஷன்
இயந்திரம் 7 ஹெர்ட்ஸ் அளவில் நுண்ணிய ஒலியை ஏற்படுத்தியவாறே இயங்கிக்
கொண்டிருந்தது. அதுவே அவரது நிம்மதியின்மைக்குக் காரணம் என்பதை அவர் கண்டறிந்தார்.


இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் காவராண்ட் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு சூட்சும
ஒலி அலைகளை ஆராய ஆரம்பித்தார். காதால் நாம் சாதாரணமாகக் கேட்க முடியாத ஒலி அலைகள்
மூலம் மனித உடலில் ஏற்படும் விளைவுகளை ஆராய ஒரு இன்ஃப்ரோசானிக இயந்திரத்தை அவர்
கண்டுபிடித்தார். அந்த இயந்திரம் ஏற்படுத்திய ஒலியைக் கேட்டவுடன் மிருகங்கள்
துடிதுடித்து இறந்தன! மின்னல் ஒளியால் மனித உடல் கருகுவது போல, இந்த ஒலி அலைகள்
பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் உடனடி மரணத்தை ஏற்படுத்தின!


சாதாரணமாக நாம் 20 ஹெர்ட்ஸுக்கும் கீழே உள்ள ஒலியையும் (இன்ஃப்ரோசானிக்) 20000 ஹெர்ட்ஸுக்கு
மேலே உள்ள (அல்ட்ராசோனிக்) அலைகளையும் கேட்க முடியாது. ஆனால் இவற்றிற்கு வலிமை
அதிகம்!


நாஸாவின் கண்டுபிடிப்பு

ஒலியியல் விஞ்ஞானம் வளரவே அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா அதில் முன்னேற்றம்
அடைந்து 20 டெசிபல் அளவிலான ஒலியை 14 மீட்டர் ஸ்டீல் ஹார்ன் மூலம் வெளிப்படுத்தினால் அந்த ஒலி கான்க்ரீட்டையே துளை போட்டு விடும் என்று கண்டுபிடித்து அறிவித்தது!


கலிபோர்னியாவில் ஒரு விஞ்ஞானி ஒரு வினாடிக்கு ஐந்து கோடி அதிர்வுகளைத் தரும் ஒலியை ஏற்படுத்தினார்.
அப்போது அங்கே இருந்த பஞ்சுப் பொதிகள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன. அங்கே இருந்த
விஞ்ஞானிகளின் உடையில் வெப்பம் அதிகரித்து, அவை எரிந்து விடும் அபாயமும்
ஏற்பட்டது.


மந்திரங்களைக் கண்ட மகரிஷிகள்

இந்த ஒலி நுட்ப விஞ்ஞானத்தில் நமது ரிஷிகள் மிகவும் முன்னேறி அதன் சூட்சும ஆற்றலையும்
அறிந்தனர். வானில் இருந்த சூட்சும ஒலிகளைக் கண்டதால் அவர்கள் மந்த்ர த்ருஷ்டா என
அழைக்கப்பட்டனர்.


எந்த ஒலியை எப்படி ஒலித்தால் என்னென்ன விளையும் என்பதை அவர்கள் நேர்முகமாகக் கண்டதால்
வேத மந்திரங்களை வகை வாரியாகத் தொகுத்து அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை
குரு சிஷ்ய பாரம்பரியம் மூலமாகக் கற்பித்தனர். தவறானவர்கள் கையில் இது சேரக்
கூடாது என்பதாலும் மந்திரங்களை பிரயோகிக்க குறிப்பிட்ட ஆன்மீக, உள, உடல் வலிமை
தேவை என்பதாலும் அவர்கள் இதை குரு குல மு
¨றையில் மட்டுமே கற்பித்தனர். மந்திரங்கள்
பலிக்க அவர்கள் 1) உச்சரிப்பு 2) நியமும் கட்டுப்பாடும் 3) உபகரணம் 4) நம்பிக்கை
ஆகிய நான்கையும் அடிப்படைத் தேவைகளாகக் குறிப்பிட்டனர்.


ஆனால் எதையும் ஆராய்ச்சி முறைக்கு உட்படுத்தும் நவீன விஞ்ஞானம் மந்திரங்களையும்
புலனுக்கு உட்பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதால் அந்த புலன் அளவுக்கு உட்பட்ட
பிரமிப்பூட்டும் உண்மைகளைக் கண்டறிய முடிந்தது.


காயத்ரி மந்திர மகிமை

அமெரிக்க விஞ்ஞானியான ஸ்ட்ராங்ளர் மந்திர ராஜம் எனப்படும் காயத்ரி மந்திரத்தை ஆராய்ந்தார்.
வினாடிக்கு இரண்டு லட்சம் அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்த மந்திரம் அபூர்வமானது. அது
ஒலிக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1600 மைல் தூரம் வரை சுற்றுப்புறத்தைத்
தூய்மைப்படுத்துகிறது!


க்ளாட்னியின் அடிப்படையில் பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்களுள் மிகவும் முக்கியமானவர் ஹான்ஸ் ஜென்னி.
மந்திரங்களின் மகிமையைப் பற்றிய இவரது கண்டுபிடிப்புகள் உலகினரை பிரமிப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றன. ஹிந்துக்கள் அனைவரும் பெருமை கொள்ளும் விதத்தில் மந்திரங்களைப் பற்றிய அரிய உண்மைகளை இவர் உலகினருக்கு அறிவித்தார்.


இதை அடுத்த இதழில் பார்ப்போம்.


(நன்றி : ஞான ஆலயம்)

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1589
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்

Post by அபிராமிவேலூ on Thu Oct 29, 2009 6:08 pm

ஒலிக்கு மகிமை உண்டா
அக்கா மிகவும் அருமையான கட்ட்டுரை அக்கா படிக்க படிக்க ஆச்சர்யமாகவும் அமானுஷ்யமாகவும் உள்ளது
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்

Post by nandhtiha on Thu Oct 29, 2009 6:14 pm

வணக்கம்
நான் ஒரு ஐயம் என்ற தலைப்பில் ஒரு வினா எழுப்பி இருந்தேன். அதன் தொடர்பாக இரு காணொளி தளத்தையும் கொடுத்திருந்தேன். யாரும் பார்த்ததாகத்தெரியவில்லை, அதனுடன் தொடர்புடையதால் இதைப் பதிவு செய்தேன். திரு நாகராசன் அவர்கள் விஞ்ஞானக் கட்டுரைகள் நிறைய எழுதுபவர், அவருக்குத் தான் இந்த்ப் பெருமை
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1589
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்

Post by அபிராமிவேலூ on Thu Oct 29, 2009 6:20 pm

திரு நாகராசன் அவர்கள்
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்

Post by nandhtiha on Thu Oct 29, 2009 6:28 pm

அன்புள்ள சகோதரி
வணக்கம்
முருகனுக்கு ஸ்கந்தன் (கந்தன்) என்ற ஒரு பெயர் உண்டல்லவா?
சிவஸ்தலங்களில் சோமாஸ்கந்த மூர்த்தம் என்ற ஒன்று உள்ளதைப் பார்த்திருக்கிறீர்களா? அதில் இறைவன் உமையம்மை நடுவில் ஸ்கந்த மூர்த்தியான முருகன் அமர்ந்திருப்பார். முருகனுக்கு அறுமுகங்க்ள் உள்ளன.ஸ்கந்தம் என்றால் சேர்ப்பது என்ற பொருள் உண்டு, அக்னிக்கு உள்ள தன்மாத்திரம் ரூபம், இவைகளை எல்லாம் குறிப்பாகக் கொண்டு ஏன் அணுவின் கூட்டமைப்பு அறுகோணமாக இருக்கிறது என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்களேன்
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1589
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்

Post by மீனு on Thu Oct 29, 2009 7:00 pm

கலிபோர்னியாவில் ஒரு விஞ்ஞானி ஒரு வினாடிக்கு ஐந்து கோடி அதிர்வுகளைத் தரும் ஒலியை ஏற்படுத்தினார்.
அப்போது அங்கே இருந்த பஞ்சுப் பொதிகள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன. அங்கே இருந்த
விஞ்ஞானிகளின் உடையில் வெப்பம் அதிகரித்து, அவை எரிந்து விடும் அபாயமும்
ஏற்பட்டது.


இங்கு அக்கா சொல்லி இருப்பவை புதிதாக உள்ளது அக்கா..நன்றிகள்
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்

Post by nandhtiha on Thu Oct 29, 2009 7:28 pm

//முருகனுக்கு ஸ்கந்தன் (கந்தன்) என்ற ஒரு பெயர் உண்டல்லவா?
சிவஸ்தலங்களில்
சோமாஸ்கந்த மூர்த்தம் என்ற ஒன்று உள்ளதைப் பார்த்திருக்கிறீர்களா? அதில்
இறைவன் உமையம்மை நடுவில் ஸ்கந்த மூர்த்தியான முருகன் அமர்ந்திருப்பார்.
முருகனுக்கு அறுமுகங்க்ள் உள்ளன.ஸ்கந்தம் என்றால் சேர்ப்பது என்ற பொருள்
உண்டு, அக்னிக்கு உள்ள தன்மாத்திரம் ரூபம், இவைகளை எல்லாம் குறிப்பாகக்
கொண்டு ஏன் அணுவின் கூட்டமைப்பு அறுகோணமாக இருக்கிறது என்று சற்றுச்
சிந்தித்துப் பாருங்களேன்//

இதைப் பற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்களேன்
அன்புடன்
ந்ந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1589
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்

Post by kirupairajah on Thu Oct 29, 2009 9:17 pm

காயத்திரி மந்திரத்தில் இத்தனை சிறப்பு இருக்கிறதா, அறிந்திருக்காத தகவல்,
சிறந்த பதிவு, நன்றி அக்கா!

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்

Post by nandhtiha on Thu Oct 29, 2009 9:55 pm

வணக்கம்
இளவல் திரு கிருபைராஜன்
நான் ஓர் ஐயம் என்ற தலைப்பில் ஒரு வினா எழுப்பி இருந்தேன், அதன் தொடர்பாக இதனைப் பதிவு செய்தேன், விவரமாக ஒரு தனி மடல் அனுப்புகிறேன், விரும்பினால் ஈகரையில் பதிவு செய்யலாம்
ஈகரையை திரு சிவா வருவதற்கு முன் தமிழ்க் களஞ்சியமாக் மட்டுமல்லாமல் கலைக் களஞ்சியமாகவும் மாற்ற ஆவல் கொண்டுள்ளேன்
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1589
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்

Post by தாமு on Sat Oct 31, 2009 7:02 pm

அருமையான பதிவு அக்கா வாழ்த்துக்கள்...
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்

Post by சரவணன் on Sun Feb 14, 2010 5:33 pm

காயத்ரி மந்திர மகிமை

அமெரிக்க விஞ்ஞானியான ஸ்ட்ராங்ளர் மந்திர ராஜம் எனப்படும் காயத்ரி மந்திரத்தை ஆராய்ந்தார்.
வினாடிக்கு இரண்டு லட்சம் அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்த மந்திரம் அபூர்வமானது. அது
ஒலிக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1600 மைல் தூரம் வரை சுற்றுப்புறத்தைத்
தூய்மைப்படுத்துகிறது!

-----------------------------------
தேடிக்கொண்டிருந்த கட்டுரை ,


வாழ்த்துகள்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம் காயத்ரி மந்திரம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum