உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by சக்தி18 Today at 3:40 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by சக்தி18 Today at 3:34 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Today at 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Today at 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Today at 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Today at 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Today at 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Today at 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Today at 4:30 am

» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by சக்தி18 Yesterday at 9:55 pm

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Yesterday at 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Yesterday at 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Yesterday at 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Yesterday at 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Yesterday at 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Yesterday at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Yesterday at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Yesterday at 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Yesterday at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Yesterday at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Yesterday at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Yesterday at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Yesterday at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Sat Jan 18, 2020 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 1:04 pm

Admins Online

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

best படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma on Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:38 pm; edited 5 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma on Mon May 09, 2016 1:06 am

இன்றும் நெட் ஸ்லொவ் என்பதால், இந்த கடைசி பதிவு 5 முறை வந்திருந்தது பானு, நல்ல காலம் பார்த்து, எடுத்து விட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by Hari Prasath on Mon May 09, 2016 1:38 pm

அருமை யான பதிவு அம்மா
Hari Prasath
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1032
இணைந்தது : 08/10/2015
மதிப்பீடுகள் : 380

Back to top Go down

best Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by Hari Prasath on Mon May 09, 2016 1:40 pm

தினமும், இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தான் இதற்காக செலவழிக்க வேண்டும் என்றும், மாலையில் கண்டிப்பாக வெளியே விளையாட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளேன்.
உங்கள் வீட்டு வாண்டுகளுக்கும், இதைப் பழக்கப்படுத்துங்களேன்!

கால மாற்றம்.
Hari Prasath
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1032
இணைந்தது : 08/10/2015
மதிப்பீடுகள் : 380

Back to top Go down

best Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by ஜாஹீதாபானு on Mon May 09, 2016 5:15 pm

அனைத்தும் அருமைமா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30904
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7332

Back to top Go down

best Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma on Tue May 10, 2016 12:46 am

நன்றி ஹரி நன்றி பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma on Mon May 16, 2016 12:22 am

காலமறிந்து உதவலாமே!

சமீபத்தில், என் நண்பரைக் காண அவர் வீட்டிற்கு சென்றிருந்த போது, தெருமுனையில் சிறு பந்தல் அமைத்து, மோர், சர்பத் மற்றும் பானகம் வினியோகித்தபடி இருந்தனர். தேர்தல் கமிஷனின் தடையை மீறி, எந்த கட்சி இப்படிச் செய்கிறது என, அருகில் சென்று பார்த்தேன்.

பந்தலில் கட்சிக் கொடியோ, தலைவர்கள் படமோ இல்லை; மாறாக, ஒரு கணவன் - மனைவியின் படம் இருந்த, 'ப்ளக்ஸ்' போர்டு இருந்தது. அன்று, அத்தம்பதிக்கு திருமண நாள் என்பதால், இவ்வாறு பொது மக்களுக்கு இலவசமாக வழங்குவதாக கூறினர். அவர்கள் எக்கட்சி அபிமானிகளும் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது!

வெயிலின் கொடுமையால் தவித்த மக்கள், அதை வாங்கி அருந்தி, அத்தம்பதியை மனமார வாழ்த்திச் சென்றனர். பார்ட்டி, அது இது என்று கொண்டாடாமல், பருவ நிலைக்கு ஏற்ப, பொது மக்களுக்கு அவர்கள் செய்த சேவையை பாராட்டி விட்டு வந்தேன்.

பிறந்த நாள் மற்றும் மணநாள் கொண்டாடுவோர், இதுபோல், பிறர் தேவையறிந்து உதவி செய்து, புண்ணியம் தேடலாமே!.....யோசிப்பரா?

உ.குணசீலன், திருப்பூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma on Mon May 16, 2016 12:23 am

@krishnaamma wrote:காலமறிந்து உதவலாமே!

மேற்கோள் செய்த பதிவு: 1207168

சூப்பர், அருமையான ஐடியா ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma on Mon May 16, 2016 12:24 am

பெண் மீது பழி போடாதீர்கள்!

தனிக்குடித்தனம் சென்ற என் நண்பனை, சமீபத்தில் சந்தித்த போது, 'என்ன மாப்ள... பெத்தவங்க, கூடப்பிறந்தவங்க தான் முக்கியம்; மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்ன்னு பேசுவ... இப்ப என்னடான்னா திடீர்ன்னு தனிக்குடித்தனம் போயிட்டே...' என்று நக்கலாகக் கேட்டேன்.

அதற்கு அவன், 'இல்லடா மச்சான்... என் மனைவி எதைச் செய்தாலும் எங்கம்மா குற்றம் கண்டுபிடிச்சு, குறை சொல்லிட்டு இருந்தாங்க. அதைக் கூட நான் கண்டுக்கல; எங்கப்பா, பிக்பாக்கெட்காரன்கிட்ட பணத்தை பறி கொடுத்ததுக்கும், என் தம்பி பைக்கில் இருந்து கீழே விழுந்ததுக்கும் என் மனைவி முகத்துல விழிச்சிட்டு போனது தான் காரணம்ன்னு சொல்லி, 'முகராசி இல்லாதவ'ன்னு கண்டபடி திட்டுனாங்க.
'இதுக்கும் மேலேயும் ஒன்னா இருந்தா, பெரிய பிரச்னை வந்துடும்ங்கிறதால தனியா வந்துட்டோம்...' என்றான்.

நண்பன், தன் மனைவி மீது கொண்ட அன்பும், பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சாதுர்யமாக எடுத்த, தனிக்குடித்தன முடிவும் சரியானது என்றே தோன்றினாலும், இப்படியுமா ஒரு பெண் மீது பழிபோட்டு பேசுவர் என்று ஆச்சரியமாக இருந்தது.

பி.சதீஷ்குமார், மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by விமந்தனி on Mon May 16, 2016 12:25 am

வித்தியாசமான, சூழலுக்கேற்ற தானம். நடைமுறை படுத்தலாம் தான்.

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 66 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 66 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 66 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

best Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma on Mon May 16, 2016 12:25 am

விடுதி காப்பாளரின் சாட்டையடி வார்த்தை!

இரு மாதங்களுக்கு முன், முதியோர் இல்லத்தில் இருக்கும் தன் அம்மாவை பார்க்க, என்னையும் உடன் அழைத்துச் சென்றார், என் நண்பர். இல்லத்தில் நுழைந்ததும், எங்களை வரவேற்ற இல்லக் காப்பாளர், 'யாரை பாக்கணும்?' என்று கேட்க, 'அம்மாவை பாக்கணும்...' என்றார், நண்பர். அதற்கு காப்பாளர், 'இங்கே எனக்கு, 147 அம்மாக்கள் இருக்காங்க; நீங்க எந்த அம்மாவ பாக்கணும்...' என்றார்.

நண்பர், தன் அம்மாவின் பெயரை கூற, உடனே அவர், 'கொஞ்சம் காத்திருங்க... அழைச்சிட்டு வர்றேன்...' என்று கூறிச் சென்றவர், சிறிது நேரத்தில், நண்பரின் அம்மாவை பாசத்தோடு கையைப் பிடித்து அழைத்து வந்து, எங்கள் முன் உட்கார வைத்து, நகர்ந்து விட்டார்.

பின், தன் அம்மாவிடம் பெயரளவில் பேசி, நலம் விசாரித்து, பழம் மற்றும் பிஸ்கெட்டுகளை கொடுத்து, இறுக்கமான மனதுடன் வெளியே வந்தார் நண்பர்.

வீடு திரும்பும் போது, நண்பரின் முக வாட்டத்தை அறிந்து, 'என்னாச்சு?' என்றேன். 'எங்கேயோ பிறந்த காப்பாளர், இங்குள்ள அனைவரையும் தன்னுடைய அம்மாங்கிறார். ஆனால், என் சொந்த அம்மாவ, முதியோர் இல்லம் அனுப்பிய பாவியாகி விட்டேனே...' என்றார், வேதனையுடன்!

பின், நண்பரை சமாதானப்படுத்தி, 'இதற்கு உடனடி பரிகாரமாக, சீக்கிரம் உன் அம்மாவ வீட்டிற்கு அழைச்சுட்டுப் போ...' என்றேன்.

ஒரே வாரத்தில், மனைவியை சமாதானப்படுத்தி, தன் அம்மாவை தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார் நண்பர். தற்போது உலகை ஜெயித்த மனநிறைவுடன் இருக்கிறார். விடுதி காப்பாளர் சொன்ன அந்த ஒரு வாக்கியம், ஒரு மூதாட்டிக்கு வாழ்வளித்துள்ளது.

வே.செந்தில்குமார், கொங்கணாபுரம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma on Mon May 16, 2016 12:26 am

@விமந்தனி wrote:வித்தியாசமான, சூழலுக்கேற்ற தானம். நடைமுறை படுத்தலாம் தான்.

ஆமாம், அனாதை இல்லங்களுக்கு சென்று சிலர் தருகிறார்கள், இப்படியும் செய்யலாம் , இது கொஞ்சம் புது idea வாக இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by விமந்தனி on Mon May 16, 2016 12:27 am

@krishnaamma wrote:பெண் மீது பழி போடாதீர்கள்!

தனிக்குடித்தனம் சென்ற என் நண்பனை, சமீபத்தில் சந்தித்த போது, 'என்ன மாப்ள... பெத்தவங்க, கூடப்பிறந்தவங்க தான் முக்கியம்; மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்ன்னு பேசுவ... இப்ப என்னடான்னா திடீர்ன்னு தனிக்குடித்தனம் போயிட்டே...' என்று நக்கலாகக் கேட்டேன்.

அதற்கு அவன், 'இல்லடா மச்சான்... என் மனைவி எதைச் செய்தாலும் எங்கம்மா குற்றம் கண்டுபிடிச்சு, குறை சொல்லிட்டு இருந்தாங்க. அதைக் கூட நான் கண்டுக்கல; எங்கப்பா, பிக்பாக்கெட்காரன்கிட்ட பணத்தை பறி கொடுத்ததுக்கும், என் தம்பி பைக்கில் இருந்து கீழே விழுந்ததுக்கும் என் மனைவி முகத்துல விழிச்சிட்டு போனது தான் காரணம்ன்னு சொல்லி, 'முகராசி இல்லாதவ'ன்னு கண்டபடி திட்டுனாங்க.
'இதுக்கும் மேலேயும் ஒன்னா இருந்தா, பெரிய பிரச்னை வந்துடும்ங்கிறதால தனியா வந்துட்டோம்...' என்றான்.

நண்பன், தன் மனைவி மீது கொண்ட அன்பும், பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சாதுர்யமாக எடுத்த, தனிக்குடித்தன முடிவும் சரியானது என்றே தோன்றினாலும், இப்படியுமா ஒரு பெண் மீது பழிபோட்டு பேசுவர் என்று ஆச்சரியமாக இருந்தது.

பி.சதீஷ்குமார், மதுரை.

ஆச்சர்யமாக தான் இருக்கிறது. வேண்டாதவ கால் பட்டாலும், கை பட்டாலும் குற்றம் தானே?

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 66 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 66 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 66 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

best Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma on Mon May 16, 2016 12:32 am

@விமந்தனி wrote:
@krishnaamma wrote:பெண் மீது பழி போடாதீர்கள்!

தனிக்குடித்தனம் சென்ற என் நண்பனை, சமீபத்தில் சந்தித்த போது, 'என்ன மாப்ள... பெத்தவங்க, கூடப்பிறந்தவங்க தான் முக்கியம்; மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்ன்னு பேசுவ... இப்ப என்னடான்னா திடீர்ன்னு தனிக்குடித்தனம் போயிட்டே...' என்று நக்கலாகக் கேட்டேன்.

அதற்கு அவன், 'இல்லடா மச்சான்... என் மனைவி எதைச் செய்தாலும் எங்கம்மா குற்றம் கண்டுபிடிச்சு, குறை சொல்லிட்டு இருந்தாங்க. அதைக் கூட நான் கண்டுக்கல; எங்கப்பா, பிக்பாக்கெட்காரன்கிட்ட பணத்தை பறி கொடுத்ததுக்கும், என் தம்பி பைக்கில் இருந்து கீழே விழுந்ததுக்கும் என் மனைவி முகத்துல விழிச்சிட்டு போனது தான் காரணம்ன்னு சொல்லி, 'முகராசி இல்லாதவ'ன்னு கண்டபடி திட்டுனாங்க.
'இதுக்கும் மேலேயும் ஒன்னா இருந்தா, பெரிய பிரச்னை வந்துடும்ங்கிறதால தனியா வந்துட்டோம்...' என்றான்.

நண்பன், தன் மனைவி மீது கொண்ட அன்பும், பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சாதுர்யமாக எடுத்த, தனிக்குடித்தன முடிவும் சரியானது என்றே தோன்றினாலும், இப்படியுமா ஒரு பெண் மீது பழிபோட்டு பேசுவர் என்று ஆச்சரியமாக இருந்தது.

பி.சதீஷ்குமார், மதுரை.

ஆச்சர்யமாக தான் இருக்கிறது. வேண்டாதவ கால் பட்டாலும், கை பட்டாலும் குற்றம் தானே?
மேற்கோள் செய்த பதிவு: 1207176

ம்ம், பாருங்களேன் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma on Tue May 17, 2016 12:03 am

எப்போதும் நல்லதையே பேசுங்கள்!

ஒரு கோபக்கார வாலிபன் இருந்தான். அவனுக்குக் கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி எல்லோரையும் மனம் புண்படும் வார்த்தைகளால் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.

நாளடைவில் அவனைப் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். இவனும் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.

ஒரு நாள் அந்த வாலிபன், தன்னுடைய அப்பாவிடம் வந்து தன் நிலையைக்கூறினான். “”என்னை யாருக்கும் பிடிக்கவில்லை. யாரும் என்னிடம் பழகுவதில்லை. என்னிடம் உள்ள இந்த கோபத்தினால் வரும் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசாமல் கோபத்தைக் கட்டுப்படுத்த வழி சொல்லுங்கள்” என்றான். அவன் தந்தை அவனிடம் ஒரு பாத்திரம் நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

ஒவ்வொரு முறை கோபப்படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு, வீட்டுக்குப் பின்னால் உள்ள மரத்தில் ஓர் ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும்படி கூறினார்.

முதல் நாள் அந்த மரத்தில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!

நாளடைவில் ஆணியையும்,சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.
அப்பாவிடம் போய் விவரத்தைச் சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஓர் ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து மரத்தில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார்.

எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் அந்த மரத்தைப் பார்க்கப் போனார்கள். அப்பா மரத்தில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான்.

ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம் என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி அனைவரும் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.

நாமும் கூட நமக்கு கோபம் வரும் போது பிறரை தவறான வார்த்தைகளால் காயப்படுத்தி விடுகிறோம். மேலும் கோபப்பட்டதற்காக வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டாலும் நாம் கூறிய வார்த்தைகள் அவர்கள் உள்ளத்தில் வடுவாகவே காணப்படும்.

ஆகவே நாம் பேசும் போது நாவை அடக்கி, என்ன பேச வேண்டும் என்பதை யோசித்து பேச வேண்டும். இறைவன் நம்மை அவர் சாயலில்தான் படைத்துள்ளார். எனவே அனைவரிடமும் அன்புடன் பேசி பழகினால்தான் இறைவன் நம் மீதும் அன்பாக இருப்பார். நல்லவற்றை பேசுவோம் நலமுடன் வாழ்வோம்.

தினமணி வெள்ளிமணி
ஒய். டேவிட் ராஜா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by krishnaamma on Mon May 23, 2016 10:51 pm

கைவினை தொழிலும் முக்கியம்!

என் சகோதரியின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க, நானும், என் சகோதரியும் அவள் தோழி வீட்டுக்கு சென்றிருந்தோம். அங்கே அவளின் நிர்வாகம் மற்றும் அனைத்து கலைகளிலும் இருந்த ஈடுபாடு கண்டு வியந்து போனோம். காரணம், குடும்ப சூழ்நிலையால், கல்லூரி முதலாம் ஆண்டிலேயே, படிப்பை நிறுத்தி, அவளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். படிப்பை தொடர முடியாத சூழ்நிலையில், அருகில் உள்ள தையல் பயிற்சி பள்ளியில் சேர்ந்து, தையல் மற்றும் எம்ராய்ட்ரிங் கலையை கற்றுள்ளாள்.

இன்று, சுற்று வட்டாரத்திலேயே அனைத்துப் பெண்களாலும் விரும்பப்படும் தையல் கலைஞராக திகழ்வதுடன், அருகில் உள்ளோருக்கும் தையல் கலையைக் கற்றுத்தரும் ஆசிரியராகவும் உள்ளாள். பொழுதுபோக்காக இக்கலையில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த தோழி, இன்று, மாத வருமானமாக கணிசமான தொகை வருவதாக பெருமிதத்துடன் கூறினாள்.

வீட்டில் தானே இருக்கிறோம் என்று இல்லாமல், கிடைக்கும் நேரங்களில் இதுபோன்ற கலைகளில் பெண்கள் ஆர்வம் காட்ட ஆரம்பித்தால், கண்டிப்பாக அவர்களுக்குள் சுய ஆர்வம் வளர்வதுடன், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

க.நாகராணி, உடுமலை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best Re: படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை