ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருப்புகழ் - பாடல் 31

View previous topic View next topic Go down

திருப்புகழ் - பாடல் 31

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sun Aug 25, 2013 1:10 amஇயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி

    இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே

உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி

    உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே

மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல்

    வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே

கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே

    கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே
.இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி

    இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே


பெண்களின் உடல் வாகில் இயற்கையாகவே இனக்கவர்ச்சி உள்ளது ! ஏதாவது ஒருவகையில் ஆண்களை வசீகரிக்கும் ஒரு அம்சம் ஒவ்வொரு பெண் சரீரத்திலும் உண்டு .

கிராமப்புற பேச்சில் தழுக்கு குழுக்கு மிணுக்கு என்பார்கள் ! கடவுளின் படைப்பில் பெண் சரீரத்தில் இம்மூன்று அம்சங்களின் பலவகையான கலவைகள் ஒருங்கினைந்து ஒரு வெளிப்பாட்டை ஆண்களின் மீது பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டுதானிருக்கும் !

உடல் வாகில் ஒரு நளினம் ; அங்க அசைவுகளில் ஒரு மொழி ; எதுவுமே இல்லாவிட்டாலும் இனிமையான குரலாவது இல்லாத ஒரு பெண்ணை காணவே முடியாது .

ஆண்களை கேட்டால் இது அழகு அது அழகு என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள் ! ஆனால் அழகே இல்லாத ஒரு பெண்ணை காட்டிவிடு என்றால் அது முடியாததாகிவிடும் !

எல்லா பெண்களிடமும் இயல்பாகவே ஏதோ ஒரு அழகு இருக்கத்தான் செய்யும் என்ற ஒரு நிறைந்த அல்லது தன்னிறைவு அடைந்த மன நிலை இல்லாமால் ஆ அது அழகு இது அழகு என்று ஆண்களின் மன நிலை அலை பாய்ந்து கொண்டே தானிருக்கும் !

எவ்வளவு அதை கவணித்தாலும் அதை அறிந்துகொள்ளவோ  நிதானித்துக்கொள்ளவோ முடியாது அல்லது அனுபவிக்கவும் முடியாது என்ற சொரணை இல்லாமல் மனம் அலைபாய்வதிலிருந்து கடற முடியாத கண்கள் வயோதிக - ஏன் ஒழுக்க சீலர்களாக வாலிபத்தை கடந்த  ஆண்களுக்கும் இருப்பதை கண்டு எனக்காகவும் சேர்த்து ஆண் சரிரத்தின் தன்மைக்காக நொந்துகொண்டிருக்கிறேன் !

இயல்பாகவே ஆண்களின் கண்களுக்கு பெண்களை உற்றுப்பார்க்கும் தன்மை இருப்பதை ( மேல் காஜிங்க் ) அறிவியலும் ஒத்துக்கொண்டுள்ளது ! ஓரப்பார்வையால் தன்னை பாதுகாத்துக்கொள்ளும் உள்ளார்ந்த அச்சம்  சனாதன தர்மத்தின் ஆளுமையால் இந்தியப்பெண்களிடம் இருக்கிறது ! ஆனால் ஐரோப்பிய கலாச்சாரத்தில் அது சீரழிந்து கொண்டுமுள்ளது !

ஆனாலும் இயல்பாகவே பெண்கள் குடும்பப்பொறுப்புகளின் காரணமாக இனக்கவர்ச்சியை விரைவிலேயே கடந்துவிடும் தன்மையும் உள்ளது !

எல்லா ஆண்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் தன்னால் எந்தபெண்ணையும் அணுபவித்துவிடமுடியும் என்ற ஆணாதிக்க சிந்தனை முதல் ஆணிலிருந்து (ஆதம் அல்லது சிவன் ) அவனுக்கு துனையாகவும் ஆறுதலளிக்கவும் முதல் பெண் ( அவ்வா அல்லது பார்வதி ) படைக்கப்பட்டதிலிருந்து தன் நுகர்வுக்கான ஒரு பொருள் என்ற உணர்வு பொதிந்துள்ளது ! ஆனால் பெண்களுக்கு அது இருப்பதில்லை !

நான் மிக நீண்ட நாள் குழப்பி கண்டுபிடித்த ஒரு உண்மை பெண்கள் தங்களுக்கு தாங்களே அழகு படுத்திக்கொள்கிறார்களே தவிற பிறர் யாரையும் கவரவேண்டும் என்ற நோக்கத்தில் இல்லை ! சிறு பெண் குழந்தைகள் கூட uLLEதங்களை அழகு படுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றன ! - அது மிணுக்கு !

தங்களிடம் இருந்து வெளிப்படுகின்ற தளுக்கும் குழுக்கும் கூட எந்த அளவு வெளியே பாதிப்பை உண்டாக்குகிறது என்பது பற்றி அறியாமலேயேதான் பெண்கள் உள்ளனர் ! அவர்கள் வர்ணிக்கப்பட்டால் ஆரம்ப நாட்களில் மயங்குவது வாழ்க்கை அணுபவத்தால் வெகுவிரைவிலேயே கடந்துவிடுகிறது அவர்களின் தாய்மையே அவர்களை பல படித்தரம் உயர்த்திவிடுகிறது குடும்ப நிர்வாகத்திற்கான உழைப்பு கவலை உடற்சோர்வு உடல் வேட்கையை கடந்துவிடுகிற பக்குவத்தை கொடுத்து விடுகிறது !

ஆனால் ஆண்கள் அந்தப்பக்குவத்தை அடைவதே இல்லை ! ஏனெனில் படைப்பின் போதே ஆணின் போகத்திற்கென்று பெண் படைக்கப்பட்டாலே தவிற பெண்ணின் போகத்திற்கு ஆண் படைக்கப்படவில்லை !

பெண் உடல் வாகும் நளினமும் அங்க அசைவுகளும் நடை உடை பாவனைகளும் ஆண்களை இடைவிடாது பாதித்துக்கொண்டேதான் இருக்கும் பெண்கள் இப்படித்தானிருப்பார்கள் ; அது நமது ஆத்மா ஆண் சரீரத்தில் இருப்பதால் பாதிப்பை ஏற்படுத்துகிறது - மகாமாயைகளில் ஒன்று என உணர்ந்தாலொழிய அதை கடர்வதற்கான வாய்ப்பே இல்லாத நீர்ச்சுழற்சியில் மாட்டிக்கொண்டு தவிக்கவேண்டியதுதான் !

எனவே தான் அருணகிரியார் ; இயலும் இசையும் உசிதமாக வெளிப்படக்கூடிய வஞ்சிகளுக்கு மனம் அயர்வாகி இரவு ... பகல் ... சிந்தித்து உலழாதபடி வேண்டுகிறார் !!

அல்லது தளுக்கு குழுக்கு மிணுக்குகளின் விதவிதமான கலப்புகளை அணுபவித்தாலும் அவற்றால் விதவிதமான நுகர்வு கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை ! கவர்வதற்கான மயக்கங்கள் விதவிதமாக இருக்கிறதே தவிற நுகர்வில் அது வீணும் வியர்த்தமுமாகவே முடிகிறது ! கூடவே வேறு பல பிரச்சினைகளையும் அழைத்துக்கொண்டு விடுகிறது !

ஓ !  ``அண்டமா முணிவரெல்லாம் அடங்கினாரே பெண்ணுக்குள்ளே `` -- மகாமாயையை எப்படித்தான் தப்புவது ?

நண்பர் ரமேஸ்சேது திருப்போரூரைப்பற்றி பலமுறை சொல்லிக்கொண்டிருப்பதால் அந்த வாய்ப்பை பயன்படுத்தினேன் ! சென்னை சென்றிருந்தபோது அவர் திருப்போரூர் அழைத்துச்சென்றார் !


தேவ அசுர யுத்தத்தின் ஒரு பகுதி அங்கு நேர் மேலேதான் நடந்திருக்கிறது ! அது தொடர்பாகவே மாமல்லை என்ற பெயரும் வந்திருக்கவேண்டும் ! நான் இந்தக்கோவிலில் வலம் வரும்போது இந்த திருப்புகழ் பாடல் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது ! நான் ரமேசிடம் பக்கத்தில் ஏதாவது பெருமாள் கோவில் இருக்கிறதா எனக்கேட்டேன் ! திருப்போரூர் கோவிலின் நேர் கிழக்கே திருவிடந்தை ( ஒரு ஆழ்வார் ஜென்மசேத்திரம் ) இருப்பதாக தெரிவித்து அழைத்தும் சென்றார் !

அங்கு சென்றபிறகுதான் இதுதொடர்பான விசயங்கள் உணர்த்தப்பட்டேன் !
திருவிடந்தை என்பது திருவடிவு ஏந்தை என்பதன் மருவு ஆகும் ! இக்கோவிலின் தலவரலாறு - புராணம் வருமாறு :

(உலகில் உள்ள எந்த விவரத்திலும் உண்மையும் இருக்கும் பொய்யும் இருக்கும் என்பதான அணுகுமுறை மட்டுமே ஞானம் பயில்வதற்கான வழி ! நமக்கு பிடித்த விசயங்களில் முழு உண்மை இருப்பதாக வாதிப்பதும் நமக்கு எதிர்ப்பான விசயங்களில் முழு பொய் இருப்பதாக வாதிப்பதும் தவறு ! புராணங்களை வார்த்தைக்குவார்த்தை நம்பாமல் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை மட்டுமே சுவீகரிக்கவேண்டும் )

காலவரிஷி என்பவர் அவளை திருமணம் செய்து கொண்டு 360 பெண் குழந்தைகளைப் பெற்றார். தன் பெண்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென நாராயணனை வேண்டித் தவமிருந்தார். நாராயணன் வரவில்லை. ஒருநாள் ஒரு பிரம்மச்சாரி வந்தான். திவ்யதேச யாத்திரைக்காக வந்ததாகக் கூறினான். அவனது தெய்வீக அழகு பெருமாளைப் போலவே இருக்கவே, தனது பெண்களைத் திருமணம் செய்து கொள்ள அந்த இளைஞனை வேண்டினார். அவன் ஒப்புக்கொண்டு தினம் ஒரு பெண் வீதம் திருமணம் செய்து கொண்டான். கடைசி நாளில் அந்த இளைஞன் தன் சுயரூபம் காட்டினான். அது வேறு யாருமல்ல. வராகமூர்த்தி வடிவில் வந்த நாராயணன். அவர் 360 கன்னியர்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே பெண்ணாக்கி, தனது இடப்பக்கத்தில் வைத்து கொண்டு சேவை சாதித்தார். திருவாகிய லட்சுமியை இடப்புறம் ஏற்றுக்கொண்ட எம்பெருமான் ஆனபடியால் இத்தலம் "திருவிடவெந்தை" எனப்பட்டது. இது காலப்போக்கில் மருவி "திருவிடந்தை" ஆனது.

நாராயணன் என்றால் நரல் + ஆயணன் அதாவது சத்தம் வந்து உருவாணவன் ! அரூபமான கடவுள் படைப்பை தொடங்கும் போது ஆகுக என பேசினார் ! வெற்றிடத்தில் முதலாவது வந்த வெளிப்பாடு சத்தம் ! அந்த சத்தமே பரமாத்மாவாக - சகலத்தையும் தன்னுள்ளிருந்து வெளிப்படுத்தி தனக்குள்ளே அழிவடையச்செய்யும் ஒரு தளமாக இருக்கிறது ! அதுவே நாராயணம் அல்லது நாராயணன் !

அரூபக்கடவுளின் ரூப வெளீப்பாடு நாராயணன் ! பரமாத்மா !

அந்த நாராயணன் சரீரத்தில் உறையும் ஜீவராசிகளை வெளிப்படுத்துகிறார் ! சரீரம் என்பதும்  ``நரன் `` அதாவது நாராயணன் நரனாக வெளிப்படுகிறார் ! இந்த ஜீவராசிகள் அனைத்தும் தனது இனப்பெருக்கத்திற்காக ஆணாகவும் பெண்ணாகவும் படைக்கப்பட்டு இனக்கவர்ச்சி என்ற மோக வயத்திற்குள் ஆட்பட்டுள்ளன ! உண்பதும் இனப்பெருக்கம் செய்வதும் என்ற நுகர்வுக்காக மட்டுமே பல ஜீவராசிகள் வாழ்ந்துகொண்டுள்ளன அதைத்தவிற அவைகள் வேறெதுவும் செய்வதில்லை !

மோக வகைப்பட்ட நுகர்ச்சி கொஞ்சம் சுவாச வகைப்பட்டதுமாகும் ! அத்தோடு அதிகமாகவும் ஆழமாகவும் உடலுறவு கொள்ளும் ஜீவராசி வராகம் ! சரீரம் என்ற அளவில் சேற்றில் உலழ்வதைப்பற்றியும் அருவருப்படையாமல் உடலுறவுக்கென்றே வாழும் ஒரு பிராணி ! ஆனாலும் இனப்பெருக்கத்திற்கு அடிப்படையானது !

எல்லா படைப்பினங்களுக்கும் அது அடிப்படை என்பதால் நாராயணனது அவதாரங்களில் ஒன்றாக அது சித்தரிக்கப்படுகிறது ! இங்கு கவணிக்கவேண்டியது வராக அவதாரம் என்பது ராமர் கிரிஸ்ணர் இயேசுவைப்போல மனிதனாக வந்ததல்ல ! அது ஒளிவடிவாக வெளிப்படுத்தப்பட்டது மட்டுமே ! ( நர சிங்கத்தைப்போல )

காலவரிஷிக்கு 360 பெண் குழந்தைகள் ! அவர்களை நாராயணன் ஒரு நாளைக்கு ஒரு பெண் வீதம் திருமணம் செய்தார் ! ஆனால் முடிவிலே 360 பேரையும் ஒரு பெண்ணாக மாற்றிக்கொண்டார் !

நரனாக ( மனிதனாக ) வந்த நாராயணன் பெண் உடலில் விதவிதமாக வெளிப்படும் இயலிசைக்கு மயங்கி - மோக வயப்பட்டு விதவிதமான 360 பெண்களை திருமணம் செய்து அணுபவித்து முடிவிலே அது ஒரு மாயை ஒரு பெண்ணை அணுபவிப்பதற்கு மாறாக அதிலே ஒன்றுமில்லை என்பதை உணர்ந்தார் ! அதனால் விதவிதமான பெண்கள் என்பதை மாற்றி ஒரே ஒரு பெண் போதும் என அந்தப்பெண்ணை தனது இடப்புறத்திலேயே வைத்துக்கொண்டார் !

திருவிடந்தை கோவிலில் எளிமையாக புரிந்துகொள்ள வேண்டிய ஞானம் இதுவே !

இந்த ஞானத்தையே நாராயணன் ராமராக மனித அவதாரம் வந்தபோது `` இந்த இப்பிறவிக்கு இன்னொரு பெண்ணை சிந்தையாலும் தொடேன் `` என பிரகடணம் செய்தார் !


மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல்

வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே

கார்மேகம் வருவதைக்கண்டு மயில் ஆடும் இயல்பு உள்ளது !

சகலமும் நாராயண வெளிப்பாடு என்றாலும் யுகங்கள்தோறும் பூமியில் தர்மத்தை நிலைனாட்ட நாராயணனே மனிதனாக அவதரித்து வருவதும் அவர் அதுவரை வளர்ச்சியடைந்த முன்னேரிய தொழில்னுட்பத்துடன் கூடிய அசுர மாயைகளை களைவதற்கான வேதம் கொடுப்பதும் வாடிக்கை !

அல்லது சற்குருவாகிய நாராயணனது உப குருக்களும் வழிகாட்டுவார்கள் ! அதுவே கார்மேகம் என்பது !

யோவான் 4:14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.

கடவுளது சற்குருவின் மூலமோ அல்லது உபகுருக்கள் மூலமோ அவர்களின் வழிகாட்டுதல்களை கடைபிடித்து ஆன்மசாதனை பயிலும் மெய்யடியார்கள் இந்த உபதேசங்களை கேட்டு ஆடும் மயில்கள் ! அவர்கள் எப்படியாவது பல பிறவிகளில் பல மாயைகளை கடந்து முழுமைப்பேறு அடைவது உறுதி !

ராமரின் உபதேசங்களும் கிரிஸ்ணரின் உபதேசங்களும் இயேசுவின் உபதேசங்களும் இவ்வுபதேசங்களை ஏக அரூப கடவுளை நோக்கி திருப்பகோரும் குராணின் சாரத்தையும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக எடுத்துக்கொள்ளாமல் தொகுத்துக்கொள்ளும் சமரச வேதம் வருவதற்காக காத்திருக்கும் மயில்கள் - இறை நெறியின் சிறு துளியையாவது உணர்ந்தோர் தாங்கள் இருக்கும் நிலையிலேயே பலரை கைதூக்கி விடுகிற உபகுருத்துவ பணியையும் செய்துகொண்டே இருப்பார்கள் ! அவர்களே மேய்ப்பர்கள் - இடையர்கள் !

இந்த இடையர்களின் சத்சங்கத்தில் உறையும் ஆத்துமாக்களே எத்தகைய குறைகளோடு இருந்தாலும் வனச குற மக்களாக நாராயணனால் நேசிக்கப்படுகிறார்கள் !

கீதை 9:30 இத்தகு பக்திதொண்டில் நிலைத்திருப்போர் ஒருவேளை தன்னை அறியாமல் கொடுமையான காரியத்தை செய்ய நேரிட்டாலும் அவர் புண்ணியராகவே கருதப்படுவர் !!

கீதை 9:31 அவர் இந்த தூய மார்க்கத்தில் நிலைத்திருப்பதால் விரைவில் நேர்வழி பெற்று தூய்மையடைந்து மங்காத சமாதானத்தை அடைவார் !! ஆகவே அர்ச்சுணா ! எனது சீடன் ஒருபோதும் அழிவதில்லை என்பதை உரத்து சொல்வாயாக !!


கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே

கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே.

ஆத்மாக்கள் பூமியிலேயே வசித்தாலும் அவரவர்களின் ஆன்ம முன்னேற்றத்தின் அளவின்படி அவர்கள் பரத்தை நோக்கி உயர்ந்த குன்றுகளாக கடவுளால் கருதப்படுகிறார்கள் !

அவ்வாறு மனிதனாக பூமியில் வாழ்ந்து இடையறாத தியானத்தால் - ஏக இறைவனை தியானித்து தூய வைணவ நெறியில் வாழ்ந்து ருத்திரனாக மரனமில்லாபெரு வாழ்வு பெற்ற முதலாவது நபர் - சிவன் அத்தகைய கயிலை மலையாகும் !

கயிலை மலையைப்போன்ற ஆன்ம முதிர்ச்சி பெற்ற ஆத்மாக்களின் இதயத்தில் உறையும் சற்குருவே ! மனிதனாக அவதாரமெடுத்து வந்து தர்மத்தை நிலைனாட்டிய ராமரும் கிரிஸ்ணரும் இயேசுவும் ஆகிய ஒருவரே - தாழ்ந்த ஜட இயல்பாக வெளிப்படும் நாராயணன் அதாவது வராக நாராயணனாகிய படைப்பினங்களுக்கு மத்தியில் உயர்ந்த இயக்கு சக்தியாகிய நாராயண இயல்பாக முந்தியவருக்கு இளையவராக யுக புருஷஅவதாரம் வருகிறது !

எல்லா மனிதர்களும் வராக அவதாரம் போன்றவர்கள் என்றால் யுகபுருஷன் மட்டும் கந்தபெருமாளாகும் !

கந்தன் என்றால் ரட்சிக்கிறவர் ! விடுவிக்கிறவர் ! கைதூக்கி விடுகிறவர் !


வட்டி என்பது அசல் அப்படியே இருக்க அதற்கு கூடுதலாக வசூலித்தொண்டே இருப்பது ! ஆனால் இரக்கத்தோடு உதவும் நோக்கத்தோடு துவங்கப்பட்டது கந்துவட்டி ! இதில் வட்டியோடு அசலும் கழிந்து குறிப்பிட்ட நாளில் கடன் தீர்ந்து விடும் !

கந்து கடனை ஒரு குறிப்பிட்ட சீரான உழைப்பில் சரியாக்கிவிடும் ! கந்தனின் உபதேசத்தை கடைபிடித்தால் சில பிறவிகளில் படிப்படியாக வளர்ந்து பிறவிப்பெருங்கடலை கடந்து விடலாம் ! அவரே கந்தசாமி ! அவரிடத்து ஞான உபதேச வேலுண்டு ! அது எப்படிப்பட்ட மாயைகளையும் படிப்படியே கலைந்து விடும் !

உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி

உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே

உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி

உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே

கந்தனாக பூமியிலே வெளிப்படும் நாராயண அவதாரம் என்பதே உயர் கருணையானது ! அது ஜீவாத்மக்களை தன் மீது ஈடுபாடு கொள்ளவைத்து பக்தி செலுத்துதல் என்ற பேராயுதத்தின் மூலம் எவ்வளவு படுபாதாளத்திலிருந்தும் ஆத்மாக்களை தூக்கி விடுகிறது !

முந்தய பிறவிகளில் ஒரு ஆத்மா செய்த படுபாதக செயல்கள் தோசமாக அந்த ஆத்மாவை வாட்டும் போது துன்பத்தால் அந்த ஆத்மா பெருமாள் கோவிலில் சென்று நெய்விளக்கு ஏற்றுதல் அல்லது துளசியை சமர்பித்தல் என்ற சிறு தாழ்ந்த ஆதாய பக்திக்கும் அதிக பலனை அளித்து காத்து பொறுமை சாந்தி கொடுத்து பாவ வாழ்விலிருந்து விடுபடவும் தன்னைபோல பிறரையும் நேசிக்கும் ஜீவ அன்பையும் நேர் வழியையும் காட்டியருள்கிறது !

நாம சங்கீர்த்தனமும் நாம ஜெபமும் மனிதனை பரிசுத்தப்படுத்துகிறது !

சற்குருவின் சினேகத்தால் பேரிண்பக்கடலில் மூழ்கி திளைக்கும் ஆத்மாக்கள் முடிவிலே அந்த பரமாத்மாவின் ஒரு பகுதியாகிய ஜீவாத்மாவே தானாக இருப்பதுவும் இச்சையாலும் மோகத்தாலும் பாவத்தாலும் பந்தப்பட்டு தன்னை பரமாத்மாவின் ஒரு பகுதி என்பதை உணராமல் ; தாழ்ந்த ஜட இயல்பாகிய சரீரத்தை தான் என நம்பி ஏமாந்து கொண்டிருந்ததை உணரும் போது ஆத்ம விழிப்பு உண்டாகிறது !

தான் சரீரமல்ல ஆத்மா என்பதில் நிலைக்கும்போது பரமாத்மாவை தனக்குள்ளாக அறியும் அன்பில் - பேரானந்தக்கடலில் திளைக்கமுடியும் !ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum