ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

The Conjuring - மாஸ்டர் பீஸ் என்பதெல்லாம் சுத்தப் பொய்!

View previous topic View next topic Go down

The Conjuring - மாஸ்டர் பீஸ் என்பதெல்லாம் சுத்தப் பொய்!

Post by சிவா on Sat Sep 07, 2013 6:46 pmசமீபத்தில் சென்னையில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிய ஹாரர் படம் The Conjuring வட அமெரிக்காவில் வெளியான முதல் வார இறுதியில் 41 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது. அங்கு மட்டும் இதுவரை இப்படம் 133 மில்லியன் டாலர்களை கடந்திருக்கிறது. ஆகஸ்ட் 25 வரை இதன் உலகளாவிய வசூல் 220 மில்லியன் அமொpக்க டாலர்கள்.

ஏறக்குறைய அனைத்து விமர்சகர்களும் படத்தை பாராட்டியிருக்கிறார்கள். இயக்குனர் ஜேம்ஸ் வானின் மாஸ்டர் பீஸ் என்று வர்ணித்திருக்கிறார்கள் சிலர். படத்தைப் பார்த்த பிறகு, படத்தின் அபரிமிதமான பிரபல்யத்துக்கும், வசூலுக்கும் காரணமாக சில விஷயங்கள் பட்டன.

படத்தின் கதை நடப்பது 1971 ல். ரோஜர், கரோலின் தம்பதியினர் தங்களின் ஐந்து பெண் குழந்தைகளுடன் ஹாரிஸ்வில்லியில் உள்ள பழமைவாய்ந்த ஃபார்ம் ஹவுஸுக்கு குடியேறுகிறார்கள். அங்கிருந்து கதை ஆரம்பிக்கிறது.

1971 என்பதற்குப் பதில் நிகழ்காலத்தை காட்டியிருந்தால் இப்படம் பார்வையாளர்களின் கவனத்தை அவ்வளவாக ஈர்த்திருக்க வாய்ப்பில்லை.

காலகட்டத்தை பிரதிபலிக்கும், வர்ணங்கள் துலங்காத மக்கிப் போனதைப் போன்ற கலர்டோன் காட்சிகளுக்கு கூடுதல் அழுத்தம் தருகிறது.

மூன்றாவதாக பயத்தை தூண்டும் கச்சிதமான இசை.

படத்தின் கதை நாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்தது. ஃபார்ம் ஹவுஸுக்கு குடியேறிய முதல்நாள் அவர்களின் நாய் வீட்டிற்குள் நுழைய மறுக்கிறது. வீட்டில் மறைவான நிலவறை ஒன்று இருப்பதை கண்டு பிடிக்கிறார்கள். மறுநாள் காலை தனது உடம்பில் காயம் ஏற்பட்டிருப்பதை கரோலின் பார்க்கிறாள். அவர்களின் நாய் வீட்டிற்கு வெளியே இறந்து கிடக்கிறது. கடிகாரங்கள் நள்ளிரவு 3 மணி தாண்டியதும் ஒரே நேரத்தில் நின்று போயிருக்கின்றன.

இதையடுத்து வரும் காட்சிகள் பேய்ப்பட ரசிகர்களால் எளிதில் யூகிக்கக் கூடியவை. மேலும், த ஆர்பனேஜ் படத்தின் காட்சிகளை பெரிதும் ஒத்திருப்பதையும் பார்க்கலாம். த ஆர்பனேஜ் படத்தில் வரும் ஒளிந்து விளையாடும் விளையாட்டு இதிலும் வருகிறது. அந்தப் படத்தில் சிறுவனுடன் இறந்து போன குழந்தைகள் விளையாடுவது போல இதிலும் ஒரு குழந்தையுடன் பேய் விளையாடுகிறது. மீடியமாக செயல்படும் வயதான பெண்மணியின் உதவியுடன் பேய்களின் நடமாட்டத்தை அறிந்து கொள்வது போல் இதிலும் வருகிறது. எந்த வித்தியாசமும் இல்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: The Conjuring - மாஸ்டர் பீஸ் என்பதெல்லாம் சுத்தப் பொய்!

Post by சிவா on Sat Sep 07, 2013 6:47 pm


இந்தப் படத்தை இயக்கியிருக்கும் ஜேம்ஸ் வான் மலேஷியாவை சேர்ந்தவர். 2004 ல் தனது 27 வது வயதில் இவர் இயக்கிய ஸா (Saw) ) திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள ஹாரர் ப்ரியர்களை ஒட்டு மொத்தமாக கவர்ந்தது. ஹாரர் படங்களை இயக்கிய அனுபவத்தில் பழகிய பேய் கதையை வைத்து கச்சிதமான ஒரு படத்தை தந்திருக்கிறhர். மாஸ்டர் பீஸ் என்பதெல்லாம் சும்மா.

பேய் படங்களில் லாஜிக் பார்க்க வேண்டிய தேவையில்லை. காற்று திடீரென்று வீசுவது, கதவு படீரென அடைப்பது, ஆட்களை பேய் அந்தரத்தில் நிற்க வைப்பது... எதற்கும் விளக்கம் தர தேவையில்லை. நல்ல இசையின் மூலம் இந்த பேய் வித்தகளை வைத்து யாரையும் பயமுறுத்திவிடலாம். ஆனால் ஒரு பேய் படத்தை கிளாஸிக் தரத்தில் உணர்த்துவது அப்படத்தில் வரும் யூகிக்க முடியாத ட்விஸ்ட். அது இந்தப் படத்தில் இல்லை.

சிக்ஸ்த் சென்ஸ் படத்தில் இறந்து போனவர்களை பார்க்க முடிகிற சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கும் ப்ரூஸ் வில்லிஸும் ஏற்கனவே இறந்தவர்தான். படத்தின் இறுதியில் அந்த உண்மை அவருக்கு தெரிய வரும்போதுதான் பார்வையாளனுக்கும் தெரிய வரும்.

த ஐ திரைப்படத்தில் இந்த ட்விஸ்ட் படத்தின் நடுவில் வரும். கண் பார்வை இல்லாத இளம் பெண் கண் பார்வை பெற்றதும் சில நிழலுருவங்கள் அவள் கண்களுக்கு தெரியும். அவள் யாரை பார்க்கிறாளோ அவர்கள் அடுத்த நாள் இறந்துவிடுவார்கள். இந்நிலையில் அவள் தனது புகைப்படத்தை பார்க்க நெரிடும். அப்போதுதான் அவள் கண்ணாடியில் பார்ப்பது அவளது முகத்தை அல்ல என்ற உண்மையை அவளும் பார்வையாளர்களும் அறிந்து கொள்வார்கள்.

த ஆர்பனேஜ் படத்தில், சிறுவன் இறந்து போவது தாய் அவளை அறியாமல் ஏற்படுத்திய விபத்தால் என்ற உண்மையும்கூட எதிர்பாராத திருப்பம்தான். டெயில் ஆஃப் டூ சிஸ்டர்ஸ் படத்தில் நாம் அதுவரை பார்த்த சகோதரிகளில் ஒருவர், இன்னொருத்தியின் இமேஜினேஷன் என்பது தெரிய வரும்போது அதிர்ந்து போகிறோம்.

இதுபோன்ற திருப்பம் ஜேம்ஸ் வானின் படத்தில் இல்லை. பேய்களின் அட்காசத்தைப் பார்த்த பிறகும், அதே வீட்டில் விடாப்பிடியாக இருப்பதற்கு வழக்கமான ஹாலிவுட் படங்களில் சொல்லும் அதே சொத்தை காரணம் (எல்லா பணத்தையும் போட்டு இந்த வீட்டை வாங்கியிருக்கேன். போவதற்கு வேற இடம் இல்லை) இந்தப் படத்திலும் சொல்லப்படுகிறது. கிளைமாக்ஸில் பேய் கரோலினின் உடம்பில் புகுந்து குழந்தைகளை கொலை செய்ய முயற்சிக்க, பேய் ஓட்டுகிறவர் பைபிளை வாசிக்க... 70 களில் வந்த தமிழ் படத்தை பார்க்கிற எபெக்ட்.

சிறந்த பேய் படங்களைப் பார்த்தவர் என்றால் The Conjuring உங்களை கவர்வதற்கு வாய்ப்பில்லை. மாறாக ஒன்றரை மணி நேரம் பயப்படுவதற்கு நல்ல சாய்ஸ்.

வெப்துனியா
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: The Conjuring - மாஸ்டர் பீஸ் என்பதெல்லாம் சுத்தப் பொய்!

Post by அருண் on Sun Sep 08, 2013 11:38 am

ஹாரர் படத்தில் அனைவரையும் கவர்ந்தது evil dead ஆகாதன் இருக்கும்.
அனைத்து நாடுகளையும் கலக்கிய படம்

இந்த படம் பிடித்த அளவுக்கு வேற எந்த படம்மும் வர வில்லை என்று தான் நினைக்கிறேன்..

விமர்சனத்திற்கு நன்றி அண்ணா.!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: The Conjuring - மாஸ்டர் பீஸ் என்பதெல்லாம் சுத்தப் பொய்!

Post by ராஜா on Sun Sep 08, 2013 12:46 pm

முன்பெல்லாம் நிறைய பேய் படங்கள் பார்ப்பேன் , இப்பல்லாம் பார்க்க பிடிக்கவில்லை அத்துடன் குழந்தைகள் இருப்பதால் சேனல் மாற்றும் பொது ஓரிரு வினாடிகள் பார்ப்பதோடு சரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: The Conjuring - மாஸ்டர் பீஸ் என்பதெல்லாம் சுத்தப் பொய்!

Post by சிவா on Sun Sep 08, 2013 12:50 pm

@ராஜா wrote:முன்பெல்லாம் நிறைய பேய் படங்கள் பார்ப்பேன் , இப்பல்லாம் பார்க்க பிடிக்கவில்லை அத்துடன் குழந்தைகள் இருப்பதால் சேனல் மாற்றும் பொது ஓரிரு வினாடிகள் பார்ப்பதோடு சரி
ஆமாம் தல, ஆண்கள் திருமணத்திற்குப் பிறகு பேய்ப் படங்கள் பார்ப்பதில் ஆர்வம் செலுத்துவதில்லை!

காரணம்? அதான் உங்களுக்கே தெரியுமே...!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: The Conjuring - மாஸ்டர் பீஸ் என்பதெல்லாம் சுத்தப் பொய்!

Post by ராஜா on Sun Sep 08, 2013 12:55 pm

@சிவா wrote:
@ராஜா wrote:முன்பெல்லாம் நிறைய பேய் படங்கள் பார்ப்பேன் , இப்பல்லாம் பார்க்க பிடிக்கவில்லை அத்துடன் குழந்தைகள் இருப்பதால் சேனல் மாற்றும் பொது ஓரிரு வினாடிகள் பார்ப்பதோடு சரி
ஆமாம் தல, ஆண்கள் திருமணத்திற்குப் பிறகு பேய்ப் படங்கள் பார்ப்பதில் ஆர்வம் செலுத்துவதில்லை! காரணம்? அதான் உங்களுக்கே தெரியுமே...!!!
நாம் ஏதோ சொல்ல போயி வில்லங்கமா ஆயிரும் போல இருக்கே .... அய்யோ, நான் இல்லை 
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: The Conjuring - மாஸ்டர் பீஸ் என்பதெல்லாம் சுத்தப் பொய்!

Post by சிவா on Sun Sep 08, 2013 12:57 pm

@ராஜா wrote:
நாம் ஏதோ சொல்ல போயி வில்லங்கமா ஆயிரும் போல இருக்கே .... அய்யோ, நான் இல்லை 
உண்மையைப் பேசினால் அதன் பெயர் வில்லங்கமா? தைரியமா பேசுங்க தல!
(என்னை அவ அடிக்க, அவ என்னை அடிக்க.... அய்யோ, நான் இல்லை )
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: The Conjuring - மாஸ்டர் பீஸ் என்பதெல்லாம் சுத்தப் பொய்!

Post by ராஜா on Sun Sep 08, 2013 1:01 pm

@சிவா wrote:(என்னை அவ அடிக்க, அவ என்னை அடிக்க.... அய்யோ, நான் இல்லை )
அட ஆமாம் தல ... நீங்களும் இப்படி தானா புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: The Conjuring - மாஸ்டர் பீஸ் என்பதெல்லாம் சுத்தப் பொய்!

Post by சிவா on Sun Sep 08, 2013 1:02 pm

@ராஜா wrote:
@சிவா wrote:(என்னை அவ அடிக்க, அவ என்னை அடிக்க.... அய்யோ, நான் இல்லை )
அட ஆமாம் தல ... நீங்களும் இப்படி தானா புன்னகை
அப்படின்னா? அங்கயும் அப்படித்தானா? (அப்பாடா, இப்பத்தான் நிம்மதியா இருக்குசிரி )
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: The Conjuring - மாஸ்டர் பீஸ் என்பதெல்லாம் சுத்தப் பொய்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum