ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி??
 sudhagaran

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...!
 பழ.முத்துராமலிங்கம்

வரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்..! மிஸ் பண்ணிடாதீங்க..!! இப்பவே ரெடியா இருங்க..!!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

புரட்டாசி மாத ராசி பலன்கள் !

View previous topic View next topic Go down

புரட்டாசி மாத ராசி பலன்கள் !

Post by krishnaamma on Tue Sep 10, 2013 7:56 pm

மேஷம்: கொள்கை கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காத நீங்கள் தனி மனித ஒழுக்கம் நிறைந்த வர்களாக இருப்பீர்கள். அசைக்க முடியாத தெய்வ பக்தி உங்களிடம் எப்போதும் உண்டு. சாதகமான வீடுகளில் சுக்கிரன் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப் பதால் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் வசதி, வாய்ப்புகள் உயரும். குலதெய்வக் கோயிலை புதுப்பிப்பீர்கள். 22ந் தேதி முதல் புதன் 7ம் வீட்டில் அமர்வதால் உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும்.

தொண்டை வலி, காது வலி குறையும். 7ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் நீசம் பெற்று நிற்பதால் வீண் குழப்பம், டென்ஷன், உள்மனதில் ஒருவித சோர்வு, சலிப்பு வந்து நீங்கும். 8ந் தேதி முதல் செவ்வாய் 5ம் வீட்டில் அமர்வதால் மனஇறுக்கம் குறையும். ஆரோக்யம் கூடும். 3ம் வீட்டிலேயே குரு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் கூடிக் கொண்டே போகும். பணப் பற்றாக்குறையும் வந்து நீங்கும். கண்டகச் சனி நடைபெற்று கொண்டி ருப்பதால் மற்றவர்களின் குடும்ப விவகாரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம். சாலை விதிகளை மதித்து நடந்து கொள்ளுங்கள்.

சின்னச் சின்ன அபராதங்கள் செலுத்த வேண்டியிருக்கும். ராசியிலேயே கேது நிற்பதால் உஷ்ணக் கட்டி வரும். காய்ச்சல், சளித் தொந்தரவும் வந்து நீங்கும். 7ம் வீட்டில் நிற்கும் ராகு கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தை உருவாக்க முயற்சிக்கும். எனவே, கணவன்- மனைவிக்குள் ஒளிவு மறைவில்லாமல் எல்லா விஷயங் களையும் பகிர்ந்து கொள்வது நல்லது. அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்க மாவீர்கள். சகாக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மாணவர்களே! விளையாட்டைக் குறையுங்கள். படிப்பில் தீவிரம் காட்டுங்கள். அறிவியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. கன்னிப் பெண்களே! உற்சாகமாக இருப்பீர்கள். உயர்கல்வியில் வெற்றி உண்டு.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தேங்கிக் கிடந்த பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். அதிரடிச் சலுகை திட்டங்கள் மூலமாக வருவாய் கூடும். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நன்றி மறந்த சக ஊழியர்களை நினைத்து கொஞ்சம் ஆதங்கப்படுவீர்கள். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளை பரப்புவார்கள். விவசாயிகளே! மகசூல் பெருகும். பூச்சித் தொல்லை குறையும். கலைத்துறையினரே! பிறமொழி வாய்ப்புகளால் பயனடைவீர்கள். போராட் டங்களை கடந்து புத்துயிர் பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

செப்டம்பர் 17, 18, 25, 26, 28 அக்டோபர் 4, 5, 6, 13, 14, 15, 16

சந்திராஷ்டம தினங்கள்:

அக்டோபர் 8ந் தேதி காலை 9.30 மணி முதல் 9 மற்றும் 10ந் தேதி மதியம் 1.30 மணி வரை வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும்.

பரிகாரம்:

சென்னை, பொன்னேரிக்கு அருகேயுள்ள ஆண்டார்குப்பம் தலத்தில் அருள்பாலிக்கும் முருகனை தரிசியுங்கள். விபத்தில் அடிபட்டவர்களுக்கு ரத்ததானம் செய்யுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

ரிஷபம்:

Post by krishnaamma on Tue Sep 10, 2013 7:57 pm

ரிஷபம்: தீவிரமாக யோசித்து மிதமாகச் செயல்படும் நீங்கள், பிறர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்துவதில் வல்லவர்கள். 2ந் தேதிவரை உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6ல் மறைந்து சனி, ராகு ஆகிய இரண்டு பாவ கிரகங்களுடன் சேர்ந்து நிற்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். கால்வலி, கழுத்து வலி, தொண்டை புகைச்சல் வந்துபோகும். சிலருக்கு மூலநோய் வரக்கூடும். 3ந் தேதி முதல் சுக்கிரன் 7ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் அலைச்சல் குறையும். நிம்மதியான தூக்கம் வரும். ஆரோக்யம், அழகு கூடும். மனஇறுக்கங்களிலிருந்தும் விடுபடுவீர்கள்.

உங்களின் தன-பூர்வ புண்யாதிபதியான புதன் 21ந் தேதிவரை சாதகமாக இருப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. ஆனால், 22ந் தேதி முதல் புதன் 6ம் வீட்டில் சென்று மறைவதால் பிள்ளைகளின் உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட கவலைகள் வந்து நீங்கும். ராஜ கிரகங்களான குருவும், சனியும் சாதகமாக இருப்பதால் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். 5ம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதால் பூர்வீக சொத்துப் பிரச்னை சம்பந்தமாக அவசரப்பட்டு நீதிமன்றம் செல்லாமல், பேசித் தீர்க்க முயற்சி செய்யுங்கள். பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. 6ம் வீட்டில் ராகு நிற்பதால் ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

அரசியல்வாதிகளே! கோஷ்டிப் பூசலில் சிக்க வேண்டாம். தலைமைக்கு நெருக்கமானவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. மாணவர்களே!
கணிதம், ஆங்கிலப் பாடங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். நல்லவர்களுடன் பழகுங்கள். கூடாநட்பை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். வகுப்பறையில் பின்வரிசையில் அமர வேண்டாம். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். பெற்றோரின் மனம் புண்படும்படி பேசாதீர்கள். காதல் விஷயத்தில் ஏமாற்றங்களும், கவலைகளும் வந்து நீங்கும். வேலை தாமதமாக கிடைக்கும்.

வியாபாரத்தில் அவசரப்பட்டு பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குதாரர்களால் பயனுண்டு. உத்யோகத்தில் செல்வாக்கு ஏற்படும். பெரிய பொறுப்புகள் உங்களை நம்பி ஒப்படைக்கப்படும். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகளும் கிட்டும். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்து ஏமாந்த இடமாற்றம் இப்போது வரும். கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகளால் உற்சாகமடைவீர்கள். ஆனால், கிசுகிசுத் தொல்லைகள் வந்துபோகும். விவசாயிகளே! பூச்சித் தொல்லை அதிகரிக்கும். பக்கத்து நிலத்துக்காரருடன் வாய்க்கால், வரப்பு தகராறு வந்து நீங்கும். யதார்த்தமான முடிவுகளால் எதிர்ப்புகளை முறியடித்து முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

செப்டம்பர் 18, 19, 20, 21, 29, 30, அக்டோபர் 1, 7, 8, 9, 15, 16, 17.

சந்திராஷ்டம தினங்கள்:

அக்டோபர் 10ந் தேதி மதியம் 1.30 மணி முதல் 11 மற்றும் 12ந் தேதி மதியம் 3 மணி வரை யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

பரிகாரம்:

வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அருகேயுள்ள திருப்புன்கூர் சிவாலயத்திலுள்ள நந்தியம்பெருமானை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

மிதுனம்

Post by krishnaamma on Tue Sep 10, 2013 7:58 pm

மிதுனம்: மற்றவரின் மன ஓட்டத்தை நாடி பிடித்துப் பார்ப்பதில் வல்லவர்களான நீங்கள் எங்கும், எதிலும் அழகுணர்வையே விரும்புவீர்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதியான சுக்கிரன் 2ந் தேதிவரை 5ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். 3ந் தேதி முதல் சுக்கிரன் 6ல் மறைவதால் பிள்ளைகளால் அலைச்சல்களும், அவர்களுடன் கருத்து மோதல்களும் வந்து நீங்கும். உங்கள் ராசிநாதனான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சூரியன் 4ம் வீட்டில் இருப்பதால் வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். குழப்பமான விஷயங்களில் தெளிவு பிறக்கும்.

5ம் வீட்டிலேயே ராகுவும், சனியும் நிற்பதால் திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சலும், செலவுகளும், ஆரோக்ய குறைவும் வந்துபோகும். சருமத்தில் கட்டி வந்தால் அலட்சியமாக இருக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பழங்கள், காய்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. ராசிக்குள்ளேயே குரு நிற்பதால் இனந்தெரியாத கவலைகளும், மனஇறுக்கங்களும், எதிர்காலம் பற்றிய பயமும் வந்து செல்லும். யாரைத்தான் நம்புவதோ என்ற குழப்பமும் வரும். அவ்வப்போது தூக்கம் குறையும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளே! உங்கள் புகழ் கூடும். தொகுதி மக்களின் மத்தியில் செல்வாக்கு உயரும்.

மாணவர்களே! படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டு, கலைப் போட்டிகளில் பரிசையும் பாராட்டையும் பெறுவீர்கள். மதிப்பெண் கூடும். கன்னிப் பெண்களே! வேலை கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேறுவீர்கள். அலர்ஜி, சளித் தொந்தரவு குறையும். நல்ல வரன் அமைய வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். மற்றவர்களை நம்பி இனி முதலீடுகள் செய்யக் கூடாது என்ற முடிவுக்கு வருவீர்கள். உங்களுக்கு அனுபவமுள்ள துறையில் நீங்கள் இறங்குவது நல்லது. விளம்பர யுக்திகளை கையாண்டு அதிக லாபம் ஈட்டுவீர்கள்.

பங்குதாரர்களின் பிரச்னை குறையும். வேலையாட்களும் உங்களை புரிந்து கொள்வார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதற்கான பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் வெற்றி பெறுவீர்கள். விவசாயிகளே! வற்றிய கிணறு சுரக்கும். புதிய சாகுபடி திட்டத்தில் சேர்ந்து மாற்றுப் பயிர்களால் ஆதாயமடைவீர்கள். சுற்றுப்புற சூழ்நிலையை உணர்ந்து செயல்பட வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்:

செப்டம்பர் 20, 21, 22, 23, 29, 30, அக்டோபர் 1, 2, 3, 9, 10, 11, 17.

சந்திராஷ்டம தினங்கள்:

செப்டம்பர் 17ந் தேதி காலை 10 மணி வரை மற்றும் அக்டோபர் 12 மதியம் 3 மணி முதல் 13 மற்றும் 14ந் தேதி மதியம் 5:45 வரை முன்யோசனையுடன் செயல்படப் பாருங்கள்.

பரிகாரம்:

தேனியிலிருந்து கம்பம் செல்லும் வழியிலுள்ள வீரபாண்டி மாரியம்மனை வழிபட்டு வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவிற்கு உதவுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

கடகம்

Post by krishnaamma on Tue Sep 10, 2013 7:58 pm

கடகம்: நிறை குறைகளை அலசி ஆராய்ந்து யாரையும் துல்லியமாக கணிக்கும் நீங்கள் மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்புக் கொடுப்பீர்கள். உங்களின் தனாதிபதியான சூரியன் 3ம் வீட்டில் நுழைந்திருப்பதால் இந்த மாதம் உங்களுக்கு பரபரப்பாக இருக்கும். திடீர் திருப்பங்கள் உண்டாகும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். உங்கள் ராசியிலேயே அமர்ந்து கொண்டு வேலைச்சுமையையும் தந்து கொண்டிருக்கும் செவ்வாய் 8ந் தேதி முதல் உங்கள் ராசியை விட்டு விலகுவதால் உடலில் உஷ்ணம் குறையும். கண் எரிச்சல் நீங்கும்.

முன்கோபமும் கொஞ்சம் குறையும். 12ம் வீட்டிலேயே குரு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தவிர்க்க முடியாத தர்மசங்கடமான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டியது வரும். யாருக்கும் ஜாமீன் கையொப்பமிட வேண்டாம். அரசியல்வாதிகளே! மேல்மட்டத்தில் மதிக்கப்படுவீர்கள். புதிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும். தொகுதி மக்களை மறந்து விடாதீர்கள். மாணவர்களே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விளையாடும்போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். தீய நண்பர்களை தவிர்த்து விடுங்கள். கன்னிப் பெண்களே! காதல் கனிந்து வரும்.

பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பள்ளி, கல்லூரி கால தோழியை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. புதிய வாடிக்கையாளர்களால் உற்சாகமடைவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை விரிவுபடுத்துவீர்கள். புது வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். ஆனாலும், 4ல் சனியும், ராகுவும் நிற்பதால் வேலையாட்களால் வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அனுபவமிக்க வேலையாட்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். கட்டிட உதிரி பாகங்கள், உணவு வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி உழைத்தாலும் அங்கீகாரமோ, ஆறுதலான வார்த்தையோ இல்லையே என ஆதங்கப்படுவீர்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வரும். கலைத்துறையினரே! உங்களின் கலைத்திறன் வளரும். பழைய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை குறையும். நவீன உரங்களைப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். தன்னம்பிக்கையாலும், தளராத உழைப்பாலும் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

செப்டம்பர் 22, 23, 24, 25, 26, அக்டோபர் 3, 4, 5, 6, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்:

செப்டம்பர் 17ந் தேதி காலை 10 மணி முதல் 18, 19ந் தேதி மதியம் 2 மணி வரை மற்றும் அக்டோபர் 14ந் தேதி மாலை 5:45 முதல் 15, 16ந் தேதி இரவு 9:30 மணி வரை கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.

பரிகாரம்:

விருத்தாசலத்திற்கு அருகேயுள்ள ஸ்ரீமுஷ்ணம் தலத்தில் அருளும் வராக மூர்த்தியை தரிசித்து வணங்கி வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

சிம்மம்

Post by krishnaamma on Tue Sep 10, 2013 7:59 pm

சிம்மம்: புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதுபோல் தன்மான சிங்கங்களாய் விளங்கும் நீங்கள் அனாவசியமாக யாருக்கும் தலை வணங்க மாட்டீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியான குரு லாப வீட்டில் அமர்ந்திருப்பதுடன் தன் நட்சத்திரத்திலேயே செல்வதால் மனநிம்மதி கிடைக்கும். யோகாதிபதி செவ்வாய் 12ல் மறைந்திருப்பதால் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். 8ந் தேதி முதல் செவ்வாய் உங்கள் ராசிக்குள் நுழைவதால் அது முதல் தைரியம் கூடும். தடைகள் நீங்கும். பெற்றோரின் உடல்நிலை சீராகும். ராசிநாதனான சூரியன் 2ல் நிற்பதால் கண்வலி, பல்வலி வந்துபோகும். யதார்த்தமாகப் பேசி சிக்கிக் கொள்வீர்கள்.

புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு உண்டு. பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு கட்டும் பணியில் இருந்த தேக்கநிலை மாறும். பண உதவியும் கிடைக்கும். சனியும், ராகுவும் சாதகமாக இருப்பதால் புது வாகனம் அமையும். மனைவி வழியில் உதவிகள் உண்டு என்றாலும் மனைவிக்கு முதுகு, மூட்டுவலி வந்து நீங்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். வேற்று மதம், மொழியினரால் பயனடைவீர்கள். அரசியல்வாதிகளே! அநாவசியமாக யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம்.

அதை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். மாணவர்களே! பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். பெற்றோர் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். கன்னிப் பெண்களே! கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வேலையாட்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி அன்பாக திருத்துங்கள். ரியல் எஸ்டேட், ஸ்டேஷனரி வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.

உத்யோகத்தில் உங்களுடைய தொலைநோக்குச் சிந்தனைக்கு பாராட்டுகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். விவசாயிகளே! எதிர்பார்த்த பட்டா வந்து சேரும். புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சாதூர்யமான பேச்சால் சாதித்துக் காட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்:

செப்டம்பர் 17, 18, 25, 26, 27, 28, அக்டோபர் 4, 5, 6, 7, 13, 14, 15.

சந்திராஷ்டம தினங்கள்:

செப்டம்பர் 19ந் தேதி மதியம் 2 மணி முதல் 20, 21ந் தேதி இரவு 8 மணி வரை மற்றும் அக்டோபர் 16ந் தேதி இரவு 9:30 முதல் 17 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும்.

பரிகாரம்:

கும்பகோணம் - மயிலாடுதுறை பாதையில் ஆடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள திருமாந்துறை ஏழுலோக நாயகியை தரிசித்து வாருங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று முடிந்த உதவியைச் செய்யுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

கன்னி

Post by krishnaamma on Tue Sep 10, 2013 7:59 pm

கன்னி: தன்னலமின்றி பொது நலத்துடன் சிந்தித்து செயல்படுவதில் வல்லவர்களான நீங்கள் சில சமயங்களில் புரட்சிகரமாகவும், புதுமையாகவும் சிந்திப்பீர்கள். உங்கள் ராசிநாதனான புதனும், பிரபல யோகாதிபதியுமான சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் தொட்டது துலங்கும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். 7ந் தேதி வரை செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். வழக்கு சாதகமாகும். ஆனால், 8ந் தேதி முதல் செவ்வாய் 12ல் மறைவதால் சகோதர வகையில் அலைச்சல், செலவு, டென்ஷன் வந்துபோகும்.

வீடு மனை வாங்கும்போது தாய்பத்திரத்தை சரிபார்த்துக் கொள்ளுங்கள். ராசிக்குள் சூரியன் நிற்பதால் முன்கோபம், கண் எரிச்சல், அடி வயிற்றில் வலி வந்துபோகும். அரசுக் காரியங்கள் தாமதமாக முடியும். திடீர் பயணங்களாலும், செலவுகளாலும் திணறுவீர்கள். பாதச்சனி நடைபெறுவதால் முக்கிய விஷயங்களை இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. மற்றவர்கள் விஷயத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்காதீர்கள். 2ல் ராகுவும், 8ல் கேதுவும் நீடிப்பதால் வீட்டில் களவு நிகழ வாய்ப்பிருக்கிறது.

சிலர் உங்கள் வாயைக் கிளறி வம்புக்கு இழுப்பார்கள். நீங்கள் பொறுமையாக இருப்பது நல்லது. குடும்பத்துடன் வெளியூருக்குச் செல்வதாக இருந்தால் தங்க ஆபரணங்கள் மற்றும் ரொக்கங்களை பத்திரப்படுத்தி விட்டுச் செல்வது நல்லது. அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடம் நெருங்கிப் பழகுங்கள். உட்கட்சி பூசல் வெடிக்கும். மாணவர்களே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். பயணங்களின்போது பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணிக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! உங்களுக்கு இருந்து வந்த மன இறுக்கம் நீங்கும். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். எலக்ட்ரிக்கல், கன்ஸ்ட்ரக்ஷன், உணவு வகைகளில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் ஓய்வின்றி உழைக்க வேண்டியது வரும். நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் நற்பெயர் கிடைக்காது சின்னச் சின்ன குறைகளை நேரடி அதிகாரி சுட்டிக் காட்டிக் கொண்டேயிருப்பார். 10ல் குரு நிற்பதால் வேலையை விட்டு விடலாமா என்று நினைப்பீர்கள். சிறுசிறு அவமானங்களும் வந்து நீங்கும். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். விவசாயிகளே! அயராத உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். வீம்பை விட்டு விட்டு காரியத்தில் கவனம் செலுத்த வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்:

செப்டம்பர் 18, 19, 20, 28, 29, 30 அக்டோபர் 1, 2, 7, 11, 15, 17

சந்திராஷ்டம தினங்கள்:

செப்டம்பர் 21-ந் தேதி இரவு 8 மணி முதல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் முன்கோபத்தால் பகை உண்டாகும்.

பரிகாரம்:

வேலூர், திருவண்ணாமலைக்கு அருகேயுள்ள படவேடு ரேணுகாம்பாளை தரிசியுங்கள். அன்னதானம் செய்யுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

துலாம்

Post by krishnaamma on Tue Sep 10, 2013 8:00 pm

துலாம்: காலநேரம் பார்க்காமல் கடமையில் கண்ணாக இருந்து கடினமாக உழைக்கும் நீங்கள், மனசாட்சிக்கு மரியாதை தருவீர்கள். 3ந் தேதி முதல் உங்கள் ராசிநாதனான சுக்கிரன் சனி, ராகுவை விட்டு விலகுவதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சோர்வு, களைப்பு நீங்கும். மருத்துவச் செலவுகள் குறையும். கணவன்-மனைவிக்குள்ளிருந்த மனக் கசப்புகள் குறையும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். யோகாதிபதியான புதன் சாதகமாக இருப்பதால் ஏழரைச் சனியால் ஏற்படும் திடீர் செலவுகள், தவிர்க்க முடியாத செலவுகள் மற்றும் தர்ம சங்கடமான சூழ்நிலைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும்.

பாதகாதிபதியான சூரியன் 12ல் மறைந்ததால் எதிர்ப்புகள் குறையும். ஆனால், இனந்தெரியாத மனக் கலக்கங்களும், எதிர்காலம் பற்றிய கவலைகளும் வந்துபோகும். ஜென்மச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அவ்வப்போது சலிப்பு, சோர்வு, சளித் தொந்தரவு, காய்ச்சல் வந்து நீங்கும். 8ந் தேதி முதல் செவ்வாய் லாப வீட்டில் அமர்வதால் மனைவியின் உடல்நிலை சீராகும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரைகுறையாக இருந்த வீடு கட்டும் வேலை துரிதமாகும். ரசனைக்கேற்ப வீட்டு மனையும் அமையும்.

அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். மாணவர்களே! கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். அவ்வப்போது விடைகளை எழுதிப் பாருங்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். கன்னிப் பெண்களே! வேற்றுமதத்தைச் சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள்.குரு 9ல் தொடர்வதால். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். புது யுக்திகளை கையாளுவீர்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உணவு, ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.

இடவசதியின்றி தவித்துக் கொண்டிருந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்தபடி இடமாற்றம் உண்டு. சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். சம்பளம் உயரும். புது அதிகாரி உங்களை மதிப்பார். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த சக ஊழியர்களும் உங்களுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்குவார்கள். கலைத்துறையினரே! உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விவசாயிகளே! குறுகிய காலப் பயிர்களை தவிர்த்து விடுங்கள். கரும்பு, சவுக்கு, தேக்கு வகைகளால் லாபமடைவீர்கள். விட்டுக் கொடுத்து இலக்கை எட்டிப் பிடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

செப்டம்பர் 20, 21, 22, 29, 30, அக்டோபர் 1, 2, 9, 10, 11, 15, 17.

சந்திராஷ்டம தினங்கள்:

செப்டம்பர் 24, 25 மற்றும் 26ந் தேதி மதியம் 2:45 வரை தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள்.

பரிகாரம்:

சென்னை-திருவல்லிக்கேணியில் அருள்பாலிக்கும் பார்த்தசாரதிப் பெருமாளை தரிசித்து வாருங்கள். கோயில் உழவாரப் பணியை மேற்கொள்ளுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

விருச்சிகம்

Post by krishnaamma on Tue Sep 10, 2013 8:01 pm

விருச்சிகம்: யாரையும் யாரும் மாற்ற முடியாது என்பதை அறிந்த நீங்கள், சுற்றுச் சூழலை அறிந்து பேசுவதில் வல்லவர்கள். நீசமாகி பலவீனமாக இருக்கும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 8ந் தேதி முதல் பத்தாம் வீட்டில் கேந்திர பலம் பெற்று அமர்வதால் அதுமுதல் சுறுசுறுப்பாவீர்கள். தடைகள் நீங்கும். உங்கள் பிரபல யோகாதிபதியான சூரியன் லாப வீட்டில் நிற்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். புது வேலை அமையும். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் திடீர் பணவரவு உண்டு.

உறவினர், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். மனைவி உங்களின் புது முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். கல்யாணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். சமையலறையை நவீனமாக்குவீர்கள். குரு 8ல் மறைந்து நிற்பதால் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.

வெளிவட்டாரத்தில் அவசரப்பட்டு யாரையும் விமர்சிக்க வேண்டாம். ராகுவும், சனியும் 12ல் நீடிப்பதால் பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.
தூக்கமில்லாமல் போகும். அவ்வப்போது புலம்புவீர்கள். அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடையே புகழடைவீர்கள். தலைமைக்கும் நெருக்கமாவீர்கள். மாணவர்களே! மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியரின் பாராட்டு கிட்டும். கன்னிப் பெண்களே! காதல் குழப்பங்கள் தீரும். புதிய நண்பர்களின்
நட்பால் மகிழ்ச்சியடைவீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள்.

பங்குதாரர்களுடன் இருந்த குழப்பங்கள் நீங்கும். வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடிப்பார்கள். பூ, ஸ்டேஷனரி, மர வகைகளால் லாபமடைவீர்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு புது முதலீடுகள் செய்ய வேண்டாம். அனுபவமில்லாத தொழிலில் பணம் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். சூரியன் லாப வீட்டில் நிற்பதால் உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. மூத்த அதிகாரி நெருக்கமாவார். இடமாற்றம் சாதகமாக அமையும். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினரே! உங்கள் படைப்புகள் பலராலும் பாராட்டிப் பேசப்படும். விவசாயிகளே! மரப்பயிர் மற்றும் கரும்புப் பயிரால் ஆதாயம் கூடும். செல்லும் இடமெல்லாம் சிறப்பு பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

செப்டம்பர் 22, 23, 24, 25, அக்டோபர் 2, 3, 4, 5, 11, 12, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்:

செப்டம்பர் 26ந் தேதி மதியம் 2.45 முதல் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:

செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில் பாதையில் அமைந்துள்ள திருமால்பூர் தலத்தில் அருள்பாலிக்கும் மணிகண்டேஸ்வரரை தரிசித்து வாருங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

தனுசு

Post by krishnaamma on Tue Sep 10, 2013 8:01 pm

தனுசு: இடம் பொருள் ஏவல் தெரிந்து, இனிமையாகப் பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்களான நீங்கள் எதிரியானாலும் உதவும் குணமுடையவர்கள். உங்கள் ராசிநாதனான குரு உங்களை பார்த்துக் கொண்டேயிருப்பதால் அழகும் இளமையும் கூடும். தைரியமாக சவால்களை ஏற்றுக் கொள்வீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் 7ந் தேதி வரை 8ல் மறைந்திருப்பதால் பிள்ளைகளால் பிரச்னைகள் வரும். 8ந் தேதி முதல் செவ்வாய் வலுவடைவதால் பிள்ளைகளின் உத்யோகம், திருமண முயற்சிகள் பலிதமாகும்.

உங்களின் பிரபல யோகாதிபதியான சூரியன் 10ல் நிற்பதால் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். தந்தையார் உதவுவார். பாகப் பிரிவினை சுமுகமாக முடிவடையும். வழக்கில் வெற்றி பெறுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். எதிர்பார்த்த பட்ஜெட்டில் வீடு, மனை அமையும். சிலர் நகரத்தை நோக்கி இடம் பெயர்வீர்கள். புதன் சாதகமாகச் செல்வதால் மனைவிக்கு வேலை கிடைக்கும். மனைவிவழி உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். சனியும், ராகுவும் லாப வீட்டில் வலுவாக தொடர்வதால் வேற்று மதத்தவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். கடந்தகால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளே! மாநில அளவில் பெரிய பதவிகள் கிட்டும். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள். மாணவர்களே! நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். ஹிந்தி, கன்னட மொழியினரால் லாபம் கூடும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய பாக்கிகளை இதமாகப் பேசி வசூலிப்பீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள்.

இரும்பு, ஸ்டேஷனரி, அழகு சாதனப் பொருட்களால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொல்லை தந்த மூத்த அதிகாரி மாற்றப்படுவார். புது வேலையும் சிலருக்கு கிடைக்கும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். இடமாற்றம் சாதகமாக இருக்கும். கலைத்துறையினரே! வருமானம் உயர வழி பிறக்கும். அரசால் ஆதாயமடைவீர்கள். விவசாயிகளே! பக்கத்து இடத்தையும் வாங்கும் அளவிற்கு மகசூல் பெருகும். கடன் உதவி கிடைக்கும். ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். முற்பகுதி முள்ளாக இருந்தாலும் பிற்பகுதி மலராகும் மாதமிது.

ராசியான தேதிகள்:

செப்டம்பர் 17, 18, 19, 25, 26, 27 அக்டோபர் 4, 5, 6, 7, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்:

செப்டம்பர் 29, 30 மற்றும் அக்டோபர் 1ந் தேதி மதியம் 1.45 மணி வரை யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.

பரிகாரம்:

திருவண்ணாமலைக்கு அருகேயுள்ள கலசப்பாக்கத்தில் அருளும் திருமாமுடீஸ்வரரை தரிசித்து வாருங்கள். வயதானவர்களுக்கு குடையையும், காலணிகளையும் வாங்கிக் கொடுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

மகரம்

Post by krishnaamma on Tue Sep 10, 2013 8:02 pm

மகரம்: விடாமுயற்சியுடன் உழைத்து புகழின் உச்சிக்கே சென்றாலும் பழைய நினைவுகளை மறக்காத நீங்கள் உங்களை நாடி வருபவர்களை உயர்த்தி விடுவீர்கள். குருவும், செவ்வாயும் சாதகமாக இல்லாததால் அடுத்தடுத்த செலவுகளாலும், அலைச்சல்களாலும் திணறுவீர்கள். எதிர்பார்க்கும் வகையில் பணம் தாமதமாக வரும். உங்களின் யோகாதிபதியான சுக்கிரன் வலுவான வீடுகளில் செல்வதால் பணப்பற்றாக்குறையை சமாளிக்கும் அளவிற்கு வருவாய் உயரும். உங்கள் பாக்யாதிபதியான புதன் வலுவான வீடுகளில் செல்வதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வெளிநாட்டிற்குச் செல்ல விசா கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள்.

வேற்று மதத்தவர்கள், அண்டை மாநிலத்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். 9ல் சூரியன் நிற்பதால் தந்தையாருக்கு மூச்சுத் திணறல், மூட்டு வலி வந்துபோகும். அரசாங்க விஷயம் தள்ளிப்போய் முடியும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். உங்கள் ராசிநாதனான சனிபகவான் ராகுவுடன் கிரக யுத்தம் செய்து கொண்டிருப்பதால் அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்துபோகும். எதிர்காலம் குறித்த கவலைகளும் வரும். மற்றவர்களுக்காக கேரண்டர் கையெழுத்திடாதீர்கள். மலச்சிக்கல் வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்க்கட்சியினர் மீது குற்றம் சாட்ட வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள்.

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த தோழியை சந்திப்பீர்கள். மாணவர்களே! டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பது, பாட்டு கேட்டுக் கொண்டே எழுதுவது, படுத்துக் கொண்டே படிப்பதெல்லாம் இனி வேண்டாம். பொறுப்பாக படியுங்கள். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். புது வாடிக்கையாளர்களால் உற்சாகமடைவீர்கள். கம்ப்யூட்டர், செல்போன், கட்டிட உதிரி பாகங்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும்.

உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளுடன் இருந்த மோதல்கள் தீரும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். வேலைச்சுமை குறையும். வேறு துறைக்கு மாற்றப்படுவீர்கள். கலைத்துறையினரே! புதுமை யாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். விவசாயிகளே! எலி, பூச்சித் தொல்லையை கட்டுப்படுத்துங்கள். வாய்க்கால், வரப்புச் சண்டைக்கு தீர்வு காண்பீர்கள். உணர்ச்சி வசப்படாமல் உள்மனசு சொல்வதை உள்வாங்கி செயல்பட வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்:

செப்டம்பர் 20, 21, 23, 27, 28, 29, 30 அக்டோபர் 7, 8, 9, 10, 17.

சந்திராஷ்டம தினங்கள்:

அக்டோபர் 1ந் தேதி மதியம் 1:45 மணி முதல் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சாலைகளை கடக்கும்போது கவனம் தேவை.

பரிகாரம்:

மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள குத்தாலத்தில் அருள்பாலிக்கும் சொன்னவாரறிவார் எனும் திருப்பெயரோடு அருள்பாலிக்கும் ஈசனை வணங்கி வாருங்கள். சாலைப் பணியாளர்களுக்கு உதவுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

கும்பம்

Post by krishnaamma on Tue Sep 10, 2013 8:03 pm

கும்பம்: சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் மற்றவர்கள் நேர்மை தவறி நடப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டீர்கள். உங்கள் ராசிநாதனான சனிபகவான் ராகுவுடன் நிற்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், பணப் பற்றாக்குறையும் வந்துபோகும். குருவும், செவ்வாயும் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் அமைதி திரும்பும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகமாகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்துவீர்கள்.

படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டிலும் வெற்றி பெற உதவுவீர்கள். மகனுக்கு அயல் நாட்டில் வேலை கிடைக்கும். உயர்கல்விக்காகவும் அனுப்பி வைப்பீர்கள். உங்கள் சுக-பாக்யாதிபதியான சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெற்றோரின் உடல் நிலை சீராகும். சூரியன் இந்த மாதம் முழுக்க 8ல் மறைந்து நிற்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அடி வயிற்றில் வலி வந்து நீங்கும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும்.

அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். கேதுபகவான் 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் மனோபலம் கூடும். புது முயற்சிகள் பலிதமாகும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். அரசியல்வாதிகளே! தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பெற்றோரின் அரவணைப்பு
அதிகரிக்கும். மாணவர்களே! விளையாட்டு, பேச்சுப் போட்டிகளிலும் பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள்.

உங்களுடன் போட்டி, பொறாமையுடன் பழகிய சில மாணவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப கடையை விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். ரியல் எஸ்டேட், கண்ஸ்ட்ரக்ஷன், எரி பொருள் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் வளைந்து வருவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரே! மலையாளம், ஹிந்தி மொழியினரால் ஆதாயம் உண்டு. விவசாயிகளே! விளைச்சல் இரட்டிப்பாகும். புது இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். நெல், மஞ்சள், கிழங்கு வகைகளால் லாபமடைவீர்கள். இடைவிடாத முயற்சியால் சாதித்துக் காட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்:

செப்டம்பர் 20, 21, 22, 23, 29, 30 அக்டோபர் 1, 2, 9, 10, 11, 13, 17

சந்திராஷ்டம தினங்கள்:

அக்டோபர் 4, 5 ஆகிய தேதிகளில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

பரிகாரம்:

திருநெல்வேலிக்கு அருகேயுள்ள ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதரையும், உற்சவர் கள்ளபிரானையும் தரிசியுங்கள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

மீனம்

Post by krishnaamma on Tue Sep 10, 2013 8:04 pm

மீனம்: கடல்போல் விரிந்த மனசும், கலகலப்பாக பேசும் குணமும் உடைய நீங்கள் மனசாட்சிக்குட்பட்டு செயல்படுவீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். பணவரவு அதிகரிக்கும். 7ந் தேதி வரை 5ல் செவ்வாய் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். 8ந் தேதி முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கடனாகவும், கைமாற்றாகவும் வாங்கியிருந்த பணத்தில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வழக்கிலும் வெற்றி கிடைக்கும். சூரியன் 7ல் நிற்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கண் எரிச்சல், தொண்டை புகைச்சல் வந்துபோகும்.

புதன் சாதகமாக இருப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். 4ல் குரு நீடிப்பதால் அடுத்தடுத்து வேலைச்சுமை அதிகரிக்கும். அஷ்டமத்தில் சனி நிற்பதுடன் ராகுவும் தொடர்வதால் கனவுத் தொல்லை, மனஇறுக்கம் வந்து நீங்கும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது. உங்களின் பலவீனம், பலம் எது என்பது உங்களுக்கே தெரிய வரும். யாரையும், யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். அக்கம்-பக்கம் வீட்டாருடன் சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே!

வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. தலைமையால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களை புரிந்து கொள்வார்கள். உயர்கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். மாணவர்களே! கல்யாணம், காது குத்து என்று விடுப்பு எடுக்காமல் படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைபடுத்துவீர்கள். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். ஏற்றுமதி-இறக்குமதி, மர வகைகளால் அதிக ஆதாயமடைவீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்திகளை கையாளுவீர்கள். பங்குதாரர்கள் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள்.

உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். அலுவலக சூட்சுமங்கள் அத்துபடியாகும். ஆனால், அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் அலைச்சல், வேலைச்சுமை, இடமாற்றங்கள் இருக்கும். சக ஊழியர்கள் உங்களைப்பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! விளைச்சலைப் பெருக்க வேண்டுமே என்று கவலைப்படுவீர்கள். பக்கத்து நிலக்காரருடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். பொறுத்திருந்து செயல்பட வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்:

செப்டம்பர் 22, 23, 25, 27, அக்டோபர் 2, 3, 4, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்:

அக்டோபர் 6, 7 மற்றும் 8ந் தேதி காலை 9:30 மணி வரை வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:

திருச்சி - முசிறி பாதையிலுள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை தரிசித்து வணங்கி வாருங்கள். ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55631
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: புரட்டாசி மாத ராசி பலன்கள் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum