ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» நண்பர்களது username ,password போன்றவற்றை ஹாக்கிங் செய்யலாம் வாங்க
by youngkings Today at 4:48 pm

» நாம் யார்?
by sham Today at 4:41 pm

» Breathtaking Images From National Geographic
by sham Today at 4:37 pm

» சில விரிவாக்கங்கள்
by Kraja29 Today at 4:37 pm

» இனிய காலை வணக்கம் நண்பர்களே
by வை.பாலாஜி Today at 4:36 pm

» Google OS Demo
by கோவைசிவா Today at 4:13 pm

» கவர்ச்சிக் கன்னியான கமல் மகள்:
by Kraja29 Today at 4:12 pm

» விடை சொல்லுங்கள்
by VIJAY Today at 3:38 pm

» உணர்வுகள்!!!
by M.C.Krishnan Today at 3:22 pm

» நட்புக் கவிதை!!!!!!
by Tamilzhan Today at 3:14 pm

» உடல்பயிற்சி செய்ய சிறந்த வழி
by nirshan2007 Today at 2:54 pm

» பாக்யராஜை அவர் மகன் படுத்திய பாடு
by Kraja29 Today at 2:47 pm

» Wonderful Indian Temples in abroad
by Kraja29 Today at 2:43 pm

» செத்தது நானா ,அவனா
by Kraja29 Today at 2:42 pm

» கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர்
by Kraja29 Today at 2:37 pm

» இது தான் கூகுள்
by Kraja29 Today at 2:24 pm

» ஆப்பிரிக்க வன விலங்குகள்...
by Kraja29 Today at 2:20 pm

» அரேபியர்களுக்கு கட்டிடம் கட்டுவதில் ஏன் இப்படியொரு ஆசை?
by Kraja29 Today at 2:19 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by nirshan2007 Today at 2:11 pm

» இளநீர் இளநீர்
by nirshan2007 Today at 1:58 pm

» இஞ்சி வெள்ளைப்பூண்டின் மருத்துவ பயன்கள்
by nirshan2007 Today at 1:39 pm

» ஆயுளுக்கு அஸ்திவாரம்
by mathans Today at 1:30 pm

» அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்
by nirshan2007 Today at 1:28 pm

» மருத்துவ குணம் நிறைந்த தேங்காய் எண்ணெய்
by nirshan2007 Today at 1:24 pm

» poemsssssssss
by mathans Today at 1:23 pm

» இளவரசன் மீனு பேசிக் கொள்கிறார்கள் ,
by வை.பாலாஜி Today at 1:22 pm

» எதை விட்டுக் கொடுப்பது?
by velwish Today at 12:50 pm

» சுவாமிய சரணம் ஐயப்பா
by srinivasan Today at 12:49 pm

» ஒன் செகண்ட் ஒன் பைசா... என்னதான் நடக்குது?
by srinivasan Today at 12:49 pm

» வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள்
by தாமு Today at 12:28 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம்

View previous topic View next topic Go down

ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம்

Post by kirupairajah on Sat Nov 07, 2009 6:30 pm

வன்னி முகாம்களிலுள்ள ஏதிலிகளை முற்றாக விடுவிக்குமாறும், அவர்களது பாது காப்பை உறுதிப்படுத்துமாறும் சிறீலங்கா அரசிடம் வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றம் (மக்கள் பிரதிநிதிகள் சபை) கடந்த புதனன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அத்துடன் சிறீலங்கா இனப் பிரச்சினைக்கு சிறந்த அரசியல் தீர்வுத் திட்டத்தை விரை வாக முன்வைக்குமாறும் பிரதிநிதிகள் சபை சிறீலங்காயைக் கேட்டிருக்கின்றது.

அமெரிக்காவின் இலினொய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் டேவிட் கொண்டுவந்த இந்தத் தீர்மானத்தை அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபை 421 1 என்ற அடிப்படையில் ஆதரித்துள்ளது.

சிறீலங்கா அரசை நேரடியாக கட்டுப்படுத்தாத, ஆனால் அரசிற்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தத் தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

சிறீலங்கா அரசினால் தற்போது நிர்வகிக்கப்படும் முகாம்களில் வாழும் இடம் பெயர்ந்த தமிழ்மக்களை விடுவிப்பதற்கு ஆதரவு அளிக்கவேண்டும். அவர்களின் விடுதலை மற்றும் மீள்குடியேற்றப் பணிகளை சுயாதீனமாகக் கண்காணிக்கும் நடவடிக்கைக்கு உதவுவதன் மூலமாகவும் சர்வதேச தொண்டு மற்றும் நிவாரண அமைப்புகள் நிவாரணத்தையும், வளங்களையும் வழங்க அனுமதிப்பதன் மூலமாகவும், அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் சிறீலங்காயில் இடம்பெயர்ந்த தமிழ்மக்களின் மனிதாபிமான மனித உரிமைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும்.

மே 2009 இல் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசிற்கும் இடையிலான யுத்தம் முடிவுக்கு வந்தது. சிறீலங்கா அரசு மோதல் காரணமாக இடம்பெயர்ந்த மக்களைப் பராமரிப்பதற்கும், விரைவாக மீள்குடியமர்த்துவதற்கும் இணங்கியது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்தின் 11 ஆவது விசேட அமர்வில் முகாமில் உள்ளவர்களின் வாழ்க்கை நிலைமைகளை முன்னேற்றவும் 180 நாட்களுக்குள் பெரும்பாலானவர்களைக் குடியேற்றவும் சிறீலங்கா அரசு இணங்கியது.

ஒக்ரோபர் 23 ஆம் திகதி வரை இடம்பெயர்ந்தவர்களில் 51 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 36 ஆயிரம் பேர் தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். தமது சொந்த வீடுகளில் உள்ளனர் அல்லது செல்வதற்குக் காத்திருக்கின்றனர்.

இதுதவிர, விசேட பிரிவிற்குள் வரும் 16 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இன்னமும் 2 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் விடுவிக்கப்படாத நிலையில் உள்ளனர்.

பருவப்பெயர்ச்சி மழை காலத்துக்கு முன்னர் மனிதாபிமான நிலைமைகளில் முன்னேற்றம் காண பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதன் காரணமாக முகாமில் உள்ள இடம்பெயர்ந்த மக்களை வேகமாகவும், பாதுகாப்பாகவும் விடுவிப்பதை உறுதி செய்யுமாறு மக்கள் பிரதிநிதிகள் குழு சிறீலங்கா அரசைக் கோருகின்றது.

இந்த ஏதிலிகள் தமது வீடுகளையும், சொத்துக்களையும் மீளப் பெறுவதற்கு உள்ள உரிமைகளையும் சிறப்புரிமையையும் பாதுகாக்க வேண்டும். முகாம்களை நிர்வகிக்கும் பொறுப்பை சிவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்குமாறும், சர்வதேச அரச அமைப்புகள், செஞ்சிலுவைக் குழு மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக நாளாந்தம் முகாம்களில் பிரசன்னமாயிருப்பதற்கு அனுமதியளிக்குமாறும் சிறீலங்கா அரசை கோருகின்றோம்.

அரசு சுமுக நிலையை ஏற்படுத்தும் வேளை தமிழ்மக்களை பொறுமையாக இருக்கும் படியும், தமிழ்மக்களின் அரசியல் கர்சனைகளுக்குத் தீர்வு காணக்கூடிய அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதை துரிதப்படுத்துமாறும் கோருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

_________________

kirupairajah
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 3880
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009

Back to top Go down

Re: ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம்

Post by வித்யாசாகர் on Sat Nov 07, 2009 9:23 pm

kirupairajah wrote:அமெரிக்காவின் இலினொய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் டேவிட் கொண்டுவந்த இந்தத் தீர்மானத்தை அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபை 421 1 என்ற அடிப்படையில் ஆதரித்துள்ளது.

அரசு சுமுக நிலையை ஏற்படுத்தும் வேளை தமிழ்மக்களை பொறுமையாக இருக்கும் படியும், தமிழ்மக்களின் அரசியல் கர்சனைகளுக்குத் தீர்வு காணக்கூடிய அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதை துரிதப்படுத்துமாறும் கோருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது


அவர்களுக்காவது ஈரம் சுரக்கிறதே..

கவலிற்கு நன்றி கிருபை

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1514
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum