ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Today at 11:13 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Today at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Today at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Today at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Today at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Today at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Today at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Today at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Today at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Today at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Today at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Today at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Today at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Today at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Today at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Today at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Today at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Today at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Today at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Today at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Today at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Today at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Today at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Today at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Today at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Today at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Today at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Today at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல

Post by rikniz on Tue Jun 23, 2009 12:53 pm

தலைவலி மிக சாதாரணமாக பலருக்கும் வரக்கூடிய ஒரு உபாதை. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக் கும் எப்போதாவது ஒருமுறை தலைவலி வந்த அனுபவம் இருக்கும். பொறுக்க முடியாத வலி ஏற்படும் போது வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தினசரி பணி களில் ஆர்வம் குறைந்து போகும் நிலை வரலாம்.

சிலருக்கு அடிக்கடி வரும் மைக்ரேய்ன் எனப்படும் தலைவலி பலவித சிக்கல்களில் கொண்டு வந்து விடக் கூடியது. சாதாரணமாக அதிக மன அழுத்தம், வேலைப் பளு இவற்றால் வரும் தலைவலி, க்ளஸ்டர் தலைவலி எனப்படும் தொடர் தலைவலி போன்றவை மற்ற உடல் நலக் குறைபாடுகளை எதிரொலிப்பது இல்லை. ஆகவே கவலை படத்தேவையில்லை. ஆனால் சில சமயம் கண், மூக்கு, சுவாச கோளாறுகள், தலையில் உள்ள சைனஸ்களில் நீர் கோர்த்து இருப்பது, பல்வலி போன்றவையும் தலை வலியை கொண்டு வரக்கூடும். அதுமட்டுமின்றி சில சமயம் தலையில் ஏற்பட்ட காயங்கள், அதிக இரத்த அழுத்தம், இதனால் ஏற்படும் சில பக்கவாதம் (இவை கண்டுகொள்ள படுவதில்லை). மூளைக்கு இரத்தம் எடுத்து செல்லும் தமனிகளில் ஏற்படக் கூடிய இரத்த அழுத்தம், மூளையில் ஏற்படக்கூடிய சீழ், மற்றும் மூளை காய்ச்சலின் ஆரம்ப அறிகுறி கூட தலைவலி ஏற்பட காரணம் ஆகலாம்.

அதிகமாக புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரலில் நீர் சேர்த்துக்கொள்ளும் இதனால் அடிக்கடி தலைவலி ஏற் படும். குளிர்காலத்தில் மூடிய ஜன்னல்கள் காற்றை வெளி யேற விடாவண்ணம் வீட்டுக்குள்ளேயே சுழலும் போது திடீரென ஏற்படும் கரியமிலவாயுவின் அளவு அதிகரிக் கும் போதும் தலைவலி உண்டாகலாம். சிலருக்கு அடிக்கடி கோப்பி போன்ற பானங்கள் அருந்தி பழகி இருந்தால் இரத்தத்தில் அதன் அளவு குறைந்தால் தலைவலி ஏற்படும். இது நாம் எந்த அளவிற்கு கோப்பி போன்றவைகளுக்கு அடிமையாகி இருக்கிறோம் என்பதை அறிவுறுத்தும் முன்னோடி. அடிக்கடி தலை வலி வந்தால் மருத்துவரை கலந்து ஆலோசிக்கவேண்டும். எத்தனை முறை ஏற்படுகிறது, வலி வந்தால் எவ்வளவு நேரம் இருக்கிறது, குடும்ப மருத்துவ வரலாறு இவை மூலம் மருத்துவர்கள் தலைவலியின் தன்மையை அறிந்து குணமாக்க முடியும். முன்பு தலைவலியே வராமல் இருந்த ஒருவருக்கு அடிக்கடி தலைவலி வருதல், சாதாரணமாக ஆரம்பித்த வலியின் அளவு கூடி தீவிரமாதல் தூக்கத்திலிருந்து தலைவலியினால் எழுந்து கொள்ளுதல், தலைவலி ஆரம்பித்து சில மணிநேரத்தில் தீவிரமாகி வாந்தி போன்றவை ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டியவை.

வேலைப்பளு, மனத்தகைவு இவற்றால் வரும் தலைவலி சாதாரணமாக வலியாக இருக்கும். சில மணிநேரம் முதல் வாரக்கணக்கில் இருக்கும். தலையைச் சுற்றி ஒருவித அழுத் தம் இருப்பதுபோல உணர்வீர்கள். வாந்தி போன்ற நிலைக்கு தீவிரம் ஆகாது. சப்தம், இசை போன்றவை இத் தலைவலியை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யாது. மைக்ரேன்: இது போன்ற தலைவலி தீவிரமடைந்து ஒருபக்கமாக வலிக்கும். 4 மணி முதல் 3 நாட்கள் வரை தலைவலி நீடிக்கும். வேலை செய்வதால், சப்தம் அதிக ரிப்பதால், வெளிச்சம் அதிகரிப்பதால் தலைவலி அதி கரிக்கும்.

சில வாரங்களுக்கு இல்லாமல் இருக்கும், திடீரென்று வந்துவிட்டால் பல நாட்களுக்கு நீடிக்கும். இப்போது மருத்துவர்கள் இந்த ஒற்றைத் தலைவலி வராமல் இருக்க சாதாரண நாட்களிலும் குறைவான அளவு மருந்துகள் தர ஆரம்பித்திருக்கிறார்கள். கவனிக்காமல் விட்டால் கண் பார்வையை பாதிக்க கூடும். மேலும் தசைகளின் ஒத்து ழைப்பும் குறையக்கூடும்.

சளியினால் ஏற்படும் தலைவலி மிக கொடுமையானது, கண்களை சுற்றி ஏற்படும். இந்த தலைவலி மிகவும் அதிகமாக இருப்பதால் தலை தொங்க விடக் கூட முடியாமல் அவதியுறுவார்கள். மூக்கில் இருந்து நீர் வடியும். படுத்தால் வலி அதிகமாவது தெரியும். சில சமயங்களில் கண்களுக்கு கீழே வீக்கம் ஏற்படும். இரத்த அழுத்தத்தால் ஏற்படும் வலி: இரத்த அழுத்தத்தை குறைக்க மருந்துகள் தருவார்கள். அதுவே தலைவலியை குறைக்கும். மேலும் சிறுநீரகங்களை பரிசோதிப்பதும் அவசியமாகும். தலைக்கு செல்லும் தமனிகளில் இரத்த அழுத்தம் அதிகமாவதால் வலி ஏற்படுகிறது. இந்த இரத்த குழாய்களை விரிவடைய செய்யும் மருந்துகள் பயன் தரக்கூடும். பொதுவாகவே தலைவலி போன்ற உபாதைகளை யாரும் கண்டு கொள்வதில்லை. கடைகளில் கிடைக்கும் மருந்துகளை தாங்களே வாங்கி எடுத்து கொள்கிறார்கள். இது வலியை குறைக்குமானாலும் நாளடைவில் இந்த மாத்திரைகள் இல்லாமல் வலி போகாது என்ற ஒரு மனநிலையும் ஏற்படுகிறது. இது போல மருத்துவர் பரிந்துரை செய்யாமல் கிடைக் கும் மருந்துகளை அதிகமாக உட்கொண்டு கல்லீரல், கணையம் போன்ற உறுப்புகளில் உபாதைகளை ஏற்படுத் திக்கொள்பவர்கள் அதிகமாகி கொண்டே போகிறார்கள். சிறுவர்களுக்கும் உடனுக்குடன் மருந்துகளை கொடுத்து விடுவதால் அவர்களின் வலி தாங்கும் திறன் குறைவ தோடு, மற்ற குறைபாடுகளும் வர காரணமாகின்றன. இப்போதைய பெருங்கவலை மக்களின் இந்த மருந்து களின் பிடிப்பை எப்படி போக்குவது என்பதும், மருத்துவர் ஆலோசனையின்றி அளவுக்கதிகமான மருந்துகளை உட்கொள்ளுதலை எப்படி போக்குவது என்பதும் தான்.

rikniz
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 352
வசிப்பிடம்: Doha-Qatar
சேர்ந்தது: 14/03/2009

Back to top Go down

Re: தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல

Post by Guest on Thu Jul 02, 2009 3:48 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் Very Happy

Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum