ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

View previous topic View next topic Go down

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by சாமி on Sun Oct 06, 2013 6:25 am

சென்னையில் ராமலிங்க அடிகளார் வசித்த வீட்டுத் திண்ணை கழிப்பறையாக மாற்றப்பட்டிருப்பது வேதனையின் உச்சகட்டம் என்று சன்மார்க்க சங்க அன்பர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

ராமலிங்க அடிகளார்
வள்ளலார் ராமலிங்க அடிகள் பிறந்த நாளையொட்டி தி இந்து தமிழ் நாளிதழ் வெள்ளிக்கிழமை கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனைப் படித்த வாசகர் ஒருவர், ராமலிங்கர் வசித்த வீடு பற்றிய தகவலை 'தி இந்து' தமிழ் நாளிதழுக்கு பேக்ஸ் மூலம் அனுப்பியிருந்தார். அதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று சேகரித்த தகவல்கள்:

ஏழுகிணறில் வீடு
ராமலிங்க அடிகள் சென்னை பாரிமுனையை அடுத்துள்ள ஏழுகிணறு வீராசாமிப் பிள்ளை தெருவில் உள்ள 39-ம் நம்பர் வீட்டில் தனது 2-வது வயது முதல் 32-வது வயது வரை (கி.பி.1826 முதல் 1858 வரை) வசித்தார். இங்கு தனது 9-வது வயதில் முருகப்பெருமானை நினைத்து தவம் செய்தார்.

காட்சி கொடுத்த முருகப் பெருமான்
ஒருநாள், சுவரில் கண்ணாடியை மாட்டி, மலர் சாத்தி, தீபம் வைத்து அந்தக் கண்ணாடியில் உள்ள தீபத்தை நோக்கி தியானம் செய்து கொண்டிருந்தார் ராமலிங்கர். அப்போது அந்தக் கண்ணாடியில் முருகப் பெருமான் காட்சி கொடுத்தார் என்று அவரது வரலாறு கூறுகிறது.

ஆயிரக்கணக்கான பாடல்கள்
இந்த வீட்டின் மாடியில் இருந்துதான் ராமலிங்கர் ஆயிரக்கணக்கான திருவருட்பா பாடல்களை எழுதினார். இந்த வீட்டில்தான் அவருக்கும் தனகோடி அம்மைக்கும் திருமணம் நடைபெற்று, பல ஆண்டுகள் இல்லறம் நடத்தினார். கடைசி நாட்களில் இந்த வீட்டில்தான் ராமலிங்கரின் மனைவியும், பின்னர் அவரது தாயாரும் இறைவனடி சேர்ந்தனர்.

மகத்துவம் மிக்க திண்ணை
இந்த வீ்ட்டில் தெருவை ஒட்டி இரும்புக் கதவும், உள்ளே 39 என்ற பித்தளை எண்ணுடன் கூடிய ஒற்றை மரக்கதவும் உள்ளன. இந்த இரண்டு கதவுகளுக்கும் இடையே தெருவில் இருந்து உள்ளே நுழையும்போது வலது பக்கத்தில் ஒரு சிறிய திண்ணை இருந்தது.

ராமலிங்க அடிகளார், சிறுவனாய் இருந்தபோது, தினமும் திருவொற்றியூர் போய்விட்டு இரவு நேரம்கழித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால் மரக்கதவை தாழிட்டுவிட்டு, இரும்புக் கம்பி கதவை சாத்தி வைத்திருப்பார்கள். ராமலிங்கர் அந்த இரும்புக் கம்பி கதவைத் திறந்து அங்கிருந்த திண்ணையில் படுத்துத் தூங்குவார்.

ஒருநாள் இரவு பசியோடு வந்து திண்ணையில் படுத்து உறங்கியபோது உமாதேவியார் கிண்ணத்தில் அமுதோடு வந்து, ஒற்றியூர் போய் பசித்தணையோ என்று கேட்டு, உணவளித்தார் என்று திருவருட்பா சொல்கிறது.

மகத்துவம் வாய்ந்த அந்த திண்ணை இன்று கழிப்பிடமாக மாற்றப்பட்டிருப்பது வேதனையின் உச்சகட்டம் என்று சன்மார்க்க அன்பர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

கழிப்பறை அகற்றப்படுகிறது
இந்த வீட்டின் தற்போதைய உரிமையாளரான ஸ்ரீபதி கூறுகையில், எங்கள் தாத்தா 1936ம் ஆண்டு இந்த வீட்டை வாங்கினார். கடந்த 80 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.

எங்களுக்கு முன்பு இந்த வீட்டை வைத்திருந்தவர்கள் வலதுபுற திண்ணையை இடித்துவிட்டு அதில் கழிப்பறை கட்டியிருந்தனர்.

ராமலிங்க அடிகளார் இருந்த இடம் என்பதால் அந்த கழிப்பறையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இடதுபுறத்தில் உள்ள பெரிய திண்ணையைத்தான் ராமலிங்க அடிகளார் அதிகம் பயன்படுத்தினார். அந்த திண்ணை தற்போது தனி அறையாக உள்ளது' என்றார். - திஹிந்து
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2398
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by அசுரன் on Sun Oct 06, 2013 11:39 am

அந்த வீட்டை அரசாங்கம் நினைவு இல்லமாக மாற்றியிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by Muthumohamed on Sun Oct 06, 2013 4:30 pm

@அசுரன் wrote:அந்த வீட்டை அரசாங்கம் நினைவு இல்லமாக மாற்றியிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?
இப்ப வந்து விட்டதே என்ன செய்ய
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by ராஜா on Sun Oct 06, 2013 4:45 pm

இதிலென்ன இருக்கிறது.

இப்படி ஒவ்வொருவரும் தங்களின் முன்னோர்கள் வாழ்ந்த / பயன்படுத்தியது என்று அனைத்தையும் அப்படியே வைத்திருந்தால் நாடு என்னவாகும்.


ராமலிங்கடிகளார் இருக்கும் வரை மனதை தூய்மையாக்கும் வழியை சொல்லிக்கொடுத்தார் ,அவர் வாழ்ந்த இடத்தின் மூலம் மனிதனின் உடலை தூய்மையாக்கும் வழியை சொல்லிக்கொடுத்துவிட்டு போயிருக்கிறார் என்று நினைத்துக்கொள்ளவேண்டியது தான்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by Aathira on Sun Oct 06, 2013 4:47 pm

இந்த வீட்டில்தான் அவருக்கும் தனகோடி அம்மைக்கும் திருமணம் நடைபெற்று, பல ஆண்டுகள் இல்லறம் நடத்தினார்.
இராமலிங்கர் இல்லறம் நடத்தினாரா????!!!!


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by சிவா on Sun Oct 06, 2013 4:55 pm

@Aathira wrote:
இந்த வீட்டில்தான் அவருக்கும் தனகோடி அம்மைக்கும் திருமணம் நடைபெற்று, பல ஆண்டுகள் இல்லறம் நடத்தினார்.
இராமலிங்கர் இல்லறம் நடத்தினாரா????!!!!
உங்களுக்கு தெரியாதா? எனக்கும் தெரியாது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by ayyasamy ram on Sun Oct 06, 2013 4:56 pm

-
=
ஞானிகள் (சித்தர்கள்) அடக்கம் ஆன ஸதலங்களில்தான்
பெரும்பாலான கோயில்கள் அமைந்துள்ளன....
-
அவ்வாறே வள்ளலாரே வடலூரில் நிறுவிய சத்திய ஞான சபை
இன்றும் சீரும் சிறப்போடும் இயங்கி வருகிறது...
-
அவர் இளமையில் வாழ்ந்த வீட்டை எல்லாம் நினைவு
இல்லமாக மாற்றுவது தேவையில்லாத ஒன்று...
-
அப்படி செய்வது என்றால் தமிழ் நாட்டில் பல ஞானிகள்
வாழ்ந்துள்ளனர்...எல்லோருக்கும் நினைவு இல்லம்
பராமரிக்க இயலாது...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by Aathira on Sun Oct 06, 2013 4:57 pm

@சிவா wrote:
@Aathira wrote:
இந்த வீட்டில்தான் அவருக்கும் தனகோடி அம்மைக்கும் திருமணம் நடைபெற்று, பல ஆண்டுகள் இல்லறம் நடத்தினார்.
இராமலிங்கர் இல்லறம் நடத்தினாரா????!!!!
உங்களுக்கு தெரியாதா? எனக்கும் தெரியாது!
எழுதுவது எல்லாம் எழுத்தென்று ஆகிவிட்டது. என்ன செய்ய சிவா? இந்து நாளிதழுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by சிவா on Sun Oct 06, 2013 4:59 pm

@Aathira wrote:
@சிவா wrote:
@Aathira wrote:
இந்த வீட்டில்தான் அவருக்கும் தனகோடி அம்மைக்கும் திருமணம் நடைபெற்று, பல ஆண்டுகள் இல்லறம் நடத்தினார்.
இராமலிங்கர் இல்லறம் நடத்தினாரா????!!!!
உங்களுக்கு தெரியாதா? எனக்கும் தெரியாது!
எழுதுவது எல்லாம் எழுத்தென்று ஆகிவிட்டது. என்ன செய்ய சிவா? இந்து நாளிதழுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
இப்படித்தான் சிலரது வாழ்க்கை திரித்துக் கூறப்பட்டுவிடுகிறது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by ayyasamy ram on Sun Oct 06, 2013 5:12 pm

அவரது 27-வது வயதில் அக்காள் மகளை திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால் திருமண வாழ்க்கையில் ஆர்வம் இல்லாத அவர் ஆன்மிக பாதையில் மட்டும் நாட்டம் செலுத்தினார்
-
மேலும் படிக்க:
http://www.eegarai.net/t95056-topic
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by ayyasamy ram on Sun Oct 06, 2013 5:14 pm

வள்ளலார் அவர்கள் திருமணம் வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துக்கூறியும் சுற்றத்தாரால் மணம் புரிந்துக்கொண்டார். இதனை அவர் ஏதோ ஒரு முன்பிறவி வினைப்பயன் என்று எடுத்துக்கொண்டார். அதனை பின்வரும் பாடல்வரிகளில் கூறுவதை பாருங்கள்.
-
'புவிமேல் விட்டகுறை தொட்டகுறை இரண்டும் நிறைந்தனன்...' (3819)
-
ஆக, இத்திருமணம் என்பது வெறும் சடங்கு என்ற நிலையிலேயே முடிவுற்றது. மற்றபடி தன் மனைவியிடம் பெண் இன்பத்தை நுகர்ந்தாரில்லை. தனக்கு வாய்த்த மனைவியும் கலவியலில் ஈடுபாடு இல்லாத ஆன்மீக வாழ்க்கை வாழுகின்றவரையே அவர் தேர்ந்தெடுத்தார் அல்லது இயல்பாகவே அவ்வாறு அமைந்தது என்பதே உண்மையாக இருக்க முடியும்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by Aathira on Sun Oct 06, 2013 6:54 pm


உலகியல் பற்றற்று இருந்த வள்ளலார் உறவினர் வற்புறுத்தலுக்கு இணங்கி தமக்கை உண்ணாமுலை அம்மையாரின் மகள் தனம்மாளை தமது 27 வது அகவையில் திருமணம் செய்து கொண்டார். வள்ளலார் மண வாழ்க்கையில் இச்சையின்றி இருந்தமையால் இத்துணை காலம் நீட்டித்தது போலும் என்று அக்காலத்தில் 27 வயதுவரை திருமணம் புரியாது இருந்தமையைத் தவத்திரு ஊரனடிகள் கூறுவார்.12 வள்ளல்பெருமான் இந்தத் திருமணம் செய்தது கூட ஒருபுறம் உறவினர்களின் வற்புறுத்தல், மறுபுறம் சுந்தரரைத் தம்பிரான் தோழன் மணவினையின் போது வந்து ஆட்கொண்டமை போலத் தம்மையும் ஆட்கொள்ள மாட்டாரா என்னும் ஏக்கமாக இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. பின்வரும் அவர்தம் பாடலைப் படித்தால் அது நன்கு விளங்கும்.
”முன்மணத்தில் சுந்தரரை முன்வலுவில் கொண்டதுபோல்
என்மணத்தில் நீவந் திடாவிடினும் – நின்கணத்தில்
ஒன்றும் ஒருகணம்வந் துற்றழைக்கில் செய்ததன்றி
இன்றும் ஒருமணஞ் செய்வேன்”13

இல்லற வாழ்வை எண்ணும் போதெல்லாம் வருந்திய வள்ளல்பெருமான் மணம் புரிந்தாரே அன்றி இல்லற வாழ்வில் சற்றேனும் மனம் செலுத்தினாரில்லை. முதலிரவு அறையிலும் வள்ளல்பெருமான் தம் இல்லாள் தனக்கோடியம்மையார் அமர வைத்து விடிய விடிய திருவாசகத்தை ஓதினார். அறை முழுவதும் திருவாசக ஒளியே பரவியது. திருவாசக முற்றோதலே முதலிரவு முழுவதும் விடிய விடிய நிகழ்ந்தது. இதனால்
வள்ளலாரின் தேனிலவு திருவாசகத் தேனிலவு
என்று தவத்திரு ஊரனடிகள் இராமலிங்க அடிகள் வரலாறு’ என்னும் நூலில் பதிவு செய்துள்ளார். இதனை வள்ளல்பெருமானின் அகச்சான்றும்,
முனித்த வெவ்வினையோ நின்னருட் செயலோ
தெரிந்திலேன் மோகமே லின்றித்
தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள்
ஒருத்தியைக் கைதொடச் சார்ந்தேன்
குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக்
கலப்பிலேன் மற்றிது குறித்தே
பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன்
பகர்வதென் எந்தைநீ அறிவாய்”

என்று கூறுகிறது. இராமகிருஷ்ணர் – சாரதாதேவி, வள்ளுவர் – வாசுகி, வள்ளலார் – தனகோடியம்மையார் ஆகியோரின் திருமணங்கள் திருக்கோயில் திருக்கல்யாண உத்சவங்கள் போன்றவை. இவற்றையெல்லாம் இல்லறமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்னும் ஊரனடிகளாரின் என்ற கருத்தும் இவண் நோக்கத்தக்கது.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by சாமி on Sun Oct 06, 2013 6:57 pm

@Aathira wrote: வள்ளலார் – தனகோடியம்மையார் ஆகியோரின் திருமணங்கள் திருக்கோயில் திருக்கல்யாண உத்சவங்கள் போன்றவை. இவற்றையெல்லாம் இல்லறமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்னும் ஊரனடிகளாரின் என்ற கருத்தும் இவண் நோக்கத்தக்கது.
தாங்கள் கூறியது 100% உண்மை!
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2398
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by Aathira on Sun Oct 06, 2013 6:58 pm

@சாமி wrote:
@Aathira wrote: வள்ளலார் – தனகோடியம்மையார் ஆகியோரின் திருமணங்கள் திருக்கோயில் திருக்கல்யாண உத்சவங்கள் போன்றவை. இவற்றையெல்லாம் இல்லறமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்னும் ஊரனடிகளாரின் என்ற கருத்தும் இவண் நோக்கத்தக்கது.
தாங்கள் கூறியது 100% உண்மை!
நன்றி சாமி அவர்களே


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by Dr.S.Soundarapandian on Sun Oct 06, 2013 7:53 pm

சாமி அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம் ! அறச் சிந்தனைகள் வளர இதுபோன்ற இடங்கள்  நினைவிடங்களாக ஆக்கப்படவேண்டும் !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4616
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by அசுரன் on Sun Oct 06, 2013 7:56 pm

@Dr.S.Soundarapandian wrote:சாமி அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம் ! அறச் சிந்தனைகள் வளர இதுபோன்ற இடங்கள்  நினைவிடங்களாக ஆக்கப்படவேண்டும் !
சரியாக சொன்னீர்கள் ஐயா  
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum