ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» உயிர்காக்க உதவும் பத்து வழிமுறைகள்.
by தாமு Today at 7:44 pm

» ஜுரத்திற்கு நன்றி சொல்வோம்
by தாமு Today at 7:43 pm

» வயக்கரா தாத்தா
by தாமு Today at 7:42 pm

» சர்க்கரை நோய்-அறிகுறிகள், விளைவுகள் பற்றியும் அறிந்து கொள்ள
by தாமு Today at 7:41 pm

» தாய்மையின் அடையாளங்கள்
by தாமு Today at 7:41 pm

» உணவகங்களுக்குச் செல்லும் போது கீழ்க்கண்ட பத்து விஷயங்களையும் கவனத்தில் கொண்டால்
by தாமு Today at 7:40 pm

» ஒருவர் சைவரா ? வைணவரா ? (யானையும் விட்டு வைக்காத)
by தாமு Today at 7:39 pm

» உலகத்திலேயே ஆபத்தான பள்ளி
by தாமு Today at 7:38 pm

» நடைமுறை நாகரீகங்கள்
by தாமு Today at 7:37 pm

» தவிர்ப்போம்
by தாமு Today at 7:36 pm

» பயிருக்கு தேவையான சத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்
by தாமு Today at 7:35 pm

» இன்றைய மொக்கை கண்ணோட்டம் இதோ ,
by தாமு Today at 7:35 pm

» ஸ்பெஷல் மலபார் மட்டன் குருமா
by தாமு Today at 7:32 pm

» ச‌ளி ‌பிடி‌த்தவ‌ர்க‌ள் செ‌ய்ய‌க் கூடாதவை
by தாமு Today at 7:31 pm

» நம்ம ஈகரை ராஜா சொன்ன ஜோக்ஸ்
by தாமு Today at 7:30 pm

» கொழுப்பின் அளவை குறைக்க
by தாமு Today at 7:27 pm

» பெண்களைப் பகைக்காதீர்கள் !!
by தாமு Today at 7:26 pm

» கங்காரு பிறந்த கதை தெரியுமா?
by தாமு Today at 7:25 pm

» இறால் மக்ரூணி
by தாமு Today at 7:22 pm

» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,அசத்தல் நோட்டம்
by தாமு Today at 7:12 pm

» Dolphin மனிதர்கள்
by palapattarai Today at 7:10 pm

» ஆடம்பர திருமணங்களும் பெண் குழந்தை வெறுப்புகளும்
by palapattarai Today at 7:07 pm

» கேட்டதைக் காட்டும் மந்திரக்கண்ணாடி
by kavinele Today at 7:04 pm

» திரிஷா & திரிஷா அம்மா
by மீனு Today at 6:58 pm

» வேட்டைக்காரன் விஜய் காமெடி - வழங்குபவர் அஜித் ரசிகன்
by rifas Today at 6:41 pm

» இயற்கை வேளாண்மை
by kavinele Today at 6:15 pm

» வீடியோ: சிறுவர்களை அடிக்கும் பிரிட்டிஷ் காட்டுமிராண்டிப் படை
by aarul Today at 6:02 pm

» இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!!
by மீனு Today at 6:01 pm

» தினம் ஒரு தகவல்
by மீனு Today at 6:01 pm

» இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்!
by raman123 Today at 6:00 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

இணைய விளம்பரம் அல்லது உளவாளிகளின் உலக

View previous topic View next topic Go down

இணைய விளம்பரம் அல்லது உளவாளிகளின் உலக

Post by aarul on Sat Nov 07, 2009 6:20 pm


இணைய விளம்பரம் அல்லது உளவாளிகளின் உலகம்.





மிஸ்டர் எக்ஸ் வழக்கம் போல இனையத்தில் உலாவிக்கொண்டிருந்தார்(browsing)
அவர் ஒரு புத்தக பிரியர் புத்தகங்கள், இதழ்கள், பத்திரிக்கைகள் சார்ந்த
இணைய தளங்களாக பார்வையிட்டுக்கொண்டிருந்தார்.தேடுபொறி (Search Engine)
மூலமாக தன் தேடுதலை தொடந்து தேடிபிடித்து படித்துக் கொண்டிருந்தார்
மிஸ்டர் எக்ஸ். பெரும்பாலும் அவரின் இணைய உலாவுதல் இவை சார்ந்தே நிகழும்.
இடையிடையே புத்தக வெளியீட்டாளர்களுக்கு மின் அஞ்சல் என தொடரும் அவரது உலா.
ஆனால் மிஸ்டர் எக்ஸ்க்கு தெரியாது அவரை ஒரு உளவாளி தொடர்வது.........

மிஸ்டர் ஒய்யும் ஒரு இணைய விரும்பிதான் இவருக்கு சினிமா மோகம். நகரத்தில்
உள்ள திரை அரங்ககுளில் இனையதளங்களுக்கு தினமும் செல்லாமல் இவருக்கு இரவில்
நல்ல தூக்கம் வருவதில்லை. வார விடுமுறைகளில் சினிமா செல்லவில்லையென்றால்
ஏதோ ஒன்றை இழந்தது போல இருக்கும் மிஸ்டர் ஒய்க்கு. முன்பதிவு
செய்வதெல்லாம் இணையம் மூலமாகத்தான். ஆனால் மிஸ்டர் ஒய்க்கு தெரியாது அவரை
ஒரு உளவாளி பின் தொடர்வது.........


மிஸ்டர் எக்ஸ் நியுசிலாந்து சென்றபோதும், மிஸ்டர் ஒய் ஜெர்மனிக்கு
சென்றபோதும் இணையத்தில் உலாவிக்கொண்டிருந்த பொழுது மிஸ்டர் எக்ஸ் உலாவிய
பக்கங்களில் உள்ளுரில் உள்ள புத்தக கடைகளின் விளம்பரங்களும், மிஸ்டர் ஒய்
உலாவிய பக்கங்களில் உள்ளூர் திரை அரங்குகள் பற்றிய விளம்பரங்களும் வந்தன.
எப்படி இது சாத்தியம்? அவரவர் விருப்பம், ரசனைகேற்ப எப்படி விளம்பரங்கள்
வருகிறது?


மியூசிக் சேனலில் லீ ஜீன்ஸ் விளம்பரமும் , “தாலி பெண்ணின்
வேலி” தொடருக்கு இடைவெளியில் ஆச்சி மசாலா விளம்பரமும் ஒரு
குறிப்பிட்ட பிரிவினரை( இளஞர்களை/பெண்களை) இலக்கு வைத்து வரும்
விளம்பரங்கள். இதே அடிப்படையில் இன்னும் இலக்கை துள்ளியமாக்கி தனி
மனிதர்களை குறிவைத்து வருகின்றன இணைய விளம்பரங்கள். “நடத்தைசார்
விளம்பரம்” (Behavioral Advertising) என்ற ஒரு விசயம் உலகம் தழுவி
வளர்ந்து வருகிறது.




இந்த
விசயம் உங்களுக்கும்,எனக்கும் நிகழும் அல்லது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது.
ஒரு தனி மனிதன் பழக்க வழக்கங்களின் தொகுதி. அவனின் பழக்க வழக்கங்கள்
மூலமாக நாம் அவனை அடையாளப்படுத்திவிட முடியும். அவனின் ஈடுபாடுகளை, அவன்
தேவைகளை, அவனின் ரசனையை நாம் கண்டெடுத்துவிட முடியும். இணையத்தில்
ஒருவனின் நடத்தையை வைத்தே நாம் ஒருவரை பகுத்துவிட முடிகிறது. அவர்
தேடுபொறியில் அவர் தேடும் விசயங்கள், அவர் பார்வையிடும் இணைய தளங்கள்,
அவர் பதிவிறக்கம் செய்யும் விசயங்கள், அவர் பார்வையிட்ட இணைய தளங்களின்
வரலாறு இவைகள் மூலம் நாம் அவரின் ஆளுமையை , அவரின் பாலினத்தை,வயதை,அவரின்
இருப்பிடத்தை,அவரின் தனிபட்ட விருப்பங்களை, அவரின் மத ஈடுபாடுகளை , மத
சுவேஷங்களை, அவரின் ஆரோக்கியம் அல்லது உடல் நல குறைகளை, காமம் சார்ந்த
அவரின் ஈடுபாடுகளை அல்லது காம பிறழ்வுகளை, சமூக,பொருளாதார,அரசியல் குறித்த
அவரின் நிலைபாட்டை, பூமி வெப்பமடைவதை பற்றிய அவரின் புரிதலை, தென்இந்திய
சமையல், இன்னும் சூரியனுக்கு கீழே உள்ள அனைத்திற்கும் அவருக்கும் உள்ள
ஊடுபாவுகளை நாம் கணித்துவிடலாம்.





இதை
தான் இணையத்தில் இயங்கும் விளம்பர
வலையமைப்புக்கள்(AdvertisingNetworks)பயன்படுத்திக்கொள்கின்றன.நாம் ஒரு
இணைய தளத்தை பார்வையிடும்பொழுது அந்த இணைய தளம் நம் கணணியில்
குக்கீஸ்(cookies) என்ற சின்னசிறு கோப்பை (file)நிறுவி விடுகிறது. நம்
இணைய நடவடிக்கைகளை இந்த சின்னசிறு கோப்பு ஒரு அடையாள எண்னோடு தன் இணைய
தளத்திற்கோ அல்லது ஒரு விளம்பர வலையமைப்பு நிறுவனத்திற்கோ அனுப்பி
வைக்கிறது. இவ்வாறு பெறப்படும் தகவல்களை கொண்டு உங்களை வகை படுத்துகிறது
விளம்பர வலையமைப்பு நிறுவனம்.

பின்
நமக்கு தகுந்த விளம்பரங்கள் நம்மை தொடர்கின்றன!! நம்மை பற்றிய தகவலை பெற
web bugs, web beacons, Flash cookies. பல தொழில்நுட்பங்களை விளம்பர
நிறுவனங்கள் பயன் படுத்துகின்றன.









இணைய
பயணாளிகளின் தனிபட்ட வாழ்க்கையில் அனுமதியில்லாமல் வேற்று மனிதன் நுழைவு
ஒரு வரம்புமீறல் என எதிர்ப்பு குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன.
விளம்பரங்களுக்காக மட்டுமே இந்த தகவல்கள் திரட்டபடுகின்றன என அந்த
நிறுவனங்கள் சொன்னாலும் இது ஒரு தனிமனித அந்தரங்கத்தின் மீதான தாக்குதல்
எனவும், தனிமனிதனின் தகவல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும்
அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.




இங்கிலாந்தில்
BT என்ற தொலைதொடர்பு நிறுவனத் திற்காக PHORM என்ற நிறுவனம் BTயின் 30,000
வாடிக்கையாளர்களின் இணைய நடவடிக்கையை தன் பிரத்யேக மென்பொருள் மூலம்
கண்காணித்தது பெரிய சர்சையை எழுப்பியிருக்கிறது. அதை தொடந்து நடத்தைசார்
விளம்பரங்கள் தனிமனித தகவல் குறித்த விவாதம் அங்கே
நடந்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் FEDERAL TRADE COMMISSION இந்த
விளம்பர தொழில் நுட்பத்தை தடைசெய்ய முடியாது என வெளிபடையாக சொல்லாமல்
விளம்பர வலையமைப்பு நிறுவனங்கள் தங்களுக்கு தாங்களே சுய கட்டுப்பாடுகளை
விதித்துக்கொள்ளவேண்டும் என்றது. அது முன் வைத்த யோசனைகளில் ஒன்று தங்கள்
இணையதளங்களில் என்ன தகவல் திரட்டப்ப்டுகிறது ,எப்படி திரட்டப்படுகிறது
என்பதை இணைய தளத்தை உபயோகிப்பவர் அறியும் வண்ணம் அறிவிப்புகள் இருக்க
வேண்டும் என்பது.





YAHOO,GOOGLE
போன்ற நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் இந்த விளம்பர வலையிலிருந்து
தங்களை விலக்கி வைத்துக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகின்றன. கூகுளின்
privacy policy பற்றி தெரிந்துக்கொள்ள:
http://www.youtube.com/googleprivacy#p/a . yahooவில்
privacy policy இணைப்பை தொடந்து செல்லுங்கள். ஆனால் இவையெல்லாம் எவ்வளவு
தூரம் நம்பகதன்மை உடையது என்பது தெரியவில்லை











ஒரே
கணணியை பல பேர் உபயோகபடுத்தும் சூழலில் ஒரு குறிப்பிட்ட மனிதரை இலக்காக்க
முடியாது என்பது ஒரு வாதமாக இருந்தாலும் எதிர்காலத்தில் ஒரு மனிதன் எந்த
கணணியில் அமர்ந்தாலும் அவனை பின் தொடர தொழில்நுட்பம்
தயாராகிவிடும். தனிமனிதனின்
தகவல்,அந்தரங்கம்,சமூக பாதுகாப்பு பற்றிய மிக முக்கியமான வாழ்வியல்
ஆதாரங்களும் ,இணைய தொழில்நுட்பமும் எதிரெதிரே நிற்கின்றன. சந்தை பொருளாதார
திமிங்கலங்கம் தன் பெரிய வாயை திறந்து காத்துக்கிடக்கின்றது





மேலும் புரிதலுக்கு:



http://www.cdt.org/privacy/targeting/

http://www.networkadvertising.org/

http://www.seochat.com/c/a/Website-Marketing-Help/Behavioral-Advertising-Wave-of-the-Future/

button="hori";
submit_url ="http://marthandanj.blogspot.com/2009/11/browsing.html"

aarul
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 566
வசிப்பிடம்: erode,tamilnadu. manielectronics
சேர்ந்தது: 02/10/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum