ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Yesterday at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

உயர்ந்த பண்பு

View previous topic View next topic Go down

உயர்ந்த பண்பு

Post by சிவா on Mon Aug 10, 2009 3:32 am

அடுத்தவர்களின் பூமியைச் சேர்த்துக் கொள்ளத்தானே நாடுகள் எல்லாம் போரிட்டுக் கொள்கின்றன.

அப்படி ஒரு போர் நடந்து கொண்டிருந்த சமயம்...

பிரெஞ்சுத் துருப்புகள் அப் போது ஜெர்மனியில் முகாமிட்டிருந்தன. அவர்களிடம் நிறையக் குதிரைகள் இருந்தன. அவைக ளுக்கெல்லாம் ஆகாரம் தேவைப்பட்டது. புது இடம் வேறு. என்ன செய்வதென்று யோசித்தார் படைத்தலைவர்.

ஒரு படைப்பிரிவின் அதிகாரியிடம் குதிரைகளுக்குத் தேவையான பு ல்லைக் கொண்டு வரும்படி ஆணையிட்டார். உடனே அந்த அதிகாரி தமது படைவீரர்களுடன் புல்லைத் தேடிப் புறப்பட்டார். ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் போனார். அங்கே மரங்கள் மட்டுமே இருந்தன. அந்தப் பகுதி ஒரு சிறிய பள்ளத்தாக்கு. சுற்றிலும் குன்றுகள். சிறிது தூரத்தில் ஒரு சிறு குடிசை தெரிந்தது.

உடனே படை வீரர்கள் எல்லோரும் அங்கே விரைந்தார்கள்.

அந்த அதிகாரி தமது படைவீரர்களுள் ஒருவரிடம் அந்தக் குடிசையின் கதவைத் தட்டச் சொன்னார். தட்டப்பட்டதும் கதவு திறந்தது.

குடிசையில் இருந்து வெள்ளைத் தாடியோடு ஒரு பெரியவர் வெளியே வந்தார்.

படைத்தலைவர் அவரிடம், "ஐயா, எங்கள் குதிரைகளுக்குப் புல் தேவைப்படுகிறது. இந்தப் பகுதியில் நல்ல புல் எங்கே கிடைக்கும்? நீங்கள் இடத்தைக் காட்டினால் நாங்களே அறுத்துக் கொள்கிறோம்" என்றார்.

"சரி, என்னுடன் வாருங்கள்" என்று கூறிப் பெரியவர் புறப்பட்டார்.

காடுமேடு என்று நீண்ட தூரம் பெரியவர் போய்க் கொண்டிருந்தார். படைவீரர்களும் அவருடன் நடந்து கொண்டிருந்தார்கள். சுமார் ஒரு மணி நேரம் அப்படி நடந்திருப்பார்கள்.

போகும் வழியில் ஓர் இடத்தில் புல் நிறைந்திருந்தது. படைத்தலைவர் உடனே, "இது போதுமே, இந்த இடத்திலேயே நாங்கள் புல் அறுத்துக் கொள்கிறோம்" என்றார்.

உடனே பெரியவர், "இங்கே வேண்டாம். இன்னும் கொஞ்ச தூரம் போக வேண்டும். தயவு செய்து பொறுமையு டன் வாருங்கள்" என்றார்.
மீண்டும் பெரியவர் நடக்க ஆரம்பித்தார். படைவீரர்கள் சலிப்புடன் தொடர்ந்தார்கள்.

புல் நிறைந்த பல இடங்கள் மீண்டும் வந்தன. இருந்தாலும் அந்தப் பெரியவர் "அவையெல்லாம் வேண்டாம்" என்று கூறி, கடைசியில் ஒரு புல் நிலத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கே போனதும் பெரியவர், "இந்த இடத்தில் நீங்கள் எவ்வளவு புல் வேண்டுமானாலும் அறுத்துக் கொள்ளலாம்" என்றார்.

உடனே வீரர்கள் புற்களை அறுத்து மூட்டை கட்டிக் கொண்டுப் புறப்பட்டார்கள். புறப்படும் சமயம் அந்தப் படைத்தலைவர் பெரியவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

"பெரியவரே, ஏன் அனாவசியமாக எங்களை இவ்வளவு தூரம் நடக்க வைத்தீர்கள்? வழியில் ஏராளமாகப் புல் நிலங்கள் இருந்தனவே. அங்கெல்லாம் நாம் அறுத்திருக்கலாமே?"

அதற்கு அந்தப் பெரியவர் அமைதியாக, "உண்மைதான் வீரர்களே. வழியில் நிறைய நிலங்கள் இருந்தன. ஆனால் அவையெல்லாம் எனக்குச் சொந்தமில்லையே. இந்த நிலம் மட்டும் தான் என்னுடையது" என்று கூறியதும் படை வீரர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றார்கள்.


தென்கச்சி சுவாமிநாதன்

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum