by சிவா on Sat Jul 04, 2009 12:21 am
சிம்ம ராசிக்காரர்கள் எல்லாவற்றிலும் மற்றவர்களுக்கு முன்னோடியாய் திகழக் கூடியவர்கள். சிம்ம ராசிக்குரியவர்களின் சிறப்பான பொதுப்பலன்கள்
கல்வி: இந்த ராசியில் பிறந்தவர்கள் கல்வியில் அங்கம் நாட்ட முடையவர்கள். புத்திக் கூர்மையும், முன்னறிவும் படைத்தவர்கள். யுக்தியாக யோசனைகளைச் சொல்லக்கூடிய அறிவு வளர்ச்சி உண்டு. இவர்களுக்கு புதனும், வியாழனும், கன்னி, விருச் சிகம், தனுசு, கும் பம், மேஷம், ரிஷபம், மிதுனம் போன்ற இடங்களில் சேர்ந்து காணப் படின் படிப்பில் மிக்க ஆர்வமுடையவர்களாய் கல்வி பாண்டித்யம் பெற்று உயர் படிப்புக்கு செல்லக் கூடும். இந்த கிரகங்களோடு சனி, ராகு, கேது, குளிகன் முதலிய பாபக் கிரகங்களின் சேர்க்கை கல்வி யில் தடங்கலையும், இடையூறுகளையும், மந்தத்தையும் ஏற்படுத்தும். சிம்ம ராசியில் இருக்கும் சந்திரனை, சூரியன் சேர்ந்தாலும், பார்த் தாலும், எல்லா விதமான கலைகளி லும் சிறந்து விளங்கக்கூடும். கம்பீரமான பேச்சுடையவர்களாக இருப்பார்கள். செவ்வாய் பார்ப்ப தும், சேர்வதும் கல்வி விருத்திக்கு அனுகூலமில்லை. ராணுவம், போலீஸ், நெருப்பு அணைக்கும்படை போன்றவற்றில் தகுதியுடைய அறிவைப் பெறக்கூடும். புதன் பார்த்தாலும், சேர்ந்தாலும் எல்லா விஷயங்களிலும் கூரிய அறிவுடையவர்களாய் இருப்பார்கள். குறிப் பாக சூஜாதிடம், பி.பி.ஏ., எம்.பி.ஏ. முதலிய படிப்புகளில் சிறந்து விளங்குவார்கள். வியாழன் பார்த்தாலும், சேர்ந்தாலும் விரிவாக படிக்கக் கூடியவர்கள்.
தொழில்: இந்த ராசியில் பிறந்தவர்கள் நன்கு படித்தவர்களாய் இருப்பார்கள். ஆதலால் ஆசிரியர் தொழில் அல்லது உத்தி யோகங்க ளில் சிறப்படைவதன் மூலம் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள இயலும். குறிப்பாக சினிமா, கல்யாண மண்டபம், கதாகலா ட்சபம், நாடக மேடை, கவர்ச்சி பேச்சு, கதை, கட்டுரை எழுதும் தன் மை, ஆடியோ, வீடியோ, ரேடியோ, டி.வி, பொழுது போக்கு சாதனம், ஓவியம், டூரிஸ்ட் நிறுவனம், தங்கும் விடுதி, உணவு அயிட்டம், ஓட்டல், கருவூலம், கால்நடை, பண்ணை பராமரிப்பு சம்பந்தப்பட்டவை, வெண்மைநிறப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ், வாகனத் தொடர்புடையவை, பங்கு பத்திரம், கனி வகைகள், கூட்டுற வுத்துறை, பல் வைத்தியம், பல்பொருள் அங்காடி, அழகு சாதனப் பொருட்கள், தூதுவர்கள், பத்திரிகைத்துறை, பப்ளிசிட்டி, பைனான்ஸ், ஸ்டேஷனரி போன்ற துறைகள் பயன்தரக் கூடியதாகும்.
பணம்: இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு புதனும், வியாழனும் கல்வி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் முதலிய ராசிகளில் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ காணப்படின் செல்வமிக்கவர் களாய் விளங்குவார்கள். குறிப்பாக கன்னியிலும், மிதுனத்திலும், மீனத்திலும், தனுசுவிலும், ரிஷபத்தி லும், லக்ன ரிதியாக 1, 2, 4, 5, 7, 9, 1,0 11 இடங்களாக அமைந்து இக்கிரகங்கள் காணப்படின் ஜாதகர் பெரும் பொருள் ஈட்டுவதின் மூலம் லட்சாதிபதியாகக் கூடும். ஆனால் இந்தக் கிரகங்களோடு சனி, ராகு, கேது, குளிகன் முதலிய கிரகங்களின்; சேர்க்கை பெரும் பொருள் ஈட்டினும் அவற்றை விரையம் செய்யும் சக்தியையும் பெறக் கூடும். இதில் குறிப்பிடப்படாத இதர ராசிகளில் லக்ன ரிதியாக 3, 6, 8, 12 போன்ற இடங்களில் மேற்கூறப்பட்ட புதனும், வியாழனும் தனித்தனியாகவோஅல்லது சேர்ந்தோ காணப்பட்டாலும் தங்களுடைய சொத்துக்களையும், பூர்வ தனத்தையும் இழக்க நேரிடும். 1, 2, 4, 5, 7, 9, 1,0 11 முதலிய இடங்களாக அமையின் அல்லது இந்த இடங்களில் ஒன்று மகாலெட்சுமி வீடாயின் பெரும் செல்வந்தர்களாக ஆவதைக் குறிப்பதாகும். அத்துடன் தன் ஆலோசனைக் கொண்டு சில அதிர்ஷ்டங்களை அடைய முடியும்.
மணவாழ்க்கை: இந்த ராசிக்காரர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கை போதுமான அளவிற்கு மன சந்தோஷமாக அமைய வாய்ப்பில்லை. சம்சார வாழ்வில் சாந்தி கிடைப்பதற்கு இடையூறுகள் ஏற்படும். ஆண் ஆனாலும், பெண் ஆனாலும் மனதிற்கு உகந்த மணவாழ்க்கை வாய்ப்பது துர்பலமாய் இருக்கும். எவ்வளவோ செல்வச் சிறப்பு இருந் தும், ஏராளமான பிற வசதிகள் இருந்தும் மணவாழ்க்கையில் ஒரு திருப்திகரமான நிலை ஏற்படுவது அர்வமே. குடும்பத்திலும், களத்திர விஷயத்திலும் இவர்களுக்கு மிகுந்த சோதனை ஏற்படும். உங்கள் ஜாதக பலனையொட்டிதான் நல்ல வரன் சந்தர்ப்பம் ஆகும் என அறிந்திருக்கவும், அதற்கு தக்கபடி ஜாதகப் பொருத்தம் பார்த்து இணைக்கப்பட வேண்டும். இல்லையேல் பிரச்சினைதான். இவர்கள் மேஷம், சிம்மம், மிதுனம், தனுசு, துலாம் முதலிய ராசிகளில் பிறந்த வர்களை வாழ்க்கைத் துணையாக தேர்ந்து எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அது நன்மை பயப்பதாக இருக்கும். ஆண், பெண் யாராக இருந்தாலும் ஓரளவு நிறம், கெட்டிக்காரத்தனம். கொண்டவராக இரு ப்பார்கள். தாழ்வு மனப்பான்மை அதிகம் இருக்கும். அந்த விஷயத்தில் திருமணத்திற்குப் பிறகு ஒத்துப்போனால்தான் உங்கள் வாழ்க் கைக்கு உகந்ததாகும். இல்லையேல் போராட்டம் ஆகும்.
வியாதிகள்: இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு முக்கியமாக மூளைக் கோளாறு ஏற்பட சந்தர்ப்பம் அதிகமுண்டு.ஆனால் சூரியன் வலுத்து இருந்தால் அவ்வாறு ஏற்பட வழி இல்லை. இருதயம், வயிறு, பைத்தி யம், உஷ்ண சம்பந்தமான சுரங்கள், வியாதிகள், வைசூரி, நெருப்பு சம்பந்தமான கொப்புளங்கள், புண் முதலியவைகளினால் தொல்லை களுக்கு உள்ளாக நேரும். சூரிய பகவானை வணங்குவதின் மூலமும், ஞாயிற்றுக்கிழமை தோறும் விரதம் அனுஷ்டிப்பதன் மூலமும், ஆதீத் திய ஹிருதயம் படிப்பதன் மூலமும், அத்துடன் சிவபெருமானுக்கு விஷேச அபிஷேக, ஆராதனைகள் செய்வதன் மூலமும், சூரியகாந்திப், வெண்தாமரை புஷ்பங்களின் மூலமும் அர்ச்சனை, ஆராதனை, நமஸ்காரங்களும், எருக்கஞ் சத்தினால் ஓமம், கோதுமைத்தானம் செய்வதின் மூலமும் ரோகங்களுக்கு பரிகாரம் செய்து கொள்வது உத்தமம்.
எதிர்காலம்: உங்கள் ராசிப்படி(சந்திரா லக்ன ரிதியாக) உங்களுக்கு அனுகூலமான கிரகங்கள் சூரியன், செவ்வாய், வியாழன். இவர்கள் 1, 4, 5, 7, 9, 1,0 11 இத்தகைய இடங்களில் இருப்பார்களே ஆனால் உத்தமம். உங்கள் லக்ன ரிதியாக சுப ஆதீபத்தியம் இவர்கள் பெற்று இத்தகைய இடங்களில் இருப்பது அனுகூலமே. அத்துடன் அம்சத்திலும் பலவீனம் அடையாமல் யோகக்காரக கிரகங்கள் தசை இருக்குமா னால் அதிர்ஷடமுடையவர்களே. உங்கள் ராசிக்கு மத்திமமான கிரக மான புதன் 2, 3, 6, 1,0 11 இந்த இடங்களில் இருப்பது இவரின் ஆதி க்க காலம் அதாவது தசைகள் அனுகூலம் ஆகும். உங்கள் ராசிக்கு பலவீனமான கிரகமாகிய சுக்கிரன், சந்திரன், சனி இவர்கள் 3, 6, 7, 8, 9, 1,0 11, 12 இத்தகைய ஸ்தானங்களில் இருந்து இவர்களின் தசை நடை முறையில் சில காரியங்களை சாதிக்க முடியும். உங்கள் கஷ்ட நஷ்டங்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும்.