அல்சைமர் (Alzheimer) என்னும் மறதி நோய்
சிவா | Published on the tue Feb 21, 2023 9:50 pm | 168 Views
அளவுக்கு மீறிய மறதியை ஆங்கிலத்தில் அல்சைமர் எனக் குறிப்பிடுகின்ற ‘மறதி நோய்’ என்கிறோம்.அம்மா, என் பேனாவை எங்க வெச்சேன்னு பார்த்தியா?, ஏம்மா, முக்கியமான ஃபைல் ஒன்னக்காணோம், எங்க வச்சேன்னு மறந்துட்டேன், ப்ளூ கலர்ல இருக்கும் பார்த்தியா? “அம்மாடி என் கண்ணாடி எங்க வச்சேன்னு மறந்துட்டேம்மா கொஞ்சம் தேடிக்கொடேன்’ என்ற வாக்கியங்களை நம் மகள், கணவர், பெற்றோர் வாயிலாக, நாம் தினந்தோறும் கேட்கிறோம், கேட்டோம், கேட்போம்… ஏனென்றால், மறதி என்பது எல்லா வயதுடையவர்களுக்கும் ஒரு தோழன் என்றே சொல்லலாம். மேலே கூறியதுபோல், அதிகப்படியான மறதியை அல்சைமர்நோய் என்று சொல்லலாம்தான். ஆனால், இங்கே எதை அதிகப்படியான மறதி என்று குறிப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம்.
{{title}}
{{by}} {{author}}