ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» திரு கான் அவர்களுக்கு நன்றி...!
by மீனு Today at 2:03 pm

» செத்துப்போ!
by மீனு Today at 2:01 pm

» என் விழி
by rifas Today at 2:01 pm

» கணக்குப் புலிகளுக்கு நச்சுன்னு ஒரு புதிர்!
by rifas Today at 2:00 pm

» ஈகரை நண்பர்கள்ளுக்கு காலை வணக்கம்.
by மீனு Today at 1:58 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by மீனு Today at 1:56 pm

» ஒரே நாளில் உடல் எடையை குறைப்பது எப்படி?
by மீனு Today at 1:55 pm

» மீனுவின் இசை இளவரசனுக்காக
by rifas Today at 1:49 pm

» திருமண வாழ்த்து அட்டை [ PSD Template ]
by இளவரசன் Today at 1:35 pm

» இளவரசன்னா உங்களிடம்????????
by இளவரசன் Today at 1:16 pm

» அவள் தான் அம்மா
by rifas Today at 1:07 pm

» வாங்க விரதம் இருக்கலாம்
by paarthaa077 Today at 12:59 pm

» தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
by இளவரசன் Today at 12:55 pm

» அம்மா
by rifas Today at 12:55 pm

» நான் பார்த்து ரசித்த சில நெட் ஜோக்ஸ்
by சுடர் வீ Today at 12:45 pm

» என் காதலின் ஏக்கம் !!!!!
by rifas Today at 12:45 pm

» என்னவள் A to Z வரை
by VIJAY Today at 12:38 pm

» ஷவ‌ரி‌ல் பரவு‌ம் பா‌க்டீ‌ரியா‌க்க‌ள்
by VIJAY Today at 12:38 pm

» ஈகரை கண்ணோட்டத்தில்,உங்களுக்கு பயனுள்ள சில தகவலை சொல்ல
by nirshan2007 Today at 12:34 pm

» Premium accounts for Best downloads sites.
by இளவரசன் Today at 12:30 pm

» any one help me
by இளவரசன் Today at 12:28 pm

» பாமா‌யி‌ல் ப‌ற்‌றிய தவறான எ‌ண்ண‌ம்
by paarthaa077 Today at 12:12 pm

» உட‌ல் ந‌ல‌த்‌தி‌ற்கு செ‌ரிமான‌ம் அவ‌சிய‌ம்
by nirshan2007 Today at 12:12 pm

» உடல் எடை ( கலோரி யின் அளவு அட்டவணை )
by இளவரசன் Today at 12:08 pm

» சத்துமாவு & சத்துபானம்
by nirshan2007 Today at 12:07 pm

» ஸ்டெயிலு........ ஸ்டெயிலு !
by nirshan2007 Today at 12:03 pm

» உங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
by nirshan2007 Today at 11:43 am

» இளநரைக்கு சிறந்த மருத்துவம்
by யாழவன் Today at 10:31 am

» மூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டர்
by kavinele Today at 10:23 am

» புலி வருது
by யாழவன் Today at 10:07 am

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

தமிழக முகாம்களுக்கு

View previous topic View next topic Go down

தமிழக முகாம்களுக்கு

Post by kirupairajah on Thu Nov 05, 2009 8:52 am

தமிழக முகாம்களில் சிறந்த பாதுகாப்புடன் நலிந்து வாழும் ஈழத்தமிழருக்கு என்னென்ன செய்யவேண்டும் என்ற மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களின் ஆய்வறிக்கை.

1.0 கள நிலை
1.1 அகதிகளாக வாழும் காலப் பகுதி 26 ஆண்டுகள் (1983-2009)
1.2 முகாம்களின் எண்ணிக்கை: 26 மாவட்டங்களில் 115.
1.3 முகாம்களுள் வாழ்வோர் தொகை: 19,340 குடும்பங்களைச் சேர்ந்த 73,241 பேர். (2.11.2009)
1.4 முகாம்களுக்கு வெளியே 11,288 குடும்பங்களைச் சேர்ந்த 31,802 பேர். (2.11.2009).
1.5 காவல்துறையில் பதிவுபெற்ற ஏறத்தாழ 100,000 பேர் வாடகைக் குடியிருப்புகளில் தமிழகமெங்கும்.
1.4 யாவரும் ஈழத் தமிழர். 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் சிங்கள இன வெறித் தாக்குதல்களால் உயிரச்சம் மேவத் தப்பி வந்தவர்கள்.
1.5 இன்றுள்ள இலங்கை அரசியல் சூழ்நிலை தொடருமானால், அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தாமாக இவர்கள் இலங்கைக்குத் திரும்பும் வாய்ப்பே இல்லை.

2.0 வாழ் தகுதி
2.1 இவர்களுட் பலரிடம் முகாம் பதிவு அட்டை உண்டு. பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், இலங்கையில் வாழ்ந்ததற்கான சான்றிதழ் என எதுவும் இல்லை. ஆதாரச் சான்றிதழ் கோரும் விதிகளைப் புறந்தள்ளி, கட்டணம் எதுவும் கேட்காமல், முகாம் பதிவு அட்டையைச் சான்றாகக் கொண்டு இவர்களுக்கு உடனடியாக 5 அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் அனைத்துலகப் பயண இலங்கைக் கடவுச் சீட்டை (Sri Lankan passport valid for 10 years for all countries) சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் வழங்கவேண்டும். இந்திய நடுவண் அரசு இதை இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
2.2 முகாம் வழங்கிய அட்டையைச் சான்றாகக் கொண்டு, அகதியாக வந்து சேர்ந்த நாள், பிறந்த நாள், பிறப்பிட முகவரி ஆகிய விவரங்களுடன் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் நிலையான வதிவுரிமை அட்டையை (Permanent Resident Card), இந்திய நடுவண் அரசு வழங்கவேண்டும். வாக்குரிமை, பெருந்தோட்ட நிலங்களையும் வேளாண் நிலங்களையும் மட்டும் விலைக்கு வாங்கும் சொத்துரிமை ஆகிய உரிமைகள் தவிர்ந்த அனைத்து உரிமைகளையும் கொண்ட தகுதியை இந்த அட்டை வழங்கும். இப்பொழுதுள்ள இந்தியச் சட்டங்களுள் இந்த அட்டையை வழங்கலாம். ஏற்கனவே இந்திய அரசு இத்தகைய அட்டைகளை (PIO), இதே உரிமைகளுடன் வெளிநாடு வாழ் இந்தியருக்கு வழங்கி வருகிறது.
2.3 முகாம்களிலுள்ள ஈழத் தமிழர், இலங்கைக் கடவுச் சீட்டுடன் இலங்கை தவிர்ந்த பிறநாடுகளுக்குப் பயணம் செய்தபின், நிலையான வதிவுரிமை அட்டை இருப்பதால் இந்தியாவுக்கு மீளலாம். புகலிடம் கொடுக்கும் பல நாடுகள் தம்மிடம் வரும் அகதிகளுக்கு இந்த வசதியைக் கொடுத்து வருகின்றன.
2.4 காவல்துறைப் பதிவுமுறையில் மாற்றம் கொணர்ந்து, புகைப்படம் ஒட்டிய காவல்துறைப் பதிவு அட்டையை வழங்கவேண்டும். பதிவுக்கு விண்ணப்பித்த ஒரு வாரத்துள் தகுதியெனில் காவல்துறைப் பதிவட்டை வழங்கும் நடைமுறை வேண்டும்.

3.0 வாழ்விடம் (கூழும் கூறையும் கூரையும்)
3.1 இந்த 30,000 குடும்பங்களுட் பலர், கடந்த 26 ஆண்டுகளாக முகாம்களுக்குள் வாழ்கின்றார்கள். இவர்களுக்கு அரச நிலங்களில் (சமத்துவபுரங்கள் போலக்) குடியிருப்புகள் அமைத்து, கழிவறை, குழாய் நீர், மின்சாரம், சமையல் வாயு இணைப்பு உள்ள 35,000 இரண்டு அறைக் கல்வீடுகளைக் கட்டிக் கொடுத்துக் குடியமர்த்தவேண்டும். இதற்காக ஐநாஅகதி ஆணையரிடம் (UNHCR) கேட்டாலோ, புலம்பெயர் ஈழத் தமிழரிடம் கேட்டாலோ நிதி கிடைக்கும். இத்தகைய வாழ்விட வசதிகள் அமையும் கால எல்லையாக 2010 ஆனி அமையவேண்டும்.
3.2 அடைக்கலம் கேட்டுப் புதிதாக வருவோரும் 6 மாதங்களுக்கு மேல் முகாம்களுள் வாழாது இத்தகைய குடியிருப்புகளுக்கு மாறிவிடவேண்டும்.
3.3 நிலையான வதிவுரிமை அட்டையுள்ளோருக்குக் குடும்பப் பங்கீட்டு அட்டைகள் (Family ration card) வழங்கவேண்டும். அணித்தாக உள்ள பொதுவிநியோகக் கூடத்தில் (PDS Shop) பங்கீட்டு உணவுப் பொருள்களைக் குடியிருப்பாளர்களே காசு கொடுத்து வாங்குவர்.
3.4 குடியிருப்புகளுக்குப் போனபின்பு அடுத்த ஓராண்டு காலத்து, அரசு இப்பொழுது வழங்கி வரும் மானியத் தொகை (2.11.2009இல் குடும்பத் தலைவருக்கு ரூ. 400, குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு ஏற்ற தொகை) அக்கால விலைவாசிக்கு ஏற்பத் தொடர்ந்து வழங்கவேண்டும்.
3.4 பங்கீட்டு அட்டைகள் வைத்திருப்போருக்கான நலத்திட்ட வழங்கல்கள், (இலவயத் தொலைக்காட்சிப் பெட்டி போன்றவை) இவர்களுக்கும் கிடைக்கவேண்டும்

4.0 தொழில்
4.1 நிலையான வதிவுரிமை அட்டை உள்ளோர் தத்தம் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புப் பெறும் சுதந்திரம் வேண்டும். இந்த வசதியை அனைத்து வெளிநாட்டவருக்கு இந்திய அரசு இப்பொழுது வழங்கியுள்ளது. இதற்கெனப் புதிய விதிகள் தேவையில்லை.
4.2 தத்தம் திறமை, அநுபவம், முதலீட்டு வலிமை கொண்டோர், தொழில் தொடங்கவும், குறுகிய கால முதலீட்டு மற்றும் செலவாக்க வங்கிக் கடன் பெறவும் சுதந்திரம் வேண்டும். இதற்கெனவும் புதிய விதிகள் தேவையில்லை.
4.3 தனி ஆற்றலருக்கு வாகன ஓட்டுநர் உரிமம் போன்ற ஆற்றலுரிமங்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். இருக்கும் விதிகளுள் வழங்கலாம்.
4.4 தொழில் தொடங்குவோருக்கு அரச நிலங்களைக் குத்தகைக்கு வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
4.5 தொழில் முனைவோர் பயிலரங்குகள், சிறுதொழில் தொடங்க ஊக்குவிப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்களாதல் போன்ற சுய முன்னேற்ற வழிகாட்டல்கள் வேண்டும்.

5.0 கல்வி
5.1 மழலையர் வகுப்புத் தொடக்கம் உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரையும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டம், மற்றும் முதுநிலைப் பட்டம் வரையும் இதுவரை காலமும் இருந்த சிறந்த அணுகுமுறை தொடரவேண்டும்.
5.2 பலதொழினுட்பப் பயில் நிலையங்களுக்கும் (polytechnic) இந்த அணுகுமுறையை நீட்டவேண்டும்.
5.3 1983இல் தொடங்கிய தொழிற்கல்வி (professional courses) அனுமதிக்கான இட ஒதுக்கீடு, 1991இல் தடையாகிப் பின்னர் 1996இல் மீளமைந்து, 2000களில் நீதிமன்றத் தீர்ப்பால் முடங்கியது. இந்திய நடுவண் அரசு ஒதுக்கீடாக அமையவேண்டும் என்றதால் தேங்கி நிற்கிறது. இந்திய நடுவண் அரசின் அயலுறவுத் துறையின் மாணவர் பகுதியே (Students cell of the Minstry of External Affairs located at Shahstri Bavan, New Delhi) வெளிநாட்டு மாணவருக்கு இட ஒதுக்கீடு செயுமிடமாகும். அப்பகுதியினரே, வெளிநாட்டுவாழ் இந்தியருக்கான (NRI) ஒதுக்கீடுகளைச் செய்வோர்கள். மருத்துவக் கல்விக்கு 30, பொறியியல் கல்விக்கு 60, வேளாண் கல்விக்கு 40, விலங்கு மருத்துவக் கல்விக்கு 20, மீன்வளக் கல்விக்கு 10, சட்டக் கல்விக்கு 20 என இட ஒதுக்கீடுகளை அப்பகுதியினர் வழங்குமாறும் 2010 கல்வியாண்டில் நடைமுறைக்குவருமாறும் இப்பொழுதிருந்தே முயலவேண்டும். புதிய விதிகள் எதுவும் இயற்றத் தேவை இல்லை.
5.4 உயிரச்சத்தால் தப்பி வருவோர் புகலிடம் தேடுகையில் பிறப்பு, பள்ளிமாற்ற, கல்வித் தராதரச் சான்றிதழ்களுடன் பயணிக்கார். இத்தகையோரிடம் சான்றிதழ் கோருவது மனித நேயமல்ல. முடிந்தவரை சான்றிதழ் பெறக் கோரலாம். முடியாதவிடத்து உறுதிச் சான்றிதழ் (Affidavit) பெற்றுக் கல்விநிலையங்களில் அனுமதிக்கலாம். இதற்கான அரச ஆணை தேவை.
5.5 ஈழத்தமிழர் அகதி மாணவர் புலமைப் பரிசில் நிதியத்தைத் (முதலமைச்சர் நிவாரண நிதியம் போன்றாதாக) தமிழக அரசு தொடங்கி, அரசு நிதி ஒதுக்கியும், புரவலர்களிடம் நிதிபெற்றும், வசதி குறைந்த மாணவருக்குக் கல்விக் கட்டணம், விடுதிக்கட்டணம் போன்ற செலவுகளுக்கு வழங்கவேண்டும்.
5.6 பட்ட மற்றும் பட்டமேற்படிப்பு மாணவருக்கு வங்கிக்கடன் வழங்கலாம் என்ற திட்டத்தையும் எடுத்துநோக்கவேண்டும்.

6.0 மருத்துவம்
6.1 கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துள் இந்த 31,000 குடும்பங்களுக்கும் மருத்துவ வசதிகிடைக்கவேண்டும்.

_________________

kirupairajah
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 3880
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum