ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தேசிங்கு ராஜா - சினிமா விமர்சனம்

View previous topic View next topic Go down

தேசிங்கு ராஜா - சினிமா விமர்சனம்

Post by சிவா on Sun Aug 25, 2013 12:37 pm



நடிப்பு: விமல், பிந்து மாதவி, சூரி, ரவி மரியா, சிங்கம் புலி, வினு சக்கரவர்த்தி
ஒளிப்பதிவு: சூரஜ் நல்லுசாமி
இசை: டி இமான்
பிஆர்ஓ: மவுனம் ரவி
தயாரிப்பு: எஸ்கேப் ஆர்ர்டிஸ்ட் & ஒலிம்பியா மூவீஸ்
எழுத்து - இயக்கம் : எஸ் எழில்


ஊர்ப்பகை, காதல், திருமணத்துக்குப் பின் கணவன் - மனைவி மோதல்... என வழக்கமான கிராமத்துக் கதை... ஆனால் பார்வையாளர்களை யோசிக்கவே விடக்கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு காமெடி கபடி ஆடியிருக்கிறார் இயக்குநர் எழில்.

கிளியூர், புலியூர் என இரண்டு கிராமத்துப் பெருசுகளுக்கும் இடையே தீராப் பகை. ஒரு கொட்டைப் பாக்கில் ஆரம்பித்த அந்தப் பகை, இரு குடும்பத்திலும் நான்கைந்து தலைகளை காவு வாங்குகிறது. இந்த சூழலில் இந்த இரு குடும்பத்தின் இப்போதைய தலைமுறையைச் சேர்ந்த இதயக் கனியும் (விமல்), தாமரை (பிந்து மாதவி)யும் காதலிக்கிறார்கள்.

இருவரும் திருமணம் செய்து கொண்டாலாவது 50 ஆண்டு கால பகை தீரும் என நினைத்து, காதலியின் தந்தையிடம் தனியாக வந்து திருமணத்துக்கு அனுமதி கேட்கிறான் இதயக்கனி. ஆனால் அவரோ இதயக்கனியைத் தீர்த்துக் கட்ட முயல்கிறார். அவர் கண்ணெதிரிலேயே தாமரைக்கு தாலி கட்டி, தன் நோக்கம் பகையை வளர்ப்பதல்ல, தீர்ப்பதுதான் என நிரூபிக்க முயல்கிறான் இதயக்கனி. அந்த நேரம் பார்த்து இதயக்கனியின் ஊர்க்காரர்கள் தாமரையின் கண்ணெதிரிலேயே அவள் தந்தையைக் கொல்கிறார்கள். இதயக்கனிதான் திட்டமிட்டு தன் தந்தையைக் கொன்றதாக நம்பிவிடுகிறாள் தாமரை. ஆனால் தாலிகட்டிய மனைவி தாமரையை தன்னோடு அனுப்புமாறு பஞ்சாயத்து வைக்கிறான் இதயக் கனி. தாமரையும் தன் தந்தையைக் கொன்ற கணவனை பழிவாங்க அவன் வீட்டுக்கு வருகிறாள். இதயக்கனியும் தாமரையும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு சேர்ந்தார்களா, இரண்டு ஊர் பகையும் தீர்ந்ததா என்பது க்ளைமாக்ஸ்.

இந்த மாதிரி கதையோடு வரும் நூத்தியோராவது படம் இது என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. ஆனால் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் நாலு அங்குல சிரிப்புக்கு கியாரண்டி தருகிறார் இயக்குநர் எழில்.

மருதமலை மாமணியே... பாடலுடன் தொடங்குகிறது முதல் காட்சி. பாடல் முடிந்து ஹீரோ அறிமுகமான சில நிமிடங்களில் ஹீரோயினுடன் காதல்... அப்புறம் கல்யாணத்துக்கு முன்பே பழமண்டியில் மேற்படி சமாச்சாரமும் முடிந்துவிடுகிறது! அடுத்த காட்சியில் திருமணம், முக்கிய பகையாளியும் செத்துப் போக.. இனி எப்படி நகரப் போகிறது கதை என்று பார்த்தால்... கணவனைப் பழிவாங்க மாமியார் வீட்டுக்கு வருகிறார் பிந்து மாதவி. கூடவே பாதுகாப்புக்காக பத்து அல்லக்கைகளோடு வருகிறார். அப்போது ஆரம்பிக்கும் காமெடி... க்ளைமாக்ஸ் வரை அதகளம்தான்!

முதலிரவைத் தடுக்க சூரி குரூப் ஒருபக்கம் திட்டம் போட, மாப்பிள்ளைக்குப் பாதுகாப்பு என சிங்கம்புலி - சாம்ஸ் குரூப் அடிக்கும் லூட்டி... வயிற்றைப் பதம் பார்க்கிறது.

கபடிக்கு சியர்ஸ் கேர்ள்ஸை அறிமுகப்படுத்தி, அற்காக ஐபிஎல்லுக்கு நன்றி சொல்லும் காட்சி செம குசும்பு!

ரவி மரியா டெரர் வில்லனாக அறிமுகமாகி, க்ளைமாக்ஸ் கபடி சீனில் கங்னம் ஸ்டைல் டான்ஸ் போட்டு கலகலப்பூட்டுகிறார். விமலுக்கு பழகிய வேடம். ரொம்பவே இயல்பாக நடித்திருக்கிறார். மனைவியிடம் பாவமாக கெஞ்சும்போது மவுனகீதங்கள் பாக்யராஜை நினைவுபடுத்துகிறார். சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதற்காக ஆக்ஷன் ஹீரோ என்றெல்லாம் இறங்காதீங்க பாஸ்.. தாங்காது!

பிந்துமாதவி இறக்கமாக ஜாக்கெட் அணிந்து கிறக்கமாகப் பார்த்தபடி வந்து போகிறார். கவர்ச்சி கைகொடுத்த அளவுக்கு காமெடி டைமிங் இன்னும் அவருக்கு கைவரவில்லை. இந்தப் படத்தில் அதிக வேலை ஹீரோ ஹீரோயின்களுக்கல்ல... காமெடி டீமுக்குதான்.

பரோட்டா சூரி, சிங்கம்புலி, சாம்ஸ், சிங்கமுத்து என அத்தனை பேரும் சிறப்பாக கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். குறிப்பாக சிங்கம் புலி. விரசமில்லாத காமெடி, உச்சரிப்பில் இவர் இன்னொரு பாலையா! வினுச் சக்கரவர்த்தி, ஞானவேல், வனிதா ஆகியோரும் தங்கள் வேடங்களைச் சிறப்பாக செய்துள்ளனர். காமிக் வில்லன் என்ற பதத்துக்கு சரியான உதாரணம் ரவி மரியா. நல்ல நகைச்சுவை நடிகராக ஒரு ரவுண்ட் வருவார்! சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவும், இமானின் இசையும் படத்திக்கு ப்ளஸ்.
'நிலா வட்டம்...' மெட்டு பழசு என்றாலும் கேட்க இனிமை.

குறைகள் என்று பார்த்தால்... ம்ஹூம்.. அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் இந்தப் படத்தின் முதல் காட்சியிலேயே எழுந்து வந்துவிட வேண்டியிருக்கும். எனவே சும்மா ஜாலியா பாருங்க...

வன்மமும் பகையும் நொடி நேரத்தில் பிறந்தாலும், தலை முறை தலைமுறையாகத் தொடர்கிறது. எப்படி உருவானதோ அதே வேகத்தில் அதற்கொரு முற்றுப் புள்ளியும் விழுந்தால்... இந்த சமூகம் எத்தனை சந்தோஷமாக இருக்கும் என சீரியஸாக யோசிக்க வைத்த சிரிப்புப் படம் தேசிங்கு ராஜா!

தட்ஸ்தமிழ்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தேசிங்கு ராஜா - சினிமா விமர்சனம்

Post by சிவா on Sun Aug 25, 2013 12:38 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தேசிங்கு ராஜா - சினிமா விமர்சனம்

Post by அசுரன் on Sun Aug 25, 2013 1:01 pm

ஓ இவ்வளவு தான் கதையா?
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தேசிங்கு ராஜா - சினிமா விமர்சனம்

Post by ராஜா on Sun Aug 25, 2013 1:21 pm

டி‌வி‌டி பிரிண்ட் இருந்தா போடுங்க தல , இப்பல்லாம் theater print நாங்க பார்ப்பது இல்லை புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தேசிங்கு ராஜா - சினிமா விமர்சனம்

Post by சிவா on Sun Aug 25, 2013 1:22 pm

@ராஜா wrote:டி‌வி‌டி பிரிண்ட் இருந்தா போடுங்க தல , இப்பல்லாம் theater print நாங்க பார்ப்பது இல்லை புன்னகை
இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல உங்களுக்கு?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தேசிங்கு ராஜா - சினிமா விமர்சனம்

Post by ராஜா on Sun Aug 25, 2013 1:25 pm

@சிவா wrote:
@ராஜா wrote:டி‌வி‌டி பிரிண்ட் இருந்தா போடுங்க தல , இப்பல்லாம் theater print நாங்க பார்ப்பது இல்லை புன்னகை
இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல உங்களுக்கு?
தரமற்ற காணொளிகள் தொடர்ந்து பார்த்தால் கண் பார்வை கெட்டு விடும் தல , எது செய்தாலும் ஒரு professional ethic வேணுமில்ல
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தேசிங்கு ராஜா - சினிமா விமர்சனம்

Post by அசுரன் on Sun Aug 25, 2013 1:28 pm

@சிவா wrote:
@ராஜா wrote:டி‌வி‌டி பிரிண்ட் இருந்தா போடுங்க தல , இப்பல்லாம் theater print நாங்க பார்ப்பது இல்லை புன்னகை
இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல உங்களுக்கு?
சியர்ஸ் ஆமோதித்தல் 
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தேசிங்கு ராஜா - சினிமா விமர்சனம்

Post by அருண் on Sun Aug 25, 2013 2:17 pm

விமர்சனத்திற்கு நன்றி அண்ணா!
எஸ் எழில் க்கு இந்த படமும் ஹிட் தான் சொல்லுங்கோ..
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: தேசிங்கு ராஜா - சினிமா விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum