ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
ஈகரையின் தூண்கள்
Latest topics
» நாள் ஒரு நூல் குழுமத்தில் இணைந்தால் ஒவ்வொரு நாளும் வலை ஏற்றுகிற செய்தியைப் பெறலாம்
by kavinele Today at 1:14 am

» டொரண்ட், ஓர் அறிமுகம் - 1
by kavinele Today at 12:55 am

» need photoshop
by kavinele Today at 12:49 am

» Download Movie-Kanden Kadhalai
by aarul Today at 12:40 am

» வார்த்தைகள் இல்லாமல் ஒரு கதை
by aarul Today at 12:28 am

» பரிசம் போட!
by Kaa Na Kalyanasundaram Today at 12:26 am

» ஒரு கேள்வியின் தாக்கமே நோபல் பரிசு
by aarul Today at 12:17 am

» டமில் வால்க !
by aarul Today at 12:15 am

» மன்னிக்க தயாராக இல்லாத அமெரிக்கா!
by aarul Today at 12:13 am

» கணினியை அணைக்க சில வினாடியே போதுமானது
by aarul Today at 12:06 am

» தகவல்கள் எப்படி? நம் கம்ப்யூட்டரை வந்தடைகின்றன?
by aarul Today at 12:02 am

» விஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி?
by aarul Yesterday at 11:59 pm

» பென் ட்ரைவில் வைரஸ் வராமலிருக்க!
by aarul Yesterday at 11:56 pm

» மென்பொருள் உதவி
by attacrc Yesterday at 11:12 pm

» இராம காவியம்
by nandhtiha Yesterday at 11:08 pm

» இவங்க யாருன்னே தெரியலப்பா
by Manik Yesterday at 11:00 pm

» தினம் ஒரு தகவல்
by வை.பாலாஜி Yesterday at 11:00 pm

» 12 பேரைக் கொன்ற அமெரிக்க டாக்டர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
by rikniz Yesterday at 10:29 pm

» பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8 மற்றும் 9-வது வாரம்
by வை.பாலாஜி Yesterday at 10:08 pm

» hide ip ..
by கோவைசிவா Yesterday at 10:07 pm

» Tweak PDF To Word 3.0
by கோவைசிவா Yesterday at 9:50 pm

» ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
by வித்யாசாகர் Yesterday at 9:27 pm

» ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம்
by வித்யாசாகர் Yesterday at 9:23 pm

» ஆதவன் (2009) Video Songs HQ
by xman2330 Yesterday at 9:18 pm

» இப்புதியவனின் வணக்கங்கள்
by balakarthik Yesterday at 9:15 pm

» புழலுக்கு போவோம் வாரிகளா
by balakarthik Yesterday at 9:14 pm

» கல்கியின் சிவகாமியின் சபதம்
by Kraja29 Yesterday at 9:09 pm

» முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்!
by Kraja29 Yesterday at 8:50 pm

» PDF To MS Word Converter
by Kraja29 Yesterday at 8:48 pm

» DIABETIC? FINALLY GOOD NEWS FOR ALL DIABETICS
by Kraja29 Yesterday at 8:47 pm

வருகையாளர் பதிவு

Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]My Topsites List
இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

கடவுள் அனுப்பி வைத்தாரா?

View previous topic View next topic Go down

கடவுள் அனுப்பி வைத்தாரா?

Post by சிவா on Sat Feb 21, 2009 11:05 am

ஓர் ஊருக்கு புதிய மனிதன் ஒருவன் வந்தான்.

‘‘எங்கே இருந்து வருகிறாய்? என்று கேட்டார்கள்.

‘‘தேவலோகத்திலிருந்து வருகிறேன் என்றான்.

கேட்டவர்கள் சிரித்தார்கள்.

‘‘உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?

‘‘கடவுள்தான் அனுப்பி வைத்தார்.

கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.

புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்றார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற கோயில் அது. அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டு விட்டார்கள்.
இப்போது அவன் சிரித்தான்.

‘‘ஏன் சிரிக்கிறாய்?

‘‘என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!

‘‘எப்படி எல்லாம் நடக்கும் என்று?

‘‘உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன நிரூபணம் வேண்டும்?

மக்கள் யோசித்தார்கள்.

‘‘சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?

‘‘நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.

இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.

‘‘நீ ஏன் சிரிக்கிறாய்?

‘‘நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!

‘‘எது பொய் என்கிறாய்?

‘‘கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!

‘‘அது எப்படி உனக்குத் தெரியும்?

‘‘நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!

இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் சொன்னான் பரிதாபமாக... ‘‘நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தவன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.

நண்பர்களே!
நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.
நானே கடவுள் என்கிறார்கள் சிலர்.
உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?

ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ‘‘நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்! என்றான்.
அவர் ‘பளார் என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.
இவன் பயந்து ஓடிப் போனான்.
பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?
‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!
‘‘அப்படியா?
‘‘ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: கடவுள் அனுப்பி வைத்தாரா?

Post by thesa on Wed Jul 01, 2009 12:54 am

சிவா wrote:
நண்பர்களே!
நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.
நானே கடவுள் என்கிறார்கள் சிலர்.
உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?

ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ‘‘நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்! என்றான்.
அவர் ‘பளார் என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.
இவன் பயந்து ஓடிப் போனான்.
பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?
‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!
‘‘அப்படியா?
‘‘ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!



உண்மைதான்...

thesa
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 779
வசிப்பிடம்: தூத்துக்குடி
சேர்ந்தது: 05/06/2009

Back to top Go down

Re: கடவுள் அனுப்பி வைத்தாரா?

Post by Guest on Wed Jul 01, 2009 11:29 am

இறைவன் மீதுள்ள பற்றினால் பலர் பல உதவிகள் செய்கின்றனர்

அந்த உதவிகளை மொத்தமாக அபகரிக்க பல போலிகளும் சோம்பேறிகளும் கிளம்பியுள்ளனர்

இதனால் நிலையற்ற மனிதர்களுக்கு முற்றிலும் இறைநம்பிக்கை போய்

விடுகிறது.

சிவாசார் நகைச்சுவைக்கா குறிப்பிட்டுள்ளார். அதனால் சிரிக்க! சிந்திக்க!!(அதிகம்வேண்டாம்)

இறைவன் நிச்சயமாக இ௫க்கிறார்


இறைவன் மிகப்பெரியவன்

Guest
Guest


Back to top Go down

Re: கடவுள் அனுப்பி வைத்தாரா?

Post by Manik on Wed Jul 01, 2009 11:48 am

நல்ல எண்ணம் கொண்ட இடத்தில் மட்டுமல்ல தீய எண்ணம் கொண்ட உள்ளத்திலும் இறைவன் இருக்கிறார். அவர் தான் தீய எண்ணைத்தை செயல்பட வைக்கிறார்

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3305
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: கடவுள் அனுப்பி வைத்தாரா?

Post by vkjvinoth on Tue Aug 04, 2009 1:34 am

உண்மைதான்... Surprised

vkjvinoth
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 115
வசிப்பிடம்: Sri Lanka
சேர்ந்தது: 06/04/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum