புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிராயர்கள்! Poll_c10கவிராயர்கள்! Poll_m10கவிராயர்கள்! Poll_c10 
53 Posts - 50%
ayyasamy ram
கவிராயர்கள்! Poll_c10கவிராயர்கள்! Poll_m10கவிராயர்கள்! Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
கவிராயர்கள்! Poll_c10கவிராயர்கள்! Poll_m10கவிராயர்கள்! Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
கவிராயர்கள்! Poll_c10கவிராயர்கள்! Poll_m10கவிராயர்கள்! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கவிராயர்கள்! Poll_c10கவிராயர்கள்! Poll_m10கவிராயர்கள்! Poll_c10 
3 Posts - 3%
prajai
கவிராயர்கள்! Poll_c10கவிராயர்கள்! Poll_m10கவிராயர்கள்! Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
கவிராயர்கள்! Poll_c10கவிராயர்கள்! Poll_m10கவிராயர்கள்! Poll_c10 
2 Posts - 2%
manikavi
கவிராயர்கள்! Poll_c10கவிராயர்கள்! Poll_m10கவிராயர்கள்! Poll_c10 
2 Posts - 2%
சிவா
கவிராயர்கள்! Poll_c10கவிராயர்கள்! Poll_m10கவிராயர்கள்! Poll_c10 
1 Post - 1%
Barushree
கவிராயர்கள்! Poll_c10கவிராயர்கள்! Poll_m10கவிராயர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிராயர்கள்! Poll_c10கவிராயர்கள்! Poll_m10கவிராயர்கள்! Poll_c10 
216 Posts - 42%
heezulia
கவிராயர்கள்! Poll_c10கவிராயர்கள்! Poll_m10கவிராயர்கள்! Poll_c10 
194 Posts - 38%
Dr.S.Soundarapandian
கவிராயர்கள்! Poll_c10கவிராயர்கள்! Poll_m10கவிராயர்கள்! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
கவிராயர்கள்! Poll_c10கவிராயர்கள்! Poll_m10கவிராயர்கள்! Poll_c10 
18 Posts - 3%
sugumaran
கவிராயர்கள்! Poll_c10கவிராயர்கள்! Poll_m10கவிராயர்கள்! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கவிராயர்கள்! Poll_c10கவிராயர்கள்! Poll_m10கவிராயர்கள்! Poll_c10 
6 Posts - 1%
manikavi
கவிராயர்கள்! Poll_c10கவிராயர்கள்! Poll_m10கவிராயர்கள்! Poll_c10 
4 Posts - 1%
prajai
கவிராயர்கள்! Poll_c10கவிராயர்கள்! Poll_m10கவிராயர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கவிராயர்கள்! Poll_c10கவிராயர்கள்! Poll_m10கவிராயர்கள்! Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
கவிராயர்கள்! Poll_c10கவிராயர்கள்! Poll_m10கவிராயர்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிராயர்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jul 28, 2013 10:38 am

1. திரிகூடராசப்பக் கவிராயர்
இவர் குற்றாலத்துக்கு அருகிலுள்ள "மேலகரம்' என்ற ஊரில் பிறந்தவர். திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய ஞான தேசிகர் இவரின் வழிமுறையினராவார். இவர் இயற்றிய "திருக்குற்றாலக் குறவஞ்சி' நூல், குறவஞ்சி நூல்களுள் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது. இது தவிர, திருக்குற்றாலத் தலபுராணம், மாலை, அந்தாதி, உலா, கோவை, பிள்ளைத்தமிழ் முதலிய சிற்றிலக்கிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

2. சீகாழி அருணாசலக் கவிராயர்
இவர் "தில்லையாடி' எனும் சிற்றூரில் பிறந்தவர். சீகாழியில் வசித்த புலவர் சிதம்பரம் பிள்ளை இவருடைய நண்பர். சிதம்பரம் பிள்ளை, பள்ளு நூல் ஒன்றை இயற்றியிருந்தார். அது நிறைவு செய்யப்படாமல் இருக்க, அதை நிறைவு செய்துதரும்படி அருணாசலக் கவிராயரைக் கேட்டுக்கொண்டார். அருணாசலக் கவிராயரும் அதை நிறைவுசெய்து கொடுத்தார். தில்லையாடியில் வசித்துவந்த அருணாசலக் கவிராயர் சிதம்பரம் பிள்ளையின் வேண்டுகோளின்படி சீகாழியில் குடியேறினார். அன்றிலிருந்து "சீகாழி அருணாசலக் கவிராயர்' என்ற பெயர் பெற்றார். இவர் சீகாழிப்புராணம், சீகாழிக்கோவை, அசோமுகி நாடகம், அனுமார் பிள்ளைத்தமிழ், இராமநாடகம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

3. அமிர்த கவிராயர்
இவர் சிவகங்கையைச் சார்ந்த 'பொன்னங்கால்' எனும் ஊரில் பிறந்தவர். சேது நாட்டை ஆண்ட திருமலை சேதுபதி காலத்தில் வாழ்ந்தவர். ஒருமுறை திருமலை சேதுபதி "அகத்துறையில் ஒரு துறையை பல பாடல்களால் பாட முடியுமா?' என்று கேட்க, "நான் நூறு' பாடுவேன் என்றார் அமிர்தகவி. அவைப் புலவர்கள் "கவிராயர் "நானூறு' பாடல்கள் பாடவேண்டும்' என்றனர். அமிர்த கவிராயரும் "நாணிக் கண்புதைத்தல்' எனும் துறையை எடுத்துக்கொண்டு நானூறு பாடல்களைப் பாடினார். அதைக்கேட்ட அரசர், கவிராயரின் ஊராகிய பொன்னங்காலையே அவருக்குக் கொடையாக வழங்கினார்.

4. முகவூர் கந்தசாமிக் கவிராயர்
இவர் சேற்றூருக்கு அருகில் உள்ள "முகவூரில்' பிறந்தவர். திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய தேசிகரோடு, தாண்டவராயத் தம்பிரானிடம் கல்வி கற்றவர். முகவூரில் விநாயகர் கோயில் அமைத்து வழிபாடுகளை ஏற்படுத்தியவர்.

நன்றி- தினமணி - முனைவர் அ.சிவபெருமான்



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jul 28, 2013 10:40 am

5. மு.இராமசாமிக் கவிராயர்
இவர் நெல்லையைச் சேர்ந்த சேற்றூரில் பிறந்தவர். முகவூர் கந்தசாமிக் கவிராயரின் மகன். இவருடைய பிள்ளைகளே மு.ரா.அருணாசலக் கவிராயர், சே.ரா. சுப்பிரமணியக் கவிராயர், மு.ரா.கந்தசாமிக் கவிராயர்கள் ஆவர். இவர், பொம்மு நாயக்கர், பாஸ்கர சேதுபதி, பாண்டித்துரைத் தேவர், ஊற்றுமலை ஜமீன் ஆகியோரால் பாராட்டப் பெற்றவர். நிறைய தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். இவரும் இவருடைய மகன் சுப்பிரமணியக் கவிராயரும் சேற்றூர் ஜமீன் முத்துசாமித்துரை மீது குறவஞ்சி பாடியுள்ளனர்.

6. மு.ரா. அருணாசலக் கவிராயர்
இவர் சேற்றூர் அருகிலுள்ள முகவூரில் பிறந்தவர். மு.இராமசாமிக் கவிராயரின் மகன். வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியாரின் உற்ற நண்பராக விளங்கியவர். சேறைத் தவம்பெற்ற நாயகி பிள்ளைத்தமிழ், சிவகாசித் தலபுராணம், பர்வதவர்த்தினியம்மை பிள்ளைத்தமிழ், ஒற்றைக்கடை விநாயகர் அந்தாதி, இரட்டைமணி மாலை, மும்மணிக்கோவை, குற்றாலப்புராணம், வேணுவன புராணம், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் முதலிய நூல்களுள் சிலவற்றை இயற்றியும், சிவவற்றை பதிப்பித்தும் உள்ளார்.

7. சே.ரா.சுப்பிரமணியக் கவிராயர்
இவர் முகவூர் இராமசாமிக் கவிராயரின் இரண்டாவது மகன். நமச்சிவாய தேசிகரிடம் கல்வி பயின்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து குறிப்புரைகள் எழுதி பதிப்பித்தவர். இவர் தன் தந்தையுடன் இராயப்பட்டி ராயப்ப உடையாரை சந்திக்கச் சென்றபோது குதிரைக் குட்டியைப் பரிசாகப் பெற்றுள்ளார். இவர், மதுரை மீனாட்சியம்மை கொம்பைத் தமிழ் நூலையும் பல தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்.

8. மு.ரா.கந்தசாமிக் கவிராயர்
இவர் முகவூர் இராமசாமிக் கவிராயரின் மூன்றாவது மகன். துறைசை ஆதீனம் நமச்சிவாயத்திடம் கல்வி பயின்றவர். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையுடன் நட்பு பூண்டிருந்தவர். சிறிது காலம் ஆசிரியராகவும், பின்னர் மதுரையில் விவேக பாநு அச்சகம் தொடங்கி, "விவேக பாநு' என்ற பத்திரிகையையும் நடத்தியவர். திருப்பேரூர் திரிபந்தாதி, குமண சரித்திரம், பவ நிவேத நாயகியம்மை பிள்ளைத்தமிழ், கருமலையாண்டவர் துதி மஞ்சரி, அரிமழத் தலபுராணம், வியாசர் திரட்டு (இரண்டு பாகம்), தனி செய்யுள் சிந்தாமணி முதலிய நூல்களை எழுதியுள்ளார்.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jul 28, 2013 9:55 pm

கவிராயர்கள் பற்றி நல்ல தொகுப்பு சூப்பருங்க சூப்பருங்க  ஐயா



[You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 04, 2013 8:35 am

9. முகவூர் மீனாட்சிசுந்தரக் கவிராயர்
இவர் முகவூர் கந்தசாமிக் கவிராயருடைய மகன். சேற்றூர் சமஸ்தானப் புலவராக விளங்கியவர். வண்டு விடு தூது, முருகர் அநுபூதி, திருப்பரங்குன்றம், குதிரைமலை பதிகங்கள் முதலிய நூல்களையும் பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.

10. திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர். இயற்பெயர் சடையன். இவர் முன்னோர்கள் திருக்கோயில் புலவர்களாக விளங்கியதால், "திருக்குருகைப் பெருமாள் கவிராயர்' என்ற பெயரே இவர் வழிவந்தோர்க்கு வழங்கப்பட்டு, இயற்பெயர் மறைந்துவிடும். இவரும் தன் தந்தையாருக்குப் பிறகு கோயில் புலவராக இருந்தவர். மாணவர்களுக்குப் பாடம் கற்பித்தும், பழந்தமிழ் நூல்களைத் தேடிச் சேகரித்து, பாதுகாத்தும் வந்தவர். ஆதிநாதபட்டரின் வேண்டுகோளுக்கு இணங்க வடமொழியில் இருந்த குருகூர் மான்மியத்தை தமிழில் "திருக்குருகூர் மான்மியம்' என்ற பெயரில் கி.பி.1548-இல் இயற்றியுள்ளார். மேலும், நம்பெருமாள் மும்மணிக்கோவை, மாறன் கிளவிமாலை, மாறன் அலங்காரம், மாறன் அகப்பொருள் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

11. பன்னிருகைப்பெருமாள் கவிராயர்
இவர் பத்தைபண்டிதன் குறிச்சி என்னும் ஊரைச் சேர்ந்தவர். குலசேகரநாதக் கவிராயரின் மகன். திருச்செந்தூர் "கந்தர் அற்புதமாலை' எனும் நூலை (மூன்று பாகங்கள்) இயற்றியுள்ளார்.

12. அ. குழந்தைக் கவிராயர்
இவர் குன்றக்குடியில் பிறந்தவர். குன்றக்குடி முருகன் மீது தினம் ஒரு பாடல் பாடி, "தினகவிதை' என ஒரு நூலை இயற்றியுள்ளார்.

13. குமார கவிராயர்
இவர் திருவைகுண்டத்தில் பிறந்தவர். சண்முகக் கவிராயரின் மகன். இவரைக் குமாரகவிகள் என்றும் அழைப்பர். குமரகுருபர சுவாமியின் உடன்பிறந்த சகோதரர் இவர். குமரருபரரின் பாடல்களை ஏட்டில் எழுதும் பணியை இவரே புரிந்து வந்துள்ளார். மதுரை மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் அரங்கேற்றத்தின்போது அந்நூலை இவரே படித்தார் என்றும் கூறுவர்.

14. அரங்கநாதக் கவிராயர்
இவர் புதுவையைச் சேர்ந்தவர். நல்லாப்பிள்ளை பாரதத்தையும், பிரகலாதன் நாடகத்தையும் உரைநடையில் இயற்றியுள்ளார்.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 11, 2013 9:47 am

15. க. அருணாசலக் கவிராயர்
இவர் சேற்றூர் கந்தசாமிக் கவிராயரின் மகன். நவராத்திரி மஞ்சரி, வேங்கடாசலபதி பிராத்தனை, மானுப்பட்டி தையல் அண்ணக் கவுண்டர் ஒருதுறைக்கோவை முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

16.பரசுராமக் கவிராயர்
இவர் புரசைவாக்கத்தில் பிறந்தவர். சிறுத்தொண்டர் விலாசம் என்ற (சிற்றிலக்கிய) நூலை இயற்றியுள்ளார்.

17. அட்டாவதானம் இராமசாமிக் கவிராயர்
பாண்டிநாட்டிலுள்ள புளியங்குளம் என்ற ஊரைச் சேர்ந்த இவர், அருணாசலக் கவிராயரின் மகன். இராமநாதபுரம் அரசவைப் புலவர் சரவணப்பெருமாள் கவிராயரின் பெயரன். பெ.மா.மதுரைப் பிள்ளை மீது மதுரை மார்கண்ட மாலை, ஒருதுறைக்கோவை, மதுரைத் தோப்பு சிங்காரபதம், மதுரைக் காதல் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

18. சி. இராமசாமிக் கவிராயர்
இவர் தென்குளத்தாபுரியில் வாழ்ந்தவர். மகாபாரதக் கும்மியை இயற்றியுள்ளார்.

19. அ. கந்தசாமிக் கவிராயர்
இவர் விருதுநகர் அண்ணாமலைப் பிள்ளையின் மகன். சாலிச்சந்தை கருணானந்த சுவாமி மீது "கருணானந்த மாலை' என்ற நூலை இயற்றியுள்ளார்.

20. சே. இராமசாமிக் கவிராயர்
இவர் "சேதனப்பட்டு' என்ற ஊரில் வாழ்ந்தவர். திருப்போரூர் முருகன் மீது பத்து பாடல்களைக் கொண்ட "இரண்டை ஆசிரிய விருத்தம்' என்ற நூலை இயற்றியுள்ளார்.

21. கே. சிதம்பரக் கவிராயர்
இவர் "அடைக்கலாபுரம்' என்ற ஊரைச் சேர்ந்தவர். "முருக கருணாகர வித்துவரத்தினம்' என்ற விருது பெற்றவர். "சூரியலிங்கப் பெருமான் சரித்திரம்' எனும் நூலை இயற்றியுள்ளார். இது ஓர் இசை நூலாகும்.

22. கூறைநாடு சாமிநாதக் கவிராயர்
இவர் மாயூரம் அருகில் உள்ள கூறைநாட்டைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கிய இவர், "பரங்கிப்பேட்டை அங்காளியம்மன் பதிகம்' ஒன்றை இயற்றியுள்ளார்.

23. கல்லிடைக்குறிச்சி சாமிநாதக் கவிராயர்
கல்லிடைக்குறிச்சியில் வாழ்ந்த இவர், கல்லிடைக்குறிச்சி சிவசுப்பிரமணிய கவிராயரின் தந்தையாவார். "பொதிகை நிகண்டு' என்ற நிகண்டு நூல் ஒன்றை இயற்றியுள்ளார்.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 10, 2013 6:41 am

24. அட்டாவதானம் சரவணக் கவிராயர்
இவர் முதுகுளத்தூரில் பிறந்தவர். முத்துராமலிங்க சேதுபதியின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். பணவிடு தூது, தருமர் அசுவமேதயாக புராணம், விநாயகர் திருமுகவிலாசம், முத்திருப்பப் பிள்ளை மீது காதல் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

25. அரங்கநாதக் கவிராயர்
இவர் சேக்கிழார் வழிவந்த மரபினர் என்பர். இவருடைய பாட்டனார்தான் சொக்கநாதப் புலவர். அரங்கநாதக் கவிராயர், கோட்டூர் சிற்றரசர் திருமலைரெட்டி என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க வில்லிபாரதத்தின் பிற்பகுதியை(2477 பாடல்கள்)ப் பாடியுள்ளார்.

26.முத்துக்குமாரக் கவிராயர்
இவர் யாழ்ப்பாணம் அம்பலவாண பிள்ளையின் மகன். முத்துக்குமாரக் கவிராயரிடம் கல்வி பயின்ற மாணவர்தான் சி.வை.தாமோதரம் பிள்ளை. ஏசுமத பரிகாரம், ஞானக்கும்மி, நடராஜர் பதிகம், ஐயனார் ஊஞ்சல் முதலிய நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

27. அனந்த கவிராயர்
இவர் ரகுநாத சேதுபதியின் (சேதுநாடு) அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். ரகுநாத சேதுபதியைப் புகழ்ந்து பல பாடல்களையும், மதுரை பதிற்றுப்பத்து அந்தாதியையும் பாடியுள்ளார். சேதுபதியிடம் மானூரையும், கலையூரையும் இவர் நன்கொடையாகப் பெற்றுள்ளார்.

28. முருகேசக் கவிராயர்
இவர் பாளையஞ்சேரி என்ற கிராமத்தில் பிறந்தவர். பரசுராமப் பிள்ளையின் மகன். புதுக்கோட்டை அரசவைப் புலவராகத் திகழ்ந்தவர். பஞ்சரத்தின மாலை, ஆனந்தக் களிப்பு, சிந்து, உலகநாதசாமி சரித்திர அகவல் முதலிய நூல்களையும் பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.

29. சேறைக் கவிராயர்
இவர் திருச்சேறையில் (சோழநாடு) பிறந்தவர். இவருக்கு ஆசுகவி ராசர், ஆசு கவிராச சிங்கம், வண்ணக் களஞ்சியம் ஆகிய பட்டப்பெயர்களும் உண்டு. இவரை ஆதரித்துப் போற்றியவர் காளத்தி வேங்கடாசல முதலியார். இவர் திருக்காளத்திநாதர் உலா, திருக்காளத்திநாதர் இட்டகாமிய மாலை, சேயூர் முருகன் உலா, திருவண்ணாமலையார் வண்ணம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார். இவர் அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் காலத்துக்கு முந்தையவர் என்றும் கூறுவர்.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 10, 2013 6:44 am

30.செஞ்சாலி வன்னியப்பக் கவிராயர்
இவர் செஞ்சாலி என்ற ஊரில் வாழ்ந்தவர். தஞ்சை இராசமன்னார் கோயில் சாமிநாத பாகவதரிடம் கல்வி பயின்றவர். "பாபநாசம் உலகம்மை பதிகம்' என்ற நூலை இயற்றியுள்ளார்.

31 முருகதாசக் கவிராயர்
இவர் குலசேகரபுரத்தில் (சேரநாடு) பிறந்தவர். இவரது இயற்பெயர் சிவராமலிங்கம் பிள்ளை. முருகன் திருவருள் வாய்க்கப்பெற்ற இவர், குற்றாலம் அருகில் உள்ள "திருமலை'க்குத் தலபுராணம் பாடியுள்ளார். திருமலைக் குமரன் திருப்புகழ், திருமலைக் குமரன் அந்தாதி, திருமலைக் குமரன் பதிகம் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

32. வைரவநாதன் கவிராயர்
இவர் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள அணியாபரணநல்லூரில் பிறந்தவர். அடைக்கலச் சதகம், திருச்செந்தூர் யமகக் கோவை, போற்றி மாலை, கழுகாசலர் கோவை, திருச்செந்தூர் சிலேடை வெண்பா முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

33. சங்கரமூர்த்திக் கவிராயர்
இவர் இராஜபாளையத்தில் பிறந்தவர். திருவாவடுதுறை சிவஞான முனிவரிடம் இலக்கண-இலக்கியங்களையும் சைவ சிந்தாந்தங்களையும் கற்றவர். சேற்றூர் அவைக்களப் புலவராக விளங்கிவர். கன்னிவாடி மலையாண்டி சுப்பைய நாயக்கர் மீது ஐந்திணை கோவை, மாலைமாற்று, சித்திரக்கவி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

34. ச. திருமலைவேற் கவிராயர்
கரிவலம்வந்தநல்லூருக்கு அருகிலுள்ள எட்டிசேரி என்ற கிராமத்தில் பிறந்த இவர், சங்குப்
புலவரின் மகன். தன் பாட்டனார் திருமலைவேற் புலவரிடம் இலக்கண-இலக்கியங்களைப் பயின்றவர். ஊற்றுமலை மன்னர், சேற்றூர் மன்னர் ஆகியோரிடம் பாடிப் பரிசில் பெற்றவர். கருவைத் தலபுராணத்தை (1345 பாடல்கள்) இயற்றியுள்ளார். மேலும், பால்வண்ணநாதர் வண்ணம், மும்மணி மாலை, குருநாதத் தேவர் காதல், கோமதி பதிகம், வெண் செந்துறைப் பாமாலை, கருவை சந்தப்பா முதலிய நூல்களையும் பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.

35. வேங்கடத்துறைவான் கவிராயர்
இவர் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர். ராமன் மீது மிகுந்த பக்தி கொண்ட இவர், ஆழ்வார் திருநகரி, ஆழ்வார் கோயில் திருமுழுக்குப் பணியைச் செய்தவர். "மாறன் கோவை' (526 பாடல்கள்) என்ற நூலை இயற்றியுள்ளார்.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 10, 2013 6:47 am

36. அம்பலவாணக் கவிராயர்
இவர் சீகாழி அருணாசலக் கவிராயரின் மகன். அறப்பள்ளீசுர சதகம் பாடியுள்ளார்.

37. சுப்பிரமணியக் கவிராயர்
இவர் திருக்கடவூர் கோயிலில் ஓதுவாராக விளங்கியவர். திருக்கடவூர் புராணம், திருக்கடவூர் உலா, மயிலைக் கோவை, மயிலை அந்தாதி முதலிய நூல்களை எழுதியுள்ளார்.

38. உடுமலைப்பேட்டை கந்தசாமிக் கவிராயர்
இவர் கம்பராமாயணம் - ஆரணிய காண்டத்திற்கும், தமிழறிஞர் அரசஞ் சண்முகனார் இயற்றிய மாலைமாற்றுக்கும் உரை எழுதிப் பதிப்பித்தவர். அரிமழ தலபுராணம் பாடியுள்ளார்.

39. சுவாமி கவிராயர்
இவர் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர். "பொதிகை நிகண்டு' என்ற நூலை இயற்றியுள்ளார்.

40. கந்தசாமிக் கவிராயர்
வீராச்சி மங்கலத்தில் (கொங்கு மண்டலம்) வாழ்ந்தவரான இவர், சின்னக் கருப்பண்ண கவிராயரின் மகன். "வேளாளர் புராணம்' என்ற நூலை இயற்றியுள்ளார்.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 10, 2013 6:49 am

41.நகரம் முத்துச்சாமிக் கவிராயர்
இவர் சங்கரன்கோயிலைச் சேர்ந்த "நகரம்' எனும் கிராமத்தில் பிறந்தவர். தேவியின் அருள் பெற்றவர்; வாக்குப்பலிதம் உடையவர். போடிநாயக்கனூர் பெருநிலக்கிழார் மீது அன்னம் விடு தூது, ஆத்திப்பட்டி சங்கிலி வீரப்பப் பாண்டிய வன்னியர் மீது பள்ளு, புரவிப்பாளையம் பெருநிலக்கிழார் மீது விஜயகும்மி, கருங்காலக்குடிக் காதல், கும்மிபதம், குறவஞ்சி முதலிய நூல்களையும் பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.

42. மாம்பாக்கம் திருச்சிற்றம்பலக் கவிராயர்
இவர் மாம்பாக்கத்தில் வாழ்ந்தவர். அண்ணாமலைச் சதகம் என்ற நூலை இயற்றியுள்ளார். இவரை திருச்சிற்றம்பலக் கவிராயர் என்றும் அழைப்பர்.

43. கந்தசாமிக் கவிராயர்
வீராச்சி மங்கலத்தில் (கொங்கு மண்டலம்) வாழ்ந்தவரான இவர், சின்னக் கருப்பண்ண கவிராயரின் மகன். "வேளாளர் புராணம்' என்ற நூலை இயற்றியுள்ளார்.

44. முத்தமிழ்க் கவிராயர்
இவர் கி.பி.1994-இல் வாழ்ந்தவர். "சுசீந்திர தலபுராணம்' இயற்றியுள்ளார்.

45. பொன்னாயிரங் கவிராயர்
இவர் சேற்றூரில் பிறந்தவர். இயற்பெயர் சிந்தாமணிப் பிள்ளை. சேறைத் தலபுராணம் அரங்கேற்றத்தின்போது, மன்னர் பூமாரிப் பொழிந்து, 1000 பொற்காசுகளைக் கொண்டு கவிராயரை அபிஷேகம் செய்து போற்றியதால், "பொன்னாயிரங் கவிராயர்' எனப்பட்டார். சேறைத் தலபுராணம், புதுவை வடவாரீசர் புராணம், தென்மலைத் திரிபுரத்தீசர் புராணம், செந்தமிழ்ப் பாமாலை, திருவோலத்து வெற்புமை நான்மணிமாலை, சேறை பதிற்றுப்பத்தந்தாதி, கலம்பகம், உலா, ஒளிர்மணி மாலை, சங்கர குமாரர் பிள்ளைத்தமிழ், உபய விநாயகர் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

46. கோவை அருணாசலக் கவிராயர்
இவர் கோவையைச் சேர்ந்தவர். யவன காவியம், பேரூரு உலா, அவிநாசி உலா, பாம்பண்ணகாண்டன் குறவஞ்சி, மருதாசலக் கடவுள் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

47. சிறைமீட்டான் கவிராயர்
இவர் கொங்குநாட்டு "பாகை' எனும் ஊரில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் பிள்ளைப்பெருமாள் சிறைமீட்டான் கவிராயர். இவர், அர்த்தநாரீசுவரர் சந்திரசேகர மாலை, கபிலமலை குழந்தைக் குமாரர் வருக்கக் கோவை முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 18, 2013 6:22 pm

நமச்சிவாயக் கவிராயர்
இவர் பாவநாசம் அருகில் உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் பிறந்தவர். மாதவ சிவஞான யோகியின் தந்தையாகிய ஆனந்தக்கூத்தரின் உடன்பிறந்தவர். பாவநாசம் உலகம்மை மீது பேரன்பு கொண்டு நாள்தோறும் வழிபட்டு வந்தவர். ஒருமுறை உலகம்மை அவருடைய மகளாக வந்து உணவு படைத்தாளாம். கவிராயர், நோய்வாய்ப்பட்டு தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றபோது, உலகம்மை தடுத்து அருள்புரிந்தார் என்றும் கூறுவர். இவர், உலகம்மை பிள்ளைத்தமிழ், உலகம்மை கலித்துறை அந்தாதி, கொச்சகக் கலிப்பா, சந்தவிருத்தம், சிங்கை சிலேடை வெண்பா முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

சுவிசேடக் கவிராயர்
தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் எனப்படும் இவர், தஞ்சை சரபோஜி மன்னரின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்.  இவர் சுவார்ட்ஸ் ஐயரிடம் கல்வி பயின்றவர். இவரும் சரபோஜி மன்னரும் சுவார்ட்ஸ் ஐயரின் ஒருசாலை மாணாக்கர்கள். இவர் தமிழ்ப் பாடல்களில் அதிகம் இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டு பாடல்கள் இயற்றியதால் இவருக்கு "சுவிசேடக் கவிராயர் தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார்' எனப் பட்டம் வழங்கப்பட்டது. இவர் நோவா பேழை, பெத்தலேகம் குறவஞ்சி ஆகிய கவிதைத் தொகுதிகளை இயற்றியுள்ளார்.

சம்புலிங்கபுரம் திருவண்ணாத கவிராயர்
இவர் சம்புலிங்கபுரத்தில் வாழ்ந்தவர். சங்கரன் கோயில் கோமதியம்மை பதிகம், கோமதியம்மை தோத்திரப் பாமாலை, சித்தி விநாயகர் தோத்திர மாலை, பிரசன்ன விநாயகர் தோத்திரம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

பெரும்புலவர் இராமாநுஜக் கவிராயர்
இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கும், ஆண்டாளின் திருப்பாவைக்கும் விரிவுரை எழுதியுள்ளார். மகாத்மா காந்தி காவியத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். மேலும் 24க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.

செல்லக்குமார கவிராயர்
இவர் வேட்டைக்காரன்புதூர் (கோவை) சரவணப் பெருமாளின் மகன். "சரவண மாலை' என்னும் நூலை இயற்றியுள்ளார்.

இராமரத்னக் கவிராயர்
இவர் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்தவர். "ஆழ்வார்திருநகரி இராமரத்தினக் கவிராயர்' என்றே அழைக்கப்பட்டார். இவர், பெரிய திருவடிக் கவிராயரின் மகனாவார். "குருகை மாலை' என்ற நூலை இயற்றியுள்ளார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக