ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» நம்ம இளவரசன் காதலி, இவங்க தாங்க
by rikniz Today at 12:59 pm

» கருவளர்ச்சி
by srinivasan Today at 12:52 pm

» புதிய அறிமுகம்‍ தமிழரசு
by Tamilzhan Today at 12:45 pm

» இன்றைய ஈகரை கண்ணோட்டம் கிசு கிசுப்பு கண்ணோட்டம் ,,
by Manik Today at 11:49 am

» மேட் இன் இண்டியா
by Tamilzhan Today at 11:31 am

» கணவன் - மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க முடியாது...
by தண்டாயுதபாணி Today at 11:03 am

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by யாழவன் Today at 11:00 am

» மாவீரர்களின் பெயரால் இதைச் செய்வோமா?
by யாழவன் Today at 10:50 am

» இலவசமா, உயர்கல்வியா?
by தண்டாயுதபாணி Today at 10:48 am

» இமயமலை உருகுதா... அரசு விளக்கம்
by தண்டாயுதபாணி Today at 10:45 am

» சத்துமாவு & சத்துபானம்
by mathans Today at 10:40 am

» புலி வருது
by mathans Today at 10:34 am

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by aarul Today at 10:33 am

» ஒலிம்பிக்கில் என்ன விழையாட்டுக்களை சேர்க்கலாம்?
by mathans Today at 10:30 am

» மறக்க முடியு மா
by aarul Today at 10:30 am

» WI-FIVIDEO
by aarul Today at 10:29 am

» உங்கள் மொபைல் போனில் மின்னஞ்சல் அறிவிப்புகளைப்பெறலாம்!
by kavinele Today at 10:12 am

» மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்
by mathans Today at 10:07 am

» வரவில்லை!
by தாமு Today at 8:02 am

» மாரடைப்பு
by தாமு Today at 8:01 am

» காதல் நகைச்சுவை
by தாமு Today at 7:56 am

» நம்ம ஷெரின் காதலி ,இவங்க தாங்க
by தாமு Today at 7:50 am

» உன்னில் நான் தொலைந்து போவதை
by தாமு Today at 7:48 am

» சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ
by தாமு Today at 7:47 am

» நம்ம விஜய் காதலி..இவங்க தாங்க
by தாமு Today at 7:45 am

» சில வினோதமான படங்கள்
by தாமு Today at 7:25 am

» சர்ச் இன்ஜினில் தவிர்க்க வேண்டியவை
by kavinele Today at 1:08 am

» புகைத்தல் தனக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் கேடு விளைவிக்கிறது
by kavinele Today at 12:57 am

» கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள்
by aarul Today at 12:42 am

» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

கணினி - கேள்வி - பதில்

Page 18 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18

View previous topic View next topic Go down

Re: கணினி - கேள்வி - பதில்

Post by கோவைசிவா on Mon Nov 02, 2009 11:58 am

கேள்வி: வேர்டில் பேக்கப் பைல் என்றால் என்ன? இது எதற்கு பயன்படுகிறது?


பதில்: வேர்ட் போன்ற தொகுப்புகளில், டாகுமெண்ட் பைல்களின் பேக்கப் பைல்கள் உருவாகின்றன. நீங்கள் இறுதியாக சேவ் செய்திடுவதற்கு முன் வரை உள்ள பைல், பேக்கப் பைலாக சேவ் செய்து வைக்கப் படுகிறது. ஏதேனும் ஒரு காரணத்தால் உங்களுடைய ஒரிஜினல் பைல் கெட்டுப் போய் அதனை மீட்க முடியாத போது இந்த பேக்கப் பைலைத் திறந்து தனியாக சேவ் செய்து மீண்டும் பயன்படுத்த முடியும்.

_________________
மெய்ப்பொருள் காண்பது அறிவு! www.kovaiwap.com

கோவைசிவா
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 2047
வசிப்பிடம்: கோயம்புத்தூர்
சேர்ந்தது: 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

Re: கணினி - கேள்வி - பதில்

Post by கோவைசிவா on Mon Nov 02, 2009 11:59 am

கேள்வி: நான் ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கினேன். படங்களை நன்றாக எடுக்க முடிகிறது என்றாலும், சில ஐகான்கள் திரையில் தெரிகின்றன. இவை பலவகையான மோட் எனக் கூறுகின்றனர். இவை என்ன செயல்பாடுகளைக் கொண்டுள்ளன என்று விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.





பதில்: டிஜிட்டல் கேமராவில் தோன்றும் ஐகான்களின் இடம் ஒவ்வொரு கேமரா விலும் மாறுபடும் என்றாலும், இவை தெரிவிக்கும் செய்தி ஒன்றுதான். எனவே சுருக்கமாக அவற்றைப் பட்டியலிடுகிறேன்.
ஆட்டோமேடிக் (Automatic): இது டிஜிட்டல் கேமராக்களில் தானாக செட் செய்யப்பட்டு வருவது. இது Auto எனச் சுருக்கமாக இருக்கலாம். இது தானாகவே கேமராவிற்கான பிளாஷ், போகஸ், எக்ஸ்போஷர் ஆகியவற்றை செட் செய்திடும். சாதாரணமான படங்கள் எடுக்க இதனைப் பின்பற்றினால் போதும். ஏதேனும் ஸ்பெஷல் எபக்ட் தேவை என்றால் மற்றவற்றை நாட வேண்டும்
.
குளோஸ் அப் (Close up): ஏதனும் ஒரு பொருளை அல்லது நபரை மிகவும் நெருக்கமாகச் சென்று போட்டோ எடுக்க விரும்பினால், இதனைப் பயன்படுத் தலாம். இதனைப் பயன்படுத்துகையில் பிளாஷ் தானாக செட்டிங் அமைத்துக் கொள்ளாது. எனவே அதனை நீங்களே செட் செய்திட வேண்டியதிருக்கும்
.
லேண்ட்ஸ்கேப் (Landscape): மிகததொலைவாக ஒரு பொருளை அல்லது நபரை போட்டோ எடுக்க வேண்டும் என்றால் இதனைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். இந்த வகை படங்கள் எடுக்கையில் பிளாஷ் இயக்கப்படாமல் இருப்பது நல்லது. இந்த மோட் சில கேமராக்களில் 8 என்ற எண்ணாலும் காட்டப்படும்
.
ஸ்போர்ட் மோட்(Sport mode): நகரம் உருவங்களை அதிக அளவில் எடுக்கையில் இந்த மோட் உங்களுக்குப் பயன்படும். இந்த மோடைத் தேர்ந்தெடுக்கையில், கேமரா தன் ஷட்டர் ஸ்பீடை மிக வேகமான நிலையில் செட் செய்து கொள்ளும்
.
நைட் மோட் (Night Mode): மிகக் குறைந்த ஒளியில் படங்களை எடுக்கையில் இதனைப் பயன்படுத்தலாம். அல்லது இரவு ஒளியில் பயன்படுத்தலாம். இந்த மோடில் ஷட்டர் ஸ்பீட் மிக மிகக் குறைவாகத் தானாக செட் செய்யப்படும். பிளாஷ் தானாக இயங்கிக் கொள்ளும். இதற்கான ஐகான்கள் பொதுவாக ஒவ்வொரு கேமராவிற்கும் மாறுபடும்
.
போர்ட்ரெய்ட் மோட் (Portrait Mode): இது பொதுவாக போட்டோ எடுக்கும் நபர்களின் முகங்களைக் குறி வைக்கையில் பயன்படுகிறது. இதன் மூலம் போட்டோ ஒன்றில் உள்ள அதன் பின்புலம் சிதைவது தடுக்கப்படுகிறது. இவ்வகையில் போட்டோ எடுக்கையில் வழக்கமாக ரெட் ரிடக்ஷன் என்பது இயக்கபபடும். இல்லையேல் இயக்கிக் கொள்ள வேண்டும்
.
வீடியோ மோட் (Video Mode): சிறிய அளவிலான வீடியோ படங்களை எடுக்க இந்த மோட் வகையைப் பயன்படுத்தலாம்
.
மேனுவல் மோட் (Manual Mode): இதனை யும் நாம் அடிக்கடி பயன்படுத்தலாம். உங்கள் டிஜிட்டல் கேமராவின் முழு கண்ட்ரோல், இந்த வகையில் உங்களிடமே இருக்கும். அபர்ச்சர், ஷட்டர் ஸ்பீட் என அனைத்தும் நீங்களே செட் செய்திடலாம்.

_________________
மெய்ப்பொருள் காண்பது அறிவு! www.kovaiwap.com

கோவைசிவா
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 2047
வசிப்பிடம்: கோயம்புத்தூர்
சேர்ந்தது: 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

Re: கணினி - கேள்வி - பதில்

Post by கோவைசிவா on Mon Nov 02, 2009 12:01 pm

கேள்வி: புரோகிராம்களுக்கு ஸ்கின்கள் இங்கு இலவசமாகக் கிடைக்கும்; தோற்றத்தை இதன் மூலம் மாற்றலாம் என்று நான் படித்துள்ளேன். இந்த ஸ்கின் என்பது என்ன? புரோகிராம்களில் இவை என்ன செய்திடும்?




பதில்: இங்கு குறிப்பிடப் படும் ஸ்கின்கள் ("Skin") மிருகங்களுடன் சம்பந்தப் பட்டவை அல்ல. ஒரு புரோகிரா மிற்கான யூச ர் இன்டர்பேஸ் என்று சொல்லப் படும் கட்டங் கள் மற்றும் பிறவற்றின் தோற்றங்களுக்கு அழகு தரும் சிறிய கிராபிக்ஸ் பைல்களாகும். இவற்றை தீம்ஸ் (Themes) எனவும் அழைப்பார்கள். இவற்றைத் தயாரித்து பல நிறுவனங்கள் இலவசமாக வழங்குகின்றன. சில புரோகிராம்களில் இவை இணைந்தே கிடைக்கும். விண் ஆம்ப், ரியல் ஒன், விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற பிரபலமான மீடியா பிளேயர் கள் இந்த ஸ்கின்களை புரோகிராம்களுடன் வழங்கு கின்றன. நம் விரப்பத்திற் கேற்ப இவற்றை மாற்றிக் கொள்ளலாம். அதாவது புரோகிராமின் தோற்றத்தை மாற்றலாம். பயர்பாக்ஸ், ஆப்பரா மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களும் இந்த ஸ்கின்களைக் கொண்டுள் ளன. மற்ற சாப்ட்வேர் தயாரிப் பவர்களும் இந்த பிரவுசர் களுக்கு ஸ்கின்களைத் தந்து வரகின்றன. அவ்வப்போது இந்த ஸ்கின்களை மாற்றினால் நமக்கும், இவை ஒரே மாதிரி யான தோற்றம் இல்லாமல் மாற்றத்துடன் காட்சி அளிப்பது சற்று புத்துணர்வாக இருக்கும்.

_________________
மெய்ப்பொருள் காண்பது அறிவு! www.kovaiwap.com

கோவைசிவா
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 2047
வசிப்பிடம்: கோயம்புத்தூர்
சேர்ந்தது: 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

Re: கணினி - கேள்வி - பதில்

Post by கோவைசிவா on Mon Nov 02, 2009 12:02 pm

கேள்வி: டிவிடிக்களில் டிவிடி மைனஸ் ஆர் என்றும், டிவிடி ப்ளஸ் ஆர் என்று சிலவும் உள்ளன. இரண்டிற்கும் விலையும் வேறுபடுகிறது. இதில் எது மிகச் சிறந்தது? ஏன் இந்த வேறுபாடு?


பதில்: அவ்வளவாக ஒன்றும் வேறுபாடு இல்லை. இதில் டேட்டா எழுதும் விதம் தான் வேறுபடுகிறது. இந்த இரண்டில் டிவிடி மைனஸ் ஆர் என்ப து பழைய பார்மட். இப்போது வருகின்ற அனைத்து டிவிடி பிளேயர்களுடன் இயங்கும் வகையில் டிவிடி +ஆர் தயாரிக்கப்படுகிறது. ஆனால் பிளேயர்கள் பொதுவாக இரண்டு வகை டிவிடிக் களையும் இயக்கு கின்றன. இரண்டிலும் எழுதுகின்றன.

_________________
மெய்ப்பொருள் காண்பது அறிவு! www.kovaiwap.com

கோவைசிவா
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 2047
வசிப்பிடம்: கோயம்புத்தூர்
சேர்ந்தது: 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

Re: கணினி - கேள்வி - பதில்

Post by கோவைசிவா on Mon Nov 02, 2009 12:27 pm

Save மற்றும் Save As என்ன வேறுபாடு?



எம். எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள பல்வேறு பயன்பாட்டு சாப்ட்வேர் தொகுப்புகளில் பைல் மெனுவில் நாம் காணும் இரு வேறு பயன்பாடுகள் Save மற்றும் Save As ஆகும். இரண்டுமே ஒரு பைலை கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் அல்லது பிளாப்பி டிஸ்க்கில் நாம் தயாரித்துக் கொண்டிருக்கும் பைலை பதிவு செய்கின்றன? அப்படியானால் இரண்டு பயன்பாட்டிற்கும் வேறுபாடு இல்லையா? ஒரே பயன்பாட்டிற்கு ஏன் இரண்டு வெவ்வேறு கட்டளைகள் என நீங்கள் எண்ணலாம்? இரண்டு கட்டளைகளும் பைலைப் பதிந்தாலும் இரண்டின் செயல்பாட்டில் சற்று வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் Save கட்டளை பயன்படுத்தும்போது அப்போது பயன்பாட்டில் உருவாக்கப்படும் பைல் அதே பெயரில் சேமிக்கப்படுகிறது. அந்த பைலுக்கு அதற்கு முன் பெயர் கொடுக்கவில்லை என்றால் பெயர் கொடுக்குமாறு கம்ப்யூட்டர் கேட்கும். பெயர் கொடுத்தவுடன் அது பதிவு செய்யப்படும். மீண்டும் அதே பைலில் பணியாற்றுகையில் Save கட்டளை கொடுத்தால் அதே பெயரில் சேவ் ஆகும். புதிய பெயர் கொடு என்றெல்லாம் கம்ப்யூட்டர் உங்களைக் கேட்காது. ஆனால் Save As கட்டளை கொடுக்கையில் அந்த பைலை ஒரு புதிய பைல் போன்று மற்றொரு பெயர் கொடுத்து சேவ் செய்திடலாம். அதாவது ஒரு டாகுமெண்ட்டில் எடிட் செய்து கொண்டிருக்கிறீர்கள். அப்போது ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள். ஆனால் அந்த மாற்றத்துடன் உள்ள ஆவணத்தை வேறு ஒரு பெயரில் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் அப்போது Save As என்ற கட்டளை கொடுத்து சேமிக்கலாம். இவ்வாறு சேமித்த பின் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் சென்று பைல் டைரக்டரியைப் பார்த்தால் உங்கள் பைல் முந்தைய பெயரிலும் புதிய பெயரிலுமாக இரண்டு இருக்கும்.

_________________
மெய்ப்பொருள் காண்பது அறிவு! www.kovaiwap.com

கோவைசிவா
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 2047
வசிப்பிடம்: கோயம்புத்தூர்
சேர்ந்தது: 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

Re: கணினி - கேள்வி - பதில்

Post by கோவைசிவா on Mon Nov 02, 2009 12:32 pm

எமோட்டிகான் என்றால் என்ன?


நம் உணர்ச்சிகளைக் காட்டும் சிறிய படங்கள். மின்னஞ் சல் கடிதங்கள், இன்ஸ் டண்ட் மெசஞ்சர் செய்திகள், சேட் ரூம்கள் எனப்படும் அரட் டை அறைகள் போன்றவற்றில், நம் செய்திகளைத் தெரிவித்த பின், அதன் சார்பாக நம் உணர்வுகளுக்கேற்ப இந்த சிறிய படங்களைத் தேர்ந்தெடுத் து இணைக்கலாம்.

_________________
மெய்ப்பொருள் காண்பது அறிவு! www.kovaiwap.com

கோவைசிவா
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 2047
வசிப்பிடம்: கோயம்புத்தூர்
சேர்ந்தது: 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

Page 18 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum