ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 Dr.S.Soundarapandian

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 Dr.S.Soundarapandian

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

நரை கூறிய அறிவுரை
 Dr.S.Soundarapandian

பூக்கும் நீரூற்று! - கவிதை
 Dr.S.Soundarapandian

துயரங்களும் தூண்களாகுமே !
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்
 Dr.S.Soundarapandian

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 Dr.S.Soundarapandian

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்
 ayyasamy ram

ஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்
 ayyasamy ram

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா?

View previous topic View next topic Go down

காஞ்சிவரம்: நெசவாளர்களை காயப்படுத்தியதா? கவுரவப்படுத்தியதா?

Post by Tamilzhan on Tue Oct 27, 2009 12:34 am

காஞ்சிவரம் படத்திற்காக தேசிய விருது வாங்கியிருக்கிறார்கள் பிரகாஷ்ராஜும் அப்படத்தின் இயக்குனர் பிரியதர்ஷனும். டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கையால் இந்த விருதை வாங்கிக் கொண்ட பிரகாஷ்ராஜுக்கு திரையுலகத்தை சேர்ந்த பல்வேறு பிரிவினர் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்தவாறு உள்ளனர். இந்த நேரத்தில் அணிவேள்மொழி எழுதிய இந்த கட்டுரையை வெளியிடுகிறோம். இதுகுறித்த வாசகர்களின் விமர்சனங்கள் திறந்த மனதுடன் வரவேற்கப்படுகிறது.

பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த 'காஞ்சிவரம்' திரைப்படம் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதையும், அதில் நடித்த பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகருக்கான விருதையும் தட்டி வந்தபோது, எல்லோரும் சந்தோஷப்பட்டோம். ஒரு தமிழ்ப் படத்துக்கு தேசிய விருது கிடைத்து உள்ளதே என்று.

இப்படி ஒரு நல்ல படத்தைப் பார்க்காமல் விட்டுவிட்டோமே என்ற மன வருத்தத்தில் பார்க்க முயன்றபோது நிறைய சினிமா ஆர்வலர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் அந்த ஆர்வம் இருப்பதை உணர முடிந்தது.இதற்கிடையே விருது பெற்ற பிரகாஷ்ராஜ், "உண்மையிலேயே தமிழில் 'பெரியார்', 'ஒன்பது ரூபாய் நோட்டு' போன்ற படங்களில் சத்தியராஜும், 'தாரே ஜமின்பர்' இந்திப்படத்தில் அமிர்கானும் என்னைவிட நன்றாகவே நடித்திருந்தனர். ஆனால், எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது" என்று பேட்டி கொடுத்தபோது, பிரகாஷ்ராஜின் பெருந்தன்மையைப் பாராட்டத் தோன்றிய அதே நேரம், 'சரி... படமாவது நன்றாக இருக்கும்' என்ற எண்ணம் வந்து பார்க்கும் ஆவலைத் தூண்டியது. ஒருவழியாகப் படத்தைப் பார்த்தபோது, நமக்கு பலத்த அதிர்ச்சி. அது என்னவென்று சொல்வதற்கு முன்பு இன்னொரு விஷயம்.

காஞ்சிபுரம் நெசவாளர் பிரச்னை தொடர்பான ஒரு படத்தை மலையாளத்தில் இருந்து வந்து பிரியதர்ஷன் எடுக்கிறார். ஆனால், தமிழ் சினிமாவில் அப்படியெல்லாம் சிந்திக்க ஒரு கலைஞனும் இல்லையே என்று விமர்சகர்கள் வருந்தித் தீர்த்தார்கள், சரி அந்த மவராசனாவது எடுக்கட்டும் என்று பிரியதர்ஷனைப் பாராட்டினார்கள்.ஆனால், படம் முடிந்த பின்னும் அது வெகுஜன மக்களை நோக்கி இறங்கவில்லை. கேட்டபோது, ‘‘இது அவார்டுக்காக எடுக்கப்பட்ட படம்... அந்த ரூட்டில்தான் பயணிக்கும்’’ என்றார்கள். அது போலவே விருதுகளும் சொல்லி வைத்தாற்போல கிடைத்தன. ஆனால், படம்?

மலையாளத்தில் பல நல்ல இயக்குநர்கள் உள்ளனர். ஆனால், பிரியதர்ஷன் ஒரு வெற்றிகரமான மசாலாப்பட இயக்குநர். "அவார்டுக்குப் படம் எடுக்கிறேன்" என்று மலையாளச் சமூகச் சூழல் எதையாவது சொல்லி அது கோக்குமாக்காகப் போய்விட்டால், கேரளாவில் அவருக்குக் கேள்விகள் நிறைய எழும். எதற்கு வம்பு என்றுதான் அவர் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு தமிழர்கள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தைப் படமாக எடுத்திருக்கிறார்.அதேபோல் பிரகாஷ்ராஜ் நல்ல நடிகர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், காஞ்சிவரத்துக்காக அவருக்கு விருது என்பது அவரே சொன்னது போல... ஒரு தர்மசங்கடமான விஷயம்தான். படத்தில் சொல்லப்படுகிற கதைக்குச் சம்பந்தமில்லாத சமூகச்சூழல், பொருத்தமில்லாத நடை உடை பாவனைகள், பொருந்தவே பொருந்தாத முகங்கள்... இயல்புத் தன்மையே இல்லாத திரைக்கதை, ஒத்துப்போகாத பேச்சு மொழி... என்று மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது படம். நெசவாளிகள் சமுதாயத்தையே கேவலப்படுத்துவதாக இருந்ததுதான் அந்தப் பெரிய அதிர்ச்சி.
கதை இதுதான்.பிரகாஷ்ராஜ் பட்டு நெசவு செய்யும் நெசவாளி. மனைவி ஸ்ரேயா ரெட்டி. கல்யாணத்தின்போது தன் மனைவிக்கு ஒரு பட்டுச் சேலை நெய்து கொடுத்து தாலிகட்டி அழைத்து வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். முடியவில்லை. குழந்தை பிறக்கிறது. பெண் குழந்தை. அதன் திருமணத்திற்குள் ஒரு பட்டுச்சேலையை நெய்து தன் மகளின் திருமணத்தின்போது மகளுக்கு அணிவித்து அழகு பார்க்க ஆசைப்படுகிறார்.இதுவரை கதை நல்லாத்தான் இருக்கு. ஆனால், மகளுக்கு பட்டுச் சேலை நெய்ய பிரகாஷ்ராஜ் ‘ஓவர் டைம்’ வேலை பார்க்கவில்லை. கஷ்டப்பட்டு உழைக்கவில்லை. செலவுகளை மேலும் குறைத்து சிக்கனமாகவும் பிழைக்கவில்லை. பிறகு...?

பட்டுநூலைத் திருடுகிறார்! அதுவும் எப்படி?

தான் வேலை செய்யும் இடத்தில் தினமும் ஒரு பட்டுநூலை வாயில் திணித்து அதக்கி மறைத்து, மதிய உணவு கொண்டுபோகும் தூக்குப்போணியில் மறைத்து, வீட்டுக்குத் திருடி வந்து அவைகளை ஒன்றுசேர்த்து பட்டுச்சேலை நெய்கிறார். தன் மகளுக்காக!

இத்தனைக்கும் பிரகாஷ்ராஜ் பொது உடமைத் தத்துவத்தில் ஈடுபாடு உடைய - ஆலை முதலாளிகள் சுரண்டல் மனப்பான்மையை எதிர்க்கிற கம்யூனிசத் தொண்டராம். இப்படித், திருடித் திருடி அந்தச் சேலையைக் கொஞ்சம் கொஞ்சமாக நெய்ய, ஒரு நிலையில் மனைவி இறக்கிறார். சேலையை நெய்து முடிப்பதற்குள் ஒருமுறை வழக்கம்போல பட்டுநூலைத் திருடும்போது அகப்பட்டுக் கொள்கிறார். அடி விழுகிறது. மகளுக்குச் சோற்றில் விஷம் வைத்துக் கொன்றுவிடுகிறார். அப்போது நெய்தவரைக்கும் அந்தச் சேலையை மகளுக்குப் போர்த்த முடியவில்லை. நெய்து முடியாத அந்த அரைகுறை சேலையால் மகளின் உடலை முழுசாகப் போர்த்த முடியவில்லை. இதுதான் கதை.படத்தைப் பார்க்கும்போது, பிரகாஷ்ராஜின் வாழ்க்கையைப் பரிதாபமாகச் சொல்வதுபோல ஒரு ‘பூச்சு’ இருந்தாலும், கதை விவகாரமானது. நெசவாளன் பட்டுநூலைத் திருடுவான். அவன் செய்தது தவறு. அதனால் மனைவியை இழக்கிறான். அப்போதும் திருடுகிறான். கடவுள் கண்ணைக் குத்திவிட்டார். எனவே மகளையே கொலை செய்கிறான். ஜெயிலுக்குப் போகிறான். பிறகென்ன திருட்டு நெசவாளன் தண்டிக்கப்பட வேண்டியது நியாயம்தானே?
எப்படி இருக்கு கதை?

பொதுவாக அந்தக்காலம் முதல் தமிழ் இலக்கியப் பதிவுகளை எடுத்துக்கொண்டால் சில தொழில் செய்பவர்கள் தொழில் ரீதியாகத் தவறு செய்வதாக அமைக்கப்பட்டு உள்ளது. (உதாரணம் சிலப்பதிகாரம்) ஆனால், நெசவு செய்யும் தமிழர்கள், பட்டு நூலைத் திருடியதாக எந்தக் கதையிலும் வரலாற்றிலும் பதிவுகள் இல்லை. மாறாக, பெரிய பெரிய ராஜாக்கள், குறுநில மன்னர்கள் கொடுத்த முத்துமணி ரத்தினங்களைக்கூடப் பத்திரமாகச் செய்து தருவார்கள். தங்கச் சரிகை, வைர நகை எதையும் அவர்களை நம்பி தொழில் ரீதியாகத் தரலாம் என்பதுதான் காலகாலமாக இருந்துவரும் பழக்கம். அதற்குக் காரணம் உண்டு.இருபதாம் நூற்றாண்டின் முன் பகுதிவரை நெசவாளர்களுக்குத் தொடர்ந்து வேலை கிடைத்துக் கொண்டே இருந்தது. அவர்களுக்கு டிமாண்டும் அதிகம். அவர்கள் கோடீஸ்வரர்களாக இருந்ததும் இல்லை. பிச்சைக்காரர்களாக இருந்ததும் இல்லை. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அவர்கள், கஞ்சித் தொட்டி முன்பு கையேந்தி நிற்கும் நிலைக்கு ஆளானார்கள். அப்போதும்கூட அவர்கள் ஆலைகளில் திருடியதாகச் செய்திகள் கூட வந்தது இல்லை.

அப்படி இருக்க... இல்லாத ஒரு கதையைச் ஜோடித்து, தமிழக நெசவாளர்களைக் கேவலப்படுத்தி ஒரு படம் எடுத்து அதற்கு விருதும் வாங்கி வர முடிகிறது என்றால் இந்தக் கொடுமையை எங்கே சொல்ல?

பொதுவாக ‘ஆஸ்கார்’ விருதில் அயல்நாட்டுப் படங்களுக்கான விருதைப் பெற வேண்டும் என்றால், அது ஆங்கிலேயரை உயர்த்தி, மற்ற நாடுகளைக் கேலி செய்வதாக இருக்க வேண்டும். அதைபோல, வெள்ளைக்காரனை ரவுண்டு கட்டி அடித்துப் படம் எடுத்தால், பிரெஞ்சுக்காரர்கள் முத்தம் கொடுத்து அந்தப் படமெடுத்தவரையும் பாராட்டுவார்கள்.அதுபோல், மகாஜனங்களே! இந்திய தேசிய விருது வாங்க ஓர் எளிய வழி, தமிழ்ச் சமுதாயத்தைக் கேவலப்படுத்தி தமிழிலேயே ஒரு படம் எடுத்தால் அதற்கு தேசிய விருது கண்டிப்பாகக் கிடைக்கும்! தவிர, அப்படத்தை வேற்றுமொழிக்காரர்கள் இயக்கி, நடித்தும் இருந்தால் அந்த விருதை அவர்களே வாங்கிக் கொடுத்துவிடுவார்கள்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகமே... தொடரட்டும் உன் திருப்பணி!அணிவேள்மொழி
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum