ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 kaniraaj

வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
 ayyasamy ram

வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
 ayyasamy ram

வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
 ayyasamy ram

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
 ayyasamy ram

உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
 ayyasamy ram

சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
 ayyasamy ram

எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்
 ayyasamy ram

சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
 ayyasamy ram

ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா
 ayyasamy ram

AroundU - ஆன்லைன் பார்மஸி பற்றி தெரியுமா ?
 Mr.theni

கொஞ்சம் அமுதம், கொஞ்சம் விஷம்
 Mr.theni

படமும் செய்தியும் -படித்ததை பகிர்தல்- தொடர்பதிவு
 ayyasamy ram

சமையல் – டிப்ஸ்
 ayyasamy ram

மறதி – நகைச்சுவை
 ayyasamy ram

சிரிக்கும் மண்டை ஓடுகள் – ட்விட்டரில் ரசித்தவை
 ayyasamy ram

முகநூல் பகிர்வு –
 ayyasamy ram

சேப்டிபின் அறிமுகப்படுத்தியவர் – பொ.அ.தகவல்
 ayyasamy ram

தலைவரை கடுப்பேத்திய பட்டி மன்ற தலைப்பு…!
 ayyasamy ram

தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
 ayyasamy ram

தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
 ayyasamy ram

இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
 ayyasamy ram

சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !
 T.N.Balasubramanian

முத்தலாக் - மாற்றி யோசித்த பெண்.
 சிவனாசான்

பைனான்ஸ் கம்பெனியை திறந்து வைக்கும் கவர்ச்சி நடிகை…!!
 சிவனாசான்

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 சிவனாசான்

அருட்களஞ்சியம்
 சிவனாசான்

சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
 சிவனாசான்

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 சிவனாசான்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
 சிவனாசான்

மரத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு…!!
 சிவனாசான்

கேரளா நிலைச் சரிவில் மூன்று மாடிக் கட்டிடம் அடித்து செல்லப்படும் காட்சி
 சிவனாசான்

எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் கண்டுபிடிக்கலாம்: வழி சொல்லும் கூகுள்
 Mr.theni

நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
 ayyasamy ram

பல்லக்கு மேல ஏன் சிவப்பு கொடி பறகுது…?
 ayyasamy ram

நாளை முதல் குடிக்க மாட்டேன்,,,!!
 ayyasamy ram

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
 krishnaamma

நிவாரணப்பொருள் அனுப்ப ரயிலில் கட்டணம் இல்லை
 krishnaamma

கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
 T.N.Balasubramanian

கின்னஸுக்கு போட்டியிட்ட மூன்று வயது சஞ்சனா.
 T.N.Balasubramanian

பிரதமர்’ மனைவிக்காக வேலையைத் துறந்த கணவர்!
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில
 Meeran

அமெரிக்காவுடன் நேரடி பேச்சு வார்த்தை - தலீபான்கள் விருப்பம்
 ayyasamy ram

செப்.5-இல் அமைதிப் பேரணி: மு.க.அழகிரியின் அதிரடி திட்டம்
 ayyasamy ram

தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
 ayyasamy ram

மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி
 Mr.theni

வாரியார் வாழ்க்கையில்...
 சிவனாசான்

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சும்மாயிருக்கும் போது….
 சிவனாசான்

கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - ராகுல் வலியுறுத்தல்
 சிவனாசான்

மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
 சிவனாசான்

வாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்
 சிவனாசான்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் காலமானார்
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்- சிறுவர்மலர்
 சிவனாசான்

உஷார் மாப்பிள…!! – ஒரு பக்க கதை
 சிவனாசான்

திருத்தணி முருகா - திரைப்பட பாடல் - காணொளி
 ayyasamy ram

அமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா
 SK

கொள்ளிடம் பழைய பாலம் இடிக்கப்படும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 
kaniraaj
 
SK
 

Admins Online

ஆடி மாதத்து ஆதிரை விழா!

View previous topic View next topic Go down

ஆடி மாதத்து ஆதிரை விழா!

Post by சாமி on Sun Jul 28, 2013 10:19 am

ஆதிரையான் என்பது சிவபெருமானின் திருநாமம். அவர்க்குரிய திருநாள் மார்கழி மாதத்துத் திருவாதிரை நாளாகும். அதனால்தான் தில்லை போன்ற திருத்தலங்களில் ஆதிரை நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றது. தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் காணப்பெறும் கல்வெட்டுச் சாசனங்களில் மார்கழி மாதத்து ஆதிரை நாள் தமிழ்நாட்டு மன்னர்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பெற்ற திருநாளாக குறிக்கப்பெற்றுள்ளன.

திருநாவுக்கரசு பெருமானார் திருவாரூரில் தான் கண்ட ஆதிரை நாளின் சிறப்புக்களை "முத்து விதானம்' எனத் தொடங்கும் திருவாதிரைத் திருப்பதிகத்தின் பத்துப் பாடல்களில் "ஆதிரைநாளால் அது வண்ணம்' என முடியும் சொற்றொடர்களோடு குறிப்பிட்டு தான் திருவாரூரில் கண்ட அவ்விழா பற்றிய செய்திகளைப் பதிவு செய்துள்ளார். திருவாரூரில் நிகழ்ந்த ஆதிரை விழா அளப்பரிய சிறப்புடைய விழாவாகும்.

அப்பர் சுவாமிகளே மார்கழி விழாவைக் கண்டு களித்த ஊர் திருவாரூர் என்ற காரணத்தால்தானோ என்னவோ மாமன்னன் இராஜேந்திர சோழன் தான் பிறந்த ஆடித் திருவாதிரை நாள் விழாவையும், தன் தந்தை (அய்யன்) இராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நாளையும் ஆரூர் இறைவனின் திருநாளான மார்கழி ஆதிரை நாளையும் மிகச் சிறப்பாக அக்கோயிலில் கொண்டாட ஏற்பாடுகளைச் செய்தான். அங்கு அவன் வெட்டுவித்த கல்வெட்டுச் சாசனம் இம்மூன்று விழாக்கள் பற்றி தெளிவுபட விவரிக்கின்றது:

""பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பர கேசரிவர்மன்'' என்று கல்வெட்டுக்கள் புகழ்ந்து கூறும் அரசனாகிய இராஜேந்திர சோழன் மாமன்னன் இராஜராஜனுக்கும், அவன் தேவி வானவன்மாதேவிக்கும் ஆடி மாதத்து ஆதிரை நாளில் திருமகனாகப் பிறந்தவன். மதுராந்தகன் என்பது இவனது இயற்பெயராகும். சோழ அரசர்கள் மாறி மாறி புனைந்து கொள்ளும் "ராஜகேசரி', "பரகேசரி' என்ற பட்டப் பெயர்களில் ஒன்றான "பரகேசரி' என்பதனை தன் பட்டமாகச் சூடிக் கொண்டான். கி.பி. 1012-இல் இராஜராஜனால் இளவரசாக நியமனம் பெற்றவன், கி.பி.1014-இல் தன் தந்தையின் மரணத்திற்குப் பின்பு சோழப் பேரரசனாக "இராஜேந்திரசோழன்' எனும் திருநாமத்தோடு அரியணையில் அமர்ந்தான்.

தான் பேரரசனாக அரியணையில் அமர்ந்த நான்காம் ஆண்டிலேயே (கி.பி.1018-இல்) தன் மகன் முதலாம் இராஜாதிராஜனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி தன்னோடு இணைத்துக் கொண்டு, கி.பி. 1044-ஆம் ஆண்டு வரை முப்பதாண்டுக்காலம் பரந்துபட்ட சோழப் பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான்.

தன் வீரத்தைக் காட்டி நிற்கும் பட்டப்பெயரான "கங்கை கொண்டான்' என்ற பெயரினை நினைவூட்டும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரைக் கொள்ளிடத்திற்கு வடபால் தோற்றுவித்தான். அங்குக் கோட்டை, கொத்தளங்களையும், அரண்மனையையும் அமைத்ததோடு, கங்கை கொண்ட சோழீச்சுரம் எனும் திருக்கோயிலையும் எடுப்பித்தான். வடபுலத்து அரசர்களை வென்று கங்கையிலிருந்து கொணர்ந்த புனித நீரைத்தான் அந்நகரில் தோற்றுவித்த "சோழகங்கம்' எனும் ஏரியில் விடுத்து, தன் வெற்றிக்கு "ஜலஸ்தம்பம்' எடுத்தான். பொதுவாக வெற்றியைக் கொண்டாட ஜெயஸ்தம்பம் - வெற்றித்தூண் நிறுவுவது வழக்கம். ஆனால் இப்பெருவேந்தனோ ஜலஸ்தம்பம் எடுத்ததாகக் கல்வெட்டில் கூறிக்கொள்கிறான்.

தமிழிசைக்கு செய்த தொண்டு: தமிழின்பாலும், தமிழிசையின்பாலும் தணியாத தாகமுடையவனாகவே வாழ்ந்தான். பண்டித சோழன் என்ற சிறப்புப் பெயரும் பெற்றான். ஒருமுறை பழையாறை அரண்மனையில் இப்பேரரசன் உணவு அருந்திக் கொண்டிருந்தான். அவ்வேளையில் அங்குவந்த அவனது போர்த்தளபதி இராசராச பிரம்மராயன் என்பவன் மன்னனிடம் ஒரு விண்ணப்பம் செய்தான். அந்த விண்ணப்பம் போர் பற்றியதோ அல்லது ஆட்சி பற்றியதோ அல்ல. திருக்கற்குடி (திருச்சிராப்பள்ளி - உய்யகொண்டான் திருமலை) சிவாலயத்தில் மூவர் தேவாரம் பாடும் ஓதுவார்களுக்காக நிவந்தம் வேண்டி விண்ணப்பம் செய்தான். உணவு அருந்திக் கொண்டே காது கொடுத்துக் கேட்ட இராஜேந்திர சோழன் உளம் மகிழ்ந்து தமிழ்பாடும் இசைவாணர்களுக்காக திருக்கற்குடியில் நிலமளித்து ஆணையிட்டான். அப்படியே கல்லிலும் எழுதச் செய்தான். நிலம் அளித்தவனோ கங்கையும் கடாரமும் வென்ற சோழப் பேரரசன். தமிழ் பாடுபவர்களுக்காக விண்ணப்பித்தவனோ பல போர்களைக் கண்ட சோழர் தளபதி. அதுமட்டுமன்று, அத்தளபதி பின்னாளில் மேலைச் சாளுக்கியரோடு நிகழ்ந்த போரில் வீரமரணம் அடைந்தவன். அவனுக்காகக் கீழைச் சாளுக்கிய மன்னன் இராஜராஜ நரேந்திரன் அந்த இடத்திலேயே சமாதிக் கோயிலும் எடுத்தான். மன்னனும், தளபதியும் தமிழுக்காகவும் தமிழிசைக்காகவும் காட்டிய ஈடுபாட்டைத்தான் இந்த வரலாறு நமக்கு உணர்த்து
கின்றது.

"சிவபாதசேகரன்' என இராஜராஜனும் "சிவசரண சேகரன்' என இராஜேந்திரனும் பட்டங்கள் சூடிக் கொண்டனர். சிறந்த சைவனாக இராஜேந்திர சோழன் விளங்கிய போதும், மற்ற சமயத்தவர்களிடத்தில் நேசமுடன் திகழ்ந்தான். நாகப்பட்டினத்தில் கடாரத்து அரசனால் எடுக்கப்பட்ட பெüத்த பள்ளிக்கு பள்ளிச் சந்தமாக (கொடை) பல ஊர்களை இராஜராஜன் அளித்திருந்தான். அதற்கான செப்பேட்டுச் சாசனத்தை இராஜேந்திர சோழனே கடாரத்து அரசனுக்கு வழங்கினான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வரலாற்றுக் குழப்பம்: சோழர் வரலாற்றை ஆய்ந்து அறிந்து எழுதிய அறிஞர் பெருமக்கள் திருவாரூரில் உள்ள இராஜேந்திர சோழனின் கல்வெட்டை அறிந்திராத காரணத்தால் திருவொற்றியூரில் உள்ள ஒரு கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் மார்கழி திருவாதிரை நாளினை இராஜேந்திர சோழன் திருநாளாகக் கொண்டாடப்பெறும் செய்தியினை அறிந்து, மார்கழி திருவாதிரையே இராஜேந்திரனின் பிறந்த நட்சத்திரம் என பதிவு செய்தனர். தன் பிறந்த நட்சத்திரம் திருவாதிரை (ஆடி) என்பதால் ஈசனின் திருநாளான மார்கழித் திருவாதிரையைத் தன் பெயரால் கொண்டாடச் செய்தானேயொழிய, தன் பிறந்தநாள் அதுவென அச்சாசனத்தில் குறிக்கவில்லை.

பொற்கோயில்: திருவாரூரில் இராஜேந்திர சோழனுக்கு அணுக்கியராக விளங்கிய பரவை நங்கையார் என்ற பெண்மணி விரும்பியதற்காக வீதிவிடங்கப் பெருமானாகிய தியாகேசரின் செங்கற் கோயிலை கற்றளியாக மாற்றி அமைத்தான். மேலும் பரவையின் வேண்டுகோளுக்காக 20643 கழஞ்சு பொன் கொண்டும், 42000 பலம் செம்பு கொண்டும், தன் 18-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1030இல்) தான் எடுத்த கற்றளிக்கு பொன் வேய்ந்து பொற்கோயிலாக மாற்றி அமைத்தான். அக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருநாளில், தன் தேரில் அவ்வம்மையாருக்கு உடனிருக்கைக் கொடுத்து திருவீதியில் பவனிவந்து தியாகப் பெருமானை அவ்விருவரும் வணங்கியதாகவும், அவர்கள் நின்று வணங்கிய இடத்தில் நினைவாக ஆளுயர இரு குத்துவிளக்குகளை வைத்ததாகவும் அங்கு பொறித்துள்ள கல்வெட்டில் பதிவு செய்துள்ளான்.

முப்பெரும் விழாக்கள்: மேற்கூறப்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டு தியாகேசர் கோயிலின் அதிட்டானத்தில் தன் ஆணையாக மற்றொரு கல்வெட்டையும் பொறித்தான். அதில் தன் தந்தை (இராஜராஜ சோழன்) பிறந்த ஐப்பசி சதய நாள் விழாவுக்கும் தான் பிறந்த ஆடித் திருவாதிரை விழாவுக்கும் ஈசனாரின் மார்கழித் திருவாதிரை விழாவுக்கும் அவன் ஏற்படுத்திய நிவந்தங்களைப் பதிவு செய்தான். இதே கோயிலில் உள்ள இராஜாதிராஜனின் கல்வெட்டு, அவன் தந்தை இராஜேந்திர சோழனுக்கும் அவரின் அணுக்கியார் பரவை நங்கையாருக்கும் அவர்கள் மறைந்த பிறகு படிமம் எடுத்து வழிபாடு செய்தது பற்றி விவரிக்கின்றது. இப்பெரு மன்னனே விழுப்புரம் அருகில் உள்ள பனையபுரத்திலும் இவர்கள் இருவருக்கும் உருவச் சிலைகள் எடுத்து வழிபாடு செய்ததை அங்குள்ள மற்றொரு கல்வெட்டு கூறுகின்றது.

ஐயத்திற்கு இடமின்றி இராஜேந்திர சோழனின் திருவாக்காகவே கூறப்பெற்றுள்ள ஆரூர் சாசனத்தில் அவன் பிறந்த நாளாகக் குறிக்கப்பெறுவது ஆடி மாதத்து திருவாதிரை நாளே, இவ்வாண்டு ஆகஸ்ட் 4 ஆம் நாள் அவன் பிறந்த நாளாகும். அவன் பேரரசனாக முடிசூடிக் கொண்ட ஆயிரமாவது ஆண்டு, நிகழ இருக்கின்ற 2014-ஆம் ஆண்டாகும். இவ்வாண்டும், வரும் ஆண்டும் அவன் பிறந்த நாளில் அவனை நினைத்து போற்றுவோம். தமிழனின் வீரத்திற்கும் கலை மற்றும் பண்பாட்டுச் சிறப்புகளுக்கும் ஒரு குறியீடே ஆடித் திருவாதிரை நாளாகும்.

நன்றி- ஞாயிறு மணி - முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2398
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum