ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்!

View previous topic View next topic Go down

கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்!

Post by சாமி on Mon Jul 08, 2013 4:13 pm

தமிழில் ஒன்று,இரண்டு,மூன்று...என்று எண்ணுகிறோம்.பத்து பத்தாக எண்ணும் போது எண்பதுக்கு அடுத்து ஒன்பது என்று வராமல் ஏன் தொண்ணூறு என்று வருகிறது?நூறு நூறாக எண்ணும் போது எண்ணூறுக்கு அடுத்து தொண்ணூறு வராமல் தொள்ளாயிரம் என்று ஏன் வருகிறது?ஆயிரம் ஆயிரமாக எண்ணும் போது எட்டாயிரத்துக்கு அடுத்து தொள்ளாயிரம் என்று வராமல் ஒன்பதாயிரம் என்று ஏன் வருகிறது.பத்தாயிரம் பத்தாயிரமாக எண்ணும் போது எண்பதாயிரம் அடுத்து ஒன்பதாயிரம் என்று வராமல் ஏன் தொண்ணூறாயிரம் என்று வருகிறது.ஒன்று ஒன்றாக எண்ணும் போது எட்டுக்கு அடுத்து வர வேண்டிய உண்மையான எண் எது?

தொல்காப்பிய காலத்திலேயே இந்தக் குழப்பம் நடைபெற்று முடிந்துவிட்டது. எட்டுக்குப் பின் தொண்டு, எண்பதுக்குப் பின் தொன்னூறு, எண்ணூறுக்குப் பின் தொன்னூறு, எண்ணாயிரத்திற்குப்பின் தொள்ளாயிரம் இப்படித்தான் இருந்தது. (மேற்கோள் )
5. குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

`ஒன்பது' என்னும சொல்

445. 1ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்
பஃதென் கிளவி யாய்தபக ரங்கெட
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
ஒற்றிய தகரம் றகாரம் ஆகும்.

இதுவும் இது.

ஒன்பான் ஒகர மிசை தகரம் ஒற்றும் (நிலைமொழியாகிய) ஒன்பது என்னும் சொல்லின் ஒகரத்திற்கு மேலாகத்தகரம் ஒற்றாய் மிக்கு வரும், முந்தை ஒற்று ணகாரம் இரட்டும்- முன் சொன்ன ஒகரத்தின் முன்னர் னகர ஒற்று இரண்டு ணகார ஒற்றாய் மிக்கு வரும், பத்து என் கிளவி பகரம் ஆய்தம் கெட ஊகாரக் கிளவி நிற்றல் வேண்டும் - ( வருமொழியாகிய) பத்து என்னும் சொல் தன்கண் பகரமும் ஆய்தமும் கெட ( நிலைமொழியில் இரட்டிய ணகரத்தின் பின்னர்) ஊகாரமாகிய எழுத்து நிற்றல் வேண்டும் ; ஒற்றிய தகரம் றகாரம் ஆகும். (வருமொழியாகிய பத்து என்பதன் ஈற்றதன்மேல் ஏறிய உகரம் கெடாது பிரிந்து நிற்ப) ஒன்றாய் நின்ற தகரம் றகார ஒற்றாகும் .

இஃது, ஒன்பதும் பத்தும் என நின்றால் முடியற்பால (இன்ன) வென்பது. பகர ஆய்தம் என்னாத முறையன்றிய கூற்றினான். நிலைமொழிக்கண் பகரக்கேடும் கொள்க. குற்றயலுகரமும் அஃது ஏறிய மெய்யும் முன்னர் மாட்டேற்றாற் கெட்டன.

எ - டு : தொண்ணூறு என வரும்.
(39)
1.இந்நூற்பா ஒன்பது + பஃது = தொன்னூறு என முடிக்கின்றது. இம் முடிவு எவ்வகையிலும் பொருந்தாத தொன்றாம். ஒன்பது என்னும் எண்ணுக்குப் பழம்பெயர் தொண்டு என்பது. ` தொண்டு தலையிட்ட ' (தொல். 1358) என்று ஆசிரியரும், தொண்டுபடு திவவு (மலைபடு. 21) என்று பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனாரும் கூறுதல் காண்க. தொண்டு என்னும் சொல் தொல்காப்பியர் காலத்திலேயே வழக்கற்றுப் போய் விட்டது. அவர் காலத்திற்குமுன் தொண்டு தொண்பது தொண்ணூறு தொள்ளாயிரம் என்பன முறையே, 9, 90, 900,9000 என்னும் எண்களைக் குறிக்கும் பெயர்களாயிருந்தன. தொண்டு என்னும் ஒன்றாமிடப்பெயர் வழக்கறவே, தொண்டு என்னும் பத்தாமிடப்பெயர் ஒன்றாமிடத்திற்கும் தொண்ணூறு என்னும் நூறாமிடப் பெயர் பத்தாமிடத்திற்கும் , தொள்ளாயிரம் என்னும் ஆயிரமிடாப் பெயர் நூறாமிடத்திற்குமாக வழங்கத் தலைப்பட்டன . தொண்பது என்னும் பெயர் முறையே தொன்பது ஒன்பது என மருவிற்று. ஆயிரத்தாமிடப்பெயர் நூறுமிடத்திற்கு வழங்கவே 9000 என்னும் எண்ணைக் குறிக்க ஒன்பது என்னும் பெயருடன் ஆயிரம் என்னும் பெயரைச் சேர்க்கவேண்டிய தாயிற்று. முதற் பத்து எண்ணுப்பெயர்களில் ஒன்பது என்பதைத் தவிர , மற்றவையெல்லாம் ஒரு சொல்லா யிருப்பதையும் , ஒன்பது என்பது இரு சொல்லாய்ப் பது (பத்து) என்று முடிவதையும் , தொண்ணூறு என்பது நூறு என்றும் தொள்ளாயிரம் என்பது ஆயிரம் என்றும் முடிவதையும் நோக்குக. தொண்பது என்பதின் திரிபான ஒன்பது என்னும் சொல்லுக்குப் பொருந்தப் புகலும் முறைபற்றி ஒன்று குறைந்த பத்து என்று பொருள் கூறுவர் சிலர். அதுவே அதன் பொருளாயின் தொண்ணூறு தொள்ளாயிரம் என்பனவற்றிற்கும் அப் பொருள் ஏற்கவேண்டும். அங்ஙனம் ஏலாமையின் அது போலியுரையென மறுக்க. ஆகவே தொண்டு + பத்து = தொண்பது ; தொண்டு + நூறு = தொண்ணூறு ; தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் என்று புணர்ப்பதே முறையென்றும் , தொண்டு என்னும் எண்ணுப் பெயர் வழக்கற்றதினால் அதன்மேலிடப் பெயர்கள் மூன்றும் ஒவ்வோரிடமாய்த் தாழ்ந்துவந்து வழங்கின என்றும் அறிந்து கொள்க. (பாவாணர்.)1991 ஆம் ஆண்டு. மதுரை திருவேடகத்தில் உள்ள விவேகானந்தா குருகுலத்தில் நான் பதினோராம் வகுப்பு படிக்கும் போது, எனது கணித ஆசிரியர் - மரியாதைக்குரிய அய்யா திரு.கிருஷ்ணன் அவர்கள் "எண்பது, ஒன்பது... எண்ணூறு, தொண்ணூறு... எட்டாயிரம், தொள்ளாயிரம்... எண்பதினாயிரம், ஒன்பதினாயிரம்... இது தானே சரி. எப்படி எல்லாம் வரிசை மாறி வருகிறது?" என ஒரு கேள்வி கேட்டார்கள். சுமார் இருபது ஆண்டுகளாக எத்தனையோ கணித ஆசிரியர்கள் சொல்லாத பதிலை, நான் சற்றும் எதிர்பாராமல் என் தாய் தமிழ் சொன்னது. சுமார் இருபது ஆண்டு தேடல் இனிதே நிறைவடைந்தது. [என் கணித ஆசிரியர் அய்யா கிருஷ்ணன் அவர்கள் இந்த பதிலால் மகிழ்ந்தது என் மகிழ்ச்சிக்கு மகிழ்வளித்தது]

தமிழக அரசின் அரசவை புலவராக இருந்த திருக்குறளில் தோய்ந்த அனுபவம் உடைய பதின் கவனகர் அய்யா திரு.பெ.இராமையா அவர்களது மேடை நிகழ்வில் கேட்கப் பட்ட கேள்விகளும் அவரது பதில்களும் அடங்கிய புத்தகத்திலிருந்து...

......பண்டைய தமிழ் எண்ணியலில் ஒன்பது என்ற சொல்லே கிடையாது. பரிபாடலிலும் வேறு சில சங்க இலக்கியங்களிலும் எட்டிற்கு அடுத்து பயன்படுத்த பெற்றுள்ள சொல் "தொண்டு" என்பதாகும். தொண்டு என்றால் துளை. அதாவது ஓட்டை. நம் உடல் ஒன்பது ஓட்டைகளை கொண்டது.

இருநிழல் படாமை மூவே ழுலகமும்
ஒருநிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ
பாழெனக் காலென பாகென ஒன்றென
இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
ஆறென ஏழென எட்டெனத "தொண்டென"
- பரிபாடல் 3 , வரி 75 -79

"தொண்டு" தலையிட்ட பத்துக்குறை எழுநூற்று...
- தொல்காப்பியம், 1358

"தொண்டு" படு திவவின் முண்டக நல்யாழ்.
- மலைபடு கடாம் - 21

இந்த சொல் எப்படியோ தன் இடத்திலிருந்து வீழ்த்தப் பெற்றுவிட்டது. இந்த 'தொண்டு' என்ற சொல்லை அதற்குரிய இடத்தில் வைத்து எண்ணியலை வரிசையாக சொல்லிப் பாருங்கள். ஒரு பெரிய குழப்பமே தெளிவாகும். அதாவது,

எட்டு
தொண்டு (சறுக்கிய சொல்)
பத்து.

எண்பது
தொண்பது (இது தான் இன்றைய ஒன்பது)
நூறு

எண்ணூறு
தொண்ணூறு
ஆயிரம்

எண்ணாயிரம்
தொள்ளாயிரம்
பத்தாயிரம்

எண்பதினாயிரம்
தொண்பதினாயிரம்
இலட்சம்.

ஆக தொண்டு என்ற ஒரு சொல் வழக்கிலிருந்து எப்படியோ வீழ்ந்ததால் அதை நிரப்ப, எண்பதுக்கு அடுத்திருந்த தொண்பது, ஒன்பது என்ற பெயர் மாற்றத்துடன் எட்டிற்கு அடுத்தாற்போல் வந்து உட்கார்ந்து கொண்டது. அதை நிரப்ப எண்ணூறுக்கு அடுத்து இருந்த தொண்ணூறு என்பதிற்கு அடுத்து வந்து உட்கார்ந்து கொண்டது. இந்த சிக்கல் எண்ணியலின் இறுதி வரை பாதித்துள்ளது.

உங்களிடம் என் அன்பான வேண்டுகோள். இனிமேலாவது நம் தமிழ் மொழியின் சொற்களை காப்பாற்றுவதில் மிக எச்சரிக்கையாக இருங்கள். முடிந்த வரை தூய தமிழில் உரையாடும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். முடிந்தால் இந்த எண்ணியல் சறுக்கலை சரி செய்ய அரசின் மொழி வளர்ச்சித்துறை மூலம் முயற்சி செய்யுங்கள்.

நன்றி:டீச்சர்ஸ்ஆப்இந்தியாஆர்ஜி


Last edited by சாமி on Mon Jul 08, 2013 4:19 pm; edited 1 time in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்!

Post by manikandan.dp on Mon Jul 08, 2013 4:18 pm

சூப்பருங்க 
avatar
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 566
மதிப்பீடுகள் : 417

View user profile http://manikandan89.wordpress.com/

Back to top Go down

Re: கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்!

Post by ராஜு சரவணன் on Mon Jul 08, 2013 4:31 pm

தமிழின் பெருமையை சொல்லும், எண்களை அழைக்கும் விதம் பற்றிய உங்கள் கட்டுரை பகிர்வுக்கு நன்றி நண்பரே புன்னகை

ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய அவசியமான பதிவு புன்னகை

எனது விருப்பம் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum