ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Yesterday at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

முன்பிறவியும் மறுபிறவியும்

Post new topic   Reply to topic

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

முன்பிறவியும் மறுபிறவியும்

Post by சிவா on Fri Jul 03, 2009 10:35 pm

முற்பகல் விதைக்கின் பிற்பகல் விளையும் என்றும், அவரை விதைத்தால் துவரை முளைக்காது என்றும் நாம் எல்லோரும் அறிவோம். நம் வினைகளுக்கேற்ப பயன் பெறுவதுதான் வினைப்பயன். தெரிந்தோ, தெரியாமலோ தவறுகள் செய்வது மனித இயல்பு. பெரும் பணக்காரர்களாக, இன்பத்தில் மிதப்பவர்களாக இருப்பவர்கள் அவர்களின் முன் பிறவியில் தான தருமங்கள், நல்ல செயல்கள் நிறைய செய்திருக்க வேண்டும். மிகவும் ஏழைகளாக துயரத்தில் எப்போதும் மூழ்கியிருப்பவர்கள் முன்பிறவியில் கொடூரச் செயல்கள் பலபுரிந்தும், பிறரை ஏமாற்றிப் பிழைத்தும் இருந்திருக்க வேண்டும். நடுத்தர மக்களுக்கு இன்பமும், துன்பமும் கலந்து வரும். அவர்கள் முன்பிறவியில் நல்ல செயல்களும், தீய செயல்களும் கலந்து செய்திருப்பார்கள். நற்செயல்களுக்கேற்ப நல்ல பலன்களையும், தீய செயல்களுக்கேற்ப தீய பலனையும் இந்தப் பிறவியில் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். நாம் இந்த பிறவியில் செய்து வரும் செயல்களின் சில பலன்கள் இந்தப் பிறவியிலும், சில மறுபிறவியிலும் கிடைக்கும்.

ஒருவரது ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து அவர் போன பிறவியில் எப்படியிருப்பாரென்றும், அவர் மறுபிறவியில் எவ்வாறு இருப்பாரென்றும் கூறலாம். அதற்கான விதிமுறைகளை இந்தக் கட்டுரையில் காண்போம்.

(1) ஜாதகத்தில் 12-ம் வீட்டை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது சீர்ஷோதய ராசியானால் மறுபிறவி இந்தப்பிறவியைவிட நன்றாக அமையும். அது பிருஷ டோதய ராசியானால் ஜாதகர் மறுபிறவியில் இந்தப் பிறவியளவு இன்பங்களை நுகர இயலாது.

(மேஷம், மிதுனம், சிம்மம், கன்யா, துலாம், கும்பம் இவை சீர்ஷோதய ராசிகள். ரிஷபம், கடகம், விருச்சிகம், தனுசு, மகரம் இவை பிருஷடோதய ராசிகள். மீன ராசி சீர்ஷோதயமும், பிருஷடோதயமும் கலந்தது)

(2) ஒரு ஜாதகத்தில் 12-ம் வீட்டு அதிபன் உச்ச வீடு, நண்பர் வீடு, சுபனின் வர்க்கம், சுபனுடன் சேர்ந்த நிலை இவைகளில் ஏதேனும் ஒன்றாக இருந்தால், ஜாதகரின் அடுத்த பிறவி இந்தப் பிறவியைவிட நன்றாக அமையும்.

கிரகம்,ஆட்சி வீடு, உச்ச வீடு, நீச வீடு, நட்பு வீடுகள், பகை வீடுகள் காட்டும் அட்டவணை:

கிரகம் ஆட்சி வீடு உச்ச வீடு நீச வீடு நட்பு வீடு பகை வீடு

சூரியன் சிம்மம் மேஷம் துலாம் விருச்சிகம் ரிஷபம்
தனுசு மகரம்
கடகம்,மீனம் கும்பம்
சந்திரன் கடகம் ரிஷபம் விருச்சிகம் மிதுனம்
சிம்மம்
கன்யா ----
செவ்வாய் மேஷம் மகரம் கடகம் சிம்மம் மிதுனம்
விருச்சிகம் தனுசு கன்யா
மீனம்
புதன் மிதுனம் கன்யா மீனம் ரிஷபம் கடகம்
கன்யா சிம்மம் விருச்சிகம்
துலாம்
குரு தனுசு கடகம் மகரம் மேஷம் ரிஷபம்
மீனம் சிம்மம் மிதுனம்
கன்யா துலாம்
விருச்சிகம்
சுக்கிரன் ரிஷபம் மீனம் கன்யா மிதுனம் கடகம்
துலாம் தனுசு சிம்மம்
மகரம் தனுசு
கும்பம்
சனி மகரம் துலாம் மேஷம் ரிஷபம் கடகம்
கும்பம் மிதுனம் சிம்மம்
விருச்சிகம்
ராகு கன்யா விருச்சிகம் ரிஷபம் மிதுனம் கடகம்
கன்யா சிம்மம்
துலாம்
தனுசு,மகரம்
மீனம்
கேது மீனம் கும்பம் சிம்மம் ராகுவைப் கடகம்
போல் சிம்மம்

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: முன்பிறவியும் மறுபிறவியும்

Post by சிவா on Fri Jul 03, 2009 10:36 pm

குரு, சுக்கிரன், புதன், சந்திரன் இவர்கள் சுபக்கிரகங்களும், செவ்வாய் சூரியன், சனி, ராகு, கேது இவர்கள் பாபக்கிரகங்களும் ஆவார்கள். 6 வர்க்கங்களாவன: ராசி, ஓரை, திருக்கணம், நவாம்சம், துவாதசாம்சம், திரிம்சாம்சம் இவைகள்.

உதாரணம்: ஒரு ஜாதகத்தில் செவ் வாய் மேஷ ராசியில் 90 10] என (பாகை: 9 கலை-10) இருந்தால், அவர் ராசியாதிபன்-செவ்வாய்; ஓரை அதி பன்-சூரியன், திருக்கணாதிபன்- செவ் வாய் நவாம்சாதிபன்- புதன் துவாத சாம்சாதிபன்-சந்திரன் திரிம்சாதிபன் சனி- (இவருக்கு பாப வர்க்கம் அதிகம்)

(3) 12-ம் வீட்டு அதிபன், 12-ம் வீட்டில் இருப்பவர் 12-ம் வீட்டுடன் சம்பந்தப் பட்டவர் 12-ம் வீட்டின் நவாம்சாதிபதி, இவர்கள்: சூரியன் அல் லது சந்திரனானால் அடுத்த பிறவி உயர்ந்ததாக இருக்கும். செவ்வாயாக இருந்தால் பூமியில் பிறப்பு சனியாக இருந்தால் கேவலமான பிறவி கேது வானால் நரகம் ராகுவானால் அயல் நாடுகள் சுக்கிரன், புதன், குரு ஆனால் சுவர்க்கம் (உயர்ந்த பதவி)

(4) 5-ம் வீட்டு அதிபன் உச்சனாக இருந்தால் மறுபிறவி இன்ப மயமானதாக இருக்கும் நீசம் அல்லது பகை வீடு களிலிருந்தால் அயல்நாட்டில் பிறக்கும் யோகமுண்டு சொந்த வீடு, நண்பர் வீடு, நடுவர் வீடு இவைகளிலொன்றாக இருந் தால் இந்தியாவில் மறுபிறவி உண்டாகும்.

சுக்கிரன் அல்லது சந்திரனானால் புண்ணிய நதிக்கரையில் பிறவி (உதா: காவேரி, கங்கை) சனியானால்-அயல் நாடு சூரியனானால்- மலைப்பிரதேசம் அல்லது காடுகள் செவ்வாயானால்- பீகார். 9-ம் வீட்டதிபனானால் முற்பிறவி இவ்வாறு அமைந்திருக்கும்.

(5) 5-ம் வீட்டு அதிபர் ஸ்திர ராசியில் அல்லது ஸ்திர நவாம்ச ராசியில் இருந்து (ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இவை ஸ்திர ராசிகள்) அது பிருஷ டோதய ராசியாகவும், அசுபர்களுடன் சேர்ந்தும் இருந்தால் ஜாதகர் அடுத்த பிறவியில் மரமாகவோ, செடியாகவோ பிறக்க நேரிடும். சீர்ஷோதயம், சரம், சுபருடன் சேர்க்கை இருந்தால் மிருகமாக பிறக்க வாய்ப்புண்டு. 9-ம் வீட்டு அதிபர் இந்த நிலைகளிலிருந்தால் முற்பிறவி இவ்வாறு அமைந்திருக்கும்.

(6) 5-ம் வீட்டதிபன் உச்சன், சொந்த வீடு அல்லது லக்னாதிபரின் நண்பர் வீடு என இருந்தால், ஜாதகர் அடுத்த பிறவியில் மனிதராகப் பிறப்பார். சமராக இருந்தால் மிருகமாகப் பிறப்பார். எதிரி அல்லது நீச ராசியானால் பறவை. 9-ம் வீட்டதிபன் இந்த நிலைகளிலிருந்தால் முற்பிறவி இவ்வாறு அமைந்திருக்கும்.

(7) நிறம், குணங்கள் தெரிந்து கொள்ள (முற்பிறவியானால் 9-ம் பாவாதிபன் மறுபிறவி தெரிந்துகொள்ள 5-ம் பாவாதிபன் பார்க்கவும்.)
சந்திரன்: வெண்மை, வெள்ளி அல்லது முத்து வியாபாரி, குள்ளம், வெண்மை நிறம், உயர்ந்த குணம்.

சூரியன்: அரசியலில் ஈடுபாடு, சிவப்பு நிறம், சம உயரம், துடுக்கு குணம்.

செவ்வாய்: அரசியல், சிவப்பு, குள்ளம், கொடுமை குணம்.

புதன்: வியாபாரம், உயரமானவர், சோம்பல் குணம்.

குரு: உயர்ந்த குணம், உபாத்தியாயர், பொன் நிறம், உயரமானவர்.

சுக்கிரன்: வெண்மை நிறம், உபாத்தி யாயர், சம உயரம், அடிக்கடி கோபம் வரும்.

சனி: கருமை நிறம், வியாபாரி, குள்ளம், சுறுசுறுப்பு குறைவு.

(8) லக்னம் எந்த திருக்கணத்தில் இருக்கிறதென்று பார்க்க வேண்டும். அதிலிருந்து 16-வது திருக்கணம் 6-ம் பாவம் 22-வது திருக்கணம் 8-ம் பாவம், 16, 22 திருக்கண அதிபதிகளில் அதிக பலவான் யாரென்று பார்க்க வேண்டும். அது குருவானால் அடுத்த பிறவி உயர்ந்தது சுக்கிரன் அல்லது சந்திரன் 1: மூதாதையர் இருக்கும் இடம் சூரியன் அல்லது வியாழன் பூமி, சனி அல்லது புதன்-நரகம்.

(9) 12-ம் வீட்டில் கேது இருந்தால் இதுதான் கடைசி பிறவி.

(10) சூரி யன், சந்திரன் இவர்களில் எந்த கிரகத் திற்கு பலம் அதிகமென்று பார்க்கவும். பலம் அதிக மான கிரகத் தினுடைய திருக்கணாதிபன் வியாழனானால் முன்பிறவி உயர்ந்த நிலை சந்திரன் அல்லது சுக்கிரனானால் முன்பிறவி பிதிரிலோகம் சூரியன் அல்லது செவ்வாயானால் - மனித லோகம் புதன் அல்லது சனி நரக லோகம்.

(11) உச்சனான வியாழன் 6, 8, 1, 4, 7, 10 ஏதேனும் ஒரு வீட்டில் இருந்தால் ஜாதகனுக்கு இது கடைசி பிறவி.

(12) மீனத்தில் மற்ற கிரகங்களைவிட அதிக பலவானாக குரு இருந்தால் மோட்சம்.

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: முன்பிறவியும் மறுபிறவியும்

Post by Guest on Fri Jul 03, 2009 10:44 pm

ஆன்மீக பசிக்கு நல்ல தீனி கிடைக்கிறது

சிவா சா௫க்கு நன்றிகள் Like a Star @ heaven

Guest
Guest


Back to top Go down

Re: முன்பிறவியும் மறுபிறவியும்

Post by Manik on Fri Jul 03, 2009 11:29 pm

நீங்க சொல்றத வச்சு பாத்தா அடுத்த ஜென்மத்துல நான் ரொம்ப பெரிய ஆளா வருவேன்னு நினைக்கிறேன்

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: முன்பிறவியும் மறுபிறவியும்

Post by Guest on Fri Jul 03, 2009 11:31 pm

manekan2000 wrote:நீங்க சொல்றத வச்சு பாத்தா அடுத்த ஜென்மத்துல நான் ரொம்ப பெரிய ஆளா வருவேன்னு நினைக்கிறேன்


இந்த ஜென்மத்திலும் ரொம்ப பெரிய ஆளா வ௫வீங்க

Guest
Guest


Back to top Go down

Re: முன்பிறவியும் மறுபிறவியும்

Post by Manik on Fri Jul 03, 2009 11:32 pm

அப்படியா ரொம்ப நன்றி.............

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: முன்பிறவியும் மறுபிறவியும்

Post by Guest on Fri Jul 03, 2009 11:35 pm

manekan2000 wrote:அப்படியா ரொம்ப நன்றி.............


Like a Star @ heaven What a Face

Guest
Guest


Back to top Go down

Re: முன்பிறவியும் மறுபிறவியும்

Post by Manik on Fri Jul 03, 2009 11:37 pm

நீங்க சொன்னது நடந்துச்சுன்னா உங்களுக்கு தனியா 1 Spl Treat தரேன்

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: முன்பிறவியும் மறுபிறவியும்

Post by Guest on Fri Jul 03, 2009 11:38 pm

manekan2000 wrote:நீங்க சொன்னது நடந்துச்சுன்னா உங்களுக்கு தனியா 1 Spl Treat தரேன்


அப்டியா @

எனக்கு க௫நாக்கு I love you

Guest
Guest


Back to top Go down

Re: முன்பிறவியும் மறுபிறவியும்

Post by Manik on Fri Jul 03, 2009 11:39 pm

ஹாஹாஹாஹா கருநாக்கு இருந்தா நாக்கு ரொம்ப அழுக்கா இருக்குனு அர்த்தம்.......... முதல்ல நாக்க கிளீன் பண்ணுங்க

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum